September 17, 2012

கியாஸ் சப்ளையர்களின் தில்லுமுல்லு!

டிஸ்கி:புக் செய்தால் ரூ.400க்குள் வாங்கும் கியாஸ் சிலிண்டரை ரூ.800 கொடுத்து வாங்கிய ஆதங்கத்தில் எழுதபட்ட பதிவிது.

அவ்வப்பொழுது சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு வரும்பொழுதெல்லாம் இல்லதரசிகள் வயிறு எரிகின்றார்களோ இல்லையோ சப்ளையர்கள் வயிறு குளிர்ந்து போகின்றனர்.புக் செய்தால் மாதக்கணக்கில் சப்ளை செய்ய தாமதம் ஏற்படும் பொழுது அதிகம் பணம் கொடுத்து வாங்கியே ஆக வேண்டும் என்று நிர்பந்தத்திற்கு தள்ளப்படுகின்றனர் இல்லத்தரசிகள்.

இப்பொழுது அப்படிப்பட்ட தட்டுப்பாடு இல்லாவிட்டாலும் வருடத்திற்கு ஆறு சிலிண்டர்கள் மட்டும்தான் அரசு மானியத்தில் வழங்கப்படும் என்ற அறிவிப்புக்கு பின் மறுபடி ஆட்டம் போட ஆரம்பித்து விட்டனர்.

இப்பொழுதெல்லாம் கைபேசியிலேயே சிலிண்டர் புக் செய்து உடனே புக்கிங் நம்பருடன் நமக்கு மெசேஜ் வந்துவிடும்.கியாஸ் டெலிவரிக்கு முன்னரோ சற்று பின்னரோ சப்ளை செய்துவிட்ட தகவலும் வந்து விடும்.

இப்பொழுது டெலிவரி செய்யப்பட்டு விட்டதாக தகவல் வந்ததே தவிர சிலிண்டர் சப்ளை செய்ய வில்லை.உடனே கால் செண்டருக்கு கம்ப்ளைண்ட் செய்தால் பார்க்கிறோம்,திரும்ப இந்த நம்பருக்கு அழைகிறோம் என்கின்றார்களே தவிர எந்த வித ஆக்‌ஷனும் எடுப்பதாக தெரியவில்லை.கியாஸ் ஏஜன்ஸீஸுக்கு புகார் செய்தால் இல்லையே சப்ளை செய்து விட்டோமே என்கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்னர் சிலிண்டர் தட்டுப்பாடு வந்த பொழுது இப்படித்தான்.சப்ளை செய்யப்படாமல் சப்ளை செய்து விட்டதாக மெசேஜ் வந்தது.உடனே ஏஜன்சியை அழைத்து புகார் பண்ணியதில் சப்ளை செய்யும் ஆளை வீட்டுக்கு அனுப்பினர் சப்ளை பண்ணி விட்டேன் என்று அடித்து கூறினார்.ரெஸிப்டில் சிலிண்டரை பெற்றுக்கொண்டதற்கான யாருடைய கையெழுத்தோ போடப்பட்டு இருந்தது.விடாப்பிடியாக மீண்டும் ஏஜென்சியை அணுகி சப்தம் போட்டு மறுநாள் ஒரு சிலிண்டர் சப்ளை செய்தனர்.

பூட்டி இருக்கும் வீடுகளின் கன்ஸ்யூமர் நம்பர்களில் அவர்களே புக் செய்து சிலிண்டரை அதிக விலைக்கு விற்றுக்கொள்கின்றனர்.


சென்னையில் இன்றைய நிலவரப்படி 14.2 எடையுள்ள ஒரு சிலிண்டரின் விலை ரூ. 393.50 ஆகும். சப்ளை செய்பவர்களுக்கு ரவுண்டாக 400 ரூபாய் கொடுத்தால் வாங்கிக்கொள்வதில்லை.பேசி வைத்துக்கொண்டது போல் மேலும் 10 ரூபாய் கேட்கின்றனர்.ஆக 410 என்பது கொடுக்கபட்டே ஆகவேண்டும்.10 ரூபாய் சில்லரையாக இல்லாவிட்டாலும் வலுகட்டாயமாக 90 ரூபாய்தந்து நூறு ரூபாயை பெற்று சென்றுவிடுகின்றனர்.தெரிந்தவர் ஒருவர் 10 ரூபாய் கொடுக்காமல் இருந்ததற்காக சிலிண்டரினுள் இருக்கும் வாஷரை அகற்றிவிட்டு கொடுத்த கொடுமையும் நடந்துள்ளது.


