April 14, 2011

எனது முதல் கட்டுரை






நான் சிறுமியாக இருந்தபொழுது பத்திரிகைகள் படிக்க மட்டுமின்றி பத்திரிகைகளுக்கு எழுதுவதிலும் நாட்டம் அதிகம் இருந்து வந்தது.பற்பல பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுத ஆரம்பித்து நாளடைவில் குறிப்புகள் கொடுக்கவும் ஆரம்பித்தேன்.நான் அனுப்பும் குறிப்புகள் வெளியான உற்சாகத்தில் என் பதின்ம வயதில் நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.

வரதட்சணை பற்றி நான் எழுதிய முதல் கட்டுரையைத்தொடர்ந்து பல மாதங்களாக பல்வேறு தலைப்பிலும் என் கட்டுரைகள் ஜமாஅத்துல் உலமா மாத இதழில் தொடர்ந்து வெளிவர ஆரம்பித்தது.என் எழுத்தார்வத்திற்கு வித்திட்டு உரம் போட்டு வளர்த்தவர்கள் மறைந்த பெரியவர்,ஜமாஅத்துல் உலமா மாத இதழ் ஆசிரியரும் மர்ஹூம் அல்லாமா அபுல்ஹசன் ஷாதலி சாஹிப் அவர்களை இன்னேரம் நன்றியுடன் நினைவில் கொள்கின்றேன். பல வருடங்களுக்கு முன் வெளியான என் முதல் கட்டுரையை இங்கு சமர்ப்பிக்கின்றேன்.

படங்களை கிளிக் செய்து பெரிதாக்கி கட்டுரையைப்படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.



40 comments:

Asiya Omar said...

நலமா? வாசித்து விட்டு வருகிறேன் தோழி..

Asiya Omar said...

பதின்ம வயதில் இத்தனை விளக்கமாக நான்கு பக்கங்கள் எழுதியது மிகப்பெரிய விஷ்யம் தான் தோழி,வரதட்சணை வாங்குவது பற்றியும் அதனால் பெண்களுக்கு இழைக்கப்படும் இன்னல்கள் பற்றியும் விவரித்திருப்பதும்,பெண்களூக்கு ஆண்கள் தான் மஹர் கொடுக்க வேண்டும் என்றும் ஒரு போதும் பெண்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பெண்களிடம் தங்களை விற்கக்கூடாதுன்னு நச்சென்று சொன்ன விதம் அருமை.

முடிவாய் சகோதரர்களுக்கு சொன்ன கருத்து சூப்பர்.நெத்தியடி..

எழுதிய எல்லாக் கருத்துக்களுமே தேவையான பகிர்வு தான்..

GEETHA ACHAL said...

எப்படி இருக்கின்றிங்க...நல்லா இருக்கின்றிங்களா...ரொம்ப நாளாக காணுமே...

Unknown said...

சின்ன வயதிலே எவ்வளவு ஆழமான பகிரங்கமாக கருத்துக்களை எடுத்துச் சொல்லியிருக்கிங்க... \சொன்ன விதம் அருமை...

Chitra said...

என் பதின்ம வயதில் நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.




......சின்ன வயதில் இருந்தே தனித்துவம் மிகுந்து இருக்கீங்க. பாராட்டுக்கள்!

Unknown said...

kandippa vaasichi paarkiren..

சி.பி.செந்தில்குமார் said...

>>நான் எழுதிய முதல் கட்டுரை வெளியாகி வந்த பக்கங்களை படித்த பொழுது நான் அடைந்த மகிழ்ச்சி இன்னும் என் நினைவில் நிற்கின்றது.

முதல் எழுத்தை அச்சில் பார்ப்பது போன்ற ஒரு சந்தோஷத்தை ஒரு எழுத்தாளன் எந்த காலத்திலும் பின் மீண்டும் அனுபவிக்க முடியாது...வாழ்த்துக்கள் மேடம்

ராமலக்ஷ்மி said...

வாழ்த்துக்கள் ஸாதிகா! வாசிக்கிறேன்.

//பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதங்கள் எழுத ஆரம்பித்து//

இப்படியாகத்தான் நானும் ஆரம்பித்தேன்:)!

