May 12, 2012

தாவரவாழ்க்கை


வயதோ எழுபதுகளில்..தோற்றமோ ஐம்பதுகளை நினைவுபடுத்தும்.நாற்பதை தொடும் முன்னரே நரையோடும் சிகைக்காரர்கள் இருக்கும் பொழுது என்பதை தொடப்போகும் இவருக்கு பூதக்கண்ணாடிவைத்துத்தான் நரையைதேடிக்கண்டு பிடிக்க வேண்டும்.

முதுமைக்குறிய இரத்த அழுத்தம்,சர்க்கரை,பார்வைக்குறைபாடு,இதயநோய்,இத்யாதிகள் எதுவுமே இல்லை.

ஆனால்...

வயதீகத்தினால் ஏற்படும் நினைவுதிறன் இழப்பு நோயால் அவரும் அவரைச்சார்ந்தவர்களும் ஒவ்வோரு நாளையும் ஒவ்வொரு வருடங்களாக கழித்துக்கொண்டுள்ளனர்.இத்தனை ஆரோக்கியமாகவும் தோற்றத்தில் இளமையாகவும் இந்த வயதிலும் இருக்கும் ஒருவருக்கு இப்படி ஒரு பெருங்குறை.

இது உடனே நடந்த அதிசயமல்ல.சுமார் ஆறேழு வருடங்களுக்கு முன் பார்த்த பொழுது சொன்னதையே திருப்பி திருப்பி சொல்லவும்,ஆப்பிளைக்காட்டி முருங்கைக்காய் என்றும்,புத்தகத்தைப்பார்த்து டெலிபோன் என்று அதனை காதில் வைத்து பேசிக்கொண்டிருந்தவர்,நாளடைவில் நினைவு இழப்பு அதிகமாவதைக் கண்கூடாக கண்டு அரண்டு போனது அவரது குடும்பம்.

இறந்து போன உறவினரின் சடலத்தைப்பார்த்து ”ஏன் இவர் இவ்வளவு நேரம் தூங்கிகொண்டே இருக்கிறார்”என்று கேட்பதுமட்டுமல்லாமல்,அத்தனைக்கூட்டத்தின் மத்தியிலும் இறந்தவரின் முகத்துணியை நீக்கி “எழுந்திரும்மா.எவ்வளவு நேரம் தூங்குவே”என்று கன்னத்தை தட்டி எழுப்பிய அவலத்தை கண்ட பொழுது நெஞ்சம் பதறிப்போய் விட்டது.

இதுவே நாளடைவில்,பெற்ற பிள்ளைகளைத்தெரியாமல்,நேரம் தெரியாமல்,பசிப்பதை சொல்லத்தெரியாமல்,இயற்கைகடன்களை கழிப்பது பற்றி தெரியாமல்,இவ்வளவு ஏன் மொழி தெரியாமல் மலங்க மலங்க விழித்துக்கொண்டு உயிர் மட்டும் இருக்கும் பொம்மையாய்,படிப்படியாக,தன்னையும் சுற்றத்தையும் மறந்து தாவரவாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் அந்த ஜீவன்கள் படும் பாட்டினை கண்ணுற்றால் கல்லும் கரைந்து விடும்.

நான் ஊருக்கு செல்லும் பொழுதெல்லாம் வயது முதிர்ந்தவர்களை கண்டிப்பாகத்தேடி போய்ப்பார்ப்பேன்.சென்ற முறை சென்று இருந்த பொழுது ஒரு நண்பியின் தாயாருக்கும் இதே குறைபாடு.விசாரித்ததில் நிறைய பேருக்கு இப்படி உள்ளது என்ற அதிர்ச்சியான தகவல் கிடைத்தது.

