August 27, 2012

மகிழ்ச்சி மிகு தருணம்!


நேற்று நடந்த பதிவர் சந்திப்பு இன்று இனிமையாக மனதில் பொதிந்து மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் தந்து விட்டது.மறக்கவியலாத இனிமையான தருணம் அது.

ஒரு திருமணத்தை நடத்துவது போல் குழுக்கள் அமைத்து,ஆலோசனை நடத்தி,யார் மனமும் புண்படாமல் இருக்க வேண்டும் என்று அதிகம் அதிகம் மெனகெட்டு,எதிர்பார்த்தை விட மிகவும் சிறப்பாக அனைவரும் நிறைவுகொள்ள வைக்கும் படியாக விழாவை நடத்த உழைத்த சகோக்களுக்கு வாழ்த்துக்கள்.

விழாவினைப் பற்றி பலர் பதிவு எழுதியதில் ஒருவர் ஒரு பின்னூட்டத்திற்கு பூதக்கண்ணாடி மட்டுமல்ல,பேய் கண்ணாடி,பிசாசுக்கண்ணாடி,ஆவிக்கண்ணாடி எது வைத்துப்பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க இயலாது என்று பின்னூட்டி இருந்தார்.அதுதான் உண்மையும் கூட.இந்த சந்திப்பு ஆயத்தங்களும்,நிகழ்வுகளும்,ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது.


எழுத்துமூலமும்,புகைப்படங்கள் மூலமும் பலரை சந்தித்து இருக்கிறோம்.அவர்களை எல்லாம் இன்று நேரில் சந்தித்த பொழுது எழுந்த மகிழ்ச்சிக்கு அளவில்லை.இறுதியாக நடந்த கவியரங்கில் கலந்து கொள்ள இயலாவிட்டாலும் வீட்டிற்கு வந்து கணினி மூலம் பார்த்து மகிழ்ந்தேன்.

விழாவினை புகைப்படம் எடுப்பதற்காக கேமரா கொண்டு வந்திருந்தாலும் மற்ற நட்புக்கள் தூக்கிய கேமராக்களால் என் கேமரா பையில் இருந்து வெளியில் வர மறுத்து விட்டது.அதே போல் சக பதிவர்களும் விழாவினை பற்றி மிக அருமையான படங்களுடன் தங்கள் கருத்துக்களையும் பொழிந்துள்ளார்கள்.அந்த கருத்துக்களை இங்கு என் பதிவில் திரட்டி தந்துள்ளேன்.இனி வரும் பதிவுகளையும் அவ்வப்பொழுது சேர்த்துக்கொள்கிறேன்.

படம்:நன்றி வீடுதிரும்பல் மோகன்குமார்

1.திடுக்கிடவைக்கும் தலைப்பை தந்து விட்டு இறுதியில் //ஒரு வேளை,சில காலம் கடந்தபின் மீண்டு வரலாம்;மீண்டும் வரலாம்.//
இவ்வார்த்தைகளை ஆறுதலாக தந்திருக்கும் ஐயா சென்னை பித்தன் அவர்களின் தீர்மானத்தை சக பதிவர்கள் போல் நானும் மறுபரிசீலனை செய்து சிறப்பான முடிவெடுத்து மீண்டும் வருவார் என்ற ஆவலுடன் இப்பதிவின் மூலம் கோரிக்கை வைக்கிறேன்.


2.எந்த ஒரு பாகுபாடும் பிரச்சனைகளும் இல்லாமல் தமிழால் அன்பால் மட்டுமே ஒருங்கிணைந்து இந்த பதிவர்களின் வரலாற்றில்
ஒரு அருமையான நிகழ்வாகும்.என்று சிலாகிக்கும் கிராமத்து காக்கையின் பதிவு இது.

3.பதிவுலக நட்புக்களை சந்தித்த மகிழ்ச்சியையும்,நெகிழ்ச்சியையும் படத்தில் காணும் தன் முகத்தில் பிரதிபலிக்கும் அன்பு வல்லிம்மாவின் எண்ணங்களையும்,அவர் பகிர்ந்த புகைப்படங்களும் இங்கே.

4.இருபதாம் தேதியிலிருந்து தமிழ் மண நட்சத்திரப் பதிவராக இருக்கும் டி என் முரளிதரனுக்கு இதை யாரும் அவ்வளவா கண்டுக்கலைன்னா அதுக்கு காரணம் பதிவர் திருவிழாதான் என்று கருத்தை தன் பதிவின் தலைப்பாக வைத்து பதிவர் விழாவைப்பற்றி கூறும் கருத்து.

5.பிரமாண்டமான பதிவர் சந்திப்புக்கு ஊக்கமாக உழைத்த சில சகோக்களில் மோகன் குமாரும் ஒருவர்.அவ்வப்பொழுது மேடையேறி உரையாற்றினாலும் கேமராவை தூக்கவும் மறக்கவில்லை.அப்படி ஓடி ஓடி பதிவுகளை தன் புகைப்படக்கருவியினுள் மிக அழகாய் சிறைபிடித்து நம்முடன் பார்ட் பார்ட் ஆக பகிர்ந்திருக்கும் இவரது உழைப்பை பாராட்டாமல் இருக்க இயலாது.

6.கவிதை பாடி நெகிழ வைப்பதில் வல்லவர் இந்த பெரியவர்.வயோதிகத்தை காரணம் காட்டி ஒதுங்கி விடாமல் விழா ஏற்பாட்டுக்கு ஊக்கமுடன் ஒத்துழைத்து,விழாவை சிறக்க வைத்த புலவரய்யாவின் கருத்துக்களை கவிதை வரிகளில் காண்போமே.


7.வலைப்பதிவர்கள் கலையுலக
தலைப் பதிவர்களாக வரவேண்டும்
என வாழ்த்தி
என் கவியுரையை நிறைவு செய்கிறேன். என்று வாழ்த்தி கவிபாடிய ரிஷ்வனின் கவிதையை முழுமையாக கேட்போமா?

