May 4, 2014

கத்திரி வெயில்




அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் இன்றிலிருந்து ஆரம்பமாகி விட்டது.கோடை ஆரம்பித்த உடனே கத்திரி வெயிலை நினைத்து மக்கள் பயம் கொள்ள ஆரம்பித்து விடுவார்கள்.

சந்திரனும், பூமியும் சூரியனுக்கு அருகில் இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. சூரியன் பூமிக்கு மிக அருகே வரும் நாட்கள் தான் அக்னி நட்சத்திர நாட்கள்  என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

ஆண்டுதோறும் சித்திரை மாதம் 21-ந்தேதி முதல் வைகாசி மாதம் 14-ந்தேதி வரை 24 நாட்கள் கத்திரிவெயில் காலம்.இன்றிலிருந்து வரும் 28 ஆம் தேதி வரை தொடங்கி முடிந்தாலும் பருவ நிலை மாறுதலால்,சில ஆண்டுகளாகவே  கத்திரி வெயில் சீஸன் ஆரம்பிக்கும் முன்னரும் முடிந்த பின்னரும் வெயில் தாக்கம் அதிகமாகவே காணப்படுகின்றது.இந்த சீஸனில் வெயில் 114 டிகிரி வரை இருக்கும் என்று கருதுகின்றார்கள்.

தமிழ்நாட்டில் அதிகளவு வெப்பம் பதிவு செய்யப்படும் இடம் வேலூர் என்று கூறுகின்றனர்.சென்னை நகரில் காலை 10 மணிக்கு மேல் வெளியில் சென்றால் அனல் காற்று சுட்டெரிக்கின்றது.கட்டித்தொழிலாளிகள் நடைபாதை கடை உரிமையாளர்கள்,போக்கு வரத்து காவலர்கள் இரண்டுசக்கரவாகனப்பயணிகள் நிலை கொடூரமானது.

இந்தக்காலகட்டங்களில் நடுத்தரவர்கத்துக்கும் கீழுள்ளவர்கள் வீடுகளில் குளிர்சாதனவசதி செய்ய முடியாதவர்கள் மொட்டை மாடியையே படுக்கைஅறையாக மாற்றிகொள்வது வழக்கம்.புழுக்கத்தின் காரணமாக வீட்டினுள் உறங்கமுடியாத நிலை.

வெயில் வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கும் இவ்வேளையில் தென் தமிழ்நாட்டில் லேசான மழையும்,சென்னையில் மேகமூட்டத்துடன் வெப்பம் தணிந்தும் உள்ளது இன்றைய நிலை மக்களுக்கு சற்றே ஆறுதல் தரக்கூடியது.

தொலைக்காட்சியில் ரமணன் தோன்றி தென்மேற்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி இருப்பதால் 48 மணி நேரத்தில் மழை  பெய்யும் வாய்ப்பு உள்ளது என்று அறிவித்து இருப்பது நிஜமாக வேண்டும் என்பதே  சென்னை மக்களின் இன்றைய  பிரார்த்தனை.

வீதி தோறும் தர்பூசணிபழங்களும் இளநீரும் மலை போல் குவித்து வைக்கப்பட்டு இருக்கும்.கரும்புச்சாறு மிஷின் ஓய்வின்றி ஓடிக்கொண்டு இருக்கும்.ஆங்காங்கே ஜூஸ்கடைகள் வண்டிகளில் முளைத்து இருக்கும்.அதுமட்டுமல்லாது தீபாவளி சீஸனில் பட்டாசு கடை முளைப்பது போல் மசாலா மோர் , ராகிக்கூழ் விற்பனைகளும் முளைத்து இருக்கும்.கிர்ணிப்பழங்களும்,வெள்ளரிக்காயும்.பனை நுங்கு வியாபாரம் மும்முரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கும்.ஜுஸ் விற்பனை செய்யப்படும் வண்டிக்கடைகளிலும் சிறிய கடை வாயில்களிலும் டூவீலர்கள் கும்மி அடித்துக்கொண்டு இருந்தால் ஹாஜிஅலி ,ஃபுரூட் ஷாப் போன்ற கடைவாசல்களில் கார்கள் அணிவகுத்து நிற்கும்.பீச்சில் வண்டி பார்க் செய்ய இடம் இல்லாமல் வாகன ஓட்டிகள் தடுமாறிகொண்டு இருப்பார்கள்.தூரத்தில் இருந்து பார்த்தால் கடலை விட மனித தலைகள்தான் அதிகளவில் காணப்படும்.இவை எல்லாம் கோடையின் அத்தாட்சிகள்.

