March 25, 2012

கோல்டன் பீச் தோசைஈஞ்சம்பாக்கம் தங்கக்கடற்கரை இதுதான் சென்னையின் முதல் தீம் பார்க் என்று நினைக்கிறேன்.தங்ககடற்கரைஎன்றதும் சிரிக்காது நிற்கும் சிலை மனிதர் தவிர நீநீநீநீநீ..ள தோசைதான் ஞாபகத்திற்கு வரும்.

சென்ற வாரம் அங்கு சென்று இருந்த பொழுது சிலை மனிதரைக்காணவில்லை.ரெஸ்ட் எடுக்கப்போய் இருப்பாரோ?அல்லது அன்று அவருக்கு விடுமுறையோ தெரியவில்லை.

எத்தனையோ முறை அங்கு சென்று இருந்தாலும் ஒரு முறை கூட நீள தோசை சாப்பிட்டதில்லை.

இந்த முறை வலைப்பூவில் எழுத வேண்டும் என்பதற்காக கேண்டீன் பக்கம் சென்றோம்.8 அடி தோசை 1000 ரூபாய்.3 அடி தோசை 200 ரூபாய் என்று போர்டில் எழுதப்பட்டு இருந்தது.

எட்டு அடி தோசை சாப்பிட ஆள் இல்லாததால் மூன்றடி தோசைக்கு ஆர்டர் செய்தோம்.களை கட்டி இருந்த கேண்டீனில் எட்டடி தோசை தென்பட்டால் கேமராவில் கிளிக் செய்யலாம் என்று சுற்று முற்றும் பார்த்தால் ஏமாற்றம்தான்.

ஆர்டர் செய்த அரைமணிநேரத்திற்கு பிறகு தோசை கிடைத்தது.தோசையைப்பார்த்ததுமே சாப்பிடும் ஆசை போய் விட்டது.ஒரு பக்கம் முறுகலாக இன்னொரு பக்கம் வெந்தும் வேகாததுமான ஒரு நீள தோசை அலுமினிய டிரேயில் பட்டர் பேப்பர் விரித்து சுருட்டப்பட்டு இருந்தது.

தோசையில் முறுகலான பகுதியையும்,வெண்மையான பகுதியையும் பார்த்ததும் பிளேக் அண்ட் வைட் தோசை என்று உடனடியாக செல்லப்பெயர் சூட்டி விட்டனர்.

கூடவே ஆறிப்போன சாம்பார்,ஐஸ் போன்று ஜில்லிட்டிருந்த உருளைக்கிழங்கு மசால்,புளித்துப்போன தேங்காய் சட்னி...

எதுவும் சாப்பிடாமல் அலுமினிய டிரேயில் இருந்த தோசையை கொத்து பரோட்டாவாக்கி அதகளப்படுத்தி விட்டு எழுந்தது தான் மிச்சம்.

”நல்ல வேளை ஆட்கள் அதிகம் இருந்து எட்டடி தோசை ஆர்டர் பண்ணாமல் தப்பித்தோம்” பெருமூச்சு விட்ட படி நடையைக்கட்டினோம்.

57 comments:

மாதேவி said...

எட்டு அடியிலிருந்து தப்பித்தேன் என மகிழ்ச்சி கொள்ளுங்கள்.:)))

இந்த சிலை மனிதனைப் பார்த்து அதிசயித்திருக்கின்றேன். எப்படித்தான் பலமணிநேரம் அசையாமல் நிற்கின்றார்களோ.

விச்சு said...

எட்டடி தோசை ஆர்டர் பண்ணிவிட்டு எங்களை அழைத்திருக்கலாம். சாப்பிட அல்ல... அது எட்டடிதானா? என அளந்துபார்க்க...

Lakshmi said...

atata 3 adi thosai vangi kaasu veenthanaa?

இராஜராஜேஸ்வரி said...

கோல்டன் பீச் கொத்துபரோட்டா !!!!!!!!

