April 22, 2011

இனிமை நிறைந்த உலகம் இருக்கு!
நமது கடந்த காலத்தினை சற்று நினைவு கூர்வோம்.இதில் நாம் இழந்த இனிமைகள் எத்தனை?சந்தோஷக்கேடு எவ்வளவு?கஷ்டங்கள் எவ்வளவு?மனசஞ்சலம் எத்தனை?வேதனை எத்தனை?அதன் காரணிகளை சற்று யோசியுங்கள்.அநேகம் நாமாகவே இருப்போம்.அதேபோல் நமது செய்கையினால் பிற மனங்களை எவ்வளவு நோகடித்து இருக்கின்றோம்.பிறரது சின்ன சின்ன சந்தோஷங்களை சிதறடித்திருக்கின்றோம்.ரசனைகளை கொத்தி இருக்கின்றோம் என்று சற்று நேரம் ஆராயுங்கள் அமைதியாக.உண்மை புரிந்து நாணம் கொள்ளத்தோன்றும்.இப்படி எல்லாம் நடந்து சந்தோஷ தருணங்களை அநியாயமாக இழந்து விட்டோமே என்று மனம் உருகிவிடும்.

நம் வாழ்வில் நடந்த பற்பல நிகழ்வுகளை ஞாபகபடுத்திக்கொள்ளுங்கள்.கணவர் டூரில் இருந்து வரும் பொழுது வாங்கி வந்த காட்டன் சேலையினை பார்த்து விட்டு உதடு பிதுக்கி “உங்கள் செலக்‌ஷனோ செலக்‌ஷன்..ஏங்க மனுஷனுக்கு கொஞ்சமாவது ரசனை வேண்டாம்?”இப்படி வாய்களில் இருந்து வந்து விழும் வார்த்தைகளில் கணவரின் சிறிய எதிர்பார்ப்பு அப்படியே கசங்கிப்போய் இருக்கும்.

குடும்பத்துடன் ஒரு பிக்னிக் செல்கின்றோம்.மனதில் உள்ள ஏதோ ஒரு பிரச்சினையால் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டால் மொத்த குடும்பத்தின் சந்தோஷமும் தொலைந்து விடும்.வீட்டில் ஒரு விஷேஷ காரியம் நடக்கும் பொழுது ஒருவர் மட்டும் கோபத்தில் முறுக்கிகொண்டிருந்தால் மொத்த மகிழ்ச்சியும் காணாமல் போய்இருக்கும்.

மாமியார் ஆசை ஆசையாக கேட்ட கைகுத்தல் அரிசி சாப்பாட்டை ஒரு நாளாவது செய்து கொடுத்து இருகின்றோமா?வெளியில் போய் வரும் பொழுது குழந்தைகளுக்கு திண்பண்டங்களும்,பொம்மைகளும் வாங்கி வரும் பொழுது மாமியாருக்கென அவருக்கு பிடித்த லாலாகடை காராசேவ்வை பொட்டலம் கட்டி வாங்கி வந்து இருப்போமா?இப்பொழுது வாங்கிக்கொடுக்க மனம் பூரா ஆசை இருந்தாலும் இப்பொழுது வாங்கி சாப்பிட அவர் உயிரோடு இல்லையே?என்பதினை நினைத்துப்பார்த்தால் உங்கள் கண்களில் கண்ணீர் மளுக் என்று வரும்.வாழ்வில் வரும் நிகழ்வுகள் எது ஒன்றும் திரும்பி வரப்போவதில்லை.அந்த நிகழ்வுகளை நம் மகிழ்சிக்குறியதாகவும்,பிறரை மகிழ்சிக்குட்படுத்துவதாகவும் அமைத்தால் வாழ் நாள் பூராவும் அந்நிகழ்வுகள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்து நிற்கும்.

