June 25, 2010

பிய்ந்த பொட்டி பீதாம்பரம்



சிலுசிலுவென்ற வைகாசி மாலை நேரக்காற்று முகத்தைத்தடவ ,எதிரே இருந்த வேப்ப மரக்கிளையில் அமர்ந்திருந்த காகம் வாயில் எதனையோ வைத்து விடாப்பிடியாக கடித்துக்கொண்டிருக்க,அதே மரத்தில் அணில் ஒன்று சுறுசுறுப்பாக மேலும்,கீழும் ஏறி தன் அசாத்திய சுறுசுறுப்பை பறைசாற்றிக்கொண்டிருந்தது.தூரத்தே தெரியும் கோவில் கோபுரத்தில் அதற்குள் விளக்கு ஏற்றப்பட்டுவிட்டது.எதிர் வீட்டு அம்பிமாமா நந்தியாவட்டை பூக்களை சிறு கூடையில் பறித்திக்கொண்டிருந்தார்.தன் மாலை நேர பூஜைக்காக.ஒரு சிறுவன் சைக்கிள் மணியை டிணிங்..டிணிங் என்று தொடர்படியாக அடித்துக்கொண்டு சென்றது கூட மகேஷுக்கு இனிமையாக இருந்தது.தான் வசிக்கும் நகரத்தில் இப்படி காட்சிகள் காணக்கிடைக்காத காரணத்தினால் அனைத்தையும் ஆர்வமுடன் ரசித்துக்கொண்டிருந்த பொழுது

"தம்பி மகேஷ்.."அப்பாவின் குரல் கேட்டு திரும்பினான்.
"என்னப்பா..மாடியில் இருந்து கீழே ஆளையே காணோம்"

"இல்லேப்பா..பால்கனியில் அமர்ந்து வெளியே வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தேன்.ரம்யமாக பொழுது போச்சு"


கீழே இருந்து பாகீரதியும் வந்து சேர்ந்துகொள்ள பேச்சு களைக்கட்டியது."என்னங்க..கம்பியூட்டர் வந்ததில் இருந்து இந்தபக்கம்,அந்தப்பக்கம் அசையாமல் இருப்பீர்களே.இப்ப அதிசயமாக மகனோட பேச பால்கனிக்கு வந்து விட்டிர்களே"கணவரை வம்புக்கு இழுத்தாள்.

பின்னே என்ன?மகேஷ் கம்பியூட்டர் வாங்கி,நெட் கனெக்ஷன் கொடுத்த இந்த நாண்கு நாளில் மனைவியின் பேச்சை காது கொடுத்துக்கேட்காதவராயிற்றே.


"என்னங்க..நாளைக்கு ஈ பி பில் கட்ற கடைசி தேதி.."

"நம்ம மகேஷுக்கு சேப்பங்கிழங்கு ரோஸ்ட்டும்,முள்ளங்கி சாம்பார்ன்னா மகா இஷ்டம்.அரைகிலோ சேப்பங்கிழங்கும்.சாம்பார்வெங்காயமும் வாங்கிட்டு வந்துடுறீங்களா?"

"நம்ம விசாலினி போன் போட்டாள்.என்ன ஆச்சுன்னா.."

ப்படி எதற்குமே பதில் சொல்லாமல் அவரை கம்பியூட்டரே முழுக்க முழுக்க ஆக்கிரமித்துஇருக்கும்.பேசி,பேசி அலுத்துப்போகும் பாகீரதி கடைசியில் வெறுத்துப்போய் பையை தூக்கிக்கொண்டு வெளியில் நடையைக்கட்டுவாள்.

சாயங்காலம் ஆச்சுன்னா நாண்கு தெருவையும் வேக நடையில் நடந்து நடைபயிற்சியும்.மார்க்கெட்,ஈபி பில்,போன் பில்,கோவில் ,நண்பர்கள்,உறவினர்கள்,அவ்வப்பொழுது சீட்டுக்கட்டு,என்று சுறுசுறுப்பாக இருந்த அவரது வாழ்க்கை முறை இந்த கம்பியூட்டர் வந்த இந்த நாண்கு நாட்களாக வாழ்கை முறையையே அப்படியே மாற்றிப்போட்டு விட்டது.இதனால் பாகீரதிக்கு மூக்கு முட்ட மனக்குறை.
"அடியே ..பாகீ..ரிடயர்ட் ஆனப்புறம் பொழுதை போக்க நான் பட்ட கஷ்டம் எனக்குத்தான் தெரியும்.ஏதோ என் பிள்ளை யுஎஸ்ஸில் இருந்து வந்தான்.அப்பன் கேட்டதுமே ஏன்னு மறு வார்த்தை கேட்காமல் வாங்கிகொடுத்திருக்கான்.நீ குறுக்கே பேசப்படாது."செல்லமாக மனைவியை கடிந்துவிட்டு

"மகேஷ் நல்லதா ஒரு பேரு செலக்ட் பண்ணிக்கொடுப்பா?"

"எதற்கப்பா"

"நான் பிளாக் ஆரம்பிக்கப்போறேன்."