8.ஆதி மனிதன் பதிவர் மாநாட்டின் நேரலையை சுடச்சுட சுட்டிகளுடன் பதிவிட்டுள்ளார்.சந்திப்பை நேரில் காணாவிட்டாலும் நேரலையில் கண்டு பகிர்ந்திருக்கும் இவரது ஆரவத்திற்கு மிக்க நன்றி.//பதிவர்கள் பக்கம் கேமரா திரும்பிய போது பதிவர்கள் முகங்களை காண முடிந்தது. அதிகமானோர் சற்று முதிய பதிவர்களாக கட்சி அளித்தார்கள். அதுவும் சற்று வருத்தம் தான்.// ஆதிமனிதனின் கருத்திது.பெருமையும்,மகிழ்ச்சியும் கொள்ளவேண்டிய விஷயத்தில் வருத்தம் கொள்ள வேண்டியது ஆச்சரியம் அளிக்கின்றது.



9.இங்கிருந்து கடல்கடந்து வாழ்ந்தாலும் ஆர்வம் மிகுதியால் ”தமிழ் பதிவர் சந்திப்பு - புதிய படங்கள் ”என்று சூடாக பதிவிட்டு அவசர அவசரமாக தலைப்பை பார்த்தவுடன் பதிவுக்கு போன சக பதிவர்களை எமாற்றி விட்டோமே என்ற பரிதவிப்பில் உடனே பதிவை தூக்கி விட்டு பாங்காக மன்னிப்பும் கேட்ட சின்னத்தம்பி பாசிதின் பெரிய மனதினை பிரதிபலிக்கும் பாங்கான பதிவிது.

10.வெளிநாட்டில் வாழ்ந்தாலும் விழாவை நேரலையில் கண்டு விட்டு பதிவிட்டு இருக்கும் கும்மாச்சியின் கருத்துக்கள் இது.


11.”தமிழ்நாட்டில் இருந்து கொண்டே செல்ல முடியலை என்ன செய்ய.” ஆதங்கப்பட்டு இருக்கிறார் சின்னமலை.


12.பேசுவதற்கு வார்த்தை வராமல்,வார்த்தைகள் மனதுக்கு வசப்படாமல்,எல்லாம் சரியாக நடக்குமா,நேரத்துக்கு நடக்குமா என்று வினாடிக்கு வினாடி டென்ஷன் பட்டு(அப்போது அண்ணாவின் பி பியை செக் பண்ணி இருந்தால் எக்குத்தப்பாக எகிறி இருந்திருக்கும்)இறுதியில் விழாகுழுவினருக்கு பிரசவ வேதனைக்கு பின் மழலை முகத்தைக்கண்டதும் தாய்க்கு கிடைக்கும் சந்தோஷத்தைப்போல விழா சிறப்பாக நடைபெற்ற மகிழ்ச்சியில் சந்தோஷத்தில்,நெகிழ்ச்சியில் அன்று நடந்த நிகழ்வுகளை இரவெல்லாம் ரீவைண்ட் பண்ணி தூக்கத்தை தியாகம் செய்து உணர்வுமழையை கொட்டிய கணேஷண்ணாவின் சந்தோஷத்தை பார்ப்போமா?


13.தீபாவளிக்குத்தான் பட்டாசு விடுவார்கள்.பதிவர் விழாவுக்கும் பட்டாசு கொளுத்தி (தலைப்பை சொன்னேன்.அப்புறம் யாரும் பட்டாசு சப்தம் கேட்கவே இல்லை என்று சொல்லிவிடக்கூடாது)மகிழ்ந்திருக்கின்றனர் கவுண்டமணி செந்தில்.

14.ஓடி ஓடி நிகழ்ச்சிக்காக உழைத்து சடுதியில் புகைப்படங்களும் எடுத்து பதிவிட்டு இருக்கும் மெட்றாஸ்பவன் சிவாவின் பகிர்வு.

15.அமைதியாக அமர்ந்து நிகழ்வுகளை கண்டு களித்து //கவியரங்கத்தை தவிர்த்திருக்கலாம் என்பதே பலரின் எண்ணமாக இருந்தது. அந்த நேரத்தில், பதிவர்களுக்கு பயனளிக்கும் புதிய விஷயங்களை அறிமுகப்படுத்தி இருக்கலாம். நண்பர் சுரேகா, கேபிள் போன்றோர் இருந்தனர். அவர்களை இன்னும் நல்லவிதமாக உபயோகப்படுத்தி இருக்கலாம்.// தன் கருத்தை கூறி இருக்கின்றார் எல் கே.மேலும் பார்க்க எல் கே தளத்திற்கு செல்லுங்கள்.


16.பதிவர் சந்திப்பில் நிகழ்ந்த கவித்துளிகளைப்பற்றி பந்தியிலிட்டவர் தமிழ்ராஜா.


17.கவிதாயினிக்கு கவிபாட மட்டுமல்ல கட்டுரையாக்கவும் கதையாக்கவும் தெரியும் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் சசிகலா.ஆம் சசிகலாவும் அலமு மாமியும் சம்பாஷித்த சுவாரஸ்ய நிகழ்வுகளை வாசித்து களியுங்கள்.


18.பதிவர் சந்திப்புக்காக 750 கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து வந்து விட்டு மேலும் 30 கிலோ மீட்டர் தாண்டி வருவதற்குள் நேரம் சதி செய்து விட்டதை ஆதங்கத்துடன் பகிர்ந்து அடுத்த பதிவர் சந்திப்புக்காக இப்பொழுதே காத்திருக்கும் கூடல் பாலா.


19.சென்னை திணற போகிறது,சென்னையை நெருங்கும் சுனாமி,
பதிவர்கள் செய்யும் அட்டகாசங்கள்( மனதை வருத்தும் செய்தி ) ,இப்படி அதிரடியாக தலைப்பு வைத்து பார்ப்பவர்களை ஆவலுடன் பரபரப்புடன்,திகிலுடன் பதிவை படிக்க வைப்பது இப்போதைய டிரண்டாகவே மாறிவிட்டது.சென்னை பதிவர் சந்திப்பை திட்டி 10 தலைப்புகள் என்று தலைப்பிட்டு எழுதி இருப்பவர் சங்கவி.


