March 20, 2012

சிட்டுக்குருவி
சிட்டுக்குருவி (Sparrow)என்றால் எனக்கு கொள்ளைப்பிரியம்.யாரையும் துன்புறுத்தாத அதன் அமைதியான சுபாவம்,அதன் சுறு சுறுப்பு,உற்சாகத்துள்ளல்,படு ஜாக்கிரதையான உருட்டும் விழிப்பார்வை,அதன் குட்டியான உருவம்,கீச்சு கீச்சு என்று கத்தும் மெல்லிய சப்தம் ,பெண்குருவியின் மென்மையான உருவம் ,ஆண்குருவியின் கம்பீர உருவம்,பட்டுப்போன்ற மென்மையான உடலைமைப்பு,கையில் பிடித்து தடவினால் குட்டியூண்டு தலையை ஆட்டி சிலிர்த்துகொள்ளும் பாங்கு மொத்ததில் அப்பாவியான தோற்றம் சந்தோஷத்திற்கு அடையாளமாக கருதப்படும் சிட்டுக்குருவியின் தன்மை எது என்னை அதன் பால் ஈர்த்தது என்று கணிக்க இயலவில்லை.

சிட்டுக் குருவி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் பறவையினத்தைச் சேர்ந்த உயிரினமாகும். சிட்டுக் குருவிகள் பசரீன்கள் குடும்பத்தைச் சார்ந்தவை.தமிழ்நாட்டில் இவை வீட்டுக்குருவிகள், அடைக்கலக்குருவிகள் ,ஊர்க்குருவிகள்,கிணற்றான்குருவிகள் சிட்டுக்குருவிகள் ஆகிய பெயர்களால் அழைக்கப்படுகின்றன.இவற்றின் வாழ்நாள் சுமார் 13 ஆண்டு காலமாகும். 27 நாட்களில் முட்டைகள் பொறித்து குஞ்சுகள் வெளியேவரும்.கூடுகட்டத்தெரியாத, மனிதர்களின் செயல் பாட்டை நம்பி வாழும் அப்பாவிப்பறவையினம் என்றால் மிகை ஆகாது.

1.சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து

2.சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா

3.சிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு

4.சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு சிறகு முளைத்தது

5.ஏ குருவி சிட்டுக்குருவி ஒஞ் சோடி எங்க அத கூட்டிக்கிட்டு

6.சிட்டுக்குருவி வெக்கப்படுது பெட்டைக்குருவி கற்றுத் தருது

7.சிட்டான் சிட்டான் குருவி சின்னக்குருவி

8.சிட்டு சிட்டுக் குருவிக்கு கூடு எதுக்கு அது


இப்படிப்பல பாடல்களை கொண்டு சினிமா உலகம் சிட்டுகுருவியின் அரும் பெருமைகளை பதிவு செய்துள்ளது.சிறுக சிறுக சேமிப்பதனைக்கூட சிட்டுக்குருவி சேர்த்தார்ப்போல் என்றே சிட்டுக்குருவியை முன்னிலைப்படுத்தி உவமானம் கூறுவார்கள்

இந்த சிட்டான குருவியைப்பற்றி தமிழ் இலக்கியமும் பல இடங்களில் பதிவு செய்துள்ளது வரலாறு கூறும் உண்மை.


விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
சிட்டு குருவியைப் போலே

எட்டு திசையும் பறந்து திரிகுவை
ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை

மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு

பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு

முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு

முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு

மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று.

மகாகவி பாரதியாரும் சிட்டுக்குருவி பற்றி மேற்கண்டவாறு பாடி புளங்காகிதப்பட்டுள்ளார்.

இளம் ஜோடிகளை இளம் சிட்டுகள் என்றும்,இளமை பிராயத்தில் சுறு சுறுப்பாக வளைய வரும் யுவன் யுவதிகளையும் சிட்டுகள் என்றும்,வேகமாக ஓடியவனை சிட்டென பறந்து விட்டான் என்றும் படைப்பாளிகள் கட்டியம் கூறுகின்றனர்.

மைனா (maina - Acridotheres tristis) )வல்லூறு(Shaheen Falcon),ஆந்தை(hawk) பொன்னி (indian pitta )போன்று அழிந்து வரும் பறவை இனங்களில் இதுவும் ஒன்றாகிப்போனதுதான் கவலை தரும் உண்மை.

