October 30, 2009

கவித..கவித..


தூர வானில்
பட்டாசாக ஜொலிக்கின்றது வானம்
"ம்மா" என்று பயத்தில் அழுகிறது மழலை
இடி முழக்கமோ டமாரமாக செவிகளில்
முட்டி முழங்குகிறது

வெளியில் விருட்சத்தில்
பறவை யினங்கள்
இறகுகளை படபடக்கும் ஓசை
பார்க்கயில் பரிதாபம்.
அதிகம் தண்ணிர் பட்டால்
நட்டு வைத்த ரோஜா செடி அழுகிடுமோ என்ன செய்ய?
வினா எழுப்புது மனம்

சிலீர் என்று சாரல் வீசும் சன்னல்களை
சாற்றும் ஓசை
இயந்திர பொருட்கள் பழுதடையுமோ
என்ற பதைபதைப்பில்
போர்கால நடவடிக்கையாக
பிள்க் பாயிண்ட்டுகளை பிடுங்கும்
அவசரகோலம்

உலர வைத்த சீருடை உலரா விட்டால்..?
எங்ங்னம் செல்வான்
என் பிள்ளை பள்ளி?
மனதில் மிளிர்கிறது வினா.

ஓடியாடி விளையாடும் தொட்டில் மீனுக்கும்
குளிரெடுக்கின்றதோ?
இன்று மீன்களின் குத்தாட்டம் சற்று அதிகமே.

தரையில் கால் பட்டால் தாங்காது
என்றெண்ணி தயக்கப்பட்டு நடக்காமல்
காலுறை தேடும் கண்கள்.

குளிருக்கு இதமாக சுக்கு காப்பி
கேட்கிறது நடுங்கும் வாய்
நல்ல மழை நல்ல மழை
இவ்வருடம் பஞ்சமில்லை

குளிர் போக்க மப்ளரும்,கையுறையும் காலுறையும்
சொகுசாக போட்டுக்கொண்டு
கனத்த போர்வையை தலை வரை இழுத்துக்கொண்டு
போர்த்திப்படுக்கையில்
நெஞ்சை நெருடுது கேள்வி
மைய்ய வாடியில் துயில் கொண்டிருக்கும்
என் இனிய வாப்பா இப்போதென்ன செய்வார்?11 comments:

Menaga Sathia said...

கவித கூட எழுதுவீங்களா,நன்றாகயிருக்கு.கலக்குங்க அக்கா...

ஸாதிகா said...

கதை,கவிதை மட்டுமல்ல,ஓவியம் வரைவதிலும் எனக்கு ஈடுபாடு உண்டு.80,90 களில் நிறைய பத்திரிகைகளுக்கு எழுதிவந்தேன்.அதெல்லாம் இப்பொழுது ஞாபகம் வருதே..என்றாகிவிட்டது.

சோனகன் said...

கவிதைகள் வெகு நுட்பமான உணர்வுகளை நயமாக வெளிப்படுத்த்யிருக்கிறது.

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி சோனகரே!

Unknown said...

தாங்கள் வாப்ப்வின் மீது வைத்து இருக்கும் பாசத்தை புடம் போட்டு காட்டுகின்றது கவிதை அழகு அழகு

ஜெய்லானி said...

படித்து ரசித்துக் கொண்டு வருகையில் கடைசியில் , நினைக்கையில் கண்களை குளமாக்கி விட்டீர்கள்.

ஸாதிகா said...

நன்றி ஜெயிலானி

ஸாதிகா said...

நன்றி செய்யத்

crown said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி.கவிதை இறைவனுக்கு இணை வைக்காததாய் இருக்கனும் இருக்கிறது.சந்தோசம் படிக்க ஆரம்பிதவுடன் சிலிர்க்க வைத்த ஈர வரிகள் முடிக்கையில் கொட்டென கண்ணீர் கொட்ட அங்கே கண்ணீரின் காற்றாரு.( நானும் எழுதுவேன் தொன்னூறுகளில்சினிமாக்களில் வாய்ப்பு வந்ததும் தட்டிகழித்துவிட்டேன் காரணம்,இறைவனுக்கு இணைவைக்கும் பொய் வார்தைகள் உபயோகம் செய்ய வேண்டி வரும் சூழ்னிலை).கவணம்! நல்லா எழுதுங்கள். அல்லாஹ் துணை நிற்பானாக ஆமீன் ரமலான் கரீம்)
MohamedThasthageer(usa)

இமா க்றிஸ் said...

வெகு அருமை ஸாதிகா. இறுதி வரிகள் கண்ணீர் வரவைத்துவிட்டன.

Angel said...

கலங்க வைத்து விட்டீங்க ஸாதிகா அந்த கடைசி வரிகள் ...
இருக்கும்போது கூட அருமை தெரியாது .இனிமே அவங்களை பாக்கவே முடியாதின்னு எனும்போது நினைவுகள் கூட வலிக்குது