20.நானும் வருகிறேன் என அடம் பிடித்த இணையை சமாளித்து விட்டு தனியே வந்து பதிவர் சந்திப்பில் கலந்து கொண்ட இரா.மாடசாமி. அவர்கள் மனநிறைவுக்காக எழுதிய பகிர்வு இது.


21.எங்கெங்கோ பிறந்து வளர்ந்தவர்களை ஒரு புள்ளியில் ஒன்றிணைக்கும் இந்தப் பதிவுலகம் - ஓட்டு, பின்னூட்டம், மொக்கை, கும்மி, அரசியல், வம்பு என்ற பொழுது போக்குகள் கடந்து சமூகம் சார்ந்த உதவிகளுக்கு மிக முக்கியப் பங்காற்றும் ஒரு சக்தியாக மாறும் என்ற நம்பிக்கை//பலாபட்டறை சங்கரின் இந்த நம்பிக்கைதான் அனைத்து பதிவர்களின் நம்பிக்கையும்.

22.வெற்றி வெற்றி மாபெரும் வெற்றி என்று வெற்றியை முழங்கும் ரஹீம் கசாலி.பதிவர் சந்திப்புக்காக இவரது உழைப்பும் அபரிதமானது அல்லவா?

23.எல்லோரும் பதிவர் சந்திப்பில் நேரில் கலந்து விட்டோ,நேரலையில் கண்டு விட்டோ விமர்சனம் செய்து பதிவிடுகின்றார்கள் ஆனால் சதீஷ் செல்லதுரை பதிவர் சந்திப்பு பதிவுகளில் எவை சிறந்தவை என்று பட்டியலிடுகின்றார்.


24.பதிவர் சந்திப்பில் கலந்துகொண்ட அசதியிலும்,காலையில் மதியம் மாலையில் என்ன நடந்தது என்று விலாவாரியாக பதிவிட்டதுமில்லாமல்,பழைய பதிவர் சந்திப்புகளையும் தேடிப்பிடித்து சுட்டிகளுடன் தந்து "ஸ்ஸ்ஸ்ஸ்அப்பாடா" என அசந்து,படிப்பவர்களை அசத்தி பதிவிட்டு இருக்கும் தமிழ்வாசி பிரகாஷின் இடுகை.


25.வலைப்பூவின் தலைப்பைப்போல் பேச்சிலும் சுறுசுறுப்பிலும் அசத்திய அட்ரா சக்க செந்தில் குமார் வேலைப்பளுவிலும் , கணக்கு பயின்று விட்டு கணக்கில்லாமல் புகைப்படங்கள் எடுத்து பதிவிட்டு இருக்கின்றார். //அவ்வ்வ்..பல்பு பல்பு..//என் மூலமாக சி.பி.செ.கு தம்பி பல்பு வாங்கியதில் எனக்கு மட்டற்றமகிழ்ச்சி.

26.கடிகார முள்ளோ டிக் டிக்
என இசைக்கிறது
நெஞ்சமோ தக் தக்
என களி நடமிடுகிறது.//சந்திப்புக்கு சென்று விட்டு உணர்வுகளை கவிபாடி இருக்கு ஸ்ரவாணியின் கவிதை வரிகள்.

27.பதிவர் திருவிழாவை பற்றி இருபத்து ஐந்து குறிப்புகளாக கொடுத்து சில்வர் ஜூப்ளியே கொண்டாடிவிட்ட ஆர் வி சரவணனின் சுவாரஸ்ய பதிவு.


28.இது பதிவர் வலைமனை சுகுமார் சுவாமிநாதனின் சந்திப்பனுபவம்.சந்திப்புக்கு பாதியில் சென்றாலும் தெளிவாக விளக்கி இருக்கிறார்.

29.அருமையான குழுமம்.ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டு இந்தக்குழு அந்தக்குழு என்றில்லாமல் அனைவருமே ஒரே குழு என்ற மனஎண்ணத்தோடு செயல்பட்டு இருக்கின்றார்கள் என்று சந்திப்பை சிலாகித்து பேசும் உண்மைதமிழனின் கருத்துக்களை காண்போமா?


30.சேலம் தேவாவின் சுருக்கமான பகிர்விது


31.இதுவரை யாருக்கும் முகம் காட்டாமல் இருந்த பதிவர் சேட்டைக்காரன் என்ற திரு ராஜாராமன் அத்தனை பேரின் அன்புமழையில் நனைந்ததால் ஜலதோஷம் பிடித்து தும்மிக்கொண்டு இருப்பதாக கூறுகிறார்.நண்பர்கள் பொழிந்த அன்பு மழையில் நனைந்த இவர்//எனது சூழ்நிலையைப் பொறுத்து, இனி இதுபோன்ற சந்திப்புகள் எங்கு நிகழ்ந்தாலும் கட்டாயம் வர முயற்சி செய்வேன். என்றும் சொல்லுகின்றார்.

32.பட்டுக்கோட்டை பிரபாகரின் கைகுழுக்களிலும்,சுரேகாவின் வாழ்த்திலும் சிலாகித்துப்போன மயிலன் பாடிய கவிதையை பாருங்கள்.

33.பதிவர் சந்திப்பு ஏற்பாட்டுக்கு இருதயமாக செயல் பட்ட கவிஞர் மதுமதி தனக்கேற்பட்ட திக் திக் அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.சுறு சுறுப்பாக உழைத்த அவரது பணி பாராட்டுக்குறியது.

34.பதிவர் சந்திப்பின் மூலகர்த்தாக்களை பட்டியலிடுகின்றார் சகோ மோகன்குமார்.சுறுசுறுப்பாக உழைத்து மாபெரு பதிவர் விழாவை வெற்றிகரமாக நடத்தி முடித்த பெருமைக்கு உரியவர்களை நாமும் வாழ்த்துவோமே!

35.மூத்தோர் பாராட்டுவிழா பதிவர் சந்திப்புக்கு ஒரு மகுடமாக இருந்தது.அதனை வெகு அழகாக படம் எடுத்து போட்டு இருப்பவர் மோகன் குமார்.


