December 2, 2011

தலைமகன்

அப்பாவின் போனஸ் காசோலையாய் வந்தது
அம்மாவின் நகைகளோ கரன்சியாக மாறியது
வீட்டுப்பத்திரமோ வங்கியில் சரணம்
அம்மாவுக்கு தந்த சீதனக் காணி
சடுதியில் கைகள் மாறி
காந்தி தாத்தாபடம் போட்ட
சலவைத்தாளாய் ஆனது

இத்தனையும் போதாதென்று
அக்காவின் திருமணத்திற்கு
சேர்த்துவைத்த பொன்னகை சல்லிசாக
சென்றன சேட்டுக்கடை நோக்கியே
பாட்டி காதில் மினுமினுத்த வைரகம்மலும்
செவிமடலை விட்டு கழன்று போனது

வந்திருந்த தீபாவளி புத்தாடை காணவில்லை
வருடந்தோறும் செய்து வந்த பட்சணங்கள்
சுவைக்கவில்லை
பட்டாசு ஒன்றைக்கூட கையாலே
தொட்டதில்லை
அத்தனையும் விட்டுக்கொடுத்து
குடும்பத்தினர் தலைமகனை
மேல்நாடு அனுப்பிவைத்தர்

மேல்படிப்பு முடித்தமகன்
அத்தனையும் மீட்டிடுவான்
அமோகமாக வாழ்ந்திடுவான்
சென்ற செல்வம் திரும்பி வரும்
செல்லமகள் கரைசேர்வாள்
சோர்ந்த உள்ளம் மலர்ச்சி கொள்ளும்
எண்ணில்லா கனவுகளுடன்
நாளதனை எண்ணிக்கொண்டு
நல் வழியை எதிர்பார்த்து
ஆவலுடன் காத்திருந்தர்

வந்தன்றோ மின்னஞ்சல் ஒன்று
அதுகண்டு குடும்பத்தினர்
கணினி முன்னே தான் அமர்ந்து
மின் திரையை நோக்கினரே
பல்கலைகழகத்தில் உடன்படிக்கும்
கேத்தரீனை மணந்து கொண்டேன்
வாழ்வதற்கு சொந்தமாக
சின்னவீடு வாங்க வேண்டும்
சொகுசாக அங்கு வாழ
பொருளெல்லாம் சேர்க்கவேண்டும்
சுற்றித்திரிந்துவர
சொகுசுக்கார் வாங்க வேண்டும்
தேவை எனக்குங்கள் ஆசிர்வாதம்
மெல்லினமாய் கேட்டிருந்தான்
மேல் நாட்டு தலைமகன்

42 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

எதிர்பார்ப்போர்க்கு ஏமாற்றமளித்திடும் அருமையான கவிதை. பாராட்டுக்கள்.

இவர்களின் அடுத்தடுத்த பிரச்சனைகளையே கவனித்துக்கொண்டிருந்தால், தலைமகனின் தலையாய பிரச்சனைகளை அன்புடன் கவனிப்பது யார்?

அதனால் அவரே அவரின் தேவைகளை கவனித்துக்கொண்டுவிட்டார் என நினைக்கிறேன்.

அன்புடன் vgk


[I would like to share you something interesting for you. Please send your e-mail ID to my e-mail ID : valambal@gmail.com
that too if you are interested only. Otherwise not required. vgk]

Thenammai Lakshmanan said...

ஹ்ம்ம் இப்படியும் சில பிள்ளைகள்.. என்ன செய்வது ஸாதிகா..

Unknown said...

சில வீடுகளில் சில பிள்ளைகள் இப்படி தான் இருக்காங்க ... அருமையான வரிகள் அக்கா

rajamelaiyur said...

இதுதான் இன்றைய நிலை

Yaathoramani.blogspot.com said...

பல குடும்பங்களில் இப்படி அவர்களின் தியாகங்களையும்
ஆசைகளையும் நிராசையாக்கிவிட்டு செல்லுகிற பலரை
நானும் பார்த்து மனம் அதிகம் வருந்தியுள்ளேன்
தங்கள் பதிவு அந்த நிலையை மிக அழகாக
நேர்த்தியாக சொல்லிப் போகிறது
இதனை அருமையான .பதிவாக்கித் த்ந்தமைக்கு
வாழ்த்துக்கள்

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

கவிதை அருமை .சில குடும்பங்களில் இப்படியும் நடக்கின்றது.

பால கணேஷ் said...

