வழக்கம் போல் நேற்றும் காலையில் எழுந்ததும் வலது கையில் காபி கோப்பையும்,இடது கையில் அன்றைய நாளிதழ்களுமாக அமர்ந்து புரட்டியவள் அனுராதாரமணனின் மரணச்செய்தியை சொன்ன வரிகளை படித்ததும் ஸ்தம்பித்துவிட்டேன்.எதிரே அமர்ந்திருந்த என் தாயாரிடம் "அனுராதா ரமணன் இறந்துவிட்டாரம்மா"என்று படபடப்பாக கூறிய பொழுது அவரும்"நான் ராத்திரியே சன் நியூஸில் பார்த்தேன்" என்றார்.என் தாயார் அவர்களும் இன்றுவரை அவரது படைப்புகளை ஆர்வமுடன் படித்து விமர்சனம் செய்யக்கூடியவர்கள்.
அவர் எழுத்துக்களால் கவரப்பட்டு என் பதின்ம வயதுக்கு முன்னரே அவரின் படைப்புகளை விழுந்து,விழுந்து படித்தவள் .இப்பொழுது நாவல்கள் படிக்கும் ஆர்வம்குறைந்து போனாலும் அவரது எழுத்துக்களை மட்டும் விடாமல் படித்துவருபவள்.
என் இளம்பிராயத்தில் லட்சுமி,வாஸந்தி,சிவசங்கரி,இந்துமதி,ரமணிசந்திரன்,அமுதாகணேசன்,விமலா ரமணி போன்ற பிரபல எழுத்தாளர்கள் நிறைய எழுதிவந்தாலும்,நான் அவற்றை எல்லாம் சுவாரஸ்யமாக படித்து வந்தாலும் அனுராதா ரமணன் எழுத்துக்கள் போல் என்னை வேறு யாருடைய எழுத்துக்களும் கவரவில்லை.
எட்டாம் வகுப்பு படிக்கும் காலத்தில் அவரது ஒரு நெடுங்கதையால் கவரப்பட்டு பதினைந்துபைசா தபால் கார்டில் பாராட்டி எழுதிவிட்டு "இனி எழுதப்போகும் காரெக்டருக்கு எனது பெயரை வையுங்கள்" என்ற கோரிக்கையுடன் கடிதத்தை முடித்து போஸ்ட் செய்துவிட்டு அடுத்து அடுத்து வரும் கதைகளில் என் பெயர் வருகின்றதா என்று ஆவலுடன் படித்த நேரத்தை இப்பொழுது நினைவு கூர்ந்தால் சிரிப்பு வருகின்றது.
"மீண்டும் மீண்டும் உயிர்த்தெழலாம்" என்ற ஒரு தொடர் கட்டுரையில் தனக்கு வந்த நோய்களைப்பற்றியும்,சிகிச்சை பற்றியும்,சிகிச்சை அளித்த மருத்துவர்களைப்பற்றியும்,நோயின் பிடியில் இருந்து தப்பி வந்ததைப்பற்றியும் தனக்கே உரிய பாணியில் வெகு நகைச்சுவையுடன் பகிர்ந்து கொண்டது மிகவும் அற்புதமானது.நோயின் பிடியில் சிக்குண்டு இருப்பவர்கள்,முதியவர்கள் அக்கட்டுரையை படித்தால் கட்டாயம் தெம்பு வரும்,அசாத்திய நம்பிக்கைவரும்.
