December 4, 2013

இரவல் புத்தகம்சென்ட்ரல் ஸ்டேஷன்..

வழக்கம் போல் அதே ஆர்ப்பாட்டத்துடன்,ஜனத்திரளாக சுறுசுறுப்புடன் இயங்கிக்கொண்டிருந்தது.தூரத்தில் இருக்கும் எலக்ட்ரானிக் போர்டை டஜன் கணக்கு தலைகள் மறைக்க எம்பி எம்பி பார்த்து பெங்களூர் செல்லும் சதாப்தி நான்காவது பிளாட் பாரத்தில் நிற்பதை அறிந்து கொண்டுஅவசரமாக தோளில் மாட்டி இருந்த  பேகை சுமந்து கொண்டு ,டிராலியை இழுத்துக்கொண்டு எதிர் பட்ட கடையில் ஒரு வாட்டர் பாட்டிலுடன் பொழுதை போக்க வேண்டுமே என்பதற்காக வாராந்திரபத்திரிகை ஒன்றினையும் வாங்கிக்கொண்டேன்.பத்திரிகையுடன் இலவசமாக ஒரு பவுச் மூட்டு வலித்தைலத்தையும் மறக்காமல் வாங்கிக்கொண்டு ரயில் ஏறினேன்.

வண்டி கிளம்புவதற்கு தயாராக இருந்தது.ஏஸி சில்லிப்புடன் நிறைய இருக்கைகள் காலியாக இருந்தன.எனக்குறிய இருக்கை எண்ணை கண்டு பிடித்து அருகே சென்ற பொழுது ஜன்னலோர சீட்டில் என் வயதை ஒத்த ஒருவர் செல்போனில் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டு இருந்தார்.

கைப்பையையும்,டிராலி பேக்கையும் லக்கேஜ் வைக்கும் பகுதியில் வைத்து விட்டு இருக்கை மீது வைத்து விட்டுப்போன வார இதழை பிரித்தேன்.

பிரித்ததுதான் தாமதம் அருகில் இருந்தவர் என் தோளுடன் ஒட்டி உரசிக்கொண்டு என் கையில் இருந்த பத்திரிகையை பார்வையால் மேய ஆரம்பித்தார்.

எனக்கு யாரும் மிக நெருக்கமாக அமர்ந்து ஒட்டி உரசிக்கொண்டு இருப்பது பிடிக்காத விஷயம்.மிகவும் நெருங்கிய நண்பர்களாயினும் அரை அடி  தள்ளியே அமருவேன்.நண்பர் பட்டாளம் என்னை சூனா மானா என்று நக்கலாக பட்டப்பெயர் சொல்லி அழைப்பார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.அதாகப்பட்டது சுத்த மகாராஜா.அப்படி பட்ட எனக்கு முன் பின் தெரியாத ஒரு நபர் இப்படி நெருக்கமாக அமர்ந்து கொண்டு இம்சை கொடுத்தால் எப்படி சகித்துக்கொண்டு இருக்க முடியும்?

என் தோளில்  இப்படி ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பக்கத்தில் இருப்பவரை இப்படி படுத்துகிறோமே என்ற கூச்ச நாச்சமின்றி ஓசிப்பத்திரிகையை வாசிக்கும் பக்கத்துசீட்டுக்காரரை பார்த்த நொடி மனம் பூராகவும் எரிச்சல் மேலோங்கியது.

வில்ஸ் டீ ஷர்ட்டும் லிவிஸ் ஜீனும் போட்டுக்கொண்டு கையில் பிளாக்பெரியுடன் இருப்பவனுக்கு 20 ரூபாய் கொடுத்து ஒரு பத்திரிகை வாங்கிப்படிக்க துப்பில்லையே தூ..”மனதிற்குள் வெறுப்பு  மண்டியது.

தொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.

நீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.

“சார்..அடுத்த பக்கத்தைப்புரட்டுங்க சார்”

கோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.

பக்கத்து சீட் மகா மனுஷன் அசருவதாக இல்லை.விளம்பரங்களைப்படித்தாலும்,துணுக்குகளை படித்தாலும் கூடவே என்னை ஒட்டிக்கொண்டு  அமர்ந்து எனக்கு எரிச்சலை அதிகமாக்கினார்.

ஒரு கட்டத்தில் சற்று முணு முணுப்பாகவே வாசிக்கும் பொழுது எரிச்சலின் உச்சகட்டத்துக்கே போய் விட்டேன்.

