October 14, 2011

எங்கே செல்லும் இந்தப்பாதை :-(


ஒரு பிரபலமான பொறியிற்கல்லூரிக்கு நேற்றுசென்று இருந்தேன்.கூட்டம்,கூட்டமாக மாணவ மாணவிகள் ஆங்காங்கு சுற்றிக்கொண்டிருந்தனர்.வகுப்பு நடக்கும் நேரத்தில் இவர்கள் கேம்பஸை சுற்றி சுற்றி வருகின்றார்களே..ஏன்?

மனதில் தோன்றிய கேள்வி வாய் வரை வந்தாலும் “ஆஹா..கேள்வி ஏதாவது கேட்டு வைத்து கூட்டமாக இருக்கும் இந்த சின்னஞ்சிறுசுகளிடம் வசமாக மாட்டிக்கொள்ளக்கூடாது” என்று வாயைக்கட்டுப்படுத்திக்கொண்டேன்.இப்படி கல்லூரி வளாகத்தினுள் சுற்றுகின்றார்களே.கேட்பார் இல்லையா?மனதில் ஆதங்கம்.மரநிழலில் கட்டப்பட்ட திண்டுவில் அமர்ந்து செல்போனை குடைந்து கொண்டிருந்த பொழுது கண்களில் ஒரு மாணவன் சிக்கினான்

“தம்பி ,இங்கே வா”

“சொல்லுங்க ஆண்ட்டி”

“ஏன் கிளாஸ் போகலியா?”

“போகலே”

“ஏன்”

”ரெக்கார்டு எடுத்துட்டு வரலே.அதான்..”

“ரெக்கார்டு எடுத்துட்டு வரலேங்கறதுக்காக ஒரு கிளாஸை இப்படி மிஸ் பண்ணலாமா?உன் பேரண்ட்ஸ் உன் மேலே நம்பிக்கை வைத்து எவ்வளவு பணம் செலவு செய்து படிக்க அனுப்பி இருக்காங்க”

தெளிவு பெற்ற மதியினாய் வா வா வா
சிறுமை கண்டு பொங்குவாய் வா வா வா
எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா
ஏறு போல் நடையினாய் வா வா வா

நாம்தான் சிறுமை கண்டு பொங்கும் ஜாதி ஆயிற்றே.வசமாக பையன் மாட்டினான்.ஏதோ நம்மால் ஆன அட்வைஸ் என்று பேச எத்தனித்த பொழுது தூரத்தில் சென்று கொண்டிருந்த இன்னொரு மாணவனை கைதட்டி அழைத்து அறிமுகப்படுத்தினான்.

“ஆண்ட்டி,இவனும் கிளாஸை கட் பண்ணிட்டான்.என்னன்னு கேளுங்க”

புதியவன் முறைத்தான்.

“ஏம்ப்பா,நீ கிளாஸ் கட் பண்ணே?”

“ப்ஸூ..போர் அடிக்குது”

”படிக்கத்தானேப்பா வந்தீங்க.”

“அதுக்கூஊஊ ..ஒரு ரிலாக்‌ஷேஷன் வேணாமா?”

“ஒரு நாலு வருஷம் கஷ்டப்பட்டால் நாற்பது வருஷத்துக்கு நிம்மதியா இருக்கலாம் தம்பி.”

“அட..நீங்க வேற...என் கிட்டே கேட்கறீங்களே.சத்யம் தியேட்டர் போய் பாருங்க.பெசண்ட் நகர் பீச்சுக்கு போய் பாருங்க.ஒவ்வோரு மாலா போய் பாருங்க.எத்தனை ஆயிரம் ஸ்டூடண்ட்ஸ் கிளாஸை இல்லை காலேஜையே கட் பண்ணிட்டு ஜாலியா இருக்காங்க.நீங்க இப்ப ஸ்டூடண்டா இருந்தால் தானே தெரியும்.எங்க கஷ்டம்.டேய்..வாடா...கேண்டீனில் சூடா நக்கட்ஸ் போட்டிருப்பான்.வா போலாம்.”

நான் அவ்வ்வ்வ்வ்வ்வ்......

அதே நேற்று..

