October 12, 2012

சென்று வருகிறேன்...அல்லாஹ்வுக்காக அந்த ஆலயம் சென்று ஹஜ் செய்வது மனிதர்களில் அதன் பால் (சென்றுவர) சக்தி பெற்றவர் மீது கடமையாகும். அல்குர்ஆன் 3 : 97

ஹஜ்ஜையும், உம்ராவையும் அல்லாஹ்வுக்காகப் பூர்த்தி செய்யுங்கள். அல்குர்ஆன் 2:196 

(இறை வணக்கத்திற்கென) மனிதர்களுக்காக வைக்கப் பெற்ற முதல் வீடு நிச்சயமாக பக்காவில் (மக்காவில்) உள்ளது தான்; அது பரக்கத்து (பாக்கியம்) மிக்கதாகவும், உலகமக்கள் யாவருக்கும் நேர்வழியாகவும் இருக்கிறது.

அதில் தெளிவான அத்தாட்சிகள் உள்ளன. (உதாரணமாக, இப்ராஹீம் நின்ற இடம்) மகாமு இப்ராஹீம் இருக்கின்றது மேலும் எவர் அதில் நுழைகிறாரோ அவர் (அச்சம் தீர்ந்தவராகப்)பாதுகாப்பும் பெறுகிறார்; இன்னும் அதற்கு(ச் செல்வதற்கு)ரிய பாதையில் பயணம் செய்ய சக்திபெற்றிருக்கும் மனிதர்களுக்கு அல்லாஹ்வுக்காக அவ்வீடு சென்று ஹஜ் செய்வது கடமையாகும்.ஆனால், எவரேனும் இதை நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்குக் குறையேற்படப்போவதில்லை; ஏனெனில்) - நிச்சயமாக அல்லாஹ் உலகத்தோர் எவர் தேவையும் அற்றவனாகஇருக்கின்றான். அல்குர்ஆன் 3:96-97 

ஹஜ் செல்லுவது வாழ்நாள் ஆசையாக இருந்தாலும் கடந்த மூன்று வருடங்களாக தீவிரமாக முயற்சித்தும்,ஆவலுடன் காத்திருந்து,முடியாததால் ஏமாற்றம் அடைந்து இவ்வாண்டு அந்த பெரும் பாக்கியம் கிடைத்துள்ளது.உடன் பிறந்தோருடன்,உறவினர்களுடன் செல்லும் வாய்ப்பு கிடைத்தாலும் கணவருடன் தான் செல்ல வேண்டும்,உடல் வலிமையுடன்,முதுமை வரும் முன் ஹஜ் சென்றாகி விடவேண்டும் என்ற ஆசையை என் இறைவன் இவ்வாண்டு நிறைவேற்றிவைக்கப்போகிறான்.அந்த புனிதபூமியை சென்றுஅடையப்போகிறேன் என்று நினைக்கும் ஒவ்வொரு வினாடியும் என்கண்களில் இருந்து கண்ணீர் கர கரவென்று வழிந்தோடுகிறது.ஆம் இஸ்லாம் நிறுவியுள்ள ஐந்து தூண்களில் இறுதியானதும், மிக முக்கியமானதுமான ஹஜ் பயணம் செய்யும் பாக்கியம் இறை அருளால் எங்களுக்கு கிடைத்துள்ளது.வரும் 18ஆம் தேதி என்கணவருடன் புனித பயணம் மேற்கொள்ளப்போகின்றேன்!

ஹஜ்ஜூக்குச் செல்லும் ஹாஜிகளே! நீங்கள் ஹஜ்ஜூக்குச் செல்கிறீர்கள் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் ஹஜ் ஏற்பாட்டில் முதலாவதாக தக்வா என்னும் இறையச்சத்தை தயார் படுத்திக் கொள்ளுங்கள் என்ற இறை வாக்குக்குகொப்ப பயணம் முடிவானதில் இருந்து ஹஜ்ஜுக்கு செல்லும் பொழுது எடுத்து செல்லும் பொருட்களை திரட்டுவதை விட இறை அச்சத்தை அதிகம் அதிகம் திரட்டி என்னை தயார் படுத்திகொண்டுள்ளேன்.

