May 3, 2010

அந்த நாள் இனிய நாள்எனது அமீரகவிஜயத்தின் பொழுது இத்தனை சந்தோஷங்கள் கிட்டும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை,என் உற்றவர்களின்,இரத்தபந்தங்களின் அன்பு மழையில் ந‌னைந்த நான் என் அன்பு சக வலைப்பூ சகோதரிகளின் அன்புவெள்ளத்திலும் நனைவேன் என்று நினைக்கவில்லை.ஏதோ தமது வீட்டு விஷேஷத்திற்கு அழைத்து நான் வந்து இருந்தது போல் அனைவரும் கைபேசியில் அழைத்து அன்பை வெளிப்படுத்தி திக்குமுக்காட வைத்துவிட்டனர்.

விமானநிலையத்தில் இருந்து வந்ததில் இருந்து மீண்டும் விமானநிலையம் செல்லும் வரை என் செல்பேசிக்கு ஓய்வே இல்லை.அன்பு மனோ அக்காவின் வருகை ,நீண்ட நாள் ஸ்நேகிதிபோல் எளிமையுடன் பழகி பொழுதை மகிழ்ச்சிகரமாக்கினார்.ஜலீலா என் வருகையால் சிறு குழந்தையாவே மாறி என்னை பரவசப்படுத்துவிட்டார்.,தினமும் காலையிலும்,மதியத்திலும்,இரவிலும் போன் செய்து அளவளாவும் நேசம்,தங்கை ஹுசைனம்மா பதிவர் சந்திப்பு நிகழ்ந்தே தீரவேண்டும் என்று உத்வேகத்துடன் செயல் பட்டு நிகழவும் வைத்து விட்டார்.

குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு சென்று குறிப்பிட்ட பகுதிக்கு நெருங்கி போன் செய்தால் திரும்பி பாருங்கள் என்று சொன்ன திக்கில் திரும்பினால் அங்கு மூன்று பேர்.ஜலீலா,ஹுசைனம்மா,மலிக்கா...பார்த்ததுமே பேச்சே வராமல் பரவசத்தில் மூழ்கிவிட்டோம்.

ஜலீலாவை ஏற்கனவே புகைப்படத்தின் மூலம் பார்த்து இருக்கிறேன்.ஹுசைனம்மா,மலிக்காவைப்பார்த்து இருக்காததால் அவர்களை என்னால் யூகிக்க இயலவில்லை.ஒரு வழியாக அவர்தான் ஹுசைனம்மா என்று கண்டுபிடித்து நான் சொன்னதும் எங்களிடம் இருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்.

ஏற்கனவே திட்டமிட்டபடி பார்க்கிற்கு அழைத்து சென்றனர்.அங்கு ஒரு இன்ப அதிர்ச்சி.நான் சற்றும் எதிர்பாராத தோழி ஆசியா.அத்தனை தூரத்தில் இருந்து வருவார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.என்னைகண்டதும் அவரும் மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப்போனார்.இன்முகத்துடன் "ஸாதிகா" என்று அணைத்து தன் அன்பை வெளிப்படுத்தினார்.அவரின் அன்பயும்,மென்மையான ஸ்நேகிதத்தையும் மின்னஞ்சல் மூலமாக அறிந்திருந்த நான் அன்று நேரிலும் பார்த்த்து பரவசப்பட்டேன்.

சாதரணமாகவே ஸாதிகா அக்கா,ஸாதிகா அக்கா என்று என்னையே மெயிலில் சுற்றிவராத குறையாக வரும் என் தங்கை ஜலீலா நான் அமீரகம் வரப்போவதை அறிந்ததுமே அவர் கொண்ட உற்சாகம் குழந்தைபருவத்தை நினைவு கொள்ள வைத்தது.அவரின் தொடர் அலுவலுக்கிடையே அடிக்கடி போன் செய்து அன்பை வெளிப்படுத்தியவர் நேரில் பார்த்தும் ...சொல்லவும் வேண்டுமோ...?

டிரங்கு பொட்டி ஹுசைனம்மா..பதிவில் பட்டாசாக இருந்தாலும் நேரில் மத்தாப்பூவாக இருந்தார்.அக்கா..அக்கா..என்று பாசத்தைக்குழைத்து பழகியவிதம் என்னை பரவசப்படுத்தியது."பதிவிலும்,நேரிலும் பார்ப்பதற்கு வித்தியாசமாக உள்ளது"என்று என் கணிப்பை சொன்னால் "நீங்களும் அப்படித்தான் இருக்கீங்க"என்றார்.உண்மைதான்.அன்று அந்த பார்க் பட்ட பாடு..."கெட் டு கெதரா?" என்று வேடிக்கைப்பார்த்த ஒருசிலரை புறந்தள்ளிவிட்டு எங்கள் உற்சாகத்தை குறைத்துக்கொள்ளாமலே இருந்தோம்.