36.பதிவர் சந்திப்பில் நடந்தது என்ன என்று பரபரப்பான தலைப்பை வைத்து எழுதி இருப்பவர் அனந்து.

37.பதிவர் சீனுவின் பதிவர் சந்திப்பின் முதல் பார்வை இது.படங்களுடன் பகிர்ந்துள்ளார்.


38.பதிவர் சந்திப்பில் படுத்திய நான் பேச பயந்த நண்பர்கள் ! இப்படி தலைப்பிட்டு தான் எடுத்த படங்களை பகிர்ந்திருக்கின்றார் சசிகலா.

39.அரிய புகைப்படங்களுடன் நம்மை டைனிக் ஹாலுக்கு அழைத்து செல்கின்றார் மோகன்குமார்.நிகழ்வுகளை பதிவில் ஏற்றி வராதவர்கள் எல்லாம் பார்க்க வேண்டு என்ற ஆவலில் பாங்காக படம் எடுத்து பகிர்ந்த மோகன் குமாரை பாராட்டாமல் இருக்க முடியாது.


40.பதிவர் சந்திப்பால மீண்டும் உயிர்த்தெழுந்தது பதிவுலகம் என்று பாராட்டும் சங்கவி.


41பதிவர் சந்திப்பில் என்னைத் தாக்கிய பதிவர்களும் என்னை நோக்கிய பதிவர்களும் என்று தலைப்பிட்டு கவிஞர் மதுமதியின் பதிவைக்கணடு மனம் விட்டு சிரிக்கலாம்.



42.வெகு அருமையாக நிகழ்ச்சிகளை தொகுத்து பலரின் பாராட்டுக்களைபெற்ற கவிஞர் சுரேகாவின் பதிவை பாருங்கள்.

43.பதிவர் சந்திப்பினால் கடுப்பாகிப்போன முருகபெருமான் இப்படி தலைப்பிட்டு தன் கருத்தை பதிந்து இருக்கின்றார் சகோ ராஜி.

44.பதிவர் சந்திப்பில் பி கே பி சாரின் உரையும் எனது பதிவும் என்று ஒப்பீடு செய்யும் அதிரடி ஹாஜா.

45.சந்திப்புக்காக சுறுசுறுப்பாக உழைத்த ஜெயக்குமார் வரவு செலவு கணக்கை என்ன ஒரு பொறுப்பாக தொகுத்து பதிவு செய்து இருக்கின்றார்!!இவரது ஆர்வமும்,உழைப்பும் மிகவும் பாராட்டத்தக்கது.

46கோவை பதிவர் சந்திப்புதான் டாப்..மற்ற சந்திப்புகளை விட! என்று தலைப்பிட்டு கடுப்பாக்கிய ஷர்புதீன் பதிவின் முடிவில் வழக்கம் போல் சிரிக்கவைப்பதை பாருங்கள்.

47.பதிவர் சதிப்பு வெற்றிக்கு உழைத்தவர்ள் அனைவரையும் படங்களுடனும் குறிப்புகளுடனும் நமக்கெல்லாம் பதிவாக்கித்தந்திருப்பவர் கவிஞர் மதுமதி


48.பதிவர் சந்திப்பில் அலுக்காமல் எக்கசக்கமாக புகைப்படங்கள் எடுத்து நிகழ்ச்சிக்கு வராதவர்களுக்கு மட்டுமல்ல வந்தவர்களும் மகிழ்ச்சியுடன் ரீவைண்ட் பண்ணி பார்க்கும் வகையில் அழகிய படங்கள் எடுத்து பகிர்ந்திருப்பது வேறு யாராக இருக்க முடியும்.ஆம்; மோகன் குமார்தான்.

49.ஒவ்வொருவரும் சமைத்து
கொண்டு வந்திருந்தனர்
பரிமாறுவதற்கான அன்பை ....
பார்வைகளால் மட்டும்
அதிகமாய் பரிமாறப்பட்டது . இப்படி அழகாக கவிதை சமைத்து பந்தியிலிட்டு இருப்பவர் கோவை மு சரளா


50.தன் மனதில் பொக்கிஷமாக பதிந்து போன பதிவர் திருவிழாவை வெகு அருமையாக பதிவிட்டு இருப்பது ரஞ்சனி நாராயணன் அம்மா அவர்கள்.கூடவே தனக்கு கிடைத்த பரிசு மற்ற புகைப்படங்களையும் பகிர்ந்திருக்கின்றார்

51.சென்னை பதிவர் மாநாடு சாதித்தது என்ன?விளக்கமளிப்பவர் மோகன்குமார்.


52.மோகன் குமாரின் ஆதங்கமான பகிர்வு.கூடவே ஒரு பொருத்தமான கழுதைகதையினையும் சொல்லி இருக்கின்றார்.


53.வெற்றிகரமான பதிவர் சந்திப்பை நடத்தி சாதனை செய்துவிட்டு பதிவர் சந்துப்பு பிரபல பதிவர்களை புறகணித்ததா என்ற தலைப்பில் விளக்கம் கொடுத்து இருப்பவர் கவிஞர் மதுமதி.

54.தன் பங்கிற்கு பதிவர் சந்திப்பைபற்றி சொல்லி இரூகும் அரசனின் பதிவு இது.

55.லக்ஷ்மியம்மா படங்களுடன் பதிவிட்டு இருக்கின்றதைப் பாக்கலாமா?


56.ஆமினாவின் அட்டகாசப்பகிர்வு.அவருக்கே உரித்தான நகைச்சுவையுடன் சுவாரஸ்யமாக ,படங்களுடன் பகிர்ந்துள்ளதைப்பாருங்கள்.


57.பட்டுக்கோட்டை பிரபாகரின் தீவிர ரசிகரான இவர் அவரை பதிவர் சந்திப்பில் நேரில் பார்த்துவிட்டு மனம் எப்படி துள்ளிக்குத்தித்தது என்பதை விளக்குகின்ரார் ஃபாரூக்







84 comments:

Unknown said...

நல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க... எல்லார் பதிவினையும் மெதுவாக பார்க்கனும்..

