
கருவறையில் நிறைந்திருக்கும்
சுமை குறைய
கலங்கி தவித்து அழுது அலறி
கத்தி கதறி மயங்கி துவண்டு
வயிற்றில் சுமந்ததற்காக
உடம்பின் அத்தனை அணுக்களிலும்
வலி சுமந்து
ஜனனத்தில் இருந்து கிட்டாத வலிகளின்
அத்தனை வேதனைகளையும்
ஒரு சேர அனுபவித்து
உடலில் உள்ள அத்தனை சக்திகளையும்
சில கணம் இழந்து
உயிர் போய் உயிர் வந்து
நாடி நரம்பு நெக்குருகி
குருதி எல்லாம் கொதித்துப்போய்
கண்கள் இரண்டும் கழன்று போய்
கருவிழிகள் நிலைத்துப்போய்
மயிர்கால்களெல்லாம் விரைத்துப்போய்
புனர் ஜென்மம் எடுத்தது போல்
புதிய உயிரை பிரசவித்தேன்
வருவோர்க்கெல்லாம் உவகையுடன்
அள்ளி அள்ளி இனிப்பு வழங்கி
இன்முகத்துடன் கூறி மகிழ்கின்றாள்
என் அன்னை "இது சுகபிரசவம்"என்று.
| Tweet |
