November 1, 2010

சென்னை மால்கள்

கடந்த நூற்றாண்டில் சிறிய அளவு உருவாக்கப்பட்ட சென்னை நகரின் மத்தியில் அமையப்பட்ட ஸ்பென்சர் பிளாசா விருட்சமாக வளர்ந்து சென்னையின் முக்கிய அடையாளமாக கொடி கட்டி பறந்தது.

அதனைத்தொடர்ந்து பிரின்ஸி பிளாஸா,அல்சாமால் ,சிசன் காம்ப்ளக்ஸ் போன்றவை எக்மோரில் அடுத்தடுத்து உதயமாகியது.1990 களில் இளசுகளின் சரணாலயமாக அல்சா மால் விளங்கியது என்றால் மிகை அல்ல.நாகரீகமே அங்கிருந்துதான்ஆரம்பம் என்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தியது.அல்சா மால் செல்லாத காலேஜ் கெய்ஸ் இல்லவே இல்லை எனும் அளவுக்கு இளம் பருவத்தினர் ஒரு காலம் இம்மாலில் ஆட்சி புரிந்தனர்.அதே பகுதியில் பவுண்டன் பிளாசா தோன்றியது.அன்றைய நாகரீக யுகத்தின் ஆடை,அணிகலண்கள்,அழகை மெருகேற்றும் அலங்காரச்சாமான்கள்,வாசனைத்திரவியங்கள் என்று கொட்டி கிடப்பதை கண்டு இளசுகள் மட்டுமல்லாமல்,பெரியவர்களும் படை எடுத்து சென்றனர்.

இதே போல் மவுண்ட் ரோடில் பார்ஸன் காம்ப்ளக்ஸ்,நுங்கம்பாக்கத்தில் இஸ்பஹானி செண்டர்,சேத்துப்பட்டில் ஷாப்பர் ஸ்டாப்,புரசைவாக்கம் அபிராமி மால்,வட சென்னையில் பத்னி பிளாசா,தி.நகர் -- பாண்டிபஜாரில் சிறிதும் பெரிதுமாக மாயா பிளாசா,பாத்திமா பிளாசா,செல்லாமால் ,காசி ஆர்கேட்,ஜி என் செட்டி ரோடில் அங்கூர் பிளாஷா ,வடபழனியில் ராஹத் பிளாஸா போன்றவை ஆங்காங்கே உதயமாகியது.


இவை எல்லாம் ஒரு புறம் இருக்க மைலாப்பூரில் உதயமான சிட்டி செண்டர் சென்னைக்கு ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி பரபரப்பாக பேசப்பட்டது.இளையவர்கள் மட்டு மின்றி பெரியவர்கள்,முதியவர்கள் கூட வீல் சேரில் வந்து ஆவலுடன் சுற்றி ,ஷாப்பிங் செய்து அந்த ஷாப்பிங் மாலையே கலகலப்பாகி விட்டனர்.ஹைடெக் திரை அரங்குகள்,சர்வதேச தரத்தில் உணவகங்கள்,சூப்பர்மார்க்கெட்டுகள்,பிராண்டட் ஷாப்கள் என களைகட்டியது.

அதனைத்தொடர்ந்து அமிஞ்சிகரையில் அம்பா ஸ்கை வாக் உதயமாகி அந்த சாலையையே ஸ்தம்பிக்க வைத்து விட்டது.
சமீபமாக ராயப்பேட்டையில் இவற்றை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் வகையில் பிருமண்டமான அளவில் எக்ஸ்பிரஸ் அவென்யூ உதயமாகி சக்கை போடு போட்டுக்கொண்டுள்ளது.

புதிய புதிய மால்கள் உதிக்க ,உதிக்க பழைய மால்கள் களை இழந்து வருவது வருந்ததக்க உண்மை.நாளொன்றுக்கு சுமார் ஒரு லட்சம் நபர்கள் வந்து செல்லக்கூடிய ஒரு மாலில் மற்றுமொரு புதிய மால் உருவான காரணத்தினால் வெறும் 20000 - 30000 நபர்கள் மட்டுமே வந்து செல்லக்கூடிய நிலை ஏற்படுத்தி விட்டது.

வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்க என்னென்ன திட்டங்கள்,சலுகைகள்,குலுக்கல்கள்,பரிசுகள் வழங்க முடியுமோ அத்தனையும் வழங்கி பிரயத்தனப்பட்டு வருகின்றதுதான் இன்றைய மால்களின் நிலை

பல வணிகவளாகங்களில் சூப்பர்மார்க்கெட்டுகள் களை இழந்து போய்க்கொண்டுள்ளது.வெளி நாடுகளில் மக்கள் தொகை குறைவாக இருந்தாலும்,இங்குள்ளதை விட அதிகளவு எண்ணிக்கையில் மால்கள் எங்கெங்கும் கொட்டிக்கிடந்தாலும் அங்கு எப்பொழுதும் ஈ மொய்ப்பதைப் போல் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுவதை காணலாம்.ஆனால் மக்கள் தொகை பன்மடங்கு அதிகளவு உள்ள சென்னையில் ஏன் இப்படி என்று மனம் ஒப்பிட்டு,அலசிப்பார்க்கும் பொழுது புரிகின்றது ஒரு நிஜம்.
100 கிராம் சர்க்கரையும்,25 கிராம் தேயிலையும் அன்றாடம் வாங்கி டீ போட்டு காலையில் குடிப்பவர்கள் அதிகம்.பாக்கெட் ஷாம்பூ வாங்கி குளித்து விட்டு காலை உணவுக்கு 1/4 கிலோ ரவையையும் மதிய உணவுக்கு 1/2 கிலோ அரிசியும் 100 கிராம் பருப்பும்,50 மில்லி சமையல் எண்ணெயும் வாங்கி செல்பவர்கள் அதிகம்.கீழ்த்தட்டு மக்கள் அதிகம் வசிக்கும் இங்கே இவர்கள் 100 கிராம் சர்க்கரையும் ,50 கிராம் தேயிலையும் சூப்பர் மார்க்கெட் சென்றா வாங்க முடியும்?அண்ணாச்சி கடைகளை நாடித்தான் செல்லுவார்கள்.

அதே சமயம் இதே அண்ணாச்சி கடைகளுக்கும்,சூப்பர் மார்க்கெட்டுகளுக்கும் விலையில் நிறைய வித்தியாசம் இருப்பதால் நடுத்தர வர்க்கத்தினர் கூட பெரிய மால்களில் சென்று ஷாப்பிங் செய்யப்பயப்படுகின்றனர் என்பது என்னவோ உண்மை.

இந்த ரீதியில் சென்றால் ,பிருமாண்டமாக பெரிய பெரிய மெகா மால்கள் உருவெடுத்துக்கொண்டிருந்தால் பழைய மால்கள் நிலைமை கவலை அளிக்கக்கூடியதாகவே உள்ளது.
வரவிருக்கும் பெரிய மால்கள் பற்றி அறிய இங்கே பாருங்கள்

29 comments:

kavisiva said...

சாதிகா அக்கா இந்தியாவை விட இந்தோனேஷியாவில் பொருளாதாரம் படு மோசம். ஆனால் மால்களுக்கும் குறைவில்லை. அங்கு கூட்டத்திற்கு குறைவில்லை. காரணம் பிராண்டட் சாதனங்களில் இருந்து விலை குறைந்த டூப்ளிகேட் சாதனங்கள் வரை இங்குள்ள சாதாரண மால்களில் வாங்க முடியும்.

அவரவர் வசதிக்கேற்ற பட்ஜெட்டுக்கு ஏற்ற பொருட்களை வாங்க முடியும். 100கிராம் சர்க்கரையும் கிடைக்கும்
(சில்லறைக் கடைகளில் கிடைப்பதை விட குறைந்த விலையில்) சென்னை மால்களிலும் இந்த நிலை இருந்தால் கூட்டத்திற்கு குறைவு இருக்காது.

Unknown said...