செயல்களில் சிறந்தது  அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொள்வது,அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவது, அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படும் ஹஜ் என்ற திருநபி வாக்குக்கொப்ப ஹஜ் கிரியைகளை நிறைவேற்றப்போகும் தருணத்திற்காக மனம் ஏங்கிதுடித்தவளாகவும்,

மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது அது அல்லாததில் (மற்ற பள்ளிகளில்) ஒரு லட்சம் முறை தொழுவதை விடச் சிறந்ததாகும் என்ற நபிமொழிக்கொப்ப அங்கிருக்கும் அத்தனை நாட்களில் ஒரு வேளைக்கூட விடாது ஹரத்தில் தொழுது அழுது படைத்தவனிடம் ஈருலகப்பேறுகளுக்கும் கோரிக்கைகளை வைக்க வேண்டும் என்று உறுதியாக  எடுத்து இருக்கும் தீர்மானத்தை அல்லாஹ் நிறைவேற்றிவைப்பான் என்ற நம்பிக்கையுடனும்,

இன்னும் நீங்கள் எங்கிருந்தாலும் (தொழுகையின் போது) உங்கள் முகங்களை அந்த (கிப்லாவின்) பக்கமே திருப்பிக் கொள்ளுங்கள் என்னும் இறைவாக்குக்கொப்ப இது நாள் வரை கிப்லாவின் பக்கம் முகத்தை வைத்து தொழுது வந்த நான் அந்த கிப்லாவையே நேரில் தரிசனம் செய்யப்போவதை நினைத்து புளங்காகிதப்பட்டவளாக,

புனித கஃபாவை வலம் வருவது ஓரிறை என்னும் ஏக தெய்வ கொள்கையில் இஸ்லாமியர்கள் கொண்டிருக்கும் நம்பிக்கையை மெய்ப்பிப்பதற்கும் ஒரு இறைவனையே வணங்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டவுமே ஆகும். ஒரு பெரும் வட்டம் ஒரே ஒரு மத்திய புள்ளியை மாத்திரம் கொண்டிருப்பது போன்று வணக்கத்திற்குரிய இறைவன் ஒருவனே என்ற உண்மையை ஏற்று புனித கஃபாவை வலம் வரப்போகும் அந்த நொடிக்காக காத்திருப்பவளாகவும்,

யார் கஅபாவை வலம் வந்து இரு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவர் ஓர் அடிமையை உரிமை விட்டவர் போலாவார் என்பது நபி மொழிக்கொப்ப அந்த முதல் இறை இல்லத்தை வலம் வரப்போவதை நினைத்தும்,

கியாமத் நாளில் பார்க்கும் இரு கண்கள் கொண்டதாகவும் பேசும் நாவுகள் கொண்டதாகவும் ஹஜருல் அஸ்வதை எழுப்புவான். யார் இதை முத்தமிட்டாரோ அவருக்காக அது சாட்சி கூறும் என்ற நபிமொழிக்கொப்ப அஜ்ருல் அஸ்வத்தை தொடும் பாக்கியம் கிடைக்காதா என்று மனம் ஏங்கியும்,

துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். என்ற நபிமொழிக்கொப்ப அரபா மைதானத்தில் இரு கையேந்தி படைத்தவனிடம் பேசப்போகிறோம் என்பதை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போயும்,

அது (ஜம்ஜம் நீர்) பரக்கத் செய்யப் பட்டதாகும். உண்ணுபவருக்கு உணவாகும் என்ற நபி மொழிக்கொப்ப நான் பல நூறு முறை அந்த புனித நீரை அருந்தி இருந்தாலும் புனித தலத்திற்கே சென்று புனித நீரை வயிறு நிரம்ப மனம் குளிர அருந்தப்போகும் அந்த நேரத்துக்காக மனம் ஆவலாகப்பறந்தும்,

நிச்சயமாக ஸபாவும் மர்வாவும் அல்லாஹ்வின் சின்னங்களாகும் என்ற நபி மொழிக்கொப்ப அம்மலைகளில் அதிகம் வலம் வருவதற்கு என் கால்களுக்கு பலத்தை கொடு,மனதிற்கு திடத்தைக்கொடு என்று பிரார்த்தனை புரிந்தவளாக,

