February 15, 2012

மண்சட்டி முதல் மைக்ரோவேவ் வரை...
பள்ளியில் படிக்கும் பொழுது பள்ளி முடிந்து வீட்டுனுள் நுழையும் பொழுதே மண் சட்டியில் சமைத்த குழம்பு மூக்கைத்துளைக்கும்.மண்சட்டி,அதனை மூட மரத்தில் ஆன கைப்பிடியுடன் கூடிய மரமூடி,கொட்டாங்கச்சியில் செய்த அகப்பை(கொட்டாங்கச்சியிலான கரண்டியை அப்படித்தான் சொல்லுவார்கள்) என்று கையை சுட்டுக்கொள்ளாத வகையில் பாத்திரங்கள் உபயோகித்தாலும் வீட்டில் சுயமாக நானே எடுத்துப்போட்டு சாப்பிட அனுமதி இல்லை.ஏனெனில் மண்பானை சமையல் ஆயிற்றே.மெத்தனமாக உடைத்தால் மொத்தமும் காலியாகி விடுமே.

இந்த மண்பாத்திரங்கள் வாங்குவதற்காகவே பக்கத்து ஊரான ராமனாதபுரத்தில் குயவர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்று வரிசையாக அடுக்கப்பட்டு இருக்கும் பாத்திரங்களை தேவையான அளவுக்கு பொறுக்கி எடுத்து நல்ல சட்டிதானா என்று ஒவ்வொன்றாக சுட்டு விரலால் சுண்டிப்பார்த்து டசன் கணக்கில் அம்மா வாங்கும் பொழுது ,குட்டியாக இருக்கும் பூசணி உண்டியல்,சிறுமிகள் விளையாடத்தக்க மினியேச்சர் சட்டிபானைகளையும் கொசுறாக வாங்கி மகிழ்வோம்.

ஊரில் ஆர்ப்பாட்டத்தோடு கேஸ் ஏஜென்ஸீஸ் திறந்தார்கள்.வீட்டிற்கும் ஒரு கனெக்‌ஷன் வந்துவிட்டது.

கேஸ் அடுப்பில் வைத்து மண்பானையில் சமைப்பதா?தோட்டத்தில் இருந்து வரும் விறகு.தென்னை மட்டை,தேங்காய்மட்டை கொண்டு இலவசமாக எரிபொருள் உபயோகித்துகொண்டிருந்த பொழுது மண்சட்டி ஒகே. காசு கொடுத்து சிலிண்டர் வாங்கி உபயோகிக்கும் பொழுது மண்சட்டியில் வைத்து மணிக்கணக்கில் சமைத்தால் என்னாவது?மண்பானைகள் எல்லாம் கொல்லைபுரம் புறம் தள்ளப்பட்டது.

சிலிண்டர் வந்த கையோடு வித விதமான அலுமினிய பாத்திரங்கள் அடுக்களையில் குடியேறின.கறி அடுப்பு சாம்பலை வைத்து தேங்காய் நாரினால் சட்டி பானைகள் தேய்த்தது போய் காசு கொடுத்து வாஷிங் பவுடர் வாங்கி பிளாஸ்டிக் நாரினால் சாமான் தேய்ப்பதில் பணம் விரயமாகிறதே என்று அம்மாவுக்கு வேண்டுமானால் கசப்பாக இருந்தாலும் எங்கள் வீட்டில் வேலை செய்யும் அம்மாவுக்கு ஒரே குஷிதான்.

அலுமினிய பாத்திரத்தில் சமைத்தால் கேன்சர் வருவதற்கு வாய்ப்பு அதிகம் என்று மீடியா முழுதும் மாங்கு மாங்கென்று சொல்லிக்கொண்டு இருந்த பொழுது நாங்கள் மட்டும் மெத்தனமாக இருப்போமா?அலுமினிய பாத்திரங்கள் அனைத்தும் பரண் ஏறின.எவர்சில்வர் பத்திரங்கள் அடுக்களையில் அணிவகுத்து சிரித்தன.

துவரம் பருப்பு எது கடலைபருப்பு எது அறிந்து கொள்ள ஆசைப்படாமல் வக்கணையாக சாப்பிட்ட காலம் போக,நாம் தான் சமைத்தாகணும் என்ற நிலைமை வந்த பொழுது எவர் சில்வர் பாத்திரத்தில் அடிப்பிடிக்காமல் சமைக்குமளவுக்கு பொறுமை இல்லாததால் அடிகனமான காப்பர் பாட்டம் பாத்திரங்கள் சமையலறையை ஆக்ரமித்துக்கொண்டன.

அப்புறம் என்ன?சதா அடுக்களையில் நின்று வேகுவதா?வாங்கு எலக்டிரிக் குக்கரை.எலக்ட்ரிக்குக்கர் மகாத்மியம் அதனை உபயோகித்த பிறகுதான் தெரிந்தது.சாதம் பண்ணுவதற்கு மட்டுமல்ல,தண்ணீர் சுட வைப்பது முதல் சால்னா பண்ணும் வரை அதன் உபயோகம் வீட்டில் அதிகமானது.பெயர் தான் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்.ஆனால் ஆல் இன் ஆல் அடுக்களை ராணியாக அவதாரம் எடுத்து விட்டது.

பிள்ளைகள் வளர்ந்ததும் எண்ணெய் கம்மியாக செலவு செய்யவேண்டும் என்ற ஹெல்த் கான்சியஸ் அதிகமானதும் காப்பர்பாட்டங்கள் அனைத்தும் நான்ஸ்டிக் குக் வேருக்கு புரமோஷன் ஆகிவிட்டது.

ஐந்து ரூபாய் கொடுத்து மண்சட்டி வாங்கி சமைத்தது போக ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட tefal நான் ஸ்டிக் பாத்திரம் ஒன்றே ஆயிரம் ரூபாய்க்கு மேலே கொடுத்து வாங்க வேண்டியுள்ளதே என்று புலம்பினாலும் பாத்திரங்களை தேவைக்கு ஏற்ற அளவுகளில் வாங்கி அடுக்குவதை நிறுத்த வில்லை.

சந்தடியில் மைக்ரோவேவும் இடம் பிடித்துவிட்டது.மைக்ரோவேவ் அவனுக்கு தேவையான மைக்ரோவேவ் புரூப் பாத்திரங்கள் வாங்கியாக வேண்டும் என்ற நிர்பந்தம்.

