சகோதரி மாதேவி(சின்னு ரேஸ்ரி ) அரிதாகிப்போன பொருட்கள் ,சாதனங்கள் என்று அந்தக்காலத்தில் புழக்கத்தில் இருந்த பொருட்களை அழகாக படம் எடுத்து போட்டு கருத்தை கவர்ந்து இருந்தார்.நான் சிறிய வயதில் கண்டு,அனுபவித்து களித்த பொருட்களை இப்பொழுது காண்பது அரிதாகிவிட்டது.அப்படி அரிதாகிப்போன பொருட்கள்,ஜீவன்களை கூகுளில் தேடிப்பிடித்து உங்கள் முன் படைக்கிறேன்.
வெற்றிலை தட்டு
அந்தகாலத்தில் உறவினர்,நண்பர்கள் இல்லங்களுக்கு சென்றால் உபச்சாரங்களுக்கு பிறகு இறுதியில் வரும் தட்டு.பாக்கு,வெற்றிலை,சுண்ணாம்பு,இதர வாசனைபொருட்கள் நிரப்பி வைத்திருக்கும் தாம்பூலத்தட்டு.கூடச்செல்லும் சிறார்களுக்கு அதிலேயே கண்ணாக இருக்கும்.சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுது எடுத்து வாயில் அதக்கிகொள்ளும் சிறியவர்களில் கொண்டாட்டத்தை எப்படி வர்ணிப்பது?தட்டு வடிவில் மட்டுமில்லாமல் அன்னம்,மயில் சேவல் பூ வடிவங்களில் கூட இருக்கும்.
பூம் பூம் மாடு
மாடுகளை கன்னா பின்னா வென்று துணிகளால் அலங்கரித்து உடுக்கை ஒலியுடன் வருவார் மாட்டுக்காரர்.உடுக்கையை ஒலிக்கச் செய்து கேள்வி கேட்டால மாடு தலையை தலையை ஆட்டும் .இதனை வேடிக்கைப்பார்ப்பதற்காக ஒரு கூட்டமே பின்னால் திரியும்.
பொட்டு வண்டி
"மாப்பிள்ளை வர்றார் மாப்பிள்ளை மாட்டு வண்டியிலே.பொண்ணு வர்றா பொண்ணு வர்றா பொட்டு வண்டியிலே"என்று ஒரு சினிமா பாடல் கூட உண்டு.மாட்டுவண்டியில் அழகாக வேயபட்ட கூடாரத்துக்குள் திண்டுகள் அமைத்து,அழகாய் அலங்கரித்து மாட்டின் கழுத்தில் கட்டப்பட்டு இருக்கும் சலங்கை சல் சல் என்ற ஒலியின் பின்னனியில் திண்டில் படுத்துக்கொண்டே இடமும் வலமுமாக ஆடிக்கொண்டே பயணிக்கும் சுகத்திற்கு பிசினஸ் கிளாஸ் விமானப்பயணம் கூட ஈடாகாது
கோலி சோடா
பெப்சி கோக் என்று வெளிநாட்டு சமாச்சாரங்கள் வந்த பின் காணாமல் போன வஸ்து.அப்பொழுதிருந்தே இந்த கோலியை எப்படி பாட்டிலுக்குள் அடைக்கிறார்கள் என்பது புரியாத புதிர்.கோலிசோடா உடைப்பானை வைத்து கோலியில் அழுத்தினால் புஸ் என்று வரும் சப்தத்திற்கு பயமாக இருக்கும்.
தெருக்கோழி
க்ஹும்..க்ஹும் என்று குரல் கொடுத்துக்கொண்டு தெருவில் குடு குடு வென்று ஓடும் கோழி.கோழியின் உரிமையாளர்கள் அந்தி சாயும் நேரம் தங்கள் கோழிகளை அடைப்பதற்காக தேடி பிடிப்பார்கள்.என்னுடைய போந்தா கோழியை பார்த்தியா?செவலைக்கோழியைப்பார்த்தியா?நாட்டுககோழியைப் பார்த்தியா? என்று தேடும் குரல்களாகவே ஒலிக்கும்
நுங்கு வண்டி
உபயோகித்த நுங்கு கோந்தைகளில் கம்பை வைத்து வண்டியாக செய்து தெருவில் இழுத்து செல்வார்கள்.
