October 4, 2011

என் வீட்டுத்தோட்டத்தில்...

ராட்சச வளர்ச்சி என்பார்களே.அது தான் இது போலும்.ஒரு சாண் அளவில் செடியாக நட்டு வைத்தது.நாலே வருடத்தில் மொட்டைமாடியை விட உயரமாக வளர்ந்து விட்டது.முன்னர் தென்னை மரங்கள்,வேம்பு,கொய்யா,நெல்லி என்று பலவித மரங்கள் வீட்டை சுற்றிலும் இருந்தன.வீடு கட்டும் பொழுது அத்தனை மரங்களையும் வெட்டும் கட்டாயம்.மரங்களை வெட்டிய பொழுது எதிர்வீட்டுத்தோழி அழாத குறைதான்.உங்கள் வீட்டு மரங்களை பார்த்துக்கொண்டிருந்தால் பிளஸண்ட் ஆக இருக்குமே!அத்தனையும் வெட்டி சாய்த்து விட்டீர்களே என்று புலம்புவார்.எனக்கும் வேம்பு மீது எப்பொழுதும் விருப்பம்.மற்ற மரங்கள் வளர்க்க முடியாவிட்டாலும் வேம்பையாவது வைக்கலாம் என்று காம்பவுண்ட் ஓரமாக வைத்தது இப்பொழுது அகலமான தெருவையே அடைத்துக்கொண்டு வளர்ந்துள்ளது.எங்கள் ஏரியாவில் மாமரங்களும்,வேப்பமரங்களும்,தென்னைமரங்க்ளும் அதிகம்.எங்கு பார்த்தாலும் இந்த மரங்களை காணலாம்.கிரேட்டஸ்ட் வேம்புமரம் என்றால் அது எங்கள் மரம்தான்.அத்தனை பெரீஈஈஈய மரம்.

குட்டியாக கருவேப்பிலை செடி.இது ஒன்றுதான் கிச்சன் செடி என்றுள்ளது.பூஸின் கார்டன் பார்த்து விட்டு இங்கு வளரும் தக்காளி,கத்தரி,பாகல்,அவரை போன்றவை நடவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.(காய் செலவையும் மிச்சம் பிடிக்கலாமே.)


இது ஒரு அலங்காரச் செடி தான் ..மெலிதான இலைகளுடன் பார்க்க அழகாக இருக்கும்.அநேகமாக குரோட்டன்களின் பெயர்கள் நிறையத்தெரியாது.தெரிந்தவர்கள் பின்னூட்டினால் இணைத்துக்கொள்வேன்.
பெரிய பெரிய இலைகளுடன் உள்ள குரோட்டன்.எண்ணி மூன்று நாண்கு இலைகளுக்கு மேல் வரவே வராது.அப்படி வந்தாலும் சீக்கிரத்தில் சருகாகிப்போகாது,எனது பேவரிட் செடி இந்த கலேடியம். இதில் பல கலர் / டிசைன் இலைகள் உள்ள விதங்கள் உண்டு. அதிகம் காணக் கிடைப்பது bleeding heart.

வயலட் நிறப்பூக்களுடன் அழகாக காணப்படும் செடி.ஈஞ்சம்பாக்கம் நர்சரி சென்று இருந்த பொழுது பூக்களுக்காக வாங்கியது.

தடிமனான இலைகளுடன் குட்டி குட்டி பின்க் வர்ண பூக்களுடன் கூடிய பால்சம் இனத்தை சேர்ந்த பூஞ்செடி வகை.

ஊட்டியில் இருந்து என் மகனின் நண்பரொருவர் பதியன் போட்டு பிளாஸ்டிக் கவர்களில் கொணர்ந்து தந்த பாம் செடி.ஆறுசெடியில் மூன்றுதான் இன்று மிச்சம்.தரையில் நட்டால் மரம் போன்று பெரிதாக வளர்ந்து விடும்.ஆனால் அழகு போய் விடும்.இது பூந்தொட்டியில் வளர்வதே அழகு.

ஒரு கோணம்
இதுவும் ஒருவகை க்ரோட்டன் தான்.ரொம்ப டல் லுக் தருது இல்லை.நேரில் பார்த்தால் அழகாக இருக்கும்.
என்னதான் குட்டிகரணம் போட்டாலும் பூக்கவே மாட்டேன் என்று அழிச்சாட்டியம் பண்ணும் பொல்லாத ரோஜா செடிகள்.பின்க்,வெள்ளை,சிகப்பு,மஞ்சள் என்று கலர் கலராக வாங்கி வைத்தேன்.பிளாஸ்டிக் கவரில் இருக்கும் பொழுது ரோஜா மலர்ந்ததோடு சரி.
மற்றொரு கோணம்
அழகான க்ரோடன் வகை

மணிப்பிளாண்ட்.பசேல் எனற இலைகளுடன் கும் என்று வளரக்கூடியது.மணி பிளாண்ட் வளர்த்தால் நிறைய பணம் சேரும் என்கின்றார்கள்.ஆனால் அது எல்லாம் மூட நம்பிக்கை என்று நம்புபவள் நான்.வெறும் அழகுக்காகவே மட்டும் வளர்க்கின்றேன்.இதனை இண்டோர் பிளாண்டாகவும் வளர்க்கலாம்.ஆனால் என் பேரக்குட்டி வில்லனாச்சே.

இது காக்டஸ்.ஒரே ஒரு செடியை நட்டு வைத்தால் அப்படியே பல பல செடிகளாக குட்டி போட்டு விடும்.பார்க்க அழகாக இருக்கும்.