சிட்டுக்குவிகள் செல்போன் டவரின் கதிரியக்கத்தால் ,சோடியம் விளக்குகளால் அழிகின்றன.வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஈயம் கலவாத பெட்ரோல்(Unleaded-Petrol)புழு,பூச்சிகளை அழித்துவிடுகிறது.இதனால் குருவிகளுக்கு உணவுப்பற்றாகுறை ஏற்பட்டுவிட்டது.செல்போன் கதிரியக்கம் குருவிகளின் கருத்தரிக்கும் தன்மையைச் சிதைக்கின்றன,பறந்து கொண்டிருக்கும் பொழுதே கதிர்வீச்சின் நச்சுத்தன்மையால் செத்து மடிகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

வளரும் பருவத்தில் இருக்கும் குருவிக் குஞ்சுகளுக்கு பூச்சி புழுக்கள் முக்கியமான உணவு. உணவுப் பற்றாக்குறையின் காரணமாக குருவிகளின் எண்ணிக்கை குறைகின்றன.வாழ்க்கை முறை மாற்றங்களால் அழிகின்றன என்ற காரணங்களைச் சொல்கிறார்கள்.

அந்தக்காலத்தில் வீட்டிற்கு வெளியே உரல் வைத்து நெல் குத்தி அரிசி எடுப்பார்கள்.முறம் வைத்து தானியங்களை புடைப்பார்கள்.ஆனால் இப்பொழுது அது அரிதாகி விட்டது.

சிட்டுக்குருவிகள் கூடுகள் அமைப்பதற்கான இடமாக கூரைகளின் அடிப்பகுதி அக்காலத்தில் இருந்தது போக இப்பொழுது கான்கிரீட் கட்டடங்களில் இதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

பொட்டலம் கட்டி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அண்ணாச்சிகளை காணாமல் போகப்போக இந்த அப்பாவி உயிரினமோ உலகை விட்டே காணாமல் போய்க்கொண்டுள்ளது.

நாள்தோறும் தமது வாழ்வுக்காக அந்த சின்னஞ்சிட்டுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை மக்களுக்கு எடுத்துக்கூறி இதன் மூலம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி அழிந்துகொண்டிருக்கும் பறவை இனமாக சிட்டுக்குருவிகளை காக்க 2010 ஆம் ஆண்டில் இருந்து மார்ச் திங்கள் 20 ஆம் நாளை உலக சிட்டுக்குருவிகள் நாளாக நினைவுகூறப்படுகிறது.


யாருக்கும் தீங்கிழைக்காத அந்த சின்னஞ்சிறு உயிரினம் வளரும் தலை முறைகளுக்கு அறியபடாமல் போய் விடக்கூடிய ஆபத்தை தவிர்ப்போம்!தவறினால் இனி வரும் காலங்களில் சிட்டுக்குருவிகள் தினத்தை மட்டிலுமே கொண்டாடுவோமே தவிர சிட்டுக்களை கண்ணால் காண இயலாத நிலை ஏற்பட்டுவிடும் அபாயம் வந்துவிடும்.

சென்னையில் எங்கெல்லாம் சிட்டுக்குருவிகள் காணப்படுகின்றன என்ற விபரங்களை சேகரித்து அவ்வினங்கள் அழியாமல் பாதுக்காத்திட இயற்கை ஆர்வலர்கள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.
நம்மால் முடிந்தவரை திரட்டப்படும் தகவல்கள் ஆர்வலர் சங்கத்துக்கு தெரியப்படுத்தலாம்.

சிட்டுக்குருவிகள் நின்று கொண்டிருக்கும் காட்சிகள்,அவை தானியங்களை உண்ணும் காட்சிகள்,கூடுகளில் குடித்தனம் நடத்தும் காட்சிகள் போன்ற சிட்டுக்குருவிகள் தொடர்பான காட்சிகள் அடங்கிய புகைப்படம் உங்களிடம் இருந்தால் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு மார்ச் 22 ஆம் தேதிக்குள் அனுப்பி வையுங்கள்.

சிறந்த புகைப்படங்களுக்கும் தகவல்களுக்கும் பரிசுகள் காத்திருக்கின்றன.