கணேஷ் said...

அவ்ளோ... நீளத்துக்கு தோசை பண்றப்ப எல்லாப் பகுதிகளையும் கவனிக்க முடியாது போல... பாவம், பணத்தையும் கொடுத்துட்டு நொந்த அனுபவத்தை சந்திச்சிருக்கீங்க... இந்திரா நகர்ல லாரன்ஸ் அன்‌ட் மேயோ கண்ணாடிக் கடைக்குக் கீழே ஒரு தோசை கார்னர் இருக்கு. ஏகப்ப்ப்ப்ப்பட்ட வெரைட்டீஸ்ல தோசை மட்டுமே பல சைட் டிஷ்களோட அங்க கிடைக்கும். கரெக்ட் அட்ரஸ் விசாரிச்சுட்டு நாளைக்கு சொல்றேன். போய் சாப்பிட்டுப் பாரும்மா... நன்றி!

வை.கோபாலகிருஷ்ணன் said...

காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொள்வது என்பது இது தானோ?

தோசையில் சுவையில்லாவிட்டாலும்
தங்களின் இந்தப்பதிவு நல்ல முறுகலாகவே சுவையாகவே இருக்குது.

ஸாதிகா said...

எப்படித்தான் பலமணிநேரம் அசையாமல் நிற்கின்றார்களோ.///

நானும்தான் அதிசயித்திருக்கிறேன்.அவரை சிரிக்க வைக்க பார்வையாளர்கள் அடிக்கும் கூத்தையும் பார்த்து விழுந்து விழுந்து சிரித்திருக்கிறேன்.கருத்துக்கு நன்றி மாதேவி.

ஸாதிகா said...

.. அது எட்டடிதானா? என அளந்துபார்க்க...//

ஓ அது வேறா?:)

நல்ல கேள்விதான்.கருத்துக்கு நன்றி விச்சுசார்.

ஸாதிகா said...

3 adi thosai vangi kaasu veenthanaa//

ம்ம்...வீண் தான் லக்‌ஷ்மியம்மா.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

கோல்டன் பீச் கொத்துபரோட்டா //அட இது கூட நல்லா இருக்கே!:)

கருத்துக்கு நன்றி இராஜராஜேஸ்வரி.

ஸாதிகா said...

இந்திரா நகர்ல லாரன்ஸ் அன்‌ட் மேயோ கண்ணாடிக் கடைக்குக் கீழே ஒரு தோசை கார்னர் இருக்கு. //

தேனாம்பேட்டையில் கூட இது உள்ளது கணேஷண்ணா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

காசையும் கொடுத்து தேளையும் கொட்டிக்கொள்வது என்பது இது தானோ?//

ஹா.ஹா..கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

Asiya Omar said...

அட நாங்க தோசை பிரியர்கள் ஆச்சே,ஆசையாக உள்ளே வந்தால் இப்படியா? சங்கதி.உங்க இந்த பகிர்விற்கு நன்றி.சென்னை வந்தால் சொல்லாம சொல்லிட்டீங்க,3 அடி தோசை கூட வாங்கமாட்டோமில்ல.விச்சுவின் நகைச்சுவைக்கு நல்ல சிரிச்சேன்.

ஸாதிகா said...

அட நாங்க தோசை பிரியர்கள் ஆச்சே,//ஊரிலே அநேகர் தோசைப்பிரியர்களாகத்தான் இருப்பார்கள் போலும்.கருத்துக்கு மிக்க நன்றி ஆசியா,

T.N.MURALIDHARAN said...

சாதனைக்கு செய்யப்படும் தோசை சாப்பிட அப்படித்தான் இருக்கும். இனி எட்டிப் பார்த்தால் மட்டும் போதும்.

Kovai Neram said...

இனி அங்க போய் இத ஆர்டர் பண்ணுவோம்....?

