பொதுவாக எலக்ட்ரானிக்பொருட்கள் வாங்கினால் அழகானவையா,நன்கு உழைக்குமா என்று பார்ப்பதற்கு முன்னர் முன்னணி பிராண்டா?நல்ல சர்வீஸ் வசதி உண்டா என்பதைதான் முதலில் பார்ப்போம்.சர்வீஸுக்காகவே வெளிநாடுகளில் இருந்து வரும் வாய்ப்பிருந்தும்அநேக பொருட்களை மறுத்துவிட்டு இங்கு விற்பதைத்தான் விரும்பி வாங்குவோம்.
சென்னையில் பிரபலமான கடை.இந்தியாவில் லாஞ்ச் ஆகும் எல்லா பிராண்ட்ஏசிகளும்.அனைத்து மாடல்களும் ஒரே கூரையின் கீழ் வைத்து அமோகமாக விற்பனை செய்யும் பெரிய வேறு கிளைகள் இல்லா நிறுவனம்.ஏற்கனவே திட்டமிட்டபடி குறிப்பிட்ட விலையில்,குறிப்பிட்ட பிராண்டில் வாங்கப்போனால் மற்றுமொரு நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி கைகளை பிடித்து அழைக்காத குறையாக வருந்தி அழைத்து வாங்கப்போகும் பிராண்டைப்பற்றிய குறைகளை பற்றி பெரிய லெக்சரே அடித்து யோசிக்க வைப்பார்.யோசிக்க ஆரம்பிக்க முன்னரே "இப்போ அத்தனை பணமும் இல்லேன்னா கூட பரவா இல்லை.டெலிவரி பண்ணும் பொழுது மீதிப்பணம் கொடுத்தால் போதும்"என்ற முன்னுரையோடு ஸ்டார் ரேட்டிங்,அதனால் கிடைக்கும் சேமிப்பு,அவர்களின் பிராடக்டின் தரம்,சேவை என்று விலாவாரியாக பேசி தலையில் கட்டிவிட்டுத்தான் மறுவேலைப்பார்ப்பார்.
சரி கியாரண்டி முடிந்துவிட்டதே என்று ஏ ம் சி எடுத்தால் சர்வீஸுக்கு கூப்பிட்டே போன் பில் எகிறுகின்றது.பிரபலமான வாட்டர் ஃபியூரிபையர் ஏ எம் சி எடுத்துவிட்டு நான் பட்டபாட்டினை,அதனால் எற்பட்டவாக்குவாதங்கள்,கோபமான உரையாடல்கள் ,கொல்கத்தாவில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு போனுக்கு மேல் போன் செய்து ,மின்னஞ்சல்கள் அனுப்பி வெறுத்துப்போன நிலையில் ஏ எம் சியும் முடிந்து ஓய்ந்திருக்கையில் கையில் பைலுடன் மெக்கானிக் ஏ எம் சியை ரினுவல் பண்ணும்படி கோரிக்கையுடன் வந்தவரை ஆத்திரம் தீர கேட்டு விட்டு அந்த வாட்டர் ஃபியூரிபையரையே கடாசிவிட்ட அனுபவமும் உள்ளது.
கிரைண்டரைக்கொண்டு போய் சர்வீஸுக்கு கொடுத்தால் சர்வீஸ் செய்து தருகின்றோம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.புதிதாக அறிமுகப்படுத்திய மாடலை காட்டி இதில் அந்த வசதி உள்ளது.இந்த வசதி உள்ளது.அடுத்த மாதத்திற்கு விலை ஏறப்போகின்றது.இதனை ரிப்பேர் செய்தால் தண்டம் இந்த ரீதியில் பேசி புதியவையை நம் தலையில் கட்டப்பார்க்கின்றனர்.சாமர்த்தியம் இருந்தால் பர்ஸ் தப்பும்
சரி ரிப்பேருக்கு கொடுத்தே பர்ஸ் இளைத்து விடுகின்றதே என்று சற்று பழசாகிப்போன குளிர்சாதனப்பெட்டிக்கு ஏ எம் சி எடுக்க வரும்படி அழைத்தால் "பர்ச்சேஸ் பண்ணி ஐந்து வருடங்களுக்குள் இருந்தால்தான் ஏ எம் சி எடுப்போம்" என்று அதிரவைக்கின்றார்கள்.அதாகப்பட்டது எந்தஒரு எலக்ட்ரானிக் தயாரிப்பும் அவர்களது தயாரிப்பில் ஐந்து வருடங்களுக்கு மேல் உழைக்காது என்று சொல்லாமல் சொல்லுகின்றார்கள்.