மலிக்காவின் கலகலப்பான ,நகைச்சுவைமிளிரும் பேச்சு.அந்த இடத்திற்கு மேலும் மெருகூட்டியதுஜலீலாவும் மலிக்காவும் சமைத்துக்கொண்டு வந்திருந்த பதார்த்தங்களை சுறுசுறுப்பாக பறிமாறி அந்த இடத்துக்கு களைக்கட்டிக்கொண்டுஇருந்தார்.நெடுநாள் பழகியதுபோல் சிரிக்கவைத்து பேசுவதில் வல்லவர் என்பதை புரிந்துகொண்டேன்.எங்கு நகைசுவைமிக்க உரையாடல் இருந்தாலும் அந்த இடம் என்னையும் கவர்ந்துவிடும்.அந்த விஷயத்தில் மலிக்காவின் பேச்சு வழக்கு என்னை ரொம்பவுமே கட்டிப்போட்டு விட்டது.

அத்தனை பிசியான நேரத்திலும் மனோ அக்கா கலந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.வழக்கம் போல் அமைதியும்,மென்மையுமாக அனைவரது கொட்டத்தையும் ஆழ்ந்து ரசிக்கத்துவங்கியது மட்டுமில்லாமல் அந்த கலகலப்பில் கலந்துகொண்டது தோழியர் அனைவருக்கும் மகிழ்ச்சியை தந்தது.

அநன்யா மகாதேவன்..ஆஹா..எனது கலகலப்பிற்கு ஏற்ற அருமையான இணை.அவரை சுற்றி எப்பொழுதும் சரவெடி ஒலித்துக்கொண்டே இருக்கும்.அவரது பதிவைப்போலவே.பார்த்தமாத்திரத்தில் பிடித்துப்போய் நிறைய பேசிக்கொண்டிருந்தேன்.

எங்களிடையே இளையவர் பிரியாணி நாஸியா.அவர் பார்க்கினுள் நுழைந்ததுமே "ஆ..பிரியாணி"என்ற ஆராவாரமாக கூச்சல்தான் அவரை வரவேற்றது.

மலர்.பெமிலியரான முகம்,குரல்.எங்கோ பார்த்து போல் இருந்தது.பிறகுதான் தெரிந்தது.என் ஆருயிர் தோழியான ஒரு பத்திகையாளர் இவருக்கு உறவு என்று.இஸ்லாமிய பேச்சு வழக்கைப்பற்றி அநன்யா இவரிடமும்,பிரமணாள் பேச்சு வழக்கைப்பற்றி மலர் அநன்யாவிடம் கேட்டு இருவரும் விளக்கம் சொன்னதை சுவாரஸ்யத்துடன் கேட்டுக்கொண்டிருந்தேன்.

இறுதிவரை இருந்து என்னையும் என் தங்கையையும் வழியனுப்பிவைத்த ஜலீலா,ஹுசைனம்மாவின் அன்பு மெய்சிலிர்க்கவைத்து.எங்களை அழைத்து வந்த எங்கள் வீட்டு ஆண்களும் பொறுமை காத்து ஆங்காங்கே அமர்ந்திருத்தும்,நின்றுகொண்டிருந்தும்,காரில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டும் ,அருகில் இருந்த மால்களில் சுற்றிக்கொண்டும் எங்கள் நட்புக்கு கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டு பொறுமை காத்தது எங்களுக்கு பெருமையாக இருந்தது.

மறுநாள் அல் ஐன் சென்ற பொழுது ஸ்நேகிதி ஆசியா விடாப்பிடியாக தொலைபேசியில் தொடர்ந்து அரைமணி நேரத்திற்கு ஒரு முறை அழைத்து எங்களை அவரது இல்லத்திற்கு காந்தமாக அழை(இழு)த்துவிட்டார்.

ஆசியாவின் பரந்த மனதினைப்போல் அவரது வில்லாவும் பரந்து விரிந்து இருந்தது அழக்காக இருந்தது.அமைதியான அந்த சூழ்நிலையை விட்டும்,ஆசியாவின் அன்புபிடியினை விட்டு அகலவே மனமில்லை. அவர் மட்டுமல்லாமல் அவர் குடும்பமே உபசரித்து எங்களை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தி விட்டது.நாங்கள் கிளம்ப ஆயத்தமாகி விட்டாலும் எங்கள் வீட்டு ஆண்கள் ஆசியாவின் கணவருடன் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்கள்.