அவரின் எழுத்து திரைப்படமாக "கூட்டுபுழுக்கள்" என்ற பெயரில் வந்தது.அந்த திரைப்படத்தை அப்பொழுது பலமுறை ரசித்து பார்த்து இருக்கின்றேன்.தொடராக வந்தவைகளை எல்லாம் ஒன்று சேர்த்து பைண்டிங் செய்து ஊரில் இருக்கும் என் லைப்ரரி அறையையே நிரப்பி வைத்து இருக்கின்றேன்
மங்கை என்ற மாத இதழில் "விஜயாவின் டைரிக்குறிப்பு" என்று தேதி,மாதம்,வருடம் வாரியாக ஒரு டைரியையே வெளியிட்டு இருந்தார்.அது ஒரு நீண்ட தொடராக வெளிவந்தது."இது உண்மையில் நடந்த டைரிக்குறிப்பு" என்றும் குறிப்பிட்டு இருந்தார்.ஒரு சிறுமி தன் தாத்தா,பாட்டியிடம் வளர்ந்தது முதல்,அவளது இளம்பிராயத்து குறும்புகள் கலாட்டா என்று வெகுசுவாரஸ்யமாக போய்க்கொண்டிருந்த டைரிக்குறிப்பு திருமண வாழ்க்கையை பற்றி எழுத ஆரம்பித்ததும் படிப்பவரை சோகம் அப்பிக்கொள்ளசெய்துவிட்டது .சந்தேகப்பட்ட கணவனால் பட்ட அடி,உதை,கொடுமைகளை விவரிக்க,விவரிக்க பலமுறை கண்கள் குளமாக கட்டிக்கொள்ள வாசித்து இருக்கின்றேன்.இத்தனை மோசமான படுபாவி யார்?இத்தனையும் தாங்கிகொண்ட அந்த அப்பாவிப்பெண் யார்?என்ற ஆர்வம் படிப்பவரை யெல்லாம் தொற்றிக்கொண்டது.பலமாதங்களாக வந்த,பலரின் ஏகோபித்த பாராட்டுகளையும்,ஆர்வத்தையும் தூண்டச்செய்த அந்த தொடரின் கடைசி அத்தியாயத்தில் "டைரிக்குறிப்பில் வந்த விஜயா வேறு யாரும் அல்ல.நானேதான்" என்று அதிரவைத்தார்.
அறுபத்தி மூன்று வயதான அனுராதா ரமணன் 1200 சிறுகதைகள்,800 நாவல்கள்,குறுநாவல்கள்,ஏராளமான தொடர்கட்டுரைகள் எழுதிஉள்ளார்.இவரது படைப்புகளில் ஆறு படைப்புகள் திரைப்படங்களாகவும்,எண்ணற்ற படைப்புகள் தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்து வெற்றி கண்டுள்ளது.ஆனந்தவிகடனில் பொன்விழா சிறுகதைப்போட்டியில் முதல் பரிசும்,இதயம் பேசுகிறது இதழில் வாசன் சிறுகதைப்போட்டியில் இரண்டாம் பரிசு போன்று பல விருதுகள் பெற்றுள்ளார்.
அத்தனை சோகவாழ்க்கையிலும் எதிர்நீச்சல் போட்டு தன்னை அசாத்திய கம்பீரத்துடனும்,உயிர்ப்புடனும்,உற்சாகத்துடனும்,இளமையுடனும்,சர்வ அலங்காரத்துடனும்,தன்னை பின்னிப்பிணைந்த நோயின் தாக்கத்தை புறந்தள்ளிவிட்டு,வாழ்வில் எதிர்கொண்ட சோகங்களை பந்தாடிவிட்டு புன்னைகையுடன் இலக்கியப்பணி செய்த அனுராதா ரமணனின் மறைவு எழுத்துலகத்திற்கு ஈடுசெய்யமுடியாத பேரிழப்பு.
டிஸ்கி:
"பளிச் பெண்கள்" என்ற என் இடுகையில் அனுராதா ரமணன் பற்றி நான் எழுதிய சிறு குறிப்பு காண இங்கு கிளிக் பண்ணவும்.
எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கும் சில வலைத்தளங்களைக்காண கீழ் கண்ட தலைப்புகளில் கிளிக் செய்யவும்.
எழுத்தாளர் அனுராதா ரமணன் அவர்கள் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருக்கும் சில வலைத்தளங்களைக்காண கீழ் கண்ட தலைப்புகளில் கிளிக் செய்யவும்.