இருவருட கியாரண்டியுடன் தெரிந்தவர் வீட்டில் வாங்கிய கியாரண்டி முடிவதற்கு 10 நாட்கள் முன்பதாக குளிர்சாதனப்பெட்டி ரிப்பேராகி விட்டது.அழைப்புக்கு மேல் அழைப்பு வைத்து கிராண்டி பீரியட் முடிந்த பின் வந்து பார்த்து ரிப்பேர் செய்துவிட்டு பில்லை நீட்டினால் கோபம் வருமா வராதா?மெக்கானிக்கை அருகில் வைத்துக்கொண்டே கம்பெனி மேலாளருக்கு போன் செய்து போராடி பணத்தை கொடுக்காமல் மெக்கானிக்கை அனுப்பிவைத்தனர்.
சம்மர் நேரம் .ஏசி அமோக விற்பனை செய்யும் நேரம்.ஆயிரத்தெட்டு சலுகைகள் அறிவித்து ஏசி வாங்கினால் இன்ஸ்டாலேஷன் ஃபிரி,ஸ்டெபிலைசர் இலவசம் என்று அறிவித்து விட்டு ஆங்கிள் போட்டுள்ளோம் ஜம்பர் போடுள்ளோம் பணம் கொடுங்கள் ஒவ்வொன்றுக்கும் பிடுங்குகின்றனர்.
பெரியதாக கால் செண்டர் என்று போட்டு நமது கம்ப்ளைண்டுகளை பதிவு செய்து ஒழுங்கான சேவை செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.இந்த நபருக்கு போடுங்கள்,அந்த நம்பருக்கு போடுங்கள் என்று அலைகழித்து வெறுப்பின் உச்சகட்டத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர்.
மிளாகாயாக கோபத்தில் கத்தினாலும்,தேனொழுக பேசி பேச்சில் மட்டும் சாதுர்யத்தை காட்டுவதற்கு நன்றாகவே டிரைனிங் கொடுத்துள்ளனர்.
அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து தன் கையே தனக்குதவி என்று ஆரோக்கியமாக வாழ்ந்த அந்தக்காலத்திலேயே வாழ்ந்து மடியாமல் மின்சாரசாதனங்களை நம்பி வாழ்ந்து அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறோமே என்கின்ற அளவுக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.
நம்மை பாதிப்புக்குள்ளாக்கிய நிறுவனங்களுக்கு இந்த இடுகையை மட்டுமின்றி தொடரும் பின்னூட்டங்களையும் காப்பி பேஸ்ட் செய்யலாம் என்று இருக்கின்றேன்.(எருமை மாட்டில் பெய்த மழை என்கின்றீர்களா?)
டிஸ்கி- அடுத்த பதிவில் பிராண்டுகளின் பெயரையே அறிவித்து விடுகின்றேன்.
Tweet |
38 comments:
நல்லாவே குமுறியிருக்கீங்க ஸாதிகா அக்கா.. இவர்களுக்கு ஒரே நோக்கம் வியாபாரம்தான். அதுக்கு எந்தமாதிரியும் தந்திரமெல்லாம் செய்வார்கள். லேசா சிலிப்பானாலும் நம்ம பர்ஸ் காலிதான்.
நல்ல சமூக கட்டுரை.
//அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து தன் கையே தனக்குதவி என்று ஆரோக்கியமாக வாழ்ந்த அந்தக்காலத்திலேயே வாழ்ந்து...///
சூப்பர். அந்தகாலமெல்லாம் திரும்புமா?..
பொதுவாக LG நிறுவன தயாரிப்புகள் இதற்கு முன்னோடியாக உள்ளன.
AFTER MARKET SERVICE இவர்களிடம் நன்றாக உள்ளது..
இதை நன் பயன் படுத்தியதால் சொல்கிறேன்..
பொதுவாக LG நிறுவன தயாரிப்புகள் இதற்கு முன்னோடியாக உள்ளன.
AFTER MARKET SERVICE இவர்களிடம் நன்றாக உள்ளது..
இதை நன் பயன் படுத்தியதால் சொல்கிறேன்..
டிஸ்கி- அடுத்த பதிவில் பிராண்டுகளின் பெயரையே அறிவித்து விடுகின்றேன்.
.....அது.......... !
