May 1, 2011

ஆஆஆஆஆவின் பால்


சென்னை போன்ற பெரு நகரங்களில் ஆவின் பால் கார்டு மூலம் விநியோகிக்கப்படுகின்றது.கார்டு மூலம் பெறப்படும் பால் லிட்டர்18 என்றால் கடைகளில் விற்கப்படும் அதே பால் லிட்டர் 24 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது.இவ்வாறாக விற்கும் ஆவின் பாலை வீடுகளுக்கு விநியோகம் செய்பவர்கள் ஒரு லிட்டர் பாலுக்கு குறிப்பிட்ட தொகையை கூலியாக பெற்று விநியோகம் செய்கின்றனர்.இவர்களிடமே பால் கார்டு புதுப்பிக்கும் சமயம் பணத்தைத்தந்து புதுப்பித்துக்கொள்வது வாடிக்கையாளர்களின் வாடிக்கை.நூற்றுக்கணக்கான வீடுகளில் பால் கார்டு வாங்குவதற்காக பணத்தை ஆயிரக்கணக்கில் வசூலித்துக்கொண்டு எஸ்கேப் ஆகி விடுபவர்களும் உண்டு.

இதே பால்க்கார ஆயாக்கள்,ஐயாக்கள் தாங்கள் விநியோகம் செய்யும் சில வீடுகளுக்கு விநியோகிக்கும் பாலை திடுமென நிறுத்தி கார்டு தொலைந்து விட்டது என்று முழு பூசணிக்காயை சோற்றினுள் மறைத்து ஏமாற்றி,நமது கார்டுக்கே பால் வாங்கி டீக்கடைகளுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து காசு பார்க்கின்றனர்.

இன்னும் சிலர் சில நாட்களில் பால் பாக்கெட்டை வைக்காமல் ஏமாற்றி விடுகின்றனர்.கேட்டால் உங்களுக்குறிய பால் பாக்கெட்டுகளை வைத்து விட்டேன் என்று அடித்து கூறுவதுமட்டுமில்லாமல் பேப்பர் போடுபவர் எடுத்துக்கொண்டு போய் இருப்பார் என்று ஒரே போடாக போட்டு தப்பித்து விடுவார்கள்.

இப்படி பால்க்கார ஆயாக்களால் பாதிக்கப்பட்டு,நஷ்டமாகி இருக்கும் ஆயிர்க்கணக்கானவர்களில் நானும் ஒருத்தி.ஆவின் வட்டார அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தால் ”பால் தான் வாங்கிசெல்ல வர மாட்டீர்கள்.அட்லீஸ்ட் மாதம் ஒரு முறையாவது அருகில் இருக்கும் பூத்தில் கார்டை புதுப்பித்துக்கொள்ளவாவது நேரில் செல்லலாமே” என்று நியாயமான கேள்வியை கேட்டனர்.

“கார்டு வாங்கியதும்,பூத் நம்பர்,கார்டு நம்பரை குறித்துக்கொள்வதோடு,கார்டுகளில் பெயர் முகவரியை குறிப்பிட்டு எழுதி விடுங்கள்”என்று அட்வைஸ் செய்ததோடு வெகு சிம்பிளாக இன்னொரு அட்வைஸும் செய்தார்.

“அதிகாலையில் எழுந்து வாக்கிங் போய் திரும்பி வரும்பொழுது ஏரியா பால் பூத்களில் பாலை வாங்கிக்கொண்டு திரும்பினால் பணத்துக்கு பணமும் மிச்சம்,பால்க்கார ஆயாக்களின் ஏம்மாற்றல்களில் இருந்தும் தப்பிக்கலாம்,நடைப்பயிற்சியினால் உடம்புக்கும் நல்லது” என்றார்.

அட இது கூட நல்ல ஐடியாவாக உள்ளதே என்று செயல் படுத்த ஆரம்பிக்கையில்தான் தெரிகின்றது நிறைய பேர் வாக்கிங் செல்பவர்கள் வீடு திரும்பும் பொழுது கைகளில் பால் பாக்கெட்டுகளுடன் திரும்புவது.

30 comments:

GEETHA ACHAL said...

உண்மை தான்..எங்க வீட்டிலும் இப்படி தான் ஆச்சு...அதனால் எங்க அப்பாவே தினமும் வாங்கிங் மாதிரி போய் அவரே வாங்கி கொண்டு வந்து விடுகிறார்...

athira said...

ஆ.... வடை எனக்கூஊஊஊஊ

athira said...