ஒருவர் நம்மை கோபப்படுத்தும் அளவுக்கு நடவடிக்கைகள் இருந்து நம்மை கோபப்படுத்தினால் திருப்பி அதனையே அவருக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை விட்டொழித்து விட்டு அன்று முழுக்க மனதில் குறு குறுப்புடன் உழன்று,நம் குடும்பத்தினரையும் நம் செய்கையால் உம்மணாமூஞ்சிகளாக்காமல் நமக்கு கோபமூட்டியவர் மீது உள்ள பலிவாங்கும் படலத்தை தவிர்த்து “பாவம் .என்ன கஷ்டமோ?வார்த்தைகளால் கொட்டி விட்டாள்.அவள் புத்தி அவ்வளவுதான்.போனால் போகின்றது”என்று விட்டுக்கொடுத்தோமானால் கிடைப்பது மன நிறைவு.உங்கள் அமைதி பார்த்து கோபப்பட்டவர் உங்களிடம் மன்னிப்பையும் கேட்டு உங்களை சந்தோஷப்படுத்துவார்.

வாழ்க்கை என்பதை நிறைவாக,சந்தோஷமாக,மகிழ்வாக ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பது அனைத்து மனிதர்களின் ஆசை.அதனை இனிமையான தருணங்களாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.குடும்பத்தில் ஒரு பிரச்சினை தோன்றி விட்டால் நல்ல முறையில் பேசி தீர்த்து சிக்கல்களை களைந்து,விட்டுக்கொடுத்து சுமுகமாக்க முன் வரவேண்டுமே தவிர கொடூர வார்த்தைகள் பகிர்தல்,மனக்‌கஷ்டங்கள்,தான் என்ற ஈகோ அனைத்தையும் விட்டொழித்து இனிமையை தக்க வைத்துக்கொள்வதுதான் சிறப்பு.இதை விடுத்து விட்டுக்கொடுக்காமையும்,பிடிவாதமும்,அகம்பாவமும் கஷ்டங்களையும்,நஷ்டங்களையும் பின் விளைவாகத்தரும்.

நடந்தது நடந்ததாக இருக்கட்டும்.இனி வரும் நாளெல்லாம் நாமும் இனிமையாக இருந்து,நம்மை சுற்றி இருப்பவர்களையும் இனிமை நிறைந்தவர்களாக மாற்றி வாழ்வின் நலவுகளை நம் செயல்களால் இனியவைகளாக அமைத்துக்கொள்வோம்.

50 comments:

athira said...

ஐ... முதல்ல வடை எடுப்பம் பிறகுதான் படிப்பூஊஊஊஊ

athira said...

ஹா...ஹா...ஹா.... வடை கிடைச்சிட்டுது, ஆருக்கும் பிச்சுப்பிச்சுக் கொடுக்க மாட்டேன் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

ஸாதிகா said...

அதீஸ்..வடை என்ன பெரிய வடை..வாங்க...பெரிய விருந்தே போடுறேன்.

athira said...

ஸாதிகா அக்கா, அருமையாச் சொல்லியிருக்கிறீங்க... அதாவது மாத்தி யோசிக்கச் சொல்லியிருக்கிறீங்க அப்பூடித்தானே?

அது உண்மைதான்... இன்று படுத்தால் நாளை எழும்புவோமா இல்லையா என்றே தெரியாது, அதனால் இருக்கின்ற நாட்களை சந்தோசமாகக் கழிக்கவேண்டும்...

“எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”
இப்படிக்கு,
அன்பும் பண்பும், பாசமும், நேசமும், நிறைந்த அதிரா...

ஊசிக்.கு:
ஏன் ஸாதிகா அக்கா எல்லோரும் முறைக்கினம்ம்ம்ம்ம்:)))))

athira said...

ம்ஹூம்ம்ம் வரமுடியாது ஸாதிகா அக்கா... ஏணெண்டால் நீங்க.... சென்னையில இருக்கிறீங்களாமே....

ஸாதிகா said...

அட..ஆமால்ல..//எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”// இது அதிராவுடைய வாசகம் அல்லவா?இதனையே தலைப்பாக வைத்து இருக்கலாம்.மிக்க சரியாக சொல்லி இருக்கீங்க அதீஸ்.எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகத்தான் செய்யும்.உற்சாக பின்னூட்டத்திற்கு நன்றி.

இப்பதான் உலகமே ரொம்ப சின்னதாகி விட்டது அதீஸ்.எட்டே மணி நேரத்தில் பிரித்தானியாவில் இருந்து சென்னைக்கு வந்திடலாம்.சொல்லுங்க.எப்ப வர்ரீங்க?

athira said...