மாலை எக்மோரில் காரினுள் அமர்ந்திருந்தேன்.வேலையாக கூட வந்தவர் சென்று விட,வருவதற்கு தாமதமானதால் சாலையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன்.எதிரே ஒரு ஏஸி பார்.

மோட்டார் சைக்கிள்களில் கூட்டமாக கல்லூரி மாணவர்கள் வந்து இறங்கினார்கள்.தோளில் மாட்டிய பையுடன்,கையில் டிராஃப்டருடன் பாரினுள் நுழைந்து கொண்டிருந்தனர்.கும்மாளமும்,இரைச்சலுமாக அவர்கள் அடித்த லூட்டி சாலைக்கு இந்தப்புறம் இருந்த எனக்கு சகிக்கவில்லை.

“அடப்பாவிகளா!”மனதில் வேதனை மிகுந்தது.

இன்னும் சற்று நேரம் கழித்து நாலைந்து மாணவர்கள்.பள்ளி சீருடையில் ஆர்ப்பாட்டத்துடன் வந்தனர்.

அணிந்திருந்த யூனிஃபார்ம் சட்டையை மள மள வென்று கழற்றினார்கள்.

”என்னடா பண்ணுகின்றார்கள் இந்த சிறுவர்கள் நடுரோட்டில் வைத்து “திகைத்துப்போய் பட படப்பாக கவனித்துக்கொண்டிருந்தேன்.. சட்டைக்கு உள்ளே கலர் கலர் டீஷர்ட்டுகள்.கழற்றிய சீருடை சட்டையை தோளில் மாட்டிய பையினுள் வைத்துக்கொண்டு இவர்களும் பாருக்குள் ”ஹுர்ரேஏஏஏஏ” என்று சப்தம் போட்டபடி நுழைந்தனர்.

இவனுங்க என்னத்தை கண்டு பிடிச்சுட்டானுங்க.இந்த ஹுர்ரேஏஏஏ...

நான் கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்......

45 comments:

MyKitchen Flavors-BonAppetit!. said...

Pdipirkum Uzhaipirkum mathippu tharathvargal vaazhthathai sarithiram illai.Neega solpavai athikamaka Chennaiyil nadapathuthan.Parents m vizhipaka Iruka Vendum.

வை.கோபாலகிருஷ்ணன் said...

படிக்கும் போதே மிகவும் மன வேதனையை அளிக்கிறது.

ஆனால் ஆங்காங்கே ஒரு சில அல்லது பல மாணவர்களின் உண்மை நிலை இது தான் போலிருக்கிறது. நினைத்தாலே நெஞ்சைப்பிசைகிறது.

இராஜராஜேஸ்வரி said...

இவனுங்க என்னத்தை கண்டு பிடிச்சுட்டானுங்க.இந்த ஹுர்ரேஏஏஏ...


வருங்காலத் தலைமுறைகளின் கலங்க வைக்கும் நடவடிக்கைகள் பகிர்வு.

MANO நாஞ்சில் மனோ said...

மிகவும் வேதனையான விஷயம்....!!! எங்க அப்பா காலத்துல சாராயம் ஒளிச்சி போயி குடிச்சிட்டு, ஒளிச்சி வீட்டுக்கு வருவதை பார்த்துருக்குறேன்,வெளில தெரிஞ்சா கேவலம்னு வெளியே தெரியாம குடிப்பாங்க, இப்போ குடிக்கலைன்னாதான் கேவலமா நினைக்கிறாங்க, வாரத்தில் இரண்டு நாள் குடிப்பதை இப்போது பெண்களும் ஏற்றுக்கொண்டு வருகிறார்கள், வேற என்னாத்தை சொல்ல...!!!

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ்மணம் இனைச்சுட்டேன், ஆனால் என் ஓட்டு விழமாட்டேங்குது...???

பிலஹரி:) ) அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... நீங்க கரெக்ட்டான நேரம்தான் தலைப்புப் போட்டிருக்கிறீங்க என்னால்தான் வர முடியவில்லை வடை போச்சே அவ்வ்வ்வ்வ்:))).

பிலஹரி:) ) அதிரா said...