கியாஸ் சப்ளையர்கள் அதிக விலைக்கு விற்கும் நோக்கில் புக் செய்த சிலிண்டர்களை விநியோகிக்காமல் தகிடுதத்தம் செய்வது அவ்வப்பொழுது நிகழ்ந்துகொண்டுதான் உள்ளது.

இதை தடுக்க சுலபமான வழி வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் அளவில் சின்ன புத்தகத்தினை தந்து சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது தேதியுடன் சப்ளை செய்பவரின் கைஎழுத்தை வாங்கிக்கொண்டால் தவறுகள் நிகழும் பொழுது ஆதாரத்துடன் நிரூபிக்க வசதியாக இருக்கும்.தவறுகளும் நிகழவும் வாய்ப்பு இருக்காது.சில விநியோகஸ்தர்கள் சொந்த செலவில் ஸ்டிக்கர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விடுகின்றனர்.சப்ளை செய்த பின்னர் ஸ்டிக்கரில் ஒன்றை எடுத்து பில்லில் ஒட்டி சப்ளையர்களிடம் கொடுத்து விடவேண்டும்.ஸ்டிக்கர் இல்லாமல் சப்ளை செய்யப்படமாட்டாது.இந்த முறையும் தவறுகள் நிகழ்வதில் இருந்து தவிர்க்கலாம்.இதனை எரிவாயு நிறுவனத்தினர் ஒரு உத்தரவாகவே போடலாம்.

இனி அரசு உத்தரவு படி ஆறு சிலிண்டர்களுக்குப் பிறகு ஒரு சிலிண்டருக்கு சுமார் ரூ. 770 வரை கொடுக்க வேண்டும். அதாவது ஒரு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ. 384 வரை செலவாகும்.ஆகையினால் இனி மேற்கண்ட திட்டங்களை கண்டிப்பாக அமல் படுத்தினால் தான் குற்றங்கள் நிகழ்வது குறையும்.இல்லத்தரசிகளுக்கும் ஏமாற்றப்படுவதில் இருந்து தப்பிக்க முடியும்.சப்ளையர்கள் குறுக்கு வழியில் குபேரர்கள் ஆவதையும் தடுக்கலாம்.
58 comments:

pudugaithendral said...

பாஸ்புக் அளவுல சின்னதா புக் கொடுத்திருக்காங்க. ஆனா அதுல கையெழுத்து போடும் வரை சப்ளையர்களுக்கு பொறுமை இருக்காது.

இன்னொன்னு தெரியுமா. நியாமா அவங்க சிலிண்டரை நல்லா செக் செஞ்சு (நெருப்பெட்டி வெச்சு சிலிண்டர் பக்கமெல்லாம் சுத்தி ஏதும் லீக்கேஜ் இருக்கான்னு செக் செய்வது) தான் கொடுக்கணும்.

இப்பல்லாம் வாசலிலேயே வெச்சிட்டு போயிடுவாங்க. ட்ராலிவெச்சு நாமதான் தள்ளிக்கிட்டு போகணும்.

இங்க 402ரூவா. ஆனா 410, 415ன்னு அவங்க இஷ்டத்துக்குதான் வாங்குறாங்க. நானும் இன்னைக்கு இதைப்பத்தி புலம்பியிருக்கேன்.

சீனு said...

சென்னையில் தான் இது ஒன்ற தில்லுமுல்ல்கள் அதிகமாக நடக்கிறது...

இந்த தில்லு முல்லுகள் இல்லை என்றால் என் போன்ற பாச்சிலர்கள் நிலை என்னவாகும் :-) ஹோட்டல் சாப்பாடு சாப்பிட்டே நொந்து போக வேண்டியது தான்...மின்சார அடுப்பு உள்ளது மின்சாரம் தான் இல்லை :-)

இருந்தும் அருமையான தகவல் வாழ்த்துக்கள்

பால கணேஷ் said...

எல்லா இல்லத்திலும் இருக்கிற நியாயமான குமுறலை அழகாய் வார்த்தைகளில் வடித்திருக்கிறீர்கள் தங்கையே. ஒவ்வொரு வரியையும் ஆமோதிக்கிறேன் நான்.