ஸாதிகா அக்கா, உங்களுக்குத் தெரியாதோ? 2012 டிஷம்பருக்குப் பிறகு விசா தேவையில்லை, பாஸ்போர்ட் தேவையில்லை, அட பிளேன் ரிக்கெட்கூடத் தேவையில்லையாமே...

நினைச்சவுடன் நீங்க வரலாம், நாங்க அங்க வரலாம்.... ஜாலிதான் இல்ல:)))

ஏனெண்டால் ....காதைக்கொண்டுவாங்கோ...”உலகம் அழியப்போகுதாம்”... மீ ....எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

Jaleela Kamal said...

ஆமாம் ஸாதிகா அக்கா அதிரா சொல்வதை தான் நானு ம் அடிக்கடி நினைப்பேன், இருக்கும் வரை ஏதாவது நம்மால் ஆன உபகாரம் மற்றவர்கல்க்க்கு செய்யனும் என்று

இந்த பதிவு படிக்கும் போது எலோருக்குமே இப்படி தோன்றும்.


உங்கலுக்கு அவார்டு வழங்கியுள்ளேன் பெற்றுகொள்ளுங்கல்.

மகி said...

அருமையான பதிவு ஸாதிகாக்கா!

இமா said...

சொன்ன விஷயம், விதம் பிடிச்சிருக்கு ஸாதிகா.

உண்மை, எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும். (அதிரா என்ட ஃப்ரென்ட் தான்.) ;))

asiya omar said...

மிக நல்ல பகிர்வு தோழி,இனிமை நிறைந்த உலகம் இருக்கு,ஆனால் அதனை பலருக்கு நல்லவிதமாக அனுபவிக்க கொடுத்து வைக்கலை,தானும் நிம்மதியாக இருக்கமாட்டாங்க,
பிறரையும் நிம்மதியாக இருக்க விட மாட்டாங்க.அவர்களாக தெளிந்தால் தான் உண்டு...

ப்ரியமுடன் வசந்த் said...

//பாவம் .என்ன கஷ்டமோ?வார்த்தைகளால் கொட்டி விட்டாள்.அவள் புத்தி அவ்வளவுதான்.போனால் போகின்றது”//

என்று பக்குவப்பட நிறைய நாட்கள் தேவைப்பட்டதுக்கா உடனடியா பதில்தாக்குதல் செய்யத்தான் மனம் பறபறந்தது சில ஆண்டுகள் முன்பு வரை இப்பொழுதெல்லாம் நீங்கள் சொன்னபடிதான்

சொல்லப்பட்டுள்ளவை அனைத்தும் மிகவும் அர்த்தமுள்ள விஷயங்கள் !!!

சகித்துவாழவும் விட்டுக்கொடுத்துவாழவும் பழகிக்கொண்டால் எல்லாநாளும் இனிய நாள் எல்லாம் அன்பு மயம்

சிநேகிதி said...

அருமையான பயனுள்ள பகிர்வு அக்கா .
நம் எண்ணம் நன்றாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக இருக்கும்..

அழகான பகிர்வுக்கு நன்றி

vanathy said...

நல்ல பதிவு, அக்கா. சரியா சொன்னீங்க.
அதீஸ், சும்மா உலகம் அழியப்போகுது என்று அதையே நினைச்சு கவலைப்படாமல் சந்தோஷமாக எஞ்சாய் பண்ணுங்கோ. ஓக்கி.

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான தருணங்களாக வைத்துக்கொள்வது நம் கையில்தான் உள்ளது.//
அருமையான பதிவு ..
பகிர்வுக்கு நன்றி

மனோ சாமிநாதன் said...

"வாழ்வில் வரும் நிகழ்வுகள் எது ஒன்றும் திரும்பி வரப்போவதில்லை.அந்த நிகழ்வுகளை நம் மகிழ்சிக்குறியதாகவும்,பிறரை மகிழ்சிக்குட்படுத்துவதாகவும் அமைத்தால் வாழ் நாள் பூராவும் அந்நிகழ்வுகள் நெஞ்சார்ந்த மகிழ்ச்சியுடன் மனதில் நிறைந்து நிற்கும்."

அருமையான பகிர்வு ஸாதிகா!

சிநேகிதன் அக்பர் said...

எனக்குள் அடிக்கடி தோன்றும் எண்ணங்களை அருமையாக இங்கு சொல்லியிருக்கிறீர்கள்.

