June 13, 2010

நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?

பூசணிக்காய் படத்தை திருஷ்டிப்பரிகாரம் போல் பெரீசா போட்டு விட்டு நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியான்னு கேள்வி கேட்கறாளே என்று அவசரப்பட்டு வார்த்தையை விட்டுறாதீங்க.பொறுமை..பொறுமை..பொறுமை கடலிலும் பெரிது.இப்பொழுது உங்களுக்கு ஜஸ்ட் ஒரு நாலே நாலு கேள்வி கொடுக்கப்போகிறேன்.பதிலுக்காக நீங்கள் நூற்களை நோக்கி போக வேண்டாம்,என் சைக்ளோபீடியாவை புரட்ட வேண்டாம்,நெட்டில் துளாவ வேண்டாம்.யாரைப்பார்த்தும் காப்பி அடிக்க வேண்டாம்.ஸிம்பில் பதில்.இரண்டுக்கு மேல் சரியான பதில் சொல்லிவிட்டால் நீங்கள் கில்லாடி.மூன்றுக்கும் மேற்பட்ட சரியான பதில்களை சொல்லி விட்டால் நீங்கள் செம கில்லாடி.

சரி ரெடி ஸ்டார்ட்..கேள்வியை ஆரம்பிக்கலாமா?

கேள்வி நம்பர் ஒன்:
ஒரு சின்ன சைஸ் சூட்கேஸ் (நல்லா நோட் பண்ணிக்குங்க சின்ன சைஸ்)உள்ளது(அட வி ஐ பியா?சபாரியா என்றெல்லாம் கேட்கப்படாது)கூடவே ஒரு பெரிய பூசணிக்காய் .பூசணிக்காயில் ஒரு பத்தையை பக்கத்து வீட்டு பத்மினி கேட்கும் முன்னர் அந்த சூட்கேஸுக்குள் முழு பூசணிக்காயையும் எப்படி மறைத்து வைப்பது?(பூசணிக்காய் திருஷ்டி சுற்றிப்போடவா என்றெல்லாம் கேள்விகள் வரப்படாது)கேள்வி நம்பர் டூ:
செவசெவன்னு குண்டு பறங்கிக்காய்( பருப்பு போட்டு கூட்டு வைக்கவா என்றெல்லாம் கேட்டு டென்ஷன் பண்ணாதீர்கள்.அதெல்லாம் நம்ம ஆல் இன் ஆல் கிட்டே கேட்க வேண்டிய கேள்வி.)அந்த பறங்கிக்காயையும் இந்த சூட்கேஸுக்குள் எப்படி வைப்பது?


கேள்வி நம்பர் த்ரீ:
தலை நகரிலே பெரிய அளவில் காய்கண்காட்சி நடைபெறப்போகின்றது.கண்டிப்பாக எல்லா காய்கறிகளும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்று ஆணை வருகின்றது.உத்தரவுக்கிணங்க எல்லா காய்கறிகளும் மாநாட்டிற்கு போய் விட்டன.ஆனால் ஒரே ஒரு காய் மட்டும் போகவே இல்லை.அது எந்த காய்?(காய்கறிகள் எல்லாம் கண்காட்சி முடிந்ததும் நேரே என் பக்கம் அதிரா வீட்டிற்கு போய் விடும்.அவர் இஷ்டம் போல் கார்விங் பண்ணி நமக்கெல்லாம் காட்சிக்கு வைத்து விடுவார்.
கேள்வி நம்பர் ஃபோர்:
ஒரு பெரிய சதுரத்தில் இடை விடாமல் தக்காளி பயிர் செய்யப்பட்டு இருந்தது.தள தள வென்ற தக்காளிகள் பழுத்து சந்தைக்கு போக தயாராக இருந்தன.அந்த தக்காளி செடியினூடே விலை உயர்ந்த மோதிரத்தை ஒரு குழந்தை தூக்கி எறிந்து விட்டது.அந்த மோதிரத்தை குழந்தையின் தாய் எடுக்க முற்படுகையில் தக்காளியை பயிறிட்டவர் "ஒரு தக்காளிக்கு கூட சேதமில்லாமல் எடுத்து வரவேண்டும்" என்று கண்டிஷன் போட்டு விட்டார்.அந்த அம்மாவும் நெருக்கமாக பயிரிடப்பட்ட தக்காளி செடிக்கிடையே சென்று ஒரு தக்காளிக்கு கூட பழுதில்லாமல் தனது மோதிரத்தை எடுத்து வந்து விட்டார்.அது எப்படி.விடை தெரியாதவர்கள் ங்கொய்யாலே...தக்காளி..வெண்ணெய்..புண்ணாக்கு என்றெல்லாம் சாப்பிடும் பொருளால் வையாமல் கொஞ்சம் யோசித்து பதிலை சொன்னால் "கில்லாடி" "செம கில்லாடி"பட்டங்கள் வழங்கப்படும்.