வீட்டு முகப்பில் வைத்திருக்கும் செம்பருத்தி,மல்லிகை ரோஜா,இன்னும் சில வகைகள்.
இதுவும் ஒரு பகுதியில்
பறிப்பாரின்றி மல்லிகைகள் மலர்ந்து சிரிப்பதை பாருங்கள்.அதுப்போல் சிகப்பு செம்பருத்தியும் சீஸனில் ஒரே செடியில் பத்து பனிரெண்டு பூக்கள் மலரும் பொழுது அழகாக இருக்கும்.
குபீர் என்று வளர்ந்திருக்கும் பெரீஈஈய செடிவகை.நீள நீளமான பூக்களுடன் முட்கள் நிறைந்தது
கண்ணைக்கவரும் டார்க் பர்ப்பிள் நிற க்ரோட்டன் வகை..ரொம்ப அழகாக இருக்கும்.இதில் பச்சை,மஞ்சள் என்று அழகான வண்ணங்கள் உண்டு.நம்ம பூஸார் தோட்டத்தில் பூஸ் நின்று இருந்தால் அப்படியே போட்டோ எடுத்துப்போடுங்கள் என்று ஆர்டர் போட்டு இருந்தார்.ஸாதிகாவின் கார்டனுக்குள் பூஸாவது வருவதாவது,என்னை கண்டால் பதினாறு கால் பாய்ச்சலில் ஓடோடி விடும்.ஹ்ம்ம்ம்ம்ம்.....இந்திய பூஸுக்குகெல்லாம் அக்காவைக்கண்டால் பயமாக இருக்கும்.ஆனால் இந்த பிரித்தானியா பூஸ்தான் நமக்கே தண்ணீர் காட்டுகின்றது.

பூஸாரின் கட்டளைக்கிணங்கி நேற்று முழுக்க கேமராவும் கையுமாக வீட்டை சுற்றி சுற்றி வந்ததில் பக்கத்து விட்டுக்கும்பக்கத்து வீட்டின் பாசேஜில் முதுகை காட்டிக்கொண்டிருந்த பூஸ் கண்ணில் மாட்டியது.அப்படியே ஜூம் செய்து கிளிக்கியது இந்தப்படம்.அதீஸ் எஞ்ஜாய்.


85 comments:

athira said...

ஸாதிகா அக்கா..... வந்திட்டேன்.... எனக்குத்தான் வடேஏஏஏஏஏஏஏஏஏஏ:))

athira said...

இவ்ளோ பெரிய இடத்தோட கார்டினும் குரோட்டனும் வச்சுப் பராமரிக்கிறீங்க, மரக்கறி வைக்காமல் இருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)).

சூப்பராக நிறைய குரோட்டன்ஸ் இருக்கு ஸாதிகா அக்கா.

athira said...

வேம்பை பார்க்கவே ஆசையாக இருக்கு. நல்ல வெயில் நேரத்தில் கீழே இருந்தால் எவ்வளவு சூப்பராக இருக்கும். அதில் ஒரு ஊஞ்சல் கட்டி உங்க வீட்டுக் குட்டியை ஆட விடலாமே.

//அழகான க்ரோடன் வகை//
இதில் முதலாவது படம் மணிப்பிளாண்ட் எனச் சொல்வது, அது குரோட்டன் அல்ல. அதை ஒரு சாடியில் நட்டு மதிலில் அல்லது வீட்டின் வெளிச்சுவரில் தொங்க விட்டீங்கள் என்றால்.. அப்படியே கீழே தொங்கி வளரும்.. பார்க்க சூப்பராக இருக்கும்.

athira said...

மூன்று இலைகளுடன் இருப்பது... அது குட்டி போட்டு வளருமெல்லோ.. அதை ஊரில் யானைக்காது எனச் செல்லமாகவும் உண்மையாகவும் அழைப்பதுண்டு:)). அவர் அப்பூடித்தான் இருப்பார்.

athira said...

உங்கட மண் வெள்ளை மணலோ? பார்க்க ஆசையாக இருக்கு. ஆனா மணலில் மரக்கறி பெரிதாக நன்கு வளருமோ தெரியாது, சாடியில் முதலில் கத்தரி வெண்டி நட்டுப்பாருங்கோவன்.

இப்பவே சமைக்க வைத்திருக்கும் வெங்காயத்தை எடுத்துப்போய் ஒரு கொஞ்ச இடத்தில வேர் கீழ ருனி மேலால இருக்க தாட்டு தண்ணி ஊத்திடுங்க. 3 மாதத்தில் வெங்ங்ங்ங்ங்ங்காயம் வந்திடும்ம்ம்ம்ம்ம். எனக்கு வெங்காயத்தை விட அதன் தண்டில், பூவில் சுண்டல் செய்யத்தான் விருப்பம், அதனாலேயே நடுவது.

athira said...

மல்லிகை சூப்பர்.... நல்ல வாசமாக இருக்குமே. ரோஜா நடுவதில்லையோ?..

“மல்லிகை புதரில் பூத்தாலும், அதன் மணம் வெளியே பரவாது விட்டுவிடுமோ?”

எங்கோ படித்த வசனம்.

athira said...

உஸ்ஸ்ஸ்ஸ் பொயிண்ட்டுக்கு வந்தாச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்...

அனைத்திலுமே பூஸார்தான் கலக்கல்... தேடிப் பிடிச்சிட்டீங்களே...ஹா..ஹா..ஹா..

பார்க்கவே தெரியுது. உங்களுக்குப் பயத்தில ஓடி ஒளிக்கிறார் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) பூஸைத் துரத்தாதீங்க இனிமேல் ஓக்கை:)))).

