தேவனின் துப்பறியும் சாம்பு
அந்த நாளில் பழம்பெரும் எழுத்தாளர் தேவன் துப்பறியும் சாம்பு என்ற கதாபாத்திரத்தை உருவாக்கி அதன் பின் வந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் முன்னோடியாக இருந்தார்.
நான் பிறப்பதற்கு முன்பே வளைய வந்த சாம்புவை மொடமொடத்த பழுப்பேறிய தாள்களாக படித்து மகிழ்ந்து இருக்கிறேன்.
துப்பறியும் சாம்புவை தேவனின் மாஸ்டர் பீஸ் என்பார்கள்.சாம்பு முட்டாள்த்தனமாக செய்யும்காரியங்கள் யாவும் இறுதில் புத்திசாலித்தனமாக முடிக்கப்படுவது ஆசிரியரின் திறமையை வெளிப்படுத்தும்.மனபாரத்தோடு சாம்பு துப்பறியும் கதைகளை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தால் மனம் லேசாகித்தான் புத்தகத்தை கீழே வைப்பார்கள்.
பட்டுக்கோட்டை பிரபாகரின் பரத் - சுசீலா
பி கே பி கற்பனையில் இந்த கேரக்டர்கள் உருவானதற்கு காரணி எழுத்தாளர் தேவனின் சாம்புவேதான்.
”தொடர்ந்து ஒரே பாத்திரங்கள் வருகின்ற போது வாசகர்களுக்கு தொடர்ந்து ஈடுபாடு வரும் இதற்காக எல்லாருமே இந்தமாதிரி தனிதனிப் பாத்திரங்களாவும் ஆண் பாத்திரமாகவும் வைத்திருக்கின்ற பொழுது நான் ஏன் காதல் ஜோடியாக வைத்திருக்க கூடாது அந்த துப்பறியும் பாத்திரங்கள் ஒரு காதலனும் ஒரு காதலியுமாக இருந்தா இன்னுமொரு சுவாரஸ்யமாக இருக்குமே அப்படின்னு யோசிச்சு பரத் சுசீலா அப்படி என்ற இரண்டு பேருமே ஒருவருக்கொருவர் தங்களுடைய அன்பையும் பாசத்தையும் காதலையும் கொட்டிக்கொண்டே துப்பறியும் கலைகளிலும் ஈடுபடுவார்கள் என்ற அமைப்போடு துவக்கப்பட்ட பாத்திரங்களே பரத் சுசீலா பாத்திரங்கள். ”மேற்கண்டவாறு பி கே பி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
பரத் சுசீலா பாத்திரங்களுக்கும், சுசீலாவின் டி சர்ட் வாசகங்களுக்கும் எக்கசக்க ரசிகர்கள்.இன்னிக்கு சுசீலா என்ன வாசகம் அணிந்த டீ ஷர்ட் அணிந்து வரப்போகின்றாள் என்ற படபடப்புடன் படிக்கும் வாசகர்களின் எதிர்பார்ப்பு பிகேபியின் எழுத்துக்குக்கு கிடைத்த ஒரு அங்கீகாரம்.
சுஜாதாவின் கணேஷ் - வசந்த்
சுஜாதா என்றதும் நினைவு வரும் மறக்க இயலாத கதாபாத்திரங்களான கணேஷ் - வசந்த்.
கணேஷை பொறுப்பான, அதிகம் பேசாத, கண்ணியமான, பெண்கள் பற்றி அவ்வளவாக அலட்டிக் கொள்ளாத, கண்டிப்பான அமைதியான கேரக்டராக சித்தரித்திருப்பார் சுஜாதா.
அதே நேரம் அவரது உதவியாளர் வசந்தை கிண்டல், கேலி, விளையாட்டுத்தனம், வாயாடித்தனம், எவ்வளவு சீரியஸான நேரத்திலும் பெண்களை கொஞ்சம் 'சைட்' அடித்தவாறு இருக்கும் ஜாலியான,துடுக்குத்தனமான கேரக்டராக சித்தரித்து இருப்பார்
பாக்கியம் ராமசாமியின் சீதாபாட்டி - அப்புசாமி
தாத்தா பாட்டி என்றதும் நினைவுக்கு வருவது மேற்கண்ட முதிய தம்பதிகள்தான்.கதாசிரியர் கற்பனையில் கண்டு மகிழ்வித்த அப்புசாமி, சீதாபாட்டி தம்பதியை, கண்முன் கொண்டுவந்து நிறுத்திய ஓவியர் ஜெயராஜின் சித்திரங்கள் மனதை அள்ளிச்செல்லும்.