தமிழ்ச் சென்னையில் இப்படி நிலையா?... ஆனா என்னவோ யாரைப் பார்த்தாலும் கேள்விப்பட்டாலும் நல்லாப் படிப்பவர்களைப் பற்றித்தானே அறிகிறோம்.

பெற்றோரால் என்னதான் பண்ண முடியும் இதுக்கு? ஆனால் பெரும்பாலும் இரு பெற்றோரும் வேலைக்குப் போகும் வீடுகளில்தான் பிள்ளைகள் இப்படி பயமின்றி வெளியே சுற்றுகிறார்களோ?..

மன வேதனையான விடயம்தான்...

Yaathoramani.blogspot.com said...

காதலியோடு திரிபவனுக்கு பாரில் இருப்பவன் தேவலை
பாரில் இருப்பவனுக்கு ரோட்டில் திரிபவன் தேவலை
ரோட்டில் திரிபவனுக்கு முட்டாளாய் வீட்டில் இருப்பவன் தேவலை
என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்
வேறு வழி இல்லை
சமூக சிந்தனையை தூண்டிச் செல்லும் நல்ல பதிவு
தொட்ர வாழ்த்துக்கள்

பிலஹரி:) ) அதிரா said...

சில இடங்களில் அதிகம் குழப்படியாக இருப்போரும் நல்லாப் படித்து விடுவார்கள், ஆனா குடி என்பது, இந்த வயதில் நினைக்க முடியாத ஒன்றுதான். கண்டிக்கப்பட வேண்டிய விடயம். போலீஸ் கவனிக்க மாட்டார்களோ?

Yaathoramani.blogspot.com said...

த.ம 1

பிலஹரி:) ) அதிரா said...

வெளிநாடுகளில்தான் அதிகம், குடி, ரக்ஸ் பிரச்சனை என்பார்கள், ஆனா என்னவாயினும் ஸ்கூல் கட் பண்ணினால் வீட்டுக்குப் போலீஸ் வந்துவிடுமாம். அதில மட்டும் சரியான ஸ்ரிக்ட் ஆக இருக்கிறார்கள். 18 வயதுக்குக் கீழே இருப்பவர்கள், ஒளித்துத்தான் குடிக்க முடியும், இல்லையெனில் போலீஸ் பிடிக்கும்:)).

ஸ்கூலுக்குப் பிள்ளை போகவில்லையெனில் ஒரு மணி நேரத்துள் பேரன்ஸ் ஸ்கூலுக்கு இன்ஃபோம் பண்ண வேண்டும், இல்லையெனில் ஸ்கூல் பேரன்ஸ்க்கு ஃபோன் பண்ணுவார்கள். பேரன்ஸ்சோடு தொடர்பு கிடைக்கவில்லையெனில், நேரே போலிசுக்குப் போன் பண்ணுவார்கள், இதுதான் எம்மிடத்திலுள்ள (இங்குள்ள) விதிமுறை.

ஆமினா said...

:-(

சென்னையில் அதிகம் கவனித்திருக்கிறேன். பதினைந்து வயது தான் இருக்கும். பைக்கில் நண்பர்களுடன் கூட்டமாக கடைகுள் நுழைகிறார்கள். சிலர் கருப்பு கவரில் வாங்கிட்டு போறாங்க. என்னத்த சொல்ல..... பெற்றோர்களின் கண்காணிப்பு இல்லாத பட்சத்தில் இளைய தலைமுறை வழிகெட்டு தான் போகும் :-(

Jaleela Kamal said...

ஐய்யோ வருகிற இளைஞர் சமுதாயம் இப்படி சீர் கெட்டு திரியுதே
இதற்கெல்லாஅம் காரணம் நலல் முறிஅயான்ப கண்டிப்பாஅன வளர்பு இலலததுதான்,.

எல்லாம் சொகுசுகளையும் சிரமம் இலலாமல் கிடைத்து விடவே வேற என்ன செய்வார்கள்.

பால கணேஷ் said...

பாருக்குச் செல்லும் வழக்கம் இப்பாரினில் அதிகரித்து வருவதற்கு கட்டவிழ்த்து விட்ட அரசாங்கமும் ஒரு காரணம் அல்லவா? பெற்றோரைக் கலங்கத்தான் வைக்கின்றனர் இளைய தலைமுறையினரில் பெரும்பகுதியினர். என்ன சொல்ல...?

