October 11, 2010

ஆற்றல் யாருக்கு அதிகம்?

ஆற்றல் யாருக்கு அதிகம்?

எங்கள் வீட்டு வட்டமேஜை மாநாட்டில் (அதாங்க..டைனிங் டேபிள்) அமர்ந்து சாப்பிட்டோமா எழுந்தோமா என்றிராமல் (ஒரு வேளைஅன்றைய மெனு "உப்புமா"ன்னா இந்த பதிவே ஜனித்து இருக்காதாயிருக்கும்)வாய் லொடலொடத்ததில் "விஷ்க்.."என்று ஒரு வினா என் வாயில் இருந்து புறப்பட்டதுதான் மேலிருக்கும் தலைப்பு.

இப்படி மொட்டையா சொன்னா எப்பூடீ? எனக்கேட்கப்படாது.மேலே படியுங்கோ.

ஆற்றல் யாருக்கு அதிகம் ஆணுக்கா?பெண்ணுக்கா?

பலத்த யோசனைக்குப்பிறகு"வேறு என்னத்தை சொல்ல?பெண்களுக்குத்தான்"2010 இன் மகா சரண்டர்.இது யாரா இருக்கும்?சாட்சாத் என் ரங்ஸ்தான்.(அப்புறமா வழியில் போகிற ஓணானை எதுக்கு மடியில் கட்டிக்கிட என்ற டயலாக் அடித்தது எல்லாம் வேறு விஷயம்.)
சரி இது எவ்வளவுதூரம் உண்மை என்று விஞ்ஞானப்பூர்வமாகவும்,அனுபவப்பூரவமாகவும் அறிந்ததை அலசுவோமா?
அதுக்கு முன்னாடி இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!

1.உலகில் இனப்பெருக்கம் என்பது அத்தியவசியமானது.இது இல்லையேல் உலகமே ஸ்தம்பித்து விடும்.இதற்கு பெரும் பங்கு வகிப்பது தங்கமணிகள்தான்.

2.அறிவை வளர்க்கும் புனித இடமான கல்விஸ்தலங்களில் பெரும்பான்மையினர் பெண்கள்தான்.ஏனெனில் அவர்களுக்குத்தான் பொறுமை அதிகம் என்று கல்வி நிர்வாகத்தினரால் தேர்ந்தெடுத்து வெற்றியும் பெறுகின்றனர்.

3.ஆண் குழந்தையை விட பெண் குழந்தைகள் தான்எல்லாவற்றிலும் அதாவது குப்புறப்படுப்பது,சிரிப்பது,தவள்வது,நடப்பது,பேசுவது எல்லாம் முந்திக்கொண்டு செய்கின்றனர் என்பது விஞ்ஞான உண்மை.(எத்தனையோ வீடுகளில் "என் பிள்ளை பேசவே மாட்டேன்கிறான்" என்று ஒரு தாய் விசனப்படும் பொழுது "ஆண் பிள்ளை லேட்டாகத்தான் பேசும்" என்று சொல்லுவது வாடிக்கை.

4.ஒரே கேள்வியை பலவித கோணத்தில் அலுக்காமல் கேட்டு உண்மையை அறியும் வல்லமை இவர்களுக்கே உண்டு.

5.மற்றவர்கள் அறியக்கூடாது என்று குரலை தாழ்த்தி கிசுகிசுப்பது முதல்,மற்றவர்களுக்கு எட்ட வேண்டும் என்று உச்சஸ்தாயியில் பேசுவதில் இவர்களுக்கு நிகரில்லை.

6.மோப்ப உணர்விலும் இவர்களை அடித்துக்கொள்ள வாய்ப்பில்லை.ஒரு உணவகத்திற்கு சென்றால் உணவுப்பொருளை மோப்பம் செய்தே இன்னென்ன சமையல் பொருட்கள் சேர்த்து செய்த உணவுப்பண்டம் இது கண்டு பிடித்து சொல்வது முதல் எதிர் பிளாட்டில் இருந்து வரும் வாசனை,கீழ் பிளாட்டில் இருந்து வரும் சமையல் வாசனையை நுகர்ந்து எளிதில் இன்னவகை உணவு என்று கண்டுபிடிக்கும் தகுதி இவர்களுக்கே உரித்தானது.

7.செவிப்புலனிலும் செம்மையானவர்கள்.என்னதான் ரங்ஸ் எரிச்சல் தாங்காமல் லோ பிட்ச்சில் முணுமுணுத்தாலும் கரெக்டாக பாயிண்ட் அறிந்து பிலு பிலு வென்று பிடித்துக்கொள்வதில் கில்லாடிகள்.