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஸாதிகா அக்கா எங்க காணாமல் போயிருந்தீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).

இப்போ நேரமில்லை, வடிவாப் படிச்சிட்டுத்தான் நல்லாயிருக்கா இல்லையா என பதில் போடுவேன்:).

ஸாதிகா said...

நன்றி தோழி ஆசியா.ஊக்கமான பின்னூட்டத்திற்கு நன்றி.

ஸாதிகா said...

நான் நல்லா இருக்கிறேன் கீதாஆச்சல்.நீங்கள் எப்படி இருக்கீங்க?நான் இப்பொழுது சென்னையில் இல்லை.அதான் பதிவு பக்கம் வரையலவில்லை,

ஸாதிகா said...

மிக்க நன்றி பாயிஜா கருத்துக்கு,.

ஸாதிகா said...

மிக்க நன்றி சித்ரா

ஸாதிகா said...

நன்றி சவீதா.அவசியம் படித்துப்பாருங்கள்

ஸாதிகா said...

கருத்துக்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சகோ செந்தில்குமார்

ஸாதிகா said...

மிக்க நன்றி ராமலக்‌ஷ்மி

ஸாதிகா said...

என்னை சில நாட்களாக காண்வில்லை என்றதும் பாசமாக மெயில் பண்ணி காரணத்தையும் தெரிந்து கொண்டீர்களே அதிரா.பசத்திற்கும்,கருத்துக்கும் நன்றி.பொறுமையாக கட்டுரையை படித்து விட்டு பின்னூட்டுங்கள்.

MANO நாஞ்சில் மனோ said...

ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே.....

அந்நியன் 2 said...

அடேங்கப்பா.....வள்ளல் சீதக்காதி பிறந்த மண்ணில் இப்படியொரு புரட்சி பூவா?

கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் அப்படியாப் பட்ட ஊரில் பிறந்து எவ்வளவு தைரியமாக 1982லியே எழுதி இருக்கின்றிர்கள் என்றால் பாராட்ட வேன்டியதுதான்.

ஏற்க்கனவே நான் சொல்லி இருக்கேன் கீழக்கரைக்கும் எனக்கும் நட்பு இருக்கு என்று,அவ்வகையில் மிக சமிபத்தில் கீழக்கரைக்கு எனது நண்பனின் சகோதரி கலயானத்திர்க்கு போன போது வரதட்ச்சனை கொடுமையை கேட்டு மனம் அழுதுதான் வந்தேன்.

மறைமுகமாக வழங்கப்படும் வரதட்சனை கொடுமைக்கு முழுக்க முழுக்க பெண்களே காரணம் மணமகனிடம் கேட்ட போது நான் என்ன செய்ய காக்கா(அணணன்) என் அம்மாவும் அக்காவும்தான் கண்டிப்பாக வாங்கியே ஆகனும் என்கிறார்கள் அவர்களை மீறி என்னால் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்.

ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?

ராமாநாதபுரம் மாவட்டத்திலியே கீலக்கரைதான் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது வரதட்சனை வாங்குவதில் அன்று.

இன்று குறைந்துள்ளதை எண்ணிப் பார்க்கையில் சந்தோசமாக இருக்கின்றது.

வாழ்த்துக்கள்!

நீங்கள் எழுதிய கட்டுரையை அன்று நான் படித்திருந்தால் கண்டிப்பாக பின்னூட்டம் போட்டிருப்பேன் அந்த மாத இதழுக்கு.

ஆனால் எனக்கு அப்போ படிக்கத் தெரியாது. because i was in the???

Menaga Sathia said...

எப்படி இருக்கீங்க அக்கா?? வாழ்த்துக்கள்...

ஸாதிகா said...

//ஹே உங்களை பார்த்து பல காலமாகுதே..// இப்ப வந்துடோம்ல..!நன்றி மனோ சார்.

ஸாதிகா said...

தம்பி அந்நியன் என்ற ஐயூப்.எனது கட்டுரையை பொறுமையாக படித்து பொறுமையாக பின்னூட்டமிட்டத்ற்கு முதற்கண் என் நன்றிகள்.

//கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // ஏனுங்க..கிழக்கரை வாசிகள் அப்படி என்ன டெரர் ஆகவா இருக்காங்க?


