March 7, 2010

"பளிச்" பெண்கள்


டாக்டர்.ரஹ்மத்துன்னிஷா ரஹ்மான்
******************************************
ஈ டி ஏ குழுமத்தலைவர் அல்ஹாஜ் பி.எஸ் அப்துர்ரஹ்மான் அவர்களின் துணைவியாரும்,கீழக்கரை யூசுப்சுலைஹா மருத்துவமனை சேர்மனும் இன்னும் பற்பல பதவிகள் வகித்து ,சிகரங்கள் தொட்டும் பண்போடும்,அடக்கத்தோடும்,அன்போடும்,கருணையோடும்,எளிமையோடும் அனைவரிடமும் பழகும் பெண்மணி.கீழைநகரின் அடையாளங்களில் ஒன்றாக திகழ்பவர்.மருத்துவத்துறையில் மட்டுமின்றி,சமூகத்திலும்,அதன் வளர்ச்சியிலும் அதீத ஈடுபாடுகாட்டி வருபவர்.என் எழுத்துக்கு ஊக்கமெனும் மருந்துதந்தவர்.அன்பு லாத்தா ரஹ்மதுன்னிஷா அவர்களைப்பற்றி இந்த மகளிர் தின இடுகையின் மூலம் பெருமிதத்துடன் பகிர்ந்துகொள்கின்றேன்.

டாக்டர்.நஃபீஷா கலீம்
***********************
தலைசிறந்த இலக்கியவாதி,அந்தக்காலத்திலேயே ஒரு மீட்டர் நீளத்திற்கு பட்டங்கள் வாங்கி குவித்த அறிவுக்களஞ்சியம்,எழுத்தாளர்,பேச்சாளர்,திறமையான கல்வியாளர்,நிரவாகத்திறன் கொண்ட கம்பீரமான நிர்வாகி,கல்லூரியின் முதல்வர் இப்படி அனைத்திலும் நிகரற்று ,சகலகலா வல்லவராக விளங்கிய சாதனைப்பெண்மணி இனிய ஆண்ட்டி நஃபீஷா அவர்கள்.என் பாட்டியின் உற்ற நண்பியும்,எங்கள் குடும்ப நண்பருமான இவர் எனக்கு அறிமுகமானதே தன் நடுத்தர வயதைத்தாண்டிய பின்னர்தான்.அப்பொழுதே இவரது திறமை,அறிவு,கம்பீரம்,பேச்சாற்றல்,சிந்தனைத்திறன்,சமூக அக்கரை,பிரம்மிக்க வைக்கும் அழகு,ஆளை அசத்தும் நிறம் அனைத்தையும் கண்டு பெரு(மூச்சு)மை பட்டுஇருக்கிறேன்.கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் மகளிர் கல்லூரியில் முதல்வராக,எல்லாமுமாக இருந்து ,கல்லூரியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து முதல்வர் பதவியை அலங்கரித்தவர்.கூட்டத்தில் எங்கிருந்தாலும்,எத்தனை பிசியாக இருந்தாலும் என் தலை கண்டதும் வாஞ்சையோடு உச்சிமுகரும் அவரின் தாய்மைஉணர்வு இப்பொழுதும் நெகிழவைக்கும்.கடைசியாக ஓரிருவருடங்களுக்கு முன் இம்பீரியல் ஹோட்டலில் நடந்த ஒரு கருத்தரங்கில் அவரை சந்தித்து பேசியதுதான்.இப்பொழுது எங்கிருக்கின்றார் என்பது தெரியவில்லை.அன்பு ஆண்ட்டி,இப்போ நீங்க எங்கே இருக்கின்றீர்கள்?உங்கள் நலம் அறிய பேராவல்.(ஆண்ட்டியின் புகைப்படம் கிடைக்க வில்லை.ஆதலால் ரோஜாவைப்போல் அழகாகவும்,மென்மையாகவும் இருக்கும் இந்த ரோஜாபடம் பொருந்தும்தானே?)

