May 21, 2010

சோபா சுந்தரிகள்

சி(ப)ல வீடுகளில் பார்த்து இருப்போம்.உள்ளே நுழைந்ததும் வரவேற்கும் சோபா குண்டும் குழியுமாக,பஞ்சும் ,நாறும் பிதுங்க,பரிதாபகரமாக நம்மைப்பார்த்து "காப்பாற்றுங்களேன்"என்று வாய்விட்டு சொல்லாமல் சொல்லும்.இந்த சோபாவின் அவலத்திற்கு சூத்ரத்தாரிகள் இந்த சோபா சுந்தரிகள்தான்.சுந்தரிகள் என்றதும் சுந்தரர்கள் காலரை தூக்கிவிட்டுக்கொள்ளக்கூடாது.இருபாலருக்கும், சேர்த்துத்தான் இவ்விடுகை இடப்பட்டுள்ளது.

சோபாவில் ஃபெவிக்காலை தடவி அதன் மீது உட்காரவைத்துஇருப்பதுப்போல் அசையாமல் உட்கார்ந்து இருப்பார்கள்.சிலர் படுக்கையில் இருந்து எழுந்ததுமே நேரே பாத்ரூம் சென்று காலைக்கடன்களை முடித்து விட்டு அவரவர் வாழ்க்கை கடமைகளை ஆரம்பிப்பதற்கு முன் எழுந்ததுமே நேரே சோபாதான்.அந்த பிரதான இருக்கையில் அமர்ந்து சோம்பல் முறித்து,கொட்டாவிவிட்டு,கைவிரல்களை நெட்டிமுறித்து ,மிச்சசொச்ச தூக்கத்தை கஷ்டப்பட்டு விரட்டி அடித்துவிட்டு அப்புறம் சவகாசமாக காலை கடன்களை முடித்தால்தான் இந்த சோபா பிரியர்களுக்கு பொழுது விடியும்.

சாப்பிடுவது,ஆஃபீஸ் பைல் பார்ப்பது,சாய்ந்துகொண்டு லேப்டாப்பில் வேலை செய்வது,டிவி பார்ப்பது,காய்நறுக்குவது,தலையில் சிக்கெடுப்பது,தலையை துவட்டுவது,நகம் வெட்டுவது,நகத்திற்கு பாலிஷ் போடுவது ,சோபா கைப்பிடியில் தலையை வைத்துக்கொண்டு மணிக்கணக்கில் செல் போனில் கடலை போடுவது,குட்டித்தூக்கம் மட்டுமல்ல ஆழ்ந்து தூங்குவது,மணிக்கணக்கில் அமர்ந்து புத்தகம் படிப்பது,சாய்ந்து படுத்தபடியே பிஸ்கட் பாக்கட்டுகளையும்,சிப்ஸ் பொட்டலங்களையும்,கூல் டிரிங்க்ஸ் களையும் வயிற்றுக்குள் தள்ளி கொலஸ்ட்டராலை ஏற்றிக்கொள்வது,அப்படியே அமர்ந்து கொண்டு தொழுகையை முடிப்பது இத்யாதி..இத்யாதி..எதற்கெல்லாம் இந்த சோபா பயன்படுகின்றது என்ற விவஸ்தையே இல்லை.

போதைக்கு அடிமையாவதைப்போல் இந்த சோபாசுகத்திற்கு அடிமையாகிப்போவது அவர்கள் அறியாமலே,இது தவறு என்பது புரியாமலே,அதனால் ஏற்படும் பின் விளைவுகள் வருந்ததக்கது என்பது புரியாமலே நம்மவர்கள் சோபாவை..அல்ல..அல்ல..சோபா நம்மவர்களை ஆக்ரமித்துக்கொள்கின்றது.

இதனால் உடல் ஆரோக்கியம் மட்டுமல்ல மன ஆரோக்கியமும் பாதிப்படைகின்றது.சோபாவில் பொழுதும் உட்கார்ந்திருக்கும் ஒருவர் மிகச்சிறந்த சோம்பேறி ஆகிவிடுகின்றார்.

இப்படி அமர்ந்து அமர்ந்தே மனம் தேவை இல்லாதவற்றை எல்லாம் அசைபோடும்.விளைவு?மனக்குழப்பம்,பிறர்மீது தேவைஇல்லாத எரிச்சல்,சுறுசுறுப்பாக இருப்பவர்களைப்பார்த்து பொறாமை,மனச்சோர்வு,இதனால் ஏற்படும் ஹைபர்டென்ஷன் இப்படி லிஸ்ட் போட்டுக்கொண்டே போகலாம்.