8.பார்வைத்திறனைப்பற்றி கேட்கவும் வேண்டுமா?ஒரு கூட்டமான இடத்துக்கு சென்றாலும் தெரிந்தவர் தலை இவர்களது கண்களுக்கு சட்டென சிக்கிவிடும்.கூடவே வரும் ரங்ஸிடம் சொன்னால் கூட "எங்கே..எங்கே.."என்று கண்களாலே தேடுவாரே ஒழிய ரங்கஸால் அந்த தெரிந்த தலையை கடைசி வரை கண்டு பிடிக்கவே முடியாது.

10.தொலைத்தொடர்பு நிறுவனங்கள் இவர்களால் மட்டுமே லாபம் ஈட்ட முடியும் என்பது திண்ணமான உண்மை.போனை எடுத்தால் அது அனலாக கொதிக்கும் வரை பேசித்தீர்ப்பதில் சூராதிசூரர்கள்.

11.வீட்டில் அலமாரிகளில் மலை போன்று குவித்து பொருட்கள் இருந்தாலும் கண்பார்த்ததும் கையால் எடுக்கும் திறமை இவர்களைத்தவிர வேறு யாருக்குண்டு?

12.எதைச்சொன்னாலும் சட்டுன்னு புரிஞ்சுக்கற கற்பூரப்புத்தி இவர்களுக்கே உண்டு என்பது கண்கூடான உண்மை.

13.அதிக தோழமை உணர்வு இவர்களுக்கு மட்டுமே உரித்தானது.சட்டென பழகி விடுதல் கைவந்த கலை.கணவரின் தோழர்களின் மனைவிகளை ஸ்நேகிதமாக்கிக்கொண்டு இருக்கும் பெண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்றும்,மனைவிகளின் தோழிமார்களின் கணவர்களை ஸ்நேகிதமாக்கிக்கொண்டிருக்கும் ஆண்களில் எத்தனை பேர் இருப்பார்கள் என்று நீங்களே கணக்குப்போட்டுப்பார்த்துக்கொள்ளுங்கள்.

14.பஞ்சப்பாட்டு பாடிக்கொண்டிருந்தாலும் கமுக்கமாக சேமிப்பில் செம கில்லாடிகள் இவர்கள் என்பதிலும் சந்தேகம் இல்லை.

15.பிறந்தகத்து உறவினர்களையும்,புக்ககத்து உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.

16.கடுகளவேணும் ஒரு சிறு பொருளைப்பார்த்தாலும் அது என்ன வென்று அடையாளம் கண்டு பிடிப்பதில் இருந்து மண்டையில் அது பற்றி ஏற்றிக்கொள்வது,மனசில் அது பற்றி படிக்கறது,பிரிதொரு சமயத்தில் அது எங்கே எப்படி,எவ்வளவுக்கு கிடைக்கும் என்பதில் ஞாபகம் வைத்துக்கொள்ளும் ஞானச்செல்விகள் இவர்கள் என்பதும் உண்மை.

17.ஒருத்தர் தெரிந்த மொழியில் பேசி புரியா விட்டாலும் புரிந்த மாதிரி காட்டிக்கொள்வது முதல்,புரியாதவர்களுக்கு புரியும் வரை அலுப்பு சலிப்பில்லாமல் திரும்பத்திரும்ப சொல்லி புரிய வைப்பதில் புண்ணியர்களும் இவர்களே.

18.செவிலியர்கள்,மருத்துவர்கள்,விமானப்பணிப்பெண்கள்..இப்படி அநேகர் சிரித்த முகத்துடன் வலம் வருவதில் பெண்களே அதிகம்.

19.பதின்ம வயதில் எப்படி இருந்தோமோ அப்படியே இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவதிலும்,அதனை செயல் முறைப்படுத்துவதிலும் பிரயத்தனப்படுவதில் இவர்கள்தான் முன்னனி யில் நிற்கின்றனர்.பெண்கள்,ஆண்களுக்கான ஜிம்களும் பியூட்டிபார்களிலும் சர்வே எடுத்தால் நிச்சயம் உண்மை புரியும்.அவ்வளவு ஏன்? எத்தனை வீடுகளில் காய்வகையாறாக்களை கட் செய்து முகம் முழுக்க அப்பிகொண்டும்,மூல்தானிமட்டியை பூசிக்கொண்டு முகத்தை காயவைத்துக்கொண்டும் பெண்கள் வலம் வருவதைப்பார்த்தாலே புரியும்.

