August 30, 2013

ஆட்டோவும் பரோட்டாவும்.

மேகத்துகள்களுக்கிடையே ஆங்காங்கே கீற்றாக ஊடுறுவும் கதிரவகீற்றுக்களின் இதமான கதகதப்பு.காலை நேரத்திலும் இதம் தரும் சில்லென்ற உணர்வு.ஆராவாரம் அதிகம் இல்லாத கோழிக்கோடு சாலையில் நான் சென்ற ஆம்னி பஸ்ஸை ஓரம் கட்டி விட்டு “இதுதான் லாஸ்ட்.எல்லோரும் இறக்கிக்குங்க” என்று தமிழும் மலையாளமும் கலந்து ஓட்டுனர் கூறவும் பஸ்ஸில் சொற்பமாக இருந்த ஒரு சிலருடன் 'பஸ்ஸில் இப்படி லோல் படும் நிலைமை ஆகிவிட்டதே. டிரைனுக்கு டிக்கெட் கிடைத்து இருந்தால் இத்தனை அவஸ்தை வேண்டியதில்லையே”என்று பயணம் முழுக்க புலம்பி 14 மணி நேரப்பயணத்தையும் வெற்றி கரமாக முடித்த அலுப்பில் நாங்களும்  பஸ்ஸை விட்டு இறங்கினோம்.

பஸ்ஸில் இருந்து இறங்கிக்கொண்டு இருந்த போதே  தூரத்தில் நின்றுகொண்டிருந்த ஆட்டோ எங்களை நோக்கி வந்தது.”ஐ ஜி ரோட் காலிகட் டவர் போகணும்”இது நான்.

“பிஃப்டீன் ருபீஸ்”

’பிஃப்டியா பரவாஇல்லையே.மூட்டை முடிச்சை எல்லாம் பார்த்து ஊருக்கு புதுசு என்று அதிகம் கேட்காமல் நியாமாக கேட்கிறாரே இந்த ஆட்டோ மேன்”என்று நினைத்தேன்.இருந்தாலும் மெட்றாஸ் புத்தி .வழக்கமாக சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும் அந்த ஆட்டோ மேன் பலமாக சிரிக்கிறார்.”தாரளமாக கொடுங்க.வாங்கிக்கறேன்”

அருகில் இருந்த என் மகன் பற்களை கடித்த சப்தம் அந்த ஏரியாவிலே இடி  விழுந்த சப்தத்திற்கு ஈடாகி இருக்கும்.

“ம்ம்ம்ம்ம்ம்ம்மாஆஆஆ..அவர் பிஃப்டீன்ன்ன்ன்ன் ருபீஸ் கேட்கிறார்”அடிக்குரலில் இப்படி சொன்னதை என்னால் நம்பவே முடியவில்லை.பஸ்ஸில் டிரைவர் சீட்டுக்கு பின் இருக்கும் சீட்டில் பயணித்தது ,ஓயாமல் பஸ் டிரைவர் ஹார்ன் அடித்த விளைவோ என்னவோ என் காது அடைத்து விட்டது போலும்.ஒரு வழியாக பிரமிப்பு மாறாமலே மூட்டை முடிச்சுகளுடன் ஆட்டோவில் ஏறினோம்.

இந்த ஆட்டோவில் மட்டுமல்ல அங்கு ஓடிக்கொண்டு இருக்கும் எல்லா ஆட்டோக்களும் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டது.ஆட்டோவில் பயணர் இருக்கைக்கும்,ஓட்டுனர் இருக்கைக்கும் இடையில் ஸ்டீலால் அலங்கரித்து அழகு படுத்தியதுமில்லாமல் முகப்பில்,சீலிங்கில் ,பக்கவாட்டில் என்று எல்லா இடங்களிலும் அலங்கரித்து இருக்கின்றனர்.சீலிங்கில் பொருத்தபட்டு இருக்கும் அலங்கார விளக்கு உயரமான ஆட்கள் அமர்ந்தால் தலையை பதம் பார்க்கும்.உள் அலங்காரத்தின் காரணத்தால் சென்னையைப்போல் மூன்றுக்கும் மேற்பட்ட ஆட்கள் பயணிப்பது மிகுந்த சிரமம்.