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

எட்டடி தோசை எப்படி இருக்கும்ன்னு அடுத்தவாட்டி போய் சாப்பிட்டுட்டு வந்து எழுதுங்க... ஹி.ஹி...

நட்புடன்
கவிதை காதலன்

அமைதிச்சாரல் said...

//எட்டடி தோசை தென்பட்டால் கேமராவில் கிளிக் செய்யலாம் என்று சுற்று முற்றும் பார்த்தால் ஏமாற்றம்தான்.//

எட்டடி தோசை எப்படியிருக்கும்ன்னு ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்டு எல்லோரும் உஷாராயிட்டாங்க போலிருக்கு..

துளசி கோபால் said...

ரொம்ப வருசத்துக்கு முன்னே போனபோது எட்டடின்னு கணக்கெல்லாம் இல்லை. ஃபேமிலி தோசைன்னு ஒன்னு வாங்கினோம். ஒரு நாலடி இருக்கும். தட்டைவிட்டு வெளியில் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமுமாக நீண்டு டேபிளைத் தொட்டுக் கிடந்தது. ஒரு பெரிய வாழை இலையில் தரக்கூடாதா? வழக்கம்போல், பயணத்தில் நான் வாயைக் கட்டிக்கிட்டதால் அண்ணன் அண்ணி குடும்பம் எல்லாம் ரசிச்சுச் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தேன்.

சிராஜ் said...

சலாம் ஸாதிகா,

நான் சென்ற மாதம் சென்ற பொழுது அந்த சிலை மனிதர் இருந்தாரே???? ஒரு வேலை உங்க க்ரூப்ப பார்த்ததும் ஆத்தீ................ னு எஸ்கேப் ஆகி இருப்பாரோ?????

மத்தபடி VGP ல நிர்வாகம் சுத்தமா சரி இல்ல. விலையையும் 175 ஆக்கிட்டனுங்க. வெகு விரைவில் மூடிருவாங்கன்னு நினைக்கிறேன்.

அந்த கிட்சன பார்த்தும் அவங்கள நம்பி 3 அடி தோசை ஆர்டர் பண்ணிய உங்க மன தைரியத்த பாராட்றேன்.

இமா said...

விநோதமான உணவென்றால் சுற்றிலும் ஒரு நோட்டம் பார்த்துவிட்டுத்தான் ஆர்டர் கொடுக்கவேண்டும் போல் இருக்கிறது. ;)
எனக்குப் படம் தெரியவில்லை ஸாதிகா. என்ன காரணமாக இருக்கும்!!

புவனேஸ்வரி ராமநாதன் said...

என்னை வலைச்சரத்தில் அறிமுகம் செய்து வைத்தமைக்கு மிக்க நன்றி ஸாதிகாம்மா.

S.Menaga said...

கோல்டன் பீச்சுக்கு போனாலும் கேன்டீனில் சாப்பிட்டதில்லை.உங்க அனுபவத்தை சொல்லி உஷார்படுத்திட்டீங்க..

மனோ சாமிநாதன் said...

தோசை நன்றாக இல்லையென்றால் திருப்பி எடுத்துப்போகச் சொல்லியிருக்கலாமே ஸாதிகா?

எதிர்கால‌த்தில் அங்கே போய் தோசை சாப்பிடாம‌ல் இருக்க‌ உத‌விய‌ ப‌திவு இது!

Vijiskitchencreations said...

Nice Information.

ஸாதிகா said...

சாதனைக்கு செய்யப்படும் தோசை சாப்பிட அப்படித்தான் இருக்கும்.//இருக்கலாம்.

இனி எட்டிப் பார்த்தால் மட்டும் போதும்..///ஆம் இனி இதைத்தான் பின்பற்ற வேண்டும் கருத்துக்குமிக்க நன்றி டி என் முரளிதரன்.

ஸாதிகா said...

இனி அங்க போய் இத ஆர்டர் பண்ணுவோம்....?//

இனிமேலுமா:)

கருத்துக்கு நன்றி கோவை நேரம்.