இந்த சோபா சுகவாசிகள் அமர்ந்து அமர்ந்தே சோம்பேறியாகிப்போகின்றார்கள்.உடல் உழைப்பு குறைவதால் தொந்தி தொப்பையை எளிதில் சம்பாதித்துக்கொள்கின்றனர்.சோம்பேறித்தனத்தினால் அனைத்திலும் அசுவார்ஸ்யதன்மை ஏற்பட்டு முதிய தோற்றம் விரைவில் வந்துவிடுகின்றது.சோம்பேறித்தனத்தால் தாழ்வுமனப்பான்மை ரெக்கைக்கட்டிக்கொண்டு பறக்கும்.

சோபாவில் கம் போட்டு ஒட்டிக்கொண்டு குடித்தனமே நடத்தும் சோபாவாசிகள் இந்த ஆளுருக்கி பழக்கத்தை விட்டொழிக்கவேண்டும்.சுருண்டு சோபாவில் கிடக்கும் பொழுதை உதறிவிட்டு நேரத்தை பயனுள்ளதாக்கிக்கொள்ளுங்கள்.

காற்றார வெளியில் நடங்கள்.அருகில் உள்ள பார்க் சென்று பொழுதைக்கழியுங்கள்.சுற்றம்,சூழல்,நட்பில்லங்களுக்கு சென்று வாருங்கள்.உறவுகளும் பலப்படும்.நம் வீட்டு சோபாவும் சீக்கிரம் பழசாகாது.நல்ல காற்றும்,,வெளிமனிதர்களின் அறிமுகங்களும் கிடைக்கும்.சும்மா உட்கார்ந்து கொண்டே பொழுதை ஓட்டும் சமயத்தில் வீட்டிலுள்ள கப்போர்டுகளை புதிதாக பேப்பர் மாற்றி ஒழுங்கு செய்யலாம்.விட்டத்தில் தொங்கும் சாண்டிலியர்,பேன்,லைட்டுகளை துடைக்கலாம்.அடுக்களை செல்பை சுத்தம் செய்யலாம்.சுந்தரர்கள் சுந்தரிகளுக்கு இந்த விஷயத்தில் உதவலாம்.

ஒருநாளின் இருபத்திநாண்கு மணிநேரத்தில் பாதிநேரம் சோபாவை ஆக்ரமித்துக்கொண்டிருக்கும் மகா மனிதர்கள்,மனிதர்களின் மனைவிகள் அதன் பின்விளைவுகளை சிந்தித்துப்பாருங்கள்.

வீட்டிலேயே உட்கார்ந்து கொண்டு டெலிபோனிலே மளிகை லிஸ்ட்டும்,வண்டிக்காரனிடம் காய்கறிகள்,பழங்களும்,அயர்ன் பண்ண லாண்ட்ரிகளும்,ஏன் சோம்பேறித்தனத்தால் வாரத்தில் பாதிநாள் ஹோட்டல் சாப்பாடு சாப்பிடும் அவலம் நிறைய வீடுகளில் சர்வசாதாரணமாக நடக்கின்றது.

மளிகை சாமான்லிஸ்ட் அனுப்பும் நேரத்திற்கு ஹேண்ட் பேக்கை எடுத்து தோளில் மாட்டிக்கொண்டு நீங்களாகவே கடையில் சென்று சாமான்களை பார்த்து தரமானதாக புதியனவையாக வாங்கலாம்.வண்டிக்காரரிடம் காய்ந்துபோன கறிகாய்களை வாங்கி சத்துக்கள் இழந்து சாப்பிடுவதைவிட மார்க்கெட்டுகளில் சென்று ஃபிரஷாக காய்களை வாங்கி சத்து நிறைந்ததாக சாப்பிடலாம்.சுலபமாக அயர்ன் செய்யும் ஆடைகளைக்கூட லாண்ட்ரியில் கொடுக்கும் வழக்கத்தை விட்டு செல் அயர்னிங் செய்தால் கைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைப்பதுடன் பர்சுக்கும் பாதுகாப்பு.கண்ணை பறிக்கின்ற கலருடன் அஜினமோட்டோ என்று உடல் நலத்தை பாதிக்கும் உணவுவகைகளை வெளியில் இருந்து வாங்கி உண்பதை குறைத்து நீங்களே தயார் செய்து உங்கள் "இணை"க்கு பறிமாறினால் அதனை விட இனிய சாப்பாடுண்டோ?

