August 14, 2012

அலை கடலென திரண்டு வாரீர்!சென்னையில் மாபெரும் பதிவர்கள் திருவிழா நடக்கவிருப்பது மிகவும் மகிழ்வைத்தருகின்றது.விழா சிறப்புற நடைபெற வாரந்தோறும் டிஸ்கவரி புக் பேலஸில் பதிவர்கள் ஒன்றுகூடி ஆலோசனை நடத்துதல் போன்ற பற்பல ஆயத்தங்கள் விழா எதிர்பார்த்ததை விட மிக சிறப்பாக நடைபெறும் என்பதைகாட்டுகிறது.

காணும்போதெல்லாம் அண்ணன் கணேஷ் அவர்களின் அன்பு அழைப்பும்,விழா நடைபெறும் மண்டபம் நான் வசிக்கும் இடத்தில் இருந்து மிக பக்கமாக இருப்பினும் ஈது பெருநாளைக்கு ஊருக்கு செல்லவிருப்பதால் வருவதற்கு தடை போடுகின்றது.இருப்பினும் பதிவுலகில் பதிவர்கள் பதிவிடும் உற்சாக அழைப்பு எப்படியாவது வந்து கலந்து கொள்ளும் ஆவலை ஏற்படுத்துகின்றது.கலந்துகொள்ள முயல்கிறேன் இன்ஷாஅல்லாஹ்.

ஏனைய பதிவர்கள் இயன்ற மட்டும் விழாவில் கலந்து விழாவினை சிறப்பிக்க என் வலைப்பூ சார்பாக அன்பு வேண்டுகோள் விடுக்கின்றேன்.மாபெரும் பதிவர் சந்திப்பு பதிவுலகில் ஒரு முத்திரை பதித்து சரித்திரம் படைக்க எல்லாம் வல்ல இறைவனிடம் இறைஞ்சி,வாழ்த்துகின்றேன்.

பதிவர் சந்திப்புக்காக அழைத்த மற்ற பதிவுலக சகோதர,சகோதரிகளின் அழைப்பினை பார்வை இட கீழ் கண்ட இணைப்புகளை கிளிக் செய்து பார்க்கலாம்.

29 comments:

மோகன் குமார் said...

நீங்களும் அவசியம் வரணும் ஸாதிகா. பதிவர் மாநாடு பற்றி பகிர்ந்தமைக்கு மிக நன்றி

vanathy said...

Sounds exciting, Akka. Enjoy.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அடுத்த மாசம் வைத்திருக்க கூடாதா.. நானும் வருவேனே.. ம். பதிவர் சந்திப்பு வெற்றிகரமாக அமைய என் வாழ்த்துகள்.

வரலாற்று சுவடுகள் said...

அட ஒருத்தர் விடாம அத்தனை பேர் பதிவையும் லிஸ்ட் பண்ணிட்டீங்களே., வாழ்த்துக்கள்!

சந்திப்பு சிறக்க வாழ்த்துக்கள் சகோ!

MANO நாஞ்சில் மனோ said...

எல்லாருக்கும் எனது வாழ்த்துகள்...!

சிநேகிதி said...

அக்கா ஊருக்கு போறிங்களா? எப்படியாவது கலந்துக்கொள்ள பாருங்கள், அருமையான சான்ஸ் இது

Seeni said...

enathu vaazhthukkalum!

sako!
ungalukkum ungal kudumpathirkkum-
eid mubaarak!

vaazhthukkal!

Ramani said...

தங்களைச் சந்திக்க முடியும் என
நினைத்திருக்கிறேன்
பதிவர் திருவிழா அழைப்புதனை
அருமையாக பதிவு செய்துள்ளமைக்கு வாழ்த்துக்கள்

Ramani said...

tha.ma 4

கோமதி அரசு said...

பதிவர் சந்திப்புக்கு வாழ்த்துக்கள்.
விழா நல்லபடியாக நடக்க வாழ்த்துக்கள்.
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா.
பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

துளசி கோபால் said...