என்னிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து “இஹ்ராமின் போதும், தல்பியாவின் போதும் என் தோழர்கள் சப்தத்தை உயர்த்த வேண்டும்” என்று கட்டளையிட்டார்கள் என்ற நபிமொழிகொப்ப விமானத்தில் ஏறி அமர்ந்ததில் இருந்து ஜம்ரதுல் அகபாவில் கடைசிக் கல்லை எறியும்வரை என் நாவு தல்பியாவை உச்சரிக்கப்போகும் தருணத்திற்காக காத்திருந்தவளாக,

எனது பள்ளியில் (மஸ்ஜிதுந்நபவீ)தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் தூதரின் வாக்குக்கொப்ப மதினா சென்று அப்புனித தளத்தில் அதிகம் அதிகம் தொழவேண்டும் என்று மனம் முழுக்க ஆசை மிகுந்தவளாக

யார் தனது வீட்டில் உளூச் செய்து மஸ்ஜிது குபாவுக்கு வந்து அதில் ஒரு தொழுகை தொழுகின்றாரோ அவருக்கு உம்ரா செய்த கூலி உண்டு என்று அல்லாஹ்வின் தூதரின் வாக்குக்கொப்ப அங்கும் சென்று இறை வணக்கத்தில் ஈடு படப்போவதை நினைத்தும் ,இன்னும் இன்னும் இறைவனுக்காக பற்பல கிரியைகளை செய்யப்போகிறோம் என்று மனம் முழுக்க மகிழ்ச்சி வெள்ளத்தில் நீந்திக்களித்துக்கொண்டுள்ளேன்.

இப்பொழுது ஏழடி கட்டிலும் சொகுசு மெத்தையிலும் படுத்துறங்கினாலும்,என் மரணத்திற்குப்பிறகு  கிடைக்கப்போகும் ஆறடி மண்ணறையை நினைவூட்டும் விதமாக மினாவில்  பயணிகளுக்காக தரப்போகின்ற ஆறுக்கு மூன்றடி இடத்தில் நாள் முழுக்க அமர்ந்து இறைவனை தியானிக்கும் அனுபவத்தினை பெறும் அந்த தருணத்திற்காக காத்திருக்கிறேன்

அடுத்த வேளை என்ன சமையல் செய்வது என்று குழம்பிக்கொள்ளாமல்,காலேஜ் சென்ற பையனுக்கு சரியான நேரத்திற்கு பஸ் கிடைத்து இருக்குமா?இல்லை பஸ்ஸை மிஸ் பண்ணி எம் டி சி பஸ்ஸில் தொங்கிக்கொண்டு செல்வானா?என்று மனம் பதைப்பதும் இல்லாமல்,இன்னிக்கு எழுதப்போகும் எக்‌சாம் சற்று கடினம் என்றானே பையன்.சரியாக எழுதி இருப்பானா?வினாக்கள் சுலபமாக வந்து இருக்குமா என்று மனம் அலைமோதும் அவஸ்தை இல்லாமலும்,புக் பண்ணிய சமையல் கியாஸ் கரெக்டாக வந்து சேருமா இல்லை பழைய அவஸ்தைதானா?என்ற அலைமோதும் மனதில்லாமால்,நேரம் பத்தாகின்றதே இன்னும் வேலைக்காரப்பெண் வரவில்லையே என்ற டென்ஷன் இல்லாமல்,இப்பதானே வாஷிங் மெஷின் பழுதாகி செலவு வைத்தது.இப்பொழுது மைக்ரோவேவ் ஓவனா என்ற எரிச்சல் இல்லாமல்,பேனில் தூசி தெரிகிறதே..சே ..அதற்குள் எப்படித்தான் இப்படி தூசி பிடிக்கிறதோ என்று புலம்பிக்கொண்டே கையில் டஸ்டருடன் பேனை துடைக்க ஏணியில் ஏறும் அவஸ்தை இல்லாமல்,இவ்வளவு ஏன் பதிவு போட்டு நாளாச்சே.புதுசா என்ன பதிவு போடலாம் என்று மூளையை கசக்கிகொள்ளாமல்,ஏதோ ஒரு வழியாக பதிவை தேத்தி டைப் செய்து பப்லிஷ் செய்து விட்டு ,கடையை திறந்து விட்டு வாடிக்கையாளருக்காக காத்திருக்கும் வியாபாரியைப்போல் பதிவுக்கு கமண்ட் வராதா என்று இருக்கும் வேலைகளை எல்லாம் ஒத்திப்போட்டு வைத்து விட்டு டாஷ் போர்டை திறந்து வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிராமல்,நம் பதிவை படித்து விட்டு பின்னூட்டி இருக்கும் நட்புக்களுக்கு பதில் போட நேரம் இல்லையே என்ற சங்கடம்  இல்லாமல்.முகப்புத்தகத்தில் எதையாவது அப்லோட் செய்து விட்டு எத்தனை லைக்குகள் என்று கிளிக் செய்து பார்த்துக்கொண்டிருக்கும் வேலை இல்லாமல்...

