September 3, 2012

இனிப்பு பிரியர் சீனிவாசன்

சீனிவாசன் என்று இவரது அப்பா எந்த நேரம் பெயர் வைத்தாரோ?இனிப்பின் மீது நம்ம சீனிவாசனுக்கு அத்தனை ஈர்ப்பு.சிறியவயதில் தன் தந்தையின் மிட்டாய்க்கடைக்கு சென்றாரே ஆனால் சுமார் ஒரு கிலோ இனிப்புகளை கபளீகரம் செய்து விட்டுத்தான் வெளியில் வருவார்.

வீட்டில் அம்மாவிடம் வந்து அப்பா இப்படி கத்துவார்.”இந்த ரீதியில் போனால் ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி உன் பிள்ளைக்கு சர்க்கரை வியாதி வந்துடும்டி”

“அட நீங்க வேற..உங்க வாயிலேர்ந்து நல்லதா நாலு வார்த்தை வராதா?இப்ப கல்லை தின்னாக்கூட செரிக்கிற வயசுங்க..சும்மா விடுங்கங்க..”அம்மா பரிந்து கொண்டுவருவாள்.

இட்லிக்கு தொட்டுக்கொள்ள சட்னி சாம்பார் என்று வகை வகையாக இருந்தாலும் ஒரு கிண்ணம் நிறைய தேனை வைத்துக்கொண்டு தொட்டு சாப்பிடத்தான் பிடிக்கும்.

இடியாப்பத்துக்கு நெய் மணக்க மணக்க வக்கணையாக குருமா செய்து இருந்தாலும் சர்க்கரை இல்லாமல் இடியாப்பம் இறங்காது.

விஷேஷங்களில் குலோப்ஜாமூன் செய்தால் மிஞ்சும் சர்க்கரைப்பாகு சீனிவாசன் வீட்டில் மிஞ்சியதாக சரித்திரமே இல்லை.குலோப்ஜாமூன்கள் வேண்டுமானால் பாத்திரத்துக்கடியில் கண்களை கொட்ட கொட்ட விழித்துகொண்டு ஒன்றிரண்டு இருக்குமே ஒழிய துளி பாகு இருக்காது.

அவரது இந்த இனிப்பு மோகத்திற்கு பொருத்தமாக மனைவியின் பெயர் அமைந்தது கூட ஆச்சரியம்தான்.

ஆமாம் இல்லக்கிழத்தியின் பெயர் இனிப்பு சொட்ட சொட்டத்தான் இருக்கும் .

தாலி கட்டிய நிமிடம் முதல் பேரன் பேத்தி எடுத்த இந்த நாள் வரை சீனிவாசனின் இனிப்புமோகம் தேன்மொழிக்கு மிகவும் ஆச்சரியமான விஷயம்.இன்னொரு காமெடி என்னவென்றால் கல்யாணம் ஆன இரவு அழகான மூங்கில் கூடையில் ஆப்பிள் மாம்பழம் மலைப்பழம் என்று அடுக்கி வைத்து இருந்தார்களே தவிர இனிப்பு வகைகளை கண்களிலே காணோம்.

மனைவியிடன் பேசிய முதல் வார்த்தையே இதுதான்.”தேனு,பழமெல்லாம் அட்டகாசமாக அடுக்கி வைத்திருக்கீங்க.இனிப்பெல்லாம் வைக்க மாட்டீர்களா?”

தேன் மொழி வெட்கச்சிரிப்புடன்”நீங்களே ஸ்வீட் கடைக்காரர்.திருநெல்வேலிக்கே அல்வாவா”இவ்வாறாக சீனிவாசனின் திருமதி முதல் நாளன்றே அல்வா கொடுத்து விட்டது குறித்து மனசு முழுக்க சீனி வாசனுக்கு இன்று வரை குறையாக உள்ளது.அவ்வப்பொழுது மனைவியும் கணவனும் பரம்பரையைப்பற்றி பேசும் பொழுது ‘சாந்தி முகூர்த்ததுக்கு இனிப்பு வைக்காமல் சிக்கனம் பிடித்த பரம்பரையாச்சே உன்னுது”என்று ஆரம்பித்தாரானால்

“ஆமாமாம்..எல்லாவற்றுக்கு சேர்த்து வைத்து தீபாவளிச்சீராக ஐநூறு அதிரசம் ஐநூறு லட்டு ஐநூறு லாடு என்று வண்டி வண்டியாக வாங்கி என் அப்பாவை மொட்டை அடிக்கலியா?”