//ராமாநாதபுரம் மாவட்டத்திலியே கீலக்கரைதான் நம்பர் ஒன்னாக திகழ்ந்தது வரதட்சனை வாங்குவதில் அன்று.
// உண்மைதான்.இப்பொழுது குறைந்து வருவது மகிழ்வுக்குறிய விஷயம்.

//ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?
//ஏன்?இது ஒரு சல்ஜாப்பா?அம்மாவும் அக்காவும் சொன்னால் என்ன?நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னால் வழி கிடைக்காதா என்ன??:)

ஸாதிகா said...

நான் நலமாக இருக்கிறென் மேனகா.நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள்?நன்றி.

எம் அப்துல் காதர் said...

சொல்ல வந்த கருத்தை மிகத்தெளிவாக அழகாக சொல்லி இருக்கீங்க. அந்த வயதிலேயே உங்களுக்கு இயல்பாக எழுத வந்திருக்கிறது பெரிய பிளஸ்.

(முதல் பக்கம் டபுள் கிளிக் செய்தாலும் திறக்க மாட்டேங்குது. பாருங்க!!)

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஸாதிகா அக்கா நீங்க சொன்னபடியே அனைத்தையும் பெரீஈஈஈஈஈஈஈசாக்கிப் படித்திட்டேன். அந்தக் காலத்திலயே இவ்ளோ எழுதியிருக்கும் உங்களை நிட்சயம் பாராட்டுகிறேன். மிக அருமையாக தொகுத்து எழுதியிருக்கிறீங்க பாராட்டுக்கள். அப்படியே நீங்க ஒரு கதாசிரியராக வந்திருக்கலாம், எதுக்கு பிரேக் எடுத்தீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்:).

இதுவும் என் கண்ணில பட்டுதே.

/////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).

சரி விஷயத்துக்கு வருகிறேன். அடுத்த பின்னூட்டத்தில்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

எதிர்க்கருத்தும் கூறலாம்தானே ஸாதிகா அக்கா?

நானும் சொல்கிறேன் ஸாதிகா அக்கா, ஆண்கள் தான் முக்கிய காரணம் சீதனக்கொடுமைக்கென்றால் இல்லை .

எங்குமே ஆண்கள் சீதனம் கேட்பதில்லை.... மாமியார் வடிவில் பெண்கள்தான் கேட்கிறார்கள், அம்மாவை எதிர்க்கமுடியாமல் எப்படியாவது திருமணமாகட்டும் பின்னர் இதுபற்றிப் பார்த்திடலாம் என இருக்கிறார்கள், இதுதான் என்னைப் பொறுத்த உண்மை.(அம்மாவை எதிர்த்தால், நீயே பெண் தேடு என்னால் முடியாதெனச் சொல்லும் தாய்மாரும் உண்டு).

ஆனா அம்மாவைச் சாட்டிக்கொண்டு மறைமுகமாக அதிக சீதனத்தை எதிர்பார்ப்போரும் சிலர் இருக்கிறார்கள்தான் எதுக்கும் மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ படித்தது:

அன்று
பல லட்சம் வாங்கி
திருமணம் முடித்தவர்
இன்று
மேடை மேடையாக
முழங்குகிறார்
சீதனம் வாங்கக்கூடாதென...
ஏனெனில் அவர்
மூன்று பெண்களின்
தந்தையாம்....

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

//ஆண்களை மட்டும் குறை சொல்லி எழுதி இருக்கின்றிர்களே இது எந்த விதத்தில் நியாயம் அக்காள்?
//ஏன்?இது ஒரு சல்ஜாப்பா?அம்மாவும் அக்காவும் சொன்னால் என்ன?நான் கல்யாணமே பண்ணிக்க மாட்டேன் என்று சொன்னால் வழி கிடைக்காதா என்ன??:)

////

ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).

கடவுளே இனியும் நான் இங்கிருக்க மாட்டேனே..... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)))

நட்புடன் ஜமால் said...

வரதட்சனை ...

என்று தான் இது ஒழியுமோ

உங்கள் கட்டுரையை தட்டச்சித்திருந்தால் பலர் ’படித்து’ பின்னூட்ட வசதியாக இருந்திருக்கும்

ஸாதிகா said...