"அட்றா சக்கை..பிசி வாங்கிய நாலே நாளில் பிளாக் எழுதுற அளவுக்கு ஆச்சா?"

"இது என்னோட ரொம்ப நாள் கனவு.அப்பப்ப பிரவுசிங் செண்டர் போய் மற்றவங்களோட பிளாக் படிச்சதில் இருந்து நாமும் ஒரு பி சி வாங்கி பிளாக் ஆரம்பிக்கணும்ன்னு ஆசை"

"கொட்டுமுரசு..பெயர் நல்லா இருக்காப்பா"

"அட..ரொம்ப சீரியஸான பெயரா இருக்கு மகேஷ்"

"வண்ணத்துப்பூச்சி,வாசமலர்,வாடாமலர்.."

மகேஷ் அடுக்கிக்கொண்டே போனான்

"இல்லேப்பா..உனக்கு பிளாக் உலகம் பற்றித்தெரியலே.இப்படி எல்லாம் பெயர் வச்சால் ஒரு பய வரமாட்டான்..நான் ஒரு பெயர் மனசுலே வச்சி இருக்கேன்"

"ம்ம்"

"பிய்ந்த பொட்டி பீதாம்பரம்"

"ஐயே..என்ன பெயருப்பா இது"

"இப்படி தடாலடியா பெயர் வச்சேன்னா பாரு எண்ணி ஒரே மாசத்திலே ஒருசதத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வந்துடுவாங்க.இதே ரீதியில் பதிவு போட்டேன்னா பின்னூட்டமும் வந்து குமிஞ்சுடும்."

"சபாஷ்.சரிப்பா..ஏதோ செய்யுங்க.நானும் அங்கு போனப்புறம் டைம் கிடைக்கும் பொழுது உங்கள் பிளாக் பார்க்கறேன்.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார்ன்னு சொல்லிக்கலாம்"

"படிக்கமட்டும் செய்யாமல் மறக்காமல் பின்னூட்டமும் போட்டுடு.எங்கப்பாவும் பிளாக் எழுதுறார் ன்னு சொல்ல மட்டும் செய்யாமல் எல்லோரிடமும் படிச்சுட்டு அவங்களையும் பின்னூட்டமும்,ஓட்டும் மறக்காமல் போட்டுட சொல்லு"

"அது சரி..அதென்ன பிய்ந்த பொட்டி பீதாம்பரம்?பெயரே என்னவோ போல் இருக்கே"

"பிய்ந்த பொட்டின்னா கிழிந்த பொட்டின்னு அர்த்தம்.கிழிந்து போன பொட்டியில் ஒரு பொருட்களும் தங்காது.எல்லாம் கீழே கொட்டிட்டே இருக்கும்.அது மாதிரி என் மூளையில் உதிக்கும் சமாச்சாரங்கள் எல்லாத்தையும் பிளாக்கில் கொட்டிட்டே இருப்பேன்.எப்படி நாம்ம பெயர் வச்சது?"

"அடேங்கப்பா.அசத்துங்க..அசத்துங்க."


ப்புறமென்ன?ஒரு சுபயோக சுபதினத்தன்று "பிய்ந்த பொட்டி பீதாம்பரம்" உதயமாகி விட்டார்.பெயரைப்போலவே பதிவுகளும் இருந்ததால் ஓட்டுகளுக்கும்,பின்னூட்டங்களுக்கும் குறைவில்லை.பீதாம்பரம் எக்கசக்க குஷியாகிவிட்டர்.சாப்பிடும் நேரம்,தூங்கும் நேரம் தவிர மற்ற நேரம் முழுதும் கம்பியூட்டர் முன்னால் பழி கிடந்தார்.

"அப்பா..மெயில் செக் பண்ணிக்கறேன்"மகேஷ் கேட்டு வாங்க வேண்டி இருந்தது.

"தம்பி மகேஷு..நீ டிஜிட்டல் கேமரா வைத்து இருகிறேதானே"

"ஆமாப்பா"

"எனக்கு கொடுத்துட்டு புதுசா ஒண்ணு வாங்கீக்கோயேன்"

"ஏன்ப்பா..பதினைந்து நாள்தானே..எதற்கு எடுத்துட்டு வரன்னு அங்கேயே வைத்துட்டு வந்துட்டேன்ப்பா"

"அச்சச்சோ..பரவா இல்லை.நல்லதா இங்கே ஒண்ணு வாங்கிகொடுத்துடுறியாப்பா"

"எதுக்குப்பா அவசரமா டிஜிட்டல் கேமரா?"

"வேறு ஒண்ணும் இல்லைதம்பி.வெளியிலே போகிறச்சே பிடிச்ச காட்சிகளை போட்டொ எடுத்து பிளாக்கில் போடலாமேன்னுதான்"

விடாப்பிடியாக பேசி,மகனை கையோடு கூட்டி சென்று நல்லதொரு கேமரா வங்கினார்.அத்தோடு மகேஷை சனிபகவான் கெட்டியாக பிடித்துக்கொண்டுவிட்டார்.

"தம்பி மகேஷு..ஒரு காரை ஹையருக்கு எடுத்துட்டு அப்படியே முட்டுக்காடு,எம்ஜிஎம்,மகாபலிபுரம் என்று குட்டியா டிரிப் அடிக்கலாமா?"