சென்னையில் ஆட்டோக்கள் பெரிய ஹோட்டலினுள் அனுமதிக்கபடுவதில்லை.அந்த பந்தா ஏதும் இல்லாமல் ஹோட்டலுக்குள்ளேயே சென்று நிறுத்தி பெட்டிகளை ரிஸப்ஷன் கவுண்டர் அருகே வைத்து வைத்து விட்டு பதினைந்து ரூபாயை வாங்கிக்கொண்டு சென்ற ஆட்டோ டிரைவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன்.வெறும் பதினைந்தே ரூபாய்க்கு எத்தனை உழைப்பு!

சென்னையில் ரெண்டே கிலோ மீட்டர் தூரத்துக்கு பயணித்தாலும் 100 ரூபாயை கூசாமல் வாங்கிசெல்லும்,மெட்றாஸ் பாஷையால் பயணிகளை அர்ச்சிக்கும் ஆட்டோமேன்களுக்கு இடையே இப்படியும் ஒரு ஆட்டோ மேன்.இந்த ஆட்டோ மேன் மட்டுமல்ல நான் அங்கிருந்த நான்கு நாட்களும் பயணித்த ஆட்டோக்கள் அனைத்துமே இந்த ரீதியில்தான் இருந்தது.தங்கி இருந்த இடத்தில் இருந்து சுமார் 25 - 30 கிலோ மீட்டர் தூரத்தில் ஊருக்கு ஒதுக்கு புறமாக  இருந்த என் ஐ டி கேம்பஸுக்கு சென்று காத்திருந்து திரும்ப,வழியில் ஆங்காங்கே நிறுத்தி குட்டி குட்டி ஷாப்பிங் செய்து வர மொத்தமாக 500 ரூபாய்தான் இண்டிகோ காரின் வாடகை எனக்கு ஆச்சரியமூட்டியது.


ஹோட்டலில் உள்ள சாதம் பிரியாணி அனைத்திலும் அரிசி மெகா சைஸில் இருந்ததில் சாப்பிட பிடிக்காமல் பக்கத்தில் இருந்த மால்களுக்கு சென்று சிக்கனும் பர்கருமாக பொழுது கழிந்தது.சில உணவகத்தினுள் நுழைந்து  பிடிக்காமல் திரும்பியதும் உண்டு.தெருவில் நடந்து கொண்டிருந்த போது ஒரு ஹோட்டல் மனதிற்கு பிடித்தமாதிரி இருந்தது.உள்ளே நுழைந்தால் சாப்பிட்டுக்கொண்டிருந்த அத்தனை பேர் தட்டுகளிலும் பரோட்டாதான்.ஒரு க்ரூப் சைட் டிஷ் இல்லாமல் வெறும் பரோட்டாவையே சாப்பிட்டுக்கொண்டு இருந்தது.இங்கு பரோட்டா மட்டும்தான் கிடைக்குமாக இருக்கும் என்று நினைத்து மெனுகார்டு வாங்கி பார்த்தால் ஏகப்பட்ட மெனுக்கள் இருந்தன.

சரி நாமும் பரோட்டாவே ஆர்டர் பண்ணலாம் என்று ஆர்டர் செய்தோம். இலைக்கு வந்த பரோட்டா அப்படியே பரவசப்படுத்தி விட்டது.அத்தனை சாஃப்ட்.லேயர் லேயாராக சுவையாக சூடாக..ஆஹா இதுதான் மலபார் பரோட்டாவா!வெறும் ஏழே ரூபாயில் மெகா சைஸ் பரோட்டா.பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.ஊருக்கு திரும்பும் போது கூடவே பெரிய பரோட்டா பார்சல் கூடவே வந்தது என்பதை சொல்லவும் வேண்டுமோ?

24 comments:

Anonymous said...

நாட்டு நடப்பு அறிய முடிந்தது.
நன்றி.
வேதா. இலங்காதிலகம்.

Aashiq Ahamed said...

அஸ்ஸலாமு அலைக்கும் அக்கா,

உண்மையிலேயே ஆட்டோ மேட்டர் ஆச்சர்யமாகத்தான் இருக்கின்றது. பெங்களூருவில் இந்த அளவிற்கு இல்லையென்றாலும் மீட்டர் போட்டு நியாயமாகத்தான் வாங்கி பார்த்திருக்கின்றேன். இங்கே புதுவையிலும் சென்னையை போல ஆட்டோக்கள் கொள்ளை தான் அடிக்கின்றன. புதுவை பஸ் நிலையத்தில் இருந்து ஒரு கிமீ தூரம் உள்ள கடற்கரைக்கு செல்ல ஐம்பது ரூபாய் :-(. சென்னையில் மீட்டர் படி செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். நல்லதையே எதிர்பார்ப்போம்.