சில brand names உள்ள கம்பனிகளுக்கு எழுதி போட்டால், உடனே நடவடிக்கை எடுக்க சொல்லி retailers க்கு வார்னிங் அனுப்புவார்கள். எல்லோரும் செய்யாதது ஏன் என்று தெரியவில்லை......
//டிஸ்கி- அடுத்த பதிவில் பிராண்டுகளின் பெயரையே அறிவித்து விடுகின்றேன்.//
அதை செய்யுங்க முதல்ல நானா இருந்தா இன்னும் நாலு வார்த்த அசிங்கமா திட்டி எழுதி இருப்பேன். ஊரில என் வீட்டிலும் இப்ப அதான் நடக்குது . நான் ஊரில இல்லாததால அந்த கம்பெனி தப்பிச்சுது.
இப்படி போட்டாதான் நம் மக்களும் இனி உஷாரா இருப்பாங்க!!!!
நல்லா சொன்னீங்க..அடுத்த பதிவுக்கு வெயிட்டிங் அக்கா....
அக்கா, இது யார் காதிலும் விழவே விழாது. அமெரிக்காவில் பொருட்கள் வாங்கும் போது 3 அல்லது 5 வருடங்களுக்கு service plan உம் சேர்த்து வாங்கினால் பிரச்சினை இல்லை. கூப்பிட்ட குரலுக்கு ஓடி வந்து பைசா செலவில்லாமல் திருத்திக் கொடுப்பார்கள். நம்பகமான ப்ராண்ட்கள் ஏமாற்ற மாட்டார்கள்.
@சாதிகா
நிரம்ப அவதி பட்டுள்ளீர்கள் போல் தெரிகிறது. ஏ ம் சி எடுத்தும் சரிவர அவர்கள் பணியை செயாவிடில் நீங்கள் consumer court or consumer forumai அணுகலாம். உங்களுக்கு கண்டிப்பாக தீர்வு கிடைக்கும்
/ரியதாக கால் செண்டர் என்று போட்டு நமது கம்ப்ளைண்டுகளை பதிவு செய்து/
கால் சென்டர் பாவம்ங்க. அவங்க கொடுத்த வேலைய மட்டும்தான் செய்ய முடியும்.
நவீன வியாபாரம் யுத்தி..?
//பெரியதாக கால் செண்டர் என்று போட்டு நமது கம்ப்ளைண்டுகளை பதிவு செய்து ஒழுங்கான சேவை செய்கின்றார்களா என்றால் அதுவும் இல்லை.இந்த நபருக்கு போடுங்கள்,அந்த நம்பருக்கு போடுங்கள் என்று அலைகழித்து வெறுப்பின் உச்சகட்டத்திற்கே அனுப்பிவைத்து விடுகின்றனர்.//
இது பெரிய டிராஜிடி
சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளைகள் இவர்கள்.அந்த அளவுக்கு பக்கா ட்ரெயினிங்
பட்டா பட்டி சொலிகிற மாதிரி -புது வியாபர உக்தி!
நம்மூரில் செய்யப்படுகிற வியாபாரம் பலவும் பல் இளிக்கும் படி தான் இருக்கு.என்ன செய்வது யாராவது நல்ல நோக்கத்துடன் செய்தால் தான் உண்டு.
என்னைக் கேட்டால் AMC வேண்டாம் என்றே சொல்லுவேன், அவங்க பயமுறுத்திகிற ஒரே விடயம், ஜஸ்ட் வருவதற்கே 300, 500 ரூபாய் வாங்குவோம், அதுக்கப்புறம் மத்த சார்ஜஸ், அதெல்லாம்சும்மா வெத்துப் பேச்சு, நாங்கள் வாஷிங் மெஷின் வாங்கும்போது ஓவரா பில்டப் கொடுத்தாங்க, நல்ல வேளை வலையில் விழவில்லை!!
வாகனங்களில் உதிரி பாகங்களில் பல மடங்கு லாபம் சம்பாதிப்பது போன்று இந்த AMCயும் ஒரு வியாபார உத்தி!!
ஸாதிகா அக்கா. நல்ல சமூக கட்டுரை. இப்படித்தான் ஏமாத்துறவங்க நிறையபேர் இருக்காங்க.
இந்த AMC யெல்லாம், சுண்டைக்கா காப்பணம், சுமைக்கூலி முக்காப்பணம் வகையில் வரும்!! இதை நம்பித்தான் நிறைய கடைகள் விற்பனை செய்கின்றன!!