கடலைக்காரர்
"கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இப்பொழுது எங்கே போனார்கள்?எப்படித்தான் பக்குவமாக வறுத்தாலும் அந்த டேஸ்ட் வரவே செய்யாது.
பல்லாங்குழி
14 குழிகள் அமைந்த அந்தகால இண்டோர் கேம்.சோழிகளை போட்டு விளையாடுவார்கள்.
பட்டுப்பூச்சி
மழைகாலங்களில் வரும் ஒரு அழகான பூச்சி.அழகிய சிகப்பு நிறத்தில் சிலந்தி வடிவில் பட்டுப்போன்ற மெனமையுடன் கரங்களில் குடு குடு என்று ஓடும் பொழுது மயிற்கால்களெல்லாம் சிலிர்த்துப்போகும்.இந்த பூச்சிகளை சேகரித்து தீப்பெட்டிகளில் வீடு அமைத்து மகிழ்வார்கள்.
ஸ்கூல் பெல்
எப்போதடா நாண்கு மணியாகும் என்று காத்திருந்து பல சிறார் உள்ளங்களை துடிப்புடன் எதிபார்க்க வைக்கும் சஞ்சீவி.காண்டா மணி போன்று பெரிய மணியை வைத்து கைகளால்,அல்லது கயிற்றினால் ஆட்டுவார்கள்.சில பள்ளிகளில் பெரிய இரும்பு தகட்டை தொங்க விட்டு சுத்தியலால் அடிப்பார்கள்.பள்ளி பியூன் அடித்து முடியும் வரை காத்திருந்து சுத்தியலை கெஞ்சி கேட்டு வாங்கி ஓங்கி ஒரு அடி கொடுத்து வரும் ஒலியில் பூரித்து நிற்பார்கள் மாணவர்கள்.
அம்மி கொத்துபவர்
அம்மி கொத்தலையோ அம்மி என்று தெருவில் கூவார்கள்.அரைத்து அரைத்து தேய்ந்து போன அம்மியை உளியை வைத்து கொத்தினால் நன்றாக அரைபடும் என்று பெரியவர்கள் கூறுவார்கள்.அம்மியில் தாமரைப்பூ,சூரியன்,ரோஜாப்பூ சூரியகாந்தி போன்ற வடிவில் நம் விருப்பத்துக்கேற்ப கலைநயத்துடன் அம்மி கொத்தும் அழகே தனிதான்.இப்பொழுது அம்மி கொத்துபவர் மட்டுமல்ல அம்மியுமே காணாமல் போய் விட்டது.
ஐஸ் வண்டி
சைக்கிள் கேரியரில் சதுர வடிவ மரப்பெட்டியை கட்டி வைத்துக்கொண்டு ஆரஞ்ச் கலர் குச்சி ஐஸை ஆரஞ்சு ஐஸ் என்றும்,ஊதா நிற குச்சி ஐஸை திராட்சை ஐஸ் என்றும்,வெள்ளை நிற குச்சி ஐசை சேமியா ஐஸ் என்று நாமகரணம் வைத்து விற்பார்கள்.ஐஸை சாப்பிட்டு விட்டு நாக்கை நீட்டி கலர் நன்றாக ஏறி இருக்கின்றதா என்று சிறுவர்கள் பார்த்துக்கொள்வதே அழகுதான்.
குடுகுடுப்பைக்காரர்
நல்ல காலம் பொறக்குது நல்ல காலம் பொறக்குது என்று கூவிக்கொண்டே வருபவர்.இவரைக்கண்டால் சிறுவர்களுக்கு கிலி.மை போட்டு மயக்கம் கொடுத்து சுடுகாட்டுக்கு அழைத்து சென்று விடுவார்கள் என்று பெரியவர்கள் எச்சரித்ததின் விளைவு.குடு குடுப்பை ஓசையை அநேகமாக ஒளிந்திருந்தே கேட்பார்கள்.