"என்னப்பா திடீர்ன்னு"

"வேறு ஒண்றுமில்லை.. போய் பார்த்தாப்போலேயும் இருக்கும்.போட்டோ பிடிச்சு பிளாக்கில் போட்டாப்போலேயும் இருக்கும்"

டுத்து,மறுக்கும் அளவிற்கு மகேஷ் வளர்க்கபடவில்லையாதலால் அப்பாவின் வேண்டுகோளை தட்டாமல் நிறைவேற்றினான்.

"தம்பி மகேஷு..வர்ரியா..ராத்திரிக்கு ஹோட்டலுக்கு போவோம்"
"என்னப்பா ஆச்சரியமாக இருக்கு.ஹோட்டல் சாப்பாடே உங்களுக்கு ஒத்துக்காதே"

"அட்ஜஸ்ட் பண்ணிக்கறேன்ப்பா...போய் சாப்பிட்டாப்லேயும் இருக்கும்.நம்ம பிளாக்கில் படம் எடுத்து போட்டாப்போலேயும் இருக்கும்..அவனவன்..கையேந்தி பவன் முதல் பைவ் ஸ்டார் ஹோட்டல் வரை போய் டேஸ்ட் பார்த்துட்டு படத்துடன் பிளாக்கில் போட்டு ஹிட்ஸை அள்ளுறான்கள்.நாமும் டிரை பண்ணலாமேன்னுதான்."

கேஷ் கிளம்பும் வரை சின்னதும் பெரியதுமாக அரை டசன் ஹோட்டலுக்கு சென்று மறக்காமல் போட்டொ எடுத்து மறக்காமல் பதிவும் செய்துவிடுவார் பீதாம்பரம்.

"அடி.. பாகீ..இன்னிக்கு மோர்குழம்பு பண்றியா..நான் படமெடுத்து பிளாக்கில் போடணும்"மனைவியையும் விட்டு வைக்கவில்லை.அதை செய்,இதை செய் என்று பாடாய்படுத்தி போட்டோ தவறாமல் எடுத்துவிட்டுத்தான் மறு வேலைப்பார்ப்பர்.


திவுகள் படித்து விட்டு அவரை தட்டியும்,கொட்டியும் வரும் பின்னூட்டங்களை படித்து ரசித்து,சிரித்து சிலாகிப்பதுமில்லாமல்

"அடி..பாகி சித்த வந்து பாரேன்.இந்த பொண்ணு எப்படி பீட் பேக் கொடுத்து இருக்கான்னு..தம்பி மகேஷு..நீ இங்கே வந்து பாரேன்.இந்த பீட்பேகை படிச்சுப்பாரேன்.இதுக்கு நான் எப்படி பதிலடி கொடுக்கறதுன்னு ஒரு ஐடியா சொல்லேன்"

ன்ன வேலையாக இருந்தாலும் அவர் அழைத்ததும் வந்து கம்பியூட்டர் முன் வந்து ஆஜர் ஆகிவிடவேண்டும்.மனைவி.மகனை மட்டுமல்ல அவரது பிரண்ட்ஸ்,உறவினர்களை வேறு போனில் அழைத்து மணிக்கணக்கில் டிஸ்கஷன் நடக்கும்.


"இதோ.. பாருடா கிச்சா..'அட்றா மச்சான்' ன்னு நான் நேற்று போட்ட பதிவைப்பார்த்தியா?"

"அந்த ஹோட்டலை பற்றி நான் எழுதியதைப்பார்த்தியா?இந்நேரம் அவனுக்கும்வியாபாரம் பிச்சுக்கிட்டு போகும்"

"கந்தசாமிதெருவுலே இருக்கிற பூக்கடையை பற்றி எழுதினேன் பாரு..அந்த ஓனர் சாட்சாத் கடவுளையே பார்க்கற மாதிரி என்னை பார்க்க ஆரம்பிச்சுட்டான் மனுஷன்."

"மெயின் ரோட்டிலே பள்ளம் நோண்டிப்போட்டு பத்து நாளாகுது.போட்டோவுடன் காட்டமா ஒரு பதிவு போட்டேன் பாரு..மனுஷன்னா இப்படி சமுதாயசிந்தனை அவசியம் இருக்கணும்.இப்படி எத்தனைபேருக்கு இருக்கும்?ஹ்ம்ம்ம்"
பேச்சு இந்த ரீதியில் இருக்கும்.

"ப்பா..மகேஷு...நாளைக்கு கிளம்புறே..எத்தனை மணிக்கு டாக்சிக்கு சொல்லட்டும்?"

"நைட்டு பத்து மணிக்கு சொல்லிடுங்கப்பா"

"மகேஷு..மறந்துடப்போறேன்.அடுத்த டிஸம்பரில் மறுபடி ஊர் வர்ரச்சே நல்லதா ஒரு லேப்டாப் வாங்கிட்டு வர்ரியா"

"இப்பதானே பி சி வாங்கித்தந்தேன்"

"வயசான காலத்திலே சேரிலே உக்காந்துட்டே இருக்க முடியலேப்பா..அப்பப்ப ஷோபாவிலே காலை நீட்டிட்டு மடியில் வச்சிட்டு வர்க் பண்ணலாம்..பெட்டில் சாய்ந்து கொண்டு வர்க் பண்ணலாம்,காத்தாட பால்கனி,மொட்டைமாடியில் உக்காந்துட்டு வர்க் பண்ணலாம்."