மறக்காமல் ஆசியா வைத்த போட்டியில் நான் வென்று அவர் பரிசாக அறிவித்த திருநெல் வேலி அல்வாவையும் மறக்காமல் தந்து விட்டார்.இதிலிருந்து ஆசியா வாக்கு மாறாதவர் என்பதையும் புரிந்து கொண்டேன்.

அய்மான் சங்கத்தலைவர் சகோதரர் ஷாகுல்ஹமீது அவர்கள் குடும்பத்தினரின் உபசரிப்பு,அபுதாபி ஷேக் ஜைத் பள்ளி வளாகத்தில் எதிர்பாராவிதமாக சகபதிவர் சோனகனின் சந்திப்பு,நான் துபை வந்தது பற்றி சகபதிவர் மூலமாக அறிந்து சகோதரர் கிளியனூர் இஸ்மத் அவர்களின் கைபேசி மூலமாக அழைத்து தன் குடும்பத்தினரை வந்து பார்த்து செல்லுமாறு அழைப்பு,அறுசுவை இணையதளஸ்நேகிதிகள்அன்புள்ளங்கள் தளிகா மற்றும் ரேணுகாவின் தொலைபேசி அழைப்பு ,என் இரத்தபந்தங்களின் மறக்கமுடியாத உபசாரங்கள் அனைத்தையும் அசைப்போட்டபடி விமானத்தில் ஏறி அமர்ந்தேன்.


55 comments:

Jaleela said...

ஸாதிகா ஊர் சென்ற அலுப்பு தீர்ந்து பதிவு போட இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகும் என்று நினைத்தேன் அதற்குள், மூச்சுவிடாம ( எஸ் பீ பீ) பாடியது போல் சொல்லி முடித்துட்டீஙக.
அப்ப எதிர் பாராத குதுகல சந்திப்பு , இனி இப்படி அமையாது.

Jaleela said...

இனிய மாலை பொழுதினில் சந்தித்த குதுகல சந்திப்பு “ அந்த நாள் வாழ்வில் இனிய நாள் தான்”

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா அருமையான சந்திப்பு; நேரில் கண்டதுபோல் எழுத்திலும் கொண்டுவந்திருக்கீங்க ஸாதிகா அக்கா.. தோழிகளுடனான உங்கள் சந்திப்பு அருமையாக மறக்கமுடியாத அனுபவமாக இருந்திருக்கும் இல்லையா அக்கா... இன்ஷா அல்லாஹ் அப்படியே சவூதிக்கும் ஒரு எட்டு வர்றது.

நாஸியா said...

அக்கா உங்க வரவேற்ப்பை மறக்கவே முடியாது.. ஹிஹி.. நிச்சயமா எனக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியாவே இருந்துச்சு.. இன்னொரு தடவை நிறைய நேரம் பேசனும்..

இன்ஷா அல்லாஹ் நாம நம்மூருலையும் சந்திப்போம்! ;)

asiya omar said...

ஸாதிகா அருமையாக அமர்க்களமாக எழுதியிருக்கீங்க ,எழுத்தாளரல்லோ !எழுத்தை கேட்கவும் வேண்டுமோ ! சற்று ஓய்வு கூட எடுக்காமல் உடனே அமீரக வருகையை குறித்து பகிர்ந்து கொண்டது மனதிற்கு இனிமையாகவும் இதமாகவும் உள்ளது தோழி.

Chitra said...

ரொம்ப நல்லா தொகுத்து எழுதி இருக்கீங்க. :-)

நட்புடன் ஜமால் said...

எங்களிடம் இருந்து வெளிப்பட்ட சிரிப்பொலி அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்]]

ஆஹா! அருமை போங்கோ

நட்புடன் ஜமால் said...

"ஆ..பிரியாணி"]]

என்னது “ஆ” பிரியாணியா ஆ

ஜெய்லானி said...

பெண்கள் சேர்ந்தா அரட்டைக்கு கேக்கவா வேனும். அதிலும் பிரியமானவர்கள் சேர்ந்தால் :-))))))). அடுத்த டிரிப் எப்ப..

அப்ப எனக்கும் ஒரு அல்வா இருக்க்க்க்க்கூஊஊஊஊஊஊஊ!!!???!!!??!!????????

seemangani said...

