July 14, 2013

அது இதுதான்

நான் சுவாரஸ்யமாக அன்றைய நாளிதழில் மூழ்கி இருந்தேன்.எங்கள் வீட்டு குட்டி ஆமிர் ஓடி ஆடி விளையாடிக்கொண்டிருந்தார்.கையில் நீளமாக பிலிம் ரோல்,ரிப்பன் போன்ற வஸ்து.எங்காவது இருந்து எடுத்து வந்திருப்பார் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து நாளிதழில் மும்முரமாகிவிட்டேன்.

அந்த வஸ்துவை வாயில் வைத்ததும்  “தம்பி வாயில் எல்லாம் வைக்கக்கூடாது”என்று சப்தமாக சொல்லியும் அவர் கேட்பதாக இல்லை.அதனை கடித்து மெல்லவே ஆரம்பித்துவிட்டதும் பதறிப்போய் பிடிக்க ஓடினால் என் கையில் மாட்டவே இல்லை.டேபிளை சுற்றி ஓடவும்,மாடிப்படி வழியே ஓடவும்..நானும் விடவில்லை.பின்னாலேயே மூச்சிரைக்க ஓடினேன்.வாயெல்லாம் சிரிப்பாக அந்த பிலிம் ரோலை சுவைத்துக்கொண்டே என் கையில் மாட்டாமல் ஆட்டம் காண்பித்து எனக்கு வெறுப்பு ஏற்றியதுதான் மிச்சம்.

எதிரே வந்த என்பையன் என்னம்மா சின்னப்பிள்ளை போல் இவனுடன் ஓடிப்பிடித்து விளையாடுறீங்க”என்று கேட்டார்.

”இவன் பிலிம் ரோலை சாப்பிடுகிறான்ப்பா ”

”பிலிம் ரோலா”பதறிய படி ஆமிரை தாவிப்பிடித்து  கோழியை அமுக்குவது போல் ஒரே அமுக்கு..

“ஐய்யையோ..அவனவன் செங்கலை சாப்பிடுகிறனர்,பல்பை சாப்பிடுகிறானர்,பேப்பரை சாப்பிடுகிறானர் என்று தொலைக்காட்சியிலும்,நாளிதழ்களில் அறிந்து இருக்கிறோமே.அந்த ரேஞ்சில் இவர் பிலிம் ரோலை சாப்பிடுகிறாரா என்று ஒரு நொடி யோசித்து அதிர்ந்து விட்டேன்.”

கையில் இருந்ததை வலுக்கட்டாயமாக வாங்கி பார்த்தது விட்டு”மா..நாளைக்கு நியூஸ் பேப்பரில் பிலிம் ரோலை உணவாக சாப்பிடும் ஆறுவயது சிறுவன் என்று கொட்டை எழுத்துக்களில் செய்தி வரும்,சன் நியூஸுக்கு பேட்டி கொடுக்க ரெடியாக இருங்க”என்று கூறி சிரித்தார் என் மகன்.

அன்றைக்கு செம்ம்ம்ம்மையாக பல்பு வாங்கி விட்டேன்.சும்மா இல்லை.தவுசண்ட்வாட்ஸ் பல்பு.அது வேறு ஒன்றும் இல்லை.சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி மிட்டாய்.சிறுவர்களுக்கு மட்டுமல்ல.எனக்கும்தான் மிகவும் பிடித்த ஜெல்லி மிட்டாய்.

அப்பப்பா..இந்த மிட்டாய் கம்பெனி ஆட்கள் எப்படி எல்லாம் யோசிக்கங்கப்பா!!

இதனை,தங்கை வானதியும்,தோழி இமாவும் கண்டு பிடித்து விட்டனர்.இது வானதி ஊரில் விற்கும் கேண்டி என்பதால் வான்ஸ் மிக சுலபமாக கண்டு பிடித்து விட்டார்.அவர் போட்ட பின்னூட்டத்தை கை தவறி பப்லிஷ் செய்து விட்டேன்.அறிந்த மறு நிமிடமே டெலிட்டும் செய்து விட்டேன்.ஆனால் மயிரிழைக்கேப்பில் இமா அதனை பார்த்து விட்டார்.அன்றிலிருந்து இமா தோழி எப்ப விடை சொல்லப்போறீங்க”என்று கேட்டு கேட்டு இதோ விடையும் சொல்ல வைத்துவிட்டார்.

