April 16, 2011

செயற்கைத்தோட்டம்

இம்மாத இவள் புதியவள் இதழில் எனது “இயற்கையாய் ஒரு செயற்கைத்தோட்டம்”என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது.படத்தினை ஜூம் செய்து பார்க்கவும். இவள் புதியவள் இதழ் நிர்வாகத்தினருக்கு நன்றிகள்.

பச்சை பசேலென்ற புல் தரை,கை தேர்ந்த தோட்டக்காரரால் அமைக்கப்பட்டது போன்றஅழகாக அமைத்த வேலி,பசுமை கொஞ்சும் செடிகொடிகள்,வெள்ளை,சிகப்பு,மஞ்சள்,பிங்க் வர்ண ரோஜாப்பூக்கள் பூத்துக்குலுங்கும் ரோஜாசெடி வகைகள்,மெலிதாய் சிரிக்கும் செம்பருத்திப்பூக்கள்,உயர்ந்து நிற்கும் பாம் செடிகள்,கண்ணைக்கவரும் மேப்பல்ஸ் இலைகள்,நாவூரவைக்கும் ஆஸ்த்ரேலியன் திராட்சைக் குலைகள் வகை வகையான கருத்தை கவரும் வண்ணம் குரோட்டன்ஸ் வகைகள்,ஆங்காங்கே துக்கணாங்குருவிக்கூட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்கணாங்குருவிகள்,மலர்களை முகர்ந்த படி படபடக்கும் வண்ணத்துப்பூச்சிகள்,மேலே தொங்கும் ஹரிக்கோன் விளக்கு இத்யாதி..இத்யாதி..

தோட்டத்தினுள் நுழையும் பொழுதே நிஜத்தோட்டத்தினுள் நுழைந்துவிட்டோம் என்ற பரவசத்தை ஏற்படுத்தும் உயிரோட்டம் அந்த செயற்கைத்தோட்டத்தில் நிரம்பி வழிகின்றது என்பது நான் அங்கு கண்ட நிஜம்.

சென்னை எக்மோரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் மெஹருன்னிஷா சலீம் கான் ரசனையுடன் தனது மொட்டைமாடியில் இந்த அழகிய தோட்டத்தினை உருவாக்கி உள்ளார்.இதற்காக இவர் கரன்ஸிகள் மட்டுமின்றி,தனது நேரத்தையும்,ரசனையையும்,கற்பனை வளத்தையும் நிறையவே செலவு செய்து இருக்கின்றார்.

"எப்படி இந்த செயற்கைத்தோட்டம் அமைக்கும் எண்ணம் வந்தது?இயற்கையாக தோட்டம் அமைத்தால் செலவும்,பராமரிப்பு சிரமுமும் குறைவுதானே?"எனக்கேட்ட பொழுது சிரித்த வண்ணம்"இயற்கை தோட்டம் அமைக்கும் எண்ணம் இருந்தாலும் அடிக்கடி ஊருக்கு சென்று விடுவதால் பராமரிப்பில் சிக்கல் ஆகி விடுகின்றது.ஆகவே என் தோட்டக் கனவை இந்த செயற்கைத்தோட்டம் பூர்த்தி செய்து வைக்கின்றது"என்றார்.

தோட்டம் அமைக்க தேவையான மரங்கள்,இலைகள்,கொடிகள் புற்தரை அனைத்தும் சைனா,சிங்கப்பூர்,கொழும்பு மற்றும் சென்னையில் உள்ள பாரீஸ்கார்னரில் இருந்து கொள்முதல் செய்து தோட்டத்தினை அமைத்து இருக்கின்றார்.

வாரம் ஒரு முறை ஒரு பகல் தினத்தை முழுக்க தோட்டத்தை சுத்தம் செய்வதிலும்,ஸ்ப்ரேயர்,ஹோஸ் பைப் மூலம் தண்ணீர் அடித்து,துணிகள் கொண்டு துடைத்து உதிர்ந்த இலைகளை சரி செய்து மிக கவனத்துடன் பராமரித்து வருகின்றார்.

பக்கவாட்டில் மூங்கிலிலான வேலியைப்போல் சுவரில் டைல்ஸ் பதித்து இருப்பது தோட்டத்திற்கே மகுடம் வைத்தது போன்ற தோற்றத்தைதருகின்றது.ஆங்காங்கே போகஸ் விளக்குகள் அமைத்து இருப்பது இரவு நேரத்திலும் தோட்டத்தினை பளீரிட செய்கின்றது.வண்ண வண்ண கலர்கள் மாறி மாறிக்காட்டும் வகையிலும் விளக்குகள் அமைத்து அழகு தோட்டத்தினை கலர்ஃபுல் ஆக வைத்து இருப்பது ஹை லைட்.

தூக்கணாங்குருவிகளும்,வண்ணத்துப்பூச்சிகளும் குழந்தைகளுக்கு குதூகலத்தை ஏற்படுத்தி விடும்.சிறிய டீபாயை சுற்றி சேர்கள் போட்டு அமர்ந்து கையில் சூடான தேநீர் கோப்பைகளுடன் இந்த கார்டனில் உட்கார்ந்து அளவாளாவினால் அந்த தருணத்தை மறக்கவே முடியாது.