பிரியமானவர்கள் சந்தித்து கொண்டால் கேட்கவா வேண்டும்...பதிவில் நிறைய உண்மைய போட்டு உடச்சுடீங்க அக்கா...

//அருகில் விற்பனைக்காக அடுக்கிவைக்கப்பட்டு இருந்த மலர் கொத்துகளிடையே புகை வருவதைப்போல் உணர்ந்தேன்//

இப்போ என் கண்ணுல புகை வருது...
ஹும்ம்ம்ம்....
அந்த நினைவுகளுடன் வாழ்வின்... எல்லாநாளும் இனிமையாய் அமைய வாழ்த்துகள்...அக்கா...

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா!

அருமையாகத் தொகுத்து எழுதியிருக்கிறீர்கள்! நான் இன்னும் சீக்கிரமாகவே உங்களின் பதிவை எதிர்பார்த்தேன்.
அனைவரும் சந்தித்தது மகிழ்ச்சிகரமாக அமைந்தது. உங்களின் வருகையால்தான் இது நடந்தது. அதனால் உங்களுக்கு என் நன்றி!

ஆனால் ஷார்ஜாவிலேயே தங்கியிருந்தும் என் இல்லத்திற்கு வராமல், என் கை பக்குவத்தை சாப்பிடாமல் ஏமாற்றி விட்டீர்கள். அந்த வகையில் சிறிது கோபம்தான்!!

ஹுஸைனம்மா said...

//மலிக்காவின் கலகலப்பான ,நகைச்சுவைமிளிரும் பேச்சு.//

உண்மை அக்கா; அவரது கலகலப்பான பேச்சு கொஞ்சநேரம்தான் கேக்க முடிஞ்சுது. அவரது அனுபவங்களைச் சுவையா விவரிச்சார்.

ஹுஸைனம்மா said...

//இஸ்லாமிய பேச்சு வழக்கைப்பற்றி அநன்யா இவரிடமும்,பிரமணாள் பேச்சு வழக்கைப்பற்றி மலர் அநன்யாவிடம் கேட்டு//

இது எப்போ நடந்தது? நான் அங்கயும், இங்கயும் போனதுல நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல!! சரி, சரி, மலிக்கா இங்கதான இருக்காங்க; ஒருக்காப் போய்ப் பாத்துட்டாப் போச்சு!!

ஹுஸைனம்மா said...

அக்கா, ஒரு விஷயம் கவனிச்சீங்களா? பொதுவா பெண்கள் ஒண்ணுசேந்தா, பேசக்கூடிய விஷயங்களா சொல்லப்படுற உடை, நகை, குழந்தைகள் பெருமை, மாமியார், மருமகள் பிரச்னை என்ற விஷயங்கள் எதுவுமே நாம பேசலை!!

அதாவது பின்நவீனத்துவ பாணியில் சொல்லணுன்னா, மரபுக் கட்டுடைத்தல்!! ;-))) ஹி.. ஹி..

athira said...

Jaleela said...
இனிய மாலை பொழுதினில் சந்தித்த குதுகல சந்திப்பு “ அந்த நாள் வாழ்வில் இனிய நாள் தான்”//// karrrrrrrrrrrrr

athira said...

ஜெய்லானி said...
பெண்கள் சேர்ந்தா அரட்டைக்கு கேக்கவா வேனும். அதிலும் பிரியமானவர்கள் சேர்ந்தால் :-))))))). அடுத்த டிரிப் எப்ப..

அப்ப எனக்கும் ஒரு அல்வா இருக்க்க்க்க்கூஊஊஊஊஊஊஊ!!!???!!!??!!????????///// இது ரொம்ப ஓவர் ஜெய்..லானீ... பகல் கனவு காணாமல் ஒயுங்கா வேலையைப் பாருங்கோ....

ஜலீலாக்கா.... அந்த மிஞ்சிப்போச்சென பிரீசரில மிச்ச வடை வச்சீங்களே... அதைக்கொஞ்சம் சூடாக்கி ஜெய்..லானிக்கு.... ஆஆஆ இல்ல இல்ல ஒண்ணுமே இல்லை...

athira said...

ஹுஸைனம்மா said...
அக்கா, ஒரு விஷயம் கவனிச்சீங்களா? பொதுவா பெண்கள் ஒண்ணுசேந்தா, பேசக்கூடிய விஷயங்களா சொல்லப்படுற உடை, நகை, குழந்தைகள் பெருமை, மாமியார், மருமகள் பிரச்னை என்ற விஷயங்கள் எதுவுமே நாம பேசலை!!