ஸாதிகா said...

எட்டடி தோசை எப்படி இருக்கும்ன்னு அடுத்தவாட்டி போய் சாப்பிட்டுட்டு வந்து எழுதுங்க... ஹி.ஹி//என்னது?
அவ்வ்வ்..கருத்துக்கு மிக்க நன்றி மணிகண்டவேல்.

ஸாதிகா said...

எட்டடி தோசை எப்படியிருக்கும்ன்னு ஏற்கனவே தெரிஞ்சுக்கிட்டு எல்லோரும் உஷாராயிட்டாங்க போலிருக்கு.//அட இதை நான் யோசிக்காமல் போய் விட்டேனே.நன்றி அமைதிச்சாரல் கருத்துக்கும்

ஸாதிகா said...

ரசிச்சுச் சாப்பிடுவதை வேடிக்கை பார்த்தேன்.//தப்பிச்சுட்டீங்க சகோ துளசி கோபால்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

அலைக்கும் சலாம் சிராஜ் பாய்.

//ஒரு வேலை உங்க க்ரூப்ப பார்த்ததும் ஆத்தீ................ னு எஸ்கேப் ஆகி இருப்பாரோ?????// ம்ம் இருக்கலாம்.:)

நீங்கள் சொன்ன அளவு கிச்சன் அவ்வளவு மோசமில்லையே.எங்கள் குரூப்பை பார்த்ததும் அடி ஆத்தீ..வந்துட்டாஹளே என்று சுத்தமாக வைத்திருப்பார்கள் போலும்.தோசை சுடுவதில்தான் சொதப்பி விட்டார்கள்:)

கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

இமாவை இங்கு பார்த்ததில் மகிழ்ச்சி.
விநோதமான உணவென்றால் சுற்றிலும் ஒரு நோட்டம் பார்த்துவிட்டுத்தான் ஆர்டர் கொடுக்கவேண்டும் போல் இருக்கிறது. ;) // ஆமாம்.சரியாகத்தான் சொல்லி இருக்கின்றீர்கள்.

உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்த பின் தான் படத்தினை கவனிக்கிறேன்.படத்தை ரீ சைஸ் பண்ணாமல் போட்டதன் விளைவு காணமல் போய் விட்டது.இப்பொழுது மீண்டும் எடிட் செய்து போட்டு இருக்கின்றேன்.

கருத்திட்டமைக்கு மிக்க நன்றி இமா.

ஸாதிகா said...

வரவுக்கு நன்றி புவனேஸ்வரி ராமநாதன்.இடுகையை காணோமே.சீக்கிரம் புது இடுகை போடுங்கள்:)

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

தோசை நன்றாக இல்லையென்றால் திருப்பி எடுத்துப்போகச் சொல்லியிருக்கலாமே ஸாதிகா? //

ம்ம்..அதைச்செய்து இருக்கலாம்.தோன்றவில்லை.மிக்க நன்றி மனோ அக்கா கருத்துக்கு.

ஸாதிகா said...

மிக்க நன்றி விஜி.

கீதமஞ்சரி said...

நீங்கள் தோசை சாப்பிட்ட அனுபவம் சாதாரணமாய் இருந்தால் பதிவில் சுவாரசியம் இருக்காதில்லையா? அதனால்தான் இப்படி போலும். ;)

வியபதி said...

எல்லோருக்கும் நீங்கள் உதவி செய்திருக்கிறீர்கள்- ஃபேமிலி தோசைபற்றி எழுதி- நன்றி

அஸ்மா said...

சலாம் ஸாதிகா அக்கா!