படித்ததும் பார்த்ததும்
பெண்ணே அனும்மா பறந்துவிட்டாயே!
இரு அஞ்சலிகள்
எனது இரண்டு சதங்கள்
பிரபல எழுத்தாளர் மறைந்தார்
அனும்மாவிடம் ஒரு கேள்வி
எழுத்தாளர் அனுராதா ரமணன் மரணம்
அனுராதா ரமணன் மரணம்
அனுராதா ரமணன் மாரடைப்பால் மரணம்
பிரபல எழுத்தாளர் மாரடைப்பால் மரணம்
கண்ணாடிபுத்தகம்
வல்லமை
Tweet |
74 comments:
நானும் நிறைய படித்ததுண்டு,
அவர்களை இழந்த குடும்பத்தினருக்கும் வாசகர்களுக்கும் வல்ல ஏகன் மனச்சாந்தியை அளிக்கட்டும்.
I really like her confidence. She has overcome a lot of obstacles in life. Insha Allah will read some of her works.
எல்லாருக்குமே பிடித்த எழுத்தாளர்; பார்த்தவுடன் ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும்.
அவரின் எழுத்துக்களைப் பட்டியலிட்டு சொல்வதிலிருந்தே உங்களை அவர் எந்த அளவு கவர்ந்துள்ளார் என்பது புரிகிறது. அவர் எழுத்துகளில் அவரை இன்னும் காணுவோம்!!
மிகச்சிறந்த பெண் எழுத்தாளர்களில் அனுராதா ரமணன் ஒருவர். அவரின் எழுத்துக்கள் வசீகரத்தன்மையுடையவை.. அவரின் இழப்பு எழுத்துலகத்திற்கு பேரிழப்பு....
நானும் இவரின் கதைகளை நிரைய படித்ததுண்டு.மனம் கனக்கிறது.ஆவரது ஆத்மா சாந்தியடையட்டும்....
நல்லா இருக்கு..உங்க நினைவலைகள்....ஒரு பெண்கள் இதழில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளோ அல்லது கடிதமோ அவர் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்...1200 சிறுகதைகள்....மலைப்பாக இருக்கிறது! உங்களோடு சேர்ந்து எனது அஞ்சலிகளும்!
மனசில் தன்னம்பிக்கை நிறைந்த பெண்.
நின்னால் தப்பு, நிமிர்த்தால் தப்புன்னு பெண்களை வறுத்தெடுக்கும் இந்த சமூகத்தில் மிகவும் தைரியமாச் செயல்பட்ட துணிவே எனக்கு இவுங்ககிட்டே ரொம்பப் பிடிச்ச விஷயம்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்குப் பிரார்த்திக்கிறேன்.
அவர் இல்லாவிட்டாலும் அவர் எழுத்துக்கள் நிலைத்திருக்கும்
முதல் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி சகோ ஜமால்.நீங்களும் இவரின் நாவல்கள் படிப்பதுண்டா!!
ஆமாம் நாசியா இவரின் தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கும் கருத்துக்கு நன்றி!
அவர்களின் சில நூட்களை படித்ததுண்டு, நல்ல எழுத்தாளர்.
அனுராதா ரமணன் உலகை விட்டு மறைந்தாலும் இந்த உலகம் இருக்கும்வரை அவரது படைப்புகள் நிச்சயம் அவரது புகழ் பேசும்.நன்றி ஹுசைனம்மா.
//அவரின் எழுத்துக்கள் வசீகரத்தன்மையுடையவை//உண்மை வரிகள் இர்ஷாத்.நன்றி கருத்துக்கு,
மேனகா நீங்கள் கூட இவரின் ரசிகையா?கருத்துக்கு நன்றி.
//ஒரு பெண்கள் இதழில் பிரச்சினைகளுக்கு தீர்வுகளோ அல்லது கடிதமோ அவர் எழுதியிருந்ததை படித்திருக்கிறேன்// இப்படி அவஎ எழுதி இருப்பது ஏராளம் சந்தனமுல்லை.கருத்துக்கு நன்றி.