மேலதிக படங்கள் கீழே.


48 comments:

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

என்ன ஒரு அழகான தோட்டம். பொய் உட்கார்ந்து கொள்ளலாம் போலிருந்தது.

நட்புடன் ஜமால் said...

மாஷா அல்லாஹ்

மிக அழகாக தெரிகின்றது

செயற்கை தான் என்றாலும்...

Unknown said...

முதலில் வாழ்த்துக்கள் அக்கா


வாவ் ரொம்ப நல்லா செய்து இருக்காங்க. அழகான தோட்டம்.. எவ்வளவு செலவு செய்தாங்களோ...!?

Anisha Yunus said...

MAASHA ALLAH

ஸாதிகாக்கா... என்ன ஒரு கற்பனை வளம் உங்களுக்கு. அடுக்குமாடி குடியிருப்பு போலவே தோன்றவேயில்லை. ரிஸார்ட் டைப் மாதிரி இருக்கிறது. இதைப்பற்றி, எப்படி அமைப்பது, என்னவெல்லாம் செய்தீர்கள் என்று ஒரு பதிவிடுங்களேன்..எல்லோருக்கும் உபயோகமாயிருக்கும். (முக்கியமாக எனக்கு!!)

Menaga Sathia said...

பார்ப்பதற்க்கு இயற்கை தோட்டம் போலவே இருக்கு,செம அழகு!!

athira said...

வாழ்த்துக்கள் ஸாதிகா அக்கா.

செயற்கை என்றாலும், கண்ணுக்கு இயற்கைபோலவே இருக்கு சூப்பர்.

Unknown said...

arumayana thottam.omba azhaga irukku.

Rathnavel Natarajan said...

நல்ல செய்தி. தினமலருக்கும் எனது மகன்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்பி விட்டேன்.
வாழ்த்துக்கள்.

GEETHA ACHAL said...

ஆஹா...ரொம்ப சூபப்ராக இருக்கின்றது....அழகான தோட்டம்...

உங்கள் பேரன் தானே போட்டோவில்...

Jaleela Kamal said...

ரொம்ப் அருமை ஸாதிகா அக்கா சூப்பரா இருக்கு, ஆச்சரியாமாகவும் இருக்கு

Asiya Omar said...

செயற்கைத்தோட்டம் அழகோ அழகு.எனக்கும் தோட்டம் இங்கு வைக்க முடியலையேன்னு ஆதங்கம் உண்டு,இது கூட நல்ல ஐடியா தான்..
அழகாக விவரித்து எழுதியிருக்கீங்க.எல்லாவற்றுக்கும் ரசனை தான் அடிப்படை,
மெஹருன்னீசாவின் ரசனை நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
வாழ்த்துக்கள் தோழி..

சி.பி.செந்தில்குமார் said...

வாழ்த்துக்கள் மேடம்

Jerry Eshananda said...

ஆச்சரியமா இருக்கு..மிக மிக அழகா இருக்கு....புகைப்படங்கள் இன்னும் அழகு சேர்க்குது..சென்னை வர்றப்போ..உங்க தோட்டத்தை சுத்திப்பார்கனும்..கூர்க்காவ வச்சு விரட்டிப்புடாதீங்க.

ஹுஸைனம்மா said...

ரொம்ப நல்லா இருக்கு. பொறுமையா செஞ்சிருக்காங்க.

என்ன ஒண்ணு, இவ்வளவு செலவு செஞ்சு செயற்கைத் தோட்டம் வைக்க நினைச்சவங்க, அதே பணத்தை அட்லீஸ்ட் ஒரு லேண்ட்ஸ்கேபிங் கம்பெனிக்காவது கொடுத்து இயற்கையாச் செஞ்சிருக்கலாம்.

ஆனா ஒண்ணுக்கா, இங்கே நான் விதைபோட்டு செடியெல்லாம் இப்பத்தான் வளர ஆரம்பிச்சிருந்துது. ரெண்டு வாரமா அடிச்ச மணல்காத்துல எல்லாத் தளிர்களும் வாடி வதங்கிப் போச்சு!! இனி மறுபடியும் எல்லாம் முதல்லருந்து தொடங்கணும். இந்த மாதிரி ஏமாற்றங்கள் அவங்களுக்கு இருக்காது. எவர்க்ரீன் தோட்டம்!! :-))))))

MANO நாஞ்சில் மனோ said...

தோட்டம் மிக அட்டகாசமா இருக்குப்பா கண்ணுக்கு குளிர்ச்சியாய்....

Anonymous said...

ரொம்ப அழகான ரசனை... திரும்ப திரும்ப பார்க்க தோனுது..

நிஷாந்தன் said...