இப்படி பல இல்லாமல் இன்றி ,மனஉளைச்சல் இன்றி ,டென்ஷன் இன்றி அங்கிருக்கும் ஒவ்வொரு அற்புதமான வினாடிகளையும்,துளிகூட வீணாக்காமல்  இறைவன் ஒருவனுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற என் பேராவல் மனம் முழுக்க வியாபித்துள்ளது.

எங்கள் நியாயமான பிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேறி,எங்கள் மனங்கள் திருப்திக்கொள்ளும் வகையில் ஹஜ் கிரியையைகளை செவ்வன நிறைவேற்றி,இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக,இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்து  செவ்வன நிறைவேற்றும் மன,உடல் பலத்தையும் தந்தருள பிரார்த்தனை செய்தவளாக,பிரார்த்தனை செய்ய வேண்டியும்,இம்மாபெரும் பாக்கியத்தை தந்த இறைவனுக்கு நெஞ்சார நன்றி கூறியவளாக  விடை பெறுகிறேன் நட்புக்களே!

53 comments:

Unknown said...

வாழ்த்துக்கள் சாதிகா
நல்ல முறையில் ஹஜ் யாத்திரை முடிக்க வாழ்த்துக்கள்
அங்கு சென்று உலக ஒற்றுமைக்காக பிரார்த்தித்து வாருங்கள்.

பி.ஏ.ஷேக் தாவூத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பின் மூத்த சகோதரி சாதிகா அவர்களுக்கு,
உங்களுடைய ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக. புனிதமிக்க அந்த இல்லத்தில் இறைவனிடம் வேண்டும் போது எங்களுக்கும் சேர்த்து வேண்டுங்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற தல்பியா விண்ணதிர முழங்கும் அந்த இல்லத்தில் இன்ஷா அல்லாஹ் நாங்களும் உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை புரியுங்கள்.

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஸாதிகா,

சோர்வு, களைப்பு, இயலாமை, கவலை, குழப்பம், வலி என இவை ஏதுமின்றி அச்சமயம் தங்கள் எல்லா அமல்களிலும் புத்துணர்வோடு கூடிய உயர்ந்த பட்ச சிறந்த முயற்சியை ஏற்படுத்தித்தந்து தங்களுக்கு இந்த ஹஜ்ஜை இறைவன் எளிதாக்கி வைத்து, அதனை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் துவா செய்கிறேன் சகோ.

//துஆக்களில் சிறந்தது அரஃபா நாளின் துஆவாகும். என்ற நபிமொழிக்கொப்ப அரபா மைதானத்தில் இரு கையேந்தி படைத்தவனிடம் பேசப்போகிறோம் என்பதை நினைத்து உள்ளமெல்லாம் பூரித்துப்போயும்,//


அப்போது உலக அமைதிக்காகவும், பிறர் நலன் நாடும் உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தியுங்கள் சகோ.

நன்பேண்டா...! said...

தங்களின் இந்த பயனம் இனிதே நிறைவேற வாழ்துக்கள்.

Menaga Sathia said...

வாழ்த்துக்கள் அக்கா!!

ஸாதிகா said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி மாமி.//அங்கு சென்று உலக ஒற்றுமைக்காக பிரார்த்தித்து வாருங்கள்.// கண்டிப்பாக!

ஸாதிகா said...