//மனசில் தன்னம்பிக்கை நிறைந்த பெண்.
நின்னால் தப்பு, நிமிர்த்தால் தப்புன்னு பெண்களை வறுத்தெடுக்கும் இந்த சமூகத்தில் மிகவும் தைரியமாச் செயல்பட்ட துணிவே எனக்கு இவுங்ககிட்டே ரொம்பப் பிடிச்ச விஷயம்//இந்த வரிகள் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கின்றது துளசி கோபால்.கருத்துக்கு நன்றி!
கரிசல்காரன்//அவர் இல்லாவிட்டாலும் அவர் எழுத்துக்கள் நிலைத்திருக்கும்//உண்மை வரிகள்.கருத்துக்கு நன்றி.
//அவர்களின் சில நூட்களை படித்ததுண்டு, நல்ல எழுத்தாளர்//நிஜம் சகோ ஷஃபி.கருத்துக்கு நன்றி.
நானும் ஒரு சில கதைகள்+விகடனில் வெளிவந்த தொடர்கதையையும் படித்து இருக்கேன். நான் சுஜாதா,அனுராத அவர்களின் கதைகளை விரும்பி படித்தவ. அதிலும் துளசி அவர்கள் கூறியது போல்இந்த சமூகத்தில் மிகவும் தைரியமாச் செயல்பட்ட துணிவே எனக்கும் அவரிடம் இது ரொம்ப பிடித்த விஷயம்.அவரரை நாம் இழக்கவில்லை என்றென்றும் அவரது எழுத்தகளினால் நாம் இன்னும் காணுவோம்.அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.
ஸாதிகா அக்கா அருமையான எழுத்தாளர், பிரகாசனமான தோற்றம்.
முன்பு ஒரு நாள் டீவியில் அவர் பேட்டி, மற்றுமொரு நிகழ்சி கண்டு மிகவும் வியந்துள்ளேன்.
அவர்களை இழந்த அவர்களை இழந்த அவர்கள் குடும்பத்தாருக்கும், அனைத்துலக வாசகர்களுக்கும் ஆண்டவ்ன் மனசாந்தியை அளிக்கட்டும்
அவ்ங்க எழுத்துக்கு என்றூம் உயிர் உண்டு.
ஷாதிகா அக்கா, அனுராதா ரமணன் - மிகவும் அருமையான எழுத்தாளர். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.
நானும் அவருடைய படைப்புகளை பல படித்தது உண்டு...அவருடைய கதையினை நானும் மங்கையர் மலரில் தான் படித்து இருக்கின்றேன்....மிகவும் கஷ்டமான இருக்கின்றது...அவருடைய ஆத்மா சாந்திஅடையட்டும்...நன்றி
அனுராதா ரமணன் ஒரு சிறந்த எழுத்தாளர். நானும் சிறுவயதில் அவரது படைப்புகளை ரசித்து படிப்பவன். அவரை பற்றிய உங்கள் நினைவுகளும் எழுத்தாக்கமும் மிக அருமை. இந்த நேரத்தில் அவரை பற்றி நினைவுகூர்தல் சாலச்சிறந்ததாகும். அவருக்கு என் அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
அன்புடன்
உங்கள் ஸ்டார்ஜன்.
அனுராதா அம்மா அவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
லட்சுமி,வாஸந்தி,சிவசங்கரி,இந்துமதி,ரமணிசந்திரன்,அமுதாகணேசன்,விமலா ரமணி போன்றோர் வரிசையில் அனுராதா ரமணனும் ஒருவர்.
நானும் இவரது சிறுகதைகள், நவீனங்கள் படித்திருக்கிறேன்.
அவர் நோயிலிருந்து மீண்டும் நம்பிக்கையுடன் திரும்பி
வந்தபோது எழுதிய கட்டுரையும் படித்துள்ளேன்.
