March 3, 2012

காரைக்குடி ரெஸ்டாரெண்ட்

சென்னையில் பல இடங்களில் காரைக்குடி ரெஸ்டாரெண்ட் கிளைகள் ஆரம்பித்து அசல் செட்டிநாட்டு உணவுவகைளை,செட்டிநாட்டு பின்னணியுடன் சுவையாக வழங்குகின்றார்கள்.

நான் சென்றது போரூர் உணவகம்.உணவகத்தினுள் நுழைந்தாலே செட்டிநாட்டு வீட்டுனுள் நுழைத்த பிரம்மையை ஏற்படுத்தும்.மேலிருந்து தொங்கும் பழங்கால பாணி விளக்குகள்,சுவரில் அலங்கரித்துப்பட்டு இருக்கும் வண்ண ஓவியங்கள்,கலைப்பொருட்கள்,பறிமாறும் பாத்திரங்கள்,டம்ளருக்கு பதில் எவர்சில்வர் சொம்பு என்று அமர்க்களப்படுத்துகின்றனர்.

அருமையான வெஜிடேரியன் தாலி ,நான்வெஜிடேரியன் தாலி கிடைக்கின்றது.நான் வெஜ் தாலி என்றால் மீன் குழம்பிலும்,கறிக்குழம்பிலும் பீஸைத்தேடிக்கொண்டிருக்க கூடாது.வெறுமனே குழம்பு மட்டிலும்தான். மீன் , கறி பீஸ் வேண்டுமென்றால் தனியாக ஆர்டர் செய்ய வேண்டும்.

தாலி மீல்ஸ் வெறுமனே 90 ரூபாய்தான் என்றாலும் ஒரு சைட் டிஷ் விலை அதை விட அதிகமாக உள்ளது.

தாலியில் சூடான பச்சரிசி சாதத்துடன்,சாம்பார்,ரசம்,பொரியல்,வற்றல் குழம்பு,பருப்பு சேர்த்த கூட்டு,காய்கறி கூட்டு.கெட்டித்தயிர்,ஸ்வீட்,மீன் குழம்பு ,கறிக்குழம்பு என்று அன் லிமிடெட் ஆக பரிமாறுகின்றனர்.

அப்பளப்பிரியர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் அப்பளங்களை விளாசித்தள்ளலாம்.வற்றல் குழம்பு திரும்ப கேட்டு வாங்கி சாப்பிடத்தூண்டும் அருமையான சுவை.
தந்தூரி சிக்கன் பல ரெஸ்டாரெண்டுகளில் வெந்தும் வேகாததுமாக பறிமாறுவார்கள்.இங்கு நன்றாக வேகவிடப்பட்ட தந்தூரி சிக்கன் சுவையான பச்சை சட்னியுடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
தொக்கு போல் இருக்கும் செட்டிநாட்டு நாட்டுக்கோழி சிக்கன் கிரேவி காராசாரத்துடன் சப்புக்கொட்டி சாப்பிட வைக்கும்.
மொறு மொறுப்பான நெத்திலி வறுவலில் கருவேப்பிலையை பொரித்து போட்டு கார்னிஷ் பண்ணி இருப்பார்கள்.பொரித்த கருவேப்பிலையுடன் நெத்திலி பிரையை சாப்பிட்டால் யம்மிதான்.

சைட் டிஸ்கள் சற்று காஸ்ட்லியாக இருந்தாலும் சுவைக்காக செலவு செய்யலாம்.

ஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்.வழக்கம் போல் நானே பீடா செய்து ரெண்டு ரவுண்டு சாப்பிட்டு விடுவேன்.இந்த முறை பீடா சாப்பிடுவது மிஸ்ஸிங்.காரணம் தட்டு நிறைய தாம்பூலம் இருந்தாலும் புத்தாண்டு resolution பீடா ,பாக்கு பக்கமே போகக்கூடாது என்பதால் தாம்பூலதாம்பாளம் என்னை வா வா என்று அழைத்தும் வலுகட்டயமாக திரும்பிப்பார்க்காமல் வந்து விட்டேனாக்கும்:(

19 comments:

Asiya Omar said...

ஆஹா! ஸாதிகா காரைக்குடி ரெஸ்டாரன்ட் போய் வந்து பகிர்ந்தது மகிழ்ச்சி.என்னது வெத்திலை பாக்குக்கு நோவா? :)..

ஸாதிகா said...

உடன் வரவுக்கு மிக்க நன்றி ஆசியா.

//என்னது வெத்திலை பாக்குக்கு நோவா? :).// ஆமாம் ஆசியா.நான் விரும்பி சாப்பிடும் பீடாவை என் அம்மாவின் வற்புறுத்தலுக்காக தியாகம் பண்ணி விட்டேனாக்கும்.நான் ஒவ்வொரு முறை இதனை உபயோகப்படுத்தும் பொழுதும் என் தாயார் என்னை சிறுமியைக்கண்டிப்பது போல் கண்டிப்பார்கள்:(

பால கணேஷ் said...