கூடவே
பீமா, ரசம், அரை பிளேடு, முக்கா பிளேடு என்று நண்பர் படை சூழ உட்கார்ந்து யோசித்து, புதுப் புதுத் திட்டங்கள் போடும்அப்புசாமி ,பொடி போடும் அப்புசாமியை அடக்க முயற்சிக்கும் சீதாப்பாட்டி,அடியேய்ய்ய்ய்ய்ய்..என்று நீட்டி முழங்கி மனைவியை அழைக்கும் ஸ்டைல்,எப்பொழுதும் மனைவியிடம் பல்பு வாங்கினாலும் கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாத அப்புசாமி..இப்படி எத்தனை எத்தனையோ...
பக்கத்து வீட்டில் வசிப்பவர்களைப் பார்ப்பது போல் உணர்வூட்டும் அருமையான கேரக்டர்கள் நம்ம குலுங்க குலுங்க சிரிக்க வைத்து பரவசப்படுத்துவார்
ராஜேஷ்குமாரின் விவேக் - ரூபலா
பக்கா டீஸண்டாக இந்த கதாபாத்திரங்களை படைத்து படிப்பவர்கள் மனதை அள்ளிவிடுவார் ராஜேஷ்குமார்.துப்பறியும் நாயகன் விவேகானந்தன் என்கிற விவேக், புலனாய்வுதுறை உயரதிகாரி. அவரது மனைவி ரூபலா.ராஜேஷ்குமாரின் பல நாவல்கள் மிகவும் அற்புதமாக இருக்கும்.அதிலும் விவேக்-ரூபலா வரும் நாவல்கள் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்.
கதை எழுதுவதற்கு எடுக்கும் சிரத்தையை கதைக்கு தலைப்பு வைப்பதிலும் ராஜேஷ்குமார் அக்கரை கொள்வார் என்பதற்கு இந்த தலைப்புகள் சிலதே உதாரணம்.
திருமரண அழைப்பிதழ்
நிலவை களவு செய்
தப்பு தப்பாய் ஒரு தப்பு
இனி மின்மினி
சூடான கொலை
கண்ணிமைக்க நேரமில்லை
நீலநிற மல்லிகை.
சுபாவின் வைஜெயந்தி - நரேன்
ஈகிள் ஐ என்ற துப்பறியும் நிறுவனம் நடத்தும் ராமதாஸ் இவர்களிடம் வேலைபார்க்கும் இந்த ஜோடிகள், அடிக்கும் லூட்டி மறக்க முடியாது.வைஜெயந்தியோட கோன் ஐஸ்க்ரீம் ஆசைகள் - வாசகர்களுக்கு பிரசித்தம்.நரேன் வைஜெயந்தி வரும் கதைகள், அவர்களது ஊடல்,கூடலுடன் படிப்பவர்கள் மனதை பரவசப்படுத்தும்
தமிழ்வாணனின் சங்கர்லால்
சலவை கலையாத முழுக்கை சட்டை,அதை உள்வாங்கி இருக்கும் பேண்ட்,காலில் பளபளக்கும் ஷூ,தலையில் தொப்பி,அவ்வப்பொழுது கழுத்தை இறுகப்பிடிக்கும் ஸ்கார்ஃப்,கண்களில் கூலிங் கிளாஸ்,கைகளில் தேநீர் கோப்பையுடன் நாற்காலியில் அமர்ந்து எதிரே இருக்கும் மேஜையின் மீது காலுக்கு மேல் காலை தூக்கிப்போட்டுக்கொண்டு ராயலாக உட்கார்ந்திருக்கும் உருவம் யார் என்றால் சட்டென நினைவுக்கு வருவது தமிழ்வாணனின் சங்கர்லால்.
