December 26, 2010

இனிய இல்லம் - 3

இனிய இல்லம் மூன்றாம் பாகத்தினை படிப்பதற்கு முன் படிக்காதவர்கள் முதல் இரண்டு பாகங்களையும் பார்க்க

இனிய இல்லம் முதல் பாகம்

இனிய இல்லம் இரண்டாம் பாகம்

சமையலறை

ஒரு இல்லத்தின் மிக முக்கியமான அறை.நல்ல காற்றோட்டத்துடனும்,வெளிச்சத்துடனும் அமையப்பெற்று இருப்பது அவசியம்.சில இல்ல சமையல்கட்டுகளில் மேடை முழுக்க பொருட்களை நிறைத்து வைத்திருப்பார்கள்.ஸ்டவ் தவிர மிக அத்தியாவசிய பொருட்கள் ஓரிரண்டு இருந்தால் தான் பார்க்க அழகாகவும்,சுத்தம் செய்ய எளிதாகவும் இருக்கும்.மிக்ஸி,எலெக்ட்ரிக் குக்கர் போன்றவற்றை உபயோகித்து விட்டு,அப்புறப்படுத்தும் வசதி இருந்தால் எடுத்து உள்ளே வைத்து விட்டால் இன்னும் பளிச் என்றாகி விடும்.இரண்டடி அகலத்தில் நாண்கு அடுக்குகள் கொண்ட மரத்தாலான செல்பை செய்து சமையல் கட்டில் ஒரு ஓரமாக வைத்து இருந்தால் ஒவ்வொரு அடுக்கிலும் எலெக்ட்ரிக் குக்கர்,டேபிள்டாப் கிரைண்டர்,மைக்ரோவேவ் அவன்,மிக்ஸி,கிரில்ட் அவன் ,டோஸ்டர் போன்ற மின்சார உபகரணங்களை வைத்துக்கொண்டால் இடம் அடைத்துக்கொள்ளும் அவஸ்தை இருக்காது.மிகவும் வசதியாக இருக்கும்.முயற்சித்துப்பாருங்களேன்.

நெய் வாங்கும் பொழுது கிடைத்த பாட்டில்,பருப்புப்பொடி வாங்கும் பொழுது தந்தது,தேயிலை ,காப்பித்தூளுக்கு கிடைத்த இலவச பாட்டில்களை அப்புறப்படுத்தி விட்டு ,ஒரே மாதிரி அளவுள்ள பெட் பாட்டில்களை மளிகை பொருட்களை நிரப்புங்கள்.பருப்பு ,உப்பு,சர்க்கரை போன்றவற்றுக்கு ஒரே அளவுள்ள பெரிய சைஸ்பாட்டில்களை வாங்கி வைத்தால் பார்க்க அழகாக இருக்கும்.இந்த பாட்டில்களை கையாளும் பொழுது ஈரக்கையினால் எடுப்பதை தவிர்த்தால் அழுக்கு படிவதை தவிர்க்கலாம்.மாதம் ஒரு முறை சோப்பு நீரினால் கழுகி உலரவைத்து எடுத்தல் அவசியம்

நம் வசதிக்காக பாத்திரங்களை அளவுக்கதிகமாக வைத்திருந்தாலும் சமையலறை அலங்கோலமாகி விடும்.ஆகவே அளவான பாத்திரங்களை வைத்து சமைக்க பழகிக்கொண்டால் அடுக்களையும் சுத்தமாகும்.வேலை செய்பவரும் காத தூரம் ஓடமாட்டார்.

கிச்சன் சின்க் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக,உலர்ந்த நிலையில் இருந்தால் பூச்சிகள் வருவது குறையும்.எச்சில் பாத்திரங்களை அதனுள் போட்டு வைக்காமல் இருப்பதே நல்லது.

ஸ்டோர் ரூம்:
ஒரு வீட்டுக்கு ஸ்டோர்ரூம் அமையப்பெற்று இருந்தால் சுத்தத்தை அதிகம் பேணலாம்.வாய்ப்பு இருப்பின் ஸ்டோர் ரூம் இணைக்கத்தவறாதீர்கள்.ஸ்டோர் ரூம்தானே என்று பொருட்களை அடைசலாக வைத்து இராமல் அதிலும் உங்களின் சுத்த பரமரிப்பைத்தொடருங்கள்.

சாப்பாட்டறை:
சாப்பாட்டு மேசையில்; தேவை இல்லாத பொருட்கள் பரப்பி இருப்பதை ஒரு போதும் அனுமதிக்காதீர்கள்.எப்பொழுதும் துடைத்து சுத்தமாக வைத்திருங்கள்.அதன் நாற்காலிகள் மீது ஈர டவல்கள் போன்றவை தொங்குவதை தவிர்த்து விடுங்கள்.சாப்பிட்டதும் உடனுக்குடன் சுத்தம் செய்து பாத்திரங்களை அப்புறப்படுத்தி விடுங்கள்.ஊறுகாய்,சாஸ்,நெய்,உப்பு,பொடிவகைகள் போன்றவற்றை உள்ளே எடுத்து வைக்கும் வசதி இல்லாவிட்டால் அழகாக ஒரு டிரேயில் அடுக்கி ஓரமாக வைத்தால் பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.