டூரிங் டாக்கீஸ்
டெண்டு கொட்டகை,சினிமா கொட்டகை என்று அழைக்கப்படும்.அநேகமாக ஆஸ்பெடாஸ் ஷீட்களை கூரையாக கொண்டது.தரை டிக்கட் என்பது மணலில் அமர்ந்து படம் பார்ப்பது.இருப்பதிலேயே ஒசத்தியான டிக்கட் பால்கனி,திரைக்கு முன்பாக சிகப்பு நிற பெயிண்ட் பூசப்பட்ட வாளிகளில் மணலை நிரப்பி இருப்பார்கள்.தீப்பிடித்தால் மணலை வீசி தீயை அணைப்பதற்காகவாம்.தியேட்டருக்குள்ளேயே முறுக்கு,வடை,பூரி போன்ற தின்பண்டங்களை பாடல் காட்சிகளின் போது தட்டில் வைத்து கூவி கூவி விற்பார்கள்.திரையில் எம் ஜி ஆர் தொட்டால பூ மலரும் என்று ஆடிக்கொண்டே பாடிக்கொண்டு இருப்பார்.அலுமினிய தட்டுகளில் பண்டங்களை வைத்துக்கொண்டு வடே,முருக்கூகூ,பூரீஈஈஈ கூவலும் கூடவே வரும்.
பட்டை சோறு
தென்னந்தோப்புகளுக்கு,தூரத்து தீவுகளுக்கு பிக்னிக் செல்லுவார்கள்.சாப்பிடுவதற்கு தட்டோ,டிஸ்போசபிள் தட்டோ இருக்காது.பனை ஓலையில் அழகாக செய்யப்பட்ட தொன்னையில் சூடான சாதத்தின் மேல் களறிக்கறியும்,தாளிச்சாவும் பச்சை ஓலை மனத்துடன் கூடிய பட்டை சாப்பாடு..ஆஹா..
பாம்படம்
அந்த காலத்து மாற்றுமத பாட்டிகள் காதில் அணிந்து இருந்த ஒரு பயங்கரமான ஐட்டம்.காது ஓட்டையை பார்த்தாலே கிலியாக இருக்கும்.பாம்படம் தொங்க அம்மியில் உட்கார்ந்து மசாலா அரைக்கும் பொழுது பாம்படங்கள் ஆடும் ஆட்டம் இருக்கிறதே சொல்லி மாளாது.அதை ரசிக்கவென்றே ஒரு சிறார் கூட்டம் நிற்கும்.
பொம்மலாட்டம்
திருவிழா,பெருநாள் திடல்,மற்றும் தர்ஹாக்களில் நடக்கும் விழாக்கள் போன்றவற்றில் இந்த பொம்மலாட்டாக்காரர்கள் கண்டிப்பாக ஆஜர் ஆகிவிடுவார்கள்.பொம்மைகள் நடனத்தை கண் கொட்டாமல் உட்கார்ந்து ரசிப்பது மட்டுமல்லாமல் ஆட்டம் முடிந்ததும் மெதுவாக திரைக்கு அருகில் போய் எப்படி இப்படி பொம்மைகள் இந்த ஆட்டம் போடுகின்றது என்று ஆராயும் நிமித்தமாக அங்கும் இங்கும் சுற்றித்திரிந்ததை இப்பொழுது நினைத்தாலும் சிரிப்பு வரும்.