சோபாவில் அமர்ந்தே சோபாவை தேய்ந்துபோகச்செய்து,பொலிவிழந்து போகச்செய்துகொண்டிராமல் உடலையும் மனதினையும் சுறுசுறுப்பாக வைத்துக்கொள்ள ஆரம்பியுங்கள்.
கிச்சனில் உள்ள மிக்ஸியைப்பாருங்கள்.உற்றுப்பார்த்தால் படிந்திருக்கும் அழுக்குத்தெரியும் ஈரத்துணியால் துடைத்து பளிச் பண்ணலாம்.குழந்தைகள் இரைத்துவிட்டுப்போன துணிமணிகள்,பேனா,பென்சில்,பொம்மைகளை அந்தந்த இடங்களில் வைத்து நேர்த்தி பண்ணுங்கள்.
அவசரத்தில் கடாசிவிட்டுப்போன சாவிக்கொத்து,சில்லரைக்காசு,முக்குகண்ணாடி,சீப்பு இத்யாதிகளை எடுத்து ஒழுங்கு செய்தால் வரப்போகும் டென்ஷனை தவிர்க்கலாம்.ஷோகேஸ் பொருட்களை துடைத்து அடுக்குங்கள்.அழுக்குகூடையில் வழிந்து நிரம்பும் துணிகளை துவைக்கப்போடுங்கள்.

இப்படி சோம்பேறித்தனம் வளர்க்கும் சோபா சுகத்தை விட்டு விட்டு வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்தால் சோபாவும் வெறுத்து விடும் .வீடும் பளிச் ஆகும்.உடலுக்கும்,மனதிற்கும் நல்லதும்கூட.



61 comments:

நட்புடன் ஜமால் said...

இப்படியெல்லாமா இருப்பாங்க

------------------

நான் இருக்கும் இடத்தில் பாய் மட்டும் தான் ...

நட்புடன் ஜமால் said...

சரியா சொன்னீங்க ...

ஸாதிகா said...

ஜமால் தம்பி ரொம்ப ஜோக்கடிக்கறீங்க.உடன் வருகைக்கும்,தொடர் வருகைக்கும் நன்றி!

நட்புடன் ஜமால் said...

அட அக்கா நிஜமாத்தான் சொல்றேன்

எனக்கு இந்த பழக்கம் இருந்ததில்லை

மற்றும் நான் இருக்கும் இடத்தில் பாய் மட்டும் தான் ...

ஸாதிகா said...

தம்பி ஜமால்,பாயில் பொழுதைப்போகியவர்கள் கூட நிறைய உண்டு.இப்படி ஆசாமிகளை நீங்கள் பார்த்ததில்லையா?

கவி அழகன் said...

நன்றாக உள்ளது

GEETHA ACHAL said...

ஆஹா..எவ்வளவு அருமையான பதிவு..சோபாவில் இவ்வளவு விஷயம் இருக்கின்றது....நல்ல பதிவு...வாழ்த்துகள்.....நான் காலேஜில் படிக்கும் பொழுது எப்பொழுதும் சோபா மயம் தான்...அப்ப எல்லாம் மிகவும் ஒல்லியாக தான் இருந்தேன்...ஆனால் இப்பொழுது எல்லாம் சோபா இருந்தும் அதன் பக்கம் அவ்வளவாக செல்லமுடியவில்லை...ஆனால் இப்பொழுது தான் குண்டாக இருக்கின்றேன்...என்னத செய்ய....ஆனால் எப்பொழுதும் போல சுறுசுறுப்பு மட்டும் இருக்கின்றது....

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி!

ஸாதிகா said...

கீதா ஆச்சல் உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி!//நான் காலேஜில் படிக்கும் பொழுது எப்பொழுதும் சோபா மயம் தான்...அப்ப எல்லாம் மிகவும் ஒல்லியாக தான் இருந்தேன்...ஆனால் இப்பொழுது எல்லாம் சோபா இருந்தும் அதன் பக்கம் அவ்வளவாக செல்லமுடியவில்லை...ஆனால் இப்பொழுது தான் குண்டாக இருக்கின்றேன்.//அட உங்கள் கதை ரிவர்ஸில் போகிறதே!!!!