அதாவது பின்நவீனத்துவ பாணியில் சொல்லணுன்னா, மரபுக் கட்டுடைத்தல்!! ;-))) ஹி.. ஹி..//// ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆஅ இது என்ன இதூஊஊஊஊஊஊ? வயிற்றில புளியைக் கரைக்கிறா ஹூசைனம்மா(நேக்குத்தேன்..)) அப்போ என்னதான் பேசினீங்க அவ்ளோ நேரம்?????

athira said...

உஸ் அப்பாடா... ஸாதிகா அக்கா ஊருக்கு வந்திட்டீங்களோ.... இனித்தான் பிரித்தானியப் புகை கொஞ்சம் தணியப்போகுதூஊஊ(கவனிக்கவும் கொஞ்சம்தான்)....

நிறையப்பேரைச் சந்தித்திருக்கிறீங்க.. மனோ அக்காவையும் கண்டிருக்கிறீங்க.. ஜலீலாக்காவுக்கு கடிகாரமுள் நகரவில்லையாமே அன்று.... இதைக்கேட்ட அதிராவுக்கு எப்பூடீஈஈஈஈஈஈஇ இருக்கும்????

ஓக்கை நல்ல சந்திப்புத்தான்...

பின்குறிப்பு:
பிரித்தானியாவிலயும் ஒரு கெட்டுகெதர் நடக்கப்போகுது, ஆனால் சந்திப்பு முடிந்த பின்னரே விஷயமெல்லாம் வெளியிடுவோம்... பூனையோ கொக்கோ????(இப்ப மெயிலுக்குள்ளாலதான் எல்லாம் நடக்குது...).

கமல் said...

அட மகளீர் சந்திப்பா.. கலக்கல்...

சுவையாகப் பதிவிட்டூள்ளீர்கள். பகிர்வுக்கு நன்றிகள்.

SUFFIX said...

அருமையான சந்திப்பு அக்கா, சக பதிவர்களின் இடுகைகளிலும் அந்த மகிழ்ச்சி இழையோடுகிறது. எல்லாப்புகழும் இறைவனுக்கே!!

ஹுஸைனம்மா said...

//எங்களை அழைத்து வந்த எங்கள் வீட்டு ஆண்களும் பொறுமை காத்து ஆங்காங்கே அமர்ந்திருத்தும், நின்றுகொண்டிருந்தும், காரில் அமர்ந்தபடி தூங்கிக்கொண்டும், அருகில் இருந்த மால்களில் சுற்றிக்கொண்டும் எங்கள் நட்புக்கு ரெட் சிக்னல் கொடுத்துவிட்டு பொறுமை காத்தது//

யக்கா, இதுதான் பெரியவங்க வேணுங்கிறது. எல்லாரும் சொல்ல மறந்ததை, அழகாச் சொல்லிட்டீங்க பாருங்க.

நாம இங்க அரட்டை அடிக்க, எல்லாரின் கண்வர்களும் ஜவுளிக்கடை வாசல்ல காத்துக் கிடப்பதுபோல பாவமாக அங்கங்க இருந்ததையும் நிச்சயமாப் பாராட்டணும். நியாயமாப் பாத்தா அவங்களுக்கெல்லாம் எதாவது பரிசு கொடுத்திருக்கணும் சபையில அழைச்சு!!

ஹுஸைனம்மா said...

/ரெட் சிக்னல் கொடுத்துவிட்டு //

கிரீன் சிக்னல்தானே?

நாஸியா said...

அதாவது பின்நவீனத்துவ பாணியில் சொல்லணுன்னா, மரபுக் கட்டுடைத்தல்!! ;-))) ஹி.. ஹி.

யக்கோவ்!! கலக்குறீங்க போங்க.. ஹிஹி.. ஆமா நாமெல்லாம் ஒண்ணா என்ன பேசினோம்? எனக்கே மறந்து போச்சுபா

நாஸியா said...

\"ஆ..பிரியாணி"]]

என்னது “ஆ” பிரியாணியா ஆ\

ஹலோ ப்ரதர்.... ஆன்னு ஒரு வார்த்தை முன்னாடி போட்டா, அது ஆச்சரியத்தை குறிக்கும்.. நீங்க நினைக்குற மாதிரி ஆட்டை இல்ல.. ஹிஹி..

VAAL PAIYYAN said...

nalla pathivu
visit my blog
www.vaalpaiyyan.blogspot.com
JUNIOR VAALPAIYYAN

Mrs.Menagasathia said...