எனக்கு ரைமாகிட்டுது, கடகடவென இவ்வளவு பின்னூட்டமும் போட்டேன் எழுத்துப் பிழையிருப்பின்.... மன்ன்ன்ன்ன்ன்:))).

சீயா மீயா.

நட்புடன் ஜமால் said...

Violet & Dark Purple are more nice

:)

asiya omar said...

சூப்பர்.தோட்டம் மிக்க அழகு.கிட்ட தட்ட எங்க வீட்டு தோட்டம் போல இருக்கு.நல்ல மெயிண்டெய்ன் செய்திருக்கீங்க தோழி.

MANO நாஞ்சில் மனோ said...

வாஆஆஆஆஆஆஆஆஆஅவ் அசத்திட்டீங்க போங்க, நீங்கதான் பசுமை தாய் வாழ்த்துக்கள்....!!!!

MANO நாஞ்சில் மனோ said...

வீட்டில் வேம்பு வளர்த்தால் நோய்கள் அண்டாது என் சொல்வார்கள், எங்கள் வீட்டிலும் ஒன்று நின்றது, 25 வருஷமாக, அதை பார்த்தாலே மனசுக்கு சந்தோஷமா இருக்கும். ஆனால் இந்தமுறை லீவுக்கு போகும் போது அந்த மரத்தை காணோம், கேட்டதுக்கு எங்க அம்மா சொன்னார்கள் மரத்தின் வேர்கள் வீட்டு சுவரில் விரிசல் விழ வைக்கிரதுன்னு வெட்டிட்டோம்னு சொன்னாங்க. ரொம்ப கோபப்பட்டேன் எனக்கு யாரோ இறந்த மாதிரி ஃபீலிங் ஆகிருச்சி....!!!

MANO நாஞ்சில் மனோ said...

மரம் செடி கொடிகள் வளர்ப்பது, இதயத்துக்கு நல்லதாம் ஆராய்ச்சி சொல்லுது, ஸோ யு ஆர் கிரேட்...!!!!

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா நான் அங்கு வந்த போது இதேல்லாம் காண்பிக்கவே இல்லை/எனக்கும் ரொம்ப ஆசை ஆனால் ஒன்றும் முடியாது இங்கு .இப்போதைக்கு என்ன்னை சுற்றி வீட்டிலும் ஆப்ஸிலும் மணி பிளாண்ட் மட்டும் தான்

மாய உலகம் said...

சபாஷ் சரியான போட்டி... கேமராவ ரோசத்தோட எடுத்து பின்னி பெடலுடுத்துட்டீங்க... இருங்க செடிகளை பாத்துட்டு வாரேன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்

மாய உலகம் said...

வேம்பு மரம்... உண்மையில் ஆரோக்கியத்துக்கு நல்லது... அது முதல் படம்... சூப்பர்

மாய உலகம் said...

மரங்களை வெட்டிய பொழுது எதிர்வீட்டுத்தோழி அழாத குறைதான்//

உண்மையிலயே அவங்களுக்கு ரொம்ப நல்ல மனுசுங்க....

மாய உலகம் said...

பூஸின் கார்டன் பார்த்து விட்டு இங்கு வளரும் தக்காளி,கத்தரி,பாகல்,அவரை போன்றவை நடவேண்டும் என்ற ஆவல் எழுந்துள்ளது.//

புஸ் பதிவையும், உங்க என் வீட்டு தோட்டத்தில் பதிவை பார்த்த பிறகு நானும் எங்க வீட்டுல ஒரு செடி தோட்டததை ரெடி செய்து... கேமராவுல வளைச்சு வளைச்சு போட்டோ எடுத்து போட்டியா வருவேன்... என்ன கொஞ்ச நாளாகும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் :-))))))

மாய உலகம் said...

மணிப்பிளாண்ட்.பசேல் எனற இலைகளுடன் கும் என்று வளரக்கூடியது.மணி பிளாண்ட் வளர்த்தால் நிறைய பணம் சேரும் என்கின்றார்கள்//

ஆஹா இப்படி ஒன்னு இருக்கா... பணம் செடியலையே காய்க்கும்னு சொல்லியிருக்காங்களா.... அதுவும் அந்த செடியை சுட்டுட்டு வந்து நட்டா பணம் நெறைய வரும் சொல்லிருக்காங்க... ஒரு வகையில் உண்மை தாங்க... மன ரீதியாக பணம் வரும் பணம் வரும் என்று மனசு நினைக்கும் பொழுது... அதற்கான உழைப்பில் இறங்கிவிடுவோம்... :-)

மாய உலகம் said...

காம்பவுண்ட்க்கு மேல யாரோ உக்காந்துருக்காங்க.... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே .... ஒரு வேளை மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆஆ

இமா said...

ஸாதிகா அக்கா நான் அங்கு வந்த போது இதேல்லாம் காண்பிக்கவே இல்லை. ;)))

மெய்ல் பாருங்க ஸாதிகா.

ஸாதிகா said...

imma imma to me


கறிவேப்பிலைத் தொட்டியில் வேற செடி இருக்கு; அதுவும் கலேடியம். அது அதிகம் சத்துக்களை எடுத்துக் கொள்ளும். இரண்டும் தனியாக இருக்க வேண்டும். கறிவேப்பிலை இந்த அளவு வந்தால் இனி தரையில் வைக்கிறது நல்லது ஸாதிகா. மீன் கழிவுநீர், இறைச்சி கழுவிய நீர் ஊற்றலாம். அந்த கழிவுகளை தாட்டு விடுங்க. மேல ஒரு தொட்டியை வைத்தால் பிராணிகள் கிளறாது. எலி புதைக்கிறதானால் இதனடியில் புதையுங்க. கருவாட்டு மீதி புதைத்தால் நல்லது


கூட இருப்பது கலேடியம். இதில் பல கலர் / டிசைன் இலைகள் உள்ள விதங்கள் உண்டு. அதிகம் காணக் கிடைப்பது bleeding heart.கூட இருப்பது கலேடியம். இதில் பல கலர் / டிசைன் இலைகள் உள்ள விதங்கள் உண்டு. அதிகம் காணக் கிடைப்பது bleeding heart.

