July 30, 2010

உப்புமா

தலைப்பைப் பார்த்ததும் "எல்லா பதார்த்தங்களுக்கும் உப்பு சேர்க்கத்தான் செய்வார்கள்.ஆனால் இதுக்கு மட்டும் ஏன் உப்புமா ன்னு நாமகரணம் சூட்டினார்கள்?யார் சூட்டினார்கள்?எப்போ சூட்டினார்கள்?கி மு வில் சூட்டினார்களா?கி பி யில் சூட்டினார்களா?இதனை சூட்டியவர் தீனா ஆனாவா?தீனா ஆவன்னாவா?(அதாகப்பட்டது திருமணம் ஆனவரா?திருமணம் ஆகாதவரா?)எந்த தேசத்தில் இருந்து சூட்டினார்கள்?என்ன காரணத்திற்காக சூட்டினார்கள்?இதனை சூட்டியவர் ஆணா?பெண்ணா?"இப்படி கேள்வி எல்லாம் ஜெய்லானி அண்ணாச்சி போல் கேட்கமாட்டேன்.

"உப்புமாவாஆஆஆஆ"என்று பயத்தில் வாய்பிளக்கும் பார்த்தசாரதிகள்,மஸ்தான்கள்,டேவிட்டுகள் எல்லாம் நம்மிடையே நிறையவே உண்டு."ஏன்?பங்கஜங்கள்,பாத்திமாக்கள்,பிலோமினாக்கள் இல்லையா"என்றெல்லாம் அதிரா போன்றோர் குறுக்கு கேள்வியெல்லாம் கேட்கப்படாது.

உப்புமாவைப்பற்றி படங்கள்,சீரியல்களில் கூட மட்டமாக போடுவதைப்பற்றி எனக்கு நிறைய வருத்தம்.ஆஃபீஸுக்கும் சரி,ஸ்கூலுக்கும் சரி ஒரு நாளாவது உப்புமா கிளறி அணுப்பினால் "என்ன வீட்டில் உடம்புக்கு சரியில்லையா"என்று துக்கம் விசாரிக்க ஆரம்பித்து விடுவதுதான் அதிகபட்ச துக்கம்.
சந்திரபாபு "கல்யாண சமையல் சாதம்..காய்கறிகளும் பிரமாதம்..அந்த கவுரவபிரசாதம்..அதுவே எனக்குப்போதும்"என்று எத்தனை பட்சணங்களை ரசித்து,ருசித்து பாடினார்.இந்த உப்புமாவை மட்டும் அநியாயத்திற்கு விட்டு விட்டார்.இப்போ இருந்திருந்தாருன்னா நேராவே போய் "ஏஞ்சாமி..உப்புமா மேலே உங்களுக்கு இத்தனை பகை" ன்னு ஆத்திரம் தீர கேட்டு இருப்பேன்.சரி..பெரிய மனுஷர்..விட்டு விடுவோம்.

இந்த படாபட் ஜெயலட்சுமின்னு ஒருத்தர்.ரஜினி படத்தில் ரஜினியைப்பார்த்து "நித்தம் நித்தம் நெல்லு சோறு நெய் மணக்கும் கத்தரிக்கா,நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதையா"ன்னு எத்தனை எத்தனை பதார்த்தங்களை சொல்லி சொல்லி நாக்கில் எச்சில் ஊற ஊற பாடினார்.அவராவது இந்த உப்புமாவைக்கண்டுகிட்டாரா?இல்லையே?

சரி இதெல்லாத்தையும் விடுங்க..சமீபத்தில் விக்ரம் மூச்சு விடாமல் ஒன்றரை மைல் நீளத்திற்கு ஒரு பாட்டு பாடினாரே
கூழு வேர்க்கடலை வறுத்தகறி சுண்டகஞ்சி வடுமாங்கா சுட்டவடை நீர்மோரு பேட்ரிதண்ணி இளநீர் எறா தொக்கு உப்புக்கண்டம் பழைய சோறு டிகிரிகாப்பி இஞ்சிமுரப்பா கடலைமுட்டாய் கமர்கட்டு வெள்ளரிக்காய் எலந்தப்பழம் குச்சிஐஸு கோலிசோடா முறுக்கு பஞ்சுமுட்டாய் கரும்புசாறு மொளகாபஜ்ஜி எள்ளுருண்டை பொரிஉருண்டை ஜிகிர்தண்டா ஜீராதண்ணி ஜவ்வுமிட்டாய் கீரைவடை கிர்னிப்பழம் அவிச்சமுட்டை ஹாப்பாயில் பல்லிமிட்டாய் பப்பாளி புகையிலை போதைப்பாக்கு புண்ணாக்கு..இத்தனை ஐட்டங்களையும் அசால்டா சொல்லிட்டு இந்த உப்புமாவை கொஞ்சமும் மனசாட்சி இல்லாமல் விட்டுட்டார் பார்த்தீங்களா?

மேற் சொன்னா மூணு பாட்டையும் நீங்கள் வேணுன்னா கேட்டுட்டு நியாயத்தை சொல்லுங்க.