அக்கா இந்தியா வந்தாச்சா? கலக்கலான பதிவு!! அனைவரையும் சந்திப்பதே பெருமகிழ்ச்சிதான்.நீங்கள் நல்லா எஞ்சாய் பண்ணிருக்கிங்கன்னு உங்க பதிவே சொல்லுது.....

மின்மினி said...

அருமையான சந்திப்புகள். அல்ஹம்துலில்லாஹ்.. அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

செ.சரவணக்குமார் said...

அக்கா உங்க சந்தோஷத்தை அப்படியே எழுத்துல பார்க்க முடியுது. மறக்கமுடியாத சந்திப்புதான். அருமையா பதிவு பண்ணியிருக்கீங்க வாழ்த்துக்கள். அப்படியே ஒரு நடை சவுதிக்கும் வந்துட்டுப்போங்க ஸாதிகா அக்கா.

செ.சரவணக்குமார் said...

//நாம இங்க அரட்டை அடிக்க, எல்லாரின் கண்வர்களும் ஜவுளிக்கடை வாசல்ல காத்துக் கிடப்பதுபோல பாவமாக அங்கங்க இருந்ததையும் நிச்சயமாப் பாராட்டணும். நியாயமாப் பாத்தா அவங்களுக்கெல்லாம் எதாவது பரிசு கொடுத்திருக்கணும் சபையில அழைச்சு!!//

சூப்பர் ஹுஸைனம்மா.

அநன்யா மஹாதேவன் said...

//அக்கா, ஒரு விஷயம் கவனிச்சீங்களா? பொதுவா பெண்கள் ஒண்ணுசேந்தா, பேசக்கூடிய விஷயங்களா சொல்லப்படுற உடை, நகை, குழந்தைகள் பெருமை, மாமியார், மருமகள் பிரச்னை என்ற விஷயங்கள் எதுவுமே நாம பேசலை!!

அதாவது பின்நவீனத்துவ பாணியில் சொல்லணுன்னா, மரபுக் கட்டுடைத்தல்!! ;-))) ஹி.. ஹி..//

ஹூஸைன்னம்மா சொன்னதை கன்னா பின்னா ரிப்பீட்டேஏஏஏய்!!!
சூப்பர் போங்க.

ஸாதிகா அக்கா, ஜோரான பதிவு. கலக்கிட்டீங்க போங்க. மீண்டும் அந்த நிமிடங்கள் கண்முன் நிழலாடித்து.

ஸாதிகா said...

ஜலி..சமையல் செய்ய,கட்டிக்கொண்டுவந்ததை பிரித்து அடுக்க,வெளியில் செல்ல,போனில் மொக்கைபோட,ஏன் சாப்பிடக்கூட அலுப்பாக உள்ளது.ஆனால் அவசரமக பதிவு போடமட்டும் அலுப்பு வரலே!!!//, இனி இப்படி அமையாது.//ஏன் அப்படி சொல்லி விட்டீர்கள்?இன்ஷா அல்லாஹ் சென்னை வாருங்கள்.இங்குள்ள பெண் பதிவர்கள் சேர்ந்து சந்திப்பு நடத்தலாம்.நான் மீண்டும் அங்கு வருவேன்.அப்பொழுதும் நடத்தலாம்.இருக்கும் ஸ்நேகிதிகளுக்குள்ளும் இப்படிபட்ட சந்திப்பை நடத்தி மகிழுங்கள்.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி ஸ்டார்ஜன்.உண்மைதான் மறக்க இயலாத இனிய தருணம் அது.கத்தார் வந்துவிட்டு அங்கிருந்து உம்ரா செய்து விட்டு அமீரகம் வருவதாகத்தான் எங்கள் பயணத்திட்டம்.இது சக பெண்பதிவர்களுக்கும் தெரியும்.அதே போல் இதே வருடம் ஹஜ்ஜும் செல்வதாகவும் இருந்தேன்.ஒரே வருடத்தில் ஹஜ்ஜும்,உம்ராவும் கிடைக்கும் களிப்பில் இருந்தேன்.ஆனால் சில காரணங்களால் தடை ஏற்பட்டுவிட்டது.விரைவில் அந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்.

ஸாதிகா said...

ஆசியா..உங்களை நினைத்துக்கொண்டது என் மனம் மலர்பூங்காவாகிவிடுகிறது தோழி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//அக்கா உங்க வரவேற்ப்பை மறக்கவே முடியாது.//அப்படி என்ன ஸ்பெஷலாக வரவேற்றேன்.எனக்கே மறந்து போச்சே..கருத்துக்கு நன்றி நாஸியா

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சித்ரா.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி சகோ ஜமால்.//என்னது “ஆ” பிரியாணியா ஆ//நாஸியா விளக்கம் கொடுத்து விட்டார்.நான் என்ன நினைதேன்னா நாஸியா பிரியாணி சட்டிய்டந்தான் வருகிறார் என்று ஆ பிரியாணி என்று ஆவலாக அலறி விட்டோம்.