உங்கள் கலேடியம் ஆரோக்கியமாகத்தான் இருக்கிறது. ஆனால் கறிவேப்பிலை துணைக்கு இல்லாமல் தனியாக இருந்தால் அதிகம் இலைகள் வந்திருக்கும். இலை இன்னும் பெரிதாகவும் வரும். தொட்டி மண் நிறம் பார்க்க எரு இல்லாத மாதிரித் தெரிகிறது. இது இரண்டு வித செடிகளுக்குமே சரியில்லை. இந்த இரண்டு தாவரங்களுக்குமே எரு நன்றாக இருக்க வேண்டும். கலேடியம் சில இடங்களில் வெயில் காலத்தில் உறங்கி விட்டு பிறகு இலை விடும். கிழங்குகளைக் கத்தியால் துண்டு போட்டால் புதிய தாவரமாக வளரும். இளம் தாவரம் சிறிய இலையோடு இருக்கக்கூடும். பிறகு மெதுவே இலை பெரிதாகும். வீட்டினுள் வைக்க ஏற்றது கலேடியம். வாடிப் போகும் இலைகளை வெட்டி விடுங்கள்.

இது இரவில் weep பண்ணும். (இலை நுனியிலிருந்து ஒரு துளி நீர் வடியும். ;) வெட்டிய தண்டிலிருந்தும் நீர் வடியும். வீட்டின் உள்ளே வைத்தால் நல்ல துணியோடு பக்கத்தில் போய் முட்டிக் கொள்ளாதீர்கள்.)
~~~~~~~~~~~~~~~~~~

Ramani said...

வீட்டை நல்ல ரம்யமான சூழலில்
வைத்திருக்கிறீர்கள்
உங்கள் உழைப்பையும் ரசனையையும்
புரிந்து கொள்ள முடிகிறது
குளுமையான பதிவைத் தந்தமைக்கு
வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

mma imma Tue, Oct 4, 2011 at 2:18 PM
To: shana shana
நடுவில் உள்ளது - பால்சம் இல்லை; ஒருவித கள்ளி. உடைத்தீர்களானால் பால் வரும். செடியில் மெல்லிய முட்கள் இருக்குமே!. பால்சம் நீர்த்தன்மையான தண்டுள்ளது. விதைகள் விழுந்து தோட்டம் முழுவதும் முளைக்க ஆரம்பிக்கும். 'க்ரவ்ன் ஆஃப் தார்ன்ஸ்' (இவற்றிலும் பல வகைகள் இருக்கின்றன.) தண்டுகள் வெட்டி வைப்பதன் மூலம் பயிரிடப்படுகிறது. செடியை விரும்பிய வடிவத்திற்கு வளைத்து வளர்க்கலாம்.
\http://www.guide-to-houseplants.com/crown-of-thorns.html
http://blankees.com/house/plants/crown.htm
~~~~~~~~~~~~~~~
பாம் - என்ன விதமான பால் என்பது படத்தில் பார்த்துச் சொல்ல இயலவில்லை. காய்ந்து போகும் இலைகளை வெட்டி விடுங்கள் ஸாதிகா. (இழுத்துப் பிடுங்க வேண்டாம்.)
~~~~~~~~~~~~~~~~~~~~~`
முடியவில்லை. ;) ஆகவே இப்போதைக்கு சுருக்கமாக
--- http://en.wikipedia.org/wiki/Coleus

இமா said...

;) krrrrrrrrr
நீங்க காப்பி பண்ணினதுல link சிலது மிஸ்ஸிங் ;) பார்த்து போடுங்க ஸாதிகா. ;)

இமா said...

http://en.wikipedia.org/wiki/Caladium


https://www.google.com/search?q=caladium&hl=en&biw=1280&bih=681&prmd=imvns&tbm=isch&tbo=u&source=univ&sa=X&ei=ScuKTvWVEs6jiQf1usHZAw&sqi=2&ved=0CE8QsAQ

ஜெய்லானி said...

ஆஹா....அங்கேயும் தோட்டம் ,இங்கேயும் தோட்டம் ஓகே...!!


ஆசையை கிளப்பிட்டீங்க ஆஃபீஸுக்குள்ளேயே நாலு டைல்ஸ் உடைச்சிட்டு ஏதாவது நட்டிட வேண்டியதுதான்....!! :-))

ஒன்னும் கிடைக்காட்டி டைரக்டா தென்னைமரம்தான் ஹி...ஹி... :-))

ஜெய்லானி said...

//ரொம்ப டல் லுக் தருது இல்லை.நேரில் பார்த்தால் அழகாக இருக்கும்.//

அட்ரஸ் பிளீஸ்....!! :-)))

ஜெய்லானி said...

மரம் ,செடிக்கொடிகள் இருந்தால் சுத்தமான காற்றும் , கண்களுக்கு குளிர்ச்சியும் தாராளமாக கிடைக்கும் :-)

’’சோதிடம்’’ சதீஷ்குமார் said...

தோட்ட செடிகள் பற்றி அருமையான விளக்கம்

கணேஷ் said...

பசுமையான மரம் செடிகளைப் பார்க்கவே பரவசமாக இருக்கிறது. இவற்றை வளர்த்து பராமரிப்பது ரசனைக்குரிய அனுபவமாக இருக்கும். வாழ்த்துக்கள்!

athira said...