சந்திரபாபு பாடியது

படாபட் ஜெயலஷ்மி பாடியது

விகரம் பாடியது

அட,ஒரு நல்ல சைவ ஹோட்டலாக பார்த்து வாய்க்கு ருசியா உப்புமா சாப்பிடலாம்.வகைதொகையா வித வித சட்னி,சாம்பார் ,வடைகறி,குருமா,கொத்ஸு,ஊறுகாய் கடைசியா சர்க்கரையில் தோய்த்து வாயாற சாப்பிடலாம்ன்னு போனால் ஒரு முழ சைஸ் மெனு கார்டில் வாயில் நுழையாத பதார்த்தங்கள் பெயரையெல்லாம் போட்டு விட்டு இந்த உப்புமா மட்டும் மிஸ்ஸிங்ன்னா..உச்சகட்ட சோகம் அப்பிக்கொள்ளாமல் என்ன செய்யும்?நீங்களே சொல்லுங்கள்.

மினி டிஃபன் என்று போட்டு குட்டியா ரெண்டு பூரி,இட்லி,வடை,பொங்கல் என்று பறிமாறும் பொழுது ஓரத்தில் ஒருகரண்டி உப்புமாவைக்கிளறிவைத்தால் என்ன?இந்த ஹோட்டல் காரர்கள் குறைந்தா போய் விடுவார்கள்?ஏன் எல்லோரையும் போல் இந்த ஹோட்டல் கார்களுக்கு உப்புமா மீது துவேஷம்?

சரி போனால் போகுது.கேட்டு வாங்கி சாப்பிடுவோம் என்று சர்வரைக்கூப்பிட்டு"ஒரு பிளேட் ரவா உப்புமா?" என்று கேட்டால் சர்வரின் அசடு வழிதலை பார்க்கும்பொழுது பற்றிக்கொண்டு வருகின்றதே.
"மேடம்..சூடா..இடியாப்பம்,சப்பாத்தி,ஆனியன் ரவா.மசால் தோசை,ஊத்தப்பம்,பரோட்டா,சோளா பூரி இருக்கு மேடம்"என்று அவர் லிஸ்ட் படிப்பதில் ஒன்றினை கடனே என்று வாங்கி சாப்பிட்டுவிட்டு ஏறும் கடுப்பில் ஒரு ஒற்றைபைசா டிப்ஸ் வைக்காமல் சர்வரை முறைத்துக்கொண்டே ஹோட்டலை விட்டு வெளியேறும் பொழுது உள்ள மன உளைச்சலை என்ன என்பது?

ரயிலில் பிரயாணப்படும் பொழும்பொழுது விழுப்புரம் ஜங்ஷன் வந்து விட்டால் உப்புமா பொட்டலம் விற்பனைக்கு வரும்.சூடான,சுவையான உப்புமாவுக்கு பெயர் பெற்றது விழுப்புரம் ஜங்ஷன்.விழுப்புரம் எப்போ வரும்,எப்போ வரும் என்று ஸ்டேஷன்களை எண்ணிக்கொண்டு வருகையில் அந்த உப்புமா ஸ்டேஷன் வந்துவிடும்.தூரத்தே உப்புமா பார்சல் காரர் நின்றிருப்பார்.நான் இருக்கும் கோச் அருகே வருவதற்குள் வண்டிக்கு பச்சைக்கொடி காட்டி விடும் பொழுது வென்னீரில் வெந்த உப்புமாவாகி விடுவேன்

எனக்கு உப்புமா என்றால் கொள்ளைப்பிரியம்.சின்ன வயதில் இருந்தே உப்புமாவைப்பாய்ந்து பாய்ந்து சாப்பிடுவேன்.தக்காளி,பொட்டுக்கடலை,மல்லி,புதினா,வெங்காயம்,இஞ்சி,தேங்காய் சட்னி வகைகள்,தொக்கு,சாம்பார்,குருமா,கொத்ஸு,கோசுமல்லி,வத்தக்குழம்பு,நேற்றுவைத்த கறிக்குழம்பு,முந்தாநாள் வைத்த மீன் குழம்பு,அதுக்கும் முந்தின நாள் வைத்த கருவாட்டுக்குழம்பு,வடைகறி,மாசி,சர்க்கரை,ஜாம்,சாஸ்,ஊறுகாய் எதனுடனும் பொருந்துக்கூடிய உணவு என்றால் இந்த உப்புமா ஒன்று மட்டும்தான் என்பது காலரை தூக்கி விட்டுக்கொண்டு சொல்லக்கூடியக்கூடிய சமாச்சாரம்.

இந்த உப்புமா இருக்கே..நறநறவென்ற பாம்பே ரவையில் நெய் விட்டுக்கிளறி,ஆங்காங்கே கடுகும் உளுத்தம்பருப்பும்,கடலைப்பருப்பும் மும்மூர்த்திகளாக கண்களை சிமிட்ட,தாளித்த சிகப்பு மிளகாய் லேசா எட்டிப்பார்க்க,கருவேப்பிலை கருத்தைக்கவர வெண்ணைக்கட்டி கணக்காபளீர்ன்ன உப்புமாவை தட்டில் போட்டு அதன் மீது சாம்பாரை கரண்டியில்லாமல் அப்படியே கவிழ்த்து ஓவர் ஃப்ளோ ஆகாமல் சாப்பிடும் பொழுது ஆஹாஹா ..இதற்கெல்லாம் ஒரு ரசனை வேண்டுமுங்கோ..அதாங்க..சாப்பாட்டு ரசனை..சாப்பிடுற ரசனை.