வ அலைக்கும்ஸலாம் தம்பி ஷேக்தாவூத்.நான் பதிவிட்டு அதனை படித்து விட்டு //உங்களுடைய ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக// இப்படியெல்லாம் துஆ செய்யும் நல்லுள்ள்ங்களை நினைக்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.உங்களுக்கும் விரைவில் இந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்வேன் கண்டிப்பாக.மிக்க நன்றி தம்பி.

ஸாதிகா said...

அலைக்கும்சலாம் சகோ முஹம்மத் ஆஷிக்,////சோர்வு, களைப்பு, இயலாமை, கவலை, குழப்பம், வலி என இவை ஏதுமின்றி அச்சமயம் தங்கள் எல்லா அமல்களிலும் புத்துணர்வோடு கூடிய உயர்ந்த பட்ச சிறந்த முயற்சியை ஏற்படுத்தித்தந்து தங்களுக்கு இந்த ஹஜ்ஜை இறைவன் எளிதாக்கி வைத்து, அதனை ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் துவா செய்கிறேன் சகோ. // இந்த துஆதான் எனக்குத்தேவை சகோ.நட்புக்களுடன் பகிரும் பொழுது கிடைக்கும் இந்த துஆக்கள் பெரும் மகிழ்ச்சியை தருபவை.//அப்போது உலக அமைதிக்காகவும், பிறர் நலன் நாடும் உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தியுங்கள் சகோ.// கண்டிப்பாக சகோ.பதிவை படித்து எனக்காக பிரார்தனை செய்யும் உங்களுக்கு என் நன்றி.

Avargal Unmaigal said...

தங்களின் இந்த புனித பயணம் இனிதே நிறைவேற வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

நன்றி சகோ நண்பேண்டா!

ஸாதிகா said...

நன்றி தங்கை மேனகா

ஸாதிகா said...

நன்றி சகோ அவர்கள் உண்மைகள்.

ராமலக்ஷ்மி said...

யாத்திரை இனிதே அமைய மனமார்ந்த வாழ்த்துகள் ஸாதிகா.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா உங்கள் பயணம் நல்லபடியாக அமைய என் துஆக்கள்.
உங்கள் ஹஜ்ஜை ஏற்று கொள்ளபட்ட ஹஜ்ஜாக ஆக்கியருள இறைவனிடம் பிராத்திக்கிறேன்
அப்படியே எங்களுக்காகவும் நாங்களும் ஹஜ் செய்ய துஆ செய்யுங்கள்.

துளசி கோபால் said...

உங்கள் பயணம் இனிதாக நடந்தேறவும்,
உங்கள் பிரார்த்தனைகள் எல்லாம் நிறைவேறவும் மனமார்ந்த இனிய வாழ்த்து(க்)கள்.

எதிர்பார்த்து ஏங்கிய பயணம் என்பதால் உங்கள் மன உணர்ச்சிகள் புரிகின்றன.

இறைவன் அருள் துணை இருக்கட்டும்.

syedabthayar721 said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி

தங்களின் ஹஜ் பயணம் இனிதாக அமையவும் இறைவனிடம் அங்கிகரிக்கபட்டதாகவும் அமைய இறைவனிடம் துவா செய்கிறேன். எங்களுக்காகவும் உலக மக்கள் அனைவருக்காகவும் துவா செய்யவும் சகோதரி.

செய்யது
துபாய்

குறையொன்றுமில்லை. said...

ஹஜ் பயணம் எதிர்பார்த்து உன்மன்செல்லாம் இருக்கும் ஆர்வம் பர பரப்பு பட படப்பு எல்லாமே புரியுது.எந்தவிதமான இல்லைகளுக்கும் அந்த நேரம் மனதில் இடம் கொடுக்காதே. மனதை காலியாக வைத்திரு. அல்லாவின் தியானம் மட்டுமே நினைவில் கொள்.ஹஜ் பயணம் நல்லபடியாக நிறை வேறி ஊர் வந்து என்னல்லாம் பண்ணினே எப்படியெல்லாம் பயணம் இருந்ததுன்னு பகிர்ந்துகொள் ஆவலுடன் உன்னுடன் நாங்களும் பயணிக்கிரோம். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

Anonymous said...