டாக்டர்.கிரேஸ்ஜார்ஜ்
************************
தன் தந்தையால் சிறிய அளவு ஆரம்பிக்கப்பட்ட பள்ளி கணவரால் விரிவுபடுத்தப்பட்டு,அவரது மறைவுக்குப்பின் தட்டித்தடுமாறி நிர்வாகத்தை தானே ஏற்று ,திறன் பட கல்வி நிறுவனத்தை நடத்தி.இன்று ஆலமரமாய் ஆல்பா பொறியியல் கல்லூரி,ஆல்பா ஆர்ட்ஸ்&சைன்ஸ் கல்லூரி.பள்ளியின் கிளைகள்,டாக்டர் கிரேஸ்ஜார்ஜ் மருத்துவமனை என்று மங்காப்புகழுடன் கல்வியறிவைபுகட்டிவரும் சாதனைப்பெண்மணி.சென்னை நந்தனத்திற்கே லேண்ட் மார்க்காக திகழும் ஆல்பா மெட்ரிகுலேஷன் மேனிலைப்பள்ளி கல்வி உலகிற்கு ஒரு கலங்கரை விளக்கம்.

சரீஃபா அஜீஸ்
******************

கீழை நகர் பிரமுகரும்,சிறந்த கல்வியாளரும்,ஈடிஏ குழுமத்தலைவரின் குடும்ப அங்கத்தினரும்,சென்னை நுங்கம்பாக்கம் கிரஸண்ட் பெண்கள் பள்ளியின் டைரக்டரும்,முதல்வரும்,பள்ளியின் அபார வளர்ச்சிக்கும்,சிறப்புக்கும்,மாணவிகளின்சீரிய ஒழுக்கத்திற்கும் வித்திட்டு அன்று முதல் இன்றுவரை தொடர்ந்து அயராது,சிறப்புற பள்ளியின் வளர்ச்சிக்கு அரும்பணியாற்றிவரும் கண்ணியப்பெண்மணி சரீஃபா அஜீஸ் அவர்கள் என்றால் மிகைஆகாது.ஊடகங்களில் அடிக்கடி வலம் வரும் பெண்மணி ஆகையால் அனைவரும் அறிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.அறிவுப்பூர்வமான செயல்பாடுகள்,,எப்பொழுதும் கல்வியைப்பற்றிய சிந்தனை,அதற்கான பாடுபடல்,அசாத்திய ஞாபகசக்தி,கம்பீரம் அனைத்தையும் இவரிடம் கண்டு வியந்திருக்கின்றேன்.
டாக்டர்.கீதா ஹரிப்பிரியா
*******************************
மலடு என்ற சொல் அகராதியில் இல்லாதவாறு செய்வதற்கு வழிவகுத்துக்கொண்டிருப்பவர்.செயற்கைமுறை குழந்தை மருத்துவத்தில் சாதனை படைத்து சென்னையில் தன்னிகரில்லா இடத்தில் இருப்பவர்.சென்னை சேத்துப்பட்டு ஹாரிங்டன் சாலையில் பிரஷாந்த் மருத்துவமனையின் உரிமையாளர்.குழந்தை நாடி வெளிமாநிலங்களில் மட்டுமல்லாமல்,வெளிநாடுகளிலும் இருந்தும் வந்து தங்கி சிகிச்சை பெற்று.கை கொள்ளாமல் ஒன்று,அல்லது ஒன்றுக்குமேற்பட்ட குழந்தைகளை கைநிறைய சுமந்துகொண்டு சொந்த ஊருக்கு மகிழ்ச்சியாக திரும்பும் வயது முதிர்ந்த பெற்றோர்கள் ஏராளம் ஏராளம்.காலையில் முழுக்க மருத்துவ உடையில் சுறுசுறுப்பாக வலம் வரும் இவர் இரவு பளிச் என்ற பாட்டாடை அணிந்து பரவசமாக, சிகிச்சைக்குவருபவர்களுக்கு நடுநிசிவரை தனது கன்ஸல்டிங் அறையில் இருந்து மருத்துவம் பார்க்கும் சுறுசுறுப்பு அலாதியானது.இத்தனை பிசியிலும் ஒவ்வொரு நோயாளியிடமும் தனிப்பட்ட கவனம் செலுத்துதல்,அந்யோன்யம்,அன்பான பேச்சு,பொறுமையுடன் சந்தேகம்தீர்த்தல் அனைத்தும் இவரின் குணாதிசியங்கள்.இவரின் சுறுசுறுப்பும்,அயராத உழைப்பையும் பார்ப்பவர்கள் வியக்காமல் இருக்க இயலாது.24 மணி நேரத்தில் நாண்கு மணிநேரம் கூட ஓய்வு எடுப்பாரா என்பது சந்தேகமே.இந்த மங்கா உழைப்பு இவருக்கு இறைவன் கொடுத்த வரம்.
அனுராதாரமணன்
*********************
எல்லோரும் அறிந்த பிரபல எழுத்தாளர்.இவரைப்பற்றி நான் அதிகம் சொல்லத்தேவை இல்லை.என் பதிம வயதில் இவரது எழுத்துக்கள்தாம் என்னுள் எழுத்தார்வத்தை,ஒரு அழகிய,சிறப்பான தாக்கத்தை ஏற்படுத்தியது.அன்று முதல் இன்று வரை அதே இளமையுடன் இருந்து எழுத்திலும் இளமையை தக்க வைத்து என்னை அசத்திய அபூர்வபெண்மணி.நூல்கள் படிக்கும் ஆவல் இப்போது எனக்கு குறைந்தாலும்,அனுராதாரமணனின் எழுத்துக்கள் படிப்பதில் ஆர்வம் இதுவரை குறைந்ததில்லை. ,சுண்டல் கட்டித்தரும் பேப்பரில் அவரது எழுத்துக்கள் இருந்தால் கூட விடுவதில்லை.