குளிபானங்களை தவிர்த்து கனிச்சாறுகளை,அருந்தி,சுத்தமான நீரை அதிகளவு பருகி,நார்சத்து ,நீர்ச்சத்து மிக்க காய்களை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ளவேண்டும்.அதிகளவு நீர் பருகுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள முடியும்.இதனால் ஈரப்பதம் உடலில் இருந்து ஆவியாக வெளியாவதை தவிர்த்துக்கொள்ளலாம்.

காலரா,சின்னம்மை,மஞ்சள்காமாலை,பற்பல தொற்று நோய்கள் அணுகாதிருக்க ஆரோக்கியமாக குளிர்ச்சியாக உடலைபேணி ,ஆரோக்கியமான உணவுகளை சாப்பிட்டு,வெயிலில் அதிகம் அலையாமல் அலையும் நேரத்துக்கு லேப்டாப் முன் அமர்ந்து நாலு பதிவை தேத்த ,கோடையை ஆரோக்கியமாக கழிக்க பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

டிஸ்கி: கிட்டதட்ட மூன்று மாதகாலம் என் வலைப்பக்கம் வராமல் கோடைகாலத்தில் ஜூஸ் கடை எட்டிப்பார்ப்பது போல் நானும் வலைப்பக்கம் எட்டி பார்த்து இருக்கிறேன்.

ஹாட்டான நேரத்தில் ஒரு கூலான டவுட்: டிவி லேப்டாப்,ஸ்டவ்,மிக்ஸி,கிரைண்டர்,ஃபேன்,பொங்கல் பொருட்கள்,வேட்டி இவைகளை எல்லாம் இலவசமாக விநியோகம் செய்தது போல் வரும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னர் இலவச ஏசி விநியோகம் செய்யப்படுமா???


30 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

விநியோகம் ரொம்ப ஹாட் தான்...

இனி அடிக்கடி எட்டிப்பாருங்க சகோ...

Anonymous said...

ஸாதிகா நான் புது ஆக்கம் போட தமிழ் மணம் சென்றேன் தங்கள் பெயர்...!!!!!...( I am first!!!)
கடவுளே எத்தனை நாளாச்சு! இவரை மறந்துவிட்டேனா!!!!
உடனே கிளிக்கி வருகிறேன். சரியான நேரத்தில் கத்தரி வெயில்.
மகிழ்வாக உள்ளது கருத்துப் போட்டுவிட்டேன்.
படமும் இனிப்பாக உள்ளது....
இனிய வாழ்த்து.
வேதா. இலங்காதிலகம்.( நான் இலங்கை போய்வந்து 11வது அங்கமாக எழுதுகிறேன் சரி மீதி அப்லோடிங் முடிக்க வேண்டும்.சந்திப்போம்....ஓட்டம் தான்)

Thenammai Lakshmanan said...

ஹாஹாஹா ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா என்று பராசக்தி படத்தில் பாடுவார் சிவாஜி. அது போல எனக்குப் பிடித்த உங்க பஞ்ச் இதுதான் ஸாதிகா.. லவ்யூ..மை டியர் பெண் பதிவரே. என் இனமே.. ஹிஹிஹி ////வெயிலில் அதிகம் அலையாமல் அலையும் நேரத்துக்கு லேப்டாப் முன் அமர்ந்து நாலு பதிவை தேத்த ,கோடையை ஆரோக்கியமாக கழிக்க பதிவுலக நட்புக்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.....////

கோமதி அரசு said...

கோடைக்கு ஏற்றபதிவு ஸாதிகா.
வாழ்த்துக்கள் உங்கள் ஊரில் மழை பெய்வதை கேட்டு சந்தோஷ வாழ்த்து.