மிக்சர் வண்டி
இரவானால் டொடய்ங்..டொடய்ங் என்று மணி சப்தம் கேட்டாலே மிக்சர் வண்டிக்காரர் வந்து விட்டார் என்று அர்த்தம்.ஓமப்பொடி,காராபூந்தி,
ஜவ்வு மிட்டாய்
மூங்கில் களியின் உச்சியில் ஒரு பொம்மையைக்கட்டிக்கொண்டு அடியில் தொங்கும் கயிற்றை பிடித்து இழுத்தால் பொம்மையின் இருகரங்களிலும் இணைத்து இருக்கும் சலங்கை ஜல் ஜல் என்று ஒலி எழுப்பினாலே போதும்.வாண்டுகள் சிட்டாய் பறந்து வீதிக்கு வந்து வந்து விடுவார்கள் சில்லரைகாசுகளுடன்.பொம்மைக்கு அடியில் சுற்றப்பட்ட ஜவ்வு மிட்டாயை சுற்றிலும் பிளாஸ்டிக் கவர் போட்டு ஈ மொய்க்காத வண்ணம் மூடி இருக்கும் ஜவ்வு மிட்டாயை எடுத்து வளையல்,வாட்ச்,பிரேஸ்லெட்,மோதி
Tweet |
41 comments:
ஆழமாக யோசித்து அருமையான
அழகான பதிவைத் தந்துள்ளீர்கள்
படங்களும் அதற்கான விளக்கங்களும்
மிக மிக அருமை
இதை எல்லாம் கண்டு ரசித்து
வாழ்ந்த என் போன்ற வயதுக்காரர்களுக்குத்தான்
இழப்பின் கனம் புரியும்
சூப்பர் பதிவு
நல்ல கலெக்ஷன். இவற்றில் சில இன்னும் பல ஊர்களில் இருக்கிறது. நகரங்களில்தான் காணவியலாது.
நல்ல பதிவு ,அனைத்து படங்களையும் சேகரித்து அசத்திவிட்டிர்கள்.
மலரும் நினைவுகளில் மனதை மலரச்செய்துவிட்டீர்கள். பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.
ஸாதிகா அக்காஆஆஆஆஆஆ வட போச்சே அவ்வ்வ்வ்வ்வ்... பொறுங்க துடைச்சிட்டு வாறேன்.. நான் கண்ணைச் சொன்னேன்...
அதிராவினாலதானே... இந்தக் காணாமல் போனதெல்லாம் நினைவுவந்தது உங்களுக்கு... சரி சரி முறைக்கப்பிடா....
பொறுங்கோ படிச்சிட்டு வாறன்...
இந்த வெற்றலைத்தட்டு, இப்பவும் எங்கள் ஊரில் கொண்டாட்டங்களின்போது வைப்பார்கள்... இன்னும் இருந்துகொண்டுதானிருக்கு.
ஏன் இங்குகூட நான் வைத்திருக்கிறேனே:)), பிரிஜ்ஜில் வெற்றிலையும், அழகான குட்டி பற்றன்போட்ட(பின்னல்போல) ஓவல் சேப் பெட்டியில் வாசப்பாக்கு, கறுவா வைத்திருக்கிறேன், வீட்டுக்கு வரும் சிலருக்கும் பிடிக்கும் கேட்டால்(கர்ர்ர்ர்ர்ர்:)) பத்திரமாக கொஞ்சூண்டு:) கொடுப்பேன் எனெனில் இங்கு வெற்றிலை வாங்க முடியாது:((.
இந்த பூம் பூம் மாடு நான் எங்கேயும் கண்டதில்லை:(((. அழக்காக இருக்கு.
உண்மைதான் இந்தக் கூடார மாட்டுவண்டில், நான் சின்னப்பிள்ளையாக இருந்தபோதுகூட கண்டதில்லை, அதுக்கு முன்பே காணாமல் போய்விட்டது. வெறும் நோர்மல் வண்டில்தான் பார்த்திருக்கிறேன் நேரில்.
கோலி சோடா தெரியாது.
கோழி, ஊர்களில் இப்பவும் இருக்கென நினைக்கிறேன்.
நொங்குவண்டில், சின்னனில் பார்த்திருக்கிறேன்..... இப்போ பிள்ளைகள் ஹேம்ஸ்க்குப் போய்விட்டமையால்.... இதுக்கெல்லாம் அவர்களுக்கு நேரமில்லை:(.