Admin said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோ.!

முன்பு புகைப்படத்தில் உங்களை பார்த்திருக்கிறேன். நேற்று தங்கள் மேடையில் பேசியதை வீடியோவில் பார்த்தேன்.

:D :D :D

அனைவரின் கருத்துக்களையும் தேடிப்பிடித்து பகிர்ந்திருப்பது சிறப்பு. என் பதிவையும் (???) இணைத்ததற்கு நன்றி சகோ.!

வை.கோபாலகிருஷ்ணன் said...

அனைத்துப்பதிவர்களின் பதிவுகளையும் அருமையாகத் தொகுத்துக் கொடுத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஒருசிலவற்றை மட்டுமே பார்த்தேன். மீதியைப்பார்க்க ஒரு வாய்ப்பாக உள்ளது இந்தத் தங்களின் அருமையான பதிவு.

மிக்க நன்றி.

ஸாதிகா said...

பாருங்கள் சிநேகிதி.உடன் வந்து கருத்து தந்ததற்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

வ அலைக்கும் சலாம்.//முன்பு புகைப்படத்தில் உங்களை பார்த்திருக்கிறேன்.//ஆச்சரியமாக உள்ளது!கருத்துக்கு மிக்க நன்றி பாசித்

ஸாதிகா said...

இச்சந்திப்பில் நீங்களும் வருவீர்கள் என்று எதிர்பார்த்தேன் வி ஜி கே சார்,கருத்துக்கு மிக்க நன்றி.

அருள் said...

பதிவர் சந்திப்பு முதல் நிகழ்வு போன்று இல்லை. சிறப்பான நிகழ்வை நடத்தியவர்களுக்கு நன்றி. நான் பங்கேற்ற முதல் பதிவர் நிகழ்வும் இதுதான்.

மது, மதம், சாதி: மிகத் தீமையானது எது?

http://arulgreen.blogspot.com/2012/08/blog-post_27.html

Menaga Sathia said...

விழா சிறப்பாக நடந்ததில் மிக்க மகிழ்ச்சி...இனி ஒவ்வொரு பதிவாக நேரமிருக்கும் போது பார்க்கனும்...

CS. Mohan Kumar said...

விழாவுக்காக உழைத்தவர்கள் போல தேடி தேடி நீங்களும் உழைத்து அணைத்து பதிவுகளின் லிங்க் தந்துட்டீங்க அருமை. சில நிமிடம் முன் வரை வந்த பதிவுகள் அனைத்தும் இருக்கு. முடிந்தால் தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யுங்க

நீங்க வித்தியாசமானவர் என மறுபடி ஒருமுறை நிரூபிச்சிட்டீங்க

Asiya Omar said...

சூப்பராக பகிர்ந்த தோழிக்கு பாராட்டுக்கள். தாங்களும் கலந்து கொண்டது மிக்க மகிழ்ச்சி.

செய்தாலி said...

சகோ
நேற்று நேரலையில் கண்டேன்

என் பெயர் சாதிகா

ஒரு சின்ன அறிமுகம்

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ அருள்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.நேரம் கிடைக்கும் பொழுது பாருங்கள்.

ஸாதிகா said...

மோகன் குமார்.தங்கள் கடும் உழைப்புடன் என்னை ஒப்பீடு செய்கின்றீர்களே!!

//முடிந்தால் தொடர்ந்து இங்கு அப்டேட் செய்யுங்க // கண்டிப்பாக மோகன்குமார்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி தோழி ஆசியா.

ஸாதிகா said...

மிக்க நன்றி சகோ செய்தாலி.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

இவ்வளவு பேர் பதிவு போட்டுட்டங்களா..


திரட்டி மாதிரியான அழகிய தொகுப்பு...

Seeni said...

ada daa!

nalla padiyaa nadanthamaikku makizhchi!

ஸாதிகா said...

இவ்வளவு பேர் பதிவு போட்டுட்டங்களா..


திரட்டி மாதிரியான அழகிய தொகுப்பு...//என் கண்களுக்கு புலப்படாமல் போனவை எத்தனை பதிவுகளோ:(
கருத்துக்கு மிக்க நன்றி கவிதை வீதி சௌந்தர்

ஸாதிகா said...


nalla padiyaa nadanthamaikku makizhchi!//அதே மகிழ்ச்சிதான் இங்கேயும் சகோ சீனி.

MARI The Great said...

தங்களின் சுய அறிமுகத்தை நேரலையின் பார்த்தேன் சகோ!

எல்லோரது பதிவையும் தேடி பிடித்து தொகுத்து எழுதியிருப்பது சிறப்பு!

Yaathoramani.blogspot.com said...

விழாவினைப் பற்றி பலர் பதிவு எழுதியதில் ஒருவர் ஒரு பின்னூட்டத்திற்கு பூதக்கண்ணாடி மட்டுமல்ல,பேய் கண்ணாடி,பிசாசுக்கண்ணாடி,ஆவிக்கண்ணாடி எது வைத்துப்பார்த்தாலும் குறைகள் கண்டு பிடிக்க இயலாது என்று பின்னூட்டி இருந்தார்.அதுதான் உண்மையும் கூட.இந்த சந்திப்பு ஆயத்தங்களும்,நிகழ்வுகளும்,ஒரு நல்ல முன்னுதாரணமாக இருந்தது.


மிகச் சரியான கருத்து
அனைத்துப் பதிவர்களின் தளத்திற்கும் சென்று படித்து
விடுபட்டுப்போன பதிவுகளைப் படிக்கும் படியாகச் செய்த
தங்களுக்கு மனமார்ந்த நன்றி

சி.பி.செந்தில்குமார் said...

ஆஹா!

சி.பி.செந்தில்குமார் said...

:-)

எல் கே said...

good collection of posts regarding the meet.

Thanks for mentioning mine

Vijiskitchencreations said...