இந்த நினைவு இழப்பு நோயை மருத்துவ உலகம் டிமென்ஷியா (Dementia) என்று அழைக்கின்றது.
வயதானவர்களில் இந்த நினைவு இழப்பு நோய் தாக்கப்பட்டவர்கள் உலகில் முப்பது சதவிகிதத்தினர் இருக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

இந்நோய் ஏற்படுவதற்கான நிஜக்காரணிகள் இன்னும் முழுமையாக கண்டறியப்படவில்லை.அதேபோல் இந்நோயை முழுமையாக குணப்படுத்தக்கூடிய மருந்தும் இன்னும் கண்டு பிடிக்கப்படவில்லை.

இது ஒரே நாளிலோ.அல்லது சில நாட்களிலோ உண்டாகும் நோயல்ல. மாதக்கணக்கில் வருடக்கணக்கில் முதியவர்களிடம் இருந்து மறதி மூலம் வெளிப்படும் பெரும் குறைபாடாகும்.

முதுமையில் கொடுமையான நோயான டிமென்ஷியாவை உணர்வுப்பூர்வமாக அலசினோம்.அடுத்த ஒரு இடுகையில் விஞ்ஞானப்பூர்வமாக அலசுவோம்.

என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக!

57 comments:

முற்றும் அறிந்த அதிரா said...

உண்மையே ஸாதிகா அக்கா.. எதுவும் நம் கையில் இல்லை... எல்லாம் விதிப்படியே.... தலை எழுத்தை மாற்ற முடியாது, நடக்க வேண்டும் என இருப்பின் நடந்துதான் ஆகும், அதை எதிர்கொள்ள நாம் தான் ரெடியாக இருக்க வேணும்.

ஊரில் இதனை அறளை பேந்துவிட்டதென சொல்வார்கள்.

வெளிநாட்டில் இந்த டிமென்ஷியா சாதாரணமாகிவிட்டது. ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து, அறிவுரை சொல்கிறார்கள், உங்களுக்கு டிமென்ஷியா ஆரம்பமாகிறது, அதனால் ஏதும் அலுவல்கள் இருப்பின் செய்து முடியுங்கோ என.


எம் எதிர் வீட்டிலிருக்கும் தம்பதிகள்.. கணவர் 72 வயது, மனைவி 65 வயது, கணவர் போலீஸாக இருந்தவர், இப்பவும் நல்ல ஸ்மார்ட், ஆனா அவருக்குச் சொல்லியிருக்காம், டிமென்ஷியா ஆரம்பமாகுதென, சாதாரணமாக எமக்குச் சொன்னார்கள்... இப்போ வீட்டை விற்றுக்கொண்டு பிளாட்டுக்குப் போகப் போகினமாம்.. எல்லாவற்றையும் பிளான் பணத் தொடங்கிட்டினம்...

பால கணேஷ் said...

நினைவுகளை இழந்து வாழும் இந்தத் தாவர வாழ்க்கை எவ்வளவு கொடுமையானது! ‘‘என் இறைவா! ’டிமென்ஷியா’ என்ற நோயினால் பாதிக்கப்படும் முதுமையை எவருக்கும் தராதே. அதைவிட அத்தகைய முதுமைக்கு முன்பே என்னுயிரை எடுத்துக்கொள்’’ என்பது என் பிரார்த்தனையாக இருக்கும்.

நிரஞ்சனா said...

ச்சே...! ஜஸ்ட் மிஸ்! S.S. கையால கேக் வாங்க முடியாமப் போச்சேடி நிரூ..!

வயசானவங்களைப் பாதிக்கற இப்படி ஒரு நோய் பத்தி இப்பத்தான் தெரிஞ்சுக்கிட்டேன். ரொம்ப வருத்தமா இருக்கு. புத்தகத்தை போனாகவும், இறந்தவரை தூங்குபவராகவும் எண்ணி... Very Pathetic! இப்படி ஒரு வியாதி வராம இருக்க மருந்து கண்டுபிடிச்சுட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும். இல்லையாக்கா!

விச்சு said...

டிமென்ஷியாவினைப் பற்றி நல்லதொரு அலசல்.

