June 8, 2011

எங்க ஊரு நல்ல ஊரு


எங்க ஊரு நல்ல ஊரு
தொடர் பதிவென்று அழைத்து ரொம்ப நாள் ஆனது போல் ஒரு ஞாபகம்.தொடர்பதிவு இல்லாதததால் சுறு சுறுப்பு குறைந்தாற்போல் ஒரு தோற்றம்.பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே. இதனைத்தொடர

1.இணையம் தந்த இனிய தோழி ஆசியா,

2.ஈழத்தமிழால் அனைவரையும் தன்வசப்படுத்தும் அதிரா,

3.கரெக்டாக இருந்தாலும் இணையம் பக்கம் என் தலைகண்டு சில நாளானாலே அக்கறையுடன் போனில் விசாரிக்கும் அன்புத்தங்கை ஹுசைனம்மா,

4.சமையலில் கலக்கி வரும் தங்கை மேனகா,

5.கவிதை மழை பொழியும் தங்கை மலிக்கா

6.இணையம் தந்த மற்றுமொரு இனிய உறவான அக்கா மனோ சுவாமிநாதன்

7.கை வண்ணத்தில் கலக்கி வரும் ஆல் இன் ஆல் பாயிஜா

8.நியுஸிலாந்தைப்பற்றி விளக்கமாக அறிந்துகொள்ளும் ஆர்வத்தில் இமா

9 சமையலுடன் கைவினையும், ஏகத்துவத்தையும் எடுத்துச்சொல்லும் அஸ்மா,

10.இனிக்க இனிக்க அனுபவத்தை அள்ளித்தெளிக்கும் வானதி

11.சமையலுடன் ஏனைய வற்றையும் வழங்கி வரும் மகி,

12.சத்து மிகு பதார்த்த செய்முறைகளை அழகுர அளிக்கும் கீதாஆச்சல்

13.இணையத்தில் மட்டுமல்லாது பத்திரிகைகளிலும் எழுதி கலக்கும் அஹ்மது இர்ஷாத்

14.சவுதியில் இருந்து கொண்டு ஆக்கப்பூர்வமான கட்டுரைகளைப்பகிரும் சிநேகிதன் அக்பர்

15.கவி மழை பொழியும் கனவு பட்டறைக்கு எஜமான் சீமான் கனி.

16.தன் எழுத்துக்களால் படிப்போரை ஆஹா போட வைக்கும் அப்துல்காதர்.

17.வித்தியாசமாக எழுதி அசத்தும் எங்களூருக்கு பக்கத்து ஊரைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் அந்நியன்.

18.கவிதைவரிகளிலும் கலக்கும் அரபுத்தமிழன்

19.கடந்தகாலத்தினை,கஷட்ங்களைப்பற்றியும் அழகுற ,தைரியமாக கட்டுரை படைத்து வியப்பூட்டிய சகோதரர் கிளியனூர் இஸ்மத்

20.எடக்கு மடக்கு என்று வலைப்பூவின் தலைப்பை வைத்துக்கொண்டு ஏகமாக செய்திகள் தரும் கோபி

21.பாங்குற பகிர்வுகளை பகிரும் ரஜின்

22நல்லதை பேசுங்க இல்லேன்னா அமைதியா இருங்க என்று அழுத்திச்சொல்லும் இளம் தூயவன்

23.புல்லாங்குழல் எனப்பெயரிட்டு ஏகத்துவத்தை எடுத்தியம்பும் நூருல் அமீன்

24.நன்றே செய்வோம் அதனை இன்றே செய்வோம் என்ற நன் மொழி இயம்பும் நாஞ்சில் மனோ

25.சோனகராய் சிந்திக்கும் அத்திப்பூத்தாற்போல் பதிவெழுதும் இவரது பார்வையிலும் கீழக்கரையைப்பற்றி அறிந்து கொள்ளும் ஆவலில் சோனகன்

26.எல்லாவற்றையும் ரசித்து எழுதும் ஷர்புதீன்

அனைவரையும் இத்தொடர் பதிவெழுத அன்புடன் அழைக்கின்றேன்,நட்புக்களே நீங்களும் விரும்பியவர்களை அழைக்கலாம்.

ராமனாதபுர மாவட்டத்தைச்சேர்ந்த கீழக்கரையை சுற்றிலும் கடற்பரப்பும்,அடர்ந்த தென்னந்தோப்புகளும் நிறைந்த ஊர்.அந்த ஊரினைப்பற்றிய சில சுவாரஸ்யமான குணாதிசயங்களை இங்கு பகிர்கின்றேன்.