ஸாதிகா சூப்பர். நல்ல ஒரு விழா. நாங்கள் எல்லாம் கலந்துக்க முடியவில்லை என்கிற வருத்தம் ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் உங்களின் இந்த எல்லா பதிவர்களின் சந்திப்பு + படங்களோட அசத்திட்டிங்க. வாழ்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி வலையுலகத்துக்கு நன்றி.
எல்லாமே நன்றாக இருந்தது.
நான் லைவ் பார்க்க முடியல்லை ஆனல் அந்த வருத்ததையும் ஆதிமனிதன் என்கிகிற வலைதளத்தில் லைவ் பார்க்க இயலாதவர்களுக்காக ரிக்கார்டிங்க லிங்க குடுத்தருக்கிறார்கள் அதில் போய் பார்த்து ரசித்தேன். உண்மையிலேயே நல்ல ஒரு விழா.
நன்றி எல்லா வலையுலக பதிவர்களுக்கும் நன்றாக பங்களித்திருக்காறர்கள்.

Avargal Unmaigal said...

உங்களை முதல் முறையாக பார்த்தேன் மிக அடக்கமாக வந்து பேசினால் வாயில் உள்ள முத்துக்கள் எல்லாம் வெளிகொட்டி வீணாக போய்விடுமோ என்று எண்ணி மிக அளவோடு பேசி சென்று விட்டீர்கள்

நாம்தான் விழாவுக்கு செல்ல முடியவில்லை அதனால் விழா பற்றி நம்மால் எதாவது எழுத முடியாது அதனால் விழா பற்றி எழுதுபவர்களின் பதிவுகளை தொகுத்து போடலாம் என்று நினைத்து இருந்தேன்.இங்கு இரவு நேரமாக இருந்ததால் காலையில் எழுந்து போடலாம் என்று நினைத்து தூங்கி எழுந்த நான் முதலில் பார்த்த பதிவு உங்களூடையதுதான்.

சிலர் பதிவுகளைதான் காப்பி பேஸ்ட் செய்து போடுகிறார்கள் என்றால் நீங்கள் மற்றவர்கள் நினைப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள் பதிவு இடுவதற்கு முன்னாள் இட்டுவிடுகிறீர்கள்

எனது எண்ணங்களை திருடி பதிவாக இட்ட உங்களுக்கு எனது கடும் கண்டனத்தை இங்கு பாராட்டாக பதிவு செய்து போகிறேன். இனிமேல் பதிவு இடுவதற்கு முன்பு என்னிடம் கலந்து ஆலோசித்து பதிவு இட வேண்டும் இல்லையெனில் அண்ணணிடம்தான் முறையிட வேண்டும் என் எண்ணங்களை மதினி அவர்கள் திருடுகிறார்கள் என்று..

மாதேவி said...

மிக்க நன்றி. அனைவரின் பகிர்வையும் பார்க்கின்றேன்.

நல்ல விழா நேரலையில் கண்டு மகிழ்ந்தோம்.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஸாதிகா அக்கா அருமையான தொகுப்பை தந்து கொண்டு இருக்கீங்க

நானும் நினைத்து கொண்டு இருந்தேன் வர இயல வில்லைஎன்றாலும் சென்றவர்களின் பதிவை தொகுக்கலாம் என்று இன்று முடிந்த வரை சில் பதிவுகள் பார்த்தேன்.

ஆனால் இங்கு பார்த்ததில் எனக்கும் மகிழ்சியே.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல தொகுப்பு... பாராட்டுக்கள்...

பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு வாழ்த்துக்கள்... நன்றி... (TM 7)

ராஜ நடராஜன் said...

பல பதிவுகளையும் திரட்டியது வரவேற்க தக்கது.பகிர்வுக்கு நன்றி.

Angel said...

அருமையாக தொகுத்து பகிர்ந்ததற்கு நன்றி ஸாதிகா.
எங்களால் கலந்து கொள்ள முடியல என்ற ஆதங்கத்தை உங்களை போன்றோரின் பதிவு ப்ளஸ் படங்கள் மூலம் தீர்த்து வைத்ததற்கு மீண்டும் மீண்டும் நன்றிகள்

Anonymous said...

அழகான சிறந்த தொகுப்பிற்கு நன்றி தோழி சாதிகா !
நீங்களும் கவியரங்கம் மிஸ் பண்ணிட்டீங்களா ?

விச்சு said...

நல்ல தொகுப்புதான்.. ஒவ்வொருத்தர் பதிவா படிச்சிக்கிட்டு இருக்கேன்.

பட்டிகாட்டான் Jey said...

உங்களைப் போன்ற அம்மனிகள் வருகை, விழாவை மேலும் மெருகூட்டியது. நன்றி சகோ.

ஸாதிகா said...

வரலாற்றுசுவடுகள் கடல் கடந்து வசித்து வந்தாலும் உங்கள் ஆர்வம் கண்டு மகிழ்ச்சியும் நன்றிகளும்

ஸாதிகா said...

மிக்க நன்றி ரமணி சார்.நேரில்கண்டும் அளவளாவ நினைத்தும் முடியாத பதிவர்களில் தாங்களும் ஒருவர்.

ஸாதிகா said...

செந்தில்குமாரின் வரவுக்கு நன்றி.ஆஹா என்றும்,சின்னதா ஸ்மைலி போட்டும் கனகச்சிதமாக முடித்துக்கொண்டீர்கள்!:)

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ எல் கே.

ஸாதிகா said...

விஜி போனிலும் மெயிலிலும் நீங்கள் பதிவர் விழாவுக்கு போய்த்தான் ஆகணும் என்று என்னை மிரட்டிக்கொண்டே இருந்து இப்பொழுது பதிவிட்டு இருப்பதற்கும் நீங்களும் ஒரு காரணம் விஜி.மிக்க நன்றி

ஸாதிகா said...

வாயில் உள்ள முத்துக்கள் எல்லாம் வெளிகொட்டி வீணாக போய்விடுமோ என்று எண்ணி மிக அளவோடு பேசி சென்று விட்டீர்கள்//உண்மைதான் அவர்கள் உண்மைகள்.அன்று எனக்கு பல்வலி.அதிகம் பேசினால் பற்கள் கொட்டிவிடுமோ என்ற பயமும் ஒரு காரணம்தான்.ஹி..ஹி..