இதுபோன்ற இடங்களுக்கு போகும்போது 'நாங்க பதிவர், கேமராவுடன் வந்திருக்கோம்'னு கொஞ்சம் எச்சரிக்கை மணி அடிச்சிட்டு போனால் ஒருவேளை ஒழுங்கான தோசையா தந்திருப்பாங்களோ..? :)

15 வருஷத்துக்கு முன் இருந்த கோல்டன் பீச் சர்வீஸ் இப்போ நல்லா இல்லன்னு கேள்விப்பட்ட‌து உங்க பதிவு மூலமா உறுதியாகிடுச்சு. நாங்க போனப்போ விலை அதிகமா இருந்தாலும் அந்த கேன்டீன் சுத்தம், ஆமை வேகத்துல தந்தாலும் சுடச்சுட டேஸ்ட்டி உணவு எல்லாமே ஓரளவு நல்லாதான் இருந்தது. உங்க அனுபவத்த சொல்லிட்டீங்கள்ல.. இனி உஷாரா இருக்கணும். பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா!

Mahi said...

இந்த தோசைகளை டிவியில் காட்டுகையில் பார்த்து வியந்திருக்கேன். ப்ராக்டிகலி இப்படியும் சொதப்புவாங்களா??
அனுபவப்பாடம் கத்துக்க வேண்டியதுதான், தகவலுக்கு நன்றி ஸாதிகாக்கா!

மனசாட்சி™ said...

நீளமான தோசை அதுவும் நல்ல முறையில் வார்க்கப்பட்டது அது அந்த காலம் இப்ப காலம் மாறிபோச்சுங்க...

எல்லாம் ஒரு அனுபவம் தான் போங்க.

enrenrum16 said...

நல்ல ஐடியா...அதை நல்ல முறையில் பின்பற்றியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்... உங்க அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்து உஷார்படுத்தியதற்கு நன்றி.

ஸாதிகா said...

kகருத்துக்கு மிக்க நன்றி கீதமஞ்சரி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வியபதி.

ஸாதிகா said...

வ அலைக்கும்சலாம் அஸ்மா.கோல்டன் பீச் வந்த புதிதில் இருந்த சர்வீஸ் இப்பொழுது இல்லைதான்.அதே நேரம் மற்ற தீம் பார்க்குகளில் பெறப்படும் கட்டணங்களை விட இங்கு கட்டணம் குறைவுதான்.கருத்துக்கு மிக்க நன்றி அஸ்மா.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி மனசாட்சி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி என்றென்றும் 16

Priya dharshini said...

Wow..Super...Arumaiya vasagam comment box mela..Unga blogum super.. :)

Jaleela Kamal said...

ஆஹா கோல்டன் பீச் என்றதும்
ஓடி வந்தேன்

இப்படி வேக தோசையா?
தோசை தானே ஒரு நிமிஷத்தில் மொருகலாக வருமே

Jaleela Kamal said...

நாங்க தோசையெல்லாம் இப்படி வேகமாபார்த்தா முதல வேற கொண்டுவாங்கோன்னு சொல்லிடுவோம்

இமா said...

படம் பார்த்தேன். நன்றி ஸாதிகா. ;)

Ramani said...

தோசை எப்படியோ ?
பதிவு சுவாரஸ்யம்
எச்சரிக்கை செய்தமைக்கு
மனமார்ந்தநன்றி

ஸாதிகா said...

மிக்க நன்றி Priya dharshini

ஸாதிகா said...

தோசை தானே ஒரு நிமிஷத்தில் மொருகலாக வருமே//அது உங்களுக்கு கை வந்த கலை ஆச்சே.கருத்துக்கு நன்றி ஜலீலா.

ஸாதிகா said...

ஆர்வத்திற்கு மிக்க நன்றி இமா.

ஸாதிகா said...

தோசை எப்படியோ ?
பதிவு சுவாரஸ்யம்
எச்சரிக்கை செய்தமைக்கு
மனமார்ந்தநன்றி//தாமதமாக வந்தாலும் தவறாது வந்து கருத்து சொல்லும் ரமணி சாருக்கு நன்றிகள்.