ஸாதிகா அக்கா.. இம்முறை நாந்தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஉ... நம்ப முடியல்ல இல்லை:))... முழிச்சிருந்தவங்களே ஓடிவாறதுக்குள் நான் எங்கினயோ கடலுக்காப்பால இருந்து ஓடிவந்திட்டேன் 1ஸ்டா..:)) நாம ஆரூஊஊஉ?:) 1500 மீட்டரில 2வதாக வந்தாளாச்சே.. விடுவமா:)).

வை.கோபாலகிருஷ்ணன் said...

பச்சைப்பசேலென்று கண்களுக்குக் குளுமையான பதிவு.

நன்கு தோட்டத்தை அழகாகப் பராமறிக்கிறீர்கள்.

மனமார்ந்த பாராட்டுக்கள்.

athira said...

//இந்திய பூஸுக்குகெல்லாம் அக்காவைக்கண்டால் பயமாக இருக்கும்.ஆனால் இந்த பிரித்தானியா பூஸ்தான் நமக்கே தண்ணீர் காட்டுகின்றது.//

ஹா..ஹா..ஹா... பூஸோ கொக்கோ:))).. உஸ் என்றுமுன், உச்சிக்குப் போயிடுவமில்ல:)).

//மாய உலகம் said...
காம்பவுண்ட்க்கு மேல யாரோ உக்காந்துருக்காங்க.... எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே .... ஒரு வேளை மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆ//

மியாவ்வ்வ்வ்வ்வ்வ்.... பிரித்தானியால மட்டுமில்ல இந்தியாலயும் கலக்கிறமில்ல:)))... மாயா உங்க தோட்டப் படம் போடாவிட்டாலும் பரவாயில்லை:)), முன்வீட்டுப் பின் வீட்டுப் பூஸ் எல்லாம் ஓடி ஓடிப் படம் புடிச்ச்ச்ச்ச்ச்சூஊஊஊஊப் போடுங்க:))))))

athira said...

//இமா said...
ஸாதிகா அக்கா நான் அங்கு வந்த போது இதேல்லாம் காண்பிக்கவே இல்லை. ;)))
///

ரொம்ப முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..
ஸாதிகா அக்கா நான் வரும்போது உங்க்ட கார்டினையும் அந்த கறுப்பூப் பூஸாரையும் காட்டுங்கோ ஓக்கை?:)))))

athira said...

//ஜெய்லானி said...

ஒன்னும் கிடைக்காட்டி டைரக்டா தென்னைமரம்தான் ஹி...ஹி... :-)//

வாணாம் வாணாம் ஒரு குட்டிப் புளியமரம்... ஆபீஸூஊஊஊஉ ஜன்னல்ல நடச்சொல்லுங்கோ ஸாதிகா அக்கா:))))))).

S.Menaga said...

ஆஹா அக்கா உங்க தோட்டம் சூப்பர்ர்..எனக்கு எப்போ இந்த தோட்டம் ஆசை நிறைவேறும்னு தெரியலையே?? செடி வளர்ப்பது கூட பெரிய வேலையில்லை அதை ஒழுங்கா பராமரிப்பதுதான் சிரமம்...ம்ஹூம் பெருமூச்சுதான்..வேறஒண்ணுமில்லை.உங்க தோட்டத்தை பார்த்துக்கிட்டே இருக்கலாம்போல இருக்கு!!

angelin said...

அக்கா தோட்டம் அழகா இருக்கு .என் தங்கை பார்த்தா விட மாட்டா.
அவளும் வித விதமா பூ மரம் எல்லாம் வச்சிருக்கா .ஆசைப்பட்டு துளசி விதை எடுத்து வந்தேன் .இன்னும் போடல்ல .பனை மரம் தங்கச்சி தெரியாம
தரையில் நாட்டு இப்போ பெரிய மரமாகி நிக்குது .

angelin said...

இங்கே இங்க்லன்ட்ல ரோஜா பூக்கும் ஆன்னா நம்மூர் ரோஸ் மாதிரி வாசமிருக்காது

vanathy said...

சூப்பர் தோட்டம். பூஸின் கார்டனை விட அழகா இருக்கு ( படிச்சதும் கிழிச்சிடுங்கோ ). வேப்பமரம் எனக்கும் மிகவும் பிடிக்கும்.

enrenrum16 said...

முதல்ல மாஷா அல்லாஹ்....
அம்மாடீ..... எல்லா செடிகளும் அழகோ அழகு... ரொம்ப நல்லா பராமரிக்கிறீங்க.... வாழ்த்துக்கள். மணி ப்ளான்ட், கருவேப்பிலை, வேப்பமரம்,bleeding heart, croton, எல்லாமே சூப்பர் போங்க...

டல் லுக்கா..அப்படியெல்லாம் சொல்லாதீங்க croton கோச்சிக்கப்போகுது ;-)... it's also super...

முதல்ல சுத்திப் போடுங்க... ஆமா சொல்லிட்டேன்.;-)

தேனம்மை லெக்ஷ்மணன் said...

தோட்டம் மிக அருமை ஸாதிகா..:) பசுமைத்தாய் பட்டம் அளித்த நாஞ்சில் மனோ வாழ்க.:)

Lakshmi said...

உங்கட தோட்டதுக்கே வந்து சுத்திப்பாத்தமாதிரி இருக்கு. தெளிவான படங்கள் விலக்கம் எல்லாமே நல்லா இருக்கு.

ஸாதிகா said...

அதீஸ் வடையும் உங்களுக்கே.செடியில் பூத்திருக்கும் மல்லிகைப்பூவும் உங்களுக்கே.

//மரக்கறி வைக்காமல் இருக்கிறீங்க அவ்வ்வ்வ்வ்:)).//