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லா ஊரிலும் இப்படித் தான்... (இதை விட...!)

மருத்துவரிடமும், முடி வெட்டுபவரிடமும் தகராறு வைத்துக் கொண்டால் என்ன ஆக்குமோ, அது போல் கியாஸ் சிலிண்டர் கொண்டு வருபவரிடம் கொஞ்சம்
ஜாக்கிரதை இருக்க வேண்டும் போலே...

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா எனக்கும் அதேதான் பாஸ்புக் போலலாம் கொடுத்திருக்காங்கதான். பட் நோ யூஸ் மகன் வீட்டுக்கு போகும்போதெல்லாம் அங்கெல்லாம் பைப் கேஸ்தான் சிலிண்டர் புக் பன்னுர விவகாரமெல்லாம் கிடையாது.

ஸாதிகா said...

நியாமா அவங்க சிலிண்டரை நல்லா செக் செஞ்சு (நெருப்பெட்டி வெச்சு சிலிண்டர் பக்கமெல்லாம் சுத்தி ஏதும் லீக்கேஜ் இருக்கான்னு செக் செய்வது) தான் கொடுக்கணும்.//அதெல்லாம் எங்கே செய்யப்போகின்றாரகள்.

உங்கள் புலம்பலையும் பார்த்தேன் புதுகை தென்றல்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

.
சென்னையில் தான் இது ஒன்ற தில்லுமுல்ல்கள் அதிகமாக நடக்கிறது..//ஊர்பக்கமும் நடக்கத்தான் செய்கிறது சீனு.கருத்துக்கு நன்றி.

CS. Mohan Kumar said...

Delivery boys are not accepting 410; they demand 420 or they say we will not deliver to your house from next time. 28 rupees tips per cylinder !!

ஸாதிகா said...

எனது ஒவ்வொரு வரிஅக்ளையும் ஆமோதித்த கணேஷண்ணாவுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

எல்லா ஊரிலும் இப்படித் தான்... (இதை விட...!)//அப்ப சென்னையே பரவாஇல்லை என்கின்றீர்களா?:)
கருத்துக்கு நன்றி திண்டுக்கல்தனபாலன்.

ஸாதிகா said...

ஸாதிகா எனக்கும் அதேதான் பாஸ்புக் போலலாம் கொடுத்திருக்காங்கதான். பட் நோ யூஸ் //என்னம்மா இப்படி சொல்லி விட்டீர்கள்.நோ யூஸ் என்று..?!! கருத்துக்கு நன்றி லக்‌ஷ்மிம்மா.

ஸாதிகா said...

420 கேட்கின்றார்களா?அடேங்கப்பா.எங்கள் ஏரியவை விட உங்கள் ஏரியாவில் செம கில்லாடிகளா இருப்பாங்க போலிருக்கு.நன்றி மோகன்குமார்.

ஹுஸைனம்மா said...

பெரிய லஞ்சாதிபதிகளைக்கூட எதிர்த்துப் போராடி விடலாம்; ஆனால் இந்தமாதிரி கீழ்மட்டத்தில் ஊழல் செய்பவர்களைத்தான் ஒன்றும் செய்யமுடியவில்லை. பெரிய பொறுப்பில் இருப்பவர்கள்கூட இவர்களை எதிர்க்கத் துணிவதில்லை.

“சாமியே நடந்துபோகும்போது, பூசாரிக்கு புல்லட் சவாரி”ங்கிறது இவங்களுக்குத்தான் சொல்லிருக்காங்க போல!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைவரின் உள்ளக்குமுறல்களை இங்கு ஓர் கட்டுரையாகக் கொடுத்து விட்டீர்கள்.

இங்கு எங்களிடம் ரூ 420 வாங்கிச் செல்லுகிறார்கள்.

பகிர்வுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

சாமியே நடந்துபோகும்போது, பூசாரிக்கு புல்லட் சவாரி”ங்கிறது இவங்களுக்குத்தான் சொல்லிருக்காங்க போல!!//சரியான பழமொழியை எடுத்து விட்டு இருக்கீங்க ஹுசைனம்மா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இங்கு எங்களிடம் ரூ 420 வாங்கிச் செல்லுகிறார்கள்.//வீடுதிரும்பல் மோகன்குமார் சாரும் இதனையே சொல்கின்றார்.கருத்துக்கு நன்றி வி ஜி கே சார்

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருச்சி நகரில் கடந்த 2-3 மாதங்களாக செல்போன் மூலம் தானியங்கி பதிவு சேவை துவக்கியுள்ளது.