".............நல்லதுப்பா.."மகேஷின்குரலில் சுருதி இறங்கியது

"அப்படியே ஒரு பிரிண்டரும் கொண்டு வந்துட்டால் நல்லது.என் பதிவைபூரா பிரிண்ட் போட்டு பைண்டிங் பண்ணி வச்சிக்கலாம்."

"...."

"என்னப்பா..சப்தத்தைக்காணோம்?"

"ஆகட்டும்ப்பா"


டாக்சி ஏர்போர்ட் நோக்கி போய்க்கொண்டிருந்தது.
"தம்பி மகேஷு..டிஸம்பரில் வர்ரச்சே பிரியாவையும்,குழந்தைகளையும் அழைச்சுட்டு வருவே இல்லியா"

"ம்ம்ம்"

"சின்னவன் நல்லா வளர்ந்து இருக்கானா?"

"ம்ம்"

"படிப்பெல்லாம் எப்படிப்போகுது"

"நல்லாப்போகுதுப்பா"

"ஹ்ம்ம்...எத்தனை காலத்துக்குத்தான் குண்டு சட்டிக்குள் குதிரையை ஓட்டிட்டு இருக்கறது.நானும் நாலு இடத்தை பார்க்கணும்.போறச்சே அந்த சந்தோஷத்தோட நிம்மதியா போய் சேரணும்"

"என்னப்பா..என்ன ஆச்சு..திடீருன்னு இப்படி பேசறீங்க?"

"நானும் யு எஸ் வந்து சுற்றிப்பார்க்கணும்ன்னு ஆசை வந்துடுச்சுப்பா.அங்கே கூட்டிப்போக ஏற்பாடு பண்றியாப்பா?"

ஆவல் மிளிரகேட்டவரை ஆயாசத்தோடு பார்த்தான்.

"ஏம்ப்பா..அதையும் உங்கள் பிளாக்கில் எழுதனும்னா.."தீனமாக ஒலித்தது மகேஷின் குரல்.







66 comments:

Riyas said...

ஐ... வட எனக்குத்தான்...

சூப்பர் ஸாதிகா அக்கா..

ஸாதிகா said...

ஐ ...வட உங்களுக்கேதான்.தேங்க்ஸ் ரியாஸ் தம்பி.

ஜெய்லானி said...

இதெப்படி சட்னி உங்களுக்கு .இருங்க படிச்சிட்டு வரேன்..!!

ஜெய்லானி said...

ஆத்தாடி...இதென்ன வில்லங்கமா இருக்கு. பல பேரோட சீக்ரெட்ட இப்படி போட்டு உடைச்சிட்டீங்க ...!!

சீமான்கனி said...

"இத்துப்போன பீதாம்பரம்" கதை அருமை அக்கா..நிஜத்திலும் இப்படி நடக்கலாம் யாருகண்டா...பயங்கரமா ஆராய்ச்சிலாம் பன்னிருகீங்கபோல...நல்ல இருக்கு வாழ்த்துகள் அக்கா...

ஜெய்லானி said...

ஆனாலும் < கதை > சூப்பர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.ஹா..ஹா...

ஸாதிகா said...

ஓ..அப்பட்டீங்களா ஜெய்லானி??இப்படியும் இருக்குமோ என்று கற்பனை பண்ணி ஒரு கதையை போட்டேன்.உண்மைன்னு ஒப்புக்கொண்டுவிட்டீர்கள்.ரொம்ப நன்றிங்க ஜெய்லானி.உங்களுக்கு அரிசந்திரமஹாராஜா பட்டம் கொடுக்கலாம்.

ஜெய்லானி said...

அப்ப அடுத்து யூ எஸ் பயணமா ? அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!

ஸாதிகா said...

என்னங்க சீமான்கனிதம்பி பிய்ந்த பொட்டி பீதாம்பரத்தை இத்துப்போன பீதாம்பரமாக்கிட்டீங்களே?//இத்துப்போன பீதாம்பரம்" கதை அருமை அக்கா..//கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

//ஜெய்லானி said...
அப்ப அடுத்து யூ எஸ் பயணமா ? அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!// ஆட்டை கடிச்சி,மாட்டை கடிச்சி இப்ப மனுஷியையே கடிசிட்டீங்களே சாமீ :-(

சீமான்கனி said...

ரெண்டும் ஒண்ணுதானே அக்கா எனக்கு அவரை அப்டி கூப்பிடத்தான் பிடிச்சு இருக்கு...:P

இலா said...

ஹ‌ ஹ ஹ.. நல்ல கதை!