சிறுகதை எழுத்தாளர்களுள் குறிப்பிடத்தக்கவர்.
அனுராதா ரமணன் மரணிக்கக் கூடிய மனுஷி என்று நான் நினைத்ததே இல்லை. அவ்வளவு முறை நோய்த் தாக்குதலிலிருந்து விடுபட்டு வாழ்ந்திருக்கிறார்.
எத்தனை எதிர்ப்புகளைத் தாங்கி இருப்பார்!
மிக மிக தைரியமான பெண்.
எழுதுவதற்கு இன்னும் ஒரு கோடி விஷ்யம் அவருக்கு இருந்திருக்கும்.
இந்தப் பதிவுக்கு மிகவும் நன்றி சாதிகா.
May her soul rest in peace
May her soul rest in peace.
நானும் அவரின் கதைகளை விரும்பி படிப்பேன்..
நீங்க எழுதிய விதம் நல்லா இருக்கு...
எப்படி இருக்கேங்க...?நலமா?
விஜி உங்கள் கருத்துக்கு நன்றி.நீங்கள் கூறுவது உண்மைதான்.அவர் எழுத்துமூலம் வாசகர்களுடன் வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்.
நானும்தான் ஜலி ,அவரின் பல ஆக்கங்களைக்கண்டு வியந்து இருக்கின்றேன்.
வானதி அனுராதா ரமணனின் எழுத்துக்கள் உங்களுக்கும் பிடிக்குமா
?கருத்துக்கு மிக்க நன்றி.
கீதா ஆச்சல், அவரின் மறைவை அறிந்து எனக்கும் மிகவும் கஷ்ட்டமாக இருந்தது
பாராட்டுகளுக்கு மிக்க நன்றி ஸ்டார்ஜன்.பதிவுலகில் அனுராதாரமணன் ரசிகர்கள் நிறைய பேர் இருக்கின்றாகள் என்பது அவரின் மறைவுக்கு பின்னர்தான் தெரிகின்றது
மின்மினி உங்கள் கருத்துக்கு நன்றி
சகோ நிஜாமுதீன்,நானும் அவரது படைப்புகள் எதனையும் விடாமல் படித்தவள்தான்.கருத்துக்கு நன்றி
சகோ நிஜாமுதீன்,நானும் அவரது படைப்புகள் எதனையும் விடாமல் படித்தவள்தான்.கருத்துக்கு நன்றி
சகோதரி வல்லிசிம்ஹன்,உங்கள் வருகைக்கு மிக்க மகிழ்ச்சி.//எழுதுவதற்கு இன்னும் ஒரு கோடி விஷ்யம் அவருக்கு இருந்திருக்கும். // நானும் அதைத்தான் நினைத்துக்கொண்டேன்.கருத்துக்கு மிக்க நன்றி.
சித்ரா,தொடர் கருத்துக்கு மிக்க நன்றி
மலர் கருத்துக்கு நன்றி.நான் நலம்,நீங்க எப்படி இருக்கின்றீர்கள்?அந்த நால் இன்னும் பசுமையாக என் நினைவில் நிற்கின்றது.
நான் விரும்பி படித்த பெண் எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அழகான கதைகளை எளிமையாக சரளமாக சொல்வதில் வல்லவர் . வயதானாலும் முழு மேக்கப்பில் ஃபிரஷாக தண்ணம்பிக்கையாக வாழ்ந்தவர். அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
// வயதானாலும் முழு மேக்கப்பில் ஃபிரஷாக தண்ணம்பிக்கையாக வாழ்ந்தவர்.//நாம்தான் 62 வயதை வயதாகி விட்டது என்று கணக்கு போட்டுக்கொள்கிறோம்.ஆனால் மறைந்த அந்த எழுத்தாள்ர் பார்வையில் முதுமையே இல்லை என்பது போல் வாழ்ந்தவர்.கருத்துக்கு மிக்க நன்றி ஜெய்லானி.