குடும்பத்தின் தேவையையும், தன் பொறுப்பையும் உணராத இப்படியும் சில தலைமகன்கள் இருக்கத்தான் செய்கின்றனர். என் செய்வது? கவிதை நடையிலான இந்த உரைநடைத் தமிழ் மிகப் புதுசாய் இருந்ததும்மா... வெகு ஜோர்!

Angel said...

இந்நிலை சில குடும்பங்களில் நானும் பார்த்திருக்கிறேன் .அருமையான இக்கால நடப்பை சொல்லும் கவிதை .

MANO நாஞ்சில் மனோ said...

கண்ணில் கண்ணீர் முட்டுகிறது....!!!! வேற என்னத்தை சொல்ல, நன்றிகெட்ட மனிதா நீ மனிதனா...?

ராமலக்ஷ்மி said...

பல இடங்களிலும் நடக்கிற ஒன்று. நயம்படச் சொல்லியுள்ளீர்கள் ஸாதிகா.

Asiya Omar said...

ஒரு வீட்டின் தலைமகன் கஷ்டப்பட்டு உடன்பிறப்புக்களையும் குடும்பத்தையும் கட்டிக்காத்து தன்னலம் பாராமல் தலைமகனாய் நிமிர்ந்து நின்றது எல்லாம் நம்நாட்டில் அந்தக்காலம்,சில இடங்களில் விலைபோய்விடுவதும் உண்டு இந்தக்காலத்தில்..
அருமை தோழி..

Unknown said...

ஸலாம்
அனுபவம் பேசுது ...

குறையொன்றுமில்லை. said...

ஆமா சில வீடுகளில் நிலமை இப்படித்தான் இருக்கு என்ன சொல்ல?

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்

ஸாதிகா said...

ஹ்ம்ம் இப்படியும் சில பிள்ளைகள்.. என்ன செய்வது ஸாதிகா..//உண்மைதான் தேனம்மை.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

இதுதான் இன்றைய நிலை//மிக உண்மை ராஜபாட்டை ராஜா,நன்றி.

ஸாதிகா said...

பல குடும்பங்களில் இப்படி அவர்களின் தியாகங்களையும்
ஆசைகளையும் நிராசையாக்கிவிட்டு செல்லுகிற பலரை
நானும் பார்த்து மனம் அதிகம் வருந்தியுள்ளேன்//நானும்தான் ரமணிசார்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இருக்கத்தான் செய்கின்றனர். என் செய்வது? கவிதை நடையிலான இந்த உரைநடைத் தமிழ் மிகப் புதுசாய் இருந்ததும்மா... வெகு ஜோர்//வரிகளில் மிக்க மகிழ்ச்சி கணேஷண்ணா.நன்றி.

ஸாதிகா said...

அருமையான இக்கால நடப்பை சொல்லும் கவிதை ...///மிக்க நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

கண்ணில் கண்ணீர் முட்டுகிறது....!!!! வேற என்னத்தை சொல்ல, நன்றிகெட்ட மனிதா நீ மனிதனா...//உணர்வூப்பூர்வமான கருத்திட்டமைக்கு மிக்க நன்றி மனோ சார்.

ஸாதிகா said...

பல இடங்களிலும் நடக்கிற ஒன்று. நயம்படச் சொல்லியுள்ளீர்கள் ஸாதிகா.//மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

தோழி ஆசியா,கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

நல்லதை தேடி said...
ஸலாம்
அனுபவம் பேசுது ...//

வ அலைக்குசலாம் சகோ.அருகில் இருந்து பார்த்ததைப்போன்று பின்னூட்டி இருக்கின்றீர்கள்!எனக்கு வந்த பின்னூட்டங்களிலேயே என்னை மிகவும் சிரிக்க வைத்த பின்னூட்டம் உங்களுடையது.

படைப்புகள் எல்லாம் அனுபவங்களாகி விடாது சகோ.மரணத்தைப்பற்றி ஒரு கவிதை எழுதினால் அதனையும் அனுபவமா என்று கேட்பீர்களோ?

எனக்கு படித்துக்கொண்டிருக்கும் பிள்ளைகள் மட்டும்தான் இருக்கின்றனர் சகோ.அந்நிலை எனக்கும் சரி மற்ற எவருக்கு வரகூடாது என்பதே என் பிரார்த்தனை.

தங்களின் வலைப்பூவின் தலைப்பினைப்போல் தங்கள் எண்ணங்களும் இருக்க என் வாழ்த்துக்கள் சகோ.