மைக்ரோவேவில் சாதம் பண்ணலாம் கறிசமைக்கலாம்,ஏன் உப்புமாகூட கிளறலாம்.வடை சுட முடியுமா?வாங்கு டீப் பிரையர்.கிச்சனுக்கு போகாமலே வடை சமோசா பஜ்ஜி என்று செய்து ஜமாய்க்கலாம்.

தவாவைப்போட்டு வேர்க்க விறு விறுக்க சப்பாத்தி சுட்ட காலம் போக டிவி பார்த்துக்கொண்டே சப்பாத்திமேக்கரில் சப்பாத்தி சுடும் காலமும் வந்தாச்சு.

இந்தமுறை நானும் ரங்க்ஸும் கோடாம்பாக்கம் சென்று இருந்த பொழுது வண்டியை மண்பாண்டங்கள் விற்கும் பகுதிக்கு செலுத்தினார்.

“என்ன இந்த பக்கம்”

நான் அப்பாவியாக கேட்டேன்.பதிலே சொல்லாமல் அரை புன்னகை வெளிபடுத்தினார்.அப்பொழுது நான் கொஞ்சமும் நினைக்கவில்லை.அந்த அரைப்புன்னகையிலேயே எனக்கு ஆரம்பித்து விட்டது ஏழரை என்று

கேட்கின்ற கேள்வியை காதிலேயே போட்டுக்கொள்ளாமல் குழம்பு வைக்க ,தண்ணீர் வைக்க,சப்பாத்தி சுட என்று விதத்திற்கு ஒன்றாக சட்டிகளை வாங்கி அடுக்கி விட்டு அழகான கலர்கலரான பூசணிக்காய் உண்டியல் ஒன்றினையும் வாங்கித்தந்து "இது உனக்கே உனக்கு "என்று சிரித்த பொழுது எனக்கு ஒன்றுமே புரியாமல் தலை கிர்ரடித்தது.

பிறகு என்னவாம்.அஸிடிடி பிராப்ளம்,கேஸ் பிராப்ளம் கைகால் வலி இதெல்லாம் இருக்காமல் இருக்க வேண்டும் என்றால் மண்பானையில்தான் சமைத்து சாப்பிட வேண்டுமாம்.

வயது நாற்பதை தாண்டி விட்டால் மண்பானையில் சமைத்து சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்று அவரது நண்பர் அவரிடம் அடித்த லெக்சரை என்னிடம் அடிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு கொட்டாவி வருவதற்கு பதிலாக மயக்கம்தான் வந்தது.

ஆரம்பம்ம்ம்ம்..எங்கள் வீட்டில் மீண்டும் மண்சட்டியில் சமைக்கும் புரட்சி ஆரம்பம்.

என் பெரியவர்”மா..மண் சட்டி சமையல் நல்ல டேஸ்டாக உள்ளது.இனி இதே கண்டின்யு பண்ணுங்க”என்று வாய்மொழி உத்தரவு போட்டு விட்டார்.

இந்த லட்சணத்தில் வீட்டில் வேலை பார்க்கும் பெண்”அக்கா..சட்டி எல்லாம் மண் சட்டியாக இருக்கு.அடுத்த மாதத்தில் இருந்து சம்பளத்தை கூட்டிப்போட்டு கொடு”ஆர்டரே போட்டு விட்டாள்

மண்சட்டி வாங்கும் பொழுதே என் முகம் போன போக்கை பார்த்து “என் மீது இருக்கும் உன் கோபத்தை இது மீது காட்டி உடைத்து விடக்கூடாது.மண்சட்டியை உடைத்த பாவம் உன்னை வந்து சேரக்கூடாது” என்று வாக்குறுதி வேறு வாங்கி விட்டபடியால் என்னால் தூக்கிபோட்டுக்கூட உடைக்க முடியாமல் திகைத்து நிற்கிறேன்.

யாருக்காவது வேண்டுமா ம...........ண் சட்டி...?76 comments:

ஜெய்லானி said...

ஹை...இருங்க படிச்சிட்டு வரேன் :-)))

பால கணேஷ் said...

மண்சட்டியில் சமைத்ததால் ஒரு தனி ருசி கிடைப்பதென்னவோ உண்மைதான் தங்கச்சி. அதைவிடவும் மண்பானைத் தண்ணீர் மிகச் சிறந்தது. ஏழைகளின் ஃப்ரிட்ஜ் ஆயிற்றே... ஆனாலும் இன்றைய நிலையில் மண்சட்டியில் சமைப்பதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்து கொண்டு சிஸ்டருக்கு பொன் சட்டி வாங்கித் தருமாறு மச்சானிடம் சிபாரிசு செய்கிறேன். சரியாம்மா... (எந்த கஸ்டத்தையும் சிரிச்சு சமாளிப்பவங்கல்ல நாம...)

ஜெய்லானி said...

மண் சட்டி + விறகு , இதில் செய்து சாப்பிட்ட ருசியும் எத்தனை வருஷம் போனாலும் மறக்க முடியல :-( .

நிறைய பழைய நினைவுகளை கிளப்பி விட்டது இந்த பதிவு :-).

கீரை ஐட்டம் + மீன் குழம்பு இப்பவும் மண் சட்டியில் செய்தால்தான் பிடிக்கும் .ஆசைக்கு ஒன்னு வீட்டில இன்னும் இருக்கு , ஆனா கேஸ்தான் தாக்கு பிடிக்க மாட்டேங்குது வந்த புதிதில் 32 ரூபாய் ஆனால் இப்போ ..??? :-)

ஸாதிகா said...

என்ன ஜெய்லானி,மண்சட்டியை பார்த்து விட்டு பயந்து போய் ஓடி விட்டீர்களோ?:)

பால கணேஷ் said...

உங்க பெரியவர் ‘மண் சட்டியில சமைச்சா டேஸ்ட்டா இருக்கு. கன்டின்யூ பண்ணும்மா’ன்னாரா... சரிசரி... ஸாதிகாவே பண்றதைச் சொல்லி சரிதாக்கும் மண்சட்டி வாங்கித் தந்துரலாமான்னு தோணுது. எப்பூடி ஐடியா..?

ஸாதிகா said...

இந்த முறை ஜெய்லானிக்கு வடை வேண்டாம்.மண் சட்டியை பரங்கிப்பேட்டைக்கு பார்சல் அனுப்பிடவா?

ஸாதிகா said...