20.இப்படியாக இயற்கையும் விஞ்ஞானமும்,சுற்றுப்புறமும் பெண்களுக்கு தன்னிகரில்லாத ஆற்றலை தந்திருப்பதை அனைவரும் ஒத்துக்கொள்ளுவார்கள்தானே?

இதே நேரம்"மங்கையாராய் பிறப்பதற்கு நல் மாதவம் செய்திடல் வேண்டுமம்மா" என்ற மொழியையும் நினைவு கூர்கின்றேன்.

டிஸ்கி:இதனை 2011 பெண்கள் தினமான மார்ச் ஏழு அன்று பதிவிடலாம் என நினைத்து பெண்களுக்கே உரித்தான அவசர குணத்தினால் இன்றே பப்லிஷ் செய்து விட்டேன்.




51 comments:

எஸ்.கே said...

அருமையாக உள்ளது! ஆதாரங்களும் பதிவும்! வாழ்த்துக்கள்!

நட்புடன் ஜமால் said...

அப்பவே பேச ஆரம்பிட்டுறாங்களா :)

(எனக்கும் பெண் குழந்தைதான்)

Asiya Omar said...

ஆற்றல் யாருக்கு அதிகம் என்று ஆராய்ச்சி செய்து முடிவை சப்மிட் செய்த ஸாதிகாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறேன்.வாழ்க டாக்டர் ஸாதிகா!

Menaga Sathia said...

ஆராய்ச்சி செய்து அசத்திட்டீங்க அக்கா...

ஹுஸைனம்மா said...

எக்கா, இது எல்லாமே உள்குத்து பாயிண்ட்ஸாவே இருக்குதே? நீங்களே யாருக்கோ எடுத்துக் கொடுக்கிற மாதிரியில்ல இருக்குது? :-(

நீங்க நல்லவரா, கெட்டவரா? :-)))

Starjan (ஸ்டார்ஜன்) said...

சிரித்து சிரித்து முடியல.... அப்புறமா வாரேன்.. ஐ யம் பிசி.

kavisiva said...

//ஆற்றல் யாருக்கு அதிகம் என்று ஆராய்ச்சி செய்து முடிவை சப்மிட் செய்த ஸாதிகாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி கௌரவிக்கிறேன்.வாழ்க டாக்டர் ஸாதிகா!//

ரிப்பீட்டேய் :).
மாதர் தம் பெருமையை அலசி ஆராய்ந்த மாதர் குல மாணிக்கமே நீவிர் வாழ்க பல்லாண்டு :)

மனோ சாமிநாதன் said...

“பிறந்தகத்து உறவினர்களையும்,புக்ககத்து உறவினர்களையும் பேலன்ஸ் செய்து ,சமாளித்து வாழ்வியலை அழகாக்குவதும் இவர்களே.”
அழகான வரிகள்!!
பெண்களின் ஆற்றலைப் புகழ்வதுபோலத் தெரிந்தாலும் அங்கங்கே இலேசாக வஞ்சப்புகழ்ச்சியும் இருக்கிறது ஸாதிகா! ‘நறுக்’ கென்ற குட்டும் இருக்கிறது!
இருந்தாலும் ‘மங்கையராய் பிறப்பதற்கு மாதவம் செய்திருக்க வேண்டும்’ என்று கூறி மங்கையருக்கு பூமாலைகள் சார்த்தி விட்டீர்கள்! மிக நன்றாக எழுதியிருப்பதற்கு என் வாழ்த்துக்கள்!!

Chitra said...

இதனை 2011 பெண்கள் தினமான மார்ச் ஏழு அன்று பதிவிடலாம்

.....அதற்கு இப்போவே எழுத ஆரம்பித்தீர்களா? வாவ்! Superb!

ஸாதிகா said...

எஸ் கே தங்கள் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

நட்புடன் ஜமால் said...//அப்பவே பேச ஆரம்பிட்டுறாங்களா :)
..பின்னே என்னவாம்?பெண்கள்ன்னா சும்மாவா?

ஸாதிகா said...

ஆஹா..ஆஹா..படித்துத்தான் டாக்டர் பட்டம் வாங்க முடியலே.பதிவெழுதியதால் டாக்டர் பட்டம் அளித்த ஆசியா தோழி வாழ்க வாழ்க!

ஸாதிகா said...