“அடியேய்.. லட்டு சைசையும் லாடு சைசயும் இப்ப நான் சொன்னால் மூஞ்சை எங்கே கொண்டு வச்சிப்பே...ஒரு லாடு பிடிக்கிற மாவை வைத்து நாலு லாடு செய்து சீர் செய்த மகா பரம்பரை ஆச்சே..இருந்தாலும் சிக்கனத்தில் உங்க குடும்பத்தை அடிச்சுக்க முடியாதுடி”

சீனிவாசனின் நக்கல் பேச்சுக்கும் நையாண்டி பேச்சுக்கும் சளைக்காமல் ஈடு கொடுத்து பதிலடி கொடுப்பது போலவே அவரது இனிப்பின் மேலுள்ள பற்றை புரிந்துகொண்டு இனிப்பு இனிப்பாக வக்கணையாக சமைத்துபோட்டும் கணவரை திருப்தி படுத்தி நல்ல இல்லத்தரசியாக விளங்கினாள்.

வீட்டிலுள்ளவர்களுக்கு காபியில் சர்க்கரை அதிகம் பிடிக்காது. இவருக்கோ கூட இரண்டு ஸ்பூன் சர்க்கரையைகலக்கி நுரை ததும்ப ஆவி பறக்க காஃபியை கையில் தரும்பொழுது சீனி வாசன் பூர்வஜன்ம சங்கல்பம் அடைந்து இருப்பார்.பால்பாயஸம் கிளறினால் எல்லோருக்கு கிண்ணங்களில் எடுத்து வைத்துக்கொண்டு இறுதியாக நாலுஸ்பூன் சர்க்கரையை சேர்த்து கிளறி கணவருக்கு ஒரு பெரிய கோப்பை நிறைய பரிமாறும் பொழுது வாய் மட்டுமல்ல மனமெல்லாம் அமிர்தமாக இனிக்கும் சீனிவாசனுக்கு.

விஷேஷங்களுக்கு செல்லும் பொழுது பக்கத்து இலையில் அமர்ந்து இருக்கும் தேன்மொழி தனக்கு வைத்த மைசூர் பாகையும் ஜாங்கிரியையும் கணவரது இலையில் வைக்க தவறுவதில்லை.பாயசம் நிரம்பிய கப்,ஐஸ் கிரீம் இப்படி ஒவ்வொன்றும் சீனிவாசனின் இலைக்கு ஆட்டோமேடிக்காக சென்றடைந்து விடும்.மனைவியின் செய்கையில் நெகிழ்ந்து போய் “தேனு,எல்லா இனிப்பையும் என் இலைக்கே தள்ளிடுறே.நீயும் கொஞ்சம் டேஸ்ட் பார்க்க மாட்டே”
“பரவா இல்லைங்க”தேன்மொழி பிசிபேளா பாத்தில் மும்மரமாகி இருப்பாள்.

“அக்கா...அத்திம்பேருக்கு இனிப்பு ஆசை இருந்தாலும் இத்தனை ஆகாது..உன் பெரிய பையனுக்கு பெயர் சூட்டு விழாவில் கிண்ணத்தில் தேன் கொண்டு வந்து வைத்தோமில்லையா.பெயர் வைத்து விட்டு ஐயர் தேன் கிண்ணத்தை கீழே வைக்கப்போகும் பொழுது கபால் என்று கிண்ணத்தை அத்திம்பேர் வாங்கி தேனை பூரா கபளீகரம் செய்துட்டார்.ஐயர் அத்திம்பேரை பார்த்த பார்வை இருக்கே..ஹாஹ்ஹா..”இது நடந்து வருடங்கள் பல ஆனாலும் சொல்லிக்காட்டி இன்றைக்கும் சிரிப்பான் தேன்மொழியின் தம்பி.

“அக்கா..அத்திம்பேருக்கு ரசம் சாம்பார் செய்யும் பொழுது உப்புக்கு பதிலா சர்க்கரையை போட்டு கொடுத்தால் கூட பேஷா சாப்பிடுவாறாக்கும்”இது தேன் மொழியின் சின்னத்தம்பி

அப்பேற்பட்ட இனிப்புத்தென்றல்,இனிப்பரசர்.இனிப்புசக்கரவர்த்தி சீனிவாசனுக்கு சர்க்கரை நோய் வந்து இருப்பது சோகத்திலும் சோகம்.