பரண்:
இதிலும் கசகச வென்று சாமான்கள் அடைத்து வைக்காமல் பெரிய அட்டைப்பெட்டிகளில் கட்டி.உள்ளே எனென்ன பொருட்கள் இருப்பது என்ற லிஸ்டை ஒரு பேப்பரில் எழுதி அட்டை பெட்டி மேல் ஒட்டி லாஃப்டில் அடுக்கி வைத்தால் எடுப்பதற்கு சுலபமாக,பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும்.


படிப்பறை:
படிக்கும் அறையில் புத்தக அலமாரியில் பொருட்களை அளவுக்கு அதிகமாக அடுக்கி,நேர்த்தி இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு படிக்கும் மூடே போய் விடும்.மேசை மீது ஓரத்தில் புத்தகங்களை அடுக்கி வைத்து விட்டு வேலை செய்வதற்கு ஏற்ற வாறு இடம் ஒதுக்கி இருக்க வேண்டும்.பேனா,பென்சில்களுக்கு ஸ்டாண்ட்,பேப்பர் குப்பைகளை போட சிறிய குப்பைத்தொட்டிஎன்று வைத்து குழந்தைகளுக்கு நல்ல பழக்கத்தை வலியுறுத்துங்கள்.எந்தெந்த பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றது என்று தூக்கத்தில் எழுப்பிக்கேட்டாலும் டக் என்று சொல்லும் அளவு பிள்ளைகளை நாம் சீர்படுத்தினால அவர்களின் சிந்தனையும் சீராக தெளிவாக அவர்களை நேர்வழிப்படுத்தும்.

உங்கள் இல்லம் எளிமையாக இருந்தாலும் சுத்தமாக அழகாக,ரசனை மிக்கதாக அமைந்து உங்கள் இனிய இல்லம் சொர்க்கமாக அமைய வாழ்த்துக்கள்.

41 comments:

ஆமினா said...

பரண்ல அடுக்கி வைக்கிற பெட்டில என்ன ஜானாம் இருக்குன்னு எழுதி வைக்கிறது தான் என்னை ரொம்ப ரொம்ப கவர்ந்த டிப்ஸ் அக்கா....

ஒரு ஜாமான் எடுக்குறதுக்குள்ள உயிரே போயிடும்....

நல்ல நல்ல உபயோகமான டிப்ஸா குடுத்துருக்கீங்க!!

enrenrum16 said...

சின்ன சின்ன ஐடியாவும் வீட்டுக்கு அழகைக் கொடுக்கும்னு அழகா ஆணித்தரமா சொல்லியிருக்கீங்க அக்கா... வீட்டை சுத்தமாக வைத்திருக்க நாம் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நம் பிள்ளைகளுக்கு இன்ஸ்பிரேஷனாக அமையும்கறதும் நூத்துக்கு நூறு உண்மைதாங்க.

இன்ஷா அல்லாஹ் சொந்த வீடு கட்டும்போது உங்க டிப்ஸ் பல எனக்கு உதவும். நன்றி.

Vaitheki said...

நன்றாக உள்ளது, சுகாதாரமான வீடு பராமரிப்பிற்கு அவசியமானது, வருங்காலத்தில் எனக்கு தேவைப்படும். பகிர்வுக்கு நன்றி!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா பதிவும் அதற்கேற்ற படமும் போட்டு அசத்ட்திட்டீங்க

அந்நியன் 2 said...

ரொம்ப அழகா தொகுத்திருக்கியே வாழ்த்துக்கள் !



//ஒரு ஜாமான் எடுக்குறதுக்குள்ள உயிரே போயிடும்....//

அமைதியா..பொறுமையா..ஜாமானை வச்ச இடத்தை பார்த்து எடுக்கணும்.படபடன்னு எடுத்தால் அப்படித்தான்.

Unknown said...

நல்ல நல்ல டிப்ஸ்.
ஒரு வீடு இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக அழகாகத்தான் இருக்கும்.:)
..........ஆனால் இருக்காது :(

ராஜவம்சம் said...

நல்ல உபயோகமான பயனுள்ள தகவல்.

வீடு என்றால் மகிச்சியாக இருக்கவேண்டும் சுத்தமாக இருந்தாலே மனசு மகிழ்ச்சி்யாக இருக்கும்.

தூயவனின் அடிமை said...