மின்னஞ்சல் முகவரி : MNSsparrow@yahoo.in

அப்பாவிக்குருவிகளை அரவணைப்போம்!
அதன் வாழ்வாதரத்தை உயிர்பிப்போம்!
அழிந்து வரும் இனத்தைக்காப்போம்!
இயற்கை ஆர்வலர்களுக்கு கைகொடுப்போம்!!

66 comments:

பால கணேஷ் said...

மிகமிகத் தே‌வையான விழிப்புணர்வு கட்டுரை. சென்‌னை நகரில் குருவிகள் கண்ணிலேயே படுவதில்லை. முற்றாக அழிந்துவிட்டதோன்னு நினைக்கிறேன். பார்க்கவும், ரசிக்கவும் அழகான அந்த உயிரினத்தைப் பாதுகாக்கத்தான் வேணும்.

பால கணேஷ் said...

இதைப் பத்திப் படிக்கையில 'Songs of Sparrow' என்று முன்ன ஒரு படம் பார்த்தது ஞாபகத்துக்கு வருது.

ஸாதிகா said...

உடன் வருகைக்கு மிக்க நன்றி கணேஷண்ணா.எனக்கு பிரியமான சிட்டுக்குருவிக்கு எதோ என்னாலானது.

ஷைலஜா said...

சிட்டுக்குருவி பற்றிய அருமையான பதிவு இதோ இன்றைய தினத்திற்காக நானும் எழுத நினத்துள்ளேன்

ஸாதிகா said...

வருகைக்கு மிக்க நன்றி ஷைலஜா அக்கா.நீங்களும் எழுதுங்கள்.படிக்க ஆவலாக உள்ளேன்.

Yaathoramani.blogspot.com said...

அருமையான விரிவான பதிவு
அன்னம் போல் சிட்டுக் குருவியும் ஒரு கற்பனை என
ஆகிவிடுமோ என்கிற பயம் எனக்குள்ளுமுண்டு
அனைவருக்குமான பதிவு இது
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி

மனோ சாமிநாதன் said...

சிட்டுக்குருவி பற்றிய தகவல்கள் அருமை! யாருக்குத்தான் சிட்டுக்குருவியின் அழகும் துறுதுறுப்பும் பிடிக்காது? முதல் மரியாதை படத்தில் சிவாஜி ' ஏ குருவி..சிட்டுக்குருவி' என்று பாடும் பாடலும் சின்ன வீடு படத்தில் 'சிட்டுக்குருவி வெக்கப்படுது' என்ற பாடலும்கூட ஞாபகத்துக்கு வருது!!

ஸாதிகா said...

வருகை தந்து கருத்து சொன்னதற்கு மிக்க நன்றி ரமணி சார்.

ஸாதிகா said...

அடேங்கப்பா..சிட்டுக்குருவி தொடர்பான மேலும் இரு பாடல்களை படத்துடன் பின்னூட்டியதற்கு மிக்க நன்றி.உங்கள் அபார ஞாபகசக்திக்கு பாராட்டுக்கள்.நீங்கள் ஞாபகப்படுத்திய பாடல்களையும் இணைத்துவிட்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி மனோ அக்கா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

சிட்டுக்குருவி பற்றிய அனைத்து விஷயங்களையும், சினிமா பாடல்கள் உள்பட கொடுத்து அசத்தி விட்டீர்களே!

சபாஷ். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

இருப்பினும் சிட்டுக்குருவிகளை முன்புபோல இப்போதெல்லாம் பார்க்கவே முடியாமல் உள்ளது, மனதுக்கு மிகவும் வருத்தமாக உள்ளது.

ஸாதிகா said...

உற்சாக பார்ராட்டுக்களுக்கும்,வாழ்த்துக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி வி,ஜி கே சார்.

Asiya Omar said...

அருமையான பகிர்வு.சிட்டுக்குருவி ஊரில் எங்கள் வீட்டு கண்ணாடி முன் நின்று கொத்தி விளையாடுவதும் அங்கஞத்தில் பறந்து பறந்து அட்டகாசமாய் மேற்கூரையில் கூடு கட்டி குடியிருந்தது.இப்பல்லாம் அத்னை பார்க்க முடியுமா என்ற ஏக்கம் தான் உங்கள் பதிவை பார்த்தவுடன் ஏற்படுகிறது.சலிக்காமல் நேரம் போவது தெரியாமல் வீட்டில் குருவிகளுடன் நேரம் போக்கியிருக்கிறன்.