நீங்கள் சொல்வது போல் நாம் அனைவரும் சின்ன சின்ன விசயங்களில் கோட்டை விட்டு அன்பையும் பாசத்தையும் சம்பாதிக்க தவறிவிடுகிறோம்.

உண்மையிலேயே ஓவ்வொருமனசும் எதிர்ப்பார்ப்பது ஆறுதலுடன் கூடிய ரெண்டு வார்த்தைகளைத்தான்.

எனக்கும் இதை படித்தவுடன். "சந்தோசத்திலேயே பெரிய சந்தோசம் மத்தவங்களை சந்தோசப்படுத்தி பார்க்கிறதுதான்" என்று பாக்கியராஜ் ஒரு படத்தில் சொல்வது நினைவுக்கு வருகிறது.

அதிரா சொன்னது போல் “எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்”

ஸாதிகா said...

என்ன அதீஸ்,மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு பிரரயும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஐடியா கொடுத்துள்ளேன்.நீங்கள் என்னன்னா //.காதைக்கொண்டுவாங்கோ...”உலகம் அழியப்போகுதாம்”... மீ ....எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
// இப்படி சொல்லி இருக்கீங்க.நியாயமா அதீஸ்??

ஸாதிகா said...

//இருக்கும் வரை ஏதாவது நம்மால் ஆன உபகாரம் மற்றவர்கல்க்க்கு செய்யனும் என்று
// நல்ல எண்ணம் ஜலி.கருத்துக்கும்,அவார்டுக்கும் மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி மகி.

ஸாதிகா said...

மிக்க நன்றி இமா.// (அதிரா என்ட ஃப்ரென்ட் தான்.) ;))// அப்ப ஏன் அதீஸ் என்ற பூஸ் என்னை மட்டும் அக்கா என்கின்றார்.எனக்கும் அவர் பிரண்ட் தானே??

ஸாதிகா said...

நீங்கள் சொல்லுவது உண்மைதான் ஆசியா.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//பக்குவப்பட நிறைய நாட்கள் தேவைப்பட்டதுக்கா உடனடியா பதில்தாக்குதல் செய்யத்தான் மனம் பறபறந்தது // இது உங்கள் அனுபவம் மட்ட்யுமல்ல.நம் அநேகரது அனுபவமும் இதுவாகத்தான் இருக்கும்.கருத்துக்கு மிக்க நன்றி தம்பி வசந்த்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி தங்கை பாயிஜா

ஸாதிகா said...

//அதீஸ், சும்மா உலகம் அழியப்போகுது என்று அதையே நினைச்சு கவலைப்படாமல் சந்தோஷமாக எஞ்சாய் பண்ணுங்கோ. ஓக்கி// தங்கை வாணி சரியாக சொல்லி இருக்கீங்க.எங்கிருந்தாலும் பூஸ் வரட்டும்.

ஸாதிகா said...

//நீங்கள் சொல்வது போல் நாம் அனைவரும் சின்ன சின்ன விசயங்களில் கோட்டை விட்டு அன்பையும் பாசத்தையும் சம்பாதிக்க தவறிவிடுகிறோம்.
// உண்மை வரிகள் தம்பி அக்பர்.கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ இராஜராஜேஸ்வரி

ஸாதிகா said...

மனோ அக்கா,தங்கள் கருத்துக்கு மிக்க நன்றிக்கா.

MANO நாஞ்சில் மனோ said...

தலைப்பே முழு பதிவையும் சொல்லுது போங்க.....

ஹுஸைனம்மா said...

அக்கா, எந்தப் பத்திரிகையில் வந்ததுங்கிற குறிப்பை விட்டுட்டீங்களோ? ;-))))

அவ்ளோ அருமையான எழுத்தாடல்!!

S.Menaga said...

எல்லாத்தையும் எவ்வளவு அழகா சொல்லிருக்கீங்க..உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவா இதெல்லாம் எழுத முடியும் அக்கா..நானும் ஒருகாலத்தில் ரொம்ப கோபப்பட்டவள்தான்,இப்பலாம் போயே போச்சு..யாராவது ஏதாவது சொல்றாங்களா இந்த காதில் வாங்கி அந்த காதுல விட்டுவிடுவது..ஒருபொருட்டாவே நினைப்பதில்லை...

athira said...

