November 17, 2011

மழலை உலகம் மகத்தானது..!

சில வருடங்களுக்கு முன்னர் தீவுத்திடலில் நடக்கும் தமிழக அரசின் சுற்றுலா பொருட்காட்சிக்கு சென்று இருந்தேன் ஊரில் இருந்து வந்திருந்த உறவினர்களுடன்.கூட்டத்திற்கு பயந்து விடுமுறை அல்லாத நாட்களில் செல்வதுதான் வழக்கம்.எதிர்பார்த்தது போல் அன்று கூட்டம் அவ்வளவாக இல்லை.

என் குழந்தைகள் கேட்ட பொருட்களை வாங்கிக்கொடுத்து விட்டு புக் ஸ்டாலுக்கு சென்று புத்தகங்கள் வாங்கிக்கொண்டு ஹாண்ட்பாக்கை திறந்து பணம் எடுக்க பர்ஸை தேடினால் பர்ஸ் தென்படவே இல்லை.அதிர்ந்து போய் ஹாண்ட்பேக்கையே தலை கீழாக கவிழ்த்து தேடியும்..ம்ஹும்...சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.

சற்று முன் சென்று வந்த ஐஸ்க்ரீம் கடை,பஞ்சு மிட்டாய்க்கடை,மிளகாய்பஜ்ஜிகடை மூன்றுக்கும்தானே சென்றோம் என்பது ஞாபகத்தில் வந்தது.இது தவிர வேறு எங்கும் செல்ல வில்லையே?பணம் மட்டுமின்றி டெபிட் கார்டு,முக்கிய சில பில்களும் அந்த பர்ஸில் இருந்ததால் மனம் பதறியது.

ஓட்டமும் நடையுமாக மூன்று கடைகளுக்கும் சென்று கேட்டேன்.கூட்டம் அதிகம் இல்லாததால் போய் கேட்கவும் இயன்றது.மூன்றுகடைகளிலுமே இல்லவே இல்லை என்று கூறிவிட்டனர்.எனக்கோ பஞ்சு மிட்டாய் கடைக்காரரின் மீது சந்தேகம்.மீண்டும் அங்கே சென்று முக்கியமான கார்டு,பில்கள் எல்லாம் உள்ளது என்று குரலை தாழ்த்தியும் உயர்த்தியும் கேட்டுப்பார்த்து விட்டேன்.

“இருந்தால் தராமல் என்ன செய்வோம்.உங்கள் பர்ஸ் எங்களுக்கு எதற்கு?”சற்று எரிச்சலுடன் குரலை உயர்த்தினார்.
”சரிங்க பரவாஇல்லை.தொலைந்து போன பணத்தை விட இறைவன் எனக்கு பன்மடங்கு தருவான்.யார் அதனை எடுத்து இருந்தாலும் அந்த பணத்தை விட பன்மடங்கு நஷ்டம் கிடைக்கட்டும்.நான் பர்ஸை எடுத்தவர்களை சொன்னேன்”என்று கூறி விட்டு அந்த இடத்தை விட்டும் அகன்றேன்.சந்தேகம் அதிகமாகவே வலுத்தது.பஞ்சுமிட்டாய்க்காரும்,பக்கத்திலேயே நின்றிருந்த அவரது மகனது கண்களிலும் நன்றாகவே கள்ளத்தனம் தெரிந்தது.

பர்ஸ் தொலைந்ததற்கு என்னுடைய கவனக்குறைவுதான் காரணம் என்று என்று நொந்து போய் அழைத்து வந்தவர்களுக்கு ஏதுவுமே வாங்கிக்கொடுக்க இயலவில்லையே என்று மனம் வெதும்பி,அவர்களது சந்தோஷம் கெடக்கூடாது என்பதற்காக ஒரு ஓரமாக அமர்ந்து விட்டேன்.மேலே செல்வதற்கு மனதில்லாமல்.