”ஸ்கூல் முடிக்கறதுக்கு முன்னாடி சக்கரை வியாதி வந்துடும் இவனுக்கு “சீனிவாசனின் தந்தையின் கூற்றை பொய்யாகி,பேரன் பேத்திகளெல்லாம் எடுத்த பின்னர்தான் சர்க்கரை வியாதி ஆரம்பித்திருப்பது சோகத்திலும் ஒரு சந்தோஷம்.

பரிசோதனை செய்ய மட்டேன் என்றவரை தர தரவென்று இழுத்து செல்லாத குறையாக இழுத்து சென்று சோதனை செய்து பார்த்ததில் இரத்தத்தில் முன்னூறுக்கும் மேல் இருப்பதாக பரிசோதனையின் முடிவு சொல்லிய பொழுது இவருக்கு தலையில் இடிவிழாத குறைதான்.

“ரிசல்ட் தப்பா வந்திருக்கும்.எங்க பரம்பரையில் யாருக்குமே இந்த வியாதி கிடையாது.அப்ப எனக்கு எப்படி வரும்?”ஒத்துக்கொள்ளாமல் அழிசாட்டியம் பண்ணியது தனிக்கதை.

மறுநாள் சர்க்கரை இல்லாத காஃபியை கையில் கொடுத்த பொழுது கண்ணீர்விட்டு அழாத குறைதான்.

“அடியே தேனு..அரை ஸ்பூன் போடுடி.தொண்டைக்குள் ஒரு மிடறு கூட இறங்க மாடேன்கிறது”பரிதாபமாக விழித்த புருஷனை மிரட்டாத குறையாக”உஷ்..மூச்..நாளைக்கு பையனிடம் சொல்லி சுகர் பிரி டேப்ளட் வாங்கித்தர்ரேன்.மற்ற படி சர்க்கரைங்கற பெயரைகூட உச்சரிக்கபடாது ஆமா சொல்லிட்டேன்.”

“இனி எவனாவது உன் பெயர் என்னன்னா சீனியை விட்டுட்டு வாசன்னு சொல்லிக்கறேன் போதுமா”கடுப்பானார் சீனிவாசன்.

கணவரின் உடல் நலன் கருதி சர்க்கரையை கண்ணில் கூட காட்டாமல் கட்டுப்பாடாக வைத்திருந்தும் என்ன செய்ய?கில்லாடி சீனிவாசன் பெண்டாட்டி இந்தப்பக்கம் போன சமயம் அடுக்களைக்குள் புகுந்து ரெண்டு ஸ்பூன் சீனியை வாயில் போட்டு அதக்கிக்கொண்டு பெரிய சாதனை செய்தது போல் பெருமூச்சு விட்டுக்கொள்வார்.

வெளியில் போன சமயம் பார்த்து டப்பாக்களை உருட்டி இனிப்பு பண்டங்களை கண்டால் விடுவதில்லை.

குளிர்சாதனப்பெட்டியை குடைந்து பேரக்குட்டிகளுக்காக வாங்கி வைத்திருக்கும் இனிப்புப்பண்டங்களை பதம் பார்த்து திருப்தி பட்டுகொள்ளுவார்.

கெட்டிக்காரனின் பொய்யும் புரட்டும் தக்குமுக்கு திக்குதாளம் என்பது கணக்காக ஒரு நாள் கையும் களவுமாக மனைவியிடன் மாட்டிக்கொண்டார் சீனிவாசன்.

துணி அடுக்கி வைத்திருக்கும் கப்போர்டினுள் தலை வைத்து படுக்காத குறையாக இருக்கும் கணவரின் நிலை கண்டு”என்னங்க..அப்படி என்னதான் இருக்கு அந்த அலமாரியில்?அலமாரியை குத்தகைக்கு எடுத்த மாதிரி அங்கேயே பலியா கிடக்கறீங்க?”தேனுவின் கேள்விக்கு தகுந்த பதில் கிடைக்காததால் தடாலடியாக அலமாரி முன் வந்து பரிசோதனை செய்ததில் அல்வா பொட்டலமும்,பூந்தி பொட்டலமும் தேன்மொழியைப்பார்த்து சிரிப்பாய் சிரித்தது

அவ்வளவுதான் தேனுவாகிய தேன்மொழி பெருங்குரல் எடுத்து அழவே ஆரம்பித்து விட்டாள்.பதினைந்து சவரனுக்கு குறையாமல் கழுத்தில் கிடந்த தாலி சரட்டை கையில் எடுத்து”என்னங்க..என் ஆயுசு முச்சூடும் இந்த தாலி என் கழுத்தில் தொங்கணும்ங்க.அதுக்கு பங்கம் வச்சிடாதீங்க”

