September 29, 2009

இறை வாழ்த்துப்பா


கீழக்கரை டவுன் காஜியும்,மரியாதைக்குறிய மாமாவும் மர்ஹூம் கே.எல்.எம் முஹம்மது இப்ராஹீம் பாஜில் நூரியீ அவர்கள் இயற்றிய இறை வாழ்த்துப்பா.என் மனம் கவர்ந்த,வல்ல இறையோனை நெக்குருகி வாழ்த்திப்பாடும் இந்த அருமையான பாடலை இந்த பிளாக்கில் பதிவு செய்து மகிழ்கின்றேன்.நீங்களும் இதனை மனனம் செய்து வல்லோனின் அருளை பெறுவீர்களாக!
இறை வாழ்த்துப்பா

ஹஸ்பி ரப்பி ஜல்லல்லாஹ்
மாபி கல்பி கைருல்லாஹ்
நூருமுஹம்மது ஸல்லல்லாஹ்
லாயிலாஹா இல்லலாஹ்

அருள் மிகு இறைவா யா அல்லாஹ்
அன்பால் அணைப்பவன் நீ அல்லாஹ்
அனைத்தையும் ஆள்பவன் நீ அல்லாஹ்
அருஞ்சுடர் பரப்பும் யா அல்லாஹ்

நீயே அனைத்தையும் படைத்தருளும்
நிகரினை இல்லா நிஜப்பொருளும்
நீயே கதி எமக்கென் னாளும்
நிதமும் அருள்வாய் யா அல்லாஹ்

எங்கும் ஒளியாய் உயர்ந்திலங்கும்
எங்கள் அகத்திருள் வாய்த்துலங்கும்
என்றும் உனதருள் அன்பு பொங்கும்
எங்கள் இறைவா யா அல்லாஹ்

பார்க்கும் பொருளெல்லாம் பகரும்
பாங்காய் உந்தனை தினமுனரும்
பாக்கியபலனால் பாவம் தகரும்
பாத்திப பரம் பொருள் நீ அல்லாஹ்

உத்தம உளங்களில் திகழ்பவனே
உன்னத ஞானம் தருபவனே
ஊன் விழிகாண மிளிர்பவனே
உள்ளக ஜோதியே யா அல்லாஹ்

சார்ந்திடும் பக்தரை அணைத்திடுவாய்
சாயுச்ய பதவியில் உயர்த்திடுவாய்
சந்தமும் ஜெயமும் தந்திடுவாய்
சத்ய சத் பொருள் நீ அல்லாஹ்

பேரொழியாகிய பரம் பொருளே
பேரின்ப பாக்கிய மீதருளே
பேதம் நீங்கிய மனதினுள்ளே
பேரருள் புரிவாய் யா அல்லாஹ்

இன்புயர் இன்பத்தேனமுதம்
இறைவா உந்தன் உயர் நினைவாம்
இதயங்களுக்குத் தெளிவதுவாம்
இடம்பெற்றுணர்வூட்டும் அல்லாஹ்

உள்ளங்களுக்குள் ஒரு உயர் நாமம்
ஓங்கும் அல்லாஹ் வெனும் நாமம்
ஓதுவோம் உந்தன் திரு நாமம்
ஓர்மை மனதுடன் யா அல்லாஹ்

பொல்லா வழிதனில் செல்லாமல்
பொய்,புற,வசை மொழி சொல்லாமல்
எல்லாம் சதமெனக்கொள்ளாமல்
எங்களைக்காத்தருள் யா அல்லாஹ்

தாக்கும் பிணிகளை தகர்த்திடுவாய்
தாவும் பகைகளை தாக்கிடுவாய்
தாழ்த்தும் குறைகளை நீக்கிடுவாய்
தகை மிகு தற்பொருண் நீ அல்லாஹ்

ஆர்த்திகை அகற்றி அடியாருக்கும்
அனுதினமுந்தன் அருள் சுரக்கும்
ஆதரித்தருள் புரிவாய் எமக்கும்
ஆதி பராபொருன் நீ அல்லாஹ்

பெருக்கும் பிழைகளை பொறுத்தருள்வாய்
பேரருளால் எமை பொதிந்திடுவாய்
பேரின்ப அமுதை புகட்டிடுவாய்
பெரும் புகழ் இறைவா யா அல்லாஹ்

உந்தன் நினைவால் உயர் அடைவோம்
உந்தன் அருளால் பலனடைவோம்
உன்னிடமே நாம் சரண் அடைவோம்
உகப்புடன் அணைத்தருள் யா அல்லாஹ்

வாய்மை மிளிரும் சன்மார்க்கம்
வான்புவி எங்கும் சௌபாக்கியம்
வாழ்கவே அகங்களில் அருள் வாக்கியம்
வாழ்வினில் வளம்பெறுவோம் அல்லாஹ்

எங்கும் பொங்குக அருளின்பம்
என்றும் நீங்குக பல துன்பம்
எங்கள் அகங்களில் ஒளி பிம்பம்
என்றும் துலங்குக யா அல்லாஹ்

காழி இப்றாஹீம் நூரி
கவிகருள் ஆசி நிதம் கூறி
காருண்யனே உனதருள் வாரி
கருணை பொங்குக யா அல்லாஹ்

மாமுயர் சன்மார்க்கம் வாழ்க
மாண்புயர் நபி மணி குணம் வாழ்க
மக்கள் நல் வழி சார்பாக
மகிழ்வுடன் வாழ்க யா அல்லாஹ்

ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் ஆமீன் யா அல்லாஹ்
ஆமீன் வர்ஹம் யா அல்லாஹ்

7 comments:

sykasim said...
This comment has been removed by the author.
sykasim said...

A good initiative. I appreciate. Well done.
جزاك لله خير

ஸாதிகா said...

அல்ஹம்துலில்லாஹ்.பாராட்டுக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி.
ஸாதிகா ஹஸனா

எம்.எம்.அப்துல்லா said...

//பேரொழியாகிய பரம் பொருளே
பேரின்ப பாக்கிய மீதருளே
பேதம் நீங்கிய மனதினுள்ளே
பேரருள் புரிவாய் யா அல்லாஹ்

//

எத்தனை சத்தியமான வார்த்தைகள். அல்லா இப்பாடலை இயற்றிய கவியின் குடும்பத்தினர் மேல் அவன் அருளை பொழியட்டும்.

ஸாதிகா said...

சகோதரர் எம்.எம். அப்துல்லா எனது வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி.

தாஜ் said...

assalamu alaikkum

aththanayum saththiyamana varikal

thodarungal ungal paniyai

Anonymous said...

இந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை "நான்" என்று நம்பி இருக்கிறோம்.
சிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.

http://www.youtube.com/watch?v=y70Kw9Cz8kk (PART-1)
(First 2 mins audio may not be clear... sorry for that)

http://www.youtube.com/watch?v=XCAogxgG_G4 (part 2)

http://www.youtube.com/watch?v=FOF51gv5uCo (part 3)

Online Books
http://www.vallalyaar.com/?p=409

Guru:
Shiva Selvaraj,
Samarasa Sutha Sanmarkka Sathya Sangam,
17/49p, “Thanga Jothi “,
Kalaignar kudi-iruppu – Madhavapuram,
Kanyakumari – 629702.
Cell : 92451 53454