“சார்..பக்கத்தில் இருப்பவரும் புத்தகத்தை படிக்கிறார் என்பது ஞாபகம் இருக்கு இல்லை..:

“சாரி சார்”

மீண்டும் கண்ணால் மேய ஆரம்பித்தார்.இந்த ஆள் விடவே மாட்டான் போலும்.வந்த ஆத்திரத்தில் புத்தகத்தை மடித்து பையில் வைப்பதற்காக எழுந்தேன்.

“என்ன சார் புத்தகத்தை போய் பையில் வைக்கப்போறீங்க”

“யோவ் ..பையில் வைக்காமல் உங்க கையிலா கொடுப்பாங்க”

“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்?”

“உங்க புக்கா”

“பின்னே..நானும் நாகரீகம் கருதி என் புக்கை கொடுங்கன்னு கேட்காமல் உங்க கூடவே சேர்ந்து புக்கை படித்துக்கொண்டு வேறு வழி இல்லாமல் அவஸ்தையை சகித்துக்கொண்டு பொறுமையாக  இருந்தேன் சார்.”

நான் அவசர அவசரமாக பையை எடுத்து பார்த்த பொழுது நான் வாங்கிய வார இதழ் இலவச இணைப்புடன் என்னைப்பார்த்து சிரித்தது.

36 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன கொடுமை இது....!@

ஸாதிகா said...

கொடுமைதான்.இப்படி ஆட்களை என்ன பண்ணலாம் தனபால் சார்?:)

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“என் புக்கை என் கையில் கொடுக்காமல் உங்க பையில் வைக்கறது எந்த விதத்தில் நியாயம்?”//

அருமையான ஜோக். ரஸித்தேன். சிரித்தேன்.

பாராட்டுக்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

”தளிர் சுரேஷ்” said...

அடடா! ஆரம்பிக்கறப்பவே இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்! சூப்பர்!

Anonymous said...

வணக்கம்
பதிவை மிகஅழகாக நகைச்சுவை கலந்த கலவையாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

இளமதி said...

ஐயொ ஐயோன்னு தலைல அடிச்சுக்கலாம் போல வந்திச்சு ஸாதிகா..:)

சிரிச்சு கண்ணில கண்ணீரே வந்திடிச்சு..:)

நல்ல கதை! அருமை!

வாழ்த்துக்கள் ஸாதிகா!

Menaga Sathia said...

ஆஹா.. இப்படியும் சிலர் இருக்கதான் செய்கிறார்கள்..

ஸ்ரீராம். said...

ஹா...ஹா... ஹா.... நினைத்தேன்!

shanuk2305 said...

Ayyo ayyyo

ஸாதிகா said...

ரஸித்து சிரித்து பின்னூட்டியதில் எனக்கும் மகிழ்ச்சியே விஜிகே சார்.

ஸாதிகா said...

அடடா! ஆரம்பிக்கறப்பவே இப்படித்தான் இருக்கும்னு நினைச்சேன்!//ஆரம்பத்திலேயே முடிவை யூகித்து விட்டீர்களா சுரேஷ் சார்.நன்று.

ஸாதிகா said...

வாங்க ரூபன்.தொடர் கருத்தளிப்புக்கும்,ஊக்கத்திற்கும்,வாழ்த்துக்கும் மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

சிரிச்சு கண்ணில கண்ணீரே வந்திடிச்சு..:)//இது ...இது ..இதுதான் வேண்டும்.என் சிறுகதையை வாசித்து கண்ணீர் வர இளமதி சிரித்ததில் மிக்க சந்தோஷம்

ஸாதிகா said...

ஆமாம் மேனகாஇப்படியும் சிலர் இருக்கத்தான் செய்கின்றார்கள்.

ஸாதிகா said...

ஐயோ ஸ்ரீராம் சார் நீங்களும் முன்னரே முடிவை யூகித்து விட்டீர்களா?சபாஷ்,

ஸாதிகா said...

ஆமாம் shanuk2305 நானும் இந்தக்கதையை டைப் செய்து கொண்டு இருந்தப்பவே இந்த வார்த்தைகளை அடிக்கடி முணு முணுத்தேனாக்கும்

கார்த்திக் சரவணன் said...

ஹா ஹா ஹா.. கடைசி ட்விஸ்ட் எதிர்பாராதது...

priyasaki said...