//சர்வீஸுக்காகவே வெளிநாடுகளில் இருந்து வரும் வாய்ப்பிருந்தும்அநேக பொருட்களை மறுத்துவிட்டு இங்கு விற்பதைத்தான் விரும்பி வாங்குவோம்.//
ஆமாம்க்கா; நானும் இந்திய வருகையின்போது பயன்படுத்தவென்று அங்கேதான் பொருட்கள் வாங்கியிருக்கேன்.
ஆனா, ரிப்பேராச்சுன்னா, கடைக்காரங்களக் கூப்பிடாம, நமக்குப் பழக்கமான எலெக்ட்ரிஷியன்களைக் கூப்பிட்டுக்குறது நல்லதுன்னு உங்க அனுபவத்துலருந்து புரிஞ்சுகிட்டேன்!!
கால்செண்டர்காரங்க, வடிவேலு பாஷையில, “எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கிற நல்லவங்க”!! ஏன்னா, தொலைபேச்சுக்கள் பதிவு செய்யப்படுவதால், அவங்க நம்மகிட்ட பதிலுக்குக் கோவப்படவும் முடியாது, (சர்வீஸுக்கு வரமாட்டாங்கங்கிற) உண்மையச் சொல்லவும் முடியாது.
//அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து ... வாழ்ந்து மடியாமல் மின்சாரசாதனங்களை நம்பி வாழ்ந்து அவஸ்தை பட்டுக் கொண்டிருக்கிறோமே//
யக்கோவ், அப்பவும் அம்மி கொத்துறதுக்கும், விறகு வாங்கவும், வெட்டிப் பிளக்க, காயவைக்க, மழையில் நனையாமல் பாத்துக்க என்று ஆள் தேடி அலைஞ்சி, பேரம் பேசி, சரியா செய்யலைன்னு திட்டி, சண்டை போட்டு, கோவப்பட்டிருக்கோம்.
இப்ப கொஞ்சம் ஹை-டெக்கா நடக்குது, அவ்ளோதான்!!
//வாக்குவாதங்கள்,கோபமான உரையாடல்கள் ,கொல்கத்தாவில் இருக்கும் தலைமை அலுவலகத்திற்கு போனுக்கு மேல் போன் செய்து ,மின்னஞ்சல்கள் அனுப்பி//
இதான் நேத்து டென்ஷனாக்குன விஷயமா?
பை தி வே, நான் உங்க அமீரக பிரதிநிதின்னு சொல்லிக்கலாம் போல!! எனக்கும் கம்ப்ளெயிண்ட் மெயில் அனுப்புறது, ஃபோன் பண்றதுன்னுதான் போகுது!!
எலக்ட்ரானிக்பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு எச்சரிக்கை... பதிவு
ஸாதிகா அப்பாடா,என்று தணியும் இந்த கோபம் - என்று சொல்கிற அளவிற்கு உங்கள் பதிவுசூடு பறக்கிறது.இந்தக்காலத்தில் போராடி எதையும் சாதிக்க முடியாது,எங்கே போனாலும் அமைதியாக இருந்தால் ஒரு மணி நேரத்தில் வேலை முடியும்,கேள்வி கேட்டால் ஒரு நாள் இழுத்தடித்து விடுவார்கள்.
//நம்மை பாதிப்புக்குள்ளாக்கிய நிறுவனங்களுக்கு இந்த இடுகையை மட்டுமின்றி தொடரும் பின்னூட்டங்களையும் காப்பி பேஸ்ட் செய்யலாம் என்று இருக்கின்றேன்// ஸாதிகா அக்காஆஆஆஆஆஆஆஆஆஅ மீ எஸ்கேஏஏஏஏப் நான் பின்னூட்டமே போடமாட்டேனே இன்று... சூடு ஆறியபின் வருகிறேன்.
பாருங்க மேடம் , இதே மாதிரி தான் , நான் கல்யாணம் பண்ணி ஒருவருசத்துல அது பழைய புராடக்ட் , பழைய மாடல் இப்ப புது மாடல் நிறைய இருக்கு அப்படின்னு ஒரே நச்சரிப்பு மேடம் ,,,,,,,,,,,,,,,,,,,,,, (ஹைய்யோ சுமா தமாசு , எங்க வீட்டு காரம்மா கிட்ட சொல்லிராதிக, அப்புறம் செருப்படி vilum )
ஐயோ அக்கா...என் பின்னுட்டம் காணாம போச்சு...ஆரோ சதி...பண்ணிடாங்க...
சூப்பராக சென்னீங்க...அருமையான பதிவு...அடுத்த பதிவிக்கும் ஆவல் கூடிவிட்டது...