ராமலக்ஷ்மி said...

ஆம் ஸாதிகா:(. அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.

ஸ்ரீராம். said...

கொடுமையான விஷயம்தான்.... எல்லோருக்கும் அந்தப் பிரார்த்தனை பொருந்தும்.

vanathy said...

உண்மை தான். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வருடங்களின் முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஞாபகம் இருக்கும். உதாரணமாக, திருமணம் ஆனது, குழந்தைகள் இப்படி.

ஜெய்லானி said...

வயசானாலே குழந்தை மாதிரிதானே...!!அந்த வயது வரை இருப்பேனா என்பது சந்தேகமே ஸோ நோ கமெண்ட்ஸ் :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான நல்லதொரு அலசல்.
இதுபோன்ற கொடுமையான குறைபாடுகள் யாருக்குமே வரக்கூடாது தான்.

//என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக!//

பகிர்வுக்கு நன்றி.

[பகிர்வுகளை இ.மெயில் மூலம் LINK மட்டும் கொடுத்து தகவல் தெரிவித்தால் உடனே படித்துப்பார்த்து கருத்துக்கள் கூற ஏதுவாகும். Just Link மட்டும் போதும், வேறு எதுவும் விபரங்கள் தேவையில்லை.vgk]

MANO நாஞ்சில் மனோ said...

மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.

குறையொன்றுமில்லை. said...

நானும் இதுபத்தி கேள் விபட்டும் இருக்கேன் கண் எதிரே பார்த்தும் இருக்கேன். மஹா கொடுமைதான்

ஸாதிகா said...

வாங்க அதிரா,பின்னூட்டம் வாயிலாக முதுமையில் டிமென்ஷியா பதிக்கப்பட்ட பக்கத்து வீட்டினரை பற்றி சொல்லி மனதை நெகிழ வைத்து விட்டீர்கள்.அங்கெல்லாம் எத்தனை சாதாரணமாக எடுத்துக்கொள்கின்றனர்..!நன்றி அதிரா.

ஸாதிகா said...

உங்கள் உள்ளத்தை இக்கட்டுரை நெகிழ்த்தி விட்டது இல்லையா கனேஷண்ணா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

இப்படி ஒரு வியாதி வராம இருக்க மருந்து கண்டுபிடிச்சுட்டாங்கன்னா ரொம்ப சந்தோஷமா இருக்கும். இல்லையாக்கா!//

கண்டிப்பா...இதே போல் உயிர் கொல்லி நோயாக கருதப்படும் புற்று நோயும் வராமல் இருக்க தடுப்பு மருந்து விரைவில் கண்டு பிடிக்கப்படவேண்டும் என்பது என் ஆவல்.நன்றி நிரூ.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி விச்சு.

ஸாதிகா said...

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறோம்.///
விரைவில் எழுதுகிறேன் ராமலக்‌ஷ்மி.ஆர்வத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

கொடுமையான விஷயம்தான்.... எல்லோருக்கும் அந்தப் பிரார்த்தனை பொருந்தும்.//

கருத்துக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

ஸாதிகா said...

ஒரு சிலருக்கு குறிப்பிட்ட வருடங்களின் முன்னர் நடந்த நிகழ்ச்சிகள் மட்டுமே ஞாபகம் இருக்கும். உதாரணமாக, திருமணம் ஆனது, குழந்தைகள் இப்படி.///

உண்மைதான் வானதி.நான் கட்டுரையில் குறிப்பிட்டு சொன்னவருக்கு கூட ஆரம்ப கட்டத்தில் தன் இளம் பிராயம் மட்டுமே ஞாபகத்தில் இருந்தது.ஏழாண்டுக்கு பின் இப்பொழுது முற்றிய நிலையில் மொழியெல்லாம மறந்து எப்படி சாப்பாட்டை விழுங்குவது என்ற தடுமாற்றம் கூட வந்துவிட்டது:((

கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

அந்த வயது வரை இருப்பேனா என்பது சந்தேகமே ஸோ நோ கமெண்ட்ஸ் :-)///நாங்கள் மட்டும் எழுதிக்கொடுத்து விட்டா வந்திருக்கிறோம் ஜெய்லானி? கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

மனசுக்கு மிகவும் வேதனையாக இருக்கிறது//

எனக்கும்தான் மனோ சார்.கருத்துக்கு மிக்க நன்றி!