//ஆராய்ச்சி செய்து அசத்திட்டீங்க அக்கா.// ஹா..ஹா.. என்ன மேனகா பெரிய பெரிய வார்தைகள் எல்லாம் சொல்லுறீங்க..:-)

ஸாதிகா said...

//
நீங்க நல்லவரா, கெட்டவரா? :-))// ஹுசைனம்மா சூப்பர் கேள்வி கேட்டு இருக்கீங்க.நல்லவர்,கெட்டவர் என்று நீங்கள் எதை வைத்து வரையுறுக்கின்றீர்கள் என்பதை விபரமா சொல்லுங்க.அப்புறம் நான் யார் என்று சொல்லுகின்றேன்.ஹ்ம்ம்ம்..அக்காவைப்போய் இந்த கேள்வி கேட்டுட்டீங்களே!

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் தம்பி சிரிச்சீங்களா?குட்.ஊருக்கு போகின்றீர்களா?பிஸியிலும் வந்து கருத்திட்டமைக்கு ரொம்ப நன்றி.

ஸாதிகா said...

//மாதர் தம் பெருமையை அலசி ஆராய்ந்த மாதர் குல மாணிக்கமே நீவிர் வாழ்க பல்லாண்டு :)//ஹி..ஹி.. கவிசிவா ரொம்ப கூச்சமாக இருக்கு..:-)

ஸாதிகா said...

மனோ அக்கா கொஞ்சம் காமெடி கலந்து எழுதினால்தான் வரவேற்பு இருக்கின்றது.அதான்.வேறொன்றுமில்லை.கருத்துக்கு நன்றியக்கா

ஸாதிகா said...

//....அதற்கு இப்போவே எழுத ஆரம்பித்தீர்களா? வாவ்! Superb!// சித்ரா,ஐடியா உதித்ததுமே நோட் பேடை திறந்து விடுவேன்.எழுத ஆரம்பித்ததும் இதனை மகளிர் தினத்தில் பதிந்தால் பொருத்தமாக இருக்கும் என்று நினைத்தேன்.முடித்ததும் உடனே பதிவிட்டு விட்டேன்.

ஜெய்லானி said...

கண்ணால் கான்பது பொய் , காதால் கேட்பது பொய் , பர்ஸ் மட்டுமே காலியாவது மெய்...மெய்.. .மெய்....!!!

சீமான்கனி said...

அக்கா அசத்தல் கா...கடைசில பயளுக (நாங்கதே)ஒன்னத்துக்கும் பிரயோஜனம் இல்லன்னு சொல்றீங்களா...யாரங்கே...

ஸாதிகா said...

//பர்ஸ் மட்டுமே காலியாவது மெய்...மெய்.. .மெய்.// ஜெய்லானி அனுபவத்தை சொல்லுறீங்களா?

ஸாதிகா said...

//கடைசில பயளுக (நாங்கதே)ஒன்னத்துக்கும் பிரயோஜனம் இல்லன்னு சொல்றீங்களா..// நான் அப்படியெல்லாம் சொல்லுவேனா சீமான்கனிதம்பி.//யாரங்கே...// எதுக்கு கூப்பிடுறீங்க..?ஆட்டோ அனுப்பவா?

Jaleela Kamal said...

பலம் யாருக்கு அதிகம் பெரிய ஆராய்ச்சி ஆதாரத்துடன் கூடிய நகைச்சுவை பதிவில் பார்த்து படிக்க ரங்ஸுகளுக்கெல்லாம் காதில் புகை வந்து கொண்டிருக்கும்.

Jaleela Kamal said...

//கண்ணால் கான்பது பொய் , காதால் கேட்பது பொய் , பர்ஸ் மட்டுமே காலியாவது மெய்...மெய்.. .மெய்....!!!//

ஜெய்லானிக்கு கதுல ரொம்ப வே புகை வந்துவிட்டது

தாஜ் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
எப்போதும் போல படித்துவிட்டு போக வந்தேன் இப்படி நம் இனத்தை கவுரவித்து நறுக்கிய உங்களை பாராட்டாமல் போக என் கைக்கு மனது வரவில்லை

நம்மை கவுரவப்படுத்திய தானை தலைவி வாழ்க

உங்கள் நகைசுவை எழுத்துக்கள் சூப்பெர்

அன்புடன் மலிக்கா said...

//ஹுஸைனம்மா said...
எக்கா, இது எல்லாமே உள்குத்து பாயிண்ட்ஸாவே இருக்குதே? நீங்களே யாருக்கோ எடுத்துக் கொடுக்கிற மாதிரியில்ல இருக்குது? :-(

நீங்க நல்லவரா, கெட்டவரா//

அதானேக்கா நானும் ரிப்பீட்டூ.

