பக்க உணவு வகைகளின் மற்றொரு கோணம்.
பஞ்சு போன்ற இட்லி
சூடாக நாம் விரும்பியவண்ணம் தோசை வார்த்துப்போடும் தோசை மாஸ்டர்.
ஜில் ஜில் ஜிகிர் தண்டா,கமகம பில்டர் காஃபி
தி நகர் வடக்கு உஸ்மான் சாலையில் உள்ள முருகன் இட்லி கடையில் இரவு 7 முதல் 10 வரை பஃபே வெறும் 112 ரூபாயில்.சிறுவர்களுக்கு ஜஸ்ட் 55 ரூபாய்தான்.வித விதமான தோசைவகைகள்.ஊத்தப்பவகைகள்,மல்லியப்பூ இட்லி,மெதுவடை,வெண்பொங்கல்,ஸ்வீட்பொங்கல்,பலவித சட்னி,சாம்பார்வகைகள்,இட்லி பொடி,இறுதியாக டிகிரிகாப்பி அல்லது ஜிகிர்தண்டா என்று சுமார் 25 ஐட்டங்கள் .சூடான தோசைக்கு கியூவில் நின்று வாங்கினாலும் சுவை நாக்கை சப்பு கொட்டவைக்கும்.பர்சை அதிகம் பதம் பார்க்காத விலை.கண்டிப்பாக டிரை பண்ணிப்பார்க்கலாம்.
Tweet |
30 comments:
மதுரையில் உள்ள பிரபலமான "முருகன் இட்லி கடை" க்கு இது சென்னையில் உள்ள கிளையா? இல்லை, இது வேற கடையா?
மதுரையில் உள்ள முருகன் இட்லிகடையின் கிளைதான் சித்ரா.சென்னையில் இங்கு மட்டுமல்லாது அநேக இடங்களில் கிளைகள் இருந்தாலும் இங்கு மட்டுமே பஃபே வசதி உண்டு.கருத்துக்கு மிக்க நன்றி.
இங்கு நானும் சாப்பிட்டிருக்கேன்கா...இட்லி செம பஞ்சுபோல இருந்தது அதைவிட எனக்கு சர்க்கரை பொங்கல் ரொம்ப்ப்ப்ப்ப பிடித்திருந்தது.
ஸாதிகா ருசியான பதிவு. அடுத்தமாசம் சென்னை போலாம்னு இருக்கேன். முருகனை எட்டிப்பாத்துட வேண்டியதுதான்.
சில வருடங்களுக்கு முன் சென்னை வந்திருந்தபோது இந்தக் கிளைக்கு சென்றிருக்கிறேன்:)! நல்ல பகிர்வு.
சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ போய் வடிவாச் சாப்பிடுங்கோ... விதம் விதமான சட்னியைப் பார்க்கவே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....
பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா. இருக்கும் விலைவாசிக்கு ரூ.112 பரவாயில்லைதான். ஆனா என்னைப் பொறுத்தவரை எந்த பஃபேயாக இருந்தாலும் கொடுக்கும் விலைக்கெல்லாம் சாப்பிடவே முடியாது. சரி.. சரி.. அந்த இட்லிக் கடை விளம்பரத்திற்கு கமிஷன் வாங்க மறந்திடாதீங்க ஸாதிகா அக்கா :)))) (ச்சும்மா...)
விலை கம்மியாக தான் இருக்கு... அந்த எரியாவுக்கு வந்த பொழுது இட்லி கடை வாசலில் இருக்கும் ஜில் ஜில் ஜிகர் தண்டா தான் ருசித்தோம்.. அடுத்த முறை கடைக்குள் போயிட வேண்டியது தான்...
கருத்துக்கு நன்றி மேனகா.
கருத்துக்கு நன்றி மேனகா.
சென்னை வந்தால் இங்கு சென்று டேஸ்ட் செய்து பாருங்கள் லக்ஷ்மிம்மா.கருத்துக்கு நன்றி.
மிக்க நன்றி சகோ ராமலக்ஷ்மி.