Radha rani said...

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் அம்மா டிமென்ஷியாவால் பாதிப்பு ஏற்பட்டு காணாமல் போய்விட்டார்.நான்கு வருடமாகிவிட்டது..இத்தணைக்கும் அவர்கள் வீட்டை விட்டு வெளியேவிடாமல் கவனமாக பார்த்தும் இதுமாதிரி ஆகிவிட்டது..இந்த பதிவை படித்த உடன் அந்த அம்மாதான் ஞாபகத்திற்கு வந்தார்கள்.

சசிகலா said...

உண்மையான அனுபவம் தாங்க எனது தாத்தா ,அப்பாவிடம் பார்த்திருக்கிறேன் .

ஹுஸைனம்மா said...

டிமென்ஷியா மட்டுமா, பார்க்கின்ஸன்ஸ், அல்ஸீமர்ஸ்... இன்னும் என்னென்னவோ வாயில் புகாத நோய்கள் நிறைந்துள்ள இக்காலத்தில் வய்தாவதை நினைத்தால் நடுக்கமாகத்தான் உள்ளது. உடற்பயிற்சி மூலம் உடலுக்கு வரும் நோய்களைத் தாமதம் செய்யலாம். மூளைக்கு...??

இறைவனே சரணம்.

அடுத்த பதிவுக்குக் காத்திருக்கிறேன்.

Jaleela Kamal said...

படித்ததும் மனசே கழ்டமாக இருக்கு

MARI The Great said...

டிமென்ஷியா பற்றி கேள்வி பட்டிருக்கிறேன், அது எவ்வளவு கொடுமையானது என்று தற்போது தங்களின் பதிவிநூடாக அறிந்துகொண்டேன்..!

சேகர் said...

என்ன செய்வது, சகோ. மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு குறை இருக்கும். இருந்தாக வேண்டும். ஆனால் இது போன்ற, நினைவிழப்பு கொடுமையானது..

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி லக்‌ஷ்மிம்மா.

துளசி கோபால் said...

டிமென்ஸியா, அல்ஸைமர்ன்னு பலவிதங்கள் இப்ப பாடாய்ப்படுத்துதுங்க.

நண்பர் ஒருவரின் மனைவிக்கு வயது 50 ஆனபோது இந்நிலை வர ஆரம்பிச்சு இப்போ ஆறு வருசமா...... வரவர மோசமாகிக்கிட்டே போகுது.

பார்க்கவே கொடுமையா இருக்குதுங்க:(

vetha (kovaikkavi) said...

''..என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக..''
எல்லோர் வேண்டுகோளும் இது தான்.
முதலே ஆரோக்கியமாக வாழப் பழுகுவோம். நல்ல இடுகை. நல்வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Menaga Sathia said...

படிக்கும் போது மனம் கஷ்டமாகிவிட்டது,அடுத்த பதிவுக்காக காத்திருக்கேன் அக்கா...

மாதேவி said...

பாதிக்கப் பட்டோரை பார்க்க மிகவும் கஷ்டமாக இருக்கும்.

நல்ல பகிர்வு.

Asiya Omar said...

//என்னிறைவா!பால்யத்திலும் இளமையிலும் மகிழ்வுடன் வாழ்ந்ததைப்போன்றே முதுமையிலும் இறப்பிலும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து மரணிக்கச்செய்வாயாக!//

ஆமீன்..

Angel said...