1.குறுகிய மிக சிறிய சந்துகள்,முட்டு சந்துகள் இங்கு ஏராளம்.சில சமயம் உள்ளூர்க்கார்களுக்கே வழி தெரியாமல் போவதும் உண்டு.

2.மாலை நேரங்களில் " வாடா ...வாடா" தெருவில் குரல் கேட்டால் யாரையோ யாரோ அழைக்கின்றார்கள் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு சுவையான பதார்த்தத்தைத்தான் கூவி விற்பனை செய்கின்றனர்.

3.வெளி நாடு,வெளியூர்களில் எத்தனைதான் உயர்ந்த பதவி வகித்தாலும்,ஹை டெக்காக வாழ்ந்தாலும் இந்த ஊர் ஆண்கள் ஊர் வந்தால் உள்ளூர்களில் பேண்ட் அணிவதில்லை.வெள்ளை நிற லுங்கிகளையே அணிவார்கள்.இதனை 'சாரம்'என்று அழைப்பார்கள்.பேண்ட் அணிந்து ஆண்கள் வலம் வந்தால் அவர்கள் வெளியூர் வாசிகளாகத்தான் இருப்பார்கள்.

4.தேங்காய் அதிகம் விளையும் இந்த ஊரில் கேரளத்தினரைப்போல் தேங்காய் உபயோகித்து தான் அதிகம் சமைக்கின்றனர்.அநேக சமையல்களில் தேங்காய் உபயோகம் அதிகளவில் இருக்கும்.

5.ஏனைய ஊர்களில் இருந்து வித்தியாசமாக இந்த ஊரில் மட்டும்தான் திருமணம் முடிந்தும் பெண் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருப்பாள்.

6.திருமணத்திற்கு மகன்களை வைத்து இருப்பவர்கள் பெண் வீட்டிற்கு பெண் கேட்டு அனுப்புவதை கவுரவக்குறைச்சலாக கருதுவார்கள்.பெண் வீட்டினர்தான் மாப்பிள்ளை கேட்டு செல்ல வேண்டும்.

7.இங்கு உள்ள ஆட்டோக்களில் மூன்று பக்கமும் திரை கட்டி அதனுள்ளேயே பெண்கள் ஆட்டோவில் பயணிப்பது வழக்கத்தில்; உள்ளது.

8.பெரும்பாலான குடும்பங்கள் தொழில் நிமித்தம் படிப்பு நிமித்தம் வெளியூர்,வெளிநாடுகளில் புலம் பெயர்ந்தாலும் வீட்டு விஷேஷங்கள் அனைத்து உள்ளூரிலேயே நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.அவ்வாறு இருந்தால் தான் ஊருக்கும் ,நமக்கும் உள்ள தொடர்பு விட்டுப்போகாமல் இருக்கும் என்று கருதுகின்றனர்.

9.இவ்வாறாக அடிக்கடி வந்து செல்வதால் புலம் பெயர்ந்தவர்களின் வீடுகள் பிறருக்கு வாடகைக்கு விடப்படாமல் ஆள் வைத்து பராமரித்து வருகின்றனர்.


10. உள்ளூர்க்காரகள் அனைவருக்கும் சொந்தமாக வீடு வைத்து இருப்பார்கள்.வாடகை வீடு என்ற பேச்சுக்கே இடமில்லை.

11.தடுக்கி விழுந்தால் நைட் டிபன் கடைகள் ஏராளம்..ஏராளம்..இரவாகி விட்டாலே முக்கிய வீதிகளில் பரோட்டா சிலோன் பரோட்டா,முட்டை பரோட்டா,வீச்சு பரோட்டா,கொத்துபரோட்டா,முர்தபா சால்னா என்று கமகமக்கும்.கொத்துபரோட்டா கொத்தும் சப்தம் சுருதி தவறாமல் காதில் ஒலிக்கும்.ஆனால் பகலில் நிறைவான மதிய சாப்பாடு என்றால் அலையத்தான் வேண்டி இருக்கும்.

12.காலையில் ஐந்தரை மணிக்கே டீக்கடைகளில் இருவித இனிப்பு பண்டம் சுடும் மணம் நாசியை துளைக்கும்.உருண்டை வடிவில் செய்யப்பட்ட ஒருவித போண்டா.இதனை இனிப்பு போண்டா என்று அழைப்பார்கள்.சுப்ஹ் தொழுது விட்டு வருபவர்கள் இந்த இனிப்பு போண்டாவை ஒரு கை பார்த்து விட்டு டீ குடிப்பது வாடிக்கை.