கோயிலில் கடலை ஆச்சியிடம் வாங்கும் கடலைதான் சுவை சூப்பராக இருக்கும்.
ஐஐ... பட்டுப்பூச்சி.... நானும் ஊரில் பார்த்திருக்கிறேன் இதை, தொடப்பயம், ஆனா கிட்டப்போய்ப் பார்ப்பேன் நல்ல அழகாக இருக்கும்.... மழைக்கு வரும்ம்ம்ம்ம்.
அம்மி.....ம்ம்ம்ம்ம் ஊர் வீட்டில் இருக்கு... எம் பிள்ளைகளுக்குத் தெரியாதுதான்.
ஐஸ் வண்டி... அதெல்லாம் ஒருகாலம்ம்ம்.
ஆனா இந்தக் குடுகுடுப்பைக் காரர் காணாமல்போனது மிக நல்ல விஷயம் ஸாதிகா அக்கா:((. நான் சின்னனாக இருந்தபோது ஊரில் குறைவு, இருப்பினும் ஒருசிலர் வருவார்கள் தூரத்தில் கண்டாலே எனக்கு கைகால் எல்லாம் ரைப் அடிக்கும் அவ்வளவு பயம். கனவில்கூட வந்து மிராஆஆஆஆட்டுவார்கள்:(((.
ஏனையவை எனக்கும் தெரியாத விஷயங்களே.. ஆனா இந்த மிக்ஸர் வண்டில்... இலங்கையில் பீச்சில் காணலாம் கடலை வண்டில் என்போம்.
நல்ல பயனுள்ள பதிவு ஸாதிகா அக்கா. கொஞ்ச நேரத்துக்கு எங்கோ கொண்டுபோயிட்டீங்க என்னை.
அவ்வ்வ்வவ்வ்வ் ... அழுதுபுட்டேன் படத்தையும் பதிவையும் படிச்சு .அருமையான மலரும் நினைவுகள் .
கொட்டாங்குச்சி வயலின் ,சோன் பப்படி ,கம்மர்கட் இதெல்லாம் தொலைந்தே
போச்சு .அடடே பன்னீர் சோடாவ மறந்திட்டீங்களே .
உப்பு மிளகாத்தூள் போட்ட இலந்தைபழம் இப்பவும் கிடைக்குதா .?
என் சிறுவயது நினைவுகளைக் கிளறிய பதிவு. அதிலும் ஜவ்வு மிட்டாய், ஐஸ் வண்டி, குடுகுடுப்பைக்காரர், பல்லாங்குழி, நுங்கு வண்டி, வெற்றிலைத் தட்டு என அத்தனையும் சிறுவயதில் என் மனதோடு நெருக்கமானவை.
சூப்பரா கலக்கிருக்கீங்க மறந்துபோன பல விசயங்களை நினைவுப் படுத்த முடிந்தது.
நல்ல கலெக்ஷன்
really a good post remembering my childhood period if possible bring your face book...
நீங்க சொன்னதுல, வெத்திலைத் தட்டு, கோழி பிடிக்கிறது, பல்லாங்குழி, ஸ்கூல் பெல் (கிராமத்துப் பள்ளிகளிலும்), ஐஸ் வண்டி இதெல்லாம் எங்க ஊரில் உண்டு. (விழாக்காலங்களில்)
கடிதம், வாழ்த்து அட்டைகள், டேப் ரிகார்டர், கிராமஃபோன் இவையும் காணோமே!!
என்ன செய்ய, பழையன கழிதலும், புதியன புகுதலும்தானே வாழ்க்கை!!
கருத்திட்டமைக்கும்,ஊக்கத்திற்கும் மிக்க நன்றி ரமணி சார்.
//சிநேகிதன் அக்பர் said...
நல்ல கலெக்ஷன். இவற்றில் சில இன்னும் பல ஊர்களில் இருக்கிறது. நகரங்களில்தான் காணவியலாது.// உண்மைதான் சில ஊரில் இருக்கலாம் .ஆனால் கண்டு நாட்களாகி விட்டது அக்பர்.கருத்துக்கு நன்றி.
