இன்றைய காலகட்டத்தில் மனிதன் தன் சம்பாத்தியத்தில் இருந்து ஐந்தில் ஒரு பங்கை பிள்ளைகளின் படிப்புக்காக செலவு செய்கின்றான் என்றால் அது மிகை ஆகாது.மெட்ரிகுலேஷன்,செண்ட்ரல் போர்ட்,காண்வெண்ட் இண்டர்நேஷனல் பள்ளி என்று எங்கோ போய் மனிதனின் சேமிப்புகளை எல்லாம் விழுங்கிக்கொண்டு இருக்கின்றது.எனக்குத்தெரிந்து தமிழ்நாட்டிலேயே வருடத்திற்கு பத்துலட்சம் செலவு ஆகும் பள்ளிகள் கூட(விடுதிவசதியுடன் அல்ல)உள்ளது.
கடன் பட்டாவது தங்கள் பிள்ளைகளின் படிப்பை நல்லதொரு,பெருமையாக சொல்லிக்கொள்ளும் படியான தரம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் ,மிகமிக கஷ்டப்பட்டு சேர்த்து விட்டு (சேர்த்தபொழுது அவர்கள் அனுபவத்தை கதையாக எழுதலாம்)'அப்பாடா..இனிமேல் பிள்ளையைப்பற்றிய கவலையே இல்லை'என்று நிம்மதி பெருமூச்சு விடுகின்றனர்.
ஓரளவு செல்லமாக் வளர்க்கப்பட்ட பிஞ்சுகள் தம் வயதைசேர்ந்த சக மாணாக்கர்களுடன் பழகும்,ஸ்நேகிதம் கொள்ளும் தருணமும் ஏற்படுகின்றது.பிள்ளைகளுக்கு பெற்றோர் கஷ்ட நஷ்டங்களை தெரியாமல் சொகுசாக வளர்த்து படிப்புக்காக ஆயிரக்கணக்கிலும்,லட்சக்கணக்கிலும் செலவு செய்யும் பொழுது குழந்தைகளுக்கு பணத்தின் மதிப்பும் ,அருமையும் தெரிவதில்லை.நமக்காக நம் பெற்றோர் எவ்வளவு வேண்டுமானாலும் செய்வார்கள் என்ற எண்ணம் முளை விட்டுவிடுகின்றது.
இதனால் ஆடம்பரத்தையும்,ஏகோபோகத்தினையும்.உச்சகட்ட நாகரீகத்தையும் மிக சுலபமாக கற்றுக்கொண்டு அதுவே வாழ்க்கையில் இயல்பாகி போய் விடுகின்றது.இதுதான் சதம் என்று தீர்மானமும் பிஞ்சுகளின் எண்ணத்தில் விதைக்கப்பட்டுவிடுகின்றது.
கூட படிக்கும் மாணவன் ஆடி காரில் வரும் பொழுது மாருதி 800 வரும் மாணவனுக்கு ஒரு இன்பியாரிட்டி காம்ப்ளக்ஸ்.ஸ்கூட்டியில் வரும் மாண்விக்கு ஆல்டோவில் வரும் மாணவியைக்கண்டால் ஏக்கம்.இப்படி பிஞ்சிலேயே நஞ்சு விதைக்கப்பட்டு விடுகின்றது.
"மம்மி ,டேடியை சின்ன வண்டியில் போக சொல்லிட்டு ஸ்கூலுக்கு பெரிய வண்டி அனுப்புங்கள்."
"என் பிரண்ட் இந்த சம்மர் வெகேஷனுக்கு ஹாங்காங் போறான் நாம் எங்கே போகலாம்?"