வரமுடியலையேன்னு எனக்கு ஒரே ஃபீலிங்ஸ்:(

விழா நல்லமுறையில் நடக்க வாழ்த்துகின்றேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விழா சிறக்க வாழ்த்துக்கள்... நன்றி...(TM 5)

ஹாரி பாட்டர் said...

வாழ்த்துக்கள் கலக்குங்க

Lakshmi said...

ஸாதிகா அந்த நேரம் சென்னைல இருப்பேன்னுதானே சொன்னிங்க. நாம சந்திக்கலாம்னு சொன்னீங்க ஊருக்கு அடுதமாசம் தானே போரதா சொன்னீங்க.

யுவராணி தமிழரசன் said...

விழாவினில் கலந்து கொள்ள முடியாவிடினும் விழாவைப் பற்றி பகிரப்போகும் பதிவினில் கலந்து கொள்ள காத்திருக்கிறோம்! விழா சிறப்புற வாழ்த்துக்கள் அக்கா!

யுவராணி தமிழரசன் said...

விழாவினில் கலந்து கொள்ள முடியாவிடினும் விழாவைப் பற்றி பகிரப்போகும் பதிவினில் கலந்து கொள்ள காத்திருக்கிறோம்! விழா சிறப்புற வாழ்த்துக்கள் அக்கா!

Asiya Omar said...

ஆஹா! பெருநாளுக்கு ஊருக்கு போறதாக சொன்னீங்களே! அப்ப இந்த விழாவில் பங்கும் பெறும் வாய்ப்பு ? !
அழகான பகிர்வு.கலந்து கொள்ளப் போகும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுக்கள் பல.

வை.கோபாலகிருஷ்ணன் said...

பதிவர்கள் சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற என் வாழ்த்துகள்.

Madam,

I am sharing an award with you.

Link: http://gopu1949.blogspot.in/2012/08/my-11th-award-of-2012.html

Kindly accept it.

vgk

இராஜராஜேஸ்வரி said...

Congratulationssssss for getting AWARD From VAI.GOPALAKRISHNAN SIR..

Jaleela Kamal said...

ம்ம்ம் இரண்டு மாதம் சென்னையில் தான் இருந்தேன்.,
இப்ப தான் ஊர் வந்து சேர்ந்தேன்

கலந்துகொள்ளும் அனைவருகும் வாழ்த்துக்கள்

ஸ்ரவாணி said...

என் பதிவையும் இணைத்ததிற்கு மிக்க நன்றி தோழியே !
உங்கள் வரவை எதிர்பார்க்கிறேன் !

Vijiskitchencreations said...

Don't miss the opportunity. Ithan vazi ore idathil ellarraiyum parka oru naval santharpam.
Avasiyam kalthukinga.

All the best

மதுமதி said...

அனைத்து இணைப்புகளையும் தந்தமைக்கு நன்றி..

ஸ்ரீராம். said...

இதுதாண்டா அழைப்புன்னு எல்லா அழைப்புகளையும் ஒன்று சேர்த்து விட்டீர்கள்! சபாஷ்!

அந்நியன் 2 said...

வாழ்த்துக்கள் !

athira said...

ஆஹா அருமை வாழ்த்துக்கள்... எனக்கு அறுசுவை கெட்டுகெதர் நினைவுக்கு வருகுது...

பால கணேஷ் said...

கொஞ்சம் லேட்டா கவனிச்சிருக்கேன் நான் இந்தப் பதிவை. ஸாரி தங்கச்சி. விழாவில் இயன்றவரை முயன்று நீங்களும் வரணும்கறது என் விருப்பம், வேண்டுகோள் எல்லாம். அத்தனை பதிவர்களின் அழைப்பிதழ் பதிவுகளையும் தொகுத்துத் தந்த உங்களின் சிரத்தை மற்றும் அக்கறை மகிழ வைக்கிறது. மிக்க நன்றி.

நிரஞ்சனா said...

நானும் வெளியூரில் இருப்பதால் வர இயலாத சூழலில்தான்க்கா இருக்கேன். உங்க எல்லாரோட பகிர்வுகளையும் படிக்க ஆவலாய் காத்திருக்கேன்.

மதுமிதா said...

சென்னையில் இல்லை :( அதனால் வரையலவில்லை:(