ஆனாலும் பதிவு நச்..

அப்படியே வந்து நம்ம பொக்கிஷ தேவதையை பாருங்க..

http://niroodai.blogspot.com/2010/10/blog-post_12.html

எம் அப்துல் காதர் said...

இப்படிக்கா ஒரு ஓரமா நின்னு படிச்சாலும், சகோதரிகள் 'ஆக்குபை' பண்ணி இருக்கிற இடத்தில, நாங்க எது சொன்னாலும் எடு படாது தான். அங்கிருந்து 'டாக்டரு' பட்டமெல்லாம் வேற... ம்ம்ம் ஒன்னும் சொல்றாப்பல இல்ல!! (11-இல் இருந்து 20 வரை 'ரங்ஸ்'களுக்கும் பொருந்துற மாதிரி தான் எழுதி இருக்கிங்..என்று சொல்லி விட்டு) மீ எஸ் ஆயிடுறேன் ஹி..ஹி.. (பதிவு கலக்கல் + அருமை)

மின்மினி RS said...

உங்க வீட்டில ஒரு பட்டிமன்றமே நடத்தியிருக்கீங்கபோல.. நகைச்சுவையுடன் எழுதியிருப்பது ரொம்ப நல்லாருக்கு.. சில இடங்களில் பெண்களுக்கு எதோ சொல்றமாதிரி இருக்கே,...

மின்மினி RS said...

டாக்டர் பட்டம் கொடுக்கலாம்போல..

Mahi said...

ஸாதிகாக்கா,வஞ்சப்புகழ்ச்சியா இருந்தாலும் நீங்க சொல்லிருக்கறது எல்லாமே முக்காலும் உண்மை..உண்மை..உண்மை!!:)

சோனகன் said...

அருமையான மற்றும் சிந்திக்கத் தூண்டும் பாயின்ட்டுகள், நடமுறையில் பெண்களுக்கான தளத்தில் ஆண்களுக்கு சுத்தமாக வேலையில்லை ஆணல் ஆண்களுக்கான தளத்தில் பெண்களின் செல்வாக்கு அதீதமாகி இருப்பதே உண்மை, இதன் மூலம் ஆற்றல் யாருக்கு அதிகம் என்பது எல்லோருக்கும் தெளிவாகி இருக்கும்.

ஸாதிகா said...

ஜலீலா கருத்துக்கு நன்றி.//
ஜெய்லானிக்கு கதுல ரொம்ப வே புகை வந்துவிட்டது//அனுபவத்தை சொல்லி காதில் புகை விடுகின்றார் போலும்.

ஸாதிகா said...

சகோதரி தாஜ்,வஅலைக்கும்வஸ்சலாம்(ரஹ்)//இதனை காமெடியாக எடுத்துக்கொள்ளாத எதிர்பாலினர் மற்றுமின்றி என் பாலினர் சிலரும் தயவு செய்து மன்னிக்க!
// இந்த வரிகளையும் படிக்க வில்லையா நீங்கள்?மேலும் இது நகைச்சுவையும் கலந்து பதியப்பட்டது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ,மலிக்கா.உங்கள் தேவதையையும் பார்த்து பின்னூட்டியும் விட்டேன்.

ஸாதிகா said...

இதான்..இதான்.. போட்டுக்கொடுக்கறது என்பார்களோ?ஆற்றல் ஆணுக்கு அதிகம் என்று இன்னொரு பதிவைப்போடணும் போல் உள்ளது.ஆனாக்கா..கத்தி,கப்படா,ஆட்டோ,லாரியை நினைச்சால்த்தான் பயமாக இருக்கு.கருத்துக்கு நன்றி அப்துல்காதர்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மின்மினி.என்ன நெடுநாள் கழித்து வந்து இருக்கீங்க?

ஸாதிகா said...

என்ன்ப்பா வஞ்சப்புகழ்ச்சி என்றெல்லாம் சொல்லுகின்றீர்கள் மகி.கருத்துக்கு நன்றி மகி.

ஸாதிகா said...

சோனகன் ,என் வேண்டுக்கோளுக்குக்கிணங்கி உஅடனே வந்து கருத்திட்டமைக்கு நன்றி.//பெண்களுக்கான தளத்தில் ஆண்களுக்கு சுத்தமாக வேலையில்லை // எனக்கு ஆண்கள் தளம்,பெண்கள்தளம் என்று பிரித்தறியதெரியவில்லை.