"எப்ப பார்த்தாலும் இட்லி,சட்னியா?சுனில் பர்கர்,பிஸ்ஸா,பாஸ்தா தான் கொண்டு வர்ரான்"
"எல்லாபசங்களும் காரில் வர்ராங்க.நாமும் ஒரு கார் வாங்குவோம்.அப்பா கிட்டே சொல்லு"
ஸ்வேதா பாக்கட் மணியாக ஹண்ட்ரட் ருபீஸ் கொண்டு வர்ரா,எனக்கு நீ பத்து ரூபாய் தர்ரது அசிங்கமா இருக்கு"
"நாளைக்கு ஆதிலுக்கு காபூலில் பர்த் டே பார்ட்டி.நீயெல்லாம் என் பர்த் டேயை அப்படி செலிபரேட் பண்ண விட்டு இருக்கியா"
"என் பிரண்டோட அப்பா வீக் எண்ட்டில் அவர் மெம்பராக இருக்கும் கிளப்புக்கு டின்னருக்கு அழைத்துட்டு போவார்.நம்ம டாடியையும் ஒரு கிளப் மெம்பராக சொல்லுங்கள்"
இப்படி வசனங்கள் எல்லாம் பல வீடுகளில் சர்வசாதாரணமாக ஒலிக்கும்.அந்தஸ்த்தில் கூட படிக்கும் பிள்ளைகளுக்கு சமமாக இருக்க வேண்டும் என்ற உணர்வும் கல்வியுடன் சேர்ந்தே வளர்ந்து விடுகின்றது.
விளைவு..
ஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப், பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுய டிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும் முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள் நியாமானதுதானா?நல்ல வழியில் கொண்டு செல்லுமா?பெற்றோர்களுக்கு கட்டுப்படியாகுமா?நம் குடும்பபொருளாதாரத்திற்கு தகுமா?என்று எண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகி விடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்.
பிள்ளைகளின் ஆணவ்ம்,டாம்பீகம் இவற்றை தடுத்து நிறுத்தும் செங்கோல் பெற்றோர்கள் கையில்தான் உள்ளது.அது நமது காட்டாயக்கடமையும் கூட.
அ.ஆரம்பத்திலேயே பைசாவின் அருமையையும் உணர்த்துங்கள்.ஒவ்வொரு பைசாவயும் ஈட்டுவதற்கு உள்ளாகும் கஷ்ட்டத்தையும் தெளிவு படுத்துங்கள்.பண விஷ்யத்தில் கறார் ஆக இருங்கள்.
ஆ. செல்ல பிள்ளை விரும்புகின்றானே என்று ஆசைப்பட்டதை எல்லாம் உடனே வாங்கிக்கொடுத்து விடாதீர்கள்.தேவையானதா?இல்லையா?என்று பிள்ளகளை விட்டே தீர்மானம் செய்யச்சொல்லுங்கள்.அத்தியாவசியமான பொருட்களைக்கூட உடனே வாங்கிக்கொடுக்காதீர்கள்.
இ. ஆரம்பத்திலேயே சிக்கனம்,கறார்,கண்டிப்பைக் காட்டினோமானால் குழந்தைகளுக்கு அதிகபடியான ஆசைகளும்,டாம்பீக எண்ணங்களும்,பணத்தின் அருமையை புரியாமல் இருப்பதும்,படாடோப நோக்கமும் உண்டாவது தானகவே வள்ர்வதை தடுக்கும்.
ஈ." உன் ஸ்நேகிதன் வீட்டில் என்ன கார் உள்ளது?எத்தனைக்கார் உள்ளது?டூ வீலர் மட்டும்தான் உள்ளதா?அவங்க வீட்டில் ஹாலில் ஏஸி பண்ணி இருக்கிறார்களா?அந்தப்பையன் பஸ்சிலா வருகின்றான்?அவனுக்கு பர்த்டே paartt உண்டா? அவள்வீடு தனி வீடா?பிளாட்டா?சொந்தவீடா?வாடகைவீடா?"இப்படிக்கேள்விகளை கண்டிப்பாக தவிர்த்து விடுங்கள்.
உ.அவன் எப்படிப்படிப்பான்?எந்த சப்ஜக்ட்டில் நல்ல மார்க் வாங்குவான்?கிளாசில் யார் பர்ஸ்ட்?அனுவல் டேயில் அவனது டிராமா எப்படி?இவளது டான்ஸ் எப்படி?சம் யார் நன்றாக போடுவார்கள்?டிராயிங் யார் சூப்பராக போடுவார்கள்? ரீதியில் மட்டுமே கேள்விகள் எழுப்ப கற்றுக்கொள்ளுங்கள்.