தங்களுக்கு ஹஜ் செல்ல பாக்கியம் கொடுத்த இறைவனுக்கு என் மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவித்து தங்கலளது பயணம் இனிதே நிறைவேற எல்லாம் வள்ள இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன்! ரொம்ப நாளா உங்க ப்ளாக் படிக்க வரனும்னு நெனச்சேன்! ஆனா லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு நல்ல விசயத்தைப் படிக்க பாக்கியம் கிடைத்த மகிழ்ச்சி எனக்கு! பாலகனேஷ் சார்தான் உங்க ப்ளாக் பத்தி சொல்லி இருந்தார்! அவருக்கும் என் நன்றிகள்!

ashfa mowlana said...

அஸ்ஸலாமு அலைக்கும்!
உங்களுடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக்கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக! உங்களை தான் பொருந்திக்கொண்ட நல்லடியார் கூட்டத்துடன் சேர்த்துக்கொள்வானாக!
உங்கள் பதிவை பார்க்கும் போது எப்போது அந்த பாக்கியம் எனக்கு கிட்டும் என்ற ஏக்கம் கூடிவிட்டது. துஆ செய்யுங்க அக்கா

Naazar - Madukkur said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரி உங்களின் ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக்கொள்வானாக,
உலக அமைதிக்காகவும், இயற்கையை காக்கவும் இறைவனிடம் முறையிடுங்கள் சகோதரி.

திண்டுக்கல் தனபாலன் said...

தங்களின் இந்த பயணம் சிறப்பாக, இனிமையாக அமைய வாழ்த்துக்கள்...

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஅ.. ஸாதிகா அக்கா.. மாதங்கள் வாரங்களாகி.. வாரங்கள் நாட்களாகி விட்டனவோ?.. இனி மணித்தியாலக் கணக்கில் எண்ணி எண்ணி பயணத்தை ஆரம்பித்து, இனிதே புனித ஹஜ் ஜாத்திரையை நலமாக நிறைவேற்றித் திரும்பி வர வாழ்த்துகிறோம்.

Asiya Omar said...

தங்களின் ஹஜ் பயணம் இனிதே நிறைவேற மனமார்ந்த வாழ்த்துக்கள் தோழி..

cheena (சீனா) said...

அன்பின் சாதிகா - அஸ்ஸலாமு அலைக்கும் - லக்‌ஷ்மியின் கர்த்தினை அப்படியே வழி மொழிகிறேன்.

ஹஜ் பயணம் எதிர்பார்த்து உன்மன்செல்லாம் இருக்கும் ஆர்வம் பர பரப்பு பட படப்பு எல்லாமே புரியுது.எந்தவிதமான இல்லைகளுக்கும் அந்த நேரம் மனதில் இடம் கொடுக்காதே. மனதை காலியாக வைத்திரு. அல்லாவின் தியானம் மட்டுமே நினைவில் கொள்.ஹஜ் பயணம் நல்லபடியாக நிறை வேறி ஊர் வந்து என்னல்லாம் பண்ணினே எப்படியெல்லாம் பயணம் இருந்ததுன்னு பகிர்ந்துகொள் ஆவலுடன் உன்னுடன் நாங்களும் பயணிக்கிரோம். பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துகள்.

நல்வாழ்த்துகள் சாதிகா - நட்புடன் சீனா

இமா க்றிஸ் said...

யாத்திரை மனநிறைவாக அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் ஸாதிகா.

shanuk2305 said...

allah ungal hajjai eatru arul puriya en duakkal.

தளிகா said...

அங்கு சென்ற எமோஷனை எழுத்தில் தந்துட்டீங்க..உங்கள் ப்ராத்தனைகள் அனைத்தும் சிறப்பாக நிறைவேற துவா செய்கிறேன்...புற்றுநோயால் கஷ்டப்படும் நம் நெருங்கியவர்களுக்காக தேடுங்கள்..சிறப்பாக ஹஜ் பயணம் முடித்து எங்களிடம் இன்ஷாஅல்லாஹ் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்

பால கணேஷ் said...

இறை அச்சத்தை மனதில் சேமித்து பக்தியுடன் நீங்கள் மேற்கொள்ளும் பயணம் இனிமையாக மனநிறைவு தருவதாக அமைய என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் தங்கையே.

