
அபுதாபி கலீஃபா பார்க்கில் ஒரு அழகிய அருங்காட்சியகம் உள்ளது.அமீரகம் தோன்றியது முதல் இன்றுள்ள அமீரகம் வரை அழகிய சிற்பங்களாக நமக்கு வரலாற்றை எடுத்தியம்புகின்றது.மிகவும் நுணுக்கமாகவும்,அழகாகவும் செதுக்கப்பட்டுள்ள இவை கண்களையும்,கருத்தையும் கவர்கின்றது.நம்மவர்கள் தொட்டுப்பார்த்தும்,தட்டிப்பார்த்தும் சேதம் விளைவித்து விடுவார்கள் என்பதற்காகாவோ என்னவோ கேபிள் காரில் பார்வையாளர்களை அழைத்துச்செல்கின்றனர்.அதிலிருந்தபடி நான் மிகவும் ரசித்து கிளிக்கிய படங்கள்.கிளிக் செய்த எல்லாபடங்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற ஆவலில் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக தரப்போகின்றேன்.ஆரம்பத்தில் அமீரக அரபிகளுக்கு மீன் பிடித்தொழில் தான் பிரதானமாக இருந்து வந்தது.பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்திருப்பதை என்ன அழகாக வடிவமைத்து இருக்கின்றார்கள் என்று பாருங்கள்.

பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கற்கால அரபி.

மீனவர் குடில்

ஒரு மான் குட்டி சிதறிய பானகத்தை தன் தாகம் தீர்க்க சாப்பிடும் காட்சி

மீன் பிடிக்கும் உபகரணங்களுடன் ஒரு அரபி தன் குடிசைக்கு வெளியே இருக்கும் காட்சி

தூண்டிலில் மாட்டிய மீன்கள்.

வழிப்போக்கரான அரபி ஓய்வெடுக்கும் காட்சி.

ஹரிக்கோன் விளக்கு வெளிச்சத்தில் சாப்பாடு தயார் ஆகின்றது.

பயணித்து வந்த ஒட்டகங்கள்.

பொதி சுமந்து பயணித்த ஒட்டகங்கள் ,எஜமானர்களையும்,பொதிகளையும் இறக்கிவைத்து விட்டு ஓய்வெடுக்கின்றதோ?

பாலை மணலில் பாலைவனக் கப்பல்கள் பவனி வருகின்றன.
பாகம் இரண்டினைக்கான
இங்கு கிளிக் செய்யுங்கள்