ஊ. ஸ்நேகிதர்களுக்கு தன்னைஅந்தஸ்த்திலும்,ஆடம்பரத்திலும் சமமாக காட்டிக்கொள்ளும் எண்ணத்தை முளையிலேயே கிள்ளி எறியுங்கள்.
எ. வாழ்க்கையின் மேடு பள்ளங்களின் எதார்த்தத்தை எடுத்து சொல்லுங்கள்.அந்தஸ்து பேதமற்ற நட்பை உள்ளத்தில் விதையுங்கள்.
ஏ.எல்லாவித சந்தோஷங்களையும் ஒருமித்தே அனுபவிக்கவேண்டும் என்ற அவாவின் விபரீதத்தை செவ்வன் சொல்லிக்காட்டுங்கள்.
ஐ.நம்மை விட வசதி குறைந்த சக மாணவ, மாணவிகளுடனும் ஒரே மாதிரி பழக வேண்டும் என்ற எதார்த்ததை எடுத்து இயம்புங்கள்.
ஒ. இவை எல்லா வற்றுக்கும் மேலாக இறை பயத்தை,அச்சத்தை பயிற்றுவியுங்கள்இறை பயம் தவறான வழிகேட்டில் இருந்து தவிர்த்து விடும்.இறை அச்சத்துடன் கூடிய உலககல்விதான் நல்ல பிள்ளைகளாக,நேர்வழியில் செல்லும் குழந்தையாக,பிள்ளைகளின் பதின் பருவத்தில் பெற்றோர்களுக்கு தொந்தரவு கொடுக்காத குழந்தைகளாக ,சமூகம் மெச்சும் பிள்ளைகளாக,உதாரணப்பிள்ளைகளாக,சுற்றமும்,நட்பும்கொண்டாடடப்படும் பிள்ளைகளாக ,மொத்தத்தில் நல்ல பிரஜையாக உருவெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.
Tweet |
27 comments:
சமூக அக்கறையுள்ள நல்ல இடுகை.
ரெம்ப நல்லா இருக்கு! ஈசியா நடைமுறை படுத்தாலாம்னு வாய் வார்த்தை சொன்னாலும் செயல்படுத்துவது கொஞ்சம் கஷ்டம் தான் இந்த நாகரீக உலகில்:( ட்ரை பண்ணுவோம் முயற்சித்தால் பயனில்லாமல் போகாது
இந்த நாகரிக உலகில் குழந்தைகளின் உள்ளமும் அதை கையாளும் விளக்கமும் அருமை...வாழ்த்துகள் சகோ....
அவசியமான ஒரு நல்ல பதிவுக்கு நன்றி...
என்ன அழகா எழுதி இருக்கீங்க அக்கா!! மாஷா அல்லாஹ்! எனக்கும் பிள்ளைகளை ரொம்ப செல்லம் குடுத்து வளர்க்கும் பெற்றோர்களை கண்டால் எரியும்.. எங்க வீட்டுலயே நிறைய உதாரணங்கள் இருக்கு, அப்பலாம் நினைச்சுப்பேன் இன்ஷா அல்லாஹ் நமக்கு பிள்ளைகள் வந்தா கண்டிப்பா அதுகளுக்கு பணத்தோட அருமை தெரியாம வளர்க்க கூடாதுன்னு.. உங்க பதிவை இன்ஷா அல்லாஹ் ஒரு செக்லிஸ்ட் மாதிரி வெச்சுக்க வேண்டியது தான்..
நல்ல கட்டுரை. நன்றி அ,ஆ இ சொல்லித் தந்ததுக்கு. ஒரு சிலர் இதையும் பையனின் வளர்ச்சி என்று பெருமையாக நினைப்பது கேவலம். அதுக்கா பையன் என்ன கேட்டாலும் உடனே அந்தக் காலத்தில் நான் எல்லாம் என்று ஆரம்பிப்பதும் தடுக்க வேண்டும். நியமான கோரிக்கைகள், ஆசைகள் வரம்பிக் குட்பட்டு நிறைவேற்றுதல் வேண்டும். நன்றி ஸாதிகா.