சுமையா தாவூத்
******************
கீழக்கரை தாசிம்பீவி அப்துல் காதர் கல்லூரி ஆரம்பித்த புதிதில் ஒரு மாணவியின் தோற்றத்தில் கல்லூரியின் விரிவுரையாளராக நுழைந்ததில் இருந்து எனக்கு இவரைத்தெரியும்.இவரது திறமையாலும்,உழைப்பாலும்,பயிற்றுவிக்கும் பாங்கினாலும் ஹெச்.ஓ டி ஆக வளர்ந்து,இன்று முதல்வராக மிளிர்ந்து இப்போது கல்லூரிவளர்ச்சிக்காக பாடுபடுகிறார்.இவரது ஆரம்ப கட்ட வளர்ச்சியை அருகிலிருந்தே பார்த்தவள் நான்.பழகுவதற்கு இனிய ஸ்நேகிதி.

டிஸ்கி
*******
கையில் பொம்மையுடன் பொக்கைவாய் சிரிப்புடன் நிற்கும் இந்த கு(சு)ட்டிப்பொண்ணும் 'பளிச்'தான்.ஹி..ஹி..ஹி..

45 comments:

ஜெய்லானி said...

//கு(சு)ட்டிப்பொண்ணும் 'பளிச்'தான்.ஹி..ஹி..ஹி.//

அழகுதான். இது யாரு நீங்களா ???

ஹுஸைனம்மா said...

நல்ல அறிமுகங்கள் அக்கா!! சிலரைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் பார்க்கவும் முடிந்தது உங்கள் புண்ணியத்தில். இனம் இனத்தைச் சேரும் என்ற விதத்தில் பெரியவர்களை நட்பாகக் கொண்டுள்ள நீங்களும் பெரியவர்தான் என்பதில் மறுகருத்தில்லை!!

(நானும் உங்களுக்கு நட்புதான் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன் !!) ;-))

அந்தப் பொக்கைவாய்ச் சிறுமி, இதோ இன்னும் பொக்கைவாயாகாத பாட்டிதானே?? ;-))

SUFFIX said...

இங்கே குறிப்பிடப்பட்டிருக்கும் சிலரை கேள்விப் பட்டிருக்கின்றேன், விளக்கமாக இங்கே தெரிந்து கொண்டேன்.

அண்ணாமலையான் said...

வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

//என்னை பெரியஆள் (old)என்று அவ்வப்பொழுது சொல்லிக்காட்டவிட்டால்//

அக்கா, நான் உள்ளத்தால், சேவையால் உயர்ந்தவர்கள் என்ற அர்த்தத்தில்தான் “பெரியவர்கள்” என்று சொன்னேன்!! 2011-ஐ 1911ன்னு சொல்லி நீங்களே உங்க வயசச் சொல்லிட்டீங்க பாருங்க!!
;-)))


அப்ப அந்த பளிச் பொண்ணு நீங்க இல்லையா?

நட்புடன் ஜமால் said...

வாழ்த்துகள்!

போட்டோவின் தரத்திலேயே தெரியுது நீண்ட நாட்கள் ஆயிற்றென்று. பளிச் தான்.

------------

நல்லவிதமா சொல்லியிருக்கீங்க

இவர்களை அதிகம் அறிந்ததில்லை.