பாடல் பகிர்வு அருமை.இன்று தான் அழிந்து வரும் சிட்டுக்குரிவிகள் என்று தினமலரில் கூட படித்தேன்.

ராஜி said...

சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க வீட்டுல நிறைய சிட்டுக்குருவிலாம் பறப்பதை வேலை மெனக்கெட்டு வேடிக்கை பார்ப்பதுண்சு. இப்போ???

கிளியனூர் இஸ்மத் said...

நகரங்களில் சிட்டுக் குருவியை காண்பது அரிது ஆனால் அமீரகத்தில் சிட்டுக்குருவி மட்டுமல்ல பல குருவிகளை பறக்கவிட்டு அதன் இனத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.
சிட்டுக்குருவியைப் பற்றிய அழகான செய்தி தொகுப்பு!

கோமதி அரசு said...

அப்பாவிக்குருவிகளை அரவணைப்போம்!
அதன் வாழ்வாதரத்தை உயிர்பிப்போம்!
அழிந்து வரும் இனத்தைக்காப்போம்!
இயற்கை ஆர்வலர்களுக்கு கைகொடுப்போம்!!//

நல்ல கருத்தை சொல்லும் விழிப்புணர்வு பதிவு அருமை ஸாதிகா.

எங்கள் வீட்டில் குருவி பீரோவில் கதவில் உள்ள கண்ணாடியை வந்து கொத்தும், என் அம்மா அதன் அலகு வலிக்கும் என்று திரைசீலை தைத்து போட்டது நினைவுக்கு வருகிறது.

மபிலாடுதுறையில் சிட்டு குருவி இல்லை.

என் மகள் ஊரில்(டெல்லி) இருக்கிறது.

என் மகன் ஊரிலும் இருக்கிறது. அங்கு போனால் அதன் கீச், கீச் ஒலியையையும், அதன் அழகையும் ர்சித்து மகிழ்ந்து இருக்கிறேன்.

பாடல்கள் எல்லாம் அருமை.

ரிஷபன் said...

பொட்டலம் கட்டி மளிகை பொருட்களை விற்பனை செய்யும் அண்ணாச்சிகளை காணாமல் போகப்போக இந்த அப்பாவி உயிரினமோ உலகை விட்டே காணாமல் போய்க்கொண்டுள்ளது.

சிட்டுக்குருவி பற்றிய அருமையான பதிவு!

சாந்தி மாரியப்பன் said...

அருமையானதொரு பகிர்வு.. இனிமே குருவியை மியூசியத்துலயும் புத்தகங்கள்லயும்தான் பார்க்கணும் போலிருக்கு..

வின்சென்ட். said...

எல்லா தரப்பிலிருந்தும் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். அருமை.

விச்சு said...

சர்வதேச சிட்டுக்குருவி தினத்தன்று நல்லதொரு தகவலுடன் பதிவிட்டுள்ளீர்கள். அதனைப் பாதுகாப்போம்.

ராமலக்ஷ்மி said...

மிக அருமையான பதிவு ஸாதிகா. நன்றி.

Kousalya Raj said...

மிக உணர்வு பூர்வமான விரிவான பகிர்வு.

ஒரு பறவை இனம் அழிகிறது என்பது சிலருக்கு ஒரு சாதாரணமாக விசயமாக இருக்கலாம், ஆனால் இந்த உயிரினங்களை வைத்து தான் மனிதர்களின் இன்றைய வாழ்க்கை சூழல்கள் எப்படி இருக்கிறது என பகுத்தரிகிறார்கள்.

உங்களின் பதிவில் கொடுத்திருக்கும் விளக்கங்கள் மிக முக்கியமானவைகள்.
பகிர்விற்கு நன்றிகள் தோழி.

Menaga Sathia said...

உண்மைதான் அக்கா சிட்டுக்குருவியை பார்த்தே பலவருடம் ஆகுது...இன்னிக்கு சிட்டுக்குருவிகள் தினம் உங்க பதிவை படித்ததும் சந்தோஷம்..பாராடுக்கள்.சிட்டுக்குருவி பாடல்கள் கேட்க என்றும் இனியவை..விழிப்புணர்வு கட்டுரைக்கு மிக்க நன்றி!!