இன்றைய நிலையில் மண்சட்டியில் சமைப்பதில் உள்ள கஷ்டத்தைப் புரிந்து கொண்டு சிஸ்டருக்கு பொன் சட்டி வாங்கித் தருமாறு மச்சானிடம் சிபாரிசு செய்கிறேன். சரியாம்மா...//ஹா ஹா ஹா..நீங்கள் வெறு..ஏற்கனவே பூசணிக்காய் உண்டியல் வேறு எனக்கே எனக்காய் வாங்கித்தந்து மைரோவேவ் புருஃப் பாத்திரங்களுக்கும்,நான்ஸ்டிக்பாத்திரங்களுக்கும் செலவு செய்யும் காசை இதில் போட்டு வை என்று சொல்லி இருக்கார்.

ரொம்ப நன்றியண்ணா!

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இந்தமுறை நானும் ரங்க்ஸும் கோடாம்பாக்கம் சென்று இருந்த பொழுது வண்டியை மண்பாண்டங்கள் விற்கும் பகுதிக்கு செலுத்தினார்.

“என்ன இந்த பக்கம்”

நான் அப்பாவியாக கேட்டேன்.பதிலே சொல்லாமல் அரை புன்னகை வெளிபடுத்தினார்.

அப்பொழுது நான் நினைக்கவில்லை.எனக்கு ஆரம்பித்து விட்டது ஏழரை என்று.//

நல்ல நகைச்சுவை, மண்சட்டியில் செய்தது போலவே மிகச்சுவையாக உள்ளது ! ;)

ஜெய்லானி said...

//என்ன ஜெய்லானி,மண்சட்டியை பார்த்து விட்டு பயந்து போய் ஓடி விட்டீர்களோ?:) //

படிச்சிட்டு மெய் மறந்து தூங்கிட்டேன் ஹி..ஹி... :-)))

//இந்த முறை ஜெய்லானிக்கு வடை வேண்டாம்.மண் சட்டியை பரங்கிப்பேட்டைக்கு பார்சல் அனுப்பிடவா? //

ஹய்ய்ய்ய்ய்ய்....அதுக்கு பதிலா ..சும்மா வச்சிருக்கிர ஓவன் , டீஃப் ஃபிரையர் , மத்த ஐட்டங்களை அனுப்பிடுங்க ... சீக்கிரமே ரீ சைக்கிள் ஃபேக்டரி திறந்திடுரேன் :-))))

Jaleela Kamal said...

mm inrum vadai poossee

Jaleela Kamal said...

ஹா ரங்க்ஸ் வாங்கி கொடுத்தாரேன்னு ஆசையா சமைக்க ஆரம்பிச்சீங்க மகனுக்கு பிடிச்சி போச்சு ஆனா வேலைகாரம்மாவுக்கு யோகம் அடிச்சிடுச்சி போல

ஹுஸைனம்மா said...

அக்கா, உங்களுக்கு ஒரு விஷய்ம் தெரியுமா? மைக்ரோவேவிலும் மண்சட்டி பயன்படுத்தலாம்!! அதனால் கவலைப் படாதேயுங்கோ..

அப்புறம், கேஸ் அடுப்புலயும் நான் மண்சட்டிதான் (மீனுக்கு மட்டும்) யூஸ் பண்றேன். நீங்க எல்லா சமையலுக்கும் அதானா? எப்படி புது மண் பாத்திரங்களைப் பழக்கி எடுத்தீங்க? இதுக்கெல்லாம் தனி பதிவு போடும்படி கேட்டுக் கொள்கிறேன்க்கா.

நான் -ஸ்டிக் நல்லதில்லை என்று பயன்படுத்துவதேயில்லை.

தண்ணியும், எங்க வீட்டில மண்பானைத் தண்ணீர்தான் - கோடையில்!! அந்த டேஸ்டுக்காகவே தண்ணீ குடிச்சிட்டே இருக்கலாம். பானை அடிக்கடி காலியாகிடுதுன்னு, ரெண்டு பானை வாங்கி வச்சிருக்கேனாக்கும்!!

ராமலக்ஷ்மி said...

நல்லா சொல்லியிருக்கீங்க ஸாதிகா. இப்பவும் கோடை காலத்தில் மண்பானைத் தண்ணீரை நினைத்து மனம் ஏங்குவதுண்டு.

மண்சட்டிகளில் சமைப்பது ஆரோக்கியம் என்பது மட்டுமின்றி அதில் சமைப்பதால் சுவை கூடுமென்பதையும், தாங்கள் மண்பாண்டங்களையே அக்கறையுடன் பயன்படுத்துவதை வாடிக்கையாளரும் பார்க்கட்டுமென்றும் கண்ணாடித் தடுப்புக்கு அந்தப்பக்கம் கிச்சன் தெரிகிற மாதிரி வைத்திருக்கிறார்கள் சில பெரிய ஹோட்டல்களில்.

Angel said...

எனக்கு கண்டிப்பா மண் சட்டி வேணும் .
நான் பத்திரமா ரெண்டு சட்டி கொண்டு வந்தேன். தானா தெருவில் பேரம் பேசாம வாங்கியது .நாலு வருஷமா வச்சிருக்கேன் கீரை கடைசல் /மோர்க்குழம்பு .வத்தக்குழம்பு /பருப்பு /அதில செஞ்சாதான் டேஸ்ட் .என் பொண்ணும் என்னதான் இங்கே வித விதமா டோய்ஸ் இருந்தாலும் ஊரிலிருந்து நிறைய சொப்பு எடுத்து வந்தா பாதி உடைஞ்சாலும் மீதிய பத்திரமா வச்சிருக்கா .
மண்சட்டி நினைவுகள் அற்புதம் சாதிகா

என்னை பொறுத்தவரையில் மண் சட்டி பொன் சட்டி .

Angel said...

ஆங் இந்த எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்ல அஞ்சு நிமிஷத்தில் வட்டிலாப்பம் செய்றாங்க .தோழி ஒருவர் அப்படியே வட்டிலாப்ப கலவையை அரிசி போடறமாதிரி போட்டு செய்தாங்க .பரவாயில்ல ,நல்லாத்தான் வந்தது

ஜெய்லானி said...

//அப்படியே வட்டிலாப்ப கலவையை அரிசி போடறமாதிரி போட்டு செய்தாங்க .பரவாயில்ல ,நல்லாத்தான் வந்தது //

வட்டிலாப்பம் இடியாப்ப சிக்கலா வந்திருக்குமே ஐயோ பாவம் ஹி...ஹி... :-)))

பால கணேஷ் said...