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--//
@@@ஜெய்லானி
அப்ப அடுத்து யூ எஸ் பயணமா ? அட்வாண்ஸ் வாழ்த்துக்கள்..!!// ஆட்டை கடிச்சி,மாட்டை கடிச்சி இப்ப மனுஷியையே கடிசிட்டீங்களே சாமீ :-( //

க்கி..க்கி...அதெப்பிடிங்க தூண்டில் போட்டா திமிங்கிலம் மாட்டுதூஊஊஊ :-))).மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

ஸாதிகா said...

ஒகே..உங்களுக்கு பிடிச்சாற்போலே வைத்துக்கொள்ளுங்கள் சீமான்கனி.

ஸாதிகா said...

// இலா said...
ஹ‌ ஹ ஹ.. நல்ல கதை!//வெறும் சிரிப்போடு முடித்துக்கொண்டீர்கள இலா!நன்றி!

ஸாதிகா said...

ஏனுங்கோ ஜெய்லானி,"நெனப்பு பொழப்பைகெடுக்குமாம்"பழமொழி கேட்டு இருக்கியளா?

athira said...

ஸாதிகா அக்கா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. வடை, சட்னி, ஆயா.... எல்லாத்தையுமே கோட்டை விட்டுட்டனே... இட்ஸ் ஓக்கை... ”தோல்விதான் வெற்றிக்கு முதேஏஏஏஏஏஏஎல் படி”.

இனி விஷயத்துக்கு வாறேனே....
கலக்கிட்டீங்க ஸாதிகா அக்கா... டிஜிரல் கமெரா, கொம்பியூட்டர், ஈரண்டும் தேவையா புளொக் தொடங்க?:).

பீதாம்பரம்.... சூப்பர் மனிதனாக இருக்கிறார்.... மின்னாமல் முழங்காமல்.... நைஸாகக் காயை நகர்த்திக்கொண்டு போகிறார்:)... இனி அவரை யு எஸ் இல் சந்திப்போம்.

இமா க்றிஸ் said...

தலைப்பைப் பார்த்த போது உள்ளே விஷயம் இப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. ;) ரசித்தேன் ஸாதிகா. ;)

ஸாதிகா said...

//டிஜிரல் கமெரா, கொம்பியூட்டர், ஈரண்டும் தேவையா புளொக் தொடங்க?:).// இது இரண்டும் இல்லாமல் பிளாக் எழுதும் அதிசயத்தை எங்களுக்கும் கொஞ்சம் சொல்லிக்கொடுங்கள் அதிரா.எங்கட அதிரா கிட்னியால் எவ்வளவு அழகா யோசிக்கறார்!!

ஸாதிகா said...

//தலைப்பைப் பார்த்த போது உள்ளே விஷயம் இப்படி இருக்கும் என்று நினைக்கத் தோன்றவில்லை. ;) ரசித்தேன் ஸாதிகா. // மிக்க மகிழ்ச்சி இமா.நீண்ட இடைவேளைக்குப்பிறகு வந்தமைக்கும் நன்றி.

Chitra said...

இது கதைதானே? இல்லை பக்கத்து வீட்டுல யாரோ, நிஜமா இப்படி பண்றதை எட்டி பாத்து எழுதுனது மாதிரி, தெளிவா இருக்கே என்று கேட்டேன்.... ஹி,ஹி,ஹி,ஹி,ஹி..

ஹைஷ்126 said...

சூப்பர் கதை...

வாழ்க வளமுடன்.

GEETHA ACHAL said...

ஆஹா...எவ்வளவு அழகாக எழுதி இருக்கின்றிங்க...வாழ்த்துகள்...பயங்கரமாக சிரித்துவிட்டேன்...தொடர்ந்து எழுதுங்கள்...

ஸாதிகா said...

என்னங்க சித்ரா,எத்தனை கஷ்டப்பட்டு,கறபனை செய்து பீதாம்பரம் கேரக்டரை உருவாக்கி இருக்கிறேன்.//பக்கத்து வீட்டுல யாரோ, நிஜமா இப்படி பண்றதை எட்டி பாத்து எழுதுனது மாதிரி, தெளிவா இருக்கே என்று கேட்டேன்.// இப்படி சிம்பிளா கேட்டுட்டீங்களே!!

ஸாதிகா said...

நன்றி ஹைஷ் சார்.//வாழ்க வளமுடன்// உங்களின் இந்த வரிகள் ஜாங்கிரி சாப்பிட்டதுபோல் இருக்கின்றது.

ஸாதிகா said...

//பயங்கரமாக சிரித்துவிட்டேன்...தொடர்ந்து எழுதுங்கள்.// கீதாஆச்சல்,உங்கள் வரிகள நான் அருந்திய பூஸ்ட்.நன்றிப்பா!

சிநேகிதன் அக்பர் said...

சிரிச்சு முடியலை ஸாதிகாக்கா. மிக அருமை. நல்ல எழுத்து நடை. நகைச்சுவை கலந்து உண்மையை சொல்லியிருக்கீங்க.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அக்கா ரொம்ப அருமையா இருக்கு. சிரித்துசிரித்து படித்து ரசித்தேன். இப்படித்தானோ..?. தெரியலியே.. ஆமா நீங்க யூ எஸ் போகபோறதா பேச்சி அடிபடுதே.. :))

SUFFIX said...