நல்ல பதிவு... என்னத்த சொன்னாலும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் மீதான மக்களின் மோகம் குறையாத ஃபிராடுதனங்கள் ஒயாது....
http://bluehillstree.blogspot.com/2010/05/blog-post_25.html
இங்கு வந்து வாங்கிக்கொள்ளுங்கள் விருதை....
இந்த மாதிரி பிரச்சனையை பொதுவில் வைப்பது மிகவும் அவசியம். அனைவரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். நம்மூரில் கூட்டம் சேர்த்தா தான் காரியம் நடக்கும்.
என்னன்னு தெரியலை, ரெண்டு மூணு நாளா சில ப்ளாக்ஸ்பாட் பக்கங்கள் திறக்கவே இல்ல..
உங்க தலைப்பை பார்த்து படிக்கனும், படிக்கனும்னு கிட்டத்தட்ட ஒரு 20 வாட்டி ரெஃப்ரெஷ் பண்ணி உள்ள வந்தேன்! :)
**
எலெக்ட்ரானிக்ஸ் என்றில்லை, பல இடங்களில் நுகர்வோரை ஆஃப்டர் சேல்ஸ் சர்வீஸ் அப்போ ஏமாத்துவது தான் பல இடங்களில் வேலையே! எனக்கு அப்படி ரிலையன்ஸ், டாட்டா இன்டிகாம் நிறுவனங்களோட பல நாள் அக்கப்போர் நடந்திருக்கு. கடைசியா நம்ம பிஎஸ் என் எல் தான் கை கொடுக்குது, எங்க வீட்டுல.
தைரியமா ப்ரான்ட் பேர வெளிய சொல்லுங்க!
நல்ல சமூக கட்டுரை.
இவர்களுக்கு ஒரே நோக்கம் வியாபாரம்தான்.
//அம்மியில் மசாலா அரைத்து,கல்லுரலில் மாவரைத்து,விறகடுப்பில் சமைத்து தன் கையே தனக்குதவி என்று ஆரோக்கியமாக வாழ்ந்த அந்தக்காலத்திலேயே வாழ்ந்து மடியாமல் மின்சாரசாதனங்களை நம்பி வாழ்ந்து அவஸ்தை பட்டுக்கொண்டிருக்கிறோமே என்கின்ற அளவுக்கு வெறுப்புத்தான் மிஞ்சுகின்றது.//
முத்தாய்ப்பாய் சொன்னீங்க.
சூப்பரான பதிவு ஸாதிகா அக்கா,
ஓவ்வொரு இடுகையும் நல்ல ஆராய்ந்து பயனுள்ளதாக போடுகிறீர்கள்.
மிகவும் நல்ல பகிர்வு...எழுதியதின் நோக்கம் வரிகளில் தெளிவாய் இருக்கிறது...படிப்பவர்களுக்கு நல்ல பயனுள்ள கட்டுரை..வாழ்த்துக்கள்...தொடருங்கள்...
நன்றி ஸ்டார்ஜன் .இந்த நிறுவனங்களின் படுத்தலில் குமுறிப்போய்த்தான் கொட்டித்தீர்த்தேன்.
முதல் வருகைக்கு நன்றி தமிழன்.//பொதுவாக LG நிறுவன தயாரிப்புகள் இதற்கு முன்னோடியாக உள்ளன.//:-(ஒரு உதாரணத்திற்கு சொல்லுகின்றேன்.ஒரு ஸ்பிலிட் ஏசி 10 நாட்களுக்கு முன் வாங்கினேன்.இன்னர் யூனிட்டில் பிரச்சினை.மறுநாள் புதியதாக கொண்டுவந்து மாட்டினார்கள்.பழைய யூனிட்டை இதுவரை எடுத்து செல்லவில்லை.வீட்டு கட்டிலுக்கு அடியில் இன்னுமும் பத்திரமாக உள்ளது.எனது பல போன் கால்களுக்குப்பிறகும் இதுவரை வரவில்லை.பார்ப்போம் .இந்த பின்னூட்டங்களுக்கு பின்னராவது வந்து எடுத்து செல்கின்றார்களா என்று.