ராஜகிரி ஹாஜா மைதீன் (அபு நிஹான்) said...

நல்ல முறையில் உங்கள் ஹஜ் பயணம் அமைய வாழ்த்துக்கள். இறைவனும் அவன் தூ தரும் சொல்லி தந்த வழியில் அமைத்துக் கொள்ளுங்கள் சகோஸ்.

அப்போது உலக அமைதிக்காகவும், பிறர் நலன் நாடும் உலக மக்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் பிரார்த்தியுங்கள் சகோ.

வை.கோபாலகிருஷ்ணன் said...

மிகவும் நல்லதொரு பதிவு.

வாழ்த்துக்கள் ஸாதிகா மேடம்.

நல்ல முறையில் ஹஜ் யாத்திரை முடிக்க வாழ்த்துக்கள்.

அங்கு சென்று உலக ஒற்றுமைக்காக பிரார்த்தித்து வாருங்கள்.

அன்புடன்
VGK

sultangulam@blogspot.com said...

உங்கள் நியாயமான பிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேறவும், உங்கள் ஹஜ் கிரியைகளை திருப்தியாக நிறைவேற்றவும், அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமையவும் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றேன்.

Anonymous said...

நல்ல முறையில் ஹஜ் யாத்திரை முடிக்க வாழ்த்துக்கள்.

இறையருள் கைகூடட்டும்.
வேதா. இலங்காதிலகம்.

Ranjani Narayanan said...

நல்லபடியாக யாத்திரை போய் வாருங்கள் சாதிகா!

வாழ்த்துக்கள்!

மாதேவி said...

புனித யாத்திரை மனநிறைவாக அமைந்திடட்டும்.

பிரார்த்தனைகள் நிறைவேற இறை அருள் கிடைக்கட்டும்.

கோமதி அரசு said...

அங்கிருக்கும் ஒவ்வொரு அற்புதமான வினாடிகளையும்,துளிகூட வீணாக்காமல் இறைவன் ஒருவனுக்காக மட்டுமே செலவு செய்ய வேண்டும் என்ற என் பேராவல் மனம் முழுக்க வியாபித்துள்ளது.//

அப்படியே இறைவன் நினைவுடன் நல்லபடியாக உங்கள் புனித பயணம் அமைய வாழ்த்துக்கள் ஸாதிகா.

Kanchana Radhakrishnan said...

நல்ல முறையில் ஹஜ் யாத்திரை முடிக்க வாழ்த்துகள்.

மதுமிதா said...

புனிதப் பயணம் இனிதாகட்டும் ஸாதிகா. பெரும் கூட்டம் இருந்தாலும், அங்கே தானாகவே அந்த அமைதி உங்களுக்கு கிடைக்கும்.

Mahi said...

யாத்திரை மனநிறைவாக அமைய என் பிரார்த்தனைகளும் வாழ்த்துக்களும் ஸாதிகா அக்கா! :)

மதுமிதா said...

http://madhumithaa.blogspot.in/2006/11/blog-post_02.html

இந்தப் பதிவு நினைவுக்கு வந்ததால் இங்கே :)

Unknown said...

Allah Ungalukku Arul Puriyattu. Aameen

Unknown said...

Allah Ungalukku Arul Puriyattum. Aameen

Unknown said...

Allah Ungalukku Arul Puriyattum. Aameen.

Unknown said...

Allah Ungalukku Arul Puriyattum. Aameen

இராஜராஜேஸ்வரி said...

நியாயமான பிரார்த்தனைகள் அனைத்தும் ஈடேறி,

தங்கள் மனங்கள் திருப்திக்கொள்ளும் வகையில் ஹஜ் கிரியையைகளை செவ்வன நிறைவேற்றி,

இறைவனால் அங்கீகரிக்கப்பட்ட ஹஜ்ஜாக,

இறைவனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜாக அமைந்து செவ்வன நிறைவேற்றும் மன,உடல் பலத்தையும் தந்தருள பிரார்த்தனை செய்கிறோம்...

enrenrum16 said...