ஹைஷ்126 said...

”பளிச்” க்கு பின் உள்ள உழைப்பு மலைப் போல் தெரியுது :)

அனைவரும் வாழ்க வளமுடன்.

நாஸியா said...

ஐ ஷரிஃபா மேம்! :))

நான் பத்தாவது படிக்கும் வரை அவங்க தான் ப்ரின்சியா இருந்தாங்க.. பிறகு கரெஸ்பான்டென்ட் ஆகிட்டாங்க.. அவங்க கம்பீரம், கம்பீரம் தான்.. அசெம்ப்ளி அப்போ அவங்களே ஃபாத்திஹா சூரா ஓதி, அவங்களோடவே அதோட ஆங்கில மொழிப்பெயர்ப்ப நாங்கல்லாம் திரும்ப சொல்லுவோம்..

செ.சரவணக்குமார் said...

ரொம்ப நல்ல பகிர்வு அக்கா.

ஸாதிகா said...

என்னங்க ஜெயிலானி."பளிச்"பொண்ணுன்னு போட்டு இருக்கேன்.நீங்களா என்று கேட்டுட்டீங்க..!கருத்துக்கு நன்றி!

ஹுசைனம்மா,
என்னப்பா..என்னை பெரியஆள் (old)என்று அவ்வப்பொழுது சொல்லிக்காட்டவிட்டால் உங்களுக்கு தூக்கம் வராதே.அட போங்கப்பா..நானும் உங்களைப்போல் சின்னப்பொண்ணுதான்.அடுத்த 2011 மகளிர்தினப்பதிவில் குட்டிப்"பளிச்" பெண்களைப்பற்றி இடுகை இடுகிறேன்.(இன்ஷா அல்லாஹ்)அப்போ என்ன கருத்து சொல்லுகின்றீர்கள் என்று பார்ப்போம்.உடன் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் ஷஃபி,
கருத்துக்கு மிக்க நன்றி.

அண்ணாமலையான்,
வாழ்த்துக்களுக்கு நன்றி.

ஹுசைனம்மா,
அடிங்ங்ங்ங்ங்ங்....ஐயையோ ஹுசைனம்மா கிட்டே போய் வசமா மாட்டிகிட்டேனே.ஆனாக்க என்ன அதையே தூக்கிட்டேன் பாருங்க.ரைட்டு..ரைட்டு..நீங்க சொன்னது போல் என் வயசு அடுத்த வருடம் நூறுக்கு வந்துவிடும் .பழம் பெரும் பதிவர் ஸாதிகாவுக்கு நூறாவது பிறந்த நாள் என்று சக பதிவர்களும் வாழ்த்து சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள்.நீங்கள் விரைவில் இருநூறு எட்ட வாழ்த்திவிடுங்கள் சரியா?போங்க..போய் நல்லா தூங்குங்க.உங்க கனவில் பூச்சாண்டி வரட்டுமாக!

ஸாதிகா said...

சகோ ஜமால்
கருத்துக்கு மிக்க நன்றி!///நல்லவிதமா சொல்லியிருக்கீங்க/// நல்லவிதமாக இருக்கைப்போய்த்தானே பளிச் பெண்கள் பகுதியில் எழுதி இருக்கிறேன்.இன்னும் இவர்களிப்பற்றி சுவாரஷ்யமான தகவல்கள் உண்டு .பின்னாளில் அவர்கள் அனுமதியுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

சகோ ஹைஷ்,
//”பளிச்” க்கு பின் உள்ள உழைப்பு மலைப் போல் தெரியுது :)
//கடைசியிலே ஸ்மைலி போட்டு இருக்கீங்களே?உள்குத்து இல்லையே? :-)

நாஸியா
கிரஸண்ட்டில்தான் படித்தீர்களா?சந்தோஷம்.

தம்பி சரவணக்குமார்,
கருத்துக்கு நன்றி.ஊரில் இருந்து அதற்குள் வந்தாச்சா?அல்லது ஊரில் இருந்து பதிவா?

Unknown said...

யக்கோய் கட்சீ போட்டோலே கீறது ஆரு?உங்க பேத்தியா

athira said...