Menaga Sathia said...

ஹா ஹா நல்ல கட்டுரை அக்கா!! நான் சாயங்காலம் டி.வி பார்க்க மட்டும் சோபாவில் உட்காருவது.மற்றபடி வேலை செய்ய சரியாக இருக்கும்....

athira said...

ஸாதிகா அக்கா, எனக்குப் பிடிச்ச பழைய நடிகை சோபாவைச் சொல்றீங்களோ என நினைச்சிட்டேன், ஏனெனில் முன்பு(சிலவருடங்கள்) என்னைப்பார்த்து ஒருவர் சொன்னார் சோபாமாதிரி இருக்கிறீங்கள் என...அதன்பின்பு தேடி கண்டுபிடித்தேன் சோபா யாரென.. முறைக்காதீங்கோஓஓஓஓஓஓஒ அப்போ ஒல்லியாக இருந்தகாலம்... சரி அது போகட்டும்.(பி.கு: இப்பவும் மெல்லிய அதிராதான்).

நீங்கள் சொன்னதெல்லாம் ஓக்கை, ஆனாலும் பாருங்கோ ஸாதிகா அக்கா.. எங்குதான் சொர்க்கலோகம் சுத்திவந்தாலும், வீட்டு சோபாவிலிருந்து ஒருகப் ரீ குடித்தால்தான் மனதில் சொர்க்கத்துக்கு வந்துவிட்ட திருப்தி வருகிறது எனக்கு(எங்களுக்கு)..

vanathy said...

அக்கா, நல்லா எழுதி இருக்கின்றீர்கள். நான் சோஃபாவில் இருந்து பொழுதை ஓட்டுவது குறைவு. அப்படியே இருந்தாலும் ஒரு அரை மணி நேரம் தான்.

சரியாச் சொன்னீங்கள் இந்த சிப்ஸ் பழக்கம் பெரியவர்களைப் பார்த்து, சிறுவர்களும் அடிமையாகி விட்டார்கள்.

வெளிநாட்டில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டும். வேலை ஆள் வைக்க கட்டுபடி ஆகாது. இதனால் மனதும் உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

கோமதி அரசு said...

வாழ்த்துக்கள்,நல்லபதிவு.

மங்குனி அமைச்சர் said...

ஆகா, ஒரு சோபா வச்சு பதிவு போடா முடியுமா ? இருங்க இருங்க , நான் நெயில் கட்டார் வச்சு ஒரு பதிவு போடுறேன்
சும்மா தமாசு மேடம் , நல்ல பதிவு
இப்படிக்கு
சோபாவில் சுகமாக உட்கார்ந்து கொண்டு கமன்ட் போடுவோர் சங்கம்

மங்குனி அமைச்சர் said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி யாதவன்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி யாதவன்

ஸாதிகா said...

//நான் சாயங்காலம் டி.வி பார்க்க மட்டும் சோபாவில் உட்காருவது.மற்றபடி வேலை செய்ய சரியாக இருக்கும்//நிச்சயம் உங்கள் வீட்டு சோபா புலம்பாது மேனகா

மங்குனி அமைச்சர் said...

போன கமன்ட் சாரி மேடம் ஆசியா உமர் மேடத்துக்கு பதிலா உங்க ப்ளாக் ல போட்டேன் , , இதை பப்ளிஸ் பண்ணாதீர்கள்

ஜெய்லானி said...

நானும் சோபா என்றதும் பழைய நடிகையின் நினைவு வந்து விட்டது. நம்ம ஊர் சோ ஃபாவுக்கே இந்த கதி என்றால் துபாய் அரபி வீட்டு சோ ஃபா மாதிரி ஊரில் வந்தால் என்ன ஆகுமோ .

மக்கள அதிலேயே தூங்கியும் போய்டுவாங்க . பழக்கப்பட்டவர் அதை விடுவது கடினம்.

ஸாதிகா said...

// எனக்குப் பிடிச்ச பழைய நடிகை சோபாவைச் சொல்றீங்களோ என நினைச்சிட்டேன்//இதற்குத்தான் கிட்னியைவைத்து யோசிக்கபடாதுங்கறது.அதிராவுக்கு புரியறதோ?

ஸாதிகா said...

//வெளிநாட்டில் எல்லா வேலைகளையும் நாங்களே செய்ய வேண்டும். வேலை ஆள் வைக்க கட்டுபடி ஆகாது. இதனால் மனதும் உடலும் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்//உண்மைதான் வானதி.கருத்துக்கு நன்றி.