இப்படி சீரியஸா போகாம இருக்கணும், கற்பனையென்றாலும் ப்ரேக் போட கத்துக்கொடுத்திட்டீங்க...

நட்புடன் ஜமால் said...

யக்கோவ்! ஆச்சர்யத்துடன் படித்து இரசித்து கொண்டிருந்தேன்

கலக்கல்ஸ்

பழைய ஃபார்ம்ல இருந்திருந்தா ஒரு 500 கமெண்ட் அடிச்சிருக்கலாம்

இங்க பொட்டி பூட்டியிருக்கு

என்று பிய்யுமோ அன்று பார்த்து கொல்(ள்)லாம் ...

:) :) :)

ஸாதிகா said...

அக்பர் தம்பி //நகைச்சுவை கலந்து உண்மையை சொல்லியிருக்கீங்க.//அப்படீங்கறீங்க???

ஸாதிகா said...

//ஆமா நீங்க யூ எஸ் போகபோறதா பேச்சி அடிபடுதே.. :))//ஸ்டார்ஜன் தம்பி நீங்களுமா??:-(

ஸாதிகா said...

//இப்படி சீரியஸா போகாம இருக்கணும், கற்பனையென்றாலும் ப்ரேக் போட கத்துக்கொடுத்திட்டீங்க..//ஷஃபி உங்களின் இந்த வரிகளுக்கு மனமார்ந்த நன்ரி!

ஸாதிகா said...

ஹாஹ்ஹாஹ்ஹா..//
என்று பிய்யுமோ அன்று பார்த்து கொல்(ள்)லாம் ...

:) :) :)//ஜமால் தம்பியின் இந்த வரிகளை படித்துவிட்டு மிகவும் சிரித்துவிட்டேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா சரியான சிரிப்பு தான் போங்க
இப்ப பிலாக் உலகில் எல்லோரும் பைத்தியாமா திரிவதை ஹி ஹி நல்லவே படம் பிடித்து போட்டு விட்டீர்கள்>

தலைப்பு பற்றி சொல்லும் போது என்க்கு , கவுண்ட மனி சொல்லும் தீய்ஞ்சி போன கரி வண்டு தலையா?

தீவிட்டி தடியா எல்லாம் ஞாபகம் வருது.

ஹிஹி ஒகெ ஒகே ஒகே பை பை பை ..

Menaga Sathia said...

ஹா ஹா சூப்பர்ர்ர் கதை..இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் அக்கா...இன்னும் எழுதுங்கள்...

Ahamed irshad said...

ரசித்தேன்...சூப்பர்

Asiya Omar said...

எப்படி ஸாதிகா இப்படி?என்னால சிரிச்சு முடியலை,சூப்பர்.பாத்திரங்கள் கதா பாத்திரங்கள் திரும்பவும் களை கட்ட ஆரம்பித்து விட்டது. ஊர் போற நாள் வேற நெருங்கிட்டு வருதே,ப்ளாக்ஸை நிறைய மிஸ் பண்ணுவேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

ம்...குட்...அப்படியே பதிவுலகைப் பிரதிபலிக்கறாப்பல எப்படி இப்படி? நிதர்சன பதிவு!

ஹுஸைனம்மா said...

எனக்கு இதைப் படிக்கும்போது, கத்தார், அமீரகப் பயணங்கள், செட்டிநாடு உணவகம் இதெல்லாம் நாபகம் வருதே, ஏங்க்கா, ஏன்?

இப்பப் புரியுது!! எக்கோவ்!! சொந்தக் கதையை இப்படி எழுத ஒரு தைரியம் வேணும்தான்!! என்னோட ஜோதியில கலந்து ஐக்கியமாகிட்டீங்க!!

;-))))

மனோ சாமிநாதன் said...

ஸாதிகா! அருமையாக கதை சொல்லி தேர்ந்த எழுத்தாளரென நிரூபித்து விட்டீர்கள்!! கணினி வந்ததால் ஒரு வயதானவருக்குக்கூட வாழ்க்கையின் யதார்த்தங்கள் தொலைந்து போய் விட்டதையும் அவரது மகனின் எமாற்றத்தையும் உள்ளத்தில் மறைந்திருக்கும் சோகத்தையும் சிறு வரிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!! கதாசிரியராக மேலும் தொடர வாழ்த்துக்கள்!!

ஸாதிகா said...

//தலைப்பு பற்றி சொல்லும் போது என்க்கு , கவுண்ட மனி சொல்லும் தீய்ஞ்சி போன கரி வண்டு தலையா?

தீவிட்டி தடியா எல்லாம் ஞாபகம் வருது.//ஹஹ்ஹா....ஜலி,செம காமெடியாக இருக்கு.பிஸியிலும் பிளாக் படித்து பின்னூட்டம் போட்டமைக்கு நன்றி

ஸாதிகா said...

//இன்னும் சிரிச்சுக்கிட்டே இருக்கேன் அக்கா// எப்பவும் சிரிச்சுக்கிட்டே சந்தோஷமாக இருப்பீர்களாக மேனகா!

ஸாதிகா said...