ஸாதிகா அக்கா “பளிச்” பெண்கள் என்றதுமே, ரீவி புரோகிராமாக்கும் என நினைச்சுட்டேன்... ரீவியைத் திட்டித்திட்டியே ... எல்லாப் புரோக்கிராமும் ஒழுங்காப்பார்க்கிறீங்க எனத் தெரியுது:).. இதுக்கெல்லாம் முறைக்கப்படாது... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

எனக்கு இதில் எழுத்தாளர் அனுராதா தவிர யாரையுமே தெரியாது.. அழகாக எல்லோரையும் அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க...

//இனம் இனத்தைச் சேரும் என்ற விதத்தில் பெரியவர்களை நட்பாகக் கொண்டுள்ள நீங்களும் பெரியவர்தான் என்பதில் மறுகருத்தில்லை!!

(நானும் உங்களுக்கு நட்புதான் என்பதையும் நினைவுபடுத்திக் கொள்கிறேன் !!) ;-))/// ஹி...ஹி..ஹி.... ரிப்பீட்டு ஸாதிகா அக்கா.... மீ எஸ்ஸ்ஸ்...கேப்

சீமான்கனி said...

அந்த குட்டி யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொல்லிபுட்டேன் ஆமா...

அருமையான பதிவு அக்கா...
பெண்மையை போற்றும் நுறாவது மகளிர் தின வாழ்த்துகள் அன்பான அக்காவுக்கு...

Asiya Omar said...

அருமையான பதிவு,திரும்ப திரும்ப வியக்க வைப்பதில் ஸாதிகாவிற்கு நிகர் ஸாதிகா தான்.பாராட்டுக்கள் தோழி.இதே வரிசையில் கடைசியில் இருக்கும் அந்த சாதனைப்பெண் குட்டி நீங்க தான் என்பதில் சந்தேகமில்லை.

ஸாதிகா said...

செய்யத்,
///யக்கோய் கட்சீ போட்டோலே கீறது ஆரு?உங்க பேத்தியா/// அவ்வ்வ்வ்வ்வ்வ்......

அதிரா பெண்களைப்பெருமை படுத்து இந்த நாளில் அக்காவை இப்படி இம்சைப்படுத்தலாமா?இது நியாயமா?:-)

வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி தம்பி சீமான் கனி.///அந்த குட்டி யாருன்னு எனக்கு தெரிஞ்சே ஆகணும் சொல்லிபுட்டேன் ஆமா.../// ம்ம்ம்...சொல்லிவிட்டால் போச்சு.

ஸாதிகா said...

என்ன தோழி ஆசியா,என்னை நீங்கள் பார்க்காமலே இப்படிக்கூறிவிட்டீர்கள்?வாங்க இங்கே.என்னை நேரில் பாருங்கள்.அப்புறம் சொல்லுங்க அது நானா?இல்லையா என்று.உண்மை தெரிந்து விடும்.

Jaleela Kamal said...

'பளிச் பெண்களை பற்றி 'பளிச்' தகவல்.

அருமையான விளக்கம். ஸாதிகா அக்கா , அந்த பளிச் பொக்கை வாய் சிரிப்பழகி யார் என்று என் கிட்ட மட்டும் காதில் சொல்லுங்கள் .

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா எப்படி கோபப்படுபவர்கள் எல்லாம் தாராள மனதுடன் போகும் இடம் எல்லாம் கோபத்தை வாரி இறைத்துவிட்டு போகிறார்களோ அது போல் போகும் இடம் எல்லாம் ஏன் சிரிப்பையும், சந்தோஷத்தையும் வாரி இறைத்துவிட்டு போகலாமே என்றுதான் :) இது போட்டேன்.

எல்லாவற்றையும் உள்குத்து பார்வையுடனே பாக்குறீங்களே :(

Jaleela Kamal said...

ஹுஸைனாம்மா விற்கு செல்லமா உங்களை கிண்டல் பண்ணாம தூக்கம் வராது.


ஹுஸைனாம்மா விற்கு செல்லமா உங்களை கிண்டல் பண்ணாம தூக்கம் வராது.

ஸாதிகா அக்கா இத்தனை நல்ல பளிச் தகவலை அள்ளி தெளிக்கிறீங்க நீங்களும் ஒரு பளிச் (தெளிவான) பெண் தான் ,

Jaleela Kamal said...

அதிரா மட்டும் இல்ல‌ நானும் நானும் உங்கள் தோழி என்று பெருமைப்பட்டு கொள்கிறேன்.