Unknown said...

ஸலாம் சகோ
என்ன மதிக்கவே இல்லை ..... பின்னோட்டம் இல்லை கேட்டு வாங்கணும் போல இருக்கு ....
இருந்தாலும் நான் வரல ...

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி லக்‌ஷ்மியம்மா.

Jaleela Kamal said...

என்ன செய்வது சிலர் இப்படி , சில நல்ல பிள்லைகளும் இருக்கின்றனர்,
மேல் நாட்டு மோகமும் சொகுது வாழ்க்கையும் அவர்களை தடம் புரல வைக்கிறது,

Jaleela Kamal said...

மிக அருமையான கவிதை

ஸாதிகா said...

மேல் நாட்டு மோகமும் சொகுது வாழ்க்கையும் அவர்களை தடம் புரல வைக்கிறது,//சரியாக சொன்னீங்க ஜலி.கருத்துக்கு மிக்க நன்றி.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Nalla karuthukal Kavithaiyai.luv it

முற்றும் அறிந்த அதிரா said...

இனிக் கதைச்சாலும் அடிதான் விழும், இருந்தாலும் பழக்கதோஷம் கதைக்காமல் இருக்க முடியேல்லை.... வடை போச்சே ஸாதிகா அக்கா கர்ர்ர்ர்:))))

முற்றும் அறிந்த அதிரா said...

நல்ல கதை சொல்லும் கவிதை. எதிர்பார்ப்பு இருப்பின் ஏமாற்றம் இருக்கும்தான்... அதேநேரம் பெற்றோர் என்றால் எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும்.... எதிர்பார்க்கப்படாது என நினைத்தாலும்... தானாடா விட்டாலும் தசையாடும்.....

முற்றும் அறிந்த அதிரா said...

ஆனா ம்பிள்ளை வளர்ந்து கடன் அடைப்பார் என தம்மிடமுள்ளதை விற்று கடனாளியாகி என்ன செய்வது.... விரலுக்குத் தக்கதுதான் வீக்கம்... எதிர்பார்ப்பும் அப்படி இருப்பின் நல்லதே...

முற்றும் அறிந்த அதிரா said...

வைரமுத்துவின் வைரவரிகள் என நினைக்கிறேன், பூஸ் ரேடியோவில் கேட்ட நினைவு....

மகன் வெளிநாட்டிலிருந்து, ஈமெயில் ஏதோ தகவல் சொல்லியனுப்ப... அதுக்குப் பதில் தாய், மாமர நிழலிலிருந்து எழுதுகிறார்...

“மகனே உன்னைப் பெற்றபோதுதான், இந்த மாமரத்தையும் நட்டேன், ஆனால் இன்று, உன்னால் ஒரு கடிதம் கூட எழுதநேரமில்லாமல் ஈ மெயில் அனுப்புகிறாய்..
ஆனா அந்த மாமர நிழலின் ஆறுதலோடு, அதன் கீழ் இருந்துதான் இக்கடிதத்தை உனக்கு எழுதுகிறேன்” என... நிறைய இருந்தது மறந்திட்டேன்...

Mahi said...

உரைநடையில் அழகான கவிதை! இப்படியும் சில பிள்ளைகள்..என்ன சொல்வது போங்க.

விச்சு said...

என்ன கொடுமை சார்...

Vijiskitchencreations said...

auper kavithai and karuthum.

எம் அப்துல் காதர் said...

நிச்சயமாய் இந்த தலைமுறை நிறைய யோசிக்க வைக்கிறது. உங்கள் கவிதையும் தான்
ஸாதிகாக்கா!!

ஸாதிகா said...

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD2268%27&lang=en

http://www.thiraipaadal.com/tpplayer.asp?sngs=%27SNGOLD2268%27,%27SNGOLD2270%27&lang=en


இதுவும் ஜே பாடிய பாடல்தான்

இதனையும் கேளுங்கள்

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.

* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று! இது எனது கற்பனையில் உதித்ததாக இருந்தாலும் இது நிஜமானால் எவ்வளவு சந்தோசமாக இருக்கும் என்று என்மனம் ஏங்குகிறது. ஒவ்வொரு தமிழனின் மனமும் ஏங்கும் என்று நம்புகிறேன்!. please go to visit this link. thank you.

* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

கோமதி அரசு said...

இப்படியும் சில தலை மகன்கள் இருக்கிறார்களே!

கவிதை நடையாய் கதை அருமை.