Malini's Signature said...

நல்ல பதிவு ஸாதிக்கா அக்கா...எனக்கும் எங்க வீட்டு சோபா மேல் அவ்வளவு ஆசை ஆனா ஒரு நாளைக்கு 1/2 மணி நேரம் கூட உக்கார முரியாது... ஆனாலும் அதில் கிடைக்கும் சுகமே சுகம்தான்.......உங்க பதிவை எங்க வீட்லே பார்த்தால் எனக்காகவே எழுதியது போல இருக்கும்பாங்க :-)

ஸாதிகா said...

கோமதி அரசு,வருகைக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஸாதிகா said...

மங்குனிசார்,நீங்க எப்படி ஆளு.நெயில்கட்டரில் என்ன வெட்டிப்போட்ட நகத்தைபற்றிக்கூட பதிவும் எழுதி தொடர் பதிவும் எழுத கூப்பிட்டு விடுவீர்கள்.ம்ம்.நடத்துங்க.கருத்துக்கு மிக்க நன்றி அமைச்சரே!

ஸாதிகா said...

ஜெய்லானிக்கும் நடிகை ஷோபா நினைவு வந்துவிட்டதா?//. நம்ம ஊர் சோ ஃபாவுக்கே இந்த கதி என்றால் துபாய் அரபி வீட்டு சோ ஃபா மாதிரி ஊரில் வந்தால் என்ன ஆகுமோ .// அப்படீங்கறீங்க?

Chitra said...

அய்...... couch potatoes க்கு நல்ல அறிவுரை. :-)

Asiya Omar said...

அருமையான பதிவு .தேவையானதும் கூட.நிறைய டிப்ஸ் இருக்கு.கிச்சனில் தாண்டா உனக்கு சோஃபா போடனும்,உட்காரவே மாட்டேங்கிறேன்னு என் கணவர் புலம்புவார்,ஹால் பக்கம் போறதே இல்லை,டிவி நியுஸ் பார்க்க மட்டுமே.

Mahi said...

காமெடியா ஒரு நல்ல கருத்தை வலியுருத்திருக்கீங்க ஸாதிகா அக்கா!
நாங்கல்லாம் ஸோஃபால சாய்ந்து தரையில உட்கார்ந்துதான்:) டி.வி.பாக்கறது..லேப்டாப்-ல இணையத்தில உலவுறது எல்லாம்..இதுக்கு என்ன சொல்றீங்க??! :) :)

athira said...

ஸாதிகா அக்கா..ஸாதிகா அக்கா... ஒருவரிப் பதிலும் போடப்படாது.. இந்த கொப்பி பேஸ்ட் போட்டு பதிலை முடிக்கவும் படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

பாலச்சந்தரின் “சோபாவும் நானும்” கதை படிச்சனீங்களோ? நான் கண்ணில் “6” ஓடப் படித்துமுடித்தேன், செனையில் பழைய புத்தகக் கடையில் இருக்குமாம், கிடைச்சால் படிச்சிட்டு எனக்கும் ஒருக்கால் அனுப்பிவிடுங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்.... அதை உங்கள் பதிவின்மூலம் ஞாபகப்படுத்திவிட்டீங்கள்..

ILA (a) இளா said...

சோபாதான் சோம்பேறித்தனத்துக்கு காரணம்னு மாதிரி சொல்றீங்களே நியாயமா?சோபாவே இல்லாத அந்தக் காலத்திலும் சோம்பேறிகள் இருந்திருப்பாங்களே

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

உண்மை மேடம்..

க‌ரிச‌ல்கார‌ன் said...

//இப்படி சோம்பேறித்தனம் வளர்க்கும் சோபா சுகத்தை விட்டு விட்டு வீட்டில் இருக்கும் சின்ன சின்ன வேலைகளை செய்தால் சோபாவும் வெறுத்து விடும் .வீடும் பளிச் ஆகும்.உடலுக்கும்,மனதிற்கும் நல்லதும்கூட.//

ந‌ல்ல‌ அ(ற‌)றிவுரை.

ஸாதிகா said...