என்ன செண்டிமெண்டால் அடித்தும் என்ன செய்ய?பங்கம் வந்தாலும் பரவா இல்லை என்பது போல் மதியநேரம் தேன்மொழி தூங்கும் சமயம் மணி அடித்துக்கொண்டு வரும் சோன் பப்டி காரனிடம் பேப்பர் நிறைய சோன் பப்டி வாங்கி வாசலில் வைத்தே சாப்பிட்டு விட்டு வாயைத்துடைத்துக்கொண்டு வந்துவிடுவதை வழக்கமாக்கிக்கொண்டார்.

“என்னதிது..ரிட்டயர்மெண்ட் ஆகிட்டாலும் ஏதோ ஆஃபீஸ் போறது கணக்கா நீங்கள்தான் மழ மழன்னு ஷேவ் செய்துடுவீங்களே புதுசா என்ன தாடி முளைச்சிருக்கு..?முகவாயில் ஒட்டிக்கொண்டிருந்த சோன் பப்டியை கையால் தட்டிவிட்ட தேனு அதிர்ச்சிக்குள்ளானாள்.

“அடப்பாவி மனுஷா..என் தாலிக்கு பங்கம் வர்ரதுக்கு கங்கணம் கட்டுறீங்களே உங்களுக்கே நியாயமா இருக்கா..”

இப்போதெல்லாம் இரும்பு பெட்டியின் சாவியுடன்,குளிர்சாதனப்பெட்டியின் சாவியும்,அடுக்களை பூட்டின் சாவியும் பவ்யமாக தேன்மொழியின் இடுப்பில் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.


64 comments:

இராஜராஜேஸ்வரி said...

இனிப்புத்தென்றல்,இனிப்பரசர்.இனிப்புசக்கரவர்த்தி சீனிவாசn - எல்லா வரியும் நகைச்சுவை கலந்து இனிக்கிறது..

பாராட்டுக்கள்..

Seeni said...

sako...!

keliyum-
kindalum-
valiyum-
vethanaiyum-
kalaivai-
intha kathaiyum!

nantri!

MARI The Great said...

ஒரு மனிதனின் வாழ்கையை ஒரே பக்கத்தில் முழுவீச்சில் பயணித்து முடித்துவிட்டீர்களே?

இனிப்பான வாழ்த்துக்கள்! :)

பால கணேஷ் said...

-இனிமே யாராவது பேர் கேட்டா சீனிய விட்டுட்டு வாசன்னு சொல்லிக்கறேன்.
-நாலு லாடு பிடிக்கறதுக்கு எட்டு லாடு பிடிச்ச பரம்பரை..
-எங்க பரம்பரைல யாருக்குமே சர்க்கரை வியாதி வந்தது கிடையாது...
ஆஹா... அருமையா சைகாலஜியோட நாடி புடிச்சு எழுதியிருக்கேம்மா. கேரக்டரைசேஷன் பிரமாதம். (நானும் சீனிவாசன்ல பாதிஅளவுள்ள ஆசாமிதான் இனிப்பு விஷயத்துல) இன்னும் நிறைய கேரக்டர்களை இதுமாதிரி ரசனையா நீங்க எழுதி அதை புத்தகமாப் போடணும்கறது என் ஆசை.

Yaathoramani.blogspot.com said...

பதிவு அத்தனை இனிப்பு
சீனிவாசன் தேன் மொழி மட்டுமல்ல
அவர்கள் நினைப்பு செயல் எல்லாம்
இனிப்பை ஒட்டியே இருந்ததால்
பதிவு ஒரே தித்திப்பு
ரசித்துப்படித்தோம்
தொடர வாழ்த்துக்கள்

ஹுஸைனம்மா said...

தித்திப்பான பதிவு.

சிரிக்க வைத்தாலும், சீரியஸாக நிறைய பேர் வீட்டில் நடப்பதே இது. அதுவும், கிட்னி பிரச்னையால் தண்ணீரை ஒளித்து வைப்பதும் நடப்பதை கேள்விப்படும்போது... ஆண்டவா!!

r.v.saravanan said...

தித்திப்பை தரும் பதிவு

வாழ்த்துக்கள்

Unknown said...

இனிப்பான கதை..அனைத்து வரிகளும் சுவையாக இருக்கு..