கூட வந்திருந்தவர்களும் சுற்றிப்பார்த்துவிட்டு வந்ததும் இருட்டும் முன்னரே திரும்பி விட்டோம்.சரியாக பொருட்காட்சி வாசலை நெருங்கும் பொழுது மூச்சு இரைக்க பஞ்சு மிட்டாய் கடையில் இருந்த சிறுவன் “அக்கா..அக்கா..”என்று கூவியபடி ஓடி வருகின்றான்.

திரும்பிபார்த்தால் அவனது கையில் எனது பர்ஸ்.”இந்தாங்கக்கா உங்க பர்ஸ்.நானும் அப்பா மாதிரி பஞ்சு மிட்டாய் கடை வைத்து காலம் தள்ளக்கூடாது.படித்து வாழ்க்கையில் முன்னேறனும்.இதனை சொல்லியே அப்பாகிட்டே சண்டை போட்டு பர்ஸை வாங்கி வந்தேன்.”பர்ஸை என் கைகளில் தந்த பொழுது என் கண்கள் கலங்கிப்போனது.சிறுவனின் வார்த்தைகளில் திகைத்துப்போனேன்.

பர்ஸை திறந்து சிறிய தொகையை அவனுக்கு அன்பளிப்பாக வழங்க விரும்பியும் அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.ஏழ்மையில் வாழும் அந்த சிறுவனின் பெரிய மனதினை நினைக்கும் பொழுது என்னால் இன்னும் கூட வியப்பை அடக்க இயலாது.இப்பொழுதும் அந்த சிறுவன் வளர்ந்து அவன் விருப்பபடி நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மனதிற்குள்ளாக பிரார்த்தனை செய்து கொள்வேன்.

இப்பொழுது சரி பொருட்காட்சிக்கு சென்றால் மனதினை விட்டும் அகலாத அந்த சிறுவனின் முகம் தேடி என் கண்கள் அலைவதை கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை.

கணேஷ் அண்ணா அழைத்த தொடர் பதிவு.அழைப்புக்கு மிக்க நன்றி!மேலும் குழதைகள் தொடர்பாக நான் எழுதிய கட்டுரைகள் பார்க்க கீழுள்ள சுட்டிகளை சொடுக்கவும்.




43 comments:

Mahi said...

Kuzhanthaiyum deivamum kunathaal onru- enru thelivaakkiya nikazhvu!

Purse bathiram Akka! :)

குறையொன்றுமில்லை. said...

சின்னப்பையன் ஆனாலும் அவன் நேர்மை பாராட்டனும்தான்.

பால கணேஷ் said...

-என் அழைப்பை ஏற்று தொடர்ந்த தங்கைக்கு நன்றி. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் பெற்றோரிடமிருந்துதான் வரும். விதிவிலக்காக சில சமயம் குழந்தைகள் ‘ஸ்வாமிநாதன்’களாக பெற்றோருக்கு பாடம் கற்றுத் தருகின்றனர். அப்படி ஒரு சிறுவனை நீங்கள் சந்தித்த நிகழ்வு மனதைத் தொட்டது. அசத்தலான பகிர்வு!

பால கணேஷ் said...

-என் அழைப்பை ஏற்று தொடர்ந்தமைக்கு தங்கைக்கு நன்றி. குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் பெற்றோரிடமிருந்துதான் வர வேண்டும். ஆனாலும் சில குழந்தைகள் ஸ்வாமிநாதன்களாக மாறி பெற்றோருக்கே அறிவுறுத்துகின்றனர். அப்படி ஒரு விதிவிலக்கான சிறுவனை நீங்கள் சந்தித்த அருமையாய நிகழ்வை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. பர்ஸைத் திருப்பித் தந்ததற்கு நீங்கள தந்த பரிசை வாங்க மறுத்த அவன் நேர்மையைப் பாராட்ட வேண்டும்!

ஸாதிகா said...

முதல் வருகைக்கு மிக்க நன்றி மகி.

///Purse bathiram Akka! :)///ஹா..ஹா..பின்னே..இப்போவெல்லாம் படு ஜாக்கிரதையாக இருப்போமில்லை.