Unknown said...

ஆஹா. நமக்கே வேலையில்லாம பின்னிட்டீங்களே!
இப்படி அலசி ஆராய்ந்து துவைத்து காயப்போட்ட பெண்கள் பதிவை முதல் முதலாக இப்போதுதான் பார்க்கிறேன்.
அருமைங்க.

அரபுத்தமிழன் said...

'ஒண்ணு பெருசா ரெண்டு பெருசா'ன்னு ரஜினி மன்னனில் கேட்ட ஞாபகம் வருது அதோட வசீகரன் ரஜினியை விட ரோபோவுக்குத்தான் 'ஆற்றல் அதிகமாமே'. அப்ப நீங்கள்லாம் ரோபோக்களா :)

கோவிச்சுக்காதீங்க,'மனிதன் பலஹீனமாகப் படைக்கப் பற்றிருக்கிறான்' எனத் திருமறை கூறுகிறது என்றுதான் முதலில் சொல்ல நினைத்தேன். ஆனால் இது நகைச்சுவைப் பதிவென்பதால், இந்தப் பகிடி :)

ஸாதிகா said...

சகோதரர் சுல்தான்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

அரபுத்தமிழன் தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. நீங்களே கேள்வியையும் கேட்டு பதிலையும் சொல்லி இருக்கின்றீர்கள்.ஆற்றல் அதிகம் என்றால் அது ரோபாவாகத்தான் இருக்கவேண்டுமா?:-)

vanathy said...

//செவிப்புலனிலும் செம்மையானவர்கள்.என்னதான் ரங்ஸ் எரிச்சல் தாங்காமல் லோ பிட்ச்சில் முணுமுணுத்தாலும் கரெக்டாக பாயிண்ட் அறிந்து பிலு பிலு வென்று பிடித்துக்கொள்வதில் கில்லாடிகள்.//

என் ஆ.காரரும் அடிக்கடி மாட்டிக் கொள்வார் ஹிஹி...

thiyaa said...

ஆஹா....முடியல.... அருமை

புல்லாங்குழல் said...

சகோதரி ஆசியா உமர் தந்த டாக்டர் பட்டத்தை நானும் அமோதிக்கின்றேன்.

ஸாதிகா said...

//என் ஆ.காரரும் அடிக்கடி மாட்டிக் கொள்வார் ஹிஹி// வானதி வீட்டுக்கு வீடு வாசல்படி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

தியாவின் பேனா கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோ நூருல் அமீன்.இதில் உள்குத்து இல்லையே?:-)கருத்துக்கு நன்றி.

Unknown said...

நகைச்சுவையுடன் எழுதியிருப்பது அருமையாக உள்ளது! ஆராய்ச்சி செய்து அசத்திட்டீங்க..

Ahamed irshad said...

டாக்ட‌ர் ப‌ட்ட‌மா!? க‌த்தார்'ல‌ ம‌க்க‌ள் தொகை ரொம்ப‌ க‌ம்மி.

ஆராய்ச்சி சும்மா சொல்ல‌க்கூடாது நல்லாவே..

Yaathoramani.blogspot.com said...

எல்லாவற்றையும் படிக்கப் படிக்க
ஆணாக இருந்ததனால் எனக்கு கோபம் கோபமாக வந்தது
ஆனாலும் சொல்லிச் செல்வதெல்லாமே
உண்மையாய் இருப்பதனால் என்ன சொல்வது என்றும்
தெரியவில்லை.பற்களைக் கடித்துக் கொண்டதோடு சரி

ஆனாலும் ஒருஆண் மகனால் பெண்கள் போல
பொறுமையாக சிறப்பாக எந்தக் காரியத்தையும் செய்யத்
தெரியாவிட்டாலும் சட்டென கோளாறு சொல்லத் தெரியும்
அதில் நாங்கள் தான் பஸ்ட்.அதை நீங்கள் பீட் செய்ய முடியாது
மனம் கவர்ந்த பதிவு.தொடர வாழ்த்துக்கள்

இன்று பாவேந்தன் பாரதியின் நினைவு நாள்
பெண்விடுதலை குறித்தும் பெண்களின் உயர்வு குறித்தும்
பெண்களின் சிறப்பு குறித்தும் பாரதி போல அதிகம்
எழுதியது யாரும் இல்லை
அவருடைய நினைவு நாளில் பெண்களின் சிறப்பு குறித்து
மிக அழகாகப் பதிவிட்ட உங்களுக்கு
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்