ஆ....வின் பால்.. பற்றி நானும் பார்த்தேன் ரீவியில்.. பாதி எரிஞ்சுபோச்சே பக்ரறி....

ஸாதிகா அக்கா!!! இதுக்காக எண்டாலும் இனி வாக்கிங் போங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்:)))))

Yaathoramani.blogspot.com said...

சிம்பிளான ஐடியாவாகத்தான் இருக்கு
ஆனாலும் ஸூப்பர் ஐடியா
எனக்கும் கொஞ்சம் நடக்கிற தூரத்தில்தான்
பால் பூத் உள்ளது
நாளை முதல் செயல் படுத்துகிறேன்
உபயோகமான தகவல்களுக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

இங்கு நானே தான் வாங்குகிறேன். ஆனால் கடைகளில் toned கேட்டால் full cream தருவார்கள்.

Rathnavel Natarajan said...

நல்ல யோசனை. நமக்கும் மனசு திருப்தியாக இருக்கும்.
வாழ்த்துக்கள் அம்மா.

vanathy said...

நல்லது தானே. பால் வாங்கியதும் ஆச்சு. வாக்கிங் போன மாதிரியும் ஆச்சு. சூப்பர் ஐடியா. கொஞ்ச நாட்களில் ஸாதிகா அக்கா ஸ்லிம் ப்யூட்டி ஆகிடுவாங்க.

Asiya Omar said...

வாக்கிங் போய் வந்தால் அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும்,நல்ல ஐடியா.பால் பூத் கார்டு ரெனுவல் தகவல், பால்கார ஆயா,ஐயா தகவல் புதுசு,இன்னும் சென்னை வாழக்கையில் உள்ள அனுபவங்களை எழுதுங்க..எங்க ஊரில் கார்டெல்லாம் கிடையாது,சொன்னால் போதும் பால்காரப்பையன்கள்
சைக்கிளில் வந்து போட்டு
விடுவாங்க,மாதக்கடைசியில்
கணக்கு பார்த்து காசு கொடுத்தால் போதும்.எப்படில்லாம் ஏமாத்துறாங்கப்பா!

Unknown said...

இந்த பிரச்சனைக்கு தான் என் மாமா காலையே வாக்கிங் போகும் பொழுது பால் வாங்கிட்டு வந்துவிடுவாங்க... (நமக்கு பொழுது விடிவதே 8மணிக்கு மேல் தான்)நம்ம வாக்கிங் எல்லாம் மாலை தான்

Jaleela Kamal said...

நல்ல அட்வைஸ் கள்
அப்ப நீங்க வாங்கிங் போக ஆரம்பிச்சிட்டீங்க
எஅன்க்கு இந்த சிரமம் இல்லை
எல்லாமே நீடோ பால் பவுடர் தான்.

athira said...

ஸாதிகா அக்கா.. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உங்களாலதான் வட இல்லாமல்போச்சே அவ்வ்வ்வ்வ்வ்வ்:). ஆராவது பின்னூட்டம் போட்டாங்களோ இல்லையோ எனத் தெரியாமல் இருக்கே..:).

///கொஞ்ச நாட்களில் ஸாதிகா அக்கா ஸ்லிம் ப்யூட்டி ஆகிடுவாங்க.//வான்ஸ்ஸ் என்ன சொல்றீங்க? இப்போ அவ ஸ்லிம்மாஆஆஆஆஆக இல்லையோ? ஆங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்... ஓடிடுங்க வான்ஸ்.. கெதியா ஓடுங்க..

சிநேகிதன் அக்பர் said...

நல்ல ஐடியா அக்கா :)

//"ஆஆஆஆஆவின் பால்"//

தலைப்பு சூப்பர்.

ஹுஸைனம்மா said...

ம்ம்.. பால் கார்டு தொலஞ்சாலே பாடு. சிலர் ரேஷன் பொருட்கள் வாங்கித் தர்றேன்னு ரேஷன் கார்டையும் ஆட்டைப் போடுறதுண்டு.

வீராங்கன் said...

நடக்க ஆரம்பிக்க வேண்டியது தான்

nivashah said...

OLD MATTER

nivashah said...

ITS OLD matter

MANO நாஞ்சில் மனோ said...

//அதிகாலையில் எழுந்து வாக்கிங் போய் திரும்பி வரும்பொழுது ஏரியா பால் பூத்களில் பாலை வாங்கிக்கொண்டு திரும்பினால் பணத்துக்கு பணமும் மிச்சம்,பால்க்கார ஆயாக்களின் ஏம்மாற்றல்களில் இருந்தும் தப்பிக்கலாம்,நடைப்பயிற்சியினால் உடம்புக்கும் நல்லது” என்றார்.///


ஹை இது சூப்பர் ஐடியாவா இருக்கே....