நோன்புநேரம்,தவிர என் கேமராவுக்குள் ஆமிரை சிக்க வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது:)


50 comments:

Mahi said...

ஆஹா! அதானா இது??! எனக்கெல்லாம் ஒரு இத்துனூண்டு கூட தெரிலை ஸாதிகாக்கா! ஜெல்லி மிட்டாயே நான் பார்த்ததில்லை, அதிலும் இப்படி ஃபிலிம் ரோல் மாதிரி?!! நோ வே!! நீங்க சொன்னபிறகுதான் தெரியுது! ஆமீர் க்யூட்டா இருக்கார்! :)))

ரமலான் முபாரக்! [இவ்வளவு நாள் கழிச்சு சொல்லலாமா எனத் தெரில, இருந்தாலும் சொல்லிக்கிறேன்.] நல்லபடியாக நோன்புகளை முடிக்க வாழ்த்துக்கள்!

திண்டுக்கல் தனபாலன் said...

ஆக, இமா அவர்களுக்கு நன்றியை சொல்லிடுவோம்...!

Mahi said...

//Labels: தமாஷ்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))

ஸாதிகா said...

ரமலான் முபாரக்! [இவ்வளவு நாள் கழிச்சு சொல்லலாமா எனத் தெரில, இருந்தாலும் சொல்லிக்கிறேன்.] நல்லபடியாக நோன்புகளை முடிக்க வாழ்த்துக்கள்!//மிக்க மகிழ்ச்சி மகி.உடன் கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

உடன் கருத்துக்கு மிக்க நன்றி சகோ திண்டுக்கல்தனபால்.

ஸாதிகா said...

Mahi said...
//Labels: தமாஷ்// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! :))))//ஐயைய்யோ...

வை.கோபாலகிருஷ்ணன் said...

;))))) நல்ல தமாஷ் தான்.

RajalakshmiParamasivam said...

உங்களுக்கு நல்ல உடற் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று தீர்மானித்திருப்பார் உங்கள்வீட்டு க்யூட் ஆமிர்.இந்த மாதிரியெல்லாம் ஜெல்லி செய்கிறார்கள் பாருங்கள்.
வாழ்த்துக்கள்.தொடருங்கள்......

ஹுஸைனம்மா said...

போன பதிவின் படத்தைப் பார்த்து என் மகனும் நானும், ஃப்லிம் ரோலா அல்லது சூப்பர்மார்க்கெட்டுகளில் பில்லிங் மெஷினில் போடும் பிரிண்டர் பேப்பர் ரோலா என்றெல்லாம் பேசிக் கொண்டோம். இது ஜெல்லி மிட்டாயா??!! அவ்வ்வ்வ்....

பசங்களைக் கவர என்னல்லாம் டெக்னிக்!! ஜெல்லி உடம்புக்கு நல்லதில்லைன்னு கேள்வி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஐ ஜெல்லி மிட்ட்ட்ட்ட்டாய்ய்ய்ய்!

துளசி கோபால் said...

//அப்பப்பா..இந்த மிட்டாய் கம்பெனி ஆட்கள் எப்படி எல்லாம் யோசிக்கங்கப்பா!!//

இல்லேன்னா வாடிக்கையாளரைக் கவர்வது எப்படி? புள்ளைங்க எதை எப்ப விரும்புவாங்கன்னு சொல்ல முடியுமா?

ஆமிர் அழகு!

நம்முர்லே இதுகிடைக்குது.

நான் இதுவரை பார்க்காதது,ஊருலே தேன் முட்டாய்ன்னு ஒன்னு இருக்காமே அது:(

அம்பாளடியாள் said...