இப்பத்தான் வீட்டுக்கு வந்து சரிதாட்ட மண்சட்டி ஐடியாவைச் சொன்னேன். ‘‘உங்க ஹாஸ்பிடல் பில்லை ஸாதிகா ஹஸ்பெண்ட் குடுப்பாரான்னு போன் போட்டுக் கேட்ருங்க’’ன்னா. ஐ எஸ்கேப். அவ்வ்வ்வ்வ்!

சிநேகிதன் அக்பர் said...

மண் சட்டியில் மீன் குழம்பு சாப்பிட்டவர்கள் கொடுத்துவைத்தவர்கள்.

அதை மறுநாள் சுண்டவச்சு சாப்பிட்டவர்கள் அதை விட கொடுத்துவைத்தவர்கள்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா.. இன்னக்கி ஸாதிக்காக்கா வீட்டுல மண்பாண்டம் சமையலா.. அப்பவந்து ஒருபிடி பிடிச்சிர வேண்டியது தான். போனதடவை நீங்க டெய்லர் கிச்சாவிடம் தைத்து தந்த செஞ்சுரி காட்டன் சர்ட் ரொம்ப நன்னாருக்கு நன்னாருக்கு.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அக்பருக்கும் சர்ட் உண்டா?.. அதுக்குபதிலா மண்சட்டி சோறு ஆக்கி தந்துடுங்க..

மண்பானை சமையல் சின்னவயசுல சாப்பிட்டது. நன்னி வீட்டுல வச்சி தருவாங்க.. இப்பல்லாம் மலையேறி போச்சி.. இப்ப எங்க வீட்டுல மண்ணென்ண‌ய் அடுப்பு சமையல்தான். எனக்கு கல்யாணம் ஆனபின் கேஸ் கனெக்சன் வாங்கிரலாமுன்னு பார்த்தா அதிகாரிகளின் புண்ணியத்தால 3 வருசமா புது ரேசன்கார்டு வாங்கமுடியல..

நல்ல பகிர்வு ஸாதிகாக்கா.

Menaga Sathia said...

மண்சட்டியில் சமைப்பது எவ்வளவு சுகம் தெரியுமாக்கா,இந்த முறை நான்கூட சமைப்பதற்க்கு இந்தியாவிலிருந்து சில மண்சாட்டி பாத்திரங்களை வாங்கி வந்து சமைக்கிறேன்...மீன் குழம்பை சுன்ட வச்சு சாப்பிடும் சுகமே சுகம் தான்...

Angel said...

//வட்டிலாப்பம் இடியாப்ப சிக்கலா வந்திருக்குமே ஐயோ பாவம் ஹி...ஹி... :-)))//


சாப்பிட்டவங்களைதான் கேக்கணும் ..நான்தான் முட்டை சேர்த்த எதுவுமே டேஸ்ட் கூட செய்ய மாட்டேனே .ஹா ஹா .இனிமே வட்டிலாப்பமே கேக்க மாட்டார்னு நினைக்கிறேன் ...பாவம்தான்

Angel said...

சாதிகா மண் சட்டி எல்லாம் கவனம் ...பூஸ் எதாவது வந்து உருட்டி உடைச்சிரப்போகுது ,

Kanchana Radhakrishnan said...

நல்ல நகைச்சுவை.

ஆமினா said...

//.பெயர் தான் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்.ஆனால் ஆல் இன் ஆல் அடுக்களை ராணியாக அவதாரம் எடுத்து விட்டது.//

ஒரு கொதி வரதுக்குள்ள நா நொந்து நூடுல்ஸாகிடுவேன். அதனால் எரிச்சல் பட்டுக்கிட்டு கேஸில் வடிச்ச சாதம் தான் :-)

ஆனாலும் மண்பாத்திரத்தில் சமைக்கவேண்டும் என ரொம்பவே ஆச. பேச்ச எடுத்தாலே "ஏன் போட்டு ஒடைக்கிறதுக்கா?" என அம்மா கடிக்க வந்துடுவார் ஹி...ஹி...ஹி.. நம்ம சேதி அப்படி அவ்வ்வ்வ்..


//அவரது நண்பர் அவரிடம் அடித்த லெக்சரை என்னிடம் அடிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு கொட்டாவி வருவதற்கு பதிலாக மயக்கம்தான் வந்த//

ஹா....ஹா...ஹா...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது!

//யாருக்காவது வேண்டுமா ம...........ண் சட்டி...?//

ராம்நாட்க்கு வரச்ச எடுத்துட்டு வாங்க :-)

ஆமினா said...

//.பெயர் தான் எலக்ட்ரிக் ரைஸ் குக்கர்.ஆனால் ஆல் இன் ஆல் அடுக்களை ராணியாக அவதாரம் எடுத்து விட்டது.//

ஒரு கொதி வரதுக்குள்ள நா நொந்து நூடுல்ஸாகிடுவேன். அதனால் எரிச்சல் பட்டுக்கிட்டு கேஸில் வடிச்ச சாதம் தான் :-)

ஆனாலும் மண்பாத்திரத்தில் சமைக்கவேண்டும் என ரொம்பவே ஆச. பேச்ச எடுத்தாலே "ஏன் போட்டு ஒடைக்கிறதுக்கா?" என அம்மா கடிக்க வந்துடுவார் ஹி...ஹி...ஹி.. நம்ம சேதி அப்படி அவ்வ்வ்வ்..


//அவரது நண்பர் அவரிடம் அடித்த லெக்சரை என்னிடம் அடிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு கொட்டாவி வருவதற்கு பதிலாக மயக்கம்தான் வந்த//

ஹா....ஹா...ஹா...

இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு ஆகாது!

//யாருக்காவது வேண்டுமா ம...........ண் சட்டி...?//

ராம்நாட்க்கு வரச்ச எடுத்துட்டு வாங்க :-)

எம் அப்துல் காதர் said...

மண்சட்டியின் மகிமையை (எங்களைப் போன்ற:-)) இளைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா!!

ஸாதிகா said...

ஸாதிகாவே பண்றதைச் சொல்லி சரிதாக்கும் மண்சட்டி வாங்கித் தந்துரலாமான்னு தோணுது. எப்பூடி ஐடியா..//யான் பெற்ற துன்பம் சரிதா மன்னியும் பெறவா?கணேஷ் அண்ணே வை திஸ் கொலவெறி..?

ஸாதிகா said...

நல்ல நகைச்சுவை, மண்சட்டியில் செய்தது போலவே மிகச்சுவையாக உள்ளது ! ;)//

இடுகையை வாசித்து நகைத்து பின்னூட்டம் இட்ட் வி கே ஜி சாருக்கு நன்றி!