மிக சுவாரஸ்மான கதை ஸாதிகாக்கா. ஊரில் எங்க வீட்டுக்கு (ஓசிபேப்பர் படிக்கத்தான்) வரும் நபரை நினைத்துப் பார்த்தேன்.முடிவு எதிர்பார்க்காதது.நன்றி

மகேந்திரன் said...

இனிய வணக்கம் சகோதரி..
நகையுணர்வு இழையோடும் நல்ல கதை...
நினைத்திராத திருப்பத்துடன்..

அம்பாளடியாள் said...

தொடர் கதையைப்படிக்க ஆரம்பித்தேன்.பக்கத்து சீட் கரரும் என்னைத்தொடர்ந்து தொடர்கதையை படிக்க ஆரம்பித்தார்.நான் வேண்டுமென்றே இருக்கையில் நிமிர்ந்து உடகார்ந்து படித்தாலும் அந்த மனுஷன் விடாகண்டனாக இருப்பான் போலும்.

நீண்ட நேரம் பக்கத்தைப்புரட்டாமல் வேண்டுமென்றே சும்மா அமர்திருந்தேன்.

“சார்..அடுத்த பக்கத்தைப்புரட்டுங்க சார்”

கோபமாக உறுத்துப்பார்த்து விட்டு “நான் படித்து முடித்தால் தான் புரட்ட முடியும்”சற்று கோபமாகவே குரலை வெளிப்படுத்தினேன்.

அந்தாள் பாவம் சரியான புத்தகப் பூச்சியாக இருப்பார் போல :)))
கொஞ்சம் அனுசரித்துப் போனால் தான் என்ன !! சிறப்பான
பகிர்வு வாழ்த்துக்கள் தோழி .

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா கதை இப்படிப் போகிறதா

ஸாதிகா said...

இந்த கதையின ஹீரோ உங்க வீட்டுக்கு ஓசி பேப்பர் படிக்க வருபவரை நினைவூட்டும் படி கதையுடன் ஒன்றிய தங்கை ப்ரியசகிக்கு நன்றிகள்

ராமலக்ஷ்மி said...

மிக அருமை, ஸாதிகா:)! இரசித்தேன்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமை, ஸாதிகா. இரசித்தேன்:)!

ராமலக்ஷ்மி said...

மிக அருமை, ஸாதிகா. இரசித்தேன்:)!

ஸாதிகா said...

கடைசி ட்விஸ்ட் எதிர்பாராதது...//இது தான் வேண்டும் ஸ்கூல் பையன்.

Yaathoramani.blogspot.com said...

மிக மிக அருமை
சொல்லிச் சென்றவிதமும்
முடித்தவிதமும் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 9

ஸாதிகா said...

சகோதரர் மகேந்திரன் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துரைக்கு மிக்க நன்றி அம்பாளடியாள்.

ஸாதிகா said...

ஆகா கதை இப்படிப் போகிறதா//ம்ம்..கதை இப்படித்தான் போகிறது சகோ கரந்தை ஜெயக்குமார்.

ஸாதிகா said...

ராமலக்‌ஷ்மி ரசித்து கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்கும்,ஓட்டுக்கும் மிக்க நன்றி ரமணி சார்.

Asiya Omar said...

இந்தப் பகிர்வு என் கண்ணில் படாமல் எப்படிப் போனது.இன்று தான் என் கண்ணில் பட்டது, இதென்னடா வம்பாய்ப் போச்சுன்னு நினைக்கும் பொழுது கதையின் ட்விஸ்ட் அவிழ்ந்தது. சூப்பர்.

yathavan64@gmail.com said...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!

திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
(வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!

(இன்றைய எனது பதிவு
"இந்திய குடியரசு தினம்" கவிதை
காண வாருங்களேன்)

yathavan64@gmail.com said...அன்புமிகு வலைப் பூ அன்பருக்கு,
நல்வணக்கம்!

திருமதி ஞா.கலையரசி அவர்களால்,
(வலைச்சரத்தில் இரண்டாம் நாள் - வாய் விட்டுச் சிரித்தால்!)
இணைப்பு:- http://blogintamil.blogspot.in/2015/01/blog-post_27.html.
இன்றைய வலைச் சரத்தின்
சிறப்புமிகு பதிவாளராக தாங்கள்
வலம் வந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி!
வாழ்த்துக்களுடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.fr
"இனிய குடியரசு தின நல் வாழ்த்துக்கள்!"
ஜெய் ஹிந்த்!

(இன்றைய எனது பதிவு
"இந்திய குடியரசு தினம்" கவிதை
காண வாருங்களேன்)