அத்துடன்
கில்லாடி பட்டம் பெற்றவருக்கு லக்ஷரி ரிஸ்ட் வாட்சும்

செம கில்லாடி பட்டம் பெற்றவர்களுக்கு வைர நெக்லேஸும் பரிசாக வழங்கப்படும்.


அப்படீன்னு சொல்ல மாட்டேனே!

டிஸ்கி:பதிலுக்காக தயவு செய்து,அன்புகூர்ந்து,பொறுமையுடன் அடுத்த பதிவுவரை காத்திருப்பீர்களென நம்புகிறேன்.

பதில்களைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்.


82 comments:

ஜெய்லானி said...

அப்புறம் வரேன் :-)))

ஸாதிகா said...

ஐ ..வடை ஜெய்லானிக்கு..ஓட்டும் போட்டதால் கூடவே சட்னி..

athira said...

ஜெய்லானி said...
அப்புறம் வரேன் :-)))//// நானூஊஊஊஊஊஊஉம் அப்புறம் வரட்டே?

athira said...

ஸாதிகா said...
ஐ ..வடை ஜெய்லானிக்கு..ஓட்டும் போட்டதால் கூடவே சட்னி../// அப்போ எனக்கூஊஊஊஊஊ???

Dr.P.Kandaswamy said...

சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க, தலை வெடிக்கிற மாதிரி இருக்கு.

LK said...

பூசணிக்காய் அண்ட் பரங்கிக்காய் வெட்டி கீது போட்டு சூட்கேஸ்ல வச்சிருங்க..

மத்த கேள்விக்கு எங்க தல ஜெய் பதில் சொல்லுவர்

seemangani said...

முழு பூசணிக்காயும்,பரங்கிகாயும் அழகா போட்டோ பிடிச்ச்சு பிரேம் பண்ணி உள்ளே வச்சுடுவேன்....

asiya omar said...

வெரி சிம்பிள்,பதில்-1பூசணீக்காயை பத்தையாக போட்டு சூட் கேஸில் வைக்கணும்.
பதில்-2அப்படியே பரங்கிக்காயையும் பத்தைகளாக போட்டே வைக்கணும்.ஒரு
பதில்-4ஒரு தக்காளியை கூட சேதாரமில்லாம தானே எடுத்து வரணும்,மோதிரத்தோடு ஒரு தக்காளியை எடுத்து வந்தா.

ஸாதிகா said...

அதிஸ் என்னதிது..?நீங்களும் உங்கள் சகாவும் கேள்விகளைப்பார்த்ததும் இப்படி புறமுதுகு காட்டி ஓடுகின்றீர்கள்????கோடாரி பூஸாருக்கு இது நியாமா?கரெக்டா பதில் சொல்லுங்கோ..ரிஸ்ட் வாட்சும்,வைரநெக்லேசும் தர முடியாவிட்டாலும் சூடா வடை,சட்னியுடன் .கூடவே கமகமவென சாம்பாருடன் தருகின்றேன்.

ஸாதிகா said