13.ஊரினை சுற்றிலும் கடல் பகுதி.அதனை சுற்றிலும் குட்டி குட்டி தீவுகள் ஏராளம்.மோட்டார் படகில் ஏறிச்சென்று ரிஸ்கான பிக்னிக்கை அனுபவிப்பதில் இவ்வூர் மற்றும் இவ்வூரைச்சுற்றி சுற்றி இருக்கும் மக்களுக்கும் கொண்டாட்டம்தான்.விபரீதங்கள் நிகழ்ந்திருந்தாலும் இந்த ரிஸ்கான பிக்னிக்கில் ஈடு படுவது குறைய வில்லை.

14.உள்ளூரிலேயே நல்ல ஹாஸ்பிடல்.கடைகள் சூப்பர் மார்க்கெட்டுகள் இருந்தாலும் பக்கத்து ஊரான ராமனாதபுரம் சென்றே சிகிச்சை பெறவும்,ஷாப்பிங் செல்லவும் விரும்புவார்கள்.இதனை ஒரு பொழுதுபோக்காக இவ்வூர் மக்கள் எடுத்துக்கொள்கின்றனர்.

15.ஒரு டீயின் விலை ஒரே ரூபாய்க்கு விற்கும் அதிசயமும் இவ்வூரில் உள்ளது.

16.பிக்னிக்,கேளிக்கைகளில் இவ்வூர் மக்களுக்கு அலாதி பிரியம்.திருமணமானாலும் சரி.குழந்தை பெற்றாலும் சரி,பாசானலும் சரி,வேலை கிடத்தாலும் சரி.புரமோஷன் வந்தாலும் சரி ,வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்தாலும் சரி சம்பந்தப்பட்டவர்களிடம் பிக்னிக் பணம் என்று நண்பர்கள்,உறவினர்கள் வட்டாரம் ஒரு தொகையை கறந்து விடுவார்கள்.

17.அரிசிமாவினால் செய்யப்பட்ட ஒரு பணியாரம் இந்த ஊரில் பிரபலம்.இதனை வீடுகளில் செய்து விற்பனை செய்வார்கள்.இதற்கென்றே ஒரு தெருவே உண்டு.அந்த தெருவைச்சேரந்த்வீடுகளில்தான் அனேகமாக இந்த பணியாரம் சுட்டு விற்பனை செய்வார்கள்.அந்த தெருவின் பெயர் பணியக்காரத்தெரு.


18.இன்னொரு தெருவின் பெயர் ஆடறுத்தான் தெரு.நான் கேள்விப்பட்டது உண்மையோ இல்லையோ அந்தக்காலத்தில் ஆடு அறுக்கும் கூலித்தொழிலாளிகள் நிறைந்த தெருவானதால் அதற்கு ஆடறுத்தான் தெரு என்று அழைப்பார்களாம்.இதற்கு உண்மையான காரணம் என்ன என்பது தெரியவில்லை.

19.உள்ளூர்காரகள் குடும்பத்தை குறிப்பிட்ட ஒரு அடைமொழிப்பெயருடன் குறிப்பிடுவது வழக்கத்தில் உள்ளது.அல்லது விலாசத்தை,செய்யும் தொழிலை குறிப்பிட்டு இன்னார் வீடு என்று கூறுவது வழக்கத்தில் உள்ளது.

20.திருமணத்திற்கு அழைக்கும் பொழுது ஆண்கள் தனியாகவும்,பெண்கள் தனியாகவும் சென்று அழைப்பதுதான் இவ்வூர் மக்களின் பழக்கம் .

21.செல்லும் திருமணங்களுக்கு எல்லாம் பரிசு,மொய் வழங்கும் பழக்கம் கிடையாது.நெருங்கிய உறவினர் நண்பர்கள் வட்டாரம் மட்டிலுமே விஷேஷங்களுக்கு பரிசு வழங்குவார்கள்.

இவ்வூரின் உணவு வகைகளைப்பற்றி நாவில் நீர் ஊற விவரித்திருப்பதை பாருங்கள்
















54 comments:

Menaga Sathia said...

ஆஹா சூப்பரா கீழக்கரையை பத்தி சொல்லிருக்கீங்க...தெரிந்துக்கொண்டேன்...முடிந்தால் தொடர்கிறேன் அக்கா..பகிர்வுக்கு நன்றி!!

தூயவனின் அடிமை said...

நான் ஒரு முறை கீழக்கரை வந்துள்ளேன், 25 ஆண்டுகளுக்கு முன்பு. பல முறை திருமண நிகழ்சிகளுக்கு கலந்து கொள்ள வாய்ப்பு வந்தும், வெளிநாட்டில் இருந்ததால் செல்ல முடியவில்லை. பழக்க வழக்கம் என் ஊரில் உள்ளவை நிறைய தென்படுகிறது.

athira said...