தெரிந்தவர்கள் கல்யாணத்திற்கு கூப்பிடுறாங்க.கைகொள்ளாமல் பரிசுப்பொருளுடன் போய் மணமக்களை வாயாற வாழ்த்தி மணமக்கள் கையில் பரிசுப்பொருளை கொடுத்துவிட்டுவிட்டு,கொடுத்தற்கு அத்தாட்சியாக வீடியோவிலும் சிரித்து விட்டு நேரே பந்திக்கு போனால் வகை,வகையாக கலர் கலராக பதார்த்தங்களை பறிமாறும் பொழுது கூடவே ஒரு கரண்டி உப்புமாவையும் பறிமாறினால் சொத்தில் பாதி கரைந்து விடுமா என்ன?இப்படி (மனசுக்குள்ளேயேதான்)கேட்கத்தோணுமா?தோணாதா?நீங்களே சொல்லுங்க?

சரிதான்,ரொம்ப நாள் கழித்து ஸ்நேகிதியாளை பார்க்கலாம்ன்னு ஆசை ஆசையா போனால் பாம்பே ரவாவில் நெய் சொட்ட சொட்ட ஃபுரூட்கேசரியும்,முந்திரியும்,கிஸ்மிசும் பளிச் என்று சிரிக்க பிடித்த ரவாலாடும்.குடிக்கறதுக்கு ரவா ஃபிர்னியும் தந்தாளே ஒழிய தம்மாதூண்டு கிண்ணத்தில் சூடா ஒரு கரண்டி உப்புமாவைக்கிளறி வைப்போமுன்னு தோன்ற மாட்டேன்கிறதே.

பிளாக் எழுதற தங்கமணிகள் வீட்டில் கண்டிப்பாக அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி துளி ஊறுகாயை தட்டின் ஓரத்தில் வைத்து ரங்கமணிகளுக்கு அவசர,அவசரமாக நாஷ்டா கொடுத்து விட்டு தொடர்ந்து தங்களது பிளாக் பணியை செவ்வன நிறைவேற்றுவார்கள் என்று நம்புகின்றேன்.

அதே போல் பிளாக் எழுதற ரங்கமணிகளைப்பார்த்து பிளாக் படிக்காத தங்கமணிகள்"எங்கள் கஷ்டம் உங்களுக்கெல்லாம் எங்கே புரியப்போறது.ஒரு நாள் சமைக்க தில் இருக்கா?"என்று கேட்டு உசுப்பேத்தி,நம்ம பிளாக் ரங்கமணிகளும் மீசையை முறுக்கிக்கொண்டு அவசர கதியில் ஒரு உப்புமாவைக்கிளறி,ஓரத்தில் தாராளமாக சாஸை விட்டு,ஸ்டைலாக ஒரு ஸ்பூனையும் சைடில் வைத்து தங்கமணிகள் முன் பவ்யமாக நீட்டுவார்கள் என்று நம்புகின்றேன்.

வெளிநாட்டு வாழ் இந்தியபிரமச்சாரிகள் வெளியில் நிதம் பிரட் சாப்பிட்டு போரடித்து இனி சுடசுட உப்புமா கிளறி சாப்பிட்டு விட்டு அவசர அவசரமாக ஆஃபீஸ் செல்வார்கள் என்று நம்புகின்றேன்.

இனி எல்லார் வீட்டிலும் உப்புமா கொண்டாட்டம்தானா?உப்புமான்னா இனிமேல் இந்த எல்லாப்புகழும் இறைவனுக்கே வலைப்பூ கண்டிப்பா உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து விடும் இல்லையா?

டிஸ்கி:"அட..சொந்த அனுபவமா?அப்ப வீட்டைய்யாவுக்கு தினம் தினம் உப்புமா அபிஷேகம் தானா"என்று ஸ்டார்ஜன் ஷேக் போன்றோர் கேட்டுடக்கூடாதுன்னு இந்த அவசர டிஸ்கி.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட்.

63 comments:

Mahi said...

எல்லா வீடுகள்லயும் இந்த உப்புமா-ஃபீவர் கட்டாயம் இருக்கும் போலிருக்கே?
சூப்பர் பதிவு ஸாதிகாக்கா!:):)

kavisiva said...

சாதிகா அக்கா ஏன் இப்பூடி?
உப்புமாஆஆஆஆஆஆன்னா நான் எஸ்ஸ்ஸ்கேஏஏஏப்ப்ப்ப்ப் ஆயிடுவேனே! அதை இப்படி அணு அணுவா ரசிச்சு ருசிக்கறதுக்கும் ஆளிருக்குன்னு நினைக்கும் போது....முடீயல

எல் கே said...

இதுக்கு முன்னாடியே நான் ஒரு உப்புமா இடுகை போட்ருக்கேன் ..

ராஜவம்சம் said...

நேரம் மிச்சம் சிலவு கம்மி.

உப்புமா என்பது உப்பும் அதாவது அதிகமாகும் மாவு என்று அர்த்தம் அரைகிலோ ரவா போதும் முழுகுடும்பத்துக்கும்.

நட்புடன் ஜமால் said...

ஏன் இம்பூட்டு டெரரூ

சீமான்கனி said...

அக்கா...எனக்கும் உப்புமா ரெம்ப பிடிக்கும் அதுவும் அம்மா செஞ்சா ரெம்ப பிடிக்கும் அதுல சட்னி ஊத்தி சாப்ட்டாலும் சூப்பர் சீனி தொட்டு சாப்டாலும் சூப்பர் அதேபோல் பொங்கலும் அனால் பாக்குறவங்க கண்ணுக்கு உப்புமா சாப்டுறவங்களை சோம்பேறின்னு சொல்றாங்க அதை உப்புமா சாப்ட்டு உணர்சிவசபடுரவங்க சங்க தானை தலைவி ஸாதிகா அக்கா சார்பாய் வன்மையாய் கண்டிக்கிறேன்...