இங்கு மேகம் வந்து ஏமாற்றி செல்கிறது.
மழை பெய்தால் நன்றக இருக்கும்.

”தளிர் சுரேஷ்” said...

இந்த வருஷம் கத்திரிக்கு முன்னாடியே வெயில் தாளிச்சு எடுத்திருச்சு! கத்திரி என்ன பண்ணுதுன்னு பார்ப்போம்! கடைசியா சொன்னீங்க ஒரு யோசனை சூப்பர் யோசனை ஆனா அதுக்கும் கரண்ட் வேண்டுமே!

ஸ்ரீராம். said...

சென்னைக்கு வரும் புயல்கள் எப்போதும் திசைமாறி வடநாடு சென்று விடும்! இப்போ எப்படியோ! 5 நாட்கள் மழை பெஇய்தாலும் நமக்குப் போதாது. அப்படி வறண்டு கிடக்கிறோம்!

இலவச ஏ சி தருவதாய் இருந்தாலும் இன்வர்டர் ஏ ஸி அதரச் சொல்லுங்கள் ப்ளீஸ்!

Yaathoramani.blogspot.com said...

கத்திரி வெய்யிலின் தாக்கத்தைச் சொல்லி
முடிவாக குளிர்சியான அதிக ஹாஸ்ட்லியான
கோரிக்கை வைத்துப்போனதை மிகவும் ரசித்தேன்
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

priyasaki said...

கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப்பறேன் அக்கா.
கோடைக்கேற்ற டிப்ஸ் நன்று.

Seeni said...

வந்தமைக்கு நன்றி சகோ...

பால கணேஷ் said...

கோடைக்கு வெயிலில் அதிகம் அலையாமல் லேப்டாப் முன் உட்கார்ந்து நாலைந்து பதிவுகள் தேத்த ஆசைதான். முடியுமான்னு தெரில... பாக்கலாம். கத்திரி வெயில் பதிவைப் படிக்கிற இந்த நிமிஷம் மென் மழை வெளியில்... ஹா... ஹா... ஹா...

கோமதி அரசு said...

ஸாதிகா, மழை இங்கு இல்லை என்று நேற்று உங்களிடம் சொன்னேன், என் வருத்தம் தீர இன்று மழை கொட்டோ கொட்டு என்று கொட்டுகிறது அனைவருக்கும் மகிழ்ச்சி.

ஸாதிகா said...


இனி அடிக்கடி எட்டிப்பாருங்க சகோ...//இதோ மிக சீக்கிரமாக எட்டிப்பார்த்துவிட்டேன் சகோ தனபாலன்.

ஸாதிகா said...

உடன் வந்து கருத்திட்டதற்கு மிக்க நன்றி வேதாம்மா.சில மாதங்களாக நேரமின்மையால் வலைபக்கம் வர இயலவில்லை.ஓரிரு நாளில் ஊருக்கு செல்ல இருப்பதால் மீண்டும் ஒரு நெடிதான விடுப்பு வலைப்பூவுக்கு உண்டு.

ஸாதிகா said...

ஹாஹாஹா ஆரியக் கூத்தாடினாலும் காரியத்தில் கண் வையடா //ரொம்பவே ரசித்தேன் தேனு.மிக்க நன்றி

ஸாதிகா said...

இங்கு மேகம் வந்து ஏமாற்றி செல்கிறது.
மழை பெய்தால் நன்றக இருக்கும்//பார்த்தீர்களா கோமதிம்மா.எனக்கு வந்து பின்னூட்டியதுமே உங்கள் ஊரிலும் மழை.மகிழ்ச்சியாக உள்ளது நன்றி.வாழ்க வளமுடன்!

ஸாதிகா said...

யோசனை ஆனா அதுக்கும் கரண்ட் வேண்டுமே!//கலைப்படாதீர்கள் சகோ.விரைவில் மின்சாரபிரச்சினை தீரும் என்று சொல்வதை நம்புவோம்.வருகைக்கு நன்றி தளிர் சுரேஷ்.

ஸாதிகா said...