ஸாதிகா said...

ஹய்ய்ய்ய்ய்ய்....அதுக்கு பதிலா ..சும்மா வச்சிருக்கிர ஓவன் , டீஃப் ஃபிரையர் , மத்த ஐட்டங்களை அனுப்பிடுங்க ... சீக்கிரமே ரீ சைக்கிள் ஃபேக்டரி திறந்திடுரேன் :-))))//

அடேஏஏஏஏஏஏஏங்கப்பா..இதுவல்ல சாமர்த்தியம்.இன்று முதல் ஜெய்லானிக்கு சாமர்த்திய தலைவர் .கில்லாடி திலகம் என்று பட்டங்கள் சூட்டப்படுகின்றார் டொட்டடய்ங்...

ஸாதிகா said...

வேலைகாரம்மாவுக்கு யோகம் அடிச்சிடுச்சி போல//அப்ப எனக்கு ?சொல்லுங்க ஜலி...

ஸாதிகா said...

தண்ணியும், எங்க வீட்டில மண்பானைத் தண்ணீர்தான் - கோடையில்!! அந்த டேஸ்டுக்காகவே தண்ணீ குடிச்சிட்டே இருக்கலாம். பானை அடிக்கடி காலியாகிடுதுன்னு, ரெண்டு பானை வாங்கி வச்சிருக்கேனாக்கும்!!//இதை எல்லாம் பார்த்தால் மனசை மாத்திக்கணும் போலும் ஹுசைனம்மா.தனிப்பதிவென்ன?போனிலேயே சொல்லிடுறேன்.மண்பாத்திரங்களை எப்படி பழக்கினேன் என்று.

ஸாதிகா said...

இப்பவும் கோடை காலத்தில் மண்பானைத் தண்ணீரை நினைத்து மனம் ஏங்குவதுண்டு.//மண்பானை தண்ணீர் என்று நீங்கள் எல்லாம் சொன்னதும் மறுபடி கொசுவத்தி சுற்றுது.அந்தக்காலத்தில் எங்கள் வீட்டு மண்பானை தண்ணீரின் கமகம வாசனையும்,ஜில்லென்ற கிடைக்கும் புத்துணர்வும் கண்முன்னர் உலா வருகிறது.நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

நாலு வருஷமா வச்சிருக்கேன் கீரை கடைசல் /மோர்க்குழம்பு .வத்தக்குழம்பு /பருப்பு /அதில செஞ்சாதான் டேஸ்ட் //ஏஞ்சலின் முற்றத்து மல்லிகை மணக்காது என்பார்களே அது சரிதான் போலும்.நன்றி ஏஞ்சலின் கருத்துக்கும்

ஸாதிகா said...

‘உங்க ஹாஸ்பிடல் பில்லை ஸாதிகா ஹஸ்பெண்ட் குடுப்பாரான்னு போன் போட்டுக் கேட்ருங்க’’ன்னா. ஐ எஸ்கேப். அவ்வ்வ்வ்வ்!////ஹா..ஹா...ஹா...கணேஷ் அண்ணே பெண்பாவம் சும்மா விடாது அது அந்தக்காலம்.பெண்ணே சும்மா விடமாட்டாள் இது இந்தக்காலம்.புரிஞ்சுதா?சரிதா மன்னி பலே உஷார்தான்.வாழ்க!

Starjan (ஸ்டார்ஜன்) said...

இப்பவும் எங்க வீட்டுல பருப்பு கடைவதற்கும் சில வேலைகளுக்கும் மண்சட்டி யூஸ் பண்றாங்களாம்.... அம்மா சொன்னாங்க..

ஸாதிகா said...

அதை மறுநாள் சுண்டவச்சு சாப்பிட்டவர்கள் அதை விட கொடுத்துவைத்தவர்கள்.//

அட .இப்படியும் இருக்கோ.டிரை பண்ணிப்பார்த்து விடுகின்றேன் அக்பர்.கருத்துநன்றி!

ஸாதிகா said...

போனதடவை நீங்க டெய்லர் கிச்சாவிடம் தைத்து தந்த செஞ்சுரி காட்டன் சர்ட் ரொம்ப நன்னாருக்கு நன்னாருக்கு.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...///

எதற்கு ஷேக் கிர்ர்ர்ர்ரடிக்கின்றீர்கள்.?

சீக்கிரம் புது ரேஷன் கிடைத்து கேஸ் கனெக்‌ஷன் கிடைக்கட்டுமாக!

ஸாதிகா said...

மீன் குழம்பை சுன்ட வச்சு சாப்பிடும் சுகமே சுகம் தான்...//என்னப்பா மேனகா இப்படி ஆளாளுக்கு நாக்கிலே நீர் ஊற வைக்கின்றீர்கள்.:)

ஸாதிகா said...

சாதிகா மண் சட்டி எல்லாம் கவனம் ...பூஸ் எதாவது வந்து உருட்டி உடைச்சிரப்போகுது //இது ஸாதிகா அக்கவுடைய மண்சட்டியாக்கும்.பூஸுக்கு எப்பவும் ஒரு பயம் இருக்கும்.பூஸைத்தான் இன்னும் காணவில்லை ஏஞ்சலின்.

ஸாதிகா said...

ஒரு கொதி வரதுக்குள்ள நா நொந்து நூடுல்ஸாகிடுவேன். அதனால் எரிச்சல் பட்டுக்கிட்டு கேஸில் வடிச்ச சாதம் தான் :-)//
அட என்ன ஆமினா இப்படி சொல்லிட்டீங்க.அரிசியை களைந்து போட்டுவிட்டு கம்பியூட்டர் முன்னே உட்கார்ந்து நாலு பின்னூட்டத்தை போடுவதற்குள் பொல பொல வென்று சாதம் ரெடியாகிடுமே!

ராம்நாட்க்கு வரச்ச எடுத்துட்டு வாங்க :-)//
பரமக்குடி ஸ்டெஷனில் வெயிட் பண்ணுங்க.அப்படியே கொடுத்துட்டு போறேன்.

நன்றி ஆமினா.

ஸாதிகா said...

மண்சட்டியின் மகிமையை (எங்களைப் போன்ற:-)) இளைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா!!//

அட தம்பி அப்துல்காதர் உங்களுக்கு மண் சட்டின்னா தெரியவே தெரியாதா?
வாழ்க இளைய தலைமுறை.