துப்பறியும் சங்கர்லாலை உருவாக்கி அப்பொழுது பெரும் பரபரப்பை உருவாக்கிய தமிழ்வாணன் பிறகு துப்பறியும் தமிழ்வாணன் ஆக அவதரித்தார் அதே கெட்டப் உடன்.
எழுத்தாளர் அகஸ்தியன் உருவாக்கிய கதாபாத்திரங்களான மிஸ்டர் & மிஸஸ் பஞ்சு, மற்றும் தொச்சு, அங்கச்சி, கமலா யாவரும் மறக்க இயலாதது.
எழுத்தாளர் ராஜேந்திரக் குமாரின் ராஜா, ஜென்னி ,தேவிபாலாவின் பிரசன்னா - லதா ,புஷ்பா தங்கதுரையின் சிங் கேரக்டர்களும் வாசகர்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டவை.
இதெல்லாம் அன்றும் இன்றும் பரபரப்பாக பேசப்பட்டு,வாசிக்கப்பட்டு,ரசிக்கப்பட்டு வந்த கேரக்டர்களானாலும் நான் ரசித்து ,பல தடவை வாசித்த ஒரே நாவல் என்றால் அது கோவி.மணிசேகரனின் ”மனோரஞ்சிதம்”
ஒரு சலவைத் தொழிலாளியின் மகள் தன் வீட்டுக்கு வரும் அழுக்குத் துணிகளில், ஒரு பட்டு ஜிப்பாவில் மட்டும் மனோரஞ்சிதம் வாசனை மணப்பதை கவனிப்பாள். அந்த சென்ட் வாசனையை வைத்து, அதை அணிபவன் எத்தகைய அழகான இளைஞனாக இருப்பான் என்று கற்பனை செய்வாள். கற்பனையிலேயே காதல் கொள்வாள். கடைசியில் அவன் ஒரு குஷ்டரோகி என்பதுதான் கிளைமாக்ஸ்.தான் கற்பனை செய்து வைத்திருந்த காதலன் ஒரு குஷ்டரோகி என்ற உண்மை தெரிந்ததும் கலங்கிபோகும் கதாநாயகி படிப்பவர்களையும் கலங்க வைத்து விடுவாள்.சலவைத்தொழிலாளி மகளாக வரும் கிளியாம்பாள் கதா பத்திரம் என்னை பெரிதும் கவர்ந்தவள்.சிறுமி பிராயத்தில் வாசித்த அந்த நாவலின் சுவை இன்னும் என் மனதில் தேங்கி நிற்கின்றது.நான் வாசித்த முதல் நாவலும் இதுதான்.
டிஸ்கி:
Tweet |
43 comments:
ஸாதிகா அக்கா... ரொம்ப ரயேட்டாகி இருக்கென வந்தேன்.... புதுத்தலைப்பு அவ்வ்வ்வ்வ்வ்:))).
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.. பாட்டுக்கு, பிரபாகர் கதைக்கோ? எனக்கு இவர்கள் இருவரிலும் எப்பவும் குழப்பம் வந்துவிடுவதுண்டு.
நல்ல கதைகள் அறிமுகம் செய்திருக்கிறீங்கள்... வாசிக்க வேண்டும், கிடைக்கவேண்டும், நேரமும் வேண்டும்.
தேவனின் துப்பறியும் சாம்பு கொஞ்சமும், சுஜாதாவின் கணேஷ் வஸந்த் கொஞ்சமும், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டி நிறையவும் படித்துள்ளேன்.
காலத்தால் அழியாத கதா பாத்திரங்கள் என்பது உண்மை தான்.
பகிர்வுக்கு நன்றிகள். vgk
vgk
தனித்தனியாக இந்தக் கதாபாத்திரங்கள் குறித்து
படித்து வியந்திருக்கிறேன்
தங்கள் பதிவில் அனைவரையும் மிக அழகாக
அறிமுகம் செய்துள்ளது அருமை
ஏறக்குறைய எண்பது ஆண்டுகளை ஒரே பதிவில் மிக அழகாக
இணைத்துள்ளது தங்கள் வாசிப்பின் விஸ்தீரணத்தை
எளிதாக்ப் புரியவைத்துப்போகிறது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
நல்லதொரு பகிர்வு. தமிழ் நாவல்களின் கதாபாத்திரங்களை அருமையாக தொகுத்தளித்துள்ளீர்கள்.