அனும்மாவுக்கு எத்தனை ரசிகைகள்
அழுகையை அடக்க முடியவில்லை
இடுகை இதயத்தைத் தொடுகின்றது
நல்ல பதிவு,தொகுப்பு தோழி, இன்று தான் உங்கள் பக்கம் வரமுடிந்தது.தொடர்ந்து எழுதுங்க.
சீதாம்மா,உங்கள் வருகைக்கும்,கருத்துக்கு மிக்க நன்றியம்மா!சோகத்தை காலம்தான் ஆற்றும்.
ஆசியா,பிசியிலும் பிளாக் பக்கம் தலைகாட்டி விடுகின்றீர்கள்.கருத்துக்கு நன்றி தோழி.
ஸாதிகா அக்கா, தலைப்பைப் பார்த்ததும் இவர்பற்றி ஏதோ சொல்லப்போகிறீங்களாக்கும் என்றுதான் நினைத்தேன் வந்து பார்த்தால் மரணச் செய்தி, தெரிந்தவரோ, தெரியாதவரோ, பழகியவரோ பழகாதவரோ யாராயினும் மரணம் எனக் கேட்டால் ஒருகணம் நெஞ்சு ஸ்தம்பிக்கிறது.
நானும் அவரின் சில நாவல்கள் படித்துள்ளதாக நினைவு. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.
வாழ்த்துகள் ஸாதிகா அக்கா.
இந்த பதிவு யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் வெளியானதற்கு என் அன்பான வாழ்த்துகள்.
அருமையான எழுத்து நடை அனு அவர்களுக்கு சொந்தம். அவர்களின் அனுபவம் யாவர்க்குமே பாடம்.
மனம் துயரத்தை உணர்கிறது. தங்களின் பதிவுக்கு நன்றி.
அருமையான மனுஷி! எனக்கும் அவர் ஒரு இன்ஸ்பிரேஷன்...பதிவுக்கு நன்றி ஷாதிகா ஆன்டி!
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திப்போம்
நானும் இவரின் எழுத்துகளை படித்ததுண்டு....எனக்கு மிகவும் பிடித்தவர் அக்கா...அற்புதமாய் எழுதக்கூடியவர்...தமிழுக்கு பெரும் இழப்புதான்...இவரின் ஆத்மா சாந்தியடைய பிராத்திக்கிறேன்...
அன்பு ஸாதிகா!
நேற்று மதியம்தான் திருமதி.அனுராதா ரமணனின் மரணம் பற்றி அறிந்தேன். மிகுந்த வருத்தமாகி விட்டது. அவரது நாவல்கள் பெரும்பாலும் அனைத்தும் படித்திருக்கிறேன். அவரது முதல் சிறுகதை ‘கை’ அதன் தனித்தன்மையால் என்னைக் கவர்ந்தது. அவரது அனைத்துப் படைப்புகளிலும் சில வருடங்களுக்கு முன் எழுதிய ‘ மன ஊஞ்சல்’ என்ற தொடர் என்னைப் பாதித்தது.
நேரில் சென்று வாழ்த்தியபோது, தொடர்ந்து மூன்று மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்த எங்கள் பேச்சில் அவரது நகைச்சுவை, மனக்குமுறல்கள், நல்ல மனது, ஆதங்கங்கள் அனைத்தும் வெளிப்பட்டது. அவரே பிரியமாகப் போட்டுக்கொடுத்த காப்பி அவரது இனிமையான மனதைக் காண்பித்தது. எத்தனையோ நகைச்சுவையாக எழுதும் இவருடைய உள்ளத்தில் எத்தனை எத்தனை சோகங்கள் இருக்கின்றன என்பதை நினைத்தவாறே திரும்பி வந்தேன். அவருடைய விழியோரத்தில் பிரகாசித்த கண்ணீர் முத்துக்கள் தான் இப்போதும் எனக்கு நினைவுக்கு வருகின்றன. அவரைப்பற்றி பதிவெழுதிய உங்களுக்கு என் நன்றி!!