அதிரா தலைப்ப பார்த்ததும் ரீவி நியுஸ் என்று நினைத்தீர்களா?
ஏன் இந்த இடத்தில் பூஸின் கிட்னியை பயன் படுத்தல.இர‌ட்டைய‌ர் ந‌ல‌மா?

ஸாதிகா said...

ஜலி,என்னப்பா ஒரு டிஸ்கி போட்டேன் அதைப்போய் பெரிசு பண்ணிக்கொண்டு.உண்மைதான் ஹுசைனம்மாவுக்கு என்னை கிண்டல் செய்யாவிட்டால் தூக்கம்வராது.அவங்க ஊருக்காரவங்க சரிக்கு சமமாக இருப்பாங்க.இந்த ஹுசைனம்மா தங்கச்சி அப்பாவியான என்னைப்போய் இப்படி ரவுசு பண்ணுறாங்க.நீங்களாவது கொஞ்சம் சொல்லிவைக்கக்கூடாதா?

சகோதரர் ஹைஷ்,
நானும் ஸ்மைலி போட்டு இருக்கேன் கவனிக்கவில்லையா?//எல்லாவற்றையும் உள்குத்து பார்வையுடனே பாக்குறீங்களே :( கோபித்துக்கொள்ளாதீங்க சகோ..:-)

ஸாதிகா said...

ஜலி, அதே போல் உங்கள் அனைவரின் நட்பும் எனக்கு கிடைத்ததை நானும் பெருமையாகவும் பாக்கியமாகவும் நினைக்கிறேன்.ஐயோ..ஜலி இரட்டையர்கள் இருவரும் தோற்றத்தில் ஒரே மாதிரி இருப்பதால் அவர்களை இரட்டையர்கள் என்று நினைக்காதீர்கள்.தங்கச்சி அதிரா யோசிக்க கிட்னியை பயன் படுத்துவதால்த்தான் இப்படி.இல்லை அதிராமா...?

ஜலி ஆன் லைனுக்கு வாங்க?

அன்புடன் மலிக்கா said...

அழகான நல்ல அறிமுகங்கள் எங்களை அறியச்செய்தமைக்கு மகிழ்ச்சி.. மகளிர்தின வாழ்த்துக்கள்...

kavisiva said...

மகளிர் தினத்தில் பளிச் பெண்களின் பளிச் அறிமுகங்கள். அனுராதா ரமணனையும் டாக்டர் கீதா ஹரிப்ரியாவையும் பளிச் சுட்டிப்பெண்ணையும் மட்டுமே எனக்கு தெரியும். மற்ற மளிச் பெண்களைப்பற்றி தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. நன்று சாதிகா அக்கா

Asiya Omar said...

உங்களை பார்த்திருக்கேன் ஸாதிகா அறுசுவை கெட்டுகெதரில்.தனிஷா உபயம்.

malar said...

''''டாக்டர்.ரஹ்மத்துன்னிஷா ரஹ்மான்''

ஆம் ...
இறைவன் அவகர்களுக்கும் அவர்கள் குடும்பம்பதாருக்கும் இன்னும் பல நன்மைகளை கொடுத்து BSA அவ்ர்களால் தொடங்கப்பட்ட ETA நிறுவனம் மேலும் பல வழற்சிகளை அடைந்து அவர்களால் பல குடும்பங்கள் பயன் அடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக....

Vijiskitchencreations said...

நல்ல பதிவு. கிதாப்ரியா & அனுராதா ரமனன் எனக்கு தெரியும் மற்ற எல்லாரையும் இப்ப தான் தெரிஞ்சுகிட்டேன். நானும் இங்கு சொல்லிகொள்கிறேன். பத்மா சேஷாத்திரி பள்ளி முதல்வர் அவர்களும் நல்ல எல்லா திறமையும் பெற்ற நல்ல பெண்மனி இப்ப அவர்களுக்கு இருக்கிற வயதில் இன்னும் அதே இளமை துள்ளளில் செயலபடுகிறார் என்று நினைக்கும் போது ஆச்சரியம் அவங்களையும் இங்கு சொல்லிகொள்கிறேன். நன்றி.

செந்தமிழ் செல்வி said...

ஸ்னேகிதி ஸாதிகா,
அனுராதா ரமணன் தவிர மற்றவர்களை அறிந்ததில்லை. அறிய வைத்தமைக்கு நன்றி.
மகளிர் தின வாழ்த்துக்கள்!

இலா said...