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனிப்போ இனிப்பு.
தித்திப்பான பகிர்வு.
பாராட்டுக்கள்.
வாழ்த்துகள்.

செய்தாலி said...

ம்ம்ம் ..
இனிப்பான பதிவு சகோ

சாந்தி மாரியப்பன் said...

செம இனிப்புங்க.. :-))

சீனு said...

ஹா ஹா ஹா கதை அருமை...

சீனு said...

ஹா ஹா ஹா கதை அருமை...

Angel said...

ஆஆ !!! நிறைய சர்க்கரை பாக்கெட்டில் இருந்து கொட்டி எறும்பு ஓடுறமாதிரி இருக்கு :)) அவ்ளோ ஸ்வீட் ..
உண்மைதான் ஸாதிகா நிறையப்பேர் ஆரம்பத்தில் கண்ட்ரோல் இல்லாமல் பின்பு அவதிபடுவதை பார்க்கிறேன் .பாவம்

சோன் பாப்படி விஷயத்தில் சீனிவாசன் மாட்டிக்கொண்டது சிரிப்பை வரவழைத்தது

குறையொன்றுமில்லை. said...

ஸாதிகா கதை ரொம்ப இனிப்பா இருக்கு. எனக்கும் இனிப்பு ரொம்பவே பிடிக்கும் காபியில் எல்லாரையும் விட ஒரு ஸ்பூன் அதிகமா போட்டு குடிப்பேன் இப்பவரை ஷுகர்லாம் இல்லே அதனால தைரியமா இனிப்பு சாப்பிடுவேன்

Menaga Sathia said...

இனிப்பான கதையை சுவைத்தேன்...

ஸாதிகா said...

உடன் வருகைக்கும்,முதல் கருத்துக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

சகோ சீனி தொடர் கருத்திட்டு என்னை உற்சாகப்படுத்துவதற்கு மகிழ்ச்சி நன்றி.தொடருங்கள்.

ஸாதிகா said...

வரலாற்றுசுவடுகள் தொடர் கருதிட்டு உற்சாகப்படுத்துவதற்கு மிக்க நன்றி.தொடருங்கள்.

ஸாதிகா said...

அடேங்கப்பா..அண்ணாவுக்கும் சீனிவாசனுக்கு பிடித்த மாதிரி இனிப்பென்றால் மிகவும் பிடிக்குமோ?எனக்கு நல்லவேலையாக சுகர் இல்லை.இருப்பினும் இப்பொது காபிக்கு சர்க்கரையே இல்லாமல் கசப்பு சுவையுடன் காபி சாப்பிடத்தான் பிடிக்கும்.இன்னும் நிறைய கேரக்டர்களை இதுமாதிரி ரசனையா நீங்க எழுதி அதை புத்தகமாப் போடணும்கறது என் ஆசை.// அண்ணாவின் ஆசை விரைவில் பலிக்கட்டுமாக.கருத்துக்கு நன்றி கணேஷண்ணா.

ஸாதிகா said...

ரமணி சாரின் தொடர் உற்சாகமூட்டலுக்கும் விரிவான கருத்துரைக்கும் மிக்க நன்றி.தொடருங்கள்.

ஸாதிகா said...

கிட்னி பிரச்னையால் தண்ணீரை ஒளித்து வைப்பதும் நடப்பதை கேள்விப்படும்போது... ஆண்டவா!//இது ரொம்ப கொடுமை ஆச்சே.தஎரிந்த குடும்பத்தைச்சேர்ந்த ஒருவர் மனைவி வெளியில் சென்ற சமயம் பார்த்து பிரிஜ்ஜை உருட்டுவாராம.இதை கேள்விப்பட்டு பிறந்த கேரக்டர்தான் இது.நன்றி ஹுசைனம்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.

ஸாதிகா said...

தொடர் வருகைக்கும் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி வி ஜி கே சார்.தொடருங்கள்.

ஸாதிகா said...

தொடர்ந்து கருத்துக்களிட்டு உற்சாகப்படுத்தும் சகோ செய்தாலிக்கு நன்றி.தொடருங்கள்.

ஸாதிகா said...

செம இனிப்புங்க.. :-))//திகட்டவில்லையே அமைதிச்சாரல் கருத்துரைக்கு நன்றி.

ஸாதிகா said...

ஹா ஹா ஹா கதை அருமை..//வாங்க சீனு சார்.கதாபாத்திரத்தை பார்த்துவிட்டு சிரித்தீர்களா?மகிழ்ச்சி .கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

படித்து விட்டு சிரித்த ஏஞ்லினின் கருத்துக்கு நன்றி.மகிழ்ச்சி.