ஊக்கவரிகளுக்கு நன்றி இளம் தூயவன்.
பாராடுகளுக்கும் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி சகோ இராஜராஜேஸ்வரி.
//ஓவல் சேப் பெட்டியில் வாசப்பாக்கு, கறுவா வைத்திருக்கிறேன், வீட்டுக்கு வரும் சிலருக்கும் பிடிக்கும் கேட்டால்(கர்ர்ர்ர்ர்ர்:)) பத்திரமாக கொஞ்சூண்டு:) // கஞ்சூஸ் பூஸ்.ஐ பட்டு பூச்சியை தொட பயமா?பயாந்தாங் கொல்லி அதீஸ்.உற்சாகமாக வந்து பின்னூட்டங்கள் பொறுமையாக கொடுத்ததற்கு மிக்க நன்றி அதீஸ்.
//கொட்டாங்குச்சி வயலின் ,சோன் பப்படி ,கம்மர்கட் இதெல்லாம் தொலைந்தே
போச்சு .அடடே பன்னீர் சோடாவ மறந்திட்டீங்களே .
உப்பு மிளகாத்தூள் போட்ட இலந்தைபழம் இப்பவும் கிடைக்குதா .?/// ஏஞ்சலின் காணாமல் போனவைகள் இரண்டாம் பாகத்திற்கு ஐடியா கொடுத்து விட்டீர்கள்.கருத்துக்கு மிக்க நன்றி.
இந்த பதிவு அநேகரது பழைய நினைவுகளை தூண்ட காரணியாக இருந்தது பற்றி மிக்க மகிழ்ச்சி.கருத்துக்கு மிக்க நன்றி கலா நேசன்.
வந்து கருத்திட்டமைக்கு மிக்க நன்றி சகோ இஸ்மத்
முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி ஏ வி எஸ்
/ kalamaruduran மிக்க நன்றி
//என்ன செய்ய, பழையன கழிதலும், புதியன புகுதலும்தானே வாழ்க்கை!!//என்ன செய்வது.இப்படி பதிவு போட்டு ஆற்றிக்கொள்ள வேண்டியதுதான்.ஆனால் பழைய நினைவுகளை அசை போடும் பொழுது எத்தனை மகிழ்வாக உள்ளது!நன்றி. ஹுசைனம்மா.
சிறுவயது ஞாபகங்கள்... சுத்துமிட்டாய், ஜவ்வுமிட்டாய், பஞ்சுமிட்டாய் இதெல்லாம் சாப்பிட்டது ஞாபகத்துக்கு வருது. இந்த பஞ்சுமிட்டாய் இப்போதுள்ள பாப்கார்ன்னுக்கு முன்னோடின்னு சொல்லலாம். ஆமா பஞ்சு மிட்டாய் செய்றதும் பாப்கார்ன்னு செய்றதும் ஒரே மெத்தர்ட்.
எங்க ஊர்சைடுல நீங்க குறிப்பிட்டவற்றில் சில இப்போதும் உண்டு. அக்பர் சொன்னமாதிரி நகரத்துலதான் கம்மி. நல்லா ரசிக்கவைத்த பதிவு.
தெருதெருவா சாணைபிடிப்பவர், ஜவுளி விற்பவர், மண்பானை செய்து விற்கிறவர்கள், இவங்கெல்லாம் குறைஞ்சு போயிட்டாங்கன்னு சொல்லலாம்.
பட்டுப்பூச்சி, குடுகுடுப்பைகாரர், பூம் பூம் மாடு, வெற்றிலைத் தட்டு, எல்லாமே அழகு தான். பூம் பூம் மாடு நான் பார்த்ததில்லை. சினிமாவில் பார்த்ததோடு சரி. அழகிய பதிவு.
எங்க ஊரு திருநெல்வேலி பற்றிய எனது பகிர்வு
எங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி mm
கானாமல் போன பட்டியல் அருமை..