நல்லதொரு பதிவு ஸாதிகா ஆன்டி!

Thenammai Lakshmanan said...

மகளிர் தின வாழ்த்துக்கள் ஸாதிகா பளிச் பெண் போல இடுகையும் பகிர்வும் நல்ல பளிச்

abhiramam said...

mail me back at abiramamatgmail to know more about Nafeesa Kalim. I am her relative

சீமான்கனி said...

akkaa ingu vanthu paarkkavum...
http://ganifriends.blogspot.com/2010/03/blog-post_08.html

cho visiri said...

namaskaram. Vazhaga vallamudan.
Thanks for introducing a lot of "great Magalir personalities".

That lovely photo depicting the inexplicable wonders of natural smile (Pokkai vaai Punnagai) is "icing on the cake".

By the way, I noticed one thing, which you may kindly have a re-look.

In your profile, the blogspot, "Ellap Pugazhum Iraivanukke" figures both places namely, Your Blog and the Blogs you follow.

Namaskaram, once again. Vaazhga Vallamudan.

ஸ்வீட் said...

மலிக்கா,கருத்துக்கு நன்றி.உங்களுக்க்கும் என் வாழ்த்துக்கள்!

கவிசிவா,உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

ஆசியா,தனிஷா மூலம் என் படத்தைப்பார்த்து இருக்கின்றீர்களா?முடியாதே...!!

மலர்,உங்கள் வாழ்த்தும்,பிரார்த்தனையும் மிக்க மகிழ்வைத்தந்தது.உண்மைதான் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நல் வாழ்க்கை கொடுத்து வரும் உலகநாடுகள் முழுக்க தன் சாம்ராஜ்ஜியத்தை நிலை நாட்டிவரும் ஈ டி ஏ மேன் மேலும் உயர்ந்து பலருக்கும் பயனளிக்கவேண்டும் என்பதே எனது ஆசையும்,துஆவும்.

உண்மைதான் விஜி,பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் திருமதி ஒய்,ஜி.பி அவர்களை என் நினைவில் வரவில்லை.மேலும் அனுராதா ரமணன் தவிர மற்ற அனைவரும் எனக்கு அறிமுகமானவர்களே.இந்த பின்னூட்டத்தின் மூலம் பத்மா சேஷாத்ரி முதல்வரைப்பற்றி சொன்னமைக்கு மகிழ்ச்சி,நன்றி.

ஸ்நேகிதி செல்வி,தவறாது வந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி,நன்றி.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இலா கருத்துக்கு நன்றி.

சகோ தேனம்மை ///பளிச் பெண் போல இடுகையும் பகிர்வும் நல்ல பளிச்//வரிகளில் மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.நான் வசிக்கும் ஊரில் உள்ள சக பெண் பதிவர் என்று உங்களை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.காலம் கனிந்தால் சந்திப்போம்.

abhiramam,
it was great to see your post.. thank u so much.. i have already mailed you.. check out.

சீமான் கனி,போய் பார்த்துவிட்டேன்.கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்.அழைப்புக்கு நன்றி!

cho visiri,
thanks for your comments

ஸாதிகா said...

மலிக்கா,கருத்துக்கு நன்றி.உங்களுக்க்கும் என் வாழ்த்துக்கள்!

கவிசிவா,உங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி!

ஆசியா,தனிஷா மூலம் என் படத்தைப்பார்த்து இருக்கின்றீர்களா?முடியாதே...!!

மலர்,உங்கள் வாழ்த்தும்,பிரார்த்தனையும் மிக்க மகிழ்வைத்தந்தது.உண்மைதான் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு நல் வாழ்க்கை கொடுத்து வரும் உலகநாடுகள் முழுக்க தன் சாம்ராஜ்ஜியத்தை நிலை நாட்டிவரும் ஈ டி ஏ மேன் மேலும் உயர்ந்து பலருக்கும் பயனளிக்கவேண்டும் என்பதே எனது ஆசையும்,துஆவும்.

உண்மைதான் விஜி,பத்மா சேஷாத்ரி பள்ளியின் முதல்வர் திருமதி ஒய்,ஜி.பி அவர்களை என் நினைவில் வரவில்லை.மேலும் அனுராதா ரமணன் தவிர மற்ற அனைவரும் எனக்கு அறிமுகமானவர்களே.இந்த பின்னூட்டத்தின் மூலம் பத்மா சேஷாத்ரி முதல்வரைப்பற்றி சொன்னமைக்கு மகிழ்ச்சி,நன்றி.