MANO நாஞ்சில் மனோ said...

//அட இது கூட நல்ல ஐடியாவாக உள்ளதே என்று செயல் படுத்த ஆரம்பிக்கையில்தான் தெரிகின்றது நிறைய பேர் வாக்கிங் செல்பவர்கள் வீடு திரும்பும் பொழுது கைகளில் பால் பாக்கெட்டுகளுடன் திரும்புவது.///

ஆக பல்பு வாங்குனதை படு ஜாலியா சொல்றீங்க ஹா ஹா ஹா ஹா....

சீமான்கனி said...

எல்லோரையும் வாக்கிங் போகவைக்கிரதுக்கு என்னவெல்லாம் பன்ன வேண்டி இருக்கு.....அக்கா..

Ahamed irshad said...

ஆவின் பால் வாங்க‌போயிருந்தால் ஒருவேளை இந்த‌ ஐடியா அருமையா இருந்திருக்கும்..இருந்தாலும் பிற‌ருக்கு உங்க‌ள் க‌ட்டுரையை க‌ட்டாய‌ம் வ‌ழிமொழிய‌லாம்..

Vijiskitchencreations said...

இனி ஸாதிகா உங்களை காலையில் போனில் பிடிக்க இயலாது ஒரே வாக்கிங வாக்கிங் வந்ததும் நல்ல பில்டர் காபி குடியுங்கோ. அடுத்த மாதம் உங்க எடை எவ்வளவு குறைஞிருக்கு என்று மறக்காமல் வந்து சொல்லுங்கோ.குட் லக்
ஹ்

Menaga Sathia said...

பால் கார்டு,பால்கார ஆயா இதெல்லாம் புதுசா இருக்குக்கா...எங்க வீட்ல பால்காரரிடம் வாங்குவதால் இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை...நல்ல பகிர்வு!! பால் வாங்கிய மாதிரியும்,வாக்கிங் போன மாதிரியும் ஆச்சு..

Mahi said...

ஸாதிகாக்கா,நாங்களும் பலநாள் பால்கார்ட் யூஸ் பண்ணிட்டு இருந்தோம்.கார்டும் ஆவின்ஆபீஸ்லயே வாங்கிடுவோம்.காலை மாலை பால் வாங்கப்போறது ஒரு சுகமான வேலையா இருந்தது. நீங்களும் அனுபவித்து நடந்துட்டு வர வாழ்த்துக்கள்!:)

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சகோ...

ஒரு லிட்டர் பால்’ல இவ்ளோ மேட்டர் இருக்கா???

பயனுள்ள பதிவு...

அன்புடன்
ரஜின்

Chitra said...

ஊரில் என்னவெல்லாம் நடக்குதுன்னு இப்படி பதிவுகள் மூலம் தான் தெரியுது.

மாதேவி said...

நல்ல ஐடியா.உடல் நலமுடன் இருக்கவும் உகந்தது.

Jaleela Kamal said...

என்ன ஸாதிகா அக்கா ஆளையே காணும். மெயில் க்கு கூட பதிலில்லையே
ஊரில் இல்லையா?

அந்நியன் 2 said...

வேலைப் பழுவின் காரணமாக ஒரு வாரம் இனைய தலத்திர்க்கு வர இயலவில்லை இன்ஷாஅல்லாஹ் பதினாரு தேதி அன்று ஊருக்கு போறேன் சந்திப்போம்...

ஸாதிகா said...

கருத்திட்ட அனைத்து அன்புள்ள்ங்களுக்கும் என் அன்பு நன்றிகள்.

R.Gopi said...

முன்பு நாங்கள் இருந்த ஏரியாவில் காலை 4 மணிக்கெல்லாம் பால் வந்துவிடும்... எல்லோரும் 5 மணிக்கு மேல் தான் வாங்க வருவர்...

அதற்குள் பூத்திலிருக்கும் ஆள், சிரிஞ்ச் வைத்து பால் எடுத்து, அதே அளவு தண்ணீர் கலந்து விடுவார்...

நிறைய வருடங்களாக நடந்து வந்த திருட்டு, நான் மற்றும் நண்பர்கள் ஒரு நாள் காலை 4.30 அளவிலேயே சென்றதால் கண்டு பிடித்தோம்...