பாருங்கோ,இன்னும் கொஞ்ச காலம் கழித்து எங்கள் வீட்டு கிச்சன் கார்டன் என்று போட்டோவுடன் பதிவிடுகின்றேன்.:-)


உண்மைதான் இமா அனுப்பித்தந்த லின்கில் அதனை தமிழில் யானைக்காது என்று அழைப்பார்கள் என்றுள்ளது நல்ல பொருத்தமான பெயர்தான்.

ஸாதிகா said...

இங்குள்ள மனல் வெள்ளைதான்.கூடவே செம்மண்ணும்,உரமும் கலக்கவேண்டும்.கண்டிப்பாக உருளைபோன்ற காய்கள் வராது.நீங்கள் கூறிய முறையில் வெங்காயம் நடுகின்றேன்.நன்றி அதிரா.

// ரோஜா நடுவதில்லையோ?..//ஏன் நடவில்லை.மஞ்சள்,சிகப்பு வெள்ளை பின்க் என்று நட்டுள்ளேன்.பூக்காமல் காலை வாருகின்றது:-(

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ ஜமால்.

ஸாதிகா said...

அடுத்த முறை ஊருக்கு வரும்பொழுது உங்கள் வீட்டு தோட்டத்தியும் எங்களுக்கு காட்டுங்கள் ஆசியா.

athira said...

// vanathy said...
சூப்பர் தோட்டம். பூஸின் கார்டனை விட அழகா இருக்கு ( படிச்சதும் கிழிச்சிடுங்கோ ). வேப்பமரம் எனக்கும் மிகவும் பிடிக்கும்//

அமெரிக்காவுக்கு பிரித்தானியா எலிசபெத் குயினைக்:)) கண்டாலே புகைப்புகையாப் போகுதூஊஊஊஊஊஊஊஉ:))).. ஹையோ ஸாதிகா அக்கா படிச்சதும் கிழிச்சிட்டு எரிச்சிடுங்க:)), ஒட்டிப்போட்டுப் படிக்கக்கூடிய ஆட்கள்:)) நான் முருங்கில இருப்பதைக் காட்டிக் குடுத்திடாதையுங்கோஓஓ.. ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ.... இது எக்கோ:))).

ஸாதிகா said...

//நீங்கதான் பசுமை தாய் வாழ்த்துக்கள்....!!!!//மனோ சார் பெரிய வார்த்தை எல்லாம் சொல்லுறீங்களே.பசுமைதாயகம்ன்னு கேள்விப்பட்டுள்ளேன்.பசுமைதாய் இப்பதான் கேள்விப்படுகின்றேன்.

வருடக்கணக்கா இருக்கும் மரம் திடுமென வெட்டப்பட்டால் மனசு மிகவும் கஷ்டமாகத்தான் இருக்கும்.உங்கள் தாயார் சொல்வதிலும் உண்மை உள்ளது.காமபவுண்ட் தரை,மதில் எல்லாம் வீணாகும்தான்.

//மரம் செடி கொடிகள் வளர்ப்பது, இதயத்துக்கு நல்லதாம் ஆராய்ச்சி சொல்லுது,//ஓ..இப்படி வேறு இருக்கா?கேட்கவே சந்தோஷமாக உள்ளது.மிக்க நன்றி மனோ சார்.

ஸாதிகா said...

//நான் அங்கு வந்த போது இதேல்லாம் காண்பிக்கவே இல்லை//

ஜலி நீங்கள் வந்ததோ இரவு எட்டு மணிக்கு மேல்.இந்த கார்டனில் பாதியைத்தாண்டிதான் வீட்டுக்குள் வந்திருப்பீர்கள்.பின்னூட்டலுக்கு நன்றி ஜலி/

ஸாதிகா said...

//சபாஷ் சரியான போட்டி... கேமராவ ரோசத்தோட எடுத்து பின்னி பெடலுடுத்துட்டீங்க...// ஹா ஹா..நீங்களும் சீக்கிரம் தோட்டத்தை உண்டு பண்ணி சீக்கிரம் பதிவைப்போடுங்கள் ராஜேஷ்.

//உண்மையிலயே அவங்களுக்கு ரொம்ப நல்ல மனுசுங்க....//ஏங்க அப்ப எங்களுக்கெல்லாம் என்ன மனசு?

// அதற்கான உழைப்பில் இறங்கிவிடுவோம்... :-)//அட இடு கூட நல்லா இருக்கே!வாழ்க வளமுடன் ராஜேஸ்.

ஸாதிகா said...

இமா,உடனுக்குடன் நீள நீளமாக மெயில் செய்து என்னை உற்சாகப்படுத்தியதில் இன்னும் ஒரு டசண் தொட்டிகள் வாங்கி பயிர் செய்ய வேண்டும் போலுள்ளது.தோட்டக்கலை மீது இத்தனை ஆர்வமும்,நுண்ணியமான கணிப்பும் என்னை ஆச்சரியப்பட வைத்தௌ.இனி தோட்டத்து ஆலோசனைக்கு குரு நீங்கள் தான்.நான் சந்தேகம் கேட்டு மெயில் செய்தால் பீஸ் இல்லாமல் டியூஷன் எடுப்பீர்கள் என்று நம்புகின்றேன் இமா.நன்றி

ஸாதிகா said...

//ஸாதிகா அக்கா நான் அங்கு வந்த போது இதேல்லாம் காண்பிக்கவே இல்லை. ;)))//என்னாதூஊஊஊஊ அக்காவா?இமாஆஆஆஆஆ...

ஸாதிகாவைப்பார்க்கும் ஆவலில் தாண்டி வந்த காரடனை பார்க்கத்தவறி விட்டீர்கள் இமா.அடுத்த முறை வாருங்கள்.

ஸாதிகா said...

//