செ.சரவணக்குமார் said...

நல்ல பதிவு அக்கா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி தோழி ஆசியா.

ஸாதிகா said...

சிட்டுக்குருவிலாம் பறப்பதை வேலை மெனக்கெட்டு வேடிக்கை பார்ப்பதுண்சு. இப்போ???//
நானும்தான் ராஜி.இப்பொழுது ஊருக்கு சென்றால் கூட பார்க்க முடிவதில்லை.கருத்துக்கு நன்றி ராஜி.

ஸாதிகா said...

அமீரகத்தில் சிட்டுக்குருவி மட்டுமல்ல பல குருவிகளை பறக்கவிட்டு அதன் இனத்தை வளர்ப்பதற்கு முயற்சி செய்து வருகிறார்கள்.//ரொம்ப நல்ல விஷயம் சகோ.வந்து கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி சகோதரர் இஸ்மத்,

ஸாதிகா said...

//எங்கள் வீட்டில் குருவி பீரோவில் கதவில் உள்ள கண்ணாடியை வந்து கொத்தும், என் அம்மா அதன் அலகு வலிக்கும் என்று திரைசீலை தைத்து போட்டது நினைவுக்கு வருகிறது.
// அடடா..கோமதி அரசு உங்கள் அம்மாவின் பறவை நேயம் சிலிர்க்க வைக்கின்றது.

கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ரிஷபன்.அண்ணாச்சி கடைகள் மறைய மரைய சிட்டுக்குருவிகளும் மறைந்து போனதென்னவோ உண்மைதானே!

ஸாதிகா said...

இனிமே குருவியை மியூசியத்துலயும் புத்தகங்கள்லயும்தான் பார்க்கணும் போலிருக்கு..//அதற்குத்தான் சமூக இயற்கை ஆர்வலர்கள் மெனக்கெடுகின்றார்கள்.நன்றி அமைதிச்சாரல்.

ஸாதிகா said...

//எல்லா தரப்பிலிருந்தும் செய்திகளை தொகுத்து வழங்கியிருக்கிறீர்கள். அருமை.// ,மிக்க நன்றி வின்சென்ட்.நீங்களும் அருமையாக பகிர்ந்துள்ளீர்கள்.

ஸாதிகா said...

மிக்க நன்றி விச்சு.

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்ஷ்மி .நீங்களும் அழகாக பகிர்ந்து எனது பகிரவையும் பகிர்ந்ததற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக உணர்வு பூர்வமான விரிவான பகிர்வு.
//

மிக்க மகிழ்ச்சி.நீங்களும் பாங்காய் பகிர்ந்துள்ளீர்கள் கெளசல்யா.மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி செ.சரவணக்குமார்

சிநேகிதன் அக்பர் said...

அருமையான பகிர்வு.

ஸ்ரீராம். said...

சிட்டுக் குருவிகள் மரங்கள் வளர்ப்பில் மனித இனத்துக்கு பெரும் சேவை புரிகின்றன. அந்த ஒரு இயற்கையின் கண்ணி அறுபடுவதில் ஏற்படும் சிக்கல்கள் இயற்கைச் சுழற்சியையே பாதிக்கும் என்றும் படித்தேன். நல்ல பதிவு.

சிட்டான் சிட்டான் குருவி பாட்டு சிட்டுக் குருவியைக் குறிக்கிறதா அது தனி வகையா என்று தெரியவில்லை! :))

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அக்பர்.

ஸாதிகா said...

சிட்டான் சிட்டான் குருவி பாட்டு சிட்டுக் குருவியைக் குறிக்கிறதா அது தனி வகையா என்று தெரியவில்லை! :))//

சின்னக்குருவி என்றும் வருகின்றதே.அதனால் கண்டிப்பாக சிட்டுக்குருவியை குறித்துத்தானாக இருக்கும்.:)

அந்தப்பாடலையும் இணைத்துவிட்டேன்.கருத்துக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

இராஜராஜேஸ்வரி said...

சிட்டுக்குருவி பற்றி சிறப்பான பகிர்வுகள்.. பாராட்டுக்கள்..

Mahi said...