பெசன்ட் நகர்ல ஒரு காரைக்குடி ரெஸ்டாரண்ட் பாத்திருக்கேம்மா. ஆனா போய் சாப்பிட்டதில்லை. ஒரு முறை போய்ட வேண்டியதுதான்.

Yaathoramani.blogspot.com said...

நல்ல அறிமுகம்
அடுத்த முறை சென்னை வரும்போது
ஒரு பிடி பிடித்து விடவேண்டியதுதான்
படங்க்களுடன் பதிவி அருமை வாழ்த்துக்கள்

எம் அப்துல் காதர் said...

இங்கே இஷா நேரத்தில் படித்தேனா பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு! பகிர்ந்தமைக்கு நன்றி! பீடாவை அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து, எப்பவாவது சாப்பிடுவதில் தப்பில்லை என்று அம்மாகிட்டே நான் சொன்னேன்னு சொல்லுங்க ஸாதிகா க்கா :-))

எம் அப்துல் காதர் said...

இங்கே இஷா நேரத்தில் படித்தேனா பார்க்கும் போதே சாப்பிடனும் போலிருக்கு! பகிர்ந்தமைக்கு நன்றி! பீடாவை அம்மாவின் கண்டிப்புக்கு பயந்து, எப்பவாவது சாப்பிடுவதில் தப்பில்லை என்று அம்மாகிட்டே நான் சொன்னேன்னு சொல்லுங்க ஸாதிகாக்கா :-))

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஜரானேன். முதல் இரண்டு பத்தி படித்ததேன். பிறகு ஒரே ஓட்டமாக
ஓடி விட்டேன்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா.. இப்பூடியெல்லாம் படம் போட்டால் நான் எப்பூடிப் பொறுமையக இருப்பேன்?:))...

நெத்தலிப்பொரியல்.. சூப்பரோ சூப்பர்.. எப்படிப் பொரித்திருக்கிறார்களோ?

முற்றும் அறிந்த அதிரா said...

//ஹைலைட்டாக சாப்பிட்டு முடிந்ததும் பெரிய பித்தளை தாம்பாளத்தில் அழகாக அடுக்கப்பட்ட வெற்றிலை,வாசனை சுண்ணாம்பு,ரஸிக்லால் பாக்கு,கல்கண்டு என்று காத்திருக்கும்//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)).. ஏன் ஸாதிகா அக்கா... தினமும் சாப்பிட்டால்தான் கூடாது, இடைக்கிடை சாப்பிடலாம் பீடா:)

துளசி கோபால் said...

பெஸண்ட் நகர் காரைக்குடி நம்மூட்டுக்கு ரொம்பப் பக்கம். அஞ்சு நிமிச நடை என்றதால் அண்ணன் குடும்பம் விஸிட் செய்யும்போதெல்லாம் போய் விடுவோம். பேரக் குழந்தைகளுக்காக காரம் அவ்வளவாச் சேர்க்காமல் சமைச்சுத் தருவாங்க.

ஆமாம்...அதென்ன ஸாதிகா, ளி? லி இல்லையோ!!!!!

நிரஞ்சனா said...

தலைப்பைப் பாத்ததும் காரைக்குடில இருக்கற ரெஸ்டாரன்டோன்னு நெனச்சேன். படிக்கவும்தான் புரியுது... But, நான் சுத்த சைவம். So... அப்புறம் வர்றேன்! See You...

Vijiskitchencreations said...

அடுத்த தடவை ஒரு விசிட் அங்கு தான்.

கோமதி அரசு said...

அசைவ பிரியர்களுக்கு ஏற்றப் பதிவு.
அம்மாவின் சொல்லை தட்டாமல் கடைப்பிடிப்பது நன்று.

CS. Mohan Kumar said...

நல்ல ஹோட்டல் ஆனா காஸ்ட்லி.

மாதேவி said...

காரைக்குடி ரெஸ்டாரன்ட் பார்க்கவே ரொம்ப அழகாக இருக்கின்றது.

குறையொன்றுமில்லை. said...

காரைக்குடி ரெச்டாரெண்டின் அழகான படத்தைமாட்டுமே பாத்துட்டு போயிட்டேன்

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இப்படி பசிய கிளப்புறீங்களே

Jaleela Kamal said...

சீக்கிரம் இந்த பிளாக்ல போட்ட ஹோட்டல் எல்லா ஒரு லிஸ்ட் போன் நம்பரோடு ரெடி பண்ணுங்க

ஸாதிகா said...

கருத்திட்ட அனைவருக்கும் அன்பு நன்றிகள்!