மால்களில் சாமான்கள் வாங்க போறோமோ இல்லையோ.. வாரம் ஒரு நாள் குழந்தை, கணவருடன் டைம் ஸ்பெண் பண்ண நல்லா இருக்கும்..

சில நாட்களுக்கு முன் அபிராமி மாலில் குழந்தைகள் விளையாட மாடிக்கு போகலாம் என்று லிப்டில் ஏறினனல் 4 பேருக்கு மேல் ஏற முடியவில்லை.. ரொம்பநேரம் வெயிட் பண்ணி லிப்டில் ஏற முடியவில்லை மாடி ஏறி போனால் மிக பெரிய ஏமாற்றம் அங்க பவர் இல்லை.. ஒரே இருட்டு. பராமாறிப்பு சரியில்லை..

குழந்தைகள் விளையாடும் இடத்தினில் தனி கவனம் செலுத்தினால் நல்லா இருக்கும்..

போட்டோஸ் நீங்க எடுத்ததா ரொம்ப நல்லா இருக்கு.

புதிதாக உதயம் ஆகும் மால்களை சென்னை வந்த பின்பு தான் பார்க்கனும்...

Asiya Omar said...

பகிர்வு அருமை,சமுதாய நோக்கோடு கூடிய உங்கள் இடுகைகள் தொடர வாழ்த்துக்கள்.

ராம்ஜி_யாஹூ said...

express avenue is not that larger than spencers. EA is poorly maintained especially car parking is pathetic

கிளியனூர் இஸ்மத் said...

அடேங்கப்பா சிங்கார சென்னையில இவ்ளோ மால்களா...? நல்ல தகவல்...

Chitra said...

The rich gets richer .... The poor gets poorer.... :-(

ஸாதிகா said...

//சில்லறைக் கடைகளில் கிடைப்பதை விட குறைந்த விலையில்) சென்னை மால்களிலும் இந்த நிலை இருந்தால் கூட்டத்திற்கு குறைவு இருக்காது.//சரியாக சொன்னீர்கள் கவிசிவா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சிநேகிதி.விரைவில் சென்னை வாருங்கள்.அதற்காகத்தான் வெயிட்டிங்.//போட்டோஸ் நீங்க எடுத்ததா ரொம்ப நல்லா இருக்கு.// இல்லை.கூகுள் உபயம்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஆசியா

ஸாதிகா said...

சகோதரர் இஸ்மத் வருகைகு நன்றி.நான் அறிந்த,நினைவில் வந்த மால்கள் மட்டும்தான் இவை.

ஸாதிகா said...

சரியாக சொன்னீர்கள் சித்ரா.கருத்திட்டமைக்கு நன்றி.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. இந்தப் பதிவை எழுதுறேன்னு நல்லா மால்சுத்திப் பாத்திருக்கீங்க போல, அதான் ஆளைக் காணோமா, கொஞ்ச நாளா!! :-)))))

நல்ல அலசல்!! (பிழிஞ்சு காயப்போட்டுறாதீங்க - என்னை!!) ;-)))

ஒரு (முன்னாள்) பத்திரிகையாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கீங்க. உங்க எழுத்துநடையே சொல்லும்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

சென்னையில் உள்ள மால்களை பற்றி அருமையான விளக்கத்துடன் தொகுத்து தந்ததுக்கு மிக்க நன்றி ஸாதிகாக்கா. நல்ல பகிர்வு .

மின்மினி RS said...

///ஹுஸைனம்மா said...

ஒரு (முன்னாள்) பத்திரிகையாளர் என்பதை அவ்வப்போது நிரூபித்துக் கொண்டே இருக்கீங்க. உங்க எழுத்துநடையே சொல்லும்.///

எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு.. நல்ல அலசல் ஸாதிகா அக்கா.

Mahi said...

நல்ல தகவல்கள் ஸாதிகாக்கா! இங்கேயும் சாதாரண கடைகளில் கிடைக்கும் விலையை விட மால்கள்-ல அதிகமாத்தான் இருக்குது,ஆனா ஒரு சில கடைகள்ல சீப்-ஆகவும் இருக்கும். பொறுமையா தேடிப்பிடிக்கணும்.