எல்லாம் நல்ல இருக்கு, வீட்டை பராமரிக்க முடியல சகோதரி ,எல்லாம் அனுபவம் தான்.

Learn said...

அருமையாக உள்ளது பயனுள்ள தகவல்

தமிழ்த்தோட்டம்

www.tamilithottam.in

RAZIN ABDUL RAHMAN said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.

நல்ல பதிவு..இல்லப்பராமரிப்பு என்பதே தனி கலைதான்,எனக்கு அதில் அதீத ப்ரியம் உண்டு..இருந்தாலும்.நாம் வீட்டில் அதிகம் தங்காதவர்கள்.வீட்டில் இருக்கும் பெண்கள் அதை நிறைவாக செய்தால்,தாங்கள் சொல்லிய குறிப்புகள் செய்லவடிவம் பெரும்..

படங்கள் அருமை..

அன்புடன்
ரஜின்

Asiya Omar said...

நல்ல பகிர்வு,பெண்கள் கொஞ்சம் சோம்பல் பட்டால் போதும்,இனிய இனிய இல்லம் இன்னல் இல்லம் தான்,அருமையான பகிர்வு தோழி,ஸ்டோர் ரூமை சரி பண்ணப்போறேன்,எனக்கு நிறைய வேலை இருக்கே.

சாருஸ்ரீராஜ் said...

உபயோகமான டிப்ஸ்

Vijiskitchencreations said...

பார்க்க படிக்க அழகாத்தான் இருக்கு.
நடைமுறையில் எடுத்த இடத்தில் வைப்ப்தில் மீண்டும் வைப்பத்தில் தான் எல்லாமே இருக்கு.
நல்ல அருமையான படங்களோட டிப்ஸ் சூப்பர்.

சிவகுமாரன் said...

படத்துல இருக்கிறதெல்லாம் உங்க வீடுங்களா ? கண்ணு பட்டுறப் போகுது.

சிநேகிதன் அக்பர் said...

உபயோகமுள்ள தகவல்கள்.

vanathy said...

நல்ல டிப்ஸ், அக்கா. நான் இப்ப தேவையில்லாமல் எந்தப் பொருளும் வாங்குவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு. அனாவசிய செலவும், இடமும் மிச்சம்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆமினா.

ஸாதிகா said...

இன்ஷா அல்லாஹ்.பானு விரைவில் சொந்த வீடு கட்டி இதனைப்பின் பற்றுங்கள்.வாழ்த்துக்கள்.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி பாரதிவைதேகி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலி.

ஸாதிகா said...

//அமைதியா..பொறுமையா..ஜாமானை வச்ச இடத்தை பார்த்து எடுக்கணும்.படபடன்னு எடுத்தால் அப்படித்தான்.
// உண்மைதான் அந்நியன்.கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//ஒரு வீடு இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக அழகாகத்தான் இருக்கும்.:)
..........ஆனால் இருக்காது :(
// என்ன சுல்தான் பாய் இப்படி சொல்லிட்டீங்க..!:-)கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//வீடு என்றால் மகிச்சியாக இருக்கவேண்டும் சுத்தமாக இருந்தாலே மனசு மகிழ்ச்சி்யாக இருக்கும்.
// மிக உண்மையான வார்த்தை சகோ ராஜவம்சம்.சுத்தமாக இருந்தாலே மனம் நிறைவாக இருக்கும்.நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இளம் தூயவன்.

ஸாதிகா said...

அப்துல் காதர் விருதுக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

தமிழ்த்தோட்டம்,மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் வஸ்ஸலாம் சகோ ரஜின்.//.வீட்டில் இருக்கும் பெண்கள் அதை நிறைவாக செய்தால்,தாங்கள் சொல்லிய குறிப்புகள் செய்லவடிவம் பெரும்..
// இதில் பெண்களின் பங்கு அதிகம்தான்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ம்ம்...போங்க தோழி.ஸ்டோர் ரூமை நல்லா சுத்தப்படுத்திட்டு வாங்க.சும்மா சொல்லக்கூடாது.உண்மையில் உங்கள் அல் ஐன் வீட்டை பார்க்கறப்போ சுத்தம் பளிச் என்று தெரிந்தது.நன்றி தோழி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சாருஸ்ரீராஜ்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி அக்பர்.

ஸாதிகா said...

//படத்துல இருக்கிறதெல்லாம் உங்க வீடுங்களா // இல்லை சிவகுமார் சார்.படங்கள் கூகுள் உபயம்.கருத்துக்கு மிக்க நன்றி .

ஸாதிகா said...

நன்றி விஜி.

ஸாதிகா said...

//நான் இப்ப தேவையில்லாமல் எந்தப் பொருளும் வாங்குவதில்லை என்று முடிவு எடுத்தாச்சு.// நானும்தான் இந்த முரையை எப்போ இருந்தே பின் பற்றுகின்றேன்.சுத்தத்துக்கு சுத்தம் ஆச்சு.பர்சும் இளைத்துப்போகாது.கருத்துக்கு நன்றி வானதி.