// மன்னிப்பை எதிரிக்கு கொடுங்கள்!
பொறுமையை போட்டியாளருக்கு கொடுங்கள்!
மரியாதையை பெரியவர்களுக்கு கொடுங்கள்!
மாதிரி வாழ்வை பிள்ளைகளுக்கு கொடுங்கள்!
உங்கள் பொன்னான கருத்துக்களை இங்கு கொடுங்கள் //
கிடைக்கும் பைசாவை மட்டும் நம்மளே அமுக்கிக் கொள்ளலாம். ஹா ஹா
ஸாதிகா அக்கா நல்ல சரியான இடுகை.
எல்லோருக்கும் பயன்படும். இப்ப உள்ள பிள்ளைக்களுக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை , நாம் சரியான முறையில் சொல்லி வளர்ப்பது நல்லது.
குடிசை வாழ் மக்கள் படும் கழ்டத்தை சொன்னால் கூட அவ்ர்களுக்கு நாம் எவ்வளவோ நல்ல இருக்கோம் என்ற நினைவு வரும்
ஓவ்வொரு பாயிண்டும் அருமை.
”ஆறாவது படிக்கும் சிறுவனுக்கு செல்போன்,எட்டாவது படிக்கும்பொழுது லேப்டாப், பத்தாவது படிக்கும் பொழுது டூ வீலர்,பிளஸ் டூ போகும் பொழுது போர்வீலரில் சுய டிரைவிங்,பெரிய ரெஸ்டாரெண்ட்களில் பஃபே,மால்களில் சுற்றல் .காலேஜ் செல்லும் முன்னர் பப்,கிளப் இப்படி டாம்பீகமாக பழக்கப்படுத்திக்கொள்கின்றனர்.இந்த ஆசைகள் நியாமானதுதானா?நல்ல வழியில் கொண்டு செல்லுமா?பெற்றோர்களுக்கு கட்டுப்படியாகுமா?நம் குடும்பபொருளாதாரத்திற்கு தகுமா?என்று எண்ணுவதில்லை.இது தவறான வழிக்கு கொண்டு செல்வதற்கு காரணியாகி விடுகின்றது.அப்புறம் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரக்கதைதான்”.
-அதனையும் உண்மையான வார்த்தை.நல்ல அறிவுரை.என் மகள் எட்டு படிக்கிறாள்.செல்போன் கேட்கிறாள் ,நிறைய யோசிக்கணும்.
எல்லோருக்கும் பயன்படும். இப்ப உள்ள பிள்ளைக்களுக்கு பணத்தின் அருமை தெரிவதில்லை , நாம் சரியான முறையில் சொல்லி வளர்ப்பது நல்லது.” நம்ப கருத்தும் அதேதான்....
அஸ்ஸலாமு அலைக்கும்
பெற்றோர்களுக்கு நல்ல அறிவுறை
ஒவ்வொரு பெற்றோரையும் சிந்திக்க வைத்த வரிகள்.
ஜஸாக்கல்லாஹு ஹைர்
சரவணக்குமார்,உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி.
சுஸ்ரீ,கருத்துக்கு நன்றி,கணடிப்பாக டிரை பண்ணியே ஆக வேண்டும்.இல்லாவிட்டால் பிள்ளைகளின் பாதை மாறிவிடலாம்.
சீமான் கனி,தவறாமல் வந்து கருத்து தெரிவிப்பதற்கு நன்றி.
நாஸியா,உங்களுக்கும் என் நன்றி.
சகோதரர் பித்தனின் வாக்கு உங்கள் பின்னூட்டத்திற்கும்மிக்க நன்றி.//ஒரு சிலர் இதையும் பையனின் வளர்ச்சி என்று பெருமையாக நினைப்பது கேவலம். //
உண்மையான வரிகள்.
ஜலி,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
ஆஸியா,நன்றி.மகளுக்கு இப்போதெல்லாம கண்டிப்பாக அவளுக்கென்று தனி கைபேசி வாங்கித்ந்துவிடாதீர்கள்.