நல்லபடியாக போய் வாங்கக்கா... உங்கள் ஹஜ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அமைய இறைவன் அருள்புரிவானாக!

சோனகன் said...

தங்களின் இந்த புனித பயனம் சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். இறைவன் உங்களின் ஹஜ் கடமையினை அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வல்ல இறைவனை துவா செய்கிறோம்.. சென்று வாருங்கள்

Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஸாதிகா லாத்தா... உங்களின் இந்த பதிவை படிக்கும் பொழுதே கண்கள் கலங்குது நாங்களும் அங்கே செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏக்கமாகிறது ..உங்களுடைய ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக. புனிதமிக்க அந்த இல்லத்தில் இறைவனிடம் வேண்டும் போது எங்களுக்கும் சேர்த்து வேண்டுங்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற தல்பியா விண்ணதிர முழங்கும் அந்த இல்லத்தில் இன்ஷா அல்லாஹ் நாங்களும் உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை புரியுங்கள்..ரொம்ப நாளைக்கு பிறகு தற்செயலாகதான் லாத்தா நான் உங்களின் பிளாக் வந்தேன் ரொம்ப சந்தோஷம் சிறப்பாக ஹஜ் பயணம் முடித்து எங்களிடம் இன்ஷாஅல்லாஹ் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். feeamanillah..Julaiha Nazir said...

அஸ்ஸலாமு அலைக்கும்

ஸாதிகா லாத்தா... உங்களின் இந்த பதிவை படிக்கும் பொழுதே கண்கள் கலங்குது நாங்களும் அங்கே செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏக்கமாகிறது ..உங்களுடைய ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக. புனிதமிக்க அந்த இல்லத்தில் இறைவனிடம் வேண்டும் போது எங்களுக்கும் சேர்த்து வேண்டுங்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற தல்பியா விண்ணதிர முழங்கும் அந்த இல்லத்தில் இன்ஷா அல்லாஹ் நாங்களும் உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை புரியுங்கள்..ரொம்ப நாளைக்கு பிறகு தற்செயலாகதான் லாத்தா நான் உங்களின் பிளாக் வந்தேன் ரொம்ப சந்தோஷம் சிறப்பாக ஹஜ் பயணம் முடித்து எங்களிடம் இன்ஷாஅல்லாஹ் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள். feeamanillah..Julaiha Nazir said...


அஸ்ஸலாமு அலைக்கும்
ஸாதிகாலாத்தா
தற்செயலாகதான் உங்களின் ப்ளாக் இன்று வந்தேன்..உங்களின் இந்த பதிவை படிக்கும் பொழுதே கண்ணீர் வருகிறது நாங்களும் அங்கே செல்ல வேண்டும் என்கிற ஆசை ஏக்கமாகுது..
உங்களுடைய ஹஜ்ஜை இறைவன் ஏற்றுக் கொண்ட ஹஜ்ஜாக ஆக்குவானாக. புனிதமிக்க அந்த இல்லத்தில் இறைவனிடம் வேண்டும் போது எங்களுக்கும் சேர்த்து வேண்டுங்கள். லப்பைக் அல்லாஹும்ம லப்பைக் என்ற தல்பியா விண்ணதிர முழங்கும் அந்த இல்லத்தில் இன்ஷா அல்லாஹ் நாங்களும் உம்ரா மற்றும் ஹஜ் செய்ய வேண்டும் என்றும் பிரார்த்தனை புரியுங்கள்.
சிறப்பாக ஹஜ் பயணம் முடித்து எங்களிடம் இன்ஷாஅல்லாஹ் அந்த அனுபவங்களையும் பகிர்ந்து கொள்ளுங்கள்..feeamanillah

மனோ சாமிநாதன் said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் இனிய பெருநாள் வாழ்த்துக்கள் ஸாதிகா!!!

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/11/5.html) சென்று பார்க்கவும்...

நன்றி...

துளசி கோபால் said...

இறைப் பயணம் நல்லபடி முடிஞ்சு வீடு திரும்பிவிட்டீர்கள் என நினைக்கின்றேன்.

பயண அனுபவங்களை வாசிக்கக் காத்திருக்கின்றேன்.

Vijiskitchencreations said...

Have a nice trip and pray for us too.
God bless u.