ஸாதிகா said...

இப்பவும் எங்க வீட்டுல பருப்பு கடைவதற்கும் சில வேலைகளுக்கும் மண்சட்டி யூஸ் பண்றாங்களாம்.... அம்மா சொன்னாங்க..//இங்கே எல்லோரும் மீன் குழம்பு வைத்தால் நன்றாக இருக்கும் என்கின்றார்கள்.ஸ்டார்ஜன் அம்மா பருப்பு கடைவதற்கா?எதாவது அலுப்பில் கொஞ்சம் வேகமாக கடைந்தால் சட்டி உடைந்து விடாது?

ஹுஸைனம்மா said...

//எதாவது அலுப்பில் கொஞ்சம் வேகமாக கடைந்தால் சட்டி உடைந்து விடாது?//
அக்காவ், அதெல்லாம் கவனமாத்தான் புழங்குவாங்க. ஊர்ல இன்னும் பல வீட்டிலயும் பருப்பு மண்சட்டியிலதான் மரத்துல செஞ்ச மத்துவச்சு கடைவாங்க.

அந்த சட்டியின் அடியில், பொடிப்பொடிக் கற்களைப் பதிச்சு வச்சிருப்பாங்க. சீக்கிரம் பருப்பு மசிவதற்காக!!

ஹுஸைனம்மா said...

//அட தம்பி அப்துல்காதர் உங்களுக்கு மண் சட்டின்னா தெரியவே தெரியாதா//

எக்காவ், அவர் சொல்றாருன்னு நீங்களும் நம்ம்ம்ம்பி, “தம்பி”ன்னு கூப்பிட்டுகிட்டு.... அவரெல்லாம் உங்க ஜெனரேஷன் ஆளுதான்!! :-)))))))

Starjan (ஸ்டார்ஜன்) said...

மீன் குழம்பும் செய்வாங்க.. மண்சட்டியில் பருப்பு (இதர சீரகம் வெங்காயம் மிளகாய் பூண்டு இதெல்லாம் இட்டு) அவித்தபின் அடுப்பிலிருந்து இறக்கி மண்சட்டியின் அடியில் வட்டு (குறத்திகள் கொண்டு வரும் நாரினால் செய்யப்பட்ட வட்டு) வைத்து பருப்பு மத்தை கொண்டு கடைவாங்க.. அதன்பின்னர் தாளிப்பாங்க.. சுவை ரொம்ப நல்லாருக்கும்.

ஸாதிகா said...

ஊர்ல இன்னும் பல வீட்டிலயும் பருப்பு மண்சட்டியிலதான் மரத்துல செஞ்ச மத்துவச்சு கடைவாங்க.//இது ஒகே.

அந்த சட்டியின் அடியில், பொடிப்பொடிக் கற்களைப் பதிச்சு வச்சிருப்பாங்க. சீக்கிரம் பருப்பு மசிவதற்காக!!///என்னப்பா இது புதுசு புதுசா சொல்லுகின்றீர்கள் ஹுசைனம்மா.

பருப்பை குக்கரில் வேக வைத்து குழிக்கரண்டியால இரண்டு சுழற்று சுழற்றினால் தங்ஸ் மிரட்டலில் அப்படியே மசிந்து போகும் ரங்க்ஸ் மாதிரி பருப்பு மசிந்து விடாதா என்ன?

Starjan (ஸ்டார்ஜன்) said...
This comment has been removed by the author.
ஹுஸைனம்மா said...

//பருப்பை குக்கரில் வேக வைத்து//

கிராமத்துல குக்கர்லாம் பணக்காரங்க வீட்டில மட்டும்தான். அதுவும், (எங்கம்மா மாதிரி) நிறைய பேருக்கு குக்கர்ல செய்றது பிடிக்காதுங்கிறதால், சாதாரணச் சட்டியிலத்தான் வேக வைப்பாங்க.

//தங்ஸ் மிரட்டலில் அப்படியே மசிந்து போகும் ரங்க்ஸ் மாதிரி//
ஹா.... ஹா.... அனுபவம் பேசுது!!

ஸாதிகா said...

எக்காவ், அவர் சொல்றாருன்னு நீங்களும் நம்ம்ம்ம்பி, “தம்பி”ன்னு கூப்பிட்டுகிட்டு.... அவரெல்லாம் உங்க ஜெனரேஷன் ஆளுதான்!! :-)))))))///
அட இது தெரியாமல் போச்சே...!பதிவுலகில் அண்ணன்கள் குறிவுதான்.இன்று முதல் அப்துல்காதர் அண்ணனாகி விட்டார் ஹுசைனம்மா புண்ணியத்தில்..

அது சரி உங்க ஜெனரேஷன் என்று சொல்லி உங்களை செம யூத்தா காட்டிக்கொள்வதில் அப்படி என்னதான் திருப்தியோ.:)

ஸாதிகா said...

//தங்ஸ் மிரட்டலில் அப்படியே மசிந்து போகும் ரங்க்ஸ் மாதிரி//
ஹா.... ஹா.... அனுபவம் பேசுது!!//யம்மாடி ஹுசைனம்மா உண்மையை சொல்லப்போனால் நான் உங்களை நினைத்துக்கொண்டுதான் அந்த வரிகளையே எழுதினேன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்...

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் அதெப்பூடி தலைப்பு வந்ததே என் கண்ணில படவில்லை, இப்போ எதேச்சையாகப் பட்டபோது 50 ஐத் தாண்டிட்டுதே... பயந்திடாதீங்க ஸாதிகா அக்கா.. நான் பின்னூட்டத்தைத்தான் சொன்னேனாக்கும் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

முற்றும் அறிந்த அதிரா said...

அதெப்பூடி... பச்சைப்பூவுக்கு கரெக்ட்டா... வடை பாயாசம் கிடைச்சிருக்கு இம்முறை... இது நாட்டுக்கு நல்லதில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)))).

முற்றும் அறிந்த அதிரா said...

//வயது நாற்பதை தாண்டி விட்டால் மண்பானையில் சமைத்து சாப்பிடுவதே சாலச்சிறந்தது என்று அவரது நண்பர் அவரிடம் அடித்த லெக்சரை என்னிடம் அடிக்க ஆரம்பித்த பொழுது எனக்கு கொட்டாவி வருவதற்கு பதிலாக மயக்கம்தான் வந்தது.
//

என்னது ஸாதிகா அக்கா, 40 வயதைத் தாண்டிவிட்டாவோ அவ்வ்வ்வ்வ்.. சொல்லவேயில்லை:))..