ஹர்ஷினி அம்மா கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சித்ராcouch potatoes இவர்களுக்காகத்தான் எழுதப்பட்டது இவ்விடுகை.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஆசியா உங்கள் பதிவு சிரிப்பை வரவழைத்தது.கிச்சனிலேயே சோபா போடும்படி கூறிய கணவரின் வார்த்தைகளுக்காக சந்தோஷப்பட்டுக்கொள்ளுங்கள்.

ஸாதிகா said...

மகி கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//
பாலச்சந்தரின் “சோபாவும் நானும்” கதை படிச்சனீங்களோ?//படிக்கவில்லையே!கண்களி;ல் 6 ஓட படித்தீர்களோ!அப்போ நானும் படிக்கவேண்டுமே.சின்ன பின்னூட்டமும் போடக்கூடாது.பின்னூட்டத்திற்கு சின்ன பதிலும் போடக்கூடாது.ஐயோ அதிராவின் ரவுசு தாங்கலியே.

ஸாதிகா said...

//தம்பி ஜமால்,பாயில் பொழுதைப்போகியவர்கள் கூட நிறைய உண்டு.இப்படி ஆசாமிகளை நீங்கள் பார்த்ததில்லையா//இளா மேலே நான் போட்ட பின்னூட்டத்தை படிக்கவில்லையா?வருகைக்கு மிக்க நன்றி இளா.

ஸாதிகா said...

பட்டாபட்டி சார்,வருகைக்கும்,கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கரிசல்காரன்,தங்கள் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.

நாஸியா said...

சூப்பர் கருத்து சகோதரி!

சோஃபா மாதிரியே பல பேர் வீட்டில டைனிங்க் டேபிள். இப்ப எங்க வீட்டிலும் சரி, எங்கும்மா வீட்டிலும் சரி, தரையில் உட்கார்ந்து தான் சாப்பிடுவோம். வயசானவங்கள விடுங்க, என் வயசுக்காரங்களால கூட தரையில இப்பல்லாம் உட்கார முடியுறதில்லை.

கொஞ்ச நாள் முன்ன படிச்சேன், தரையில் கால் நீட்டி உட்காருவது கூட ஒரு வகையில் உடற்பயிற்சியாம்

SUFFIX said...

தேவையான இடுகை, அடுத்த முறை ஒரு ஓரமா உட்காந்துக்கிறேன்க்கா, ஆனா வாரம் ஒரு முறை சோபாவை அங்கேயும் இங்கேயும் நகத்தி, சுத்தம் செய்யலாம் அதுவும் ஒரு உடற்பயிற்சி தான்.

செ.சரவணக்குமார் said...

அருமையான பகிர்வு அக்கா.

Jerry Eshananda said...

சோபாவுல "இம்புட்டு மேட்டர் இருக்குதா"? கஷ்டம் தான்.இனிமே எங்க உட்காந்தாலும் நீங்க மிரட்டுறது ஞாபகம் வருமே.

சீமான்கனி said...

அக்கா சோபா சோம்பேறிகளுக்கு சூடு வச்ச மாதிரி சூப்பரா ஒரு பதிவு சும்மா சொல்லகூடாது நல்லா கருத்துக்களை நறுக்குன்னு சொல்லிடீங்க...நானும் ஒரு காலத்தில் சோபாவே சொர்க்கம் என்று இருந்தவன் தான்...நாம் சாதரணமாய் நினைக்கும் விஷயம் எவ்வளவு பின் விளைவுகளை கொண்டது...வாழ்த்துகள் அக்கா...சிறப்பான ஒரு பகிர்வுக்கு ...

மனோ சாமிநாதன் said...

சோபா என்பது உட்காரவும் விருந்தினர்களை உபசரிக்கவும் மட்டுமே என்பதை நிறைய பேர் யோசிப்பதேயில்லை. இரண்டு தலையணை போட்டுக்கொண்டு அதில் படுப்பதுதான் பெரிய சுகம். நம் வீட்டில் நாம் அப்படி படுப்பதும் அதிக நேரம் சாய்ந்து உட்கார்ந்து வேலைகள் செய்வதும் டிவி பார்ப்பதுமே தப்பு. இதில் அடுத்தவர்களும் படுத்தால் என்ன ஆகும்? என் வீட்டுக்கு சாப்பிட வந்த ஒரு உறவினர் ‘சாப்பாடு ரொம்ப அருமை. இந்த சோபாவில் படுத்து ஒரு குட்டி தூக்கம் போடப்போகிறேன்’ என்று சொன்னபோது நாகரிகம் கருதி தலையாட்டுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியவில்லை.