ஸாதிகா அக்கா... எப்படியாவது பூஸை மரத்தில இருந்து கீழே இறக்கிடோணும் என முடிவெடுத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:). இதுக்குப் பயந்துபோய்த்தானே நான் அடிக்கடி முருங்கையில் அதுவும் உச்சிக்கொப்பில ஏறுறனான்:).

நீங்க அழகாகச் சொல்லிட்டீங்க உங்கட ஊர் பற்றி... நான் என்ன எழுதப்போறேனோ... ஓக்கை எப்படியும் தொடர்வேன்... சில நாட்கள் வாரங்கள் ஆகலாம் ஓக்கை?:).

ஷர்புதீன் said...

சலாம்
வாங்க சாதிகா ,

நான் இங்கே காயல்பட்டணம் பற்றி எழுத இருக்கிறேன்., நீங்கள் அங்கே உங்க ஊர் கீழக்கரை பற்றி.....ஆகா., வாங்க வாங்க...

vanathy said...

நல்லா இருக்கு உங்க ஊர் பற்றிய பதிவு.
இவ்வளவு பேரை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறீங்க. அதில் எங்கட பூஸாரும் ஹிஹி...
நானும் எழுதுவேன். ஆனால், கொஞ்சம் டைம் வேணும்.

Asiya Omar said...

இனிய தோழி ஸாதிகா,உங்க ஊர் பற்றி அழகாக சொல்லியிருக்கீங்க,
எனக்கு தெரியாத நிறைய தகவல்கள் பகிர்வுக்கு மகிழ்ச்சி.எப்பவும் சின்ன சின்ன விஷயத்தையும் உங்களிடம்
பகிர்வதில் எனக்கு அலாதி திருப்தி.
நிச்சயம் விரைவில் எழுத முயற்சிக்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

கீழக்கரைப்பற்றி அறிந்ததில் மகிழ்ச்சி.அழக்காய் சொல்லிட்டீங்க.. அட நம்ம ஊரைபற்றியும் எழுதனுமோ. கொஞ்சம் ரகளையோடு இருக்குமே பரவாயில்லையா! ஹி ஹி. எழுத முயற்சிக்கிறேன் அக்கா..

செ.சரவணக்குமார் said...

ஆஹா.. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க அக்கா. தொடரப்போகும் நண்பர்களின் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

Vaanampadi said...

Nice to read about kilakarai, I have studied there MSEC college. It was nice memory to read your article.

athira said...

//vanathy said...

நல்லா இருக்கு உங்க ஊர் பற்றிய பதிவு.
இவ்வளவு பேரை தொடர் பதிவுக்கு அழைத்து இருக்கிறீங்க. அதில் எங்கட பூஸாரும் ஹிஹி...
நானும் எழுதுவேன். ஆனால், கொஞ்சம் டைம் வேணும்//

ஸாதிகா அக்கா... நான் எப்பவும் அடுத்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறனான், அதால வான்ஸ்ஸ் எழுதினபிறகுதான் நான் எழுதுவேன்.... ஆனா கொப்பி எல்லாம் பண்ணமாட்டேன் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))))

மனோ சாமிநாதன் said...

கீழக்கரையைப்பற்றிய பதிவு அருமை ஸாதிகா!
தொடர்பதிவிற்கு என்னை அழைத்ததற்கு இனிய நன்றி!
விரைவில் தொடர முயற்சிக்கிறேன்!

கிளியனூர் இஸ்மத் said...

இப்படியொரு சிந்தனை நலமே! தங்கள் ஊரைப்பற்றிய பல செய்திகளை இதன் மூலம் வெளிப்படுத்த இது ஒரு நல்ல வாய்ப்பு... அதை எனக்கும் அளித்த அன்பு சகோதரிக்கு மிக்க நன்றி.
கீழக்கரைப் பதிவு அருமை

ஷர்புதீன் said...

என்னையும் அழைத்ததற்கு நன்றி. கீழக்கரை , அதிராம்பட்டினம் , காயல்பட்டினம் மக்களின் இஸ்லாமிய வாழ்க்கை முறை., அவர்களது இயல்பான குணாதிசியங்கள், சுவராசியமான நடவடிக்கைகள் என்று எல்லாமுமாம் கலந்து எழுதிகொண்டிருந்த நேரத்தில் உங்களது அழைப்பு., இதோ என்னால் முடிந்த வரையில் சுவராசியமாகவும், மனதிற்கு தெரிந்து உண்மையாகவும் எழுதி வருகிறேன். இன்சா அல்லா கூடிய விரைவில் பதிவிடுகிறேன்

அகமது அஸ்லம் said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரி, கீழக்கரைக்கு நீங்கள் சொன்ன எல்லா பாயிண்ட்டும் எங்கள் ஊரான அதிராம்பட்டினத்திற்கும் அப்படியே பொருந்துகிறது. அது எப்படி?.