ஸாதிகா said...

ஆ..லக்ஷ்மிம்மா,வந்துட்டீங்களா?இனிப்பு இலாவிட்டாலும் உங்கள் உணவுக்கட்டுப்பாடு பிரமிக்க வைக்கிறது.கதையை ரசித்து வாசித்து கருத்திட்டமைக்கு நன்றிகளம்மா.

ஸாதிகா said...

கதையை சுவைத்த மேனகாவுக்கு நன்றிகள்.

ஸ்ரீராம். said...

பாவமாத்தாங்க இருக்கு!

ஸாதிகா said...

ஸ்ரீராம் சார் இரக்கம்தான் பட்டீர்களா?சிரிப்பு வரலியா?கருத்துக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

இரண்டு பேருக்கு சுகர் வந்தால் கஷ்டம்...
(1)குழந்தைகள்...
(2)வயதானவர்கள்...

Asiya Omar said...

அட,இன்று வீட்டில் கெஸ்ட் இந்தப்பக்கம் இப்ப தான் நேரம் கிடைத்தது,என் ஃபேவரைட் கதாபாத்திரங்கள் வரிசையில் அட்டகாசமாய் சீனிவாசன்.கதையில் அப்படியே லயிக்க வைத்துவிடுகிறீர்கள் தோழி.

Kanchana Radhakrishnan said...

இனிப்பான கதை.

Unknown said...


இனிப்பு தங்கள் பதிவிலும் உள்ளது
எழுதியுள்ள முறையே தனி!
வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

இரண்டு பேருக்கு சுகர் வந்தால் கஷ்டம்...
(1)குழந்தைகள்...
(2)வயதானவர்கள்...//மனிதர்களுக்கு வந்தாலே கஷ்டம் தான் சகோ திண்டுக்கல் தனபாலன்.கருத்துக்கு நன்றி

ஸாதிகா said...

நம்றி காஞ்சனா ராதாகிருஷ்ணன்

ஸாதிகா said...

இனிப்பு தங்கள் பதிவிலும் உள்ளது
எழுதியுள்ள முறையே தனி!
வாழ்த்துக்கள்!//அழகிய கருத்திடலுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி புலவரய்யா.

Radha rani said...

இனிப்பு சீனிவாசன் நிறைய பேர் நிஜ வாழ்க்கையில இருக்காங்க ஸாதிகா..என் வீட்டிலேயே இருக்காங்க:))நகைசுவையா அழகா எழுதி இருக்கீங்க..

கதம்ப உணர்வுகள் said...

திகட்டாமல் தித்திக்க தித்திக்க ஒரு கதை....சீனிமுட்டாய் சீனிவாசன் தான் டாக் ஆஃப் த டவுன் இப்ப...

ரசித்து வாசித்தேன்பா....

வீட்டுக்கு வீடு வாசப்படி இருப்பது போல இனி வீட்டுக்கு வீடு சீனிமுட்டாய் சீனிவாசன் இருக்காரான்னு பார்க்க தோணும் எனக்கு...

கதையின் கதாபாத்திரங்களைப்பற்றி வர்ணிக்கும்போது உங்களுக்கே உள்ள நகைச்சுவை நடையில் விவரித்தது மிக மிக ரசிக்க வைத்தது.. அதுமட்டுமல்ல ஸாதிகா கதாபாத்திரங்களின் பெயர் ஏகப்பொருத்தமாய் அழகாய் வைத்திருக்கிறீர்கள் சீனிமுட்டாய் - தேன்மொழி தம்பதியினர் செய்த ராவடியை ரசித்தேன்...

முதல் இரவுக்கு பழங்கள் வைத்தவர்கள் இனிப்பு வைக்கலை என்ற குறையை குறையாய் சொல்லும்போது தேன்மொழி அல்வா கொடுத்ததா எழுதியிருந்தது செம்ம டைமிங் பஞ்ச் பா...

அதோடு தேன்மொழி இடக்காக எதிர்த்து மடக்கி அதான் சீரா கேட்ட 500 அதிரசமும் லட்டும் லாடும்னு அடுக்கினால் சீனியும் அடங்காம திருப்பி செம்மையா அட சிக்கனத்துக்கு பிறந்த சிக்கன சிகாமணின்னு தட்ட... செம்ம செம்ம செம்ம..