//சில brand names உள்ள கம்பனிகளுக்கு எழுதி போட்டால், உடனே நடவடிக்கை எடுக்க சொல்லி retailers க்கு வார்னிங் அனுப்புவார்கள்//
விற்றதோடு retailers வேலை முடிந்து விட்டது.இனி சர்வீஸ்க்கு எல்லாம் நிறுவனம் ஏற்பாடுசெய்து இருக்கும் கால் செண்டரை அணுகி புகார் செய்தால்தான் அவர்கள் மெக்கானிக்கை அனுப்பிவைக்கிறார்கள்.அதில்தான் இந்த குளறுபடி.கருத்துக்கு மிக்க நன்றி சித்ரா.
எல்கே//கால் சென்டர் பாவம்ங்க. அவங்க கொடுத்த வேலைய மட்டும்தான் செய்ய முடியும்// கரெக்டாக சொன்னீர்கள்.நன்றி
உங்களுக்கும் இந்த அனுபவம் நிறைய இருக்கா ஜெய்லானி! கருத்துக்கு மிக்க நன்றி.
மேனகா கருத்துக்கு நன்றி.
வானதி கருத்துக்கு நன்றி.
பட்டாபட்டி தங்கள் கருத்துக்கு நன்றி.
வடுவூர்குமார் கருத்துக்கு நன்றி.
ஷஃபி கருத்துக்கு நன்றி.//என்னைக் கேட்டால் AMC வேண்டாம் என்றே சொல்லுவேன்//இந்த முடிவைத்தான் எடுக்கவேண்டும் போலும்.
//சொன்னதை சொல்லும் கிளிப் பிள்ளைகள் இவர்கள்.அந்த அளவுக்கு பக்கா ட்ரெயினிங்//கரிசல்காரன் சரியாக சொன்னீர்கள் .கருத்துக்கு நன்றி.
மின்மினி,கருத்துக்கு நன்றி.
//ஆனா, ரிப்பேராச்சுன்னா, கடைக்காரங்களக் கூப்பிடாம, நமக்குப் பழக்கமான எலெக்ட்ரிஷியன்களைக் கூப்பிட்டுக்குறது நல்லதுன்னு உங்க அனுபவத்துலருந்து புரிஞ்சுகிட்டேன்!!//ஹுசைனம்மா அவர்களிவிட இவர்கள் இன்னும் மோசம்.என்ன ரிப்பேராக இருந்தாலும் சற்று அதிகமாக சார்ஜாக இருந்தாலும் கம்பெனியை அணுகிணால்த்தான் பெர்ஃபெக்டாக இருக்கும்.ஆனால் அவர்கள்தான் இப்படி சர்வீஸில் படுமோசமாக இருக்கின்றார்கள்.
சவுந்தர்,முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.
//ஸாதிகா அப்பாடா,என்று தணியும் இந்த கோபம் - என்று சொல்கிற அளவிற்கு உங்கள் பதிவுசூடு பறக்கிறது.//ஆசியா பின்னூட்டம் கண்டு சிரித்துவிட்டேன்.நன்றி தோழி.
அதிரா,பின்னூட்டம் இடாமல் ஆஜர்மட்டும் ஆகிவிட்டீர்கள்.ஒகே.நன்றி,நன்றி.
மங்குனி சார்//எங்க வீட்டு காரம்மா கிட்ட சொல்லிராதிக, அப்புறம் செருப்படி vilum )// இதெல்லாம் கூட உண்டா?குட்.கருத்துக்கு நன்றிங்க ஐயா.
//ஐயோ அக்கா...என் பின்னுட்டம் காணாம போச்சு...ஆரோ சதி...பண்ணிடாங்க..//அப்ப்ப்ப்பாஆஆஆ..சீமான் கனிதம்பி காது செவிடாகி விட்டது.நன்றிங்கோ
கீதா ஆச்சல் கருத்துக்கு நன்றி.நீங்கள் வசிக்கும் இடத்தில் இப்படிப்பிரச்சினை எல்லாம் இருக்காது என்று நினைக்கிறேன்.
அஹ்மது இர்ஷாத்,கருத்துக்கு நன்றி.விருது வழங்கியமைக்கு மகிழ்ச்சி.நன்றி.
//நம்மூரில் கூட்டம் சேர்த்தா தான் காரியம் நடக்கும்.//உண்மைதான் அக்பர்.கருத்துக்கு நன்றி.
நாஸியா,கஷ்ட்டப்பட்டு பிளாக்கை ஒப்பன் செய்து பதிவைபடித்துவிட்டு பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி.எப்பொழுது ஊருக்கு?
சற்குருசபா,முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
நிஜாமுதீன்.கருத்துக்கு மிக்கநன்றி.
ஜலி,கருத்துக்கு நன்றி.
கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி கமலேஷ்.
Post a Comment