Chitra said...

டிஸ்கி:"அட..சொந்த அனுபவமா?அப்ப வீட்டைய்யாவுக்கு தினம் தினம் உப்புமா அபிஷேகம் தானா"என்று ஸ்டார்ஜன் ஷேக் போன்றோர் கேட்டுடக்கூடாதுன்னு இந்த அவசர டிஸ்கி.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட்.


....... உப்புமாவை விட, இந்த இடுகை எனக்கு பிடிச்சிருக்கு.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆஹா.. உப்புமா வாசம் சவூதி வரைக்கும்.. அருமை. உப்புமாவ இப்படி புட்டுபுட்டு வச்சிருக்கீங்களே ஸாதிகா அக்கா. உப்புமான்னா எனக்கு ரொம்ப ஆசை. வீட்டிலேயும் மாமியார் வீட்டிலேயும் உப்புமான்னா விரும்பி சாப்பிடுவதுண்டு. உப்புமாக்கு சீனி போட்டு சாப்பிட்டால் ரொம்ப அருமையாக இருக்கும். ஆனா நான் சட்னி, சாம்பார், மீன்குழம்பு, கூட்டு இது எதும் இருந்தால் ஒரு கட்டுதான்.

ஒரு சின்ன சந்தேகம்.. கல்யாண சமையல் சாதம் பாட்டு சாரங்கபாணி பாடியிருப்பாரோ.. சந்திரபாபு இல்லையே.. ஒருவேளை சந்திரபாபு பிண்ணனி பாடல் பாடியிருப்பாரோ..

///டிஸ்கி:"அட..சொந்த அனுபவமா?அப்ப வீட்டைய்யாவுக்கு தினம் தினம் உப்புமா அபிஷேகம் தானா"என்று ஸ்டார்ஜன் ஷேக் போன்றோர் கேட்டுடக்கூடாதுன்னு இந்த அவசர டிஸ்கி.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட். ///

இதை படித்ததும் வாய்விட்டு சிரித்தேன். ரொம்ப நன்றி ஸாதிகா அக்கா.

Starjan (ஸ்டார்ஜன்) said...

///இனி எல்லார் வீட்டிலும் உப்புமா கொண்டாட்டம்தானா?உப்புமான்னா இனிமேல் இந்த எல்லாப்புகழும் இறைவனுக்கே வலைப்பூ கண்டிப்பா உங்கள் எல்லோருக்கும் நினைவுக்கு வந்து விடும் இல்லையா?///

கண்டிப்பாக..

மின்மினி RS said...

உப்புமா நல்லாவே கிண்டியிருக்கீங்க ஸாதிகா அக்கா.. வாசம் ரொம்ப தூக்கல்.

இலா said...

ஆன்டி ! உங்களுக்குமா?? மீ டூ.. இங்க யாருக்குமே உப்புமா பிடிக்காது அம்மா வீட்டிலும் சரி இவர் வீட்டிலும் சரி. இவ்வளவு பிடிச்சிருக்கே... இங்க ஒரு வடநாட்டு தோழி வீட்டுக்குபோனா உப்புமா கொடுத்தாங்க.. எனக்கோ ரொம்ப சந்தோஷம்... கடுகு கறிவேப்பிலை ப.மிளகாய் வெங்காயம் தாளிச்சு அதில ரவை போட்டு நல்லா வருத்து கொஞ்சம் மஞ்சள்பொடி போட்டு .. சைட்ல தள தளன்னு கொதிக்கற தண்ணி ஊத்தி... அப்படியே இரக்கும் போது ஒரு லெமனும்.. கொத்தமல்லி இலையும் போட்டு சுட சுட ஒருஇஞ்சி டீ.....
ஆஹா.. இப்பதான் டயட்டுன்னு சொன்னேன்னே... இப்படி ஜொள்ளுவிட வைக்கிறீங்களே...

சிநேகிதன் அக்பர் said...

ஃபுல் பார்ம்ல அடிச்சி விளையாண்டு இருக்கிங்க :)

படிச்சி முடிச்சவுடன் மூச்சு வாங்குதுன்னா பார்த்துக்குங்க.

அதிலும் விக்ரம் பாட்டு ஒரு வரிவிடாம எழுதி அட்டகாசம் பண்ணிட்டிங்க.

//இதனை சூட்டியவர் ஆணா?பெண்ணா?"இப்படி கேள்வி எல்லாம் ஜெய்லானி அண்ணாச்சி போல் கேட்கமாட்டேன்.//

அம்புட்டு வயசா ஜெய்லானிக்கு. நான் யூத்தோன்னு நினைச்சேன்.

இந்த பதிவை படிச்சவங்க இனிமே உங்களை உப்புமா புகழ் பதிவர்ன்னு கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.

இனி உப்புமாவை நினைத்தால் ஸாதிகாக்கா ஞாபகமும் ஒட்டிக்கொண்டே வரும் கருவேப்பிலை வாசம் போல...

நன்றி ஸாதிகாக்கா. ( நான் யூத்துங்கோ )

Unknown said...

உப்புமா எனக்கு சுத்தமா பிடிக்காது.. ஆனால் நீங்க கிண்டின உப்புமா ரொம்ப சுவையாக இருக்கு அக்கா

தலை மறைவான அதிரா said...