K.s.s.Rajh said...

////பர்ஸை திறந்து சிறிய தொகையை அவனுக்கு அன்பளிப்பாக வழங்க விரும்பியும் அவன் பிடிவாதமாக மறுத்து விட்டான்.ஏழ்மையில் வாழும் அந்த சிறுவனின் பெரிய மனதினை நினைக்கும் பொழுது என்னால் இன்னும் கூட வியப்பை அடக்க இயலாது.இப்பொழுதும் அந்த சிறுவன் வளர்ந்து அவன் விருப்பபடி நன்கு படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என்று மனதிற்குள்ளாக பிரார்த்தனை செய்து கொள்////

அந்த சிறுவனின் நேர்மையும் அவனது இலட்சியமும் சிறப்பானது அவன் வாழ்க்கையில் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கின்றேன்

ஸாதிகா said...

சின்னப்பையன் ஆனாலும் அவன் நேர்மை பாராட்டனும்தான்.///கண்டிப்பாக லக்‌ஷ்மியம்மா.இப்பொழுது அந்த சிறுவனின் செயலை நினைத்தாலும் மனம் நெகிழ்கின்றது.

rajamelaiyur said...

எல்லா குழந்தையும் நல்லவர்கள் தான் ..

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தூக்கு தண்டனையை எதிர்பவர்களுக்கு சில கேள்விகள்?

ஸாதிகா said...

குழந்தைகளுக்கு நல்ல பழக்கங்கள் பெற்றோரிடமிருந்துதான் வரும். விதிவிலக்காக சில சமயம் குழந்தைகள் ‘ஸ்வாமிநாதன்’களாக பெற்றோருக்கு பாடம் கற்றுத் தருகின்றனர். //உண்மைதான்.நீங்கள் குறிப்பிடுவதைப்போன்றும் நிகழ்வுகளில் இருக்கின்றது.

//‘ஸ்வாமிநாதன்’களாக பெற்றோருக்கு பாடம் கற்றுத் தருகின்றனர். // இந்த கதை புரியவில்லையே.விளக்கமாக தரணும் என்றால் கூடிய சீக்கிரம் ஒரு பதிவாகவே எழுதி விடுங்கள்.சீரியஸாக கேட்கிறேன் கணேஷ்ண்ணா!உடன் வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி!

ராமலக்ஷ்மி said...

உங்களோடு அந்த சிறுவனுக்காக நாங்களும் பிரார்த்திக்கிறோம்.

நல்ல பதிவு ஸாதிகா!

பால கணேஷ் said...

சரிம்மா, விரிவான ஒரு ஆன்மிகப் பதிவாக அது அமையும்படி அடுத்த பதிவில் ‘ஸ்வாமிநாதன்’ கதையைச் சொல்கிறேன்...

ஸாதிகா said...

அந்த சிறுவனின் நேர்மையும் அவனது இலட்சியமும் சிறப்பானது அவன் வாழ்க்கையில் வெற்றி பெற இறைவனை பிராத்திக்கின்றேன்//மிக்க மகிழ்ச்சி கே எஸ் எஸ் ராஜ்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

எந்தக்குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே ..அவன் நல்லவனாவதும் தீயவனாவதும் அன்னை வளர்ப்பினிலே என்றொரு பாட்டு கூட உண்டல்லவா?கருத்துக்கு மிக்க நன்றி ராஜபாட்டை ராஜா.உங்கள் வலைக்கு வந்து பின்னூட்டியும் விட்டேன்.
:)

ஸாதிகா said...

மிக்க சந்தோஷம் நன்றி ராமலக்‌ஷ்மி.

ஸாதிகா said...

அடுத்த பதிவில் ‘ஸ்வாமிநாதன்’ கதையைச் சொல்கிறேன்...//ஹை...ரொம்ப தேங்க்ஸ்ண்ணா.