கருத்துக்கு நன்றி அப்துல்காதர்.//(முதல் பக்கம் டபுள் கிளிக் செய்தாலும் திறக்க மாட்டேங்குது. பாருங்க!!)// முதல் பக்கம் கிளிக் செய்தால் பெரிதாக தெரியவில்லை.ஆனால் அதே பக்கத்தை மீண்டும் இரண்டாவது முறையும் பப்லிஷ் செய்துள்ளேன்.அதனை கிளிக் செய்து பாருங்கள்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

///////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).
// ஹ்ம்ம்ம்ம்ம்ம்...அதிராவின் நக்கலுக்கு அளவில்லாமல் போய்டுச்சி:)இருந்தாலும் தங்கையின் பகடி கண்டு சிரிக்கத்தான் செய்கின்றேன்.

அதீஸ்,நீங்கள் சொல்ல்வதிலும் உண்மை உண்டு.ஏதோ அந்த அறியா வயதில் இத்தனை அழகாக,தெளிவா எழுதி இருக்கேனே..அதைப்பார்த்து பாராட்டுவதை விட்டுட்டு இப்படி கேள்வி கேட்டே டெரர் பண்ணுரீங்களே.நியாயமா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

ஸாதிகா said...

//ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).
//ஹா..ஹா ஹா...சிரித்து முடியலே அதீஸ்.

ஸாதிகா said...

வாங்க தம்பி ஜமால்.ரொம்ப நாளைக்கு அப்புறம் வந்திருக்கீங்க.

//உங்கள் கட்டுரையை தட்டச்சித்திருந்தால் பலர் ’படித்து’ பின்னூட்ட வசதியாக இருந்திருக்கும்// கிளிக் செய்து பார்த்தால் பெரிய எழுத்துக்களில் தெரியுமே.கருத்துக்கு நன்றி.

ஆயிஷா அபுல். said...

அஸ்ஸலாமு அழைக்கும்

அப்பவே ரெம்ப தெளிவாக எழுதி உள்ளீர்கள் வாழ்த்துக்கள். இப்ப வரதட்சணை வாங்குவது
ரெம்ப குறைந்து விட்டது.{அல்ஹம்துலில்லாஹ் }

ஊரில் இருந்து வந்து விட்டீர்களா ?

அந்நியன் 2 said...

எனக்கு நல்லாவே தெரியும் யாராவது நம்மளைப் பற்றி எதாவது சொல்லுவார்கள் என்று.

/////கீழக்கரை இவ்வூரை கேட்டாலே ராமநாதபுரமே கிடு கிடுக்கும் // உண்மையாகவோ ஸாதிகா அக்கா?:) அதெதுக்கு ராமனாதபுரம் மட்டும் கிடுகிடுக்குமாம்?:).

ஏன்னா..அது தலை நகரமா இருக்கிறதுனாலே.


//ஹா..ஹா..ஹா.. ஸாதிகா அக்கா சும்மா சொன்னாலே, கையை விட்டிடுவாங்க திருமணம் முடிக்காமலே இரு என.... பிறகு சகோஸ் கதி என்ன ஆவிறது... அந்தப் பயம்தான்...:)).//

என்னது எங்களின் கதியா...?

ஆம்புள்ளை சிங்கம்...அதுக்காக காட்டில் இருக்கும் சிங்கம்னு நினைத்துக் கொள்ளவேண்டாம்.

ச்சே..அந்நியன் வேடம் போட்டதுனாலே நிறையா நக்கலா எழுத முடியலை

இதுவே...நாட்டாமை வேஷம் போட்டிருந்தேன் என்றால் ஆதிரா சகோ..இந்தப் பக்கமே தலை வைத்துருக்க மாட்டார்கள்.

அந்நியன் 2 said...

//அதிரா சொன்னது
நினைவுக்கு வந்த ஒரு கவிதை, எப்பவோ படித்தது:

அன்று
பல லட்சம் வாங்கி
திருமணம் முடித்தவர்
இன்று
மேடை மேடையாக
முழங்குகிறார்
சீதனம் வாங்கக்கூடாதென...
ஏனெனில் அவர்
மூன்று பெண்களின்
தந்தையாம்....//

சரியாக சொன்னிர்கள் சகோ...ஆதிரா.