நல்ல பகிர்வு ஸாதிகாக்கா! எங்க (பழைய) வீட்டருகில் ஒரு தண்ணியில்லாக் கிணறு இருக்கும், அதுக்குள்ளே குருவிகள் குடியிருக்கும். பலநாட்கள் ரசித்திருக்கிறேன். இப்போ குருவிகள் அருகித்தான் போய்விட்டன!

ஊரில இருந்திருந்தா எப்படியாவது(!) சிட்டாப் பறந்தாவது சிட்டுக்குருவிய போட்டோ எடுத்திருப்பேன்.இங்கே எங்க படமெடுக்க? காக்கா (அ) அமெரிக்கக் குருவி(house martin birds) ஓக்கே-வா சொல்லுங்க,நீங்க சொன்ன லிங்குக்கு அனுப்பாம டைரக்ட்டா உங்களுக்கு அனுப்பிவிடறேன்.ஹிஹி!

Asiya Omar said...

ஸாதிகா இங்கு அலைனில் எங்கள் வீட்டு பின் புற பால்கனிக்கு இப்பொழுதும் சிட்டுக் குருவிகள் வந்து போகின்றன.படம் எடுத்து அனுப்பலாம் என்றால் சிட்டாக பறந்து விடுகின்றன.
பின்புறம் உள்ள பேரீச்சை தோட்டத்தில் கூட்டம் கூட்டமாக சிட்டுக் குருவிகள் வாழுகின்றன.
முடிந்தால் வீடியோவோடு பகிர்வேன்.எத்த்னையோ முறை துணி உலர்த்தும் போது என்னை சுற்றி பற்ந்திருக்கிறது.இப்ப கேமராவை வைத்துக் கொண்டு காத்திருந்தேன்.நேற்று முழுவதும் வரலை.

Mahi said...

சிட்டு சிட்டுக் குருவிக்கு கூடு எதுக்கு? - அது
தொட்டுத் தொட்டு சொந்தம் கொள்ள
வானம் இருக்கு...
இந்தப்பாட்டை விட்டுட்டீங்களே?! :)))

Radha rani said...

கிராமத்தில் முன்பு விவசாயம் செய்தார்கள்.சிட்டு குருவிகளுக்கு உணவு தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது..தானியங்களை காய வைப்பது,அரைப்பது, அள்ளி மூட்டையில் அடுக்குவது,என்று செழுமையாக இருந்தது.அதை சாப்பிட சிட்டுகுருவிகள் வீடுகளிலும் காடுகளிலும் அதிகமாக திரிந்தது.இப்போ காடுகள் அழிந்து விவசாயமும் அரிதாகிவிட்டது..சிட்டுகுருவி இனமும் அழிந்து வருகிறது.பசுமை புரட்சி ஒன்றுதான் இதற்கு தீர்வு.

G.M Balasubramaniam said...

கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்துக் கொத்தும் சிட்டுக் குருவிகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. இங்கு பெங்களூருவில் சிட்டுக் குருவிகளின் கூட்டை பூங்காக்களில் மரங்களின் மேல் வைப் பதாக செய்தி படித்தேன். கூடு இடம் மாறுவது அவைகளுக்குத் தெரியுமா. என் சின்னத் தோட்டத்தில் எப்பவாவது பார்க்கிறேன். நகரமே ஒரு காங்கிரீட் காடாக ஆகிவிட்டதே. சர்வைவல் ஆஃப் த ஃபிட்டெஸ்ட் என்பார்கள். ARE SPARROWS IT TO SURVIVE.?

ஸாதிகா said...

மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி,நீங்களும் வெகு அருமையாக அற்புதமானபடங்களுடன் பகிர்ந்துள்ளீர்கள்,

ஸாதிகா said...

ஊரில இருந்திருந்தா எப்படியாவது(!) சிட்டாப் பறந்தாவது சிட்டுக்குருவிய போட்டோ எடுத்திருப்பேன்..மகி சிட்டாக பறப்பதை பார்க்கணுமே:)

கருத்துக்கு நன்றி மகி,

ஸாதிகா said...

அமீரகத்திலும் சமுக ஆர்வலர்கள் இதனை செயல்படுத்துவதாக கேள்விப்பட்டேன்.வரவேற்கக்கூடிய விஷயம்.கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா.

ADHI VENKAT said...