முற்றும் அறிந்த அதிரா said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) மகிக்கா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))) டிஷூ பிளீஸ்ஸ்ஸ்:))

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஹா இது பழைய பாக்கியை முடிச்சிட்டீங்கபோல.... நான் தொடரைச் சொன்னேன்..

படிக்க இப்போ நேரம் போதாது ஸாதிகா அக்கா... பொறுத்து வாறேன் அனைத்துக்க்கும்....ம்ம்....ம்ம்....ம்ம்:)).

Yaathoramani.blogspot.com said...

மிகச் சிறிய நிகழ்வுதான் ஆயினும்
மனம்விட்டு நீங்காத நிகழ்வாக
என்னுள்ளும் இந்த நிகழவு பதிந்துவிட்டது
நிச்சயம் அந்தப் பையன் நல்ல நிலையை
அடைந்திருப்பான்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

முற்றும் அறிந்த அதிரா said...

//”சரிங்க பரவாஇல்லை.தொலைந்து போன பணத்தை விட இறைவன் எனக்கு பன்மடங்கு தருவான்.யார் அதனை எடுத்து இருந்தாலும் அந்த பணத்தை விட பன்மடங்கு நஷ்டம் கிடைக்கட்டும்.நான் பர்ஸை எடுத்தவர்களை சொன்னேன்”//

நல்லாயிருக்கு..... நான் டயலாக்கைச் சொன்னேன்.. ஹா..ஹா..ஹா... என்ன தைரியம் ஸாதிகா அக்கா உங்களுக்கு?... வெரி குட்.

முற்றும் அறிந்த அதிரா said...

//அவர்களது சந்தோஷம் கெடக்கூடாது என்பதற்காக ஒரு ஓரமாக அமர்ந்து விட்டேன்.மேலே செல்வதற்கு மனதில்லாமல்.
///

உண்மையே.... மனம் சோர்வாகிவிட்டால் வாய் திறந்து பேசக்கூட முடியாமல் இருக்கு... மனமே அனைத்துக்கும் காரணம்..

முற்றும் அறிந்த அதிரா said...

//”இந்தாங்கக்கா உங்க பர்ஸ்.நானும் அப்பா மாதிரி பஞ்சு மிட்டாய் கடை வைத்து காலம் தள்ளக்கூடாது.படித்து வாழ்க்கையில் முன்னேறனும்.இதனை சொல்லியே அப்பாகிட்டே சண்டை போட்டு பர்ஸை வாங்கி வந்தேன்.”///

இது உண்மையா ஸாதிகா அக்கா? என்னால் நம்பவே முடியவில்லை... இப்படியும் மனிதர்களோ?!!!

முற்றும் அறிந்த அதிரா said...

சில உண்மைச் சம்பவங்கள் வாழ்வில் மறக்கவே முடியாதவை.

இனிப் பேர்சைப் பார்க்கும்போது எனக்கும் உங்கள் இக்கதைதான் நினைவுக்கு வரப்போகிறது அவ்வ்வ்வ்வ்:)))...

அந்தத்தம்பி எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்......

MANO நாஞ்சில் மனோ said...

குழந்தைகளின் உலகமே வேறுதான் இல்லையா, இருந்தாலும் அந்த சிறுவனை பாராட்டாமல் இருக்கமுடியவில்லை, நன்றாக படித்து வாழ்க்கையில் உயர்வை எட்டும்படி வேண்டிக்கொள்வோம்...!!!

Jaleela Kamal said...

ரொம்ப வியப்பாக இருக்கு

Asiya Omar said...

சில நேரங்களில் இப்படி தொலைந்த பொருட்கள் கிடைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதுண்டு,ஆனால் இந்த நிகழ்வு மனதை தொட்டுவிட்டது.நிச்சயமாக அந்த பர்ஸை அந்த சிறுவன் திருப்பி தரவில்லை என்றால் நாமும் மன உளச்சலுக்கு ஆளாகி நிறைய சாபம் கொடுத்து இருப்போம்.
அந்த சிறுவன் நிச்சயமாய் உயர்ந்த நிலையில் இருப்பான் என்பதில் சந்தேகம் இல்லை தோழி.