Vijiskitchencreations said...

ஸாதிகா அக்கா சும்மா சொல்ல்கூடாது எங்கிருது அக்கா உங்களுக்கு மட்டும் இந்த மாதிரியெல்லாம் சப்ஜெக்ட் கிடைக்கிறது. சூப்பரா எழுதி தள்ளிட்டிங்க. பெரிய ஒ தான். அக்கா.
ஆமாம் எங்காவது இல்ல யாராயாவைது இந்த கோலத்தில் பார்த்துண்டா? எங்க வீட்டில் கூட நாங்க எல்லாரும் சோபாவில் தான் அமர்ந்து தான் டிவி, போன் பேசுவது.ஆனால் நிறய்ய நேரம் எல்லாம் கிடையாது ஆனால் நான் ஒரு விட்டில் பார்த்த நினைவு வருகிறது அவங்க வீட்டில் நிங்க சொல்வதை போல் எல்லாமே டிபன் சாப்பிடுவது, தைப்பது, நெயில் பாலிஷ்... சோபாவில் தான்.

Jaleela Kamal said...

ஆஹா சோபா சுந்தரியா என்னக்கும் ஆசையா இருக்கு , ஆனால் உட்கார எங்க நேரம்.

அதிரா சோபா என்றதும் உங்களை என்று நினைத்து கொண்டீர்களா?
உங்கள் பதிவை படித்ததும் கொல்லுன்னு சிரிப்பு தான்.

நான் உங்களை வேற நடிகை போல் இருக்கீங்க என்று அல்லவா சொன்னேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல அருமையான கட்டுரை ஸாதிகா அக்கா. இப்படியும் இருப்பாங்களோ?.. உடல் நல்லா திடகாத்திரமா இருந்தாத்தான் எந்த நோயும் வராது. இப்படி இருப்பவங்களுக்கு பணக்கார நோய் கண்டிப்பா வரும்போல.. சிறுசிறு வேலை செஞ்சாலே போதுமே..

ஸாதிகா said...

// என் வயசுக்காரங்களால கூட தரையில இப்பல்லாம் உட்கார முடியுறதில்லை. //உண்மை வரிகள் நாஸியா.

ஸாதிகா said...

தம்பி ஷஃபி//வாரம் ஒரு முறை சோபாவை அங்கேயும் இங்கேயும் நகத்தி, சுத்தம் செய்யலாம் அதுவும் ஒரு உடற்பயிற்சி தான்// கரெக்டாக சொன்னீர்கள்.அதுமட்டுமில்லாமல் சோபாவில் சாய்ந்து கொண்டு கொறித்துக்கொண்டும் இருக்கும் நேரத்திற்கு தினமும் துணியால் தூசி தட்டி விடலாம்.நாண்கு நாளைக்கு ஒரு முறை வெட் டிஷ்யூ வைத்து சுத்தப்படுத்தலாம்,உறை போட்டு இருந்தால் தோய்த்து அயர்ன் செய்து ஃபிரஷ் ஆக மாற்றலாம்..இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

தம்பி சரவணக்குமார் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ஜெரிசார் //இனிமே எங்க உட்காந்தாலும் நீங்க மிரட்டுறது ஞாபகம் வருமே// ஒரு தொலைபேசி அழைப்பால் டென்ஷனாக இருந்தேன் .டென்ஷன் குறையாமலே கம்பியூட்டர் முன் அமர்ந்து உங்ளின் இந்த வரிகளிப்பார்த்ததும் என்னை அறியாமல் சிரித்து விட்டேன். எனக்கே சோபாவில் உட்காரும் பொழுது சட் என்று நான் போட்ட இந்த இடுகை ஞாபத்திற்கு வந்து சட்டென எழுந்து வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிடுகின்றேன்

ஸாதிகா said...

சீமான்கனி//நாம் சாதரணமாய் நினைக்கும் விஷயம் எவ்வளவு பின் விளைவுகளை கொண்டது..//உண்மை வரிகள்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஆமாம் மனோ அக்கா.இப்படி நிறைய பார்த்துவிட்டுத்தான் இந்த பதிவு.என் நெருங்கிய ஸ்நேகிதி ஒருவர் அதிக விலையில் லெதர் சோபா வாங்கினார்.சோபா வாங்கியதற்காக்வே ஹாலுக்கு மூன்று டன்னில் ஏசி போட்டார்.வாங்கி இரண்டே வருடத்தில் சோபா அசோபாவாகிவிட்டது.காரணம் அவர் வீட்டிலேயே தங்கி பொழுது சோபாவில் சாய்ந்த படி தொலைக்காட்சியில் மூழ்கிக்கிடக்கும் அவரது நெருங்கிய உறவினரை காரணம் சொன்னார்.அவள் புலம்பிய புலம்பலுக்கு அப்புறமாகத்தான் இந்தப்பதிவு.