எம் அப்துல் காதர் said...

ஆஹா கீழக்கரைக்கு இன்னும் அழகு சேர்க்கிறது உங்களின் இந்த பதிவு. ஊர் பேச்சு வழக்கை கொஞ்சம் சேர்த்திருக்கலாமோ!! நிச்சயம் நாங்கள் எல்லோரும் இன்ஷா அல்லாஹ் தொடருவோம்.

சிநேகிதன் அக்பர் said...

//ஏனைய ஊர்களில் இருந்து வித்தியாசமாக இந்த ஊரில் மட்டும்தான் திருமணம் முடிந்தும் பெண் கணவன் வீட்டிற்கு செல்லாமல் தாய் வீட்டிலேயே இருப்பாள்.
//

காயல்பட்டிணத்திலும் இப்படித்தான் என நினைக்கிறேன்.

இன்ஷா அல்லாஹ். உங்க ஊருக்கு ஒரு தடவையாவது வரவேண்டும்.

தொடர்பதிவு அழைப்புக்கு நன்றி சகோதரி. தொடர்கிறேன்.

ஹுஸைனம்மா said...

கீழக்கரைக்கு ஒரே முறை வந்தேன், தாசீம்பீவி கல்லூரியில் ஆசிரியை வேலை நேர்முகத்திற்காக. வேலை கிடைத்தும், பெற்றோர் அனுமதி கிடைக்காததால் சேரவில்லை. உங்க ஊர்க்காரங்க நல்ல நேரம்னுதான் சொல்லணும்!! இல்லைன்னா, அந்தக் காலேஜ் பொண்ணுங்களையெல்லாம் புரட்சிப் பூக்களா ஆக்கிருப்பேன்!! ;-))))))

எங்க ஊரப் பத்தி நானும் எழுதணுமா!! உங்களுக்கென்ன, கீழக்கரையிலேயே பிறந்து அங்கேயே கல்யாணமும் பண்ணி அங்கேயே (பெரும்பாலும்) இருக்கீங்க!! நான் எதச் சொல்வேன்?

எந்த ஊர் என்றவளே(ரே)
பிறந்த ஊரைச் சொல்லவா
வாழ்ந்த ஊரைச் சொல்லவா
பிழைக்கும் ஊரைச் சொல்லவா

;-)))))))))))))

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

//பழக்க வழக்கம் என் ஊரில் உள்ளவை நிறைய தென்படுகிறது.
// தாங்கள் என்ன ஊர் என்பது அறியே.அநேகமாக தொண்டி,காயல்,அதிராம்பட்டிணம் போன்றவற்றில் கீழக்கரையின் பழக்கவழக்கங்களை போன்று இருக்கும்.கருதிட்டமைக்கு நன்றி இளம்தூயவன்.,

ஸாதிகா said...

//எப்படியாவது பூஸை மரத்தில இருந்து கீழே இறக்கிடோணும் என முடிவெடுத்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்:). இதுக்குப் பயந்துபோய்த்தானே நான் அடிக்கடி முருங்கையில் அதுவும் உச்சிக்கொப்பில ஏறுறனான்:).
// என்ன அதீஸ்...நீங்கள் என்ன பரமரகசியமான ஆளா?இந்த பயம் பயப்படுகின்றீர்கள்?(ஐயே..பயந்ந்தாங்கொல்லி அதீஸ்)//எப்படியும் தொடர்வேன்... சில நாட்கள் வாரங்கள் ஆகலாம் ஓக்கை?:).// சில நாட்கள் ஒகே..சில வாரங்கள் நாட் ஓகே

ஸாதிகா said...

கண்டிப்பாக எழுதுங்க ஷர்புதீன்.ஆவலுடன் காத்திருக்கிறென்.சினிமா தியேட்டர்,போலீஸ் ஸ்டேஷன்,மதுக்கடை இல்லாத உங்கள் ஊரைப்பற்றித்தெரிந்துகொள்ள.

ஸாதிகா said...

ம்ம்..எழுதுங்க வான்ஸ்.சீக்கிரம்.அதீஸ் பயந்து பம்முறாங்கள் நீங்களாவது அக்காவைப்போல் தைரியமாக எழுதுங்க.

ஸாதிகா said...