அண்ணாமலையான்,தங்கள் கருத்துக்கும் நன்றி.
தாஜ்,வ அலைக்கும் வஸ்ஸலாம்.உங்கள் வரிகள் மகிழ்வைத்தந்தன.மிக்க நன்றி
You are definetly on target with this post. By the way.. Who is going to teach those parents who are like you have explained. Who in the world ever looks back to thier humble origins and think "If I ever complain about my misfortune Let me do a falshback of my 10 year ago or 20 year ago life" . My goal in the coming year to be more thankful for the life I have and things god gave me and blessing bestowed on me . You are giving lots of "food for thought" .. Keep writing my dear aunty!!!
thank u for ur comments ila. parents have to change to have a better society. there is a limit for culture too.
இதேதான் அக்கா எல்லா இடத்திலயும் பிரச்னை. ஃபிரண்ட்ஸ் இப்படி வச்சிருக்காங்களே, எனக்கு மட்டும் இல்லையே”ன்னு கேக்கும்போது நமக்கு நம்ம பிள்ளை ஆசைப்பட்டதைக் கொடுக்கறதுக்கில்லாம வேற எதுக்கு சேத்துவைக்கிறோம்னு தோணும். நம்ம மனசையும் கட்டுப்படுத்திகிட்டுத்தான் நோ சொல்லணும்.
அதே சமயம், டாம்பீகமான பெற்றோர்களும் கண்டிக்கப்படவேண்டியவர்கள். தாங்களும் கெட்டு, தங்கள் பிள்ளைகளையும் கெடுப்பதோடு, நம் பிள்ளைகளையும் கெடுக்கப் பார்க்கிறார்கள்.
எனது இந்த இடுகையிலும் இதைக் குறித்து எழுதியிருக்கிறேன்.
ஸாதிகா அக்கா, அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள். இவை உள் நாட்டில் மட்டுமில்லை, எல்லா நாட்டிலும் இப்படித்தான் நிலைமை இருக்கு. சில பெற்றோர் நினைக்கிறார்கள், தமக்கு கிடைக்காதது தம் பிள்ளைகளுக்கு கிடைத்திட வேண்டுமென்று, அதில் தப்பில்லை, ஆனால் அது பிள்ளையின் வளர்ச்சியைப் பாதிக்காமல் இருந்தால் போதும். நாமே நம் பிள்ளைகளுக்கு தவறான வழிகளைக் காட்டிக்கொடுத்துவிட்டு, பின்பு பிள்ளையில் குற்றம் சொல்வதில் அர்த்தமில்லைத்தான்.
இது இலாவுக்கு: இலா இலா.. ஸாதிகா அக்கா... ஆன்டி இல்லை, "குட்டி ஆன்டி":).....
ஹுசைனம்மா,கருத்துக்கு நன்றி.தாங்கள் குறிப்பிட்ட அந்த இடுகையை பார்த்து கருத்தும் இட்டு இருக்கின்றேன்.
அதிரா,உங்கள் கருத்துக்கும் நன்றி.என்ன உங்கள் வலைப்பூ பக்கம் நான் வந்து வந்து போகின்றேன்.நீங்கள்தான் வருவதே இல்லை.விரைவில் புது பதிவுபோடுங்கள்.
நல்ல விசயங்களை எழுதி இருக்கீங்க..
உங்களின் பதிவு மிகவும் பயனுள்ளது..
குழந்தை சமூகங்களின் பிரச்சனைகளையும்
அதை நாம் சரி செய்யும் முறைகளையும் நன்றாக பேசுகிறது...
உங்களின் பதிவிற்கு என் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..
அருமையான கட்டுரை....பல குடும்பங்களில் இதே பிரச்சனைதான்....நன்றாக அலசி ஆய்ந்து எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்..!
முத்து லெட்சுமி,பின்னூட்டத்திற்கு நன்றி.
கமலேஷ் உங்கள் ஊக்கம் கொடுக்கும் பதிவுக்கு நன்றி.
