October 16, 2011

சபாஷ்...சரியான போட்டி

ஆபிதா பேக‌ம் (சுயே)ஆத‌ரவு - ம‌க்க‌ள் ந‌ல‌ பாதுகாப்பு க‌ழ‌கம்

எனது அன்புக்கும் ,மரியாதைக்கும் உரித்தான அன்பு ஆபிதா டீச்சர்.முப்பத்தி எட்டு வருடங்களாக ஆசிரியைப்பணியில் செவ்வன பணியாற்றி ஓய்வு பெற்றவர்.சமூக ஆர்வலர்.கனிவும்,பணிவும்,பொறுமையும் மிக்கவர்.



தாஜுன்னிசா (திமுக‌)

இனிய நண்பி.வாணியம்பாடி மதராஸவில் ஆலிமா பட்டம் பெற்றுள்ளார்.கீழக்கரை அனைத்து பெண்கள் மதரஸாக்களின் தலைவியாக உள்ளார். சமூக சேவையில் ஆர்வமுள்ள இவர் ஹமீதிய மெட்ரிக் பள்ளியின் பெற்றோர் கழக உறுப்பினராக உள்ளார்.

ராபிய‌த்துல் காத‌ரியா(அதிமுக)
மெஹ‌ர் பானு(சுயே)ஆதரவு - தமுமுக மற்றும் அனைத்து சமுதாய தேர்தல் பணி குழு

ஆமீனத்துல் பஸ்ஸரா (காங்)

ஜீனத் மரியம் (தேமுதிக)

ஆயிச‌த் (சுயே)

ர‌ஹ்ம‌த் நிஷா(புதிய‌ த‌மிழ‌க‌ம்)


மெஹ‌ர் நிஷா(சுயே)

க‌திராயி(சுயேட்சை)

கீழக்கரை நகராட்சி தலைவர் வேட்பாளராக என்றுமில்லாத அதிசயமாக பத்துப் பெண்கள் போட்டியிடுகின்றனர்.அதில் அநேகர் பாரம்பர்யமிக்க குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.முக்கியமாக எனது நண்பியும் எனது ஆசானும் போட்டியில் கலந்து கொண்டிருக்கின்றனர்.அனைவரது படங்களும்,விபரமும் உங்கள் பார்வைக்காக‌ இங்கே தரப்பட்டுள்ளது.பொருத்து இருந்து பார்க்கலாம்.யார் ஜெயிக்கின்றார்கள் என்று.


படங்கள் உதவி:கடலோசை

23 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

சபாஷ்! எல்லாக்கட்சிகளிலும், சுயேட்சையாகவும் உங்களுக்கு அறிமுகம் ஆன பிரபலங்கள்.

யார் ஜெயித்தாலும் உங்களுக்கு எதற்கும் இனி கவலை இல்லை. வாழ்த்துக்கள்.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Happy to know that Ur one of ur friends will be winning the Election soon Akka.

Yaathoramani.blogspot.com said...

அனைவரையும் படத்துடன் அருமையாக
அறிமுகம் செய்து வைத்துள்ளீர்கள்
மக்கள் என்ன நினைக்கிறார்களோ
சில நாட்களில் தெரிந்துவிடும்
நடு நிலையான பதிவு தந்தமைக்கு
வாழ்த்துக்கள் த.ம 1

Jaleela Kamal said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்
ஸதிகா அக்கா
நான் கடைசியில் உங்க போட்டோவும் வந்து நீங்களும் இருக்கீங்கலோன்னு நினைத்தேன்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

பெண்கள் தேர்தலில் போட்டியிடுவது வரவேற்கத்தக்கது. பொதுவாழ்க்கையில் பெண்கள் வருகை தொடரட்டும். எங்க பகுதி கவுன்சிலர் வார்டு பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நிறைய பெண்கள் அதிலும் குறிப்பா என் நண்பனின் மனைவி போட்டியிடுகிறார். இறைவன் அருளால் வெற்றி பெறவேண்டும். பொறுத்திருந்து பார்ப்போம்.

ஜெய்லானி said...

நான் யாருக்கு ஓட்டு போடன்னு நீங்க சொல்லவே இல்லையே :-)))

ஜெய்லானி said...

இந்த பத்து பேரும் ஜெயிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...!!! :-))

((யாரையும் தனியா பிரிக்க விரும்பல ஹி...ஹி... )))

ஜெய்லானி said...

அடுத்த எலெக்‌ஷன்ல உங்களையும் எதிர் பார்க்கலாமா..!!! :-))

ஜெய்லானி said...

இந்த பத்து பேரும் ஜெயிக்க அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ...!!! :-))

((யாரையும் தனியா பிரிக்க விரும்பல ஹி...ஹி... )))

Asiya Omar said...

தோழி நீங்களும் வருங்காலத்தில் அரசியலில் நுழைய வாய்ப்பிருக்கிறதா?
பொறுத்திருந்து பார்ப்போம்,வெற்றி யாருக்கு என்று.நல்ல அறிமுகங்கள்..வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

என்ன ஸாதிகா அக்கா... அரசியலுக்குள்ளும் போயாச்சோ அவ்வ்வ்வ்வ்:)))..

தலைவி ஸாதிகா வாழ்க.....

என்ன இது நான் மட்டும்தான் கோஷம் போடுறேன்....

முற்றும் அறிந்த அதிரா said...

எலக்‌ஷன் வரப்போவதால ஜெயா ரீவியை நிறுத்தி ஏதும் வச்சிருக்கினமோ? ஏதாவது தெரியுமா ஸாதிகா அக்கா, அதுபற்றி?:)).

கீழக்கரைக்காக, யார் உண்மையிலேயே நல்லது செய்வார்களோ, அவர்கள் வின் பண்ணட்டும்.

கோமதி அரசு said...

எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

ஹுஸைனம்மா said...

அறிவிப்புகள் வெளியானதுமே பார்த்தேன், கீழக்கரையில் இத்தனை பெண்கள் நிற்கிறார்களா என்று நிறைய ஆச்சர்யம். நல்லது நடக்கட்டும்.

vanathy said...

பெண்கள் வந்தால் ஊழல் குறையும் என்று நினைக்கிறேன். எல்லோருக்கும் வாழ்த்துக்கள்.

Menaga Sathia said...

அனைவருக்கும் வாழ்த்துக்கள்!!

Thenammai Lakshmanan said...

அட்டகாசம் போங்க.. நீங்க எப்போ?..:)

ஸாதிகா said...

கருத்திட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்!

MyKitchen Flavors-BonAppetit!. said...

Madam,Unga friend Win panitanga illaiya.Congrats To her.Thanks for stopping at my space.

Chitra said...

Best wishes!

M.R said...

யார் ஜெயித்தார்கள் சகோ ?

தீபாவளி நல் வாழ்த்துக்கள்

அன்பு உலகம் வந்து கருத்திட்டதர்க்கு நன்றி சகோ

Admin said...

யார் ஜெயித்துன்னு சொல்லல்லியே ?

ஸாதிகா said...

M.R said...
யார் ஜெயித்தார்கள் சகோ ?

கறுவல் said...
யார் ஜெயித்துன்னு சொல்லல்லியே ?

அ.தி.மு.க கட்சியைச்சேர்ந்த ராபியத்துல் காதரியா என்பவர் இப்பொழுது கீழக்கரை நகராட்சியின் தலைவராக இருக்கின்றார்.

கருத்திட்ட உள்ளங்களுக்கு அன்பு நன்றி.