போங்க ஸாதிகா அக்கா, உப்புமாவும் போச்சு, வடையும் போச்சு இம்முறை:)).

எனக்கு உப்புமா என்றால் கொள்ளைப்பிரியம்/// பென்னாம் பெரிய பதிவைப் பார்த்ததுமே நினைச்சிட்டேன்.... உப்புமா ரொம்பப் பிடிக்குமென:).... காதைக் கொண்டுவாங்கோ.... எனக்கும் ரொம்பப் பிடிக்கும்:).

பின்குறிப்பு:

அந்தத் தலைப்பை எதுக்கு பாதியில விட்டுவிட்டு உப்புமாவோடு இங்கு வந்திட்டீங்க?:):), சரி சரி முறைக்க வாணாம். பச்சை உப்புமாவை இப்பத்தான் பார்க்கிறேன்.

தூயவனின் அடிமை said...

உப்புமா என்றால் இவ்வளவு பிரியமா? .
பேஷ் பேஷ் ரொம்ப நல்லாருக்கு உப்பு+மா=உப்புமா

எம் அப்துல் காதர் said...

எங்கள் வீட்டில் இதற்கு பெயர் தமிழில் செல்லமா "சால்ட் மதர்", எங்கே அதை இங்கிலிஷில் சொல்லிப் பாருங்கள்.. உப்புமா உப்பாதா என்றெல்லாம் கேள்வி வரும். இருங்க ஜெய்லானி வர்றதுக்கு முந்தி நான் போய்டுறேன். ஹீ ஹி

Unknown said...

உப்புமாஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ..........

ஜெய்லானி said...

ஸாதிகாக்கா..!! முதலில் இந்த சந்தேக ப்பதிவை இந்த வாரம் போடலாமுன்னு இருந்தேன் .. ஆனா நீங்க முந்திட்டீங்க அவ்வ்வ்வ்வ்..

முதல் பாராவை படிக்கும் போது என்னுடையதை படிக்கிற என்னமே வந்துச்சி ஆனா அதில என் பேரையும் போட்டு கை தட்ட வச்சிட்டீங்க ..கிளாப்ஸ்.கிளாப்ஸ்......

ஜெய்லானி said...

//.வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார் என்பதுதான் இன்றைய சோகத்தின் ஹைலைட்.//

என்ன இருந்தாலும் மாம்ஸ இப்பிடி ரெண்டு கால் இல்ல நாலு கால் இல்ல எட்டுகாலா மாத்தியதுக்கு என்னுடைய கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்


இப்படிக்கு

மாம்ஸ்களை எட்டுகால் பாய்ச்சலில் மிரண்டு ஓட வைப்பவர்களுக்கு கண்டனம் தெரிவிப்போர் சங்கம் ,

++++++++
அப்படி ஓடி வருபவர்களை ஆசுவாசப் படுத்தி கூல்டிரிங்ஸ் வினியோகிப்போர் சங்கம்,

பொது செயலாளர்
ஷார்ஜா மண்டலம்
யூ ஏ இ

ஜெய்லானி said...

//வீட்டைய்யா உப்புமான்னா எட்டுக்கால் பாய்ச்சலில்,பின்னங்கால் பிடறியில் அடிக்க ஒட்டம் எடுப்பார்//



ஸாதிகாக்கா உங்களுக்கு பிடிக்குமுன்னு வாரம் மூனு வேலையும் இதே செஞ்சி குடுத்தா மனுஷன் என்ன பன்னுவார்.. க்கி..க்கி..


அவ்வளவு மோசமாவா செய்வீங்க..!!!


பின்ன நாங்கெல்லாம் அது பேர கேட்டாலே முகம் 345 விதமா மாறும்.

ஜெய்லானி said...

@@@ அக்பர் //இதனை சூட்டியவர் ஆணா?பெண்ணா?"இப்படி கேள்வி எல்லாம் ஜெய்லானி அண்ணாச்சி போல் கேட்கமாட்டேன்.//

அம்புட்டு வயசா ஜெய்லானிக்கு. நான் யூத்தோன்னு நினைச்சேன்.//

வர ஜனவரி வந்தா இப்பதான் எனக்கு ஒன்னோ முக்கால் வயசு ஆரது .நா கொயந்தப்பா...பச்ச கொயந்த..பச்ச பூவ பாத்துமா இன்னும் சந்தேகம் ..அவ்வ்வ்

Katz said...

இது ஒரு நல்ல உப்புமா பதிவு ;-)

ஹைஷ்126 said...

கடைசி மூன்று பாரவும் ஏதோ ரங்கமணிகளின் மீது இருக்கும் கொலை வெறியுடன் எழுதியது போல் இருக்கே:)

//உங்களுக்கு பிடிக்குமுன்னு வாரம் மூனு வேலையும் இதே செஞ்சி குடுத்தா மனுஷன் என்ன பன்னுவார்.. க்கி..க்கி..

அவ்வளவு மோசமாவா செய்வீங்க..!!!//:)))

வாழ்க வளமுடன்

Menaga Sathia said...

ஐயோ அக்கா உப்புமா பத்தி இவ்வளவு அனுஅனுவா ரசித்து எழுதிருக்கிங்களே... சூப்பர்ர் பதிவுக்கா..

Starjan (ஸ்டார்ஜன்) said...

//ஜெய்லானி said...