May 23, 2010 4:48 PM

ஹுஸைனம்மா said...

/தொலைபேசி அழைப்பால் டென்ஷனாக இருந்தேன் .//

யாருக்கா அது, உங்களையே (!) மிரட்டுறது?

//எனக்கே சோபாவில் உட்காரும் பொழுது சட் என்று நான் போட்ட இந்த இடுகை ஞாபத்திற்கு வந்து சட்டென எழுந்து வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிடுகின்றேன் //

ஹி..ஹி.. தேவையா?

பதிவு உண்மை பேசுது. அப்படியே, சில வீடுகளுக்குப் போனா, உக்காரவே முடியாத அளவு பழங்காலத்து பொருள் போல அழுக்கு படிஞ்ச ஸோஃபா (கை வைக்கும் இடத்துல எண்ணெய்க் கறையோட) வச்சிருப்பாங்க. அது பத்தியும் சொல்லிருக்கலாம்.

இலா said...

ஆஹா! சோபாவில இத்தனை ஒளிஞ்சிருக்கா??!!! பை த வே!சோபா ஃபார் சேல்! நீல கலர்..வசதியா படுக்கலாம்... சாயும் குஷன் மட்டும் கொஞ்சம் சொகுசா இருக்காது... பிரீ டெலிவரி.... மற்றும் விலையும் பிரீதான் :))

ஸாதிகா said...

//யாருக்கா அது, உங்களையே (!) மிரட்டுறது//
தங்கச்சி என்னை நேரில் பார்த்ததுக்கப்புறமாகக்கூட இப்படி கேள்வி கேட்டு விட்டீர்களே!!!!!

//ஹி..ஹி.. தேவையா?//
என்ன இப்படி கேட்டுவிட்டீர்கள்??
////எனக்கே சோபாவில் உட்காரும் பொழுது சட் என்று நான் போட்ட இந்த இடுகை ஞாபத்திற்கு வந்து சட்டென எழுந்து வேறு வேலை பார்க்க ஆரம்பித்துவிடுகின்றேன் //
இந்த பதிவுக்கப்புறம் சோபாவில் உட்காருவதற்கு யோசித்து உட்காரும் நேரத்தில் வேறு வேலை பார்க்கப்போனதால் ஒரே வாரத்தில் கண்ட பலன் என்ன தெரியுமா?அதி சுறுசுறுப்பாகி ஐந்தாறு வயது குறைந்தாற்போல் பீலிங்.நீங்கள் கூட டிரை பண்ணிப்பார்க்கலாம்.ஹி..ஹி..

ஸாதிகா said...

//ஆஹா! சோபாவில இத்தனை ஒளிஞ்சிருக்கா??!!! பை த வே!சோபா ஃபார் சேல்! நீல கலர்..வசதியா படுக்கலாம்... சாயும் குஷன் மட்டும் கொஞ்சம் சொகுசா இருக்காது... பிரீ டெலிவரி.... மற்றும் விலையும் பிரீதான் ://இலாம்மா...ஜாக்கிரதை.வீட்டுவாசலில் கும்பல் கியூவில் நிற்கப்போகின்றது.

இலா said...

ஹ‌ ஹா! வந்தால் போதும் போனால் போதும்ன்னு ஆயிட்டது.. இப்படியாவது இதை தூக்கி போட்டு... உக்காந்தாலும் இருக்கையின் நுனியில் உக்காந்து படுத்தா பாதி உடம்பு வெளியே தொங்கி... குழந்தைகள் வந்தா சறுக்குமரம் விளையாடுற மாதிரி ஒன்னு கேட்டுகிட்டு இருக்கேன்... மொத்ததில டீக்கடை பெஞ்சு வித் குஷன்

பின் குறிப்பு: இந்த பதிவை பார்த்ததும் டீவி டைம் ஒதுக்கின மாதிரி சோபாக்கும் ரேஷன்ல தான் நேரம் :)