அது மிகவும் சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும், தில்லுமுல்லுகளுக்கு இடமளிக்காததாகவும் இருப்பதாக உணர்கிறோம்.

முன்பு போன் கிடைத்து பதிவு செய்யவே பிரும்மப்பிரயத்தனப்பட வேண்டும்.

அவ்வளவு சுலமாக போனை எடுக்க மாட்டார்கள். எடுத்தாலும் பேச மாட்டார்கள். பேசினாலும் முழு விபரம் தர மாட்டார்கள். எல்லாமே ஒரே போராட்டமாக இருந்து வந்தது.

இன்று நிலைமை அப்படியில்லை.

365 நாட்களும் தினமும் 24 மணி நேரங்களும் நாம் நம் தேவைக்குத் தகுந்தபடி புக்கிங் செய்ய முடிகிறது.

உடனே ஆட்டோமேடிக் ஆக பதிவாகி விடுகிறது. நம்பரும் தரப்படுகிறது. அந்த நம்பர் நமக்கு SMS மூலமும் வந்து விடுகிறது.

சப்ளையும் ஓரளவு 20 நாட்களுக்குள் கிடைக்கிறது. சப்ளைக்கான பில் போடப்பட்டதும் இன்னொரு SMS தருகிறார்கள்.

இதுவரை பட்ட பாட்டுக்கு, இந்த புதிய சேவையை மிகவும் வரவேற்கத்தான் வேண்டியுள்ளது.

அன்புடன்
VGK

வை.கோபாலகிருஷ்ணன் said...

திருச்சி நகரத்தில் உள்ள எங்களின் நிலைமை கடந்த 2-3 மாதங்களாக, மட்டுமே, ஓரளவு திருப்தியாக உள்ளது. அதுவும் என்றாவது ஒரு நாள் தாங்கள் சொல்வது போல மாறலாம்.

GAS CYLINDER என்பது மிகவும் அத்யாவஸ்ய தேவையாக இருப்பதால், அனைவருமே எப்படியாவது நமக்கு GAS Cylinder சப்ளை ஆனால் போதும் என்றே நினைக்கிறார்கள்.

20-25 ரூபாய் வரை கூடுதலாக செல்வு ஆவதைப் பற்றி யாரும் கவலைப்படுவது இல்லை என்பதே உண்மை.

சிலரின் வீடுகள் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது மாடிகளில் அமைந்து விடுவதால், மின்தடை போன்றவற்றால், லிஃப்ட் போன்றவை இல்லாததால்/இயங்காததால்/தடை செய்வதால்
பல மாடிப்படிகள் ஏறி சப்ளை செய்ய் வேண்டிய சூழ்நிலைகளும் உள்ளன.

அதனால் இரக்கப்பட்டு கூடுதலாகத் தருபவர்களும் உண்டு. கூடுதலாக டிமாண்ட் செய்து வசூலிப்பவர்களும் உண்டு.

உலகம் பலவிதம். ஒவ்வொருவர் ஒவ்வொரு விதம்.

ஸாதிகா said...

இதே சேவை பலமாதங்களுக்கு முன்னர் நடைமுறைக்கு வந்து விட்டது.இருப்பினும் இடையில் சிலிண்டர்கள் சப்ளை செய்யும் ஆட்கள் பண்ணும் தில்லு முல்லு வேலைகளைத்தான் பதிவிட்டு இருந்தேன்.சிலிண்ட்ர சப்ளை ஆகி விட்டது என்று மெசேஜ் வந்தும் வீட்டுக்கு சிலிண்டர் வரவில்லையானால் அலர்ட ஆகிகொள்ள வேண்டும்.கருத்துக்கு நன்றி சார்.

Yaathoramani.blogspot.com said...

எல்லோரும் ஏமாந்து கொண்டுதான் இருக்கிறோம்
ஒருவரை விட ஒருவர் குறைவாக ஏமாந்தால்
சந்தோஷம் கொள்கிறோம்.
நம் அனைவருடைய முறையீடாக இந்தப் பதிவு
மற்றும் பின்னூட்டங்களை
இந்திய்ன் ஆயில் கார்பரேசன் மற்றும்
பாரத் பெட் ரோலியம் அதிகாரிகளுக்கு
அனுப்பிவைத்தால் என்ன ?
குறைகளைத் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண்ணைக்
கோரினால் என்ன ?