படிக்கும்போதே மனம் பாரமாகிப்போனது ஸாதிகா .
எங்க ஆலயத்தில் ஒருவர் இப்படி மிகவும் கஷ்டபட்டார்
சுமார் எட்டு வருட காலம் அவர் மனைவிதான் ஒரு குழந்தை போல அவரை கவனித்தார்கள் .தனது மகள் திருமணம் அதனால் ஐநூறு பேருக்கு உணவுதேவைஎன்று ஆர்டர் செய்தார் ஒரு நாள் .பாவம் அதே மகளுக்கு பத்து வயதில் பேரன் இருப்பது கூட மறந்திருக்கார் .


மானிட வாழ்வில் எத்தனை எத்தனை போராட்டங்கள் .மனது வலிக்குது .

ஸாதிகா said...

எனக்கு தெரிந்த உறவினர் ஒருவரின் அம்மா டிமென்ஷியாவால் பாதிப்பு ஏற்பட்டு காணாமல் போய்விட்டார்.நான்கு வருடமாகிவிட்டது..//

இப்பொழுதுதான் எனக்கும்ஞாபகத்தில் வருகின்றது.எனக்கும் தெரிந்த பெண்மணி ஒருவர் காணாமல் போய் விட்டார்.இந்நோயால்.காணாமல் போய் ஆறேழு ஆண்டுகள் ஆகியும் இன்னும் கண்டு பிடிக்கப்படவிலை.கருத்துக்கு மிக்க நன்றி சசிகலா

ஸாதிகா said...

உடற்பயிற்சி மூலம் உடலுக்கு வரும் நோய்களைத் தாமதம் செய்யலாம். மூளைக்கு...??//

இதற்கும் பயிற்சிகளின் மூலம் டிமென்ஷியா வருவதில் இருந்து தப்பிக்கலாம் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஹுசைனம்மா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி வரலாற்று சுவடுகள்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சேகர்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ துளசிகோபால்

ஸாதிகா said...

கருத்துக்கு வாழ்த்துக்கும் இதய நன்றிகள் சகோ இலங்கா வேதா திலகம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மாதேவி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஆசியா.

ஸாதிகா said...

உண்மைதான் ஏஞ்சலின்..இவற்றை எல்லாம் பார்க்கும் பொழுது மனமெல்லாம் வலி எடுக்கத்தான் செய்கிறது.கருத்துக்கு மிக்க நன்றி.

செய்தாலி said...

வருத்தமான விஷயம் தான் சகோ

திருவாளப்புத்தூர் முஸ்லீம் said...

வருத்தம் தரக்கூடிய உண்மை....சரியான உணவுக் கட்டுப்பாடும்,உடற்பயிற்சியும் இருந்தால் எந்தவிதமான நோய்களும் தாக்க பெருபான்மையான வாய்புகள் இல்லை என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்...இனியாவது பின்பட்டுரோவோமா?

எங்க தளத்திற்கும் நீங்க வாங்க,தளத்தில் உறுபினராக ஆகுங்கள் www.tvpmuslim.blogspot.com என்ற தளத்தில் பதில் இங்கே,கேள்வி எங்கே-விவாதம் இறைமறுப்பாளர் தருமிக்கு,நபிகள் நாயகம் அவர்களின் குணநலன் அறிய, நபிகள் நாயகம் vs தலைவர்கள்-(பகுதி-1 TO 15),காமகொடுரனுக்கு தண்டனை தந்த பெண்,இஸ்லாமிய எதிர்ப்புக்கு பதிலடி,சூடான விவாதம் என்ற தலைப்பில் பெண்களை பற்றிய மாற்று மதத்தாரின் இஸ்லாமிய பொய் பிரசாரத்திற்கு தக்க பதிலடி.ஆக்கபூர்வமான இன்னும் பல கட்டுரைகள்.அந்த தளத்தில் இணையுங்கள்,வாருங்கள் உங்கள் கருத்தை உலகறிய தெரிவியுங்கள் ,உங்கள் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள்.....