முற்றும் அறிந்த அதிரா said...

// angelin said...
சாதிகா மண் சட்டி எல்லாம் கவனம் ...பூஸ் எதாவது வந்து உருட்டி உடைச்சிரப்போகுது//

ஹா..ஹா..ஹா... அதனாலதான் வச்சிருக்கப் பயந்துபோய், ஆருக்காவது மண்சட்டி வேணுமோ எனச் சவுண்டு விடுவது இங்கின பிரித்தானியா வரை கேட்குதே...

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.. உங்கட ஆத்துக்காரரின் மெயில் ஐடியைக் கொஞ்சம் அனுப்பிவிட முடியுமோ? ஏனெனில் அவருக்கு இன்னும் கொஞ்சம் நல்ல விஷயங்கள் சொல்லிக்கொடுக்கோணும்....

1. கட்டில்ல படுக்கப்படாது, அடுத்தமுறை வந்து திரும்பும்போது ஓலைப்பாய்தான் வாங்கித் தரச்சொல்லோணும்..

2. இனிப் பருத்தி ஆடைகள் மட்டுமே...

3. சிக்கின் எல்லாம் ஆகாது.. ஓகானிக் வெஜிடபிள் மட்டும்தான் சாப்பிடச் சொல்லோணும்..

விடமாட்டனில்ல... எங்கிட்டயேவா... இனி ஸாதிகா அக்கா பூஸைப்பார்த்துப் பயப்புடுவா இல்ல?:)).

ஸாதிகா said...

பச்சைப்பூவுக்கு கரெக்ட்டா... வடை பாயாசம் கிடைச்சிருக்கு இம்முறை... இது நாட்டுக்கு நல்லதில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))//
பூஸ் பச்சைப்பூவிற்கு இந்த முறை வடை பாயசம் வேண்டாம் மண்சட்டிகளை பார்சல் பண்ணிடலாம்.

முற்றும் அறிந்த அதிரா said...

/// எம் அப்துல் காதர் said...
மண்சட்டியின் மகிமையை (எங்களைப் போன்ற:-)) இளைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தியமைக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா!//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) என்னாது இளைய தலைமுறையோ.. ஆராவது எனக்கு சுட்டாறின தண்ணி தெளியுங்கோ... ஃபுரோசின் மாவில தொசை சுட்டுச் சாப்பிட்டுவிட்டார்போல, அதுதான் இப்பூடி எல்லாம் பேசவைக்குது:)).. எங்கிட்டயேவா...?:)..ஸாதிகா அக்காவே பயந்திட்டா.. ம்ஹூம்:)))

ஸாதிகா said...

ஹா..ஹா..ஹா... அதனாலதான் வச்சிருக்கப் பயந்துபோய், ஆருக்காவது மண்சட்டி வேணுமோ எனச் சவுண்டு விடுவது இங்கின பிரித்தானியா வரை கேட்குதே...///
ஹா ஹா ஹா இப்படி அர்த்த ராத்திரியில் கம்பியூட்டர் முன்னால் உட்கார்ந்து கொண்டு கதற கதற சிரிக்க வைக்கின்றீர்களே பூஸ் இது நியாயமா?

முற்றும் அறிந்த அதிரா said...

//
ஸாதிகா said...
பச்சைப்பூவுக்கு கரெக்ட்டா... வடை பாயாசம் கிடைச்சிருக்கு இம்முறை... இது நாட்டுக்கு நல்லதில்லையே அவ்வ்வ்வ்வ்வ்வ்:))))//
பூஸ் பச்சைப்பூவிற்கு இந்த முறை வடை பாயசம் வேண்டாம் மண்சட்டிகளை பார்சல் பண்ணிடலாம்//

என்னாது பச்சைப்பூவும் 40 ஐத் தாண்டிட்டார் எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டிட்டீங்க ஸாதிகா அக்கா... அவ்வ்வ்வ்வ் கண்டுபிடிச்சிட்டனில்ல..

லேட்டா வந்தாலும் கிட்னி நல்ல கிளீனா வேர்க் பண்ணுது:))... அது ஜலீலாக்கா பக்கத்தில, மல்லி குடிச்சா கிட்னிக்கு நல்லதெனச் சொன்னதிலிருந்து.. பிரித்தானியாக் கடைகளில மல்லிக்குத் தட்டுப்பாட்டையே ஏற்படுத்திய பெருமை என்னையே சாரும்:)).

ஸாதிகா said...

1. கட்டில்ல படுக்கப்படாது, அடுத்தமுறை வந்து திரும்பும்போது ஓலைப்பாய்தான் வாங்கித் தரச்சொல்லோணும்..

2. இனிப் பருத்தி ஆடைகள் மட்டுமே...

3. சிக்கின் எல்லாம் ஆகாது.. ஓகானிக் வெஜிடபிள் மட்டும்தான் சாப்பிடச் சொல்லோணும்..

விடமாட்டனில்ல... எங்கிட்டயேவா... இனி ஸாதிகா அக்கா பூஸைப்பார்த்துப் பயப்புடுவா இல்ல?:)).//

யம்மாடி பூஸம்மா.பூனை மாதிரி சாதுவா இருந்து கொண்டு ஏன் இந்த கொலவெறி?

ஸாதிகா said...

என்னாது பச்சைப்பூவும் 40 ஐத் தாண்டிட்டார் எனச் சொல்லாமல் சொல்லிக் காட்டிட்டீங்க ஸாதிகா அக்கா... அவ்வ்வ்வ்வ் கண்டுபிடிச்சிட்டனில்ல..//

நான் ஐம்பது என்று அல்லவா நினைத்துக்கொண்டிருந்தேன் .

முற்றும் அறிந்த அதிரா said...

எனக்குத் தெரிந்து மண்ணில் செய்த, வர்ணம் போட்ட “கூசா” எனச் சொல்லுவோம்.. நீட்டுக்கழுத்தோடு அடியில் பானை மாதிரி இருக்கும், அதில சுட்ட தண்ணீரை நிரப்பி வைத்தால், ஒருவித சுகமான வாசத்தோட ஜில்..ஜில்.. எனக் குளிர்தண்ணி கிடைக்கும்.. அது எப்பவும் எங்கள் வீட்டில் இருந்தது....

ஸாதிகா said...

ஜில்..ஜில்.. எனக் குளிர்தண்ணி கிடைக்கும்//
அந்த ஜில் ஜில் தண்ணீர் ஒரு பார்சல் பிளீஸ்.