Asiya Omar said...

என்னத்த சொல்ல...:( ..

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அலைக்கும்

சென்னையில் கலாசாரங்கள் சீரழிந்து கொண்டிருக்கு எங்கும் எதிலும்{சுபுஹானல்லாஹ்}

இறைவன் தான் அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்டனும்.ஆமீன்

துஆ செய்வோம்.

ஹுஸைனம்மா said...

ரொம்பவே பயமா இருக்குக்கா. ஆண்டவன்தான் காப்பாத்தணும்
ஆள்பவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை!!

இன்னொண்ணும் சொல்லணும். பதிவர்களிலேயே எத்தனை பேர் குடிப்பதைப் பெருமையாகப் பதிவுகளிலேயே பறைசாற்றுகிறார்கள்!!

ஜெய்லானி said...

இது பெற்றோரின் கண்காணிப்பு சரியில்லை என்பதையே காட்டுது :(

நான் படிக்கும் காலத்தில் ஒரு ரூபாய் கேட்டால் ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டே தருவார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படியா..????

ஸாதிகா said...

MyKitchen Flavors-BonAppetit!. said...
Pdipirkum Uzhaipirkum mathippu tharathvargal vaazhthathai sarithiram illai.///சரியாக சொல்லி இருக்கீங்க.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//ஆனால் ஆங்காங்கே ஒரு சில அல்லது பல மாணவர்களின் உண்மை நிலை இது தான் போலிருக்கிறது. நினைத்தாலே நெஞ்சைப்பிசைகிறது.//வி கே ஜி சார் பல மாணவர்களின் உண்மை நிலை அதுதான்.இளைய சமுதாயத்தை நினைத்தால் பயமாக உள்ளது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வருங்காலத் தலைமுறைகளின் கலங்க வைக்கும் நடவடிக்கைகள் பகிர்வு///மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி.

ஸாதிகா said...

//எங்க அப்பா காலத்துல சாராயம் ஒளிச்சி போயி குடிச்சிட்டு, ஒளிச்சி வீட்டுக்கு வருவதை பார்த்துருக்குறேன்,வெளில தெரிஞ்சா கேவலம்னு வெளியே தெரியாம குடிப்பாங்க, இப்போ குடிக்கலைன்னாதான் கேவலமா நினைக்கிறாங்க, //அதே..இதனை கவுரவமாக அல்லவா நினைத்துக்கொண்டு சீரழிகின்றனர்.கடவுள்தான் இவர்களை காப்பாற்ற வேண்டும்.நன்றி மனோ சார்.

ஸாதிகா said...

MANO நாஞ்சில் மனோ said...
தமிழ்மணம் இனைச்சுட்டேன், ஆனால் என் ஓட்டு விழமாட்டேங்குது...???///

எனக்கும்தான்.பிளாக் ஆரம்பித்து மூன்று வருடமாகியும் தமிழ்மணம் ஓட்டுப்பட்டை இணைக்க இயலவில்லை.இப்பொழுதுதான் இணைத்தேன்.ஆனால் என்னாலும் ஓட்டுப்போட இயலவில்லை.என்ன பிரச்சினையோ?இணைத்ததற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//
பெற்றோரால் என்னதான் பண்ண முடியும் இதுக்கு? ஆனால் பெரும்பாலும் இரு பெற்றோரும் வேலைக்குப் போகும் வீடுகளில்தான் பிள்ளைகள் இப்படி பயமின்றி வெளியே சுற்றுகிறார்களோ?..
///அப்படி யென்று சொல்ல முடியாது அதிரா.

//தமிழ்ச் சென்னையில் இப்படி நிலையா?...//

என்ன இப்படி கேட்டுட்டிங்க?