//எப்படி ஸாதிகா இப்படி?என்னால சிரிச்சு முடியலை//அது என்னன்னு தெரியலே ஆசியா.எனக்கு சிரித்து நகைச்சுவையாக பேசி,சுற்றி இருப்பவர்களை சிரிக்க வைக்கமட்டும்தான் தெரியும்.ஆனால்,நகைசுவையாக கதை எழுத வராது.இந்த கதை மட்டும் எப்படியோ நகைசுவையாக அமைந்துவிட்டது.

ஸாதிகா said...

//நிதர்சன பதிவு// சுமஜ்லா வரிகளில் மகிழ்ச்சி.அவ்வப்பொழுது உங்கள் பிளாக் வந்து பார்த்துவிட்டு ஏமாற்றத்துடன் திரும்பி செல்வேன்.இனி அப்படி இருக்காது என்று நம்புகின்றேன்

ஸாதிகா said...

நினைச்சேன்.ஹுசைனம்மாவிடம் இருந்து இப்படி எடக்கு மடக்காக வரும் என்று இந்த கதையின் முதல் வரியை டைப் பண்ணும் பொழுதே நினைச்சேன்.இப்ப சந்தோஷமா..?போங்க..போய் அபுதாபி வெயிலுக்கு கம்பளியை இழுத்து போர்த்திக்கொண்டு குளு குளுன்னு இப்ப போய் நிம்மதியா தூங்குங்க.

ஸாதிகா said...

மனோ அக்கா,உங்கள் ஊக்க வரிகளுக்கு மிக்க நன்றி!//அவரது மகனின் எமாற்றத்தையும் உள்ளத்தில் மறைந்திருக்கும் சோகத்தையும் சிறு வரிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறீர்கள்!// வரிகள் மூலம் உங்கள் விரிந்த தொலைநோக்குப்பார்வைக்கு ஒரு பூங்கொத்து.

ஹுஸைனம்மா said...

//ஹுசைனம்மாவிடம் இருந்து இப்படி எடக்கு மடக்காக வரும் என்று இந்த கதையின் முதல் வரியை டைப் பண்ணும் பொழுதே நினைச்சேன்//

அது... அந்தப் பயம் இருக்கட்டும்!! :-))

அபுதாபி வெயிலுக்கு கம்பளியா...???!!! பிளாக்கோமேனியா எந்த அளவுக்கு உங்களைப் பாதிச்சிருக்குன்னு புரியுதுக்கா!! ;-)))

ஸாதிகா said...

பயம்..எனக்கு..ஹுசைனம்மா மீது....ஹெஹ்ஹெஹ்ஹே...ஏன்ப்பா..பயம் இருந்துச்சுன்னா இந்த பதிவையே போட்டு இருக்க மாட்டேனே!

தூயவனின் அடிமை said...

சகோதரி கதை நன்றாக உள்ளது.

ஸாதிகா said...

சகோதரர் இளம்தூயவன்,கருத்துக்கு நன்றி!

மங்குனி அமைச்சர் said...

எவ்ளோ பெரிய பதிவு ??????

ஸாதிகா said...

ஏங்கையா மங்குனி...கொஞ்சம் பெரிய கதையாகத்தான் ஆகிப்போச்சு.முதல் நாலுவரி கூட படிக்காமல் கதையா,கட்டுரையா என்று கூட அறியாமல் பின்னூட்டம் இடுற ஆளு நீங்கதான் சாமீ.கதையை கொஞ்சம் பொறுமையா படிச்சுட்டு நல்லா சிரிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க.அடுத்த கதையில் நீங்கள் சொல்லுகின்றார்ப்போல் சுருக்கமா முடிச்சுடுறேன்.சரீங்களா?

மங்குனி அமைச்சர் said...

ஸாதிகா said...

ஏங்கையா மங்குனி...கொஞ்சம் பெரிய கதையாகத்தான் ஆகிப்போச்சு.முதல் நாலுவரி கூட படிக்காமல் கதையா,கட்டுரையா என்று கூட அறியாமல் பின்னூட்டம் இடுற ஆளு நீங்கதான் சாமீ.கதையை கொஞ்சம் பொறுமையா படிச்சுட்டு நல்லா சிரிச்சுட்டு ஒரு பின்னூட்டம் போடுங்க.அடுத்த கதையில் நீங்கள் சொல்லுகின்றார்ப்போல் சுருக்கமா முடிச்சுடுறேன்.சரீங்களா?///

எல்லாத்தையும் படிச்சிட்டோம் , சும்மா காமனா கமண்ட்ஸ் போட்டேன் , தனித்தனியா தெளிவா போடணுமா ????
ஓ.... நீங்க ஆப்படி நினசுட்டிகளா ???? சாரி . ... தேவையில்லாம நீங்கதான் பஸ்ட்டு அவருக்கு கம்ப்யுடர் வாங்கி கொடுத்திக அப்புறம் கேமரா? , அப்புறம் டூர்வேற ? , பைனலா லேப்டாப் வேற வைடிங்க்ள இருக்கு , மேடம் இத நான் இப்ப படிக்கல முதல் காமன்ட்டே படிச்சுட்டு தான் போட்டேன் , ஏன்னா? என் ஸ்டைல் அப்படி , நல்லா பாத்திங்கன்னா தெரியும் யாரு ப்ளாக்ளையும் அவுங்க பதிவ தனித்தனியா கமன்ட் போட மாட்டேன் , மொத்தமா காமனா தான் கமன்ட் போடுவேன்

Thenammai Lakshmanan said...