வாங்க தோழி ஆசியா.பிஸியான சூழ்நிலையிலும் பதிவு பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி.

ஷர்புதீன் said...

இப்படி எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா எப்படி., நான் கோவமா இருக்கேன்...




:-)

ஸாதிகா said...

//கொஞ்சம் ரகளையோடு இருக்குமே பரவாயில்லையா! ஹி ஹி. எழுத முயற்சிக்கிறேன் அக்கா..// என்னப்பா மலிக்கா.ரகளை என்று கூறி ஆவலை அதிகப்படுத்துறீங்க.சீக்கிரம் உட்காருங்க தொடர்பதிவை எழுத்.

ஸாதிகா said...

வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சரவணக்குமார்.

ஸாதிகா said...

வாங்க வானம் பாடி.நீங்கள் சதக் ஸ்டூடண்டா?மிக்க மகிழ்ச்சி.நாண்கு வருடம் எங்கள் ஊரிலேயே தங்கி இருந்து இருக்கீங்க.நிறைய தெரிந்து இருப்பீங்க.வந்து கருத்திட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி.

ஸாதிகா said...

//நான் எப்பவும் அடுத்தவங்களுக்கு முன்னுரிமை கொடுக்கிறனான், அதால வான்ஸ்ஸ் எழுதினபிறகுதான் நான் எழுதுவேன்.... ஆனா கொப்பி எல்லாம் பண்ணமாட்டேன் நான் ரொம்ப நல்ல பொண்ணு 6 வயசிலிருந்தே...:))))// அதீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஸ் திரும்ப திரும்ப பயந்தாங்கொல்லி என்று நினைக்கறீங்க.கொல்லி என்றதும் கொல்லி வாய் பிசாசா என்றெல்லாம் கேட்டு என்னை அழ வைத்துடாதீங்க.ஓகை...

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்ரி மனோஅக்கா.விரைவில் தொடருங்கள் வளம் கொழிக்கும் உங்கள் பூமியைப்பற்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க மகிழ்ச்சி ஷர்புதீன்.

ஸாதிகா said...

//சகோதரி, கீழக்கரைக்கு நீங்கள் சொன்ன எல்லா பாயிண்ட்டும் எங்கள் ஊரான அதிராம்பட்டினத்திற்கும் அப்படியே பொருந்துகிறது. அது எப்படி?.// எல்லாம ஒரு சகோதரபாசம்தான் அஸ்லம்.முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

//ஊர் பேச்சு வழக்கை கொஞ்சம் சேர்த்திருக்கலாமோ!!// அட..ஆமாம்ல.அது எனக்கு தெரியாமே போச்சு தம்பி அப்துல்காதர்.வீட்டிலே எல்லோரும் சுகமா இருக்காஹளா?தம்பி எப்ப இந்தியா வர்ரீஹ?இந்தியா வந்தீஹன்னா கண்டிப்பா நம்மூரு பக்கமும் வந்துட்டு போங்க.ஹப்பா..அப்துல்காதர்,பின்னூட்டத்திலாவது பேச்சு வழக்கை கொஞ்சம் சேர்த்துட்டேன்.என்ன பண்ணுவது எங்கள் ஊர் பேச்சு வழக்கில் பேசினால் இந்த ஊர் மக்கள் விழிக்கிறார்கள்.அவர்கள் சொல்வது என்காதில் விழ வில்லை என்றால் "விளங்கலே"என்று கூறினால் புரிய மாட்டேன்கின்றதே.பதியில் உட்கார்ந்து பறிமாறுபவரை பார்த்து "மானா..மானா"என்றால் அவர் புரியாமல் பறிமாறிக்கொண்டே இருக்காரே.என்னத்தை சொல்ல?:-(

கிளியனூர் இஸ்மத் said...

இதோ தொடர் பதிவு ரெடி
http://kismath.blogspot.com/2011/06/blog-post.html

Starjan (ஸ்டார்ஜன்) said...

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.

ஸாதிகா அக்கா உங்க ஊரு விசயங்களை பற்றி தெரிந்து கொண்டோம். இனி ஒவ்வொரு நண்பர்களின் ஊர் விசயத்தை தெரிஞ்சிக்கலாம். ரொம்ப சுவாரசியமா இருக்குமே.. தொடருங்கள் நண்பர்களே..

ஸாதிகா said...