ஸ்கூலுக்குப் பிள்ளை போகவில்லையெனில் ஒரு மணி நேரத்துள் பேரன்ஸ் ஸ்கூலுக்கு இன்ஃபோம் பண்ண வேண்டும், இல்லையெனில் ஸ்கூல் பேரன்ஸ்க்கு ஃபோன் பண்ணுவார்கள். பேரன்ஸ்சோடு தொடர்பு கிடைக்கவில்லையெனில், நேரே போலிசுக்குப் போன் பண்ணுவார்கள், இதுதான் எம்மிடத்திலுள்ள (இங்குள்ள) விதிமுறை.//

யூ கேயில் அப்படி பண்பாடு கலாச்சாரம் என்று கதறிக்கொண்டிருக்கும் நாட்டில் இப்படி.என்னத்தை சொல்ல?நன்றி பூஸ்

ஸாதிகா said...

//பதினைந்து வயது தான் இருக்கும். பைக்கில் நண்பர்களுடன் கூட்டமாக கடைகுள் நுழைகிறார்கள். சிலர் கருப்பு கவரில் வாங்கிட்டு போறாங்க. என்னத்த சொல்ல..... //இது சகஜமாக நடக்கின்றது.தட்டிக்கேட்பாரில்லி.போலீஸ் கூட வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருக்கும் பல சமயங்களில்.நன்றி ஆமினா.

ஸாதிகா said...

எல்லாம் சொகுசுகளையும் சிரமம் இலலாமல் கிடைத்து விடவே வேற என்ன செய்வார்கள்.//சரியாக சொல்லி விட்டீர்கள் ஜலி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

பாருக்குச் செல்லும் வழக்கம் இப்பாரினில் அதிகரித்து வருவதற்கு கட்டவிழ்த்து விட்ட அரசாங்கமும் ஒரு காரணம் அல்லவா? ////இந்த அவலத்துக்கு அரசாங்கம் ஒரு காரணம்தான்.நன்றி கணேஷ் சார்

ஸாதிகா said...

// Ramani said...
காதலியோடு திரிபவனுக்கு பாரில் இருப்பவன் தேவலை
பாரில் இருப்பவனுக்கு ரோட்டில் திரிபவன் தேவலை
ரோட்டில் திரிபவனுக்கு முட்டாளாய் வீட்டில் இருப்பவன் தேவலை
என நமக்கு நாமே ஆறுதல் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்
வேறு வழி இல்லை
சமூக சிந்தனையை தூண்டிச் செல்லும் நல்ல பதிவு//

கவிதை வரிகளிலேயே பின்னூட்டி விட்டீர்கள் ரமணி சார்.ஓட்டுக்கு நன்றி

ஸாதிகா said...

ஒற்றை வரியில் முடித்து விட்டீர்கள் ஆசியா?:-)

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம் ஆயிஷா.//
இறைவன் தான் அனைத்து மக்களுக்கும் நேர்வழி காட்டனும்.ஆமீன்

துஆ செய்வோம்.//இன்ஷா அல்லாஹ்.

ஸாதிகா said...

ஹுஸைனம்மா said...
ரொம்பவே பயமா இருக்குக்கா. ஆண்டவன்தான் காப்பாத்தணும்
ஆள்பவர்களை நம்பிப் பிரயோஜனமில்லை!! ///

கல்லூரி கேம்பஸுக்குள் பார்த்தே அதிர்ந்து விட்டேன்.அந்த மாலையே பாருக்கே எதிரில் நின்றிருந்த சிறுவர்களை கண்டு மயக்கம் வராதகுறைதான்.உண்மையில் ரொம்பவே பயமாக உள்ளது ஹுசைனம்மா.

ஸாதிகா said...

// ஜெய்லானி said...
இது பெற்றோரின் கண்காணிப்பு சரியில்லை என்பதையே காட்டுது :(

நான் படிக்கும் காலத்தில் ஒரு ரூபாய் கேட்டால் ஆயிரம் கேள்விகள் கேட்டுவிட்டே தருவார்கள். ஆனால் இப்போது நிலமை அப்படியா..????//

என்னதான் பெற்றோர் சிரத்தை எடுத்தாலும் நான் கெட்டுத்தான் அழிவேன் என்று அழிச்சாட்டியம் பண்ணும் பிள்ளைகள் கெட்டழிந்துதான் போகும் ஜெய்லானி.ஆனாலும் பெற்றோர்களின் பார்வை எப்பொழுதும் இவர்களை சுற்றியே இருக்கவேண்டும் என்பதிலும் மாற்றுக்கருத்து இல்லை.கருத்துக்கு நன்றி ஜெய்லானி.