//என்ன அதீஸ்,மனதை சந்தோஷமாக வைத்துக்கொண்டு பிரரயும் சந்தோஷமாக வைத்துக்கொள்ள ஐடியா கொடுத்துள்ளேன்.நீங்கள் என்னன்னா //.காதைக்கொண்டுவாங்கோ...”உலகம் அழியப்போகுதாம்”... மீ ....எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
// இப்படி சொல்லி இருக்கீங்க.நியாயமா அதீஸ்??///

ஸாதிகா அக்கா, இப்பூடி இடைக்கிடை பேதிக்குளிசை குடுத்தால்தான், எங்கட மக்கள்ஸ்ஸ் கொஞ்சமாவது பயபக்தியாக நடப்பாங்க:)... கெதியில உலகம் அழியப்போகுதாமே... அப்போ இருக்கும் காலத்தை சந்தோசமாகக் கழிப்பமே என:)...

இப்பூடி மாத்தி மாத்தி அண்ட் மாத்தி யோசிக்கோணும்:))).

அப்போ இவ்ளோ காலமும் நான் ஃபிரெண்ட் இல்லையா என அவிங்கள கேளுங்க ஸாதிகா அக்கா... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

Lakshmi said...

அருமையா சொல்லி இருக்கீங்க. பக்குவப்படத்தான் நேரம் எடுக்கும் பக்குவப்பட்டுவிட்டால் நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கலாம்.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா மிக நன்றாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துகள்.

நெருப்பு சுடும் என்று அனைத்து பெற்றோர்களும் பிள்ளைகளுக்கு சொல்கிறோம் ஆனால் உலகில் ஒருவர் கூட சூடு வாங்காதவர் இல்லையே:). சூடு வாங்கியது கூட குறைய இருக்கலாம் ஆனால் அது தானே வாழ்க்கையின் அனுபவம்.

இனிமையை உணர வேண்டும் என்றால் அதற்கு முன் அதன் எதிர் பதத்தை உணர்ந்தால் தானே இது இனிமை என தெரியும்-- பகல் என்னவெற்று அறிந்தாலே இரவை பகுத்துணர முடியும்!

வாழ்க வளமுடன்

ஹைஷ்126 said...

இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய்கவர்ந் தற்று.

வாழ்க வளம்முடன்!

GEETHA ACHAL said...

ரொம்ப கரக்டாக சொன்னீங்க...

உங்களுடைய அறிவுரை அனைவருக்கும் ரொம்ப தேவை...கண்டிப்பாக தொடர்ந்து இது மாதிரி நிறைய எழுதுங்க...

RAZIN ABDUL RAHMAN said...

ஸலாம் சாதிக்காக்கா...

அருமையான பதிவு.இதை வீட்டில் எப்போதுமே ஒருவர் புரிந்து நடக்க மற்றவர் மாறு செய்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது..

அனைவரும் புரிந்து கொண்டால்,அதைவிட இன்பமான வாழ்வு இல்லையே..

அன்புடன்
ரஜின்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தலைப்பே எவ்வளவு உற்சாகமா இருக்கு....

ஆர்.கே.சதீஷ்குமார் said...

தன்னம்பிக்கையும்,சந்தோசமும் பெற உங்கள் பதிவை படிச்சா போதும் தோழி

தேனம்மை லெக்ஷ்மணன் said...

மிக அருமை.. விட்டுக் கொடுப்பது நாமாகவே இருப்போம் என சொன்ன பதிவுக்கு பாராட்டு ஸாதிகா.

zumaras said...

ஸலாம்
அருமையான வாழ்க்கைப் பாடம். நன்றி

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப அருமையா சொல்லியிருக்கீங்கக்கா. காலம் நம்கையில் இல்லை அது கடக்கும்போது நன்மையாகவே கடக்க முயற்சிப்போம். இனிமையாகவே கழிக்க முயற்சிப்போம்..

முகவரியை தொலைக்கத் துடிக்கும் மொட்டுக்கள்..http://niroodai.blogspot.com/2011/04/blog-post_27.html

தளிகா said...

ungal ovvoru padhivum padikka svaarasiyamaaga irukkum..super

சிநேகிதி said...