///வர ஜனவரி வந்தா இப்பதான் எனக்கு ஒன்னோ முக்கால் வயசு ஆரது .நா கொயந்தப்பா...பச்ச கொயந்த..பச்ச பூவ பாத்துமா இன்னும் சந்தேகம் ..அவ்வ்வ் ///

சொல்லவே இல்ல ஜெய்லானி.. எனக்கு ஒரு சந்தேகம்.

///பச்ச கொயந்த..பச்ச பூவ பாத்துமா இன்னும் சந்தேகம் ..அவ்வ்வ்///

எனக்கெல்லாம் கொயந்தய & பூவ தான் தெரியும்.. அதென்ன பச்ச கொயந்த.. பச்சப்பூ.. புதுசா இருக்கே.. என் சந்தேகத்தை பூர்த்திக்கவும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

Angel said...

uppuma looks great in photo.my first choice is uppuma with mango pickle then with,fish gravy.my mum used to add crushed pepper instead of chillies when we had cold.

ஜெய்லானி said...

//அதென்ன பச்ச கொயந்த.. பச்சப்பூ.. புதுசா இருக்கே.. என் சந்தேகத்தை பூர்த்திக்கவும்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

அழப்பிடாது ஷேக்..!! கண்ணை தொடைங்க முதல்ல.. என்னுடைய லோகோவ பார்த்துமா..? இந்த சந்தேகம் கிரின் ரோஸ் பட்ட பூவு ..

GEETHA ACHAL said...

முதலில் வாழ்த்துகள் ஸாதிகா அக்கா..இப்படி ஒரு பதிவு எழுதிய உங்களுக்கு ஒரு ரோஜா பூ...புடியுங்க......உப்புமா என்றால் சும்மாவா என்ன...எனக்கு மிகவும் பிடித்த டிபன் உப்புமா தான்..அதுவும் அம்மா செய்யும் உப்புமா டாப் டக்கர்...நல்ல வேளை என்னுடைய கணவருக்கும் உப்புமா ரொம்வும் பிடிக்கும் ...அதனால் வாரத்திற்கு ஒரு முறையாவது உப்புமா நிச்சயம் வீட்டில் இருக்கும்...

ஸாதிகா said...

உண்மைதான் மகி..எல்லார் வீடுகளிலும் உண்டுதான்.

ஸாதிகா said...

//அதை இப்படி அணு அணுவா ரசிச்சு ருசிக்கறதுக்கும் ஆளிருக்குன்னு நினைக்கும் போது....முடீயல//கவிசிவா..இப்படி அலுத்துக்கறீங்களே:-)

ஸாதிகா said...

நானும் உங்கள் பிளாக்கில் வந்து தேடிப்பார்த்தேன்.கண்ணில் படவில்லை.அந்த லின்கை அனுப்புங்களேன் எல் கே

ஸாதிகா said...

//ஏன் இம்பூட்டு டெரரூ//என்ன ஜமால் தம்பி இப்படி சொல்லிபுட்டீஹ..?

ஸாதிகா said...

//உப்புமா என்பது உப்பும் அதாவது அதிகமாகும் மாவு என்று அர்த்தம் அரைகிலோ ரவா போதும் முழுகுடும்பத்துக்கும்.// ஓ..இப்படிக்கூட பெயர்க்காரணம் உள்ளதா?மிக்க நன்றி ராஜவம்சம்.

ஸாதிகா said...

//உப்புமா சாப்ட்டு உணர்சிவசபடுரவங்க சங்க தானை தலைவி ஸாதிகா அக்கா சார்பாய் வன்மையாய் கண்டிக்கிறேன்//அடடா..ரொம்ப நன்றி சீமான் கனி உங்கள் ஆதரவுக்கு

ஸாதிகா said...

//.... உப்புமாவை விட, இந்த இடுகை எனக்கு பிடிச்சிருக்கு.... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..//சித்ராவுக்கு பிடித்து இருந்தமைக்கு மிக்க மகிழ்ச்சி

ஸாதிகா said...

உப்புமா உங்களுக்கும் பிடிக்குமா?உங்கள் வீட்டம்மா கொடுத்து வைத்தவர்கள் ஸ்டார்ஜன்.//ஒரு சின்ன சந்தேகம்.. கல்யாண சமையல் சாதம் பாட்டு சாரங்கபாணி பாடியிருப்பாரோ.. சந்திரபாபு இல்லையே.. ஒருவேளை சந்திரபாபு பிண்ணனி பாடல் பாடியிருப்பாரோ.// உங்கள் பதிவைப்பார்த்ததும் நெட்டில் தேடினேன்.கிடைக்கவில்லை.தெரிந்தவர்கள் யாராவது பின்னூட்டுவார்கள்.

ஸாதிகா said...

நன்றி மின்மினி.என்ன ஆளையே காணோம்?

ஸாதிகா said...

அட..இலா உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்து இப்பவே உப்புமா கிளறவேண்டும் போலுள்ளது

ஸாதிகா said...

அக்பரண்ணா..அக்பரண்ணா..உங்களது பதிவைப்பார்த்ததும் இன்னும் பிரியாணி,பிஸ்ஸா,பர்கர்,பஞ்சு மிட்டாய்,பச்சைத்தண்ணி எல்லாவற்றுக்கும் பதிவு போட்டுடணும் போல் இருக்குண்ணா.//இந்த பதிவை படிச்சவங்க இனிமே உங்களை உப்புமா புகழ் பதிவர்ன்னு கூப்பிட்டாலும் ஆச்சர்யப்படறதுக்கு இல்லை.// வரிகளைப்படித்ததும் இப்படி தோன்றிப்போச்சுண்ணா.
//நன்றி ஸாதிகாக்கா. ( நான் யூத்துங்கோ // ..இதிலென்ன சந்தேகம்ண்ணா? நீங்க சொல்லித்தான் நாங்க தெரிஞ்சுக்கணுமாங்ண்ணா?