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சிறுவனின் நேர்மை நெஞ்சுருக வைத்தது

Angel said...

மனதை நெகிழவைத்த சம்பவம் .மிகவும் அழகாக எழுதியிருக்கீங்க .
அந்த சிறுவன் நிச்சயம் நல்ல உயர்ந்த நிலைமைக்கு வந்திருப்பான் .பகிர்வுக்கு நன்றி

Starjan (ஸ்டார்ஜன்) said...

நெகிழவைத்த பகிர்வு. நல்ல மனசுள்ள அந்த சிறுவன் வருங்காலத்தில் நல்ல நிலைமைக்கு வருவான் என்று பிரார்த்திப்போம்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

அந்தப்பையன் தன் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிகளை அடைவான் என்பது நிச்சயம்.

நல்லதொரு பதிவு. பகிர்வுக்கு நன்றிகளும், பாராட்டுக்களும். vgk

Menaga Sathia said...

அந்த சிறுவனின் நேர்மை ரொம்ப பிடிச்சிருக்கு,உங்களோடு சேர்ந்து நானும் அச்சிறுவனுக்காக பிரார்த்திக்கிறேன்...

ஸாதிகா said...

ஆஹா இது பழைய பாக்கியை முடிச்சிட்டீங்கபோல.... நான் தொடரைச் சொன்னேன்....////ரொம்ப கஷ்டமான ஜாப்பை கொடுத்திட்டீங்க பூஸ்..யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.உதய மாகமாட்டேன்கின்றது.இனி உங்களைப்போல் கிட்னியால்தான் யோசிக்கணும்.

ஸாதிகா said...

நல்லாயிருக்கு..... நான் டயலாக்கைச் சொன்னேன்.. ஹா..ஹா..ஹா... என்ன தைரியம் ஸாதிகா அக்கா உங்களுக்கு?... வெரி குட்.///டயலாக் ..அதுதான் நமக்கு சகஜமா வருமே...எல்லாம் பூஸ் தங்கச்சியைப்பார்த்துத்தான்.தங்கச்சையைப்போல்த்தானே அக்கா இருப்பா?

//உண்மையே.... மனம் சோர்வாகிவிட்டால் வாய் திறந்து பேசக்கூட முடியாமல் இருக்கு... மனமே அனைத்துக்கும் காரணம்..//கரெக்ட்.

மிக்க நன்றி அதிரா.

ஸாதிகா said...

மிகச் சிறிய நிகழ்வுதான் ஆயினும்
மனம்விட்டு நீங்காத நிகழ்வாக
என்னுள்ளும் இந்த நிகழவு பதிந்துவிட்டது
நிச்சயம் அந்தப் பையன் நல்ல நிலையை
அடைந்திருப்பான்//மிக்க மகிழ்ச்சி ரமணி சார்.கருத்துக்கும்,வாழ்த்துக்களுக்கும் நன்றி.

ஸாதிகா said...

குழந்தைகளின் உலகமே வேறுதான் இல்லையா, //உண்மைதான் மனோ சார்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஜலி.

ஸாதிகா said...

சில நேரங்களில் இப்படி தொலைந்த பொருட்கள் கிடைத்து நம்மை வியப்பில் ஆழ்த்துவதுண்டு//உண்மைதான் ஆசியா.சற்றும் நான் எதிர்பார்க்கவில்லை.டெபிட் கார்ட் மிஸ் ஆன விஷயத்தை கணவருக்கு போன் போட்டு சொல்லி விட்டு பாரமான மனதுடன் இருக்கும் பொழுது பர்ஸ் கிடைத்து விட்டது.கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

ருபினா ராஜ் குமார் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஏஞ்சலின்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி ஷேக்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி வி ஜி கே சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

வித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) said...

சில நேரம் நம் வாழ்வில் நடக்கும் உண்மை சம்பவங்கள் பல உன்னதங்களை உணர்த்தி விடுகிறது.