ஹுஸைனம்மா said...

அக்கா, அருமையான டிப்ஸ்கள். எல்லாமே உங்க அனுபவத்தில இருந்து வருதுன்னு புரியுது. இந்தப் பதிவுக்கு கூகிள்ல இருந்து படங்களைப் போடாமல், உங்க வீட்டையே படம் பிடிச்சு போட்டிருந்தால் சுல்தான்பாய் இப்படிக் கேட்டிருக்க மாட்டார்!!

//சுல்தான் said...
ஒரு வீடு இப்படியெல்லாம் இருந்தால் நன்றாக அழகாகத்தான் இருக்கும்.:) ..........ஆனால் இருக்காது :(//

சுல்தான் பாய், இருக்கும், இருக்க முடியும்!! பக்கத்திலதானே இருக்கீங்க, என் வீட்டுக்கு வாங்க, எப்படின்னு காட்டுறேன். :-))))

(எங்க வீட்டுல தினந்தினம் சண்டை நடக்கிறதும் இதனாலத்தான்!! :-((( )

ஸாதிகா said...

ஹுசைனம்மா,எங்கள் வீடு எளிமையான சுத்தம்.கூகுளில் இருந்து எடுக்கப்பட்டவை ஆடம்பரமான சுத்தம்.நீங்களும் எங்கள் வீட்டுக்கு வந்து பார்த்துட்டு சொல்லுங்கள்.நான் அபுதாபி வரை வந்தும் என்னை அழைத்துக்காட்டாமல் கடைசிவரை ஏமாற்றி விட்டீர்களே!:-(

ஹுஸைனம்மா said...

//நான் அபுதாபி வரை வந்தும் என்னை அழைத்துக்காட்டாமல் //

எக்கா, நெஞ்சில கைய வச்சுச் சொல்லுங்க!! நான் கூப்பிடலையா? நீங்கதான் ஃப்ரீயா ஃபோன்ல பேசக்கூட முடியாத அளவு பிஸியா இருந்தீங்களே இங்க வந்தப்போ!! உங்களை வச்சு ஒரு மீட்டிங் போடதுக்குள்ள நான் பட்ட பாடு.. என்னா பிஸி, என்னா பிஸி... ஜெ. கூட இம்புட்டு பிஸியா இருப்பாகளான்னு சந்தேகந்தான்!! ;-)))))))

Imran Saheer said...

சிறப்பான பதிவு. வாழ்த்துக்கள்

குறையொன்றுமில்லை. said...

மிகவும் உபயோகமான தகவல்கள். படத்தில் உள்ளது உங்க வீடா. சூப்பரா இருக்கு.

ஜெய்லானி said...

இது வீட்டம்மாவின் வேலை.. பிரிண்ட் எடுத்துதான் குடுக்கனும் ..எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்...!!

Anonymous said...

இனிய இல்லம் மூன்று பாகங்களையும் படித்தேன் மிக நுனுக்கமான பயனுள்ள தகவல்களை கொடுத்தற்கு நன்றி

mohamedali jinnah said...

அருமையான தொடர். மேலும் தொடர வாழ்த்துகள். எங்கள் தந்தை வீடு கட்டும்பொழுதே தொழுகை அறை ஒன்று வைத்து கட்டினார்கள். இதுவும் மிகவும் அவசியம் என்பது என் கருத்து. உங்களது இல்லங்களை கபர்களாக, மண்ணறைகளாக ஆக்கிக்கொள்ளாதீர்கள்" என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கூறப்பட்டதன் பொருள் வீட்டிலும் தொழுக வேண்டும் என்பதுதான். ஃபர்ளு அல்லாத, ஃபர்ளுக்கு முன் தொழக்கூடிய சுன்னத்துல் வக்ரா" 12 ரக் அத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலேயே தொழுதார்கள்.
நாம் ஒரு வீட்டிற்குச் சென்றால் அழகுடன் அமைக்கப்பட்ட கூடம் ,படுக்கை அறை.அடுப்பங்கறை குளியலறை மற்றும் கழிவறைகளை அழகுபடுத்திருப்பதனைக் காட்டி மகிழ்வார்கள் ஆனால் அந்த வீட்டில் ஒரு தொழுகை அறை இல்லாமல் செய்து விட்டார்களே என்ற வருத்தம் வந்தாலும் அதனை சொல்லி அவர்கள் மகிழ்வைக் குறைக்காமல் வருவதுண்டு. தொழுகை அறையில் அவர்கள் தொழுவதற்கு குறிப்பாக பெண்களுக்கு ஒரு தூண்டுதலாக அமையலாமல்லவா!