உங்களுக்கு எனது இனிய இல்லத்தில் அவார்டு கொடுத்திருக்கேன்.. பெற்றுக்கொள்ள வாருங்கள்

என்றும் நட்புடன் உங்கள் சிநேகிதி

http://en-iniyaillam.blogspot.com/2011/04/blog-post_22.html

Anonymous said...

உங்கள் பதிவு எப்போதும் எனக்கு மன நிம்மதியை தருகிறது...

மிக்க நன்றி..

ஸாதிகா said...

அக்பர் தங்கள் கருத்துக்கு மிகவும் நன்ரி.

நாஞ்சில் மனோ கருத்துக்கு நன்றி.


ஹுசைனம்மா.இது எந்த பத்திரிகைகளிலும் வரவில்லை.கருத்துக்கு நன்றி.

//.உங்களால் மட்டுமே இவ்வளவு தெளிவா இதெல்லாம் எழுத முடியும் அக்கா..//இந்த ஊக்க வரிகளுக்கு நன்றி. மேனகா.

ஸாதிகா said...

//ஸாதிகா அக்கா, இப்பூடி இடைக்கிடை பேதிக்குளிசை குடுத்தால்தான், எங்கட மக்கள்ஸ்ஸ் கொஞ்சமாவது பயபக்தியாக நடப்பாங்க:)// வரிகளில் சிரித்து விட்டேன் அதிரா.உங்களுக்கு என்றே ஒரு நகைசுவை உணர்வு மிளிர்கின்றது.நன்றி அதிரா.தொடர்ந்து நகைசுவை மிக்க பதிவுகளும் பின்னூட்டங்களும் இட்டு படிப்போரை ரசித்து சிரிக்க வையுங்கள்.

//பக்குவப்படத்தான் நேரம் எடுக்கும் பக்குவப்பட்டுவிட்டால் நாமும் சந்தோஷமாக இருந்து மற்றவர்களையும் சந்தோஷமாக வைத்திருக்கலாம்.

// பின்னூட்டத்தில் அழகா சொல்லி இருக்கீங்க லக்‌ஷ்மிம்மா.கருத்துக்கு நன்றி.

கருத்துக்கு நன்றி ஹைஷ் சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி கீதாஆச்சல்.

//இதை வீட்டில் எப்போதுமே ஒருவர் புரிந்து நடக்க மற்றவர் மாறு செய்து கொண்டே இருந்தால் என்னதான் செய்வது..

அனைவரும் புரிந்து கொண்டால்,அதைவிட இன்பமான வாழ்வு இல்லையே..
// கரெக்டா சொல்லி இருக்கீங்க சகோ ரஜின்.நன்றி.

சகோ சதீஷ் குமார்//தலைப்பே எவ்வளவு உற்சாகமா இருக்கு....// உங்கள் கருத்தின் வரிகளே எனக்கு எவ்வளவு உற்சாகத்தைத்தருகின்றது தெரியுமா.

//தன்னம்பிக்கையும்,சந்தோசமும் பெற உங்கள் பதிவை படிச்சா போதும் தோழி// இந்த வரிகளில் என் மனம் நெகிழ்ந்து விட்டேன் சகோ.நன்றி.

ஸாதிகா said...

பாராட்டுகளுக்கு மிக்க நன்றி தேனம்மை.

வ அலைக்கும் சலாம் கருத்துக்கு நன்றி zumaras

// காலம் நம்கையில் இல்லை அது கடக்கும்போது நன்மையாகவே கடக்க முயற்சிப்போம். இனிமையாகவே கழிக்க முயற்சிப்போம்..// உண்மைதா மலிக்கா.இந்த எண்ணம் இருக்கும் ஒவ்வொருவரின் வாழ்விலும் மகிழ்ச்சியும்,அமைதியும் இருக்கும் நன்றி.

வாங்க தளிகா.அத்திப்பூத்தார்ப்போல் வந்து இருக்கின்றீர்கள்.மகிழ்ச்சி.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

அவார்டுக்கு மிக்க நன்றி பாயிஷா.

//உங்கள் பதிவு எப்போதும் எனக்கு மன நிம்மதியை தருகிறது...
// இந்த பின்னூட்டத்தை படிக்கும் பொழுது மனம் முழுதும் மகிழ்வாக உள்ளது.எல்லாப்புகழும் இறைவனுக்கே.நன்றி மஹா விஜய்.