ஸாதிகா said...

//உப்புமா எனக்கு சுத்தமா பிடிக்காது.. ஆனால் நீங்க கிண்டின உப்புமா ரொம்ப சுவையாக இருக்கு அக்கா//வாங்க பாயிஷா..நீண்ட நாட்கள் கழித்து வந்திருக்கீங்க.மேற்கண்ட வரிகளுக்கு மகிழ்ச்சி.

ஸாதிகா said...

//அந்தத் தலைப்பை எதுக்கு பாதியில விட்டுவிட்டு உப்புமாவோடு இங்கு வந்திட்டீங்க?:):// அதீஸ் இந்த வரிகள் எனக்கு புரியவில்லை.புதினாவைத்தூக்கலாபோட்டால் பச்சைஉப்புமா ஆகிவிடும்.தக்காளியைத்தூக்கலாகப்போட்டால் சிவப்பு உப்புமா ஆகிவிடும்.இது இரண்டையும் தூக்கி எரிந்துவிட்டால் வெள்ளைஉப்புமா ஆகிவிடும்.இப்போ புரிஞ்சுதோ உப்புமாவின் வர்ண ரகசியம்?

August 1, 2010 9:59 PM

ஸாதிகா said...

இளம் தூயவன் கருத்துக்கு நன்றி.பார்த்தீர்களா?இது பாசமுள்ள உணவுப்பண்டமும் கூட."மா"..என்று அன்பான வார்த்தையில் முடிகிறது.

ஸாதிகா said...

அப்துல்காதர்..ஐ..சால்ட்மதர்..இந்த நாமம் கூட நல்லா இருக்கே..சால்ட்மதர்..சால்ட்மதர்..சால்ட்மதர்..வேறொண்ணும் இல்லை..சொல்லிப்பார்த்துக்கறேன்.

ஸாதிகா said...

ஸ்ஸ்ஸ்ஸ்..அப்ப்ப்ப்பா..கலாநேசன் உப்புமாவைப்பார்த்து அலரிய அலறலில் என் காது போச்சு.உப்புமான்னா அவ்வளவு பயமாங்க?

ஸாதிகா said...

ஜெய்லானி..எங்க வீட்டையா அதலெட்டிக்கில் டிஸ்ட்ரிக் லெவலில் அவார்ட் வாங்கி இருக்காராக்கும்.எட்டென்ன பதினாறடி பாய்ச்சலில் கூட ஓடுவார்.இருந்தாலும் சங்கம் ஆரம்பித்து எங்க ரங்ஸுக்கு ஆதரவு கரம் நீட்டியதற்கு அவரது சார்பில் மகிழ்ச்சி கலந்த நன்றி.

ஸாதிகா said...

//இது ஒரு நல்ல உப்புமா பதிவு // அதிலென்ன சந்தேகம்..இது உப்புமா பதிவ்வேதான்.நன்றி வழிப்போக்கன்.

ஸாதிகா said...

//கடைசி மூன்று பாரவும் ஏதோ ரங்கமணிகளின் மீது இருக்கும் கொலை வெறியுடன் எழுதியது போல் இருக்கே// என்ன ஹைஷ் சார் இப்படி கேட்டுபுட்டீஹ?:-(

ஸாதிகா said...

//ஐயோ அக்கா உப்புமா பத்தி இவ்வளவு அனுஅனுவா ரசித்து எழுதிருக்கிங்களே... சூப்பர்ர் பதிவுக்கா// நன்றி மேனகா..நீங்களாவது புரிஞ்சுகிட்டீங்களே.

ஸாதிகா said...

ந்ன்றி ஏஞ்சலின்.உங்கள் தாயாரின் முறையிலும் இனி செய்து பார்த்து விடுவோம்.

ஸாதிகா said...

விருத்துக்கு நன்றி பாயிஷா

ஸாதிகா said...

உங்கள் பின்னூட்டவரிகளில் மிக்க மகிழ்ச்சி கீதா ஆச்சல்

Vijiskitchencreations said...

சரி என்னையும் உங்க உப்புமா லிஸ்டில் சேர்திடுங்க எனக்கும் ரொம்ப பிடித்த அயிட்டம். என் வீட்டவ்ர் கூட சொல்வார் அதில் என்ன அப்படி இருக்க் என்று அவருக்கு அதிலும் வெள்ளை ரவை உப்புமா என்றால் அவ்வளவு தான் கொஞ்சம் பேக் அடிச்சிடுவார். நான் உப்புமா செய்தால் எல்லாரும் சாப்பிடாதவர்கள் கூட சாப்பிடுவிட்டு தான் போவாங்க. நானே சொல்ல கூடாது, நான் நல்ல உதிர் உதிராக செய்வேன், எல்லா வகை உப்புமாவும் செய்து பார்த்தாச்சு என்னவருக்கு பிடித்தது அரிசி ரவை உப்புமா நல்ல மிளகு சீரகத்தோச கத்தரிக்காய் கொத்சோடு சாப்பிட்டாலே தனி ருசிதான் அக்கா. எனக்கு வெள்ளை ரவை வித் சின்ன வெங்காயம், கரம்மசாலாவோட செய்தால் ரொம்ப பிடிக்க்கும். . இதை பற்றி நிறய்யவே எழுதலாம் அக்கா. நிறய்ய பேருக்கு போரடிக்காமால் இருக்கனும் அதற்க்காக இங்கு நிறுத்திக்க்றேன்.