//சாப்பிடுங்கோ சாப்பிடுங்கோ போய் வடிவாச் சாப்பிடுங்கோ// ஏனிந்த கோபம் அதீஸ்.சீக்கிரம் சென்னைக்கு வாங்க.நானே அழைத்துக்கொண்டு போகிறேன்.கருத்துக்கு நன்றி,
// எந்த பஃபேயாக இருந்தாலும் கொடுக்கும் விலைக்கெல்லாம் சாப்பிடவே முடியாது. // உண்மைதான் அஸ்மா.சில பதிவர்கள் ரெஸ்டாரெண்டை பற்றி பதிவெழுதுகின்றனர்.அது மிகவும் உபயோகமாக உள்ளது.அதிலும் சென்னையில் இருக்கும் சில பதிவர்கள் எழுதுவது எனக்கு மட்டுமல்லாது எனக்கு தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக உள்ளது.உதாரணத்திற்கு இங்கு கிளிக் செய்து பாருங்கள்
// எந்த பஃபேயாக இருந்தாலும் கொடுக்கும் விலைக்கெல்லாம் சாப்பிடவே முடியாது. // உண்மைதான் அஸ்மா.சில பதிவர்கள் ரெஸ்டாரெண்டை பற்றி பதிவெழுதுகின்றனர்.அது மிகவும் உபயோகமாக உள்ளது.அதிலும் சென்னையில் இருக்கும் சில பதிவர்கள் எழுதுவது எனக்கு மட்டுமல்லாது எனக்கு தெரிந்தவர்களுக்கும் உபயோகமாக உள்ளது.உதாரணத்திற்கு இங்கு கிளிக் செய்து பாருங்கள்
கருத்துக்கு மிக்க நன்றி பாயிஜா.
முருகன் இட்லி கடை திருவல்லி கேனியில் நானும் சாப்பிட்டு இருக்கேன்
என்ன ஸாதிகா அக்கா ஆட் கொடுக்க எவ்வளவு????
ஆஹா! நானும் ம்மாவும் டி நகரில் கடைக்கு எதுவும் போயிட்டு அங்க போவோம்.. புஃபே ட்ரை பண்ணினது இல்ல... இட்லி அப்படியெ இலையில வழுக்கிட்டு போவும்.. சூப்பரா இருக்கும்.. கடைசியா எனக்கு கல்யாண புடவை எடுத்துட்டு ம்மா, கம்மா, வாப்சாவோட போனதுன்னு நினைக்குறேன்!
ஆஹா... சுவைத்ததை சுவைபட எழுதி, எங்களையும் சுவைக்க ஆர்வப் படுத்தி விட்டீர்கள் ஸாதிகாக்கா!!
நல்ல போட்டோ கிராபரா மாரிட்டீங்க போல...??
சென்னைக்கு வரச்சொல்கிறீர்களா :)
பறந்துவர எனக்குச் செட்டை இல்லாமல் போய்விட்டதே :))
Two branches in TNagar are nice.
But the branch in beant nagar is the worst ever restaurant which spoils the name of murugan idli shop. Since I am living in besant nagar I tried this shop 5 times. The idli and chatni will be in sour taste. The lunch is also bad. In Jigarthanda icecream will be in liquid taste. Service is worst.
Two branches in TNagar are nice.
But the branch in beant nagar is the worst ever restaurant which spoils the name of murugan idli shop. Since I am living in besant nagar I tried this shop 5 times. The idli and chatni will be in sour taste. The lunch is also bad. In Jigarthanda icecream will be in liquid taste. Service is worst.
நல்ல பகிர்வு.
இதுவும் ஒருவகை உதவிதான் ஸாதிகா அக்கா. இனி வெளியில் கேமராவுடன் கிளம்பவேண்டியதுதான் :-) நீங்கள் கொடுத்த லிங்க்கில் அந்த லேபிளில் உள்ளவை சூப்பரா இருந்தது. மீதி பதிவின் லிங்க்கையும்தான் அப்படியே கொடுங்களேன், தெரிஞ்சி வச்சுக்கலாம் :))
அக்கா, இது “சுப்ரமணி சாமி புகழ்” இட்லி கடையா? அவ்ளோ பெரிய இடத்துக் கடைகளுக்கெல்லாம் போற அளவு பெரிய ஆளா அக்கா நீங்க? சென்னை வந்தா கண்டிப்பா உங்க வீட்டில் தங்கி உங்க செலவுல சென்னையச் சுத்திப் பாக்கணும்!! (இன்ஷா அல்லாஹ்);-))))))
Very good idly there. i'm also one time visit there..
முருகன் இட்லிக்கடை கேள்விப்பட்டிருக்கேன்,போனதில்ல.
போட்டோவைப் போட்டு ஜொள்ளுவிட வைக்கறீங்க போங்க!
பதிவு தூள்ள்ள்ள்ள்ள்ள்........
நீங்கள் சென்று, சாப்பிட்டு நன்றாக இருக்கிறது என்று சொன்னதற்காகவே கண்டிப்பாக ஒரு முறை சென்று பார்க்க வேண்டும்....
நன்றி ஸாதிகா...
Post a Comment