நேர்ல இருந்து பார்த்து ரசித்தது போல் செம்ம அசத்தல்பா கதை வடிவம்....

தேன்மொழி பெயருக்கேற்றார்போல கணவனுக்கு தப்பாத மனைவி.. ஜாடிக்கேற்றமூடி.. குலோப்ஜாமுனுக்கேற்ற ஜீராபாகு.. ஆஹா ஆஹா.. போகிற விஷேஷத்துக்கு எல்லாம் தனக்கு கிடைக்கும் இனிப்பெல்லாம் கணவனுக்கு தரும் கொடைவள்ளல் பிசிபேளாபாத்தில் மூழ்கியதாய் எழுதிய இடைச்செருகல் மிக அருமை ஸாதிகா...

இத்தனை அழிச்சாட்டியம் செய்யும் சீனிமுட்டாய் கதி என்னாகுமோன்னு எனக்கு மட்டும் திக் திக்னு தான் இருந்திச்சு...

ஆனா மனுஷன் ரொம்ப லக்கிதான்பா... பேரன்பேத்தி எடுத்தப்புறம் தான் டயபடிக்காம்...

இனி சக்கரை குறைத்து என்னாகப்போகிறது..நல்லா சாப்பிடட்டும்னு விடாம தேன்மொழி தன் தாலியை கெட்டியா ஒரு கையிலும் சீனிமுட்டாயை சோன்பப்டி சாப்பிடவிடாம ஒரு பக்கமும் அதிரடிப்பா....

ஆனாலும் சீனிமுட்டாய் அதுக்கெல்லாம் மசியலையே... இவ்ளோ அட்டகாசம் செய்யும் சீனிமுட்டாய் ரசிக்கவைத்த கேரக்டராக எங்கள் முன் நிறுத்திட்டீங்கப்பா அழகிய உங்கள் எழுத்தால்....

ரசித்து சிரித்தேன் ஸாதிகா... ரசிக்கவைத்த பகிர்வுக்கு அன்பு வாழ்த்துகள்பா...

Unknown said...

இனிப்பு பிரியர் பத்தின கதை அருமை. உரையாடல்கள் இயல்பா இருந்திச்சு. ரசிச்சு சிரிச்சேன். இதமாதிரி நிறைய எழுதுங்க.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ராதாராணி.

ஸாதிகா said...

திகட்டாமல் தித்திக்க தித்திக்க ஒரு கதை//அடடா..ஆரம்பவரிகளையே அற்புதமாக பதிவு செய்துள்ளீர்கள்.இனிப்பு பிரியர் சீனிவாசன் என்ர தலைப்பைவிட சீனிமுட்டாய் சீனிவாசன் என்ற தலைப்பு வைத்திருந்தால் இன்னும் அபாரமாக இருக்கும்.

வரிக்கு வரி ரசித்து ரசித்து படித்து அதை விட ரசித்து இவ்வளவு ஆழமாகவும் நீளமாகவும் பின்னூட்டம் இட்டு என்னை உற்சாகவெள்ளத்தில் ஆழ்த்திவிட்டீர்கள் சகோ.

உங்களைப்போன்றோர் அணு அணுவாக ரசித்து படித்து இடும் கருத்துரை பதிவர்கள் ஆக்கங்கள் புனைய ஊக்கம் தருவது திண்ணம்.

உங்கள் நீண்ட பதிவை ரசித்து வாசித்து மகிழ்ந்தேன் மஞ்சுபாஷினி.இனிய நன்றிகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

கதை சீனிபோல இருக்கு.. இனிப்பாக.

சீனிவாசனுக்கே சீனியோ?:) இல்ல ஸாதிகா அக்கா பெயருக்கேற்றபடிதான் வாழ்க்கையும் அமைவதை பெரும்பாலும் அவதானிக்க முடியும்.

Anonymous said...

அப்பப்பா ஒரே இனிப்பா இருக்கே.
நீரிழிவு வராதோ!
இனிப்புப்பதிவுக்கு நல்வாழ்த்து.

ஸாதிகா said...

ரசித்தி சிரித்து வாசித்த நீரு தங்கைக்கு நன்றிகள்,

ஸாதிகா said...

கதை சீனி போல் இருக்கு என்று சர்க்கரைபாகய் சொன்ன அதிராவுக்கு நன்றி.

ராமலக்ஷ்மி said...

