December 27, 2012

அறுசுவைத்திருவிழா

கடந்த அக்டோபர் மாதம் 12,13,14 ஆகிய தேதிகளில் மாலை நேரத்தில் பெஸண்ட் நகர் பீச்சுக்கு அருகே உள்ள வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு திண்டாட்டம்தான்.வாகனங்களும்,மக்கள் கூட்டமுமமாக தெருக்களில் நடக்க முடியாமல்,வாகனங்கள் பார்க் செய்ய முடியாமல் .ஏன்...வாகன‌ங்கள் நுழையவே இடம் இல்லாமல் ஏரியாவே தத்தளித்தது.அறுசுவை திருவிழாவால்.

திருவிழா என்றதும் ஆட்டம் பாட்டம் குடைராட்டினம்,விளையாட்டு ரயில், இதெல்லாம் இல்லை.எலியட்ஸ் பீச் மணலில் ஷாமியானா போடபட்டு வகை வகையான உணவுகளின் வாசனை மூக்கை துளைக்க மக்கள்ஸ் வாய்க்கும் கைக்கும் போராட்டமே நடத்திகொண்டிருந்தனர் அவசரகதியில்.

சாலையோரக்கடைகளில் வாங்கி சாப்பிட ஆசைபட்டும் செயல் படுத்த இயலாமல் லஜ்ஜை கொள்ளும் மக்களுக்கு அன்றைக்குகொண்டாட்டம்தான்.

தமிழ் நாட்டு உணவு மட்டுமின்றி  ,கேரளா.ஆந்திரா,கர்நாடகா,மகாராஷ்டிரா,கோவா,பஞ்சாப்,பெங்கால்.குஜராத்,ராஜஸ்தான்,காஷ்மீர் மாநில உணவுவகைகள் அத்தனையும் சுடசுட கிடைத்தன.

நுழைவு வாசலில் குறைந்தது 100 ரூபாய்க்கு டோக்கன் வாங்கிக்கொண்டுதான் உள்ளே செல்ல முடியும்.ஆனால் கண்டிப்பாக ஒருவருக்கு அந்த 100 ரூபாய் டோக்கன் போதவே போதாது.ஏனெனில் விலை அத்தனை அதிகம்.

வகை வகையான பிரியாணி வகைகள்,சிக்கன் வகைகள்,கபாப் வகைகள்,வடை போண்டா பஜ்ஜி வகைகள்,சாட் ஐட்டம்,பாயச வகைகள்,சூடான,குளிர் பான வகைகள் என்று எண்ணிலடங்கா உணவு வகைகள்.என்ன ஒன்று,விரும்பிய உணவை வாங்க பெரிய கியூவில் நிற்க வேண்டும்.

முதல் நாள் உணவு வகைகளின் விலை சற்றே குறைவாக இருந்தது.அடுத்த நாளே விலையை உயர்த்தி விட்டார்கள்."எவ்வளவு விலை உயர்த்தினாலும் நாங்களும் வந்து சாப்பிடுவோம்ல"என்பதை மக்கள் கூட்டம் நிரூபித்துக்கொண்டிருந்தது.இரண்டு கீரை வடை 40 ரூபாய்.ரோட்டோரக்கடையில் தாளத்துடன் டொடய்ங் டொடய்ங் என்ற மியூஸிக்குடன் கொத்து பரோட்டோ கொத்தும் ஓசையைத்தான் கேட்டு இருக்கிறேன்.நேரில் பார்த்ததில்லை.நீண்ட நாள் ஆசை .ஆரம்பம் முதல் இறுதிவரை கொத்துபரோட்டோ கொத்துவதை நீண்ட நேரம் பார்த்துக்கொண்டிருந்தேன்.மின்னல் வேகத்தில் எண்ணி பத்தே நிமிடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட பிளேட் கொத்துபரோட்டா செய்து விடுகிறார் கொ.ப மாஸ்டர்.சூடான கொத்து பரோட்டாவை ஒரு விள்ளல் ஸ்பூனால் எடுத்து சாப்பிட்டால்...ம்ஹும்..நான் செய்யும் கொ.ப வுக்கு அடிக்காது.சுடச்சுட கொ.ப‌


பெரிய பெரிய அடுப்புகளில் கிரில்  கம்பிகளில் மாட்டி சிக்கன் கபாப் தயாரித்து குவித்த வண்ணம் இருக்கின்றார்கள்.உடனுக்குடன் விற்றும் தீர்ந்து விடுகிறது.பிராஸ்டட் சிக்கன்.பார்ப்பதற்கு வண்ணமயமாக இருக்க எக்கசக்க‌ கலர் பவுடர் போட்டு சாப்பிட தயங்க வைத்து விட்டனர்.