ஓரு காலத்தில் ராஜோஸ்குமாரின் தீவிரமான வாசகன் நான் இப்போ எல்லாம் அவார்து கதைகளை படித்தே பல காலம் ஆகிவிட்டது....
பல மறந்து போன கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் அழகு
மிக நல்ல தொகுப்பும் பகிர்வும்...
அக்கா தெளிவாக ஓவ்வொரு கதாபாத்திரங்களை பற்றி சொல்லியிருக்கிங்க..
பல பிரபலங்களை உங்கள் பதிவின் மூலம் அறிந்துக்கொண்டேன்... அருமையான பகிர்வு
சிறப்பான பதிவு ஸாதிகா! சின்ன வயதில் சங்கர்லால் கதைகளை நூலகம் சென்று தேடித்தேடி வாசித்தது நினைவுக்கு வந்தது!
தங்காய்... படித்து ரசித்த அனைத்தையும் பாங்குடனே பகிர்ந்துள்ளீர்! ஜனவரி பிப்ரவரி மார்ச்சுவரி என் தலைப்பு ராஜேஷ் குமாருடையதல்ல... என் இனிய நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகருடையது. மற்றபடி ரசனைக்கேற்ற பதிவு. அருமை.
உண்மைதான் .. விவேக் ரூபலா உண்மை என நம்பியவர்கள் பலர்
மிகச்சிறப்பான பதிவு மற்றூம் தொகுப்பு
வாங்க பூஸ்,பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்துக்கும் பட்டுக்கோட்டை பிரபாகருக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 29 வயது வரை மட்டும் வாழ்ந்து மறைந்த சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார்.
பட்டுக்கோட்டை பிரபாகர் சிறந்த கதை ஆசிரியர்.கிரைம் கதை எழுதுவதில் வல்லவர்.பரத் - சுசிலா என்ற கதாபாத்திரத்தின் பிரம்மா.இன்னும் எழுதிக்கொண்டு பல்லாயிரக்கணக்கான ரசிகர்களுக்கு கதைவிருந்து அளித்து வருபவர்.
இனி குழப்பம் இல்லையே?
வை.கோபாலகிருஷ்ணன் said...
தேவனின் துப்பறியும் சாம்பு கொஞ்சமும், சுஜாதாவின் கணேஷ் வஸந்த் கொஞ்சமும், பாக்கியம் ராமசாமியின் அப்புசாமி சீதாப்பாட்டி நிறையவும் படித்துள்ளேன்.//நானும் இதே அள்வில்தான் விகேஜி சார்.உடன் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
ஏறக்குறைய எண்பது ஆண்டுகளை ஒரே பதிவில் மிக அழகாக
இணைத்துள்ளது தங்கள் வாசிப்பின் விஸ்தீரணத்தை
எளிதாக்ப் புரியவைத்துப்போகிறது
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்////
வார்த்தைகளில் மகிழ்ச்சி ரமணி சார்.கருத்துக்கும் வாழ்த்துக்களுக்கும் மிக்கம் நன்ரி.
கருத்து பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி விச்சு.
பல மறந்து போன கதாபாத்திரங்களை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் அழகு//இவ்விடுகை மூலம் உங்களுக்கெல்லாம் ஞாபகப்படுத்தியது குறித்து மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி ராஜா.
மிக்க நன்றி ஆசியா தோழி/
வாங்க பாயிஜா.அலுவல்கிடையிலும் வந்து கருத்திட்டமைக்கு நன்றி.
சின்ன வயதில் சங்கர்லால் கதைகளை நூலகம் சென்று தேடித்தேடி வாசித்தது நினைவுக்கு வந்தது!//நானும்தான் அக்கா.போஸ்ட் கார்ட் அனுப்பி வி பி பி மூலம் புத்தகங்களை வரவழைத்து படித்த காலங்களும் உண்டு.இப்பொழுது மணிமேகலை பிரசுரம் தாண்டி எத்தனையோ முறை சென்றாலும் உள்ளே போய் புத்தகங்கள் வாங்கத்தோன்றவில்லை.:-(
கருத்துக்கு நன்றி மனோ அக்கா.