Asiya Omar said...

மண்சட்டி முதல் மைக்ரோவேவ் வரை சூப்பர் பகிர்வு.மண் சட்டியில் நானும் விரும்பி சமைப்பதுண்டு.என்னிடம் இருக்கும் ஒரு கருத்த மண் சட்டியை ஒரு பொக்கிஷமாகவே உபயோகித்து வருகிறேன்.நீங்களும் அதை பார்த்து இருக்கிறீர்கள்.மற்றபடி சாதாரண சட்டிகள் சைஸ் வாரியாக இருக்கு.உங்க நினைவாக எனக்கு ஒன்று வாங்கி வைங்க தோழி.எனக்கு மண்சட்டியில் மீன் குழம்பு தவிர கூட்டு,அவியல் வைக்க மிகவும் பிடிக்கும்.ஒரு முறை செய்து பாருங்கள்.சப்பாத்தி,தோசைக்கல்,அரிசி மாவு ரொட்டி சுடுகிற ஓடுன்னு ஒரு காலத்தில் மண் சட்டியுகமாக இருந்தது.இப்ப எல்லாம் கலந்து பழகியாவுது.

Yaathoramani.blogspot.com said...

ஒரு சுத்து உலகமெல்லாம் சுத்தி
மீண்டும் சொந்த ஊருக்கே வந்த மாதிரி இருக்கா
சொல்லிச் சென்ற விதம் மிக மிக அருமை
அதிலும் துவரம் பருப்பு எது பாசிப் பருப்பு எது எனத் தெரியாது
சமைக்க நுழைந்ததை சொல்லிப் போனதை
மிகவும் ரசித்தேன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

விச்சு said...

மண்சட்டி சமையல் டேஸ்டா இருக்கா? அய்யயோ!! கோவத்துல மண்சட்டிய தூக்கி போட்டுராதீங்க.

ஜெய்லானி said...

//ஹுஸைனம்மா said...

//அட தம்பி அப்துல்காதர் உங்களுக்கு மண் சட்டின்னா தெரியவே தெரியாதா//

எக்காவ், அவர் சொல்றாருன்னு நீங்களும் நம்ம்ம்ம்பி, “தம்பி”ன்னு கூப்பிட்டுகிட்டு.... அவரெல்லாம் உங்க ஜெனரேஷன் ஆளுதான்!! :-)))))))//

ரிப்பீட்ட்ட்ட்ட் , ஹுஸைனம்மாவுக்கு ரெண்டு கையாலும் ஒரு சல்யூட் ..ஹி...ஹி....:-)))) .

ஸாதிகா said...

ஒரு கருத்த மண் சட்டியை ஒரு பொக்கிஷமாகவே உபயோகித்து வருகிறேன்//

ம்ம்..பார்த்திருக்கிறேன் தோழி.சட்டி நிறைய உங்கள் வீடு குமார் சமைத்து வைத்து விட்டுப்போன வெலைமீனையும் சேர்த்து பார்த்திருக்கிறேன்:)

இப்படி ஆசைகு ஒரு சட்டி என்றால் ஒகே .எல்லாவற்றுக்கும் மண் சட்டி என்றால்..?

ஸாதிகா said...

ஒரு சுத்து உலகமெல்லாம் சுத்தி
மீண்டும் சொந்த ஊருக்கே வந்த மாதிரி இருக்கா//

அதே ரமணி சார்.சுற்றி வளைத்து மீண்டும் பழைய இடத்திற்கே வந்து சேர்ந்த மாதிரித்தான்.கருத்துக்கு மிக்க நன்றி சார்.

ஸாதிகா said...

விச்சு said...
மண்சட்டி சமையல் டேஸ்டா இருக்கா? அய்யயோ!! கோவத்துல மண்சட்டிய தூக்கி போட்டுராதீங்க.//கருத்துக்கு மிக்க நன்றி!வலைச்சர அறிமுகத்திற்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

ரிப்பீட்ட்ட்ட்ட் , ஹுஸைனம்மாவுக்கு ரெண்டு கையாலும் ஒரு சல்யூட் ..ஹி...ஹி....:-)))) .//ஹுசைனம்மா முன்னாடி ஜெய்லானி ரெண்டு கைகளாலும் சல்யூட் அடிப்பதை இமேஜின் பண்ணி பார்க்கிறேன்..ஹா ஹா ஹா..:)

Asiya Omar said...

உங்களுக்கு அன்புடன் இரண்டு விருதுகள் வழங்கியுள்ளேன்.பெற்று கொள்ளவும்.
http://asiyaomar.blogspot.com/2012/02/blog-post_16.html

Unknown said...

கண்டிப்பாக எனது வாக்குகளும் மண்சட்டிக்கே.

Unknown said...

தங்களுக்காக ஒரு விருது எனது வலைப்பூவில் http://vaarthaichithirangal.blogspot.in/2012/02/blog-post.html

கோமதி அரசு said...

மீண்டும் மண்பானை !
நான் முன்பு மண்பானையில் தயிர் உறை ஊத்தி வைப்பேன் அருமையான ருசியுடன் இருக்கும்.

காய்கறிகள் அதில் வைத்து இருப்பேன்
புத்தம் புதிதாக இருக்கும், கோடையில் மண் பானை நீர் மிகவும் நன்றாக இருக்கும்.

அந்த நாள் மூண்டும் வருகிறது மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.

இலங்கையில் மண்சட்டி தயிர் மிகவும் பிரபலம்.

உங்கள் பதிவு அருமை.

Vijiskitchencreations said...

எனக்கு முன் நிறஎய்ய பேர் வந்து நல்லா சொல்லிட்டாம்க, இருந்தாலும் நான் உங்க வீட்டு ஐய்யாவுக்கு தான் சப்போர்ட். அடுத்த தடவை வரும் போது வெறும் இலை, தழை தான் சாப்பிடனும், அருகம்புல் ஜூஸ். வாழை இலை சாப்பாடு,இந்த கோவில்களில் எல்லாம் தொன்னையில் ப்ரசாதம் குடும்ப்பாங்க. அடுத்த தடவை வாழை இலை, தொன்னையில் சைட் டிஷ் என்று லிஸ்ட் குடுப்பார். எதுக்கும் நிங்க ஸ்மார்ட் ஆச்சே. வாங்கி வையுங்க.கண்டிப்பா இதில் ஏதாவது ஒன்று உங்களுக்கு சொல்வார். ஆல் தி பெஸ்ட்.