உங்களை எல்லோரும் "புரட்சி பூ" ஆதிரா என்று சொல்கிறார்கள் நீங்கள் தமாஷ் பண்ணிக் கொண்டு இருக்கிறிகளே?


எனது கணக்கின்படி சகோ சாதிக்காவும் வரதட்சனை கொடுத்துதான் மணம் புறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

காரணம் அவர் அன்று அந்த கட்டுரையை எழுதிய தருனத்தில் மணபெண்ணாக இறுந்தது மட்டுமின்றி தமக்கு பேசி முடித்த மாப்பிள்ளை வீட்டார் கண்டிப்பாக பணம் கேட்டிருக்கனும்.

அது மட்டுமின்றி தனிக் குடித்தனம் போக சொந்த வீடும் மாப்பிள்ளை வீட்டார் கேட்டிருக்கனும்,அதான் சகோ அன்று கட்டுரையை கார சாரமாக எழுதி இருக்கார்.

இதை அவர் மறுத்து கருத்து சொன்னாலும் உள் மனது கண்டிப்பாக சரியாத்தான் சொல்லி இருக்கான் என்று நினைக்கும் என்று நினைக்கிறேன்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்ரி ஆயிஷா

ஹுஸைனம்மா said...

வரதட்சணைக் கொடுமைக்கு முக்கிய காரனம், ஆண்கள் எப்ப்போ அதிகாரத்தைக் கையிலெடுக்கணுமோ அப்ப எடுக்காமல் இருப்பதுதான். அப்பத்தானே, ‘நாங்களா கேக்கிறோம்?”ம்னு சால்ஜாப்பு சொல்லலாம்!!

நல்ல சிந்தனைகள் அக்கா. இளம்வயதில் எல்லாருமே புரட்சிப்பூக்களாத்தான் இருந்திருக்கிறோம், இல்லையா!! :-)))

இடையிடையே இதுபோல உங்களின் ஆரம்பகால எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் அக்கா.

ஸாதிகா said...

//எனது கணக்கின்படி சகோ சாதிக்காவும் வரதட்சனை கொடுத்துதான் மணம் புறிந்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
// என்னது?உங்கள் கணக்கு தப்பு அந்நியன்.நான் மணம் முடிக்காமல் இருந்தபொழுது எழுதபட்ட கட்டுரை அது.அதன் பிறகு நடைபெற்ற எங்கள் திருமணமும் வரதட்சணை இல்லா திருமணம் தான்.எனக்கு மட்டுமல்ல,என் சகோதர,சகோதரிகளுக்கும்,என் மகளுக்கும் அதே முறையில் மணம் நடந்தது.

வரதசணையை எதிர்த்து அன்றும் முழங்கினே.இன்றும் முழங்குகிறேன்.நாளையும் முழங்குவேன்.இன்னும் ஒருசில வருடங்களில் திருமணத்துக்கு தயாராகி விடும் எனது இரு மகன்களுக்கும் வரதட்சணை இன்றியே திருமணம் நடக்கும்/இன்ஷா அல்லாஹ் அழைப்பு வரும்.வந்திருந்து பார்த்து வாழ்த்துங்கள்.ஒரு பானை சோற்றுக்கு சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது எல்லாவற்றுக்கும் பொருந்தும் என்று கூற முடியாதுதானே சகோதரரே?கருத்துக்கு நன்றி சகோ.

ஸாதிகா said...

//நல்ல சிந்தனைகள் அக்கா. இளம்வயதில் எல்லாருமே புரட்சிப்பூக்களாத்தான் இருந்திருக்கிறோம், இல்லையா!! :-)))
// ஏன் ஹுசைனம்மா,இப்பொழுது இல்லையா?

//இடையிடையே இதுபோல உங்களின் ஆரம்பகால எழுத்துக்களையும் பகிர்ந்துகொள்ளுங்கள் அக்கா.
// ஆர்வத்தூண்டலுக்கு நன்றி ஹுசைனம்மா.எனது முதல் கதையை பிளாக்கில் போடலாம் என்று தேடினேன்.கிட்டவில்லை.இன்ஷா அல்லாஹ் அடுத்த முறை பார்ப்போம்.கருத்துக்கு மிக்க நன்றி.