ஏழு ரூபாய்க்கு பெரிய பரோட்டா? ம்ம்ம்ம். பரோட்டாவிற்கு பெயர் போன என் கிராமத்தில் மீடியம் சைஸ் பரோட்டா விலை பத்தாகி பல மாதங்கள் ஆகிவிட்டது. :-) :-)

வஸ்ஸலாம்..

Faiza said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹூ!!

முடிஞ்சா, அந்த சிக்கனையும் பர்க்கரையும் நிரந்தரமாகவே ஒதுக்கிடுங்களேன்!! இரண்டு காரணங்கள்: ஹலால்னு நாம நம்பி சாப்பிடும் கறி, உண்மையாகவே இது போன்ற பாஸ்ட் புட் கடைகளில் ஹலாலான்னு தெரியாது. இரண்டாவது, பர்கர், நக்கெட்ஸில் பயன்படுத்தப்படும் மாமிசம், கறி வெட்டும்போது கீழே விழும் துண்டுகள், மற்றும் கொழுப்பு, தசை வகையறாக்களை ஒன்று சேர்த்து செய்வது. :)

aavee said...

சென்னையில் பேரம் பேசும் வழக்கத்தில் “நாற்பது தர்ரேன்”என்றதும்//


hahaha,..செம்ம காமெடி..

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆங்காங்கே நடைபெறும் யதார்த்தங்களை நகைச்சுவையாக எழுதியுள்ளீர்கள். பாராட்டுக்கள்.

ராஜி said...

பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி வேதாம்மா.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//பிறகென்ன இனி வந்த நாட்களில் சிக்கனையும் பர்கரையும் புறகணித்து விட்டு லன்சும் டின்னரும் பரோட்டாவிலேயே கழித்தோம்.//

இந்த பரோட்டா அதிகமுண்பது உடலாரோக்கியத்துக்கு உகப்பில்லை என ஆ.வி யில் ஒரு ஆய்வுக் கட்டுரை வந்துள்ளதே!
ஆசைக்கு உண்ணுவது வேறு. அதையே உணவாக்க முடிவு செய்வது உவப்பா?

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் தம்பி ஆஷிக்.வருகைக்கும்,விரிவான கருத்துக்கும் மிக்க நன்றி.அட..உங்க பாண்டியிலும் ஆட்டோ ஆட்டூழியமா?சென்னை கீழக்கரை இப்படி எங்கே பார்த்தாலும் இவர்கள் பண்ணும் அடாவடியை பார்த்துவிட்டு கேரளா ஆட்டோ வியப்பை ஏற்படுத்தியது.

//சென்னையில் மீட்டர் படி செயல்பட வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளதாக கேள்விப்பட்டேன். நல்லதையே எதிர்பார்ப்போம். // விரைவில் செயல் பாட்டுக்கு வந்தால் நன்றாக இருக்கும்.

பரோட்டாவுக்கு பெயர் போன கிராமம் எது??

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் பாயிஜா.//முடிஞ்சா, அந்த சிக்கனையும் பர்க்கரையும் நிரந்தரமாகவே ஒதுக்கிடுங்களேன்!!// நல்ல அட்வைஸ்.கண்டிப்பாக முயற்சிக்கிறேன்.நான் நான் வெஜ் சாப்பிடுவது ஹலால் போர்ட் உள்ள உணவகங்களில் மட்டுமே.

ஸாதிகா said...

hahaha,..செம்ம காமெடி..//நல்லா சிரிச்சீங்களா ஆவி.ரைட்டு.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துரைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

பரோட்டா உடம்புக்கு ஒத்துக்குச்சா?!//ஒத்துக்குச்சி ராஜி.சென்னைக்கு எலுமிச்சை சாதத்துடன் ஆரணி பரோட்டாவும் கட்டி எடுத்துட்டு வந்துடுங்க.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இந்த பரோட்டா அதிகமுண்பது உடலாரோக்கியத்துக்கு உகப்பில்லை என ஆ.வி யில் ஒரு ஆய்வுக் கட்டுரை வந்துள்ளதே!//நல்ல தகவல் யோகன் பாரிஸ்.தகவலுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

சாந்தி மாரியப்பன் said...