இப்படியொரு மிட்டாயை நானும் பார்த்ததே இல்லை .உங்கள்
ஆக்கத்தின் இறுதிக் கட்டம் வரை வாசிக்கும் போது நானும் அடுத்த கட்ட சாதனையாளராய் இந்தக் குழந்தையை நினைத்து ஏமார்ந்து விட்டேன் .ஆக மொத்தத்தில் எனக்கும் சின்னதா பல்பு
எரிஞ்சிற்று உங்களால் இன்று :)))))))))) வாழ்த்துக்கள் தோழி .

Seeni said...

athu sari..

ஸாதிகா said...

மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

ஜெல்லி மிட்டாயின் பல்வேறு உருவங்களைப்பார்த்தாலே காமெடியாக இருக்கும்.கருத்துக்கு மிக்க நன்றி ராஜலக்‌ஷ்மியம்மா.

ஸாதிகா said...

அட..ஹுசைனம்மாவும் பல்பு வாங்கியாச்சா?கருத்துக்கு நன்றி.ஜெல்லி உடம்புக்கு நல்லதில்லைன்னு கேள்வி.//புதுத்தகவல்.ஜெல்லி மிட்டாயின் உருவமும்,புளிப்பு சுவையும் என்னை ரொம்பவும் கவர்ந்தவை.

ஸாதிகா said...

ஸ்டார்ஜனுக்கும் ஜெல்லி மிட்டாய் பிடிக்குமா?நன்றி.

இமா க்றிஸ் said...

;))

இங்கு ஸ்கூல் டக் ஷாப்பில் ஃப்ரூட் ரோல் அப் விற்கிறார்கள். ஜெலி, நிறம் எதுவும் சேர்ப்பதாகத் தெரியவில்லை. குழந்தைகளைப் பழங்கள் சாப்பிட வைக்க குறுக்கு வழி. ;)
ஸாதிகாவின் படத்தில் பார்த்த சிவப்பு நிறக் கோடுதான் என்னைக் கொஞ்சம் குழப்பிவிட்டது. ;)

ஸாதிகா said...

நான் இதுவரை பார்க்காதது,ஊருலே தேன் முட்டாய்ன்னு ஒன்னு இருக்காமே அது:(//துளசிம்மா தேன் மிட்டாய் பார்த்ததில்லையா?ஆச்சரியம்தான்.அடுத்த முறை இந்தியா வரும்பொழுது உங்களை தேன் மிட்டாய்,கமர்கட்டுடன் சந்திக்கிறேன்.சரியா?நன்றி துளசிம்மா.

ஸாதிகா said...

தோழி அம்பாளடியாளையும் பல்பு எரியச்செய்துவிட்டதா?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க சகோ சினி.சஹர் முடிந்ததா?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாருங்கள் இமா.உங்களுக்காகவே இன்னிக்கு எப்படியும் பதிவு போட்டு விடவேண்டும் என்று போட்டும் விட்டேன்.மிக்க நன்றி தூண்டுதலுக்கும்,கருத்துக்கும்.

இமா க்றிஸ் said...

இங்க... http://imaasworld.blogspot.co.nz/2013/07/blog-post.html ஒரு ஹோம் மேட் ரோல் அப் இருக்கு. ஸாதிகா பதில் சொல்லும்வரைதான் பப்ளிஷ் பண்ணாம காத்திருந்தேன். ;)

ஸாதிகா said...

இதைப்பார்க்கும் முன்னரே பதிவை படித்து கருத்தும் சொல்லிட்டேன்:)

இமா க்றிஸ் said...