சகோதரர் இஸ்மத்,உங்கள் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி.
பயனுள்ள கருத்துக்கள், நமது குழந்தைகளுக்கு முன் உதாரணமாக மற்றவரை காட்டும்போது முடிந்த வரை பணக்காரர்களை விட நல்ல பண்பாளர்களை காட்டுவது நல்லது.
எனது பிள்ளைகள் ப்ளே ஸ்டேஷன் வேண்டுமெனக் கேட்டார்கள், அதிலிருக்கும் நன்மைக்ளை விட தீமைகளே அதிகம் என என்னுடைய சக அலுவலக நண்பர் சொல்லித் தெரிந்தது, அவ்விடயஙகளை பக்குவமாக பிள்ளைகளுக்கு எடுத்துச் சொன்னேன், கேட்டுக் கொண்டார்கள்.
சகோதரர் ஷஃபி,பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி.பிளே ஸ்டேஷனால் குழந்தைகளின் படிப்பு பெரிதுமே பாதிக்கப்படுகிறது.எப்பொழுதும் அதிலேயே மூழ்கிக்கிடக்கின்றனர்.நாம் அவர்களை அழைத்தாலும் அவர்களின் காதில் விழுவதில்லை.நிமிர்ந்தும் பார்க்கவும் மாட்டார்கள்.அந்தளவு பிளே ஸ்டேஷனுக்கு சிறார்கள் அடிமையாகி விட்டனர்.நீங்கள் பக்குவமாக உங்கள் குழந்தைகளுக்கு எடுத்து சொன்னதும்,அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டதும் மிகவும் சந்தோஷமான விஷயம்.
ஸாதிகா அக்கா இந்த போஸ்டை குழந்தைவளர்பு பகுதியில் போட்டு நீஙக்ள் போட்டது என்று பப்லிஷ் பண்ணலாம் என்று இருக்கேன், பண்ணலாமா
தாரளமாக பண்ணுங்கள் ஜலி.உங்களுக்கு இல்லாததா?
அன்பு சகோதரி ஸாதிகா!
இந்த மாதிரி கருத்துக்கள் அடிக்கடி சொல்ல வேண்டிய காலக்கட்டம் இது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு புத்தகத்தில் சமீபத்தில் படித்தேன், ‘சின்னஞ்சிறு குழந்தை பனித்துளி மாதிரி ! அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது! கீழே விழுந்ததும் மண்ணில் உள்ள அழுக்குகளில் அது கலந்து விடுகிறமாதிரி, நாம்தான் அந்த பரிசுத்தமான குழந்தைகளை கெடுக்கிறோம்’என்று!!
நீங்கள் எழுதியிருப்பவைகளைப் படித்து ஒரு சில பெற்றோராவது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டால் அது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
அன்பு சகோதரி ஸாதிகா!
இந்த மாதிரி கருத்துக்கள் அடிக்கடி சொல்ல வேண்டிய காலக்கட்டம் இது. அருமையாக எழுதியிருக்கிறீர்கள்.
ஒரு புத்தகத்தில் சமீபத்தில் படித்தேன், ‘சின்னஞ்சிறு குழந்தை பனித்துளி மாதிரி ! அது மண்ணில் வந்து விழும்வரை எத்தனை பரிசுத்தமாக இருக்கிறது! கீழே விழுந்ததும் மண்ணில் உள்ள அழுக்குகளில் அது கலந்து விடுகிறமாதிரி, நாம்தான் அந்த பரிசுத்தமான குழந்தைகளை கெடுக்கிறோம்’என்று!!
நீங்கள் எழுதியிருப்பவைகளைப் படித்து ஒரு சில பெற்றோராவது தங்கள் குழந்தைகளை வளர்ப்பதில் உள்ள தவறுகளைத் திருத்திக்கொண்டால் அது உங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றி!!
ப்ரிய அக்கா,
என் வலைப்பூவிற்கு வருகை தந்து பின்னூட்டமிட்டு என்னை உற்சாகபடுத்தியமைக்கும் மிக்க நன்றி அக்கா.
Post a Comment