செய்தாலி said...

இந்த கொடுமை எல்லா இடத்திலும் நடக்கது சகோ

ஆமினா said...

நானும் இந்த கேஸ் கொள்ளை பத்தி பதிவு போட்டேன்..லிங்க் தேடிதரேன் (சோம்பேறித்தனம் ஹி...ஹி..ஹி...)

ஆமினா said...

இந்த முறை பதிந்து 2 மாசம் ஆகியும் வரல.. அதன் பின் நேரடியாய் ஆபிஸில் புகார் செய்தால் சிலிண்டர் கொடுப்பவரின் போன் நம்பர் கொடுத்து வாங்கிக்கோங்க என்றார்கள். சரின்னு போன் போட்டா , இன்ன இடத்தில் நிக்கிறேன். சிலிண்டரை தூக்கிட்டு வாங்க என்றார்... வேறென்ன செய்ய? ஆட்டோக்கு தண்டம் கட்டிட்டு வந்தேன்! :(

இப்பலாம் நுகர்வோரின் பெரிய பிரச்சனையா (எல்லை பிரச்சனைலாம் தோத்துடும்போல அஹ்ஹூ அஹ்ஹூ) கேஸ் விநியோகம் இருக்குறதா நெனைக்கிறேன்...

ஸாதிகா said...

நம் அனைவருடைய முறையீடாக இந்தப் பதிவு
மற்றும் பின்னூட்டங்களை
இந்திய்ன் ஆயில் கார்பரேசன் மற்றும்
பாரத் பெட் ரோலியம் அதிகாரிகளுக்கு
அனுப்பிவைத்தால் என்ன ?//இந்தப்பதிவின் லின்கை அனுப்பி வைத்துள்ளேன்.

//குறைகளைத் தெரிவிப்பதற்கு தொலைபேசி எண்ணைக்
கோரினால் என்ன ?// கால் செண்டருக்கு போன் செய்தால் உங்கள் புகாரை ஏற்றுக்கொண்டோம்.மீண்டும் உங்கள் நம்பருக்கு அழைகிறோம் என்று சொல்கின்றார்களே தவிர எதனையும் செயல் படுத்துவதில்லை.கருத்துக்கும் ஓட்டுக்கும் நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சகோ செய்தாலி.

ஸாதிகா said...

இந்த முறை பதிந்து 2 மாசம் ஆகியும் வரல.. அதன் பின் நேரடியாய் ஆபிஸில் புகார் செய்தால் சிலிண்டர் கொடுப்பவரின் போன் நம்பர் கொடுத்து வாங்கிக்கோங்க என்றார்கள். சரின்னு போன் போட்டா , இன்ன இடத்தில் நிக்கிறேன். சிலிண்டரை தூக்கிட்டு வாங்க என்றார்... வேறென்ன செய்ய? ஆட்டோக்கு தண்டம் கட்டிட்டு வந்தேன்! :( //நல்ல கூத்தாக அல்லவா உள்ளது:)

இப்பலாம் நுகர்வோரின் பெரிய பிரச்சனையா (எல்லை பிரச்சனைலாம் தோத்துடும்போல அஹ்ஹூ அஹ்ஹூ) கேஸ் விநியோகம் இருக்குறதா நெனைக்கிறேன்...//உண்மைதான்.ஆமி,ஒரு சின்னூண்டு டவுட்டூ..அதென்ன அப்பப்ப உங்கள் பதிவிலும்,பின்னூட்டங்களிலும் இந்த அஹ்ஹு அஹ்ஹு..இருமல் ஜாஸ்தியாகி இருக்கா?பரமக்குடி மழை தாங்காமல்?

Vijiskitchencreations said...

ஸாதிகா நல்ல பதிவு. என் அம்மாவும் இதை பற்றி சொல்லுவாங்க. நான் சொல்லுவேன் அம்மா இது கலியுலகம் இப்படிதான். நீயும் நானும் நெனச்சால் மட்டும் இந்த மக்களையும் இந்த உலகத்தையும் மாற்ற முடியுமா, என்ன செய்வது இதற்க்கு யாராவது மணி கட்டுவார்கள் என்று சொல்லியுள்ளேன். ஆனல் சில நாட்டில் பைப் க்யாஸ் முறை வந்துவிட்டது அது வந்தால் இந்த மாதிரி ப்ரச்சினை வராது ஆனல் அவசியம் அதிலும் ஒரு குளறுபடி செய்வாங்க. இங்கு எங்கள் ஊரில் கவன்மெண்ட் க்யாஸ் லைன் கனெக்‌ஷன் தான் அதனால் இந்த ப்ரச்சினை இல்லை. மாதம் மாதம் எக்கசக்க் பில் வரும். அதை சிக்கனமா பயன்படுத்த தெரிய வேண்டும். விரைவில் நம்ம நாட்டிலும் க்யாஸ் பைப் லைன் வந்துவிடும்.

Avargal Unmaigal said...

ஏமாறுவதும் ஏமாற்றுவதும்தான் இப்போது இந்தியாவில் இருக்கும் வாழ்க்கை முறை. இதில் நல்லவர்களின் பாடுதான் திண்டாட்டம்

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.. தலைப்பு பார்த்தேன் ஒண்ணுமே பிரியல்ல...:)

//கியாஸ் சப்ளையர்களின் தில்லுமுல்லு///

ஏன் கியாஸ் என்றீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர் “ஹாஸ்” என்றுதானே எழுதோணும்:)) இந்த தமிழாக்கமே புரியுதில்லையே...:).

நல்ல விளக்கமான பதிவு, ரொம்ப நொந்து போயிருக்கிறீங்க போல... இங்கத்தைய நாடுகளில்.. கரண்ட் வருவது பொலத்தான் ஹாஸும் வருது.. பைப்களில்.

Menaga Sathia said...

எனக்கு தெரிஞ்சு எங்க வீட்ல ஒரு சிலிண்டர் 50 ரூபாய்க்கு வாங்கியிருக்கோம்...இப்போ இவ்ளோ விலையா??????/

MARI The Great said...

வர வர நாட்டுல கொடுமை அதிகமாகிட்டே போகுது! எவனுக்கும் நேர்மையா சம்பாதிக்கனும்ங்கற எண்ணமே இருக்குரதில்லை போல! :( :(

GEETHA ACHAL said...

அம்மாவும் அடிக்கடி சொல்லும் பிரச்சனை இது தான்..என்ன தான் பன்னுவது...

மனோ சாமிநாதன் said...

ஒரு காஸ் சிலிண்டரின் விலை சென்னையில் இரு மடங்காக விற்பனையாகிறதா! அநியாயம் ஸாதிகா இது! தஞ்சையில் எல்லாம் சகோதரர் வை.கோபாலகிருஷ்ணன் சொல்வது போல 410 லிருந்து 420 வரை தான் வாங்குகிறார்கள்!
உங்க‌ளின் விழிப்புண‌ர்வுப்பதிவு அருமை!
உடனடியாக சிந்தனைகளை செயலாற்றுவத‌ற்கு இனிய பாராட்டுக்கள்!!

கோமதி அரசு said...

இதை தடுக்க சுலபமான வழி வாடிக்கையாளர்களுக்கு பாஸ்புக் அளவில் சின்ன புத்தகத்தினை தந்து சிலிண்டர் டெலிவரி செய்யும் பொழுது தேதியுடன் சப்ளை செய்பவரின் கைஎழுத்தை வாங்கிக்கொண்டால் தவறுகள் நிகழும் பொழுது ஆதாரத்துடன் நிரூபிக்க வசதியாக இருக்கும்.தவறுகளும் நிகழவும் வாய்ப்பு இருக்காது.சில விநியோகஸ்தர்கள் சொந்த செலவில் ஸ்டிக்கர் அச்சிட்டு வாடிக்கையாளர்களுக்கு வழங்கி விடுகின்றனர்.சப்ளை செய்த பின்னர் ஸ்டிக்கரில் ஒன்றை எடுத்து பில்லில் ஒட்டி சப்ளையர்களிடம் கொடுத்து விடவேண்டும்.ஸ்டிக்கர் இல்லாமல் சப்ளை செய்யப்படமாட்டாது.இந்த முறையும் தவறுகள் நிகழ்வதில் இருந்து தவிர்க்கலாம்.இதனை எரிவாயு நிறுவனத்தினர் ஒரு உத்தரவாகவே போடலாம்.//

நல்ல யோசனை. செயலுக்கு வந்தால் நல்லது.

வாழ்த்துக்கள்.

ராமலக்ஷ்மி said...

பெங்களூரிலும் 410 முதல் 420 வரை வாங்குவார்கள். செக் செய்து கொடுக்கிறார்கள். ட்ராலியில் வாங்கிக் கொள்வது வழக்கம் என்றாலும் விருப்பமானவர்களுக்கு சமையல் அறை வரை கொண்டு வந்து வைப்பதுண்டு. ஆனால் 2 சிலிண்டர் வைத்திருப்பவர் புக் செய்து பத்து நாள் காத்திருக்க, ஒரு சிலிண்டர் உள்ளவர்களுக்கு 50, 100-க்கு அதிகமாக உடனே சப்ளை செய்கிறார்கள், பூட்டிய வீட்டு சிலிண்டர்களாக இருக்கலாம் அவை.

ஸாதிகா said...

அதிலும் ஒரு குளறுபடி செய்வாங்க//கண்டிப்பாக செய்வாங்க விஜி.நீண்ட கருத்துக்கு நன்றி விஜி,

ஸாதிகா said...

ஏமாறுவதும் ஏமாற்றுவதும்தான் இப்போது இந்தியாவில் இருக்கும் வாழ்க்கை முறை. இதில் நல்லவர்களின் பாடுதான் திண்டாட்ட//உண்மை வரிகள் அவர்கள் உணமைகள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...


ஏன் கியாஸ் என்றீங்க? கர்ர்ர்ர்ர்ர்ர்ர் “ஹாஸ்” என்றுதானே எழுதோணும்:)) இந்த தமிழாக்கமே புரியுதில்லையே...:).//ஹாஸ் என்று என்னை குழப்புறிங்க பூஸ்.கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

எனக்கு தெரிஞ்சு எங்க வீட்ல ஒரு சிலிண்டர் 50 ரூபாய்க்கு //நாங்கள் சென்னை வந்த புதிதில் 100 ரூபாய்தான் ஒரு சிலிண்டர்.கருத்துக்கு நன்றி மேனகா

ஸாதிகா said...

எவனுக்கும் நேர்மையா சம்பாதிக்கனும்ங்கற எண்ணமே இருக்குரதில்லை போல! :( :(//கருத்துக்கு நன்றி வரலாற்று சுவடுகள்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி கீதா ஆச்சல்

ஸாதிகா said...

மனோ ஆக்க அழ்ழ்கிய பின்னூட்டதிற்கும் பாராட்டுக்களுக்கும் நன்றிக்கா.

ஸாதிகா said...

செயல்படுத்த மாட்டேன் என்கினறார்களே //கருத்துக்கு நன்றி கோமதிம்மா.

ஸாதிகா said...

50, 100-க்கு அதிகமாக உடனே சப்ளை செய்கிறார்கள், பூட்டிய வீட்டு சிலிண்டர்களாக இருக்கலாம் அவை.//அங்கு 50.100 தான் இங்கே டபுள் ஆகவல்லவா கேட்கின்றனர்.கருத்துக்கு நன்றி ராமலக்ஷ்மி.

Asiya Omar said...

கேஸ் சிலிண்டர் என்ன விலை என்றே இத்தனை நாட்கள் தெரியாமல் இங்கு இருந்து விட்டேன்,ஊருக்கு போகும் பொழுது இது பற்றி என் காதில் எதுவும் விழவில்லை,தங்கள் பகிர்வு மூலம் விபரம் அறிந்து கொண்டேன்..ஸாதிகா.

சாந்தி மாரியப்பன் said...

எங்க வீட்டைப் பொறுத்தவரை கொஞ்ச காலமா நாங்களே நேரடியாப் போயி எடுத்துட்டு வரோம். அதனாலயோ என்னவோ அவங்க எங்க கிட்ட கூடுதல் காசு கேக்கறதில்லை. நாங்களாக் கொடுத்தாத்தான் உண்டு.

ஸ்ரீராம். said...

அவர்கள் ஏமாற்றுவதைத் தடுக்கவே முடியாது என்பதுதான் கொடுமை. எங்கள் ஏரியாவில் 430 ரூபாய் வாங்குகிறார்கள். வந்தால் போதும், சப்ளை செய்தால் போதும் என்று ஆகி விடுகிறது. முன்னர் இந்த ஸ்லிப் ஒட்டும் நடைமுறை இருந்தது. ஒருநாள் எங்களைக் கேட்காமல் அவர்களே எங்களை வேறு ஒரு ஏஜென்சிக்கு மாற்றி விட்டு விட்டார்கள். பெரிய வித்தியாசம் இல்லை. ஸ்லிப்பும் இல்லை. இணையத்தில் சென்று புகார் எல்லாம் கொடுததும் ஒன்றும் பயனில்லை.

Anonymous said...

இங்கு கரண்ட் தான்.
காஸ் பிரச்சனை இல்லை.
நல்ல பதிவு.
நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.

enrenrum16 said...

ஊருக்கு வரும்போதெல்லாம் எங்க மாமி சிலிண்டர் டெலிவரி பற்றி ஏதாவது கவலை தெரிவிப்பார்.... இன்ஷா அல்லாஹ்... விரைவில் இந்த குழப்பங்கள் தீர வேண்டும்...

நம்ம ஊரைப் பொறுத்தவரை பைப் காஸ் கொஞ்சம் ஆபத்து நிறைந்ததுன்னு நினைக்கிறேன். தகவல்கள் பகிர்ந்ததுக்கு நன்றிக்கா.

Jaleela Kamal said...

எனக்கும் ஊரில் காஸ் சிலிண்டர் எவ்வள்வுனு தெரியாது
ரொம்ப அடாவடி தனமாக இருக்கே

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆசியா.

ஸாதிகா said...

எங்க வீட்டைப் பொறுத்தவரை கொஞ்ச காலமா நாங்களே நேரடியாப் போயி எடுத்துட்டு வரோம்//ஒரு அவசர்த்திற்கு இப்படி கூட எடுத்து செல்ல தயாராக இருந்தாலும் அவர்கள் தரத்தயார் இல்லை.கொடவுன் வேறு இடத்தில் உள்ளது என்று தட்டிக்கழித்து விடுகிறார்களே:(நன்றி அமைதிச்சாரல்

ஸாதிகா said...

430 ரூபாய் வாங்குகிறார்கள். வந்தால் போதும், சப்ளை செய்தால் போதும் என்று ஆகி விடுகிறது. //அப்படித்தான் ச்ஸ்ரீராம் எங்களின் நிலைமையும் நானும் இணையத்தில் புகார் கொடுத்து எனது இந்த லின்கையும் அனுப்பி வைத்தேன்.ம்ஹும்..பிரயோஜனமே இல்லை.தலையே சரி இல்லாத பொழுது வாலுகளின் ஆட்டத்திற்கு சொல்லவா வேண்டும்:(நன்றி

ஸாதிகா said...

இங்கு கரண்ட் தான்.//ஓ..அங்கும் கரண்ட் பிரச்சினை உண்டா?கருத்துக்கு நன்றி வேதா இலங்கா திலகம்

ஸாதிகா said...

இன்ஷா அல்லாஹ்... விரைவில் இந்த குழப்பங்கள் தீர வேண்டும்... //அதுதான் எங்களின் பெரும் எதிர்பார்ப்பும் பானு.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ரொம்ப அடாவடி தனமாக இருக்கே//ரொம்ப ரொம்ப.. கருத்துக்கு நன்றி ஜலி.

ராஜி said...

இன்னும் சிலிண்டர் தட்டுப்பாட்டினால் நான் அவஸ்தைப்படை. இனி எப்படியோ?!

வல்லிசிம்ஹன் said...

எங்கள் வீட்டில் 67ஆம் வருடத்திலிருந்து கொடுத்து வரும் ஏஜன்சி நாங்கள் 10 மாதம் வெளியூர் போனதால்,சிலிண்டர் வாங்கவில்லை என்று காரணம் காட்டி சப்ளை நிறுத்திவிட்டார்கள்.இப்போது வேறு(14கே ஜி) சிலிண்டர் ஏஜென்சியில் பதிவு செய்தேன்.கேட்ட இரண்டு நாளிலேயே கொடுத்துவிடுகிறார்கள்.
நாங்கள் இரண்டே நபர் என்பதால் ஓடுகிறது. பசங்க வந்த போது 800 ரூபாய் கொடுத்து இரண்டு தடவை வாங்க வேண்டிவந்தது:(