//சிலர் பதிவுகளைதான் காப்பி பேஸ்ட் செய்து போடுகிறார்கள் என்றால் நீங்கள் மற்றவர்கள் நினைப்பதை எப்படியோ தெரிந்து கொண்டு அவர்கள் பதிவு இடுவதற்கு முன்னாள் இட்டுவிடுகிறீர்கள்// ஐயையோ...எனக்கு மந்திரம் தந்திரம் எல்லாம் தெரியாதுங்கோ.

//இனிமேல் பதிவு இடுவதற்கு முன்பு என்னிடம் கலந்து ஆலோசித்து பதிவு இட வேண்டும் இல்லையெனில் அண்ணணிடம்தான் முறையிட வேண்டும் என் எண்ணங்களை மதினி அவர்கள் திருடுகிறார்கள் என்று..//பதிவர் சந்திப்பில் கலந்து கொள்ளாத தம்பிக்கு மதினி சரியாகத்தான் செய்து இருக்கிறார்.இது அண்ணனின் கருத்து.

ஸாதிகா said...

மிக்க நன்றி மாதேவி.

ஸாதிகா said...

மிக்க நன்றி ஜலி.பிறகு உங்களை சந்திக்கிறேன்.

ஸாதிகா said...

பாராட்டி ஓட்டு அளித்த திண்டுக்கல் தனபாலனுக்கு நன்றிகள்.

ஸாதிகா said...

வாங்க ராஜராஜன் .முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்கநன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

உங்களை அங்கு சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி ஸ்ரவாணி.

//நீங்களும் கவியரங்கம் மிஸ் பண்ணிட்டீங்களா ?// ஆம்.ஆனால் வீட்டுக்கு வந்து இணையம் மூலம் பார்த்து விட்டேன்.உங்கள் கம்பீரமான கவி நடைக்கு வாழ்த்துக்கள் ஸ்ரவாணி.

ஸாதிகா said...

பொறுமையா படிங்க விச்சு.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வாங்க ஜெயகுமார்.உங்கள் உழைப்பும்,பதிவர் தினதன்று சுறு சுறுப்பாக ஆற்றிய பணியும் பிரமிக்க வைத்தன.வாழ்த்துக்கள்.கருத்துக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

சூப்பர்.. ஸாதிகா அக்கா புண்ணியத்தில பல பதிவர்களைப் பார்த்தாச்சூஊஊஊஊஊ.... நன்றி ஸாதிகா அக்கா.

ராமலக்ஷ்மி said...

மகிழ்ச்சி மிகு தருணங்களை மொத்தமாகக் காணத் தந்துவிட்டீர்கள்! அத்தனை பேருக்கும் வாழ்த்துகளும் பாராட்டுகளும்!

அனைவருக்கும் அன்பு  said...

அருமையான தொகுப்பு அனைத்தையும் காண ஒரு வாய்ப்பு நான் தான் இதில் இல்லாமல் போய்விட்டேன் ........இன்றுதான் என் படைப்பை படையலிடபோகிறேன்

r.v.saravanan said...

என் பதிவை பற்றி தாங்கள் சொல்லியிருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி நன்றி

r.v.saravanan

VijiParthiban said...

நல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க...

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா, இது பதிவர் விழாவுக்குச் சமமான பதிவாக இருக்கிறதே. மனம் நிறைந்த பாரட்டுகள் மா. எத்தனை உழைப்பு. அத்தனை பதிவுகளையும் படித்து இணைப்பும் கொடுத்திருக்கிறீர்கள். இறைவனுக்கு நன்றி. உங்களுக்கு என் மனப்பூர்வமான ஆசிகள்.

பால கணேஷ் said...

இன்னனிக்குத்தான் மீண்டும் வலையில உலாவ ஆரம்பிச்சிருக்கேன் நான். என் உணர்வுகளை சரியாப் புரிஞ்சுக்க(பிபி எகிறிய விஷயம்) தங்கைகளால தான் முடியும். புரிஞசுக்கிட்டதுக்கும். இத்தனை சிரத்தையா ஒரு டைரக்டரி மாதிரி தொகுத்துத் தந்ததுக்கும என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

Paleo God said...

அருமையான தொகுப்பு :))

மிக்க நன்றிங்க.

ஸாதிகா said...

பல பதிவர்களைப் பார்த்தாச்சூஊஊஊஊஊ..//மகிழ்ச்சி நன்றி அதிரா.

ஸாதிகா said...

மகிழ்ச்சி மிகு தருணங்களை மொத்தமாகக் காணத் தந்துவிட்டீர்கள்! //வரிகளில் மகிழ்ச்சி ராமலக்ஷ்மி நன்றி.

ஸாதிகா said...

மிக்க நன்றி சரளா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஆர் வி சரவணன்

ஸாதிகா said...

நல்ல எஜ்யாய் பண்ணி இருக்காங்க...//உண்மை விஜி பார்திபன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

வல்லிம்மா உங்கள் கருத்துக்கும்,ஆசிக்கும் வாழ்த்துகக்ளுக்கும் அன்புக்கும் மிக்க நன்றிம்மா.

ஸாதிகா said...

இத்தனை சிரத்தையா ஒரு டைரக்டரி மாதிரி தொகுத்துத் தந்ததுக்கும என் மனம் நிறைந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.//ஆஹா..அழகான வார்த்தை சொல்லி பாராட்டிய கணேஷண்ணாவுக்கு தங்கையின் நன்றிகள்.

ஸாதிகா said...

வாங்க சகோ ஷங்கர்.முதல் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

நிரஞ்சனா said...

எவ்வளவு அழகா எல்லாரோட பதிவுகளையும் பாக்கற மாதிரி தொகுத்துக் கொடுத்திருக்கீங்க. அசத்தறீங்க SS! Superb!

Ranjani Narayanan said...