இந்த பதிவு யூத்புல் விகடனில் குட்பிளாக்ஸ் பகுதியில் வெளியானதற்கு வாழ்த்துகள்...
அதிரா,கருத்துக்கு மிக்கநன்றி.ஒரு நல்ல எழுத்தாளரை இழந்துவிட்டோம்.
ஸ்டார்ஜன்,வாழ்த்துக்களுக்கு மிக்கநன்றி
சீமான்கனி//..தமிழுக்கு பெரும் இழப்புதான்...//உண்மைதான்.கருத்துக்கு மிக்க நன்றி.
மனோ அக்கா,கருத்துக்கு மிக்க நன்றி.நீங்கள் நேரிலே பார்த்து அளாவளாவி இருக்கின்றீர்களா?நான் நேரில் பார்க்க நினைத்த ஒருசில எழுத்தாளர்களில் இவரும் ஒருவர்.கடைசி வரை முடியவில்லை.
சகோதரர் ஜெய்லானி வாழ்த்துக்களுக்க் மிக்க நன்றி!
இந்த பதிவு யுத் ஃபுல் விகடன் குட்பிளாக்கில் இடம் பெற்றமைக்கு வாழ்த்துக்கள்.
ஸாதிகா உங்கள் இடுகை விகடன் குட் ப்ளாக் வந்தமைக்கு வாழ்த்துக்கள்.என் ப்ளாக் வந்த மாதிரி அத்தனை மகிழ்ச்சி.ஸாதிகா எழுதிய கதைகள் பிரபலமாக வாழ்த்துக்கள்.
ஆழ்ந்த வருத்தங்கள் ,
அப்புறம் வாழ்த்துக்கள்
அருமை...அருமை...வாழ்த்துகள்!
மின்மினி has left a new comment on your post "அற்புதமனுஷி அனுராதா ரமணன்":
அனுராதா அம்மா அவர்களுக்கு என் ஆழ்ந்த அஞ்சலிகள்.
:( ரொம்ப வருத்தம் ஆயிடுத்து அவங்க மறைவு. சின்ன சாதாரண விஷ்யமா இருந்தாலும் அதுல நகைச்சுவை கலந்து அவங்க சொல்ற விதம் இருக்கே.. ரொம்ப ரசிச்சு இருக்கோம். மங்கையர் மலர்ல அம்மா படிக்க சொன்னது இவருடைய காமெடி பதிவுகள் தான். மறக்க முடியவில்லை! சிரிச்சுண்டே தைரியம் சொல்லிட்டு போயிட்டாங்க! அவங்க ஆத்மா சாந்தி அடைய என் பிரார்த்தனைகள்.
ஜலி,வாழ்த்துக்களுக்கு நன்றி.
ஆசியா,உங்கள் வரிகளில் மகிழ்ச்சி.நன்றி தோழி.
மங்குனி அமைச்சர் நன்றி.
யாதவன் கருத்துக்கு நன்ரி.
மின்மினி,கருத்துக்கு நன்றி.உங்கள் பின்னூட்டத்தை பப்லிஷ் செய்ய முடியவில்லை.
அநன்யா,கருத்துக்கு மிக்க நன்றி.
ஸாதிகாம்மா... அவர்கள் மறைந்த அன்று அவர்களின் உடலைக் கண்டு கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தியவன் நான். அப்போது எனக்கு வலைப்பதிவுகள் என்றால் என்னவென்றே தெரியாது இப்ப அவங்களை நினைவுகூர்ந்த இந்தப் பதிவைப் படிக்கறப்ப பல நினைவுகள் மனதில நிழலாடி கண்ணீர் முட்டுகிறது. நல்லதொரு பகிர்வை அடையாளம் காட்டினதுக்கு நன்றிம்மா.
உடன் படித்திட்டு அதே வேகத்துடன் கருத்திட்ட கணேஷண்ணாவுக்கு நன்றி.
Post a Comment