இலவச ஏ சி தருவதாய் இருந்தாலும் இன்வர்டர் ஏ ஸி அதரச் சொல்லுங்கள் ப்ளீஸ்!//ஸ்ரீராம். சார் இன்வர்ட்டர் வைத்த ஏஸி கூட வருதா என்ன?வருகைக்கு நன்றி சார்.

ஸாதிகா said...

பதிவை ரசித்து பின்னூட்டி ஓட்டளித்ததற்கு மிக்க நன்ரி ரமணி சார்

ஸாதிகா said...

கத்திரி வெயிலை, இங்கு அனுப்பினால் நான் குளிரை அனுப்பறேன் அக்கா.
கோடைக்கேற்ற டிப்ஸ் நன்று//தோ..அனுப்பிடுறேன்.பிடிச்சுக்கறீங்களா பிரியசகி:)மிக்க நன்றி.

ஸாதிகா said...

நன்றி சகோ சீனி.

Jaleela Kamal said...

கத்திரி வெயில் அங்கு போல் இங்கு பல மடங்கு இருக்கும்..
ஆஹா நுங்கு , கரும்பு சாறு, இளநீர் இதெல்லாம் சென்னையில் இருந்தால் தான் அடிக்கடி சாப்பிடமுடியும்,

அப்ப இனி அடிக்கடி உங்க பதிவை பார்க்கலாம்.

ராமலக்ஷ்மி said...

கத்திரி வெயிலுக்கு நல்ல ஆலோசனைகள்! /இலவச ஏசி/ நல்ல கேள்வி:)!

ஹுஸைனம்மா said...

ஆஃப்டர் ஆல் சென்னை வெயிலுக்கே இந்தப் பாடுன்னா, ஜூலை-ஆகஸ்ட் அபுதாபி வெயிலில் உங்களை விட்டா என்ன செய்வீங்களோ? :-))))))))

பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லுங்க, குளுகுளுன்னு இருக்கும்!! :-))))

Geetha Sambasivam said...

ஹாஹா, இலவச ஏசி வேணுமா! ஹிஹிஹி, நல்லா இருக்கு போங்க!:)))) அதுவும் ஶ்ரீராமுக்கு இன்வெர்டரோடு கூடிய ஏசி வேணுமாமே! :))) நல்ல ஆசை தான். கத்திரி பற்றிக் கத்திரித்தாற்போல் எழுதிட்டீங்க.

ஸாதிகா said...

அப்ப இனி அடிக்கடி உங்க பதிவை பார்க்கலாம்//இல்லியே ஜலி.ஊருக்கு போகிறேன்.:)இனி ஒரு மாதத்திற்கு வலைப்பூவுக்கு விடுப்பு:(

ஸாதிகா said...

வாங்க ராமலக்‌ஷ்மி.அங்கே பங்களூரூவில் வெயில் எப்படி?

ஸாதிகா said...

பழைய சோற்றில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கச் சொல்லுங்க, குளுகுளுன்னு இருக்கும்!! :-))))//என்ன இப்படி கேட்டு விட்டீர்கள் ஹுசைனம்மா?அதெல்லாம் இல்லாமல் சம்மர் எப்படிப்போகும்?அது மட்டுமல்ல கம்பங்கூழ்,ராகிக்கூழ் எல்லாம் உண்டு.

ஸாதிகா said...

நான் கேட்டதற்கு ஸ்ரீராம் சார் வந்து இன்னும் பதில் சொல்லவில்லை.நல்ல ஆசை தான். கத்திரி பற்றிக் கத்திரித்தாற்போல் எழுதிட்டீங்க.//கருத்துக்கு மிக்க நன்றி கீதாமேம்

ஸ்ரீராம். said...

மின்சாரம் தடைப்பட்ட நேரத்திலும் வேலை செய்யும். 10அல்லது 15,000 ரூபாய் அதிகம். செய்தித் தாள்களில் பார்த்ததுதான்!

ராமலக்ஷ்மி said...

உங்களுக்கெல்லாம் மாலை ஆனால் கடல் காற்றாவது இருக்கும்:)! இங்கே வருடத்துக்கு வருடம் கோடை தாங்க முடியாததாகதான் இருக்கிறது. ஆயிரக்கணக்கில் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டதும் ஒரு காரணம்.