செயற்கை என்று சொன்னால்தான் தெரியும்..! என்னவொரு அழகு., அதுவும் சென்னை மா நகரத்திற்குள் ...அற்புதம். ! ஒரு முறை நேரில் விசிட் செய்ய வாய்ப்புக் கிட்டுமேயானால் மிக்க மகிழ்ச்சி..! வலைப் பதிவர்களுக்கு விசேஷ அனுமதி உண்டுதானே ?

Ahamed irshad said...

ரொம்ப அழகான பகிர்வு... என் ரெண்டு கண்களையும் உங்க ப்ளாக் வாடகைக்கு எடுத்திருச்சு அஞ்சு நிமிடமாய்....!

Starjan (ஸ்டார்ஜன்) said...

எல்லாமே பார்க்க பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்கு.. ரொம்ப கஷ்டப்பட்டு செய்திருக்காங்க.. அவருக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

அந்நியன் 2 said...

.துறன்கிக்ருஇ ககாழஅ

வாழ்த்துக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான தோட்டம்.வாழ்த்துக்கள்

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

ஸாதிகா said...
வாங்க சகோதரி வித்யா சுப்ரமணியம்.முதல் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்ரி சகோ ஜமால்.

ஸாதிகா said...

நன்றி பாயிஜா.இதற்கு நிறையவே செலவிட்டார்கள்.இன்னும் செய்து கொண்டும் இருக்கின்றார்கள்,

ஸாதிகா said...

அன்னு,இது பத்திரிகைக்காக ஒருவரது வீட்டிற்கு சென்று எடுத்த புகைப்படங்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி மேனகா

ஸாதிகா said...

நன்றி அதிரா.செயற்கை என்று சொன்னால்த்தான் தெரியும்.அந்தளவுக்கு உயிர்ப்புடன் இருக்கின்றது பூந்தோட்டம்

ஸாதிகா said...

மிக்க நன்ரி சவீதா ரமேஷ்.

ஸாதிகா said...

மிக்க நன்றி,சந்தோஷம் ரத்னவேல் ஐயா.

ஸாதிகா said...

நன்றி கீதா.ஆமாம்.இறுதியாக இருப்பவர் என் பேரன் ஆமிர்தான்.தோட்டத்தைப்பார்த்தும் அவருக்கு ஒரே குஷி.கூட்டில் தொங்கிக்கொண்டிருக்கும் தூக்கணாங்குருவியை பிடிக்கப் பாய்கின்றார்.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலி.

ஸாதிகா said...

மெஹருன்னிஷா வுக்கு தோட்டக்கலை மட்டுமல்ல பல்கலைகளிலும் வல்லவர்.அவர் எனது பால்ய, ஆருயிர் தோழி.அவ்வப்பொழுது அவரது படைப்புகளை எனது பதிவில் போடுகின்றேன்.

ஸாதிகா said...

மிக்க நன்றி சி.பி செந்தில்குமார் சார்.

ஸாதிகா said...

ஜெரி ஈஸானந்தா சார்.அது எங்கள் வீட்டில் அமைத்த் தோட்டமல்ல.நம் நட்பு ஒருவருடையது.நன்றி.

ஸாதிகா said...

அடிக்கடி ஊர் சென்று விடுவதால் இயற்கை தோட்டத்திற்கு சிக்கலாகி விடுவதால்த்தான் இந்த செயற்கைத்தோட்டத்தை அமைத்து இருக்கின்றார்.நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ நாஞ்சில் மனோ

ஸாதிகா said...

மிக்க நன்றி மஹாவிஜய்

ஸாதிகா said...

//என்னவொரு அழகு., அதுவும் சென்னை மா நகரத்திற்குள் ..// என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள் நிஷாந்தன் சார்.சென்னை மாநகரம் இப்ப பூங்கா நகரமாகிக்கொண்டுள்ளது.இயற்கைய்வளம் கொழிக்கும் பூங்காக்கள் எத்தனையோ உள்ளது.

ஸாதிகா said...

//ரெண்டு கண்களையும் உங்க ப்ளாக் வாடகைக்கு எடுத்திருச்சு அஞ்சு நிமிடமாய்....!
// இர்ஷாத்,அற்புதமான ஊக்கவரிகள் என்பது இதுதானா?மிக்க நன்றி இர்ஷாத்

ஸாதிகா said...

கருத்துக்கும்,பாராட்டுக்கும் நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

அந்நியன் //.துறன்கிக்ருஇ ககாழஅ
// கொஞ்சம் புரிகின்ற பாஷையில் பின்னூட்டினால் நானும் தெரிந்து கொள்வேனே.இறுதியில் வாழ்த்தி இருக்கீங்க.மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோ இராஜராஜேஸ்வரி கருத்துக்கு மிக்க நன்றி.

இமா க்றிஸ் said...

தோட்டத்தை வெகு ரசனையோடு அமைத்திருக்கிறார்கள். உங்கள் தோழிக்கு என் பாராட்டுக்கள்.

எம் அப்துல் காதர் said...

கண்ணுக்கு குளிர்ச்சியான பகிர்வு. ரசனை உள்ளவர்களுக்கு!!!

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி அப்துல் காதர்.

Vijiskitchencreations said...

beauitful garden.