ஒன்னும் கிடைக்காட்டி டைரக்டா தென்னைமரம்தான் ஹி...ஹி... :-))//ஜெய்லானி அதிரா புளிய மரத்தில் ஏறச்சொல்கின்றார்களே.

//
அட்ரஸ் பிளீஸ்....!! :-)))//என்னாதூஊஊஊ..அட்ரஸா...வச்சிட்டாய்ங்களே ஆப்பூஊஊ...

பின்னூட்டத்திற்கு நன்றி ஜெய்லானி.

ஸாதிகா said...

”சோதிடம்” சதீஷ் குமார் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

ரமணி சார் படங்களை எல்லாம் பார்த்து கருத்திட்டமைக்கு நன்றி.

ஸாதிகா said...

வை கோபலகிருஷ்ணன் சார் கருத்துக்கு மிக்க நன்றி,

ஸாதிகா said...

//ஹா..ஹா..ஹா... பூஸோ கொக்கோ:))).. உஸ் என்றுமுன், உச்சிக்குப் போயிடுவமில்ல:)).//அதிஸ் எங்கே புளியமர உச்சிக்கா?
ரொம்ப முக்கியம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))))..
ஸாதிகா அக்கா நான் வரும்போது உங்க்ட கார்டினையும் அந்த கறுப்பூப் பூஸாரையும் காட்டுங்கோ ஓக்கை?:)))))

//அதீஸ் வாங்க நீங்க வர்ரச்சே கிச்சன் கார்டன் கூட ரெடியாகி இருக்கும்.

ஸாதிகா said...

//செடி வளர்ப்பது கூட பெரிய வேலையில்லை அதை ஒழுங்கா பராமரிப்பதுதான் சிரமம்.//உண்மைதான் பராமரிப்பதுதான் சிரமம்.கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

துளசி ரொம்ப சுலபாம வளரும் ஏஞ்சலின்.பனை மரம் என்று தெரியாமல் உங்கள் தங்கை வளர்த்து விட்டதை நினைக்க சிரிப்பாக உள்ளது.மிகவும் யூஸ் புல்லான மரம் அது உங்கள் தங்கையிடம் சொல்லுங்கள் வெட்டி விட வேண்டாம் என்று.

ஸாதிகா said...

வானஸ் வேப்பமரம் பிடிக்காதவர் இல்லை போலும்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வாங்க பானு.ரொம்ப நாள் கழித்து வந்து உற்சாகமாக பின்னூட்டம் போட்டு இருக்கீங்க.பிள்ளை இப்பொழுது சற்று வளர்ந்திருப்பார்களே?தூங்கும் சமயம் பதிவு போடுங்கள் பானு.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க தேனு.கூலாகி விட்டீர்களா?கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

லக்‌ஷ்மிம்மா கருத்துக்கு நன்றிங்கம்மா.

ஸாதிகா said...

//அமெரிக்காவுக்கு பிரித்தானியா எலிசபெத் குயினைக்:)) கண்டாலே புகைப்புகையாப் போகுதூஊஊஊஊஊஊஊஉ:))).. ஹையோ ஸாதிகா அக்கா படிச்சதும் கிழிச்சிட்டு எரிச்சிடுங்க:)), ஒட்டிப்போட்டுப் படிக்கக்கூடிய ஆட்கள்:)) நான் முருங்கில இருப்பதைக் காட்டிக் குடுத்திடாதையுங்கோஓஓ.. ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ...ங்கோ.... இது எக்கோ:))//

அதீஸ் எனக்கு சிரிச்சு முடியலே.நீங்கள் இருக்கிற இடம் எப்படி கலகலப்பாக உள்ளது.ரொம்ப ரொம்ப தேங்ஸ் பூஸ்.தூங்கப்போகும் நேரத்தில் என்னை மனசார சிரிக்க வைத்தமைக்கு.

ஆயிஷா அபுல் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
தாமதமாக வந்தமைக்கு மன்னிக்கவும். இன்று நெட் வேலை செய்ய வில்லை.

மாஷா அல்லாஹ்.... அருமையாக இருக்கு.
இன்ஷா அல்லாஹ்... நேரில் பார்க்கணும்.

பூஸாரை பிடித்து அதிராவுக்கு பார்சல்.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் ஆயிஷா.

//
பூஸாரை பிடித்து அதிராவுக்கு பார்சல்//
அந்த பூஸாரை பிடித்து அதீஸுக்கு பார்சல் பண்ணினால் அவ்வளவுதான்...நல்ல அழகான பர் பூஸ் வாங்கி பார்சல் பண்ணிடலாம்.நன்றி ஆயிஷா.

IlayaDhasan said...

நல்ல தோட்டம்.


நண்பர்களே , என்னுடைய இந்த சவால் போட்டி கதையை படித்து , ஓட்டை போடவும்:

B L A C K D I A M O N D - சவால் சிறுகதைப் போட்டி -2011

zumaras said...

எனக்கும் தோட்டம் வைப்பதும் அதைப்பார்த்து ரசிப்ப்தும் ரொம்ப பிடிக்கும்.அதெல்லாம் உங்க ப்ளாக் பார்த்தாலே.... போதும்.அழகான பதிவு.

ஹுஸைனம்மா said...