ஸாதிகா said...

//அடுத்த டிரிப் எப்ப..//என்னங்க தம்பி ஜெய்லானி..வந்த அலுப்பு தீரலே .அதுக்குள் இப்படி ஒரு கேள்வி கேட்கலாமோ?அவ்வளவுதான் எங்க ரங்ஸ் பெரிய ஈட்டியை தூக்கிக்கொண்டு சார்ஜாவுக்கு வந்துடுவார்.//அப்ப எனக்கும் ஒரு அல்வா இருக்க்க்க்க்கூஊஊஊஊஊஊஊ!!!??//அதான் அன்னிக்கே மேட்டர் முடிந்து விட்டதே.ஆசியா எனக்குத்தான் நிஜ அல்வா பரிசு தந்தார்.உங்களுக்கு"அல்வா"கொடுத்து விட்டார் என்று தீர்ப்பு சொல்லியாச்சே.

ஸாதிகா said...

//அந்த நினைவுகளுடன் வாழ்வின்... எல்லாநாளும் இனிமையாய் அமைய வாழ்த்துகள்...அக்கா..// இந்த வரிகளுக்கு மிக்க நன்றி சீமான் கனி.

ஸாதிகா said...

அதனே ..ஹுசைனம்மா..நீங்க அலைந்து தெரிந்ததிலேயே நிறைய மிஸ் பண்ணிட்டீங்க.//அதாவது பின்நவீனத்துவ பாணியில் சொல்லணுன்னா, மரபுக் கட்டுடைத்தல்!! ;-))) ஹி.. ஹி//நான் அப்படி நினைக்கவில்லை.பத்துபெண்கள் சேர்ந்து இருக்கிறோம்.நீங்கள் குறிப்பிட்ட டாபிக்கை தொடாமலே மூன்றரை மணி நேரம் பேசி இருக்கிறோம் என்றால் அது இமாலய சாதனை..ஹி..ஹி..//யக்கா, இதுதான் பெரியவங்க வேணுங்கிறது. எல்லாரும் சொல்ல மறந்ததை, அழகாச் சொல்லிட்டீங்க பாருங்க//இந்த குசும்புதானே வேண்டாங்கறது.சரி இன்னிக்கும் போய் நிம்மதியா தூங்குங்க.ஒகே?//கிரீன் சிக்னல்தானே//அட..அது ஒன்றும் இல்லே ஹுசைனம்மா.எப்ப பாரு காரில் போய்க்கொண்டு இருக்கும் பொழுது இந்த ரெட் சிக்னல் விழுந்து நம்மளை ரொம்பவே டென்ஷன் ஆக்கி விட்டது உங்கள் ஊர்.அந்த நினைப்பில்தான் தவறுதலா ரெட் சிக்னல் என்று போட்டு விட்டேன்

ஸாதிகா said...

மனோ அக்கா..எனக்கு அந்த மனகுறை உள்ளது.என் சார்பில் என் தங்கை உங்கள் இல்லத்திற்கு வருவார்.உங்கள் அன்புக்கு மிக்க நன்றி மனோ அக்கா.

ஸாதிகா said...

அதிரா..பார்க்கில் இருந்தப்போ எனக்கு உங்கள் நினைவுதான் வந்தது.அதிரா காதில் வரும் புகையால் ஸ்காட்லாந்த் பனி முழுக்க கரைந்து விடும் என்று நினைத்தேன்.அதீஸ்..இப்பவே சொல்லுங்கோ..பிரித்தானியாவுக்கு இப்பவே டிக்கெட் புக் செய்து விடுகிறேன்.பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளத்தான்.உங்களைப்போல் காதில் நான் புகை விட்ட்க்கொண்டிருந்தால் சென்னை மாநகரம் தாங்காது அடிக்கின்ற வெயிலுக்கு.

ஸாதிகா said...

கமல்,முதல் வருகைக்கும்,பின்னூட்டத்திற்கும் நன்றி

ஸாதிகா said...

//சக பதிவர்களின் இடுகைகளிலும் அந்த மகிழ்ச்சி இழையோடுகிறது//உண்மைதான் சகோ ஷஃபி.அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனை நெக்குருகிக்கொண்டு இருக்கின்றேன்

ஸாதிகா said...