சூடான திருநெல்வேலி அல்வா.அதெப்படி எந்நேரமும் சூடாக கொடுக்கின்றார்கள்?இரண்டே ஸ்பூன் அல்வா 40 ரூபாய்.


ஒரு சிறிய குழிக்கரண்டி அளவு மூங் தால் அல்வா.இதுவும் 40 ரூபாய்.

வந்திருந்த கூட்டத்தினரின் ஒரு பகுதி.


கூட்டத்தின் இன்னொரு பகுதி.ரோட்டரி இன்டர்நேஷனல் டிஸ்ட்ரிக்ஸ் 3230 என்ற அமைப்பு இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தது. ரோட்டரி சங்கத்தினர் அமைத்துள்ள மகிழ்ச்சியான கிராமம் என்ற திட்டத்துக்காக வசூல் ஆகும் தொகையை அவர்கள் தத்து எடுத்த
118 கிராமங்களுக்கும்  தேவையான வசதிகளை செய்து கொடுத்து மேலும் கிராம முன்னேற்றத்துக்கான‌  நலத்திட்டங்க‌ள் பலவற்றை நிறைவேற்றி ஏழை எளிய மக்க‌ளின் கண்ணீரை போக்குவதே இத்திருவிழாவின் நோக்கம்.

நல்லதொரு நோக்கம்.வரவேற்ககூடிய திட்டம்.
சிற‌ப்பான‌ இத்தொண்டு செய்யும் இந்த அமைப்பை பாராட்டவும் வேண்டும்.விலையைப்பற்றி கவலை கொள்ளாமல் எவ்வளவு விலை கொடுத்தாயினும் வாங்கி சாப்பிட்டு ஆதரவு கொடுக்கும் சென்னை மக்கள் ஃபுட்டீஸ் மட்டுமல்ல இரக்க சுபாவமும் உள்ளவர்கள் தான் :)27 comments:

Mahi said...

Wow! Thanks for the visual treat Akka! :)

Asiya Omar said...

Super.Chennai makkals koduthu vachavanga.enjoy panranga.

Menaga Sathia said...

ம்ம்ம்ம் எங்களைலாம் விட்டுட்டு எஞ்சாய் பண்ணுங்கக்கா...காதுல புகை வருது..

பால கணேஷ் said...

உணவு வகைகளின் விலை ரொம்ப அதிகமா இருக்கேன்னு படங்களைப் பாக்கறப்ப ‌தோணிச்சு. ஆனா, ஒரு நல்ல காரியத்துக்காகப் போகுதுன்னு நினைக்கறப்ப பரவால்லைதான்.... சென்னை மக்களின் இரக்க உணர்வைப் பாராட்டற அதே நேரத்துல நீங்க வெச்சிருக்கற படங்கள் தெளிவா, அருமையா இருக்குன்னு ஸாதிகாவையும் மனமாரப் பாராட்டறேன்.

ராமலக்ஷ்மி said...

நல்ல நோக்கத்துடன் நடைபெற்ற விழா. பகிர்வு அருமை ஸாதிகா.

இளமதி said...

அருமை. நல்ல நோக்கத்திற்காகச் செய்யப்பட்டிருக்கு என்பது சிறப்பு.

பலவிடயங்கள் உங்கள் மூலம் தெரிந்துகொள்கிறோமே..பகிர்விற்கு மிக்க நன்றி..
பாராட்டுக்கள்!

Radha rani said...

ஒவ்வொரு ஐட்டமும் இவ்ளோ விலையா.. அளவும் கம்மியா இருக்கேன்னு நினைசுட்டே பதிவின் கடைசி பகுதிய படிக்கிறப்ப மனசு லேசாகி விட்டது ஸாதிகா..கண்ணுக்கு நல்ல விருந்து.

Asiya Omar said...