நல்லதொரு பகிர்வு. இங்கே சில குருவிகளை எப்போதாவது பார்க்க முடிகிறது.

ஸாதிகா said...

மகி நீங்கள் சொன்ன பாடலையும் இணைத்து விட்டேன்.நன்றி!

ஸாதிகா said...

வருகைக்கு நன்றி ராதாராணி நல்ல கருத்துக்களை பின்னூட்டி இருக்கின்றீர்கள்:)

ஸாதிகா said...

வருகை புரிந்து கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி ஜி எம் பாலசுப்ரமணியம் சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆதிவெங்கட்.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா சிட்டுக்குருவி சூப்பர்... ஒரு கதைபோல இருக்கு.. பாட்டுக்களும் எனக்குப் பிடித்தவையே...

என் பக்கத்துக்கும் ஒரு “சிட்டுக்குருவி” வந்திச்சா... பின்பு காணேல்லை:)).

நான் இதுவரை பார்த்ததுண்டு, ஆனால் தொட்டுப்பார்க்கக் கிடைக்கவில்லை:(.

Anonymous said...

அடடா! நினைக்காத தலைப்பில் ஒரு சிறந்த ஆக்கம் அருமை. அத்தனை கருத்துகளும் படித்தேன் நான் எதைக் கூற! அன்பான வாழ்த்துகள் அறிவான, பறவை நேய ஆக்கத்திற்கு.
வேதா. இலங்காதிலகம்.

kowsy said...

உண்மைதான் சிட்டுக் குருவியின் அழகே ஒரு தனிரகம். அதன் மென்மையும் அது நடக்கும் அழகும் பார்த்துக் கொண்டே இருக்கலாம் . இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்ப்படுகின்றன . பல மிருகங்கள் இல்லாமல் போயிருக்கின்றன . பல இனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இப்படித்தான் சிட்டுக்குருவி இனமும் அருகி வருகின்றது . அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையும் கூட . தேவையான பதிவு தந்திருக்கின்றீர்கள் வாழ்த்துகள்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி அதீஸ்.என்ன ஆளையே காண்வில்லை.வீக் எண்ட் கொண்டாடாப்போனவர் கொண்டாடிக்கொண்டே இருந்து விட்டீர்களோ?:)

ஸாதிகா said...

பதிவினையை,கருத்துக்களையும் படித்து பின்னூட்டிய வேதா இலாங்காதிலத்திற்கு இனிய நன்றிகள்!

ஸாதிகா said...

. பல இனங்களில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றது. இப்படித்தான் சிட்டுக்குருவி இனமும் அருகி வருகின்றது . அதனைப் பாதுகாக்க வேண்டியது எமது கடமையும் கூட . //
நல்லதொரு கருத்து சந்திரகெளரி.மிக்க நன்றி!

Jaleela Kamal said...

எல்லா பாடல் களும் எனக்குபிடித்தவை

சிட்டு குருவி தினம் போகும் போது ரோட் வெரிச்சோடி இருக்கும் அப்ப அழகா ரோடில் சாவகாசமாக நடந்து போகும், நான் வருவதை பார்த்து பறந்துட போகுதோன்னு ரொம்ப மெதுவா அதன் அழகை ரசித்து கொண்டேநடந்து போவேன்.

Jaleela Kamal said...

அருமையான விழிப்புணர்வு கட்டுரை.

Unknown said...

அழிந்துவரும் சிட்டுக்குருவி பற்றிய அருமையான விழிப்புணர்வு கட்டுரை. பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

என்னையும் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தியதற்கு ரொம்ப நன்றிங்க.

பவள சங்கரி said...

அன்பின் ஸாதிகா,

நல்ல கட்டுரை. வாழ்த்துகள் தோழி. போட்டி விவரத்திற்கும் நன்றி.

அன்புடன்

பவள சங்கரி.

Vijiskitchencreations said...

எனக்கும் கனேஷ் சொன்னது தான் 'Songs of Sparrow' . நினவுக்கு வருது. நல்ல பதிவு.

நம்பிக்கைபாண்டியன் said...

சிட்டுக்குருவி என்றதும் பல சிறுவர் பருவத்து நிகழ்வுகளை நியாபகப்படுத்துகிற‌து!
சிட்டுக்குருவிகளை பாதுகாப்போம்!