ஸாதிகா.. ஹா ஹா ஹா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்.. யார் அந்த பீதாம்பரம்.. நம்மள எல்லாம் கலந்து கட்டுனமாதிரி ஒரு கேரக்டர்.. சூப்பர் ..

M. Azard (ADrockz) said...

//இப்படி தடாலடியா பெயர் வச்சேன்னா பாரு எண்ணி ஒரே மாசத்திலே ஒருசதத்திற்கும் மேல் ஃபாலோவர்ஸ் வந்துடுவாங்க.இதே ரீதியில் பதிவு போட்டேன்னா பின்னூட்டமும் வந்து குமிஞ்சுடும்//
கலக்கல் கதை, வாழ்த்துக்கள் அக்கா...

ஜெய்லானி said...

################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்..
http://kjailani.blogspot.com/2010/07/blog-post.html

அன்புடன் .> ஜெய்லானி <
################

ஸாதிகா said...

//ஹா ஹா ஹா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்///ஸ்நேகிதி தேனம்மை வம்பில் மாட்டிவிட்டுடாதீங்கப்பா.

ஸாதிகா said...

சகோதரர் ,M. Azard (ADrockz),கருத்துக்கும்,முதல் வருகைக்கும் மிக்க நன்றி!

ஸாதிகா said...

விருது வழங்கியமைக்கு மிக்க நன்றி ஜெய்லானி!

சீமான்கனி said...

அக்கா உங்களை தொடர் பதிவுக்கு அழைத்துள்ளேன் இங்கே பார்க்கவும்
http://ganifriends.blogspot.com/2010/07/blog-post.html

அப்பாவி தங்கமணி (சஹானா இணைய இதழ்) said...

//வேறு ஒண்ணும் இல்லைதம்பி.வெளியிலே போகிறச்சே பிடிச்ச காட்சிகளை போட்டொ எடுத்து பிளாக்கில் போடலாமேன்னுதான்//
அட்ரா சக்க அட்ரா சக்க... சூப்பர்...

//வேறு ஒண்றுமில்லை.. போய் பார்த்தாப்போலேயும் இருக்கும்.போட்டோ பிடிச்சு பிளாக்கில் போட்டாப்போலேயும் இருக்கும்//
சங்கிலிக்கி யானையா... சூப்பர்...ஹா ஹா ஹா

//அடி.. பாகீ..இன்னிக்கு மோர்குழம்பு பண்றியா..நான் படமெடுத்து பிளாக்கில் போடணும்"மனைவியையும் விட்டு வைக்கவில்லை//
பாவம் மம்மி...

//வயசான காலத்திலே சேரிலே உக்காந்துட்டே இருக்க முடியலேப்பா..அப்பப்ப ஷோபாவிலே காலை நீட்டிட்டு மடியில் வச்சிட்டு வர்க் பண்ணலாம்..பெட்டில் சாய்ந்து கொண்டு வர்க் பண்ணலாம்,காத்தாட பால்கனி,மொட்டைமாடியில் உக்காந்துட்டு வர்க் பண்ணலாம்//
இது 200 மச் யு நோ...

//ஏம்ப்பா..அதையும் உங்கள் பிளாக்கில் எழுதனும்னா.."தீனமாக ஒலித்தது மகேஷின் குரல்//
ஹா ஹா ஹா... எப்படிங்க இப்படி எல்லாம்?

ப.கந்தசாமி said...

இதெல்லாம் கொஞ்சங்கூட நல்லா இல்லே. எனக்குத்தெரியாம எங்கூட்டுக்கு வந்து நான் பண்ணறதயெல்லாம் பிளாக்குல போட்டு, இதென்னங்க நியாயம்? நான் சுப்ரீம் கோர்ட்டுக்குப் போகப்போறேன், நெஜமா!

Asiya Omar said...

http://www.blogintamil.blogspot.ae/2013/06/blog-post_19.html
வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்.அருமை.நன்றி.

arul said...

superb story inspiring for new bloggers

காமாட்சி said...

ப்ளாக் என்றால் என்ன என்று கேட்ட மறுநிமிஷமே ப்ளாக் நடுங்கிப் போய் விட்டேன். டைப் பற்றியே தெரியாது.
எழுதி ஒட்டி கத்துண்டு, நானும் எழுதுகிறேன். சில நிகழ்வுகள் என்னை ஞாபகப்படுத்துகிறது. அருமையான கதை. வலைச்சரம் மூலம் அறிமுகமான ஹலோ,ஹலோ,ஹலோ சொல்லுகிறேன் காமாட்சி நான்.
சுருக்கமாக வாழ்த்துக்கள் சொல்லி பாராட்டுகிறேன் உங்களை. அன்புடன்
சொல்லுகிறேன் காமாட்சி