அன்பு சாதிகா, உங்கள் பதிவு, பதிவர் சந்திப்பின் பல பரிமாணங்களை வெளிப்படுத்தி இருக்கிறது.
உங்களை பதிவர் விழாவில் சந்தித்தது மகிழ்ச்சியைக் கொடுத்தது.
நீங்கள் கொடுத்திருக்கும் இணைப்புகள் படிக்க ஒரு நாள் போதுமா?
என் பதிவினைப் படிக்க
ranjaninarayanan.wordpress.com
அன்புடன்,
ரஞ்ஜனி

சீனு said...

ஒரு பதிவுகளையும் விடமால் இவ்வளவு ஆர்வத்துடன் நீங்கள் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக மலைக்க வைக்கிறது...

வாழ்த்துக்கள் நன்றிகள் வணக்கங்கள்

துளசி கோபால் said...

அருமையான தொகுப்பு .

இனிய பாராட்டுகள்.

Anonymous said...

அப்பப்பா இவ்வளவும் பார்க்க.....
பேசாமல் பிளைட் எடுத்து விழாவிற்கு வந்திருக்கலாம் போல உள்ளது டென்மார்க்கிலிருந்து. மிக்க நன்றி சாதிகா. சிலவற்றைப் பார்த்தேன்.
வேதா. இலங்காதிலகம்.

ஆமினா said...

தேங்க்ஸ் அக்கா! இவ்வளவு நேரம் தமிழ்மணம் டாஸ்போர்ட்ன்னு சுத்திட்டிருந்தேன்! இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க! நேரம் மிச்சம் எனக்கு :-)

நேற்று தான் ஊர் வந்து சேர்ந்தேன். இன்ஷா அல்லாஹ் போன் பேசுறே!

உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் சந்தித்தது மட்டற்ற மகிழ்ச்சி அக்கா!

Admin said...

வணக்கம் சகோ.. தற்போதே இந்த பதிவை பார்க்க முடிந்தது.நான் ஒவ்வொரு பதிவாய் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே தொகுத்திருக்கிறீர்கள்.மிக்க மகிழ்ச்சி.. நன்றி..

உண்மைத்தமிழன் said...

கட்டுரைகளின் ஒட்டு மொத்த தொகுப்பிற்கு மிக்க நன்றிகள் ஸாதிகா..!

இத்தகைய ஓய்வறியாத உழைப்பும், செயலும்தான் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக்கியது..!

வாழ்க வளமுடன்..!

சசிகலா said...

மிகவும் மகிழ்வான அந்த நிகழ்வை ரசித்ததோடு அல்லாமல் அதனை பதிவாக்கிய அனைவரின் தளங்களையும் தனிதனித்தனியே குறிப்பிட்ட விதம் பிரம்மிக்க வைத்தது .

ஸாதிகா said...

ரஞ்ஜனி மேம் வரவுக்கு கருத்துக்கும் மிக்க நன்றி.உங்கள் [இன்னூட்டம் கண்டபிந்தான் உங்கள் பதிவை கண்டேன்.உடன் இணைத்து விட்டேன்.தொடர்ந்து வாருங்களம்மா.

ஸாதிகா said...

பதிவர் சந்திப்பில் நிரூவை பார்க்க வெகு ஆவலாக காத்திருந்தேன்.நீங்கள் தான் இந்த சமயம் பார்த்து ஏற்காடு சென்ருவிட்டீர்களே:(கருத்துக்கு நன்றி நிரூ

ஸாதிகா said...

ஒரு பதிவுகளையும் விடமால் இவ்வளவு ஆர்வத்துடன் நீங்கள் குறிப்பிட்டிருப்பது நிச்சயமாக மலைக்க வைக்கிறது...// பதிவர் சந்திப்புக்காக பாடுபட்ட சகோகளின் முயற்சியும்,உழைப்புக்கும் முன்னால் இது தூசி சீனு சார்.வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி துளசிம்மா.

ஸாதிகா said...

//தேங்க்ஸ் அக்கா! இவ்வளவு நேரம் தமிழ்மணம் டாஸ்போர்ட்ன்னு சுத்திட்டிருந்தேன்! இந்த ஒரே பதிவில் மற்ற பதிவுகளை படிக்க எளிமையாக்கி கொடுத்தீங்க! நேரம் மிச்சம் எனக்கு :-)// வரிகளில் மிக்க மகிழ்ச்சி ஆமினா.உங்களையும் ஷாமையும் சந்தித்ததிலும் எனக்கும் மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி

ஸாதிகா said...

தற்போதே இந்த பதிவை பார்க்க முடிந்தது.நான் ஒவ்வொரு பதிவாய் தேடி வாசித்துக் கொண்டிருக்கிறேன்.இங்கே தொகுத்திருக்கிறீர்கள்.//மிக்க மகிழ்ச்சி மதுமதிசார்.வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

இத்தகைய ஓய்வறியாத உழைப்பும், செயலும்தான் பதிவர் சந்திப்பை வெற்றிகரமாக்கியது..!
//பதிவர் சந்திப்புக்காக பாடுபட்ட சகோகளின் உழைப்பை இதனுடன் ஒப்பீடு செய்யதீர்கள் உணமை தமிழன் சார்.அவர்களின் உழைப்புக்கு முன் இது ஒன்றுமே இல்லை.வருகைக்கு நன்றி.

ஸாதிகா said...

மிகவும் மகிழ்வான அந்த நிகழ்வை ரசித்ததோடு அல்லாமல் அதனை பதிவாக்கிய அனைவரின் தளங்களையும் தனிதனித்தனியே குறிப்பிட்ட விதம் பிரம்மிக்க வைத்தது .//கருத்துக்கு மிக்க நன்றி சசிகலா.

சென்னை பித்தன் said...

தாமதத்துக்கு மன்னிக்கவும்.சிறிது ஓய்வுக்குப் பின் திரும்பி வரத்தான் எனக்கும் ஆசை,இன்ஷா அல்லா!

ஸாதிகா said...

தாமதத்துக்கு மன்னிக்கவும்.சிறிது ஓய்வுக்குப் பின் திரும்பி வரத்தான் எனக்கும் ஆசை,இன்ஷா அல்லா!//மிக்க மகிழ்ச்சி சென்னைபித்தன் ஐயா அவர்களே.பதிவுலகில் தங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கின்றேன்.