ஸ்நேகிதி செல்வி,தவறாது வந்து கருத்து தெரிவித்தமைக்கு மகிழ்ச்சி,நன்றி.உங்களுக்கும் என் வாழ்த்துக்கள்.

இலா கருத்துக்கு நன்றி.

சகோ தேனம்மை ///பளிச் பெண் போல இடுகையும் பகிர்வும் நல்ல பளிச்//வரிகளில் மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.நான் வசிக்கும் ஊரில் உள்ள சக பெண் பதிவர் என்று உங்களை நினைக்கும் பொழுது மகிழ்ச்சியாக உள்ளது.காலம் கனிந்தால் சந்திப்போம்.

abhiramam,
it was great to see your post.. thank u so much.. i have already mailed you.. check out.

சீமான் கனி,போய் பார்த்துவிட்டேன்.கண்டிப்பாக உங்கள் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்.அழைப்புக்கு நன்றி!

cho visiri
thanks for your comments

பித்தனின் வாக்கு said...

மிக அருமையான பதிவு, சாதனை படைக்கும் பெண்கள் என்பது சாதாரனமானது அல்ல. டாக்டர்.கீதாஹரிப்பிரியா அவர்களின் மருத்து சிகிச்சையால் தான் திருமணம் ஆகி 18 வருடங்கள் குழந்தை இல்லாமல் இருந்த என் அண்ணா,அன்னிக்கு குழந்தை பாக்கியம் கிட்டியது. இன்முகமும்,கண்டிப்பும் காட்டும் திறமை வாய்ந்த மருத்துவர். கடைசி படம் பதிவுலகில் சாதனை புரியும் ஸாதிகாவின் படம் என்று நினைக்கின்றேன்.சரியா?

Asiya Omar said...

ஸாதிகா போட்டோ இல்லைமா வீடியோ கிளிப்பிங்,நீங்கள், மகள்,தங்கை மகள் மூவரையும்.இன்னும் அந்த செழிப்பு கண்ணிற்குள்ளேயே இருக்கு.

ஸாதிகா said...

பித்தனின்வாக்கு 18 ஆண்டுகள் கழித்து உங்கள் அண்ணா,அண்ணிக்கு குழந்தை கிட்டி இருக்கிறது.படிப்பதற்கே சந்தோஷமாக உள்ளது.அவர்களுக்கு எப்படி இருக்கும்!!குழந்தையுடன் நீடூழி வாழ்க வளமுடன்.

ஆசியா,வீடியோ கிளிப்பிங்கோடு பார்த்துட்டீங்களா?மறந்துடுங்க.ஆனால்இந்த படம் நான் தானா என்று நீங்கள் நேரில் பார்த்துத்தான் சொல்ல வேண்டும்

Menaga Sathia said...

அனுராதா ரமணன் மட்டுமே தெரியம்.மற்றவர்களின் அறிமுகங்கள் பளிச் நு இருக்கு.அந்த கடைசி போட்டோ நீங்கதானே..நானும் உங்களை பார்த்திருக்கேன் தனீஷாவின் உபயத்தில்....

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையாக பளிச்சிடுகிறார்கள் நீங்கள் குறிப்பிட்ட பெண்கள். சாதனை பெண்கள் அனைவரும் சாதனையாளர்கள் தான். நிறைய தகவல்கள். டாக்டர்.கீதா ஹரிப்பிரியா அவர்கள் முகவரி, போன் நம்பர் இருந்தா கொஞ்சம் தரலாமா.

நன்றி ஸாதிகா. நான் கேட்ட விவரத்தை என்மெயிலுக்கு தயவுசெய்து அனுப்பவும். மிக்க நன்றி.

ஸாதிகா said...

மேனகா கருத்துக்கு நன்றி.

ஸ்டார்ஜன், உங்கள் கருத்துக்கும் நன்றி.

எம் அப்துல் காதர் said...

அந்த குழந்தையும் இப்போதைய "பளிச்" பெண்தானோ... யாரது நீங்களா மேடம்?

ஸாதிகா said...

சகோதரர் அப்துல்காதர்,வருகைக்கு மகிழ்ச்சி.இறைவா!இன்னும் இந்த குட்டிபொண்ணு யார் என்ற சர்ச்சை அடங்கவில்லையா?