வால்பையன்,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி

ஸாதிகா said...

உண்மை மேனகா.எல்லோருமே நல்லா எஞ்சாய் பண்ணினார்கள்.

ஸாதிகா said...

மின்மினி..கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//ஒரு நடை சவுதிக்கும் வந்துட்டுப்போங்க //ஸ்டார்ஜனுக்கு கொடுத்த பதிலைப்பாருங்கள்.விரைவில் அந்த பாக்கியம் எனக்கு கிடைக்க வேண்டும்.மிக்க் நன்றி சகோ சரவணக்குமார்.

ஸாதிகா said...

//மீண்டும் அந்த நிமிடங்கள் கண்முன் நிழலாடித்து.//நிஜம் அநன்யா.மீண்டும் அப்படி ஒரு நாளை எதிர்பார்க்கிறேன்.

அன்புடன் மலிக்கா said...

//ஸாதிகா ஊர் சென்ற அலுப்பு தீர்ந்து பதிவு போட இன்னும் இரண்டொரு நாட்கள் ஆகும் என்று நினைத்தேன் அதற்குள், மூச்சுவிடாம ( எஸ் பீ பீ) பாடியது போல் சொல்லி முடித்துட்டீஙக.//

அதேதா ரிபீஈஈஈஈஈஈஈட்டு.
நானும் இப்போது எதிர்பார்கலைக்கா,

சந்திப்பு தந்த தித்திப்பு இன்னும் நெஞ்சினில்.தாங்களோடு சேர்து மற்ற தோழிகளையும் கண்டது மனநிறைவைத்தந்தது..

//மலிக்காவின் கலகலப்பான ,நகைச்சுவைமிளிரும் பேச்சு.//

உண்மை அக்கா; அவரது கலகலப்பான பேச்சு கொஞ்சநேரம்தான் கேக்க முடிஞ்சுது. அவரது அனுபவங்களைச் சுவையா விவரிச்சார்//

அப்படியா நகைசுவையா பேசினேன்.
எனக்கே தெரியலையே அக்காமார்களா.

அன்புடன் மலிக்கா said...

//இது எப்போ நடந்தது? நான் அங்கயும், இங்கயும் போனதுல நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல!! சரி, சரி, மலிக்கா இங்கதான இருக்காங்க; ஒருக்காப் போய்ப் பாத்துட்டாப் போச்சு!!//

நிறைய வியசங்கள் கவனிக்க முடியலை ஹுசைன்னம்மா. தலகால் புரியாம ஆடியதில்.

ஒருக்கா என்ன மறுக்கா மறுக்க வாங்க வரவை எதிர்பார்க்கிறேன்..

SUFFIX said...

//சக பதிவர்களின் இடுகைகளிலும் அந்த மகிழ்ச்சி இழையோடுகிறது//உண்மைதான் சகோ ஷஃபி.அல்ஹம்துலில்லாஹ் என்று இறைவனை நெக்குருகிக்கொண்டு இருக்கின்றேன் //

அடுத்த உம்ரா/ஹஜ் பயணத்தின்போது எங்கள் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் அக்கா, இன்ஷா அல்லாஹ்!! மக்காவிலிருந்து கூப்பிடு தூரத்தில் தான் நாங்கள் இருக்கிறோம்.

ஸாதிகா said...

மலிக்கா உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

//அடுத்த உம்ரா/ஹஜ் பயணத்தின்போது எங்கள் வீட்டுக்கு அவசியம் வர வேண்டும் அக்கா, இன்ஷா அல்லாஹ்!! //தம்பி ஷஃபி உங்கள் அன்பான அழைப்புக்கு நன்றி.மகிழ்ச்சி.விரைவில் அந்த பாக்கியம் கிடைக்க துஆ செய்யுங்கள்

கிளியனூர் இஸ்மத் said...

தாமதமாக உங்களின் அமீரகப்பயணக் கட்டுரையை பார்க்கிறேன்....அழகாக தொகுத்துள்ளீர்கள்....

பார்த்த இடங்கள்
சந்தித்த மனங்கள்
உணவகங்களின் மணங்கள்....
ஆஹா அருமையா ஒவ்வொன்றையும் புகைப்படத்துடன் பதிவிட்டது அருமை....வாழ்த்துக்கள்.

ஸாதிகா said...

சகோதரர் இஸ்மத்,சிறு கவிதையாலேயே பாராட்டு வழங்கி விட்டீர்கள்.வருகைக்கு மகிழ்ச்சி.