நல்ல நோக்கத்திற்கு நடத்தப்படுவதால் அறுசுவை உணவிற்கு எத்தனை விலை கொடுத்தாலும் தகும், ஸாதிகா ஒரு பகிர்வை பற்றி சொல்றாங்கன்னா கண்டிப்பாக அதில் சமுதாய நோக்கும் இருக்கும்.:)!அன்றைக்கு உணவு வகைகளைப் பார்த்து விட்டு கருத்திட்டு சென்றுவிட்டேன்..நல்ல பகிர்வு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

நல்ல நோக்கம். நல்ல பதிவு பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றிகள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

.காதுல புகை வருது..//ஹாஹா..கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

Super.Chennai makkals koduthu vachavanga.enjoy panranga.//ஆசியா..நீங்கள் அல் ஐனில் இருந்து என் ஜாய் பண்ணலியா>?

ஸாதிகா said...

கருத்துக்கும்,பாராட்டுக்கும் மிக்க நன்றி கணேஷண்ணா.புதுப்பதிவுகளை காணோம்??

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆசியா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி வி ஜி கே சார்.

பூந்தளிர் said...

நல்ல நோக்கத்துக்காக எவ்வளவு பணம் கொடுத்தாலும் நல்லதுதானே.

Avargal Unmaigal said...


உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


அன்புடன்
மதுரைத்தமிழன்

Unknown said...

சாதிகா
உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஹஜ் யாத்திரை முடிந்து வந்ததும் ’வந்துட்டேன் மாமி’ன்னு ஒரு குரல் கொடுத்திருந்தா எட்டியாவது பார்த்திருப்பேன் இல்ல. சரி பரவாயில்லை.
நல்ல நோக்கம்தான். இருந்தாலும் நான் அங்க வரல. சாதிகா வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டு வந்துடறேன்.
அப்படியே எங்க ஊட்டுக்கும் வாங்க. புத்தாண்டுத் தீர்மானமா தினமும் ஒருத்தர் ப்ளாகிற்காவது வந்து பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு செய்திருக்கேன். இன்னிக்கு உங்க வூட்டுக்குத்தான்.

Unknown said...

சாதிகா
உங்களூக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள். ஹஜ் யாத்திரை முடிந்து வந்ததும் ’வந்துட்டேன் மாமி’ன்னு ஒரு குரல் கொடுத்திருந்தா எட்டியாவது பார்த்திருப்பேன் இல்ல. சரி பரவாயில்லை.
நல்ல நோக்கம்தான். இருந்தாலும் நான் அங்க வரல. சாதிகா வீட்டுக்குப் போய் நல்லா சாப்பிட்டு வந்துடறேன்.
அப்படியே எங்க ஊட்டுக்கும் வாங்க. புத்தாண்டுத் தீர்மானமா தினமும் ஒருத்தர் ப்ளாகிற்காவது வந்து பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு செய்திருக்கேன். இன்னிக்கு உங்க வூட்டுக்குத்தான்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பூந்தளிர்.

ஸாதிகா said...

வாழ்த்துக்கு நன்றி உண்மைத்தமிழன்.உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகக்ள்.

ஸாதிகா said...

புத்தாண்டுத் தீர்மானமா தினமும் ஒருத்தர் ப்ளாகிற்காவது வந்து பின்னூட்டம் கொடுக்கணும்ன்னு செய்திருக்கேன். இன்னிக்கு உங்க வூட்டுக்குத்தான்.//யப்பப்பா..,மாமி..ரொம்ப சந்தோஷம்.இனி அடிக்கடி வருவீர்கள் என்று நம்புகிறேன்.இதோ உங்கள் வீட்டுக்கு வந்துண்டே இருக்கேன்:)

மாதேவி said...

உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

Ranjani Narayanan said...

நாக்கில் நீர் ஊறுது பார்க்கும்போது. நல்ல நோக்கத்திற்காக செய்யும் காரியத்திற்கு நிச்சயம் ஆதரவு தர வேண்டும்.

தமிழ்மணம் தர வரிசையில் முதல் 1௦௦ க்குள் வந்ததற்குப் பாராட்டுக்கள்!

ஷைலஜா said...

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்... நல்லா எஞ்சாய் பண்ணி இருக்கீங்க...மூங் அல்வா எனக்குப்பிடிச்சது!

ஆமினா said...

அடடா.... வீட்டு பத்திரத்தை எடுத்துட்டு போகணும் போலையே :-)