Menaga Sathia said...

pls collect ur award from my blog

http://sashiga.blogspot.com/2010/08/blog-post_02.html

சீமான்கனி said...

தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் கவனிக்கவில்லையா அக்கா...

http://ganifriends.blogspot.com/2010/08/blog-post_03.html

Deepa said...

Great post!
I too love upma. :)

இன்னொரு விஷயம். ரவா உப்புமா செஞ்ச உடனே சாப்டாத் தான் நல்லாருக்கும்னு இல்லை. வீட்டுக்கு வ‌ந்த‌ப்புர‌ம் காலையில‌ செஞ்ச‌ உப்புமாவை எடுத்து (ஃப்ரிஜ்லேந்து தான்) க‌டாயில‌ போட்டுச் சூடு ப‌ண்ணிக் கொஞ்ச‌ம் ச‌க்க‌ரை, (பிடிச்சா வாழைப்ப‌ழ‌ம்) சேத்துச் சாப்பிட்டுப் பாருங்க‌. ஆஹா! சூப்ப‌ர் டேஸ்டா இருக்கும். :)

ஸாதிகா said...

womw...yummmmmmmmmy.pls

visitthis page.

துளசி கோபால் said...

அடடா...... இந்தப்பதிவை இப்பத்தான் உங்க வலைச்சரத்தின் மூலம் பார்த்தேன்.

நானும் ஒரு உப்புமா ரசிகைதான். நம்ம வீட்டில் ரவா உப்புமாவுக்கு ஒரு நேயரும் அரிசி உப்புமாவுக்கு மூணு பேரும் விசிறிகள்!

அடுத்த பதிவர் சந்திப்பு ஸ்பெஷல் உப்புமா:-)))))

அப்பாதுரை said...

உப்புமாவுக்கு ஊறுகாயும் கெட்டித் தயிரும் கலந்து சாப்பிடுறவங்களைப் பார்த்திருக்கேன்.

பால கணேஷ் said...

சில சமயம் நம் கண்ணெதிரே ரத்தினம் கீழே கிடந்தாலும் கவனிக்கத் தவறி விடுவோம். அப்படி இந்தப் பதிவையும் மிஸ் பண்ணிட்டேன். உப்புமான்னா ஏதோ அவசரத்துக்கு ஒப்பேத்தப் பண்றதுன்னு நினைச்ச எனக்கு அதை இவ்வளவு ரசனையோட ரசிச்சுச் சாப்பிட முடியும்னு காட்டினதுக்கு நன்றிம்மா! ‘கல்யாண சமையல சாதம்’னு ஏகப்பட்ட வெரைட்டி‌‌‌ஸை ரசிச்சுப் பாடினவர் கூட அதுல இந்த உப்புமாவைச் சேக்காம துரோகம் பண்ணிட்டாரே...! அநியாயமில்ல?

ஸாதிகா said...

மின்னல் வரிகளில் நான் கொடுத்த பின்னூட்டம் பார்த்து பழைய இடுகையை புரட்டிப்பார்த்து முதல் முறையாக வந்து கருத்து சொன்ன அப்பாதுரை சார் அவர்களுக்கு மகிழ்ச்சியும் நன்றிகளும்.தொடர்ந்து வருக!

ஸாதிகா said...

கல்யாண சமையல சாதம்’னு ஏகப்பட்ட வெரைட்டி‌‌‌ஸை ரசிச்சுப் பாடினவர் கூட அதுல இந்த உப்புமாவைச் சேக்காம துரோகம் பண்ணிட்டாரே...! அநியாயமில்ல?///

ஹாஹா...பின்னூட்டலை ரசித்து படித்தேன் .ஜாக்கிரைதைண்ணா.இனி சரிதா மன்னி “சரிதான்..காலை டிபன் உப்புமாவையே கிண்டிடலாம்”அப்படீன்னு அடிக்கடி செயல் படுத்த ஆரம்பித்து விடுவாங்க..

இந்த இடுகையை படிச்சுட்டு இனி வருங்காலத்தில் உங்கள் வீட்டுக்கு நான் விருந்துக்கு வரும் பொழுது உப்புமாவை கிண்டித் தந்து கச்சிதமாக முடிச்சிக்காதீங்க..ஹி..ஹி..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உண்மையில் உப்புமா ஹோட்டல்களில் கிடைக்காமல் செய்தது ஓர வஞ்சனையே.
சினிமாவில் கூட டப்பா கம்பனிகளை உப்புமா கம்பனிகள் என்று சொல்வதுண்டு. என்ன வில்லத்தனம்?.அரிசி உப்புமா, ரவை உப்புமா, கோதுமைரவை உப்புமா எல்லாம் சூப்பரா இருக்கும். உப்புமாவுக்காக போராடிய உங்களுக்கு வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

உப்புமா கம்பனிகள் என்று சொல்வதுண்டு. என்ன வில்லத்தனம்?.//அதுதானே.சப்போர்ர்ட்டுக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி முரளிதரன்சார்