பட்டை சோறு என்று ஒன்று இருப்பது இப்பொழுது தான் தெரியும்..
சிலது காணாமலேயே போய்விட்டது...
பழைய நினைவுகளை மலரச் செய்த நல்ல பதிவு.
பூம்பூம் மாடு பெங்களூரில் அடிக்கடி காணக் கிடைக்கிறது. ட்ராஃபிக் நடுவே எங்கேனும் பார்க்கிறேன். ஒருமுறையேனும் அதைப் படம் எடுக்க வேண்டுமென எண்ணிக் கொண்டிருக்கிறேன்:)!
கடலை விற்கிற பெண்மணி படம் நான் எடுத்தது:)! PiT-ல் ‘இந்தவார சிறந்த படம்’ ஆக தேர்வான ஒன்று. எதிர்பாரமல் இங்கே பார்த்ததில் மகிழ்ச்சி:)!
ஸாதிகா அசத்தல்பதிவு.. எனக்கு பிடிச்சது குச்சி ஐஸும்., ஜவ்வு மிட்டாயும்.. ஏன்னா என்ன வாங்கித் தின்னவே விட்டதேயில்லை..:((( அப்புறம் பாம்படம் பார்த்து நானும் பயந்து இருக்கேன். இது அவங்க காதுல எப்பிடித் தொங்குதுன்னு..:))
போங்கப்பா... அந்த நாள் நினைவுகளை ரெம்பவும் கிளப்பி விட்டுட்டீங்க...ஹ்ம்ம்... அதிலும் பட்டுப்பூச்சியும் , ஐஸ் வண்டியும்....வாவ்... சோன் பப்டி வண்டிய விட்டுட்டீங்க போல...சூப்பர் போஸ்ட்..:)
present
ஹ்..ம்..இந்த படங்கள் இணையத்திலாவது கிடைக்கிறதே :(... ஒவ்வொரு படத்திற்கு உங்க விளக்கம் நல்லாயிருக்கு... பல்லாங்குழி விளையாட்டு எனக்கும் ரொம்ப பிடிக்கும்..புளிமுத்து வைத்து விளையாடுவோம்... இனி ஊருக்கு போகும்போது அத தேடியெடுக்கணும்... பகிர்ந்ததுக்கு நன்றி.
ஆருமையான படங்கள்.விளக்கங்கள். இந்த படங்களை போட்டு ஒரு கதையை பதிவு செய்திருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும்.
http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_24.html
தங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை அறியப்படுத்தவும் நன்றி.
சூப்பர் பதிவு ஸாதிகாக்கா! மிகவும் ரசித்துப் படித்தேன், எப்படியோ கருத்துப்போட விட்டுப்போச்சு. அழகா படமும் போட்டு கலக்கிட்டீங்க,பாராட்டுக்கள்! :)
ஸாதிகா...
இந்த பதிவில் குறிப்பிட்டுள்ள அனைத்தும் வழக்கொழிந்து போய்விடவில்லை என்று நினைக்கிறேன்...
ஜவ்வு மிட்டாய், மிக்ஸர் வண்டி போன்றவை இப்போதும் சிறிய கிராமங்களில் / ஊர்களில் இருக்க வாய்ப்புண்டு...
கோலி சோடா இப்போதும் வழக்கில் இருக்கிறது...
"கல்லே கல்லே வற்த்த கல்லே கல்லே" கூவும் கடலைக்காரர்கள் இன்றெல்லாம் கடை போட்டிருந்தாலும், கூவுவதில்லை... கடற்கரை சென்றால் பார்க்கலாமே...
அம்மி கொத்தலியோ அப்பீட் ஆகி நிறைய நாட்களாகிறது...
மற்றுமொரு சூப்பர் பதிவு போட்டு கலக்கிட்டீங்க ஸாதிகா...
இந்த பதிவை எப்படி மிஸ் பண்ணேன்னு தெரியல...சூப்பரா எழுதி அசத்திட்டீங்க அக்கா!!
Post a Comment