ரெண்டு நாளா படங்களையே ரசிச்சுப் பாத்துக்கிட்டிருந்ததால பின்னூட்டம் போட லேட்டாகிடுச்சு!! :-)))))

காய்கறித் தோட்டம் போடுங்கக்கா சீக்கிரம். இன்ஷா அல்லாஹ்.

மஞ்சுபாஷிணி said...

என்ன ஒரு ரசனை ஸாதிகா உங்களுக்கு?

அழகிய தோட்டத்தை வீட்டிலேயே குட்டி குட்டி தொட்டிகளில் உண்டாக்கி வீட்டையே அழகு படுத்திட்டீங்க...

க்ரோட்டன்ஸ் வகையராக்கள் அதிகம் இருக்கு உங்க வீட்ல...

வேப்பமரம் அழகா என்ன ஒரு பசுமை... கடவுளே கண் பட்டுடாம இருக்கணும்...

கறிவேப்பிளை செடி அழகு.... கடாய் அடுப்பில் வெச்சிட்டு ஓடி போய் பறிச்சுக்கலாம் தானே... நான் அப்டி தான் பாய்ச்சலா படி இறங்கி ஓடுவேன் கறிவேப்பிலை பறிக்க :)

உங்க வீடு சென்னைல இருந்தால் கண்டிப்பா ஊருக்கு வரும்போது மிஸ் பண்ணாம வருவேன்...

என்ன ஒரு ரம்மியம்... மனசுக்கு இதம்மா இருக்கு.... கண் மூடி அசந்தால் தேவலோகத்தில் இருப்பது போல இருக்கும் கண்டிப்பா...

அன்பு நன்றிகள் ஸாதிகா உங்கள் அருமையான ரசனை எங்களுக்கு அழகிய புகைப்படங்களாக கிடைத்த பாக்கியம்..

பேரீச்சம் பழம் ஏன் வைக்கலை நீங்க? தண்ணியே வேண்டாம் தெரியுமா?

வைங்களேன்பா....

மனோ சாமிநாதன் said...

வேப்ப மரம் அத்தனை நல்லது. மூலிகை காற்றுடன், அதன் பழம், கொட்டை, பூ, இலை, பட்டை எல்லாமே ஆயிர்வேத ம‌ருந்துகளில் பயன்படுத்துவார்கள். மொத்தத்தில் தோட்டம் அழகாயிருக்கு! நான் வந்த போது, பேசவே நேரம் போதவில்லை. அதனால் இந்தத் தோட்டத்தைப் பார்க்கவேயில்லை.

அம்பாளடியாள் said...

அழகிய வீட்டுத் தோட்டம் .இதைப் பார்க்கும்போது நான் பிறந்து வளர்ந்த என் வீட்டு ஞாபகத்தைத் தூண்டுகின்றது .வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் மனம்போல் இந்த அழகிய தோட்டம் செழிப்பாய் வளர .மிக்க நன்றி பகிர்வுக்கு .இன்று தவறாமல் என் தளத்திற்கு வாருங்கள் விசயம் இருக்கு ......

ஸாதிகா said...

இளைய தாசன் கருத்துக்கு நன்றி.உங்கள் வலைப்பூ பக்கமும் வந்து செல்லுகின்றேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜும்ராஸ்.

ஸாதிகா said...

காய்கறித் தோட்டம் போடுங்கக்கா சீக்கிரம். இன்ஷா அல்லாஹ்.////உற்சாக பின்னூட்டல்களை எல்லாம் பார்க்கும் பொழுது இன்னும் ஒரு ஒரு டசன் தொட்டியாவது வாங்கி காய்கறி போடலாம் என்று ஆசை உள்ளது ஹுசைனம்மா.நன்றி.

ஸாதிகா said...

மஞ்சு பாஷினி எப்படிப்பா பின்னூட்டம் போடுறீங்க.நாங்களாம் கீபோர்டில் டைப் பண்ணுறோம்.நீங்கள் மயிலிறகாலா?என்ன ஒரு அழகுணர்ச்சி,மென்மை.ரொம்ப தேங்ஸ்பா.

ஸாதிகா said...

அனைவருக்கும் பிடித்ததுபோன்று வேம்பு உங்களுக்கும் பிடித்திருப்பத்பது அதனுடைய பன்முக உபயோகத்தினாலா?ரொம்ப நன்றி மனோ அக்கா.

ஸாதிகா said...

பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.உங்கள் வலைப்பூ பக்கம் அவசியம் வருகின்றேன்.

ஸாதிகா said...

பாராட்டுகளுக்கும்,வாழ்த்துக்களுக்கும் மிக்க நன்றி அம்பாள் அடியாள்.உங்கள் வலைப்பூ பக்கம் அவசியம் வருகின்றேன்.

இராஜராஜேஸ்வரி said...

அழகான தோட்டத்திற்கும் வேம்புக்கும் வாழ்த்துக்கள்.

அந்நியன் 2 said...

ஸாதிகா அக்கா..... வந்திட்டேன்

MyKitchen Flavors-BonAppetit!. said...

Luvly post of interesting decorative plants in ur premises.Luv to read this and other interesting posts here.Nice to know a fellow blogger from Tamilnadu.Glad to follow U.

ஸாதிகா said...

நன்றி இராஜராஜேஸ்வரி.

ஸாதிகா said...

வாங்க அந்நியன்.

ஸாதிகா said...

மிக்க மகிழ்ச்சி,நன்றி MyKitchen Flavors-BonAppetit!.