//இன்ஷா அல்லாஹ். உங்க ஊருக்கு ஒரு தடவையாவது வரவேண்டும்.
// வந்து பாருங்கள் அக்பர்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//உங்க ஊர்க்காரங்க நல்ல நேரம்னுதான் சொல்லணும்!! இல்லைன்னா, அந்தக் காலேஜ் பொண்ணுங்களையெல்லாம் புரட்சிப் பூக்களா ஆக்கிருப்பேன்!! ;-))))))
// ஹுசைனம்மா.இப்ப மட்டும் என்னவாம்.எங்கள் ஊரில் நல் விஷயங்களில் எங்களூர் பெண்கள் புரட்சி பெண்கள்தான்.உதாரணத்திற்கு நான் இல்லையா?:-)ஹ்ம்ம்ம்.... நீங்க அங்கே இண்டர்வியூ வந்து உங்கள் பெற்றோர் தடுத்ததன் காரணமாக வேலைக்கு வர முடியாமல் போய் விட்டது என்று சொல்லுகின்றீர்கள்.இது முன்னாலேயே தெரிந்து இருந்தால் நானே நேரில் வந்து உங்கள் பெற்றோரை தாஜா பண்ணி இருப்பேன்.சொந்த ஊர் பற்றி மறந்து விட்டால் இருக்கற ஊர் (அபுதாபி)பற்றி எழுதுங்களேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி.உடன் தொடர் பதிவு எழுதியமைக்கு மிக்க மகிழ்ச்சி சகோதரர் இஸ்மத்.

ஸாதிகா said...

//ஷர்புதீன் said...
இப்படி எல்லாத்தையும் நீங்களே சொல்லிட்டா எப்படி., நான் கோவமா இருக்கேன்...
//சாரி ஷர்புதீன்.நீங்கள் உங்கள் பாணியில் தொடருங்கள்.கோபத்தை தூக்கி போட்டு விடுங்கள்.காயல் காரகள் அந்த டிரைகலர் அல்வா போல் இனிக்க இனிக்க பேசுவார்களாம்.கண்டிப்பா மூவர்ண அல்வாவைப்பற்றியும் எழுதுங்கள்.

ஸாதிகா said...

வாங்க ஸ்டார்ஜன்.விடுப்பு முடிந்து சவுதி வந்தாச்சா?கருத்துக்கு மிக்க நன்றி.

athira said...

//சில நாட்கள் ஒகே..சில வாரங்கள் நாட் ஓகே //
karrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)))))

ஸாதிகா said...

அதீஸ்..முதல்லே பல்லைக்கடிப்பதை நிறுத்துங்கள்.அப்புறம் பல் செட் உடைந்துடப்போகுது.மீ..எஸ்கேஏஏஏஏஏஏஏஏப்

m.nainathambi.அபூஇப்ராஹீம் said...

ஏராளமான மனம் நிறைந்த எனது நட்புகளைக் கொண்ட ஊரைப் பற்றி அறிந்து கொண்டதில் மகிழ்வே!

இந்த வாசல் வழியாகவும் இணையத்தில் மேயலாமே : http://adirainirubar.blogspot.com/

Mahi said...

இன்டரஸ்டிங் தொடர் பதிவு ஸாதிகாக்கா. விரைவில் எழுத முயல்கிறேன். ஆனா ஒரே பதிவில் முடிக்க முடியுமாஆஆஆஆன்னு தெரில,அந்தளவுக்கு ஊர் சுத்தியிருக்கோம்.:)

கீழக்கரை பற்றி அழகா சொல்லிட்டீங்க. எனக்கு சாண்டில்யன் கதைகள் படிக்கையில் இருந்தே காயல்பட்டினம்,நாகப்பட்டினம் இன்னும் கடலோரப்பகுதிகள் எல்லாம் பார்க்கணும்னு ஆசை. பாயின்ட்போட்டு சூப்பரா சொல்லிட்டீங்க.

Ahamed irshad said...

ஆஹா அருமை அருமை.. கீழ‌க்க‌ரைக்கு நான் ப‌ல‌ த‌ட‌வை வ‌ந்து போன‌மாதிரி ஒரு ப‌திவு.. உங்க‌ ஊருக்கு பொருந்தும் அனைத்து விஷ‌ய‌மும் எங்க‌ ஊருக்கு பொருந்துகிற‌மாதிரி இருக்கு..!!! தொட‌ர்ப‌திவுக‌ளில் நான் க‌ல‌ந்து கொள்வ‌தில்லை.. த‌வ‌றாக‌ எண்ண‌வேண்டாம்.. இருந்தாலும் எழுத‌ முய‌ற்சிக்கிறேன் ம‌ன‌சும் கால‌மும் ஒன்றாய் வ‌ரும்போது :)

மாதேவி said...

நல்ல பதிவு.

கீழக்கரை அறிந்து கொண்டோம்.