பாவம் சீனிவாசன்:)! ரிடையர்மெண்ட் காலத்தில் உடல்நலனுக்கு தீங்கெனத் தெரிந்தும் குழந்தைகள் போல் வெளியில் வாங்கி சாப்பிடுவதும் நாவைக் கட்டுப்படுத்தமுடியாமல் திண்டாடுபவரும் உள்ளனர்தான்.

அருமையான நடை.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி வேதா இலங்காதிலகம்

ஸாதிகா said...


அருமையான நடை//எனக்கூறி என்னை இன்னும் எழுதத்தூண்டிய ராமலக்‌ஷ்மிக்கு இனிய நன்றிகள்.

வல்லிசிம்ஹன் said...

அன்பு ஸாதிகா,
இனிப்பென்றால் காததூரம் ஓடியவளுக்கே சர்க்கரை. நோய் வந்தது
இவருக்கு ஏற்ற மனைவி வாய்த்தது அவர் செய்த புண்ணியம். கதை பூராவும் இழையோடும் நகைச்சுவை என்னப் பிரமிக்க வைக்கிறது.
சுவையோ சுவை. ஆனால் சுகர் ஃப்ரீ மாத்திரையும் நல்லதல்ல.கிட்னியைப் பாதிக்கிறது என்பது லேட்டஸ்ட் நூசு.
அதனால் சீனிவாசனை வாசனாகவே இருக்கச் சொல்லுங்கள்.அருமை.

ஸாதிகா said...

அன்பின் வல்லிம்மா,சீனிவாசன் கேரக்டரை ரசித்து வாசித்து இனிமையான கருத்திட்டும் வழக்கம் போல் அன்பால் என்னை மகிழ்ச்சிகடலில் ஆழ்த்திவிட்டீர்கள்.

எல் கே said...

ஹஹஅஹா ஒரு விஷயம் ஸ்வீட் சாப்பிட்ட சர்க்கரை நோய் வராது

ஸாதிகா said...

ஹஹஅஹா ஒரு விஷயம் ஸ்வீட் சாப்பிட்ட சர்க்கரை நோய் வராது//வாங்க எல் கே.நான் ஸ்வீட் ரொம்ப சாப்பிட மாட்டேன்.காபிகூட சர்க்கரை துளிகூட இல்லாமல் கசப்பாக சாப்பிடத்தான் பிடிக்கும்.இருந்தாலும் எனக்கும் சுகர் இல்லையே.ரசித்து சிரித்து கருத்திட்டமைக்கு நன்றி.

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

ஹா ஹா சூப்பரான கதை

இன்னும் எங்க வீடுகளீல் என்ன சமையல் செய்தாலும்.
சர்க்கரை வைத்துசாப்பிடும் இனிப்பு சர்க்கரவர்த்திகள் இருக்கிறார்கள்

*Chennai Plaza - சென்னை ப்ளாசா* said...

இட்லி க்கு ,காரசேமியாவுக்கு கூட் கொஞ்சம் சர்க்கரை தூவி தான் சாப்பிடுவார்கள்

mohamedali jinnah said...

Please visit
http://nidurseasons.blogspot.in/2012/09/stunning-dubai.html
திகைக்க வைக்கும் துபாய் -Stunning Dubai

ஸாதிகா said...
This comment has been removed by the author.
ஸாதிகா said...

இனிப்பு சர்க்கரவர்த்திகள் இருக்கிறார்கள்//இவர்கள் அநேக வீடுகளில் உண்டுதான்.ஜலி நீங்கள்தான் கடைசி பெஞ்ச்:)

மனோ சாமிநாதன் said...

யதார்த்தமான கதை தான் இது! எங்கள் நண்பர் ஒருவர் தயிர்சாதத்திற்கு வாழைப்பழமும் அல்வாவும் மட்டுமே தொட்டுக்கொள்வார்!!

இமா க்றிஸ் said...

ரசித்துச் சிரித்துப் படித்தேன். சூப்பர் கதை ஸாதிகா.

ஸாதிகா said...

வாங்க மனோ அக்கா.//ஒருவர் தயிர்சாதத்திற்கு வாழைப்பழமும் அல்வாவும் மட்டுமே தொட்டுக்கொள்வார்!// வித்தியாசமான ஆள்தான் கருத்துக்கு நன்றிக்கா.

ஸாதிகா said...

இமா.இனிப்பாக பதிவு போட்டால்த்தான் வருவீர்களா?:)ரசித்துச் சிரித்துப் படித்தேன். //ரசித்து படித்து கருத்திட்ட தோழி இமாவுக்கு நன்றி.