ஆமிர் குட்டி க்யூட் சிரிப்பு. ;)))

~~~~~~~~
தாங்ஸ் தனபாலன். :-)

கரந்தை ஜெயக்குமார் said...

இமா அவர்களுக்கு நன்றியை சொல்லிடுவோம்...!

Asiya Omar said...

ஆஹா! இது ஜெல்லி மிட்டாயா? நானும் சாப்பிடும் பொருளாக இருக்குமோ! ஆமீர் பெயரைச் சொல்றீங்களேன்னு நினைத்தேன்.சரியாப் போச்சு.நிஜமாகவே கணிக்க முடியவில்லை தோழி.

aavee said...

ஹாஹஹா... சாதாரண பல்பு மாதிரி தெரியலையே..

செம்ம க்யூட்டா இருக்கார் ஆமீர்..

ராமலக்ஷ்மி said...

இதுதானா அது:)?

பால கணேஷ் said...

அட... வீட்டைச் சுத்தி நல்லா ஓட வெச்சு, மூச்சு வாங்க எக்சர்சைஸ் பண்ண வெச்சுட்டாரா உங்க வீட்டுச் சுட்டி? ஜெல்லி மிட்டாய் சின்ன வயசுல விரும்பிச் சாப்பிட்டது நினைவுகள்ல இருக்கு. இப்ப இத்தனை வடிவங்கள்ல கிடைக்குதான்றது ஆச்சரியம்தான்!

Yaathoramani.blogspot.com said...

உண்மையில் போடாவில் பார்க்க
ஃபிலிம் போலத்தான் உள்ளது
எனக்கும் இதுவிவரம் தாங்கள் சொல்லித்தான் தெரிகிறது
சுவாரஸ்யமான பதிவு
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 4

ஸாதிகா said...

நன்றி இமா.

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி கரந்தை ஜெயக்குமார் .

ஸாதிகா said...

வாங்க ஆசியா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஹாஹஹா... சாதாரண பல்பு மாதிரி தெரியலையே.. //ஹி..ஹி..ஹி..அதான் சொன்னேனே 1000 வாட்ஸ் பல்பு என்று...நன்றி கோவை ஆவி.

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

இப்ப இத்தனை வடிவங்கள்ல கிடைக்குதான்றது ஆச்சரியம்தான்!//துபையில் இருந்து வரும் ஜெல்லி மிட்டாய்கள் பூரான் தேள் வடிவத்தில் எல்லாம் வருகிறது.கருத்துக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்கும் ,ஓட்டுக்கும் மிக்க நன்றி ரமணிசார்.

sathishsangkavi.blogspot.com said...

ஆஹா.. இது தானா...

vanathy said...

I am the winner. Where is my prize for telling the answer?

Menaga Sathia said...

அட அதானா இது??...ஜெல்லி மிட்டாயா ஹி...ஹி...ரமலான் வாழ்த்துக்கள் அக்கா!!

கோமதி அரசு said...

ஆஹா ! ஜெல்லி மிட்டாயா?
பேரன் நல்ல சுறு சுறுப்பு.
உங்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள் ஸாதிகா.

கோமதி அரசு said...

ஆஹா ! ஜெல்லி மிட்டாயா?
பேரன் நல்ல சுறு சுறுப்பு.
உங்களுக்கு ரமலான் நோன்பு வாழ்த்துக்கள் ஸாதிகா.

ஸாதிகா said...

ஆஹாஹா..இதேதான்.வரவுக்கு மிக்க நன்றி சங்கவி.

ஸாதிகா said...

முதலாம் பரிசு,இரண்டாவது கண்டு பிடித்து

சொல்பவருக்கு இரண்டாம் பரிசு என்றெல்லாம்

சொல்லி உங்களை எல்லாம் இம்சை படுத்த

மாட்டேன்...//வான்ஸ்.சென்ற பதிவில் இந்த வரிகள் உங்கள் கண்களில் படவில்லையா?மிக்க நன்றி வான்ஸ்.உங்க ஊர் கேண்டி என்றதும் ரொம்ப சுலபமாக கண்டு பிடித்து விட்டீர்கள் இல்லை?

ஸாதிகா said...

வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா.

ADHI VENKAT said...

ஐய்யோ! இப்படியெல்லாம் கூட ஜெல்லி மிட்டாய் விக்கறாங்களா!!! நல்ல கூத்து தான்...:))

ஆமீர் அழகாக உள்ளார். சுத்திப் போடுங்கள்...:))

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஜெல்லி மிட்டாயா??