இலா said...

சூப்பர்! சென்னையில் இருந்த காலத்தில ஸ்பென்சர்/அல்சா மால்/ஷாப்பர்ஸ் ஸ்டாப் இவ்வளவு தான் போயிருக்கிறேன்.. மால்களின் வளர்ச்சியை கண்டால் பயமாக இருக்கு. இதே போல தான் பெரிய கார்ப்பரேஷன்களின் வளர்ச்சியால் சின்ன சின்ன ஸ்தாபனங்கள் ( பாரம்பரிய) அழிந்து வருகிறது.

Chitra said...

நான் அந்த பலகாரங்கள் செய்யலைங்க.... அப்படி செஞ்சு இருந்தால், உங்களுக்கு போட்டியா "கடையை" திறந்து இருப்பேனே.... ஹி,ஹி,ஹி,ஹி....

சிங்கக்குட்டி said...

வளரும் நாட்டுக்கு இதுவும் ஒருவகையில் தேவைதான்.

இன்னும் சில வருடங்களில் இதன் பலன் கிடைக்கும், வெளிநாட்டை போல நம் நாடும் சுத்தமாகும்.

இந்த முறை இந்தியாவில் இருந்தபோது "ஸ்கை வாக்" தான் எங்கள் நண்பர்கள் சந்திக்கும் ஸ்பாட் :-) .

பதிவுக்கு நன்றி.

Jaleela Kamal said...

dubai yil uLLa mall kaL poola thaan ippa chennaiyilum.
ella super oru alasu alasiddiingka

ஜெய்லானி said...

புதியது வரும் போது பழசுக்கு மதிப்பு குறைவது எங்கும் வழக்கம் தானே..!!.எப்பவுமே விலை,மற்றும் மெயிண்டெனனஸ் சரியா இருந்தா கூட்டம் குறையாது. நல்ல அலசல்..!! :-))

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

//எங்களுக்கெல்லாம் ரொம்ப பெருமையா இருக்கு..// மின்மினி நம்ம ஹுசைனம்மா என்னை கலாய்ப்பதற்காக ஏதோ சொல்லுகின்றார் என்றால் அதனை நீங்க ரீபிட் பண்ணுறீங்களே:) பின்னூட்டத்திற்கு நன்றி.அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள்.இனி அடிக்கடி தொடர்ந்து பதிவு,பின்னூட்டம் இடுவீர்கள் என நம்புகிறேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

//வளரும் நாட்டுக்கு இதுவும் ஒருவகையில் தேவைதான்.
// உண்மை வரிகள் சிங்கக்குட்டி.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வாங்க இலா.அடுத்த முறை இந்தியா வரும் பொழுது சென்னைக்கு வந்து புதிய மால்கள் அனைத்தையும் பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//அப்படி செஞ்சு இருந்தால், உங்களுக்கு போட்டியா "கடையை" திறந்து இருப்பேனே.... ஹி,ஹி,ஹி,ஹி..// சித்ரா,நம் இணைய நட்புக்கள் அநேகர் வலைப்பூவில் சாப்பாட்டுக்கடை விரித்திருப்பதால்த்தான் நான் போட்டியாக இதுவரை ஆர்ம்பிக்கவில்லை.

ஸாதிகா said...

உண்மைதான் ஜலி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//புதியது வரும் போது பழசுக்கு மதிப்பு குறைவது எங்கும் வழக்கம் தானே..//சரியாக சொன்னீர்கள் ஜெய்லானி.கருத்துக்கு நன்றி.

புல்லாங்குழல் said...

சென்னையில் இத்தனை மால்கள் இருப்பதே உங்கள் பதிவுக்கு பின் தான் தெரிகிறது. துபாயில் 'துபாய் மால்' என்ற மிகப் பெரிய மால் ஆரம்பித்து தூங்கி வழிகிறது. துபாய் சிட்டி சென்டர் வழக்கம் போல் சக்கை போடு போடுகின்றது.