தவறினை சுற்றிக்காட்டியமைக்கு மிக்க நன்றி சகோ கணேஷ்.உற்சாகத்துடன் இடுகை படித்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி.
இவர்கள் எழுதியதை வாசித்து வாசித்துதானே நாமும் வளர்ந்திருக்கிறோம் இல்லையா...அருமை..!!!!
சுவையாக, இரசித்து எழுதியுள்ளீர்கள். ஈகிள்ஸ் ஐ-யை நடத்துபவர் பைப் ராமதாஸ்; நரேன்-வைஜ் அதில் ஊழியர்கள்.
புஷ்பா தங்கதுரையின் இன்ஸ்பெக்டர் சிங்?
டாக்டர் கோவி.மணிசேகரன் எழுதிய. 'திப்பு சுல்தான்' படித்ததுண்டா? கல்கியில் தொடராக வந்தது.
துப்பறியும் சாம்பு டிவி சீரியலா கூட y.g மகேந்திரனின் நடிப்பில் வந்தது எல்லாமே எனக்கும் பிடித்த கதாசிரியகள் /கதாபாத்திரங்கள் இன்னும் மனதில் அழியா நினைவுகள் .நேத்துகூட லைப்ரரி போய் ரெண்டு புக் கொண்டுவந்தேன் .ராஜேஷ்குமார் ,பி கே பி .வாழ்த்துக்கள்
அருமையான தொகுப்பு .
@ athira said..... வாசிக்க வேண்டும், கிடைக்கவேண்டும், //
பூஸ் ..லைப்ரரில இருக்கு தேடிப்பாருங்க .நிறைய புக்ஸ் இருக்கு
நன்றி சகோ. படித்தவுடன் ஃபிளாஸ் பேக்கில் அந்த கதாபாத்திரங்கள் வரத் துவங்கின.
ஆமாம் புல்லாங்குழல் பக்கமே காணோமே?
நீங்கள் குறிப்பிட்ட அனைத்து கதாபாத்திரமும் நான் ரசித்த கதாபாத்திரங்கள் ,அதிலும் சங்கர்லால் கதை அனைத்தும் படித்தேன் ,தீவிர ரசிகனாக இருந்தேன் , பின்பு விவேக் ஜோடி ,பின்பு பரத் ஜோடி ,நரேன் ஜோடி இவைகளை கலக்சனாக வைத்திருந்தேன்
அப்புசாமி மட்டும் லைப்ரரியில் எடுத்த புத்தகத்தில் ரசிகனானேன் .
நன்றி சகோ அவர்களை மீண்டும் நினைவு படுத்தியதற்கு
ஒரு காலத்தில் நாமெல்லாம் புத்தக அடிமைகளாக இருந்த ( இப்போது நெட் அடிமைகள்) மலரும் நினைவுகள் வந்துவிட்டன ஸாதிகா.. நல்ல விரிவான பகிர்வு.. சூப்பர் தோழி..:)
"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மைதான் .. விவேக் ரூபலா உண்மை என நம்பியவர்கள் பலர்//தமிழ்வாணனின் சங்கர்லாலைக்க்கூட அப்படித்தான் நினைத்தார்கள்.கருத்துக்கு நன்றி ராஜபாட்டை.
மிக்க நன்றி ஜலி கருத்திட்டமைக்கு.
இவர்கள் எழுதியதை வாசித்து வாசித்துதானே நாமும் வளர்ந்திருக்கிறோம் இல்லையா...//ஆம்/100%உண்மை.கருத்துக்கு நன்றி சகோ மனோ
ஒவ்வொரு எழுத்தாரையும் அவர்கள் உருவாக்கி' தனிப்பட்ட கதாபாத்திரங்களையும் உடன்படுத்தி எழுதியமை மிகவும் வித்தியாசமாகவும் ரசிக்கும்படியாகவும் இருந்தது.
இந்த தலைமுறைக்கு எழுத்துகளைப்பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியுமான விவரங்களும், விமர்சனங்களும் மறக்கடிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்றன. 1. காரணம் உயர்ந்து வரும் தொழில்நுட்பம். 2. மாறிவரும் தலைமுறை.
அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இத்தகைய இடுகைகளும், கட்டுரைகளும் வெளியிடுவதால் வரும் தலைமுறைக்கும் அது போய்சேரக்கூடும். அத்தகைய அளப்பரிய பணியை நீங்கள் செய்து வருகிறீர்கள். மீண்டும் இந்த எழுத்தாளர்களின் காதாபாத்திரங்களை நினைவுகளில் கொண்டுவந்து மீட்டெடுத்தமைக்கு மிக்க நன்றி நண்பரே..!!
என்றும் அன்புடன் உங்கள், தங்கம்பழனி.
ஏதோ எனக்குத் தெரிந்த வரையில் நானும் ஒரு வலைப்பூவைதொடங்கி வளர்க்க முயற்சித்துள்ளேன்..
நேரமிருந்தால் வலைப்பூவை பார்வையிட்டு தங்களின் மேலான ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நான் உங்கள் வலையில் பாலோவராக இணைந்துவிட்டேன். எமது வலைக்கும் வந்து பாருங்கள் பிடித்திருந்தால் இணைந்து கொள்ளுங்கள்.. உங்கள் கருத்துகளையும் மறக்காமல் சொல்லிவிட்டு செல்லுங்கள்..!! நன்றி அன்பானவரே.
எனது வலையில் இன்று:
மாவட்டங்களின் கதைகள் - தருமபுரி மாவட்டம்
தயங்காமல் வந்து உங்கள் கருத்துக்களையும் ஆலோசனைகளையும் அளிக்க அழைக்கிறேன். நன்றி..!
வாங்க சகோ நிஜாம்.வெகு இடைவெளிக்குப்பின் வந்து இருக்கீங்க.பின்னூட்டம் வாயிலாக தாங்கள் நான் அறிந்திறாத.மறந்தவைகளையும் அறிவித்தமைக்கு நன்றி.இணைத்துவிட்டேன்.
//டாக்டர் கோவி.மணிசேகரன் எழுதிய. 'திப்பு சுல்தான்' படித்ததுண்டா? கல்கியில் தொடராக வந்தது.//இல்லை.இதுவரை பார்க்கவில்லை.மனோரஞ்சிதம் நவல் ஈ புக்காக படிக்க முடியுமாயின் அந்த லின்க் இருந்தால் அனுப்பித்தாருங்கள்.கருத்துக்கு நன்றி.
ஏஞ்சலின் கருத்துக்கு மிக்க நன்றி.துப்பறியும் சாம்புவாக காத்தாடி ராமமூர்த்தி நாடகத்தில் நடித்திருக்கிறார். நாடகத்தையும் தேவனே எழுதி இருக்கிறார் .மோட்டார் சுந்தரம் பிள்ளை திரைப்படத்தில் சாம்பு மாதிரி குணாதிசயமும், சாம்பு என்ற பேரும், சாம்புவைப் போலவே அதிருஷ்டம் உடைய துப்பறிபவராக நாகேஷ் நடித்திருக்கிறார். ஆனால் தேவனின் கதைகள் எதுவும் அதில் பயன்படுத்தப்படவில்லை.
நன்றி சகோ நூருல் அமீன்.இந்த பதிவு தங்கள் மலரும் நினைவுகளைத்தூண்டி விட்டது குறித்து மகிழ்ச்சி.
நன்றி சகோ எம்.ஆர்.இப்பதிபவின் மூலம் தங்களுக்கு பழைய ஞாபகங்கள் வரவழைத்தது குறித்து மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.
ஒரு காலத்தில் நாமெல்லாம் புத்தக அடிமைகளாக இருந்த ( இப்போது நெட் அடிமைகள்) மலரும் நினைவுகள் வந்துவிட்டன //சரியாக சொன்னீர்கள் தேனம்மை.கருத்துக்கு நன்றி
தங்கள் விரிவான பின்னூட்டம் உற்சாகத்தையும் நிறைவையும் அளிக்கின்றது சகோ தங்கம் பழனி.மிக்க நன்றி.நானும் உங்கள் தளத்தில் இணைந்து விட்டேன்.பதிவுகள் படித்து பின்னூட்டியும் இருக்கின்றேன்.
அருமை!
Post a Comment