மலபார் மலபார்தான்..

கோமதி அரசு said...

பதிவின் ஆரம்பம் மிக அருமை. வர்ணனைகளை படித்தவுடன் கதை வரப்போகிறது என்று நினைத்தேன். ஆட்டோ அனுபவம் கதையாக அழாகாய் மலர்ந்து பரோட்டாவுடன் இனிதாக நிறைவு பெற்றது அருமை.
கேரளாவில் ஆட்டோ சார்ஜ் குறைச்சல் தான்.
ஊருக்கு போய் விட்டீர்களா? அதுதான் வலைத்தளம் வரவில்லையா?

ஹுஸைனம்மா said...

ஓ, டூர் போனதால்தான் இந்தப் பக்கம் ஆளே காணொமா? (நாங்கல்லாம் ஊரிலயே இருந்துகிட்டுத்தான் இந்தப் பக்கம் வராம இருக்கோமாக்கும்! :-)) )

ஆனா இந்த பரோட்டாவின் தீமை பற்றி வரும் மெயில்களிலெல்லாம் ‘கேரளாக்காரர்கள் விழிப்படைந்துவிட்டார்கள், பரோட்டாவை ஒதுக்கி விட்டார்கள், நாம்தான் இன்னும் இதை விடவில்லை’ அப்படின்னுல எழுதிருக்கு!!

குட்டன்ஜி said...

பரோட்டா படத்தைப் பார்த்தாலே சாப்பிட ஆசையாக இருக்கிறதே!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இந்த பரோட்டா, ஆட்டோ அனுபவம் படித்ததும் நாங்க ஆக்ரா போன போது ஏறிய ஆட்டோ நினைவுக்கு வருகிறது,
ரொம்ப அருமையான சுவாரசியமான பதிவு

சிராஜ் said...

சாதிக்கா அக்கா....

அருமையான பயண கட்டுரை...அவ்வ்வ்வ்வ்வ்வ்...

அனாலும் நீங்க மெட்ராஸ் குணத்த காட்டிட்டீங்க.... 40 ரூபாய் கொடுத்து இருந்து இருக்கணும்.... அது தானே நீங்க ஒத்துகிட்ட தொகை????

இராஜராஜேஸ்வரி said...

ஆட்டோவும் பரோட்டாவும்.
ஆச்சரியம் அளித்தன..!

Mahi said...

நான் அதிகம் ஆட்டோவில் போனதில்லை ஸாதிகாக்கா. எங்கூரில பேருந்துகளே போதுமான அளவில் இருக்கே! :)
கேரளாவில் ஆட்டோக்கள் நியாயமாகவும், மலிவாகவும் இருக்குமென கேள்விப்பட்டிருக்கேன். உங்க பதிவு பாத்து சந்தோஷமா இருக்கு. :)

மலபார் பரோட்டாவை அடிச்சுக்க முடியுமா? உள்ளே போற வேகமே தெரியாம கடகடன்னு இறங்கிருமே! ;)

ஆனாலும் நீங்க 15க்கும் 50க்கும் கொழப்பினது டூ மச்சு! ;)
நல்ல பதிவு ஸாதிகாக்கா!

இளமதி said...

ஸாதிகா.. வந்துட்டீங்களா?
அச்சச்சோ நா கவனிக்கவே இல்லை..:)

நல்ல பயணப் பகிர்வு. வழமையான நகைச்சுவையோடு.

பரோட்டா பார்க்கவே பசிக்குதே..;)

த ம.26

Asiya Omar said...

ஆட்டோவும் பரோட்டாவும் என்னவொரு ரைமிங்..பகிர்வு சுவாரசியம்.நானும் திரும்பி வந்துட்டேன் பா.இருந்தாலும் நான் உங்க வீடு வந்தப்போ பரிமாறிய ப்ரெட் சாண்ட்விச் ருசி இன்னும் என் நாக்கில்.என் மகள் உங்களுக்கு எல்லாம் இல்லாமல் காலி செய்த ஸ்வீட் சிப்ஸ்...இன்னும் பல நினைவுகள்..மனதில் வந்து செல்கிறது தோழி.