Unknown said...

பிள்ளைகள் மட்டுமல்ல பல
பெண் பிள்ளைகளும்
இப்படித்தான்
திரிகிறார்கள்
வருந்திப்பயனில்லை
இவர்கள் திருந்தும் நிலை இல்லை

புலவர் சா இராமாநுசம்

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.ஸாதிகா,

தமிழ்க்குடிமக்கள் தள்ளாடி முகம் குப்புற மண்ணில் வீழ்ந்தால்தால்...

தமிழ்க்குடியரசு தலை நிமிர்ந்து நிற்க இயலும் என்ற ஒரு குடிகாரப்பொருளாதாரம் நம்மை கோலோச்சும் போது...

குடிப்பவர்களை மட்டும் பார்த்து குறை சொல்வது... நம்மை நாமே கேலி செய்து கொள்வது போல உள்ளது சகோ.

நாளடைவில்,
இதுவே குடிக்காதவர்களை பார்த்து... "உமது பங்காக அரசுக்கு ஏதும் நீ தரவில்லையே" என்ற உறுத்தலை குடிஅரசுக்கோ மற்ற குடிமக்களுக்கோ கொடுக்காமல் இருந்தால்...

மிகச்அதுவே சிறந்த நிலை என்பேன்..!

குடிக்காமல் இருந்தால் சிறை தண்டனை தரும் சட்டம் ஏதும் வந்து விடுமோ என பயமாக இருக்கிறது சகோ..!

குறையொன்றுமில்லை. said...

வருங்கால தலைமுறையை நினைத்தால் கவலையாத்தானிருக்கு.

Unknown said...

பெற்றோரின் கண்காணிப்பும் கண்டிப்பும் மிக அவசியம்

விச்சு said...

ரொம்ப கஷ்டம்...

Starjan (ஸ்டார்ஜன்) said...

"நாங்கெல்லாம் யூத்து"

யூத்தாம்ம்மா!! :((

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஸாதிகாக்கா.. உங்க தமிழ்மண கருவிப்பட்டையில் ஓட்டு போடமுடியலியே..

enrenrum16 said...

கேக்றதுக்கே கஷ்டமா இருக்கு.... இப்ப எஞ்சாய் பண்ணாம வேற எப்ப எஞ்சாய் பண்றதுன்னு நினச்சு பின்விளைவுகளை பத்தி யோசிக்காம இருக்காங்களே.... ஸ்கூலுக்கு, காலேஜுக்கு வரலேன்னா பேரன்ட்ஸ்க்கு டீச்சர்ஸ் போன் பண்ணினா மட்டும்தான் இந்த கொடுமைகள் கொஞ்சமாவது குறையும்....

ஹ்ம்ம்... பாருக்குள்ளே நம் நாடு கெட்டு சீரழியுது :-(((

மாதேவி said...

செல்லும் பாதையை நினைத்தால் பயமாகத்தான் இருக்கிறது....

ரிஷபன் said...

அவர்களைக் குறை சொன்னால் நமக்கு வயசாச்சு என்பார்கள்.
ஆனால் செல்போன் வைத்துக் கொண்டு அவர்கள் அடிக்கும் லூட்டியும் அத்துமீறல்களும் மிரட்டுகின்றன. இத்தனை துணிச்சல் எப்படி வந்தது என்று திகைக்கும் அளவுக்கு சிலர் செய்கிற செயல்கள் பயமுறுத்துகின்றன..

F.NIHAZA said...

பெற்றோர்களின் பணக்கஷ்டமும்...மனக்கஷ்டமும்....அவர்களுக்கு விளங்கவே விளங்காது....

இவற்றைப்புரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் வரும் போது....அதே தப்பை அவரகளின் வாரிசுகள் செய்துகொண்டிருப்பர்.....

hamid kaashif said...

என்று திருந்துவார்கள்????

சாந்தி மாரியப்பன் said...

சுதந்திரமா இருக்கோம்ன்னு நம்பிக்கிட்டு புதை குழியில் இறங்கிக்கிட்டிருக்காங்க. வருங்காலத் தலைமுறையை நினைச்சா பரிதாபமா இருக்கு.