அஸ்மா said...

அஸ்ஸலாமு அலைக்கும் ஸாதிகா அக்கா! உங்க ஊரின் பழக்க வழக்கங்கள் எங்க ஊருக்கும் நிறையவே ஒத்துப் போகுது :) கடலோரப் பகுதிகளின் கலாச்சாரம் கிட்டத்தட்ட ஒன்றுபோல் இருக்கும் என்று கேள்விப்பட்டிருக்கேன். இந்த தொடர்பதிவு நிச்சயம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும் ஸாதிகா அக்கா.

என்னையும் அழைத்ததற்கு நன்றிகள். அதற்கு முன்னால் கொடுக்கவேண்டிய ஒருசில பதிவுகளை முடித்துவிட்டு எழுதுகிறேன். சரியா?

அந்நியன் 2 said...

அக்காள் அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

ஊருக்கு வந்ததில் இருந்து உடல் நிலை குறைவாக இருப்பதால் வலைப்பக்கம் வர இயலவில்லை,ஜலீலா அக்காள் தந்தையின் மரணம் இன்றுதான் ஒரு வலைப் பூவில் படித்தேன்.
இன்னா லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஊன்.

இன்ஷா அல்லாஹ் எனது ஊரைப் பற்றி விரைவில் எழுதுகிறேன்.

இன்னும் நிறைய விஷயங்களை எழுத மறந்து விட்டீர்கள்.

நான் சின்னப் பிள்ளையாக இருக்கும் போது உங்கள் ஊரில் உள்ள ஜமால் முஹம்மது திரை அரங்கில் காஃபா படம் பார்க்க வந்தோம் எனக்கு அப்போ ஐந்து வயது அல்லது ஏழு வயது இருக்கும்னு நினைக்கிறேன்.

வள்ளல் சீதக்காதியின் இருப்பிடமும்,உயர்கல்வி,தொழிற்கல்வி மற்றும் மதராஷாக்களும் உங்கள் ஊரின் சிறப்பு.

Starjan (ஸ்டார்ஜன்) said...

எங்க ஊரு திருநெல்வேலி பற்றிய எனது பகிர்வு

எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி

R.Gopi said...

ஆஹா....

தோழமைகள் எத்தனை பேர் இருந்தாலும், மறவாமல் இந்த பதிவில் என்னையும் குறிப்பிட்டு இருந்தது கண்டு மகிழ்ந்தேன் ஸாதிகா..

உங்க ஊரை பற்றி சிறிய சிறிய சுவாரசியமான விஷயங்களை கொண்டு அழகாக எழுதி இருக்கிறீர்கள்...

நாமும் முயற்சிப்போம்...

மிக்க நன்றி ஸாதிகா....

ஹுஸைனம்மா said...

அக்கா, ஒருவழியா நானும் எழுதிட்டேன்!!

http://hussainamma.blogspot.com/2011/07/blog-post.html

சோனகன் said...

தொடர் பதிவுக்கான அழைப்பிற்கு மிக்க நன்றி, கீழக்கரையின் கலாச்சார கோலங்களுக்கு எல்லையற்றத் தன்மை உண்டு , இறைக்க இறைக்க வற்றாத கிணற்று நீர் ஊற்று போன்று சிந்தனைகளில் ஆழக்கிடக்கும் அனுபவங்களை கனக்கிலெடுக்க முடியாது என்பதற்கான் ஆதாரத்தை தங்களின் இந்த சீர்மிகு பதிவு முழுக்க நிருபித்துவிட்டது.

சாந்தி மாரியப்பன் said...

உங்க ஊரைப்பத்தி நிறைய புதுவிஷயங்கள் தெரிஞ்சுக்கிட்டேன்..

இமா க்றிஸ் said...

ஸாதிகா... வாங்க இங்கே ;) http://imaasworld.blogspot.com/2011/07/kia-ora-from-aotearoa.html

mohamedali jinnah said...

எங்க ஊரை தெரிஞ்சுக்க எங்க ஊருக்கே வாங்க
நீடூர் - நெய்வாசல் - Nidur - Neivasal

http://nidurseasons.blogspot.in/2010/07/blog-post_7298.html
நீடூர்
முகவரி: நீடூர் அஞ்சல்
மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203

எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.
இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நாகை மாவட்டம், மயிலாடுதுறை வட்டத்தில் மயிலாடு துறையிலிருந்து சிதம்பரம் செல்லும் இருப்புப்பாதையில் நீடூர் தொடர்வண்டி நிலையத்திலிருந்து வடமேற்கே 2.கி.மீ. தொலைவில் இருக்கின்றது