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப வருத்தமா இருக்கு.. முதுமையில் நினைவிழப்பது என்பது மிக கொடுமை. அல்லாஹ் இந்த நோயிலிருந்து நம்மை காப்பானாக. ஒரு பச்சிளங்குழந்தை போன்ற இவர்களது நடவடிக்கைகளை காணும்போது பாவமா இருக்கும். இந்த மாதிரி நேரங்களில் இவர்களுக்கு நம்முடைய ஆதரவும் அரவணைப்பும் கண்டிப்பா தேவை. இளமையில் நம்மை கண்போன்று காத்தவர்களை நாமும் இமைபோல காக்கணும். இப்போதைய சூழ்நிலைகளில் பெற்றோரை முதுமையில் தவிக்கவிடுபவர்கள் ரொம்ப அதிகரித்து வருகின்றனர். இந்த நிலை மாறவேண்டும். இன்ஷா அல்லாஹ்!

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி செய்தாலி.

ஸாதிகா said...

திருவாளப்புத்தூர் முஸ்லிம் கருத்துக்கு நன்றி.உங்கள் பக்கம் அவசியம் வருகிறேன்.

ஸாதிகா said...

ஷேக்..முகப்புத்தகத்தில் கேட்டதுமே சோம்பலை தூக்கி கடாசி விட்டு ஆஜர் ஆகி விட்டீர்களே!வெரிகுட்.

அல்லாஹ் திருமறையில் கூறி இருப்பதையும் இப்பொழுது ஞாபகம் ஊட்டுகிறேன்.

அவனையன்றி(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும்,பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்து இருக்கின்றான்.அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப்(சீ)என்று (சடைத்தும்)சொல்ல வேண்டாம்.அவ்விருவரையும் உம்மிடத்தில் இருந்து விரட்ட வேண்டாம்.இன்னும் அவ்விருவரிடமும் கனிவான,கண்ணியமான பேச்சை பேசுவீராக!
அல்குர் ஆன் (17:23)


இன்னும் இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீர்களாக.மேலும் என் இறைவனே !நான் சிறு பிள்ளையாக இருந்த பொழுது என்னை (பரிவோடு)அவ்விருவரும் வளர்த்தது போல் ,நீயும் அவர்களுக்கு கிருபை செய்வாயாக! என்று கூறிப் பிரார்த்திப்பீராக!
அல்குர் ஆன் (17:24)

Starjan (ஸ்டார்ஜன்) said...

ரொம்ப நன்றி அக்கா.. பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யவேண்டியவை பற்றியும் பெற்றோர் பிள்ளைகளுக்கு நல்ல வழிகாட்டியாகவும் ஆற்றும் கடமைகள் குறித்தும் அல்லாஹ் சூரத்துல் லுக்மான் அத்தியாயத்திலும் குறிப்பிட்டுள்ளான்.

அனைவருக்கும் அன்பு  said...

நானும் அருகில் இருந்து உன்ர்திருகிறேன் எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்னு கூட அவர்களால் புரியா முடியாது மனித வாழ்க்கை நமக்கு பாடம் .....................நல்ல பதிவு

Yaathoramani.blogspot.com said...

பயமுறுத்தும் நோய் குறித்து மிக அழகாகத்
தெளிவாக அறிமுகம் செய்துள்ளீர்கள்
அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்
தொடர வாழ்த்துக்கள்

Mahi said...

இந்த டிமென்ஷியா பற்றி இங்கே டிவியில் விளம்பரங்கள் வரும்..அதை பார்க்கவே மனசுக்கு சங்கடமாக இருக்கும். என்னால் உங்க பதிவையும் கவனித்துப் படிக்க முடியவில்லை,அதனால்தான் தாமதமான பின்னூட்டம்! :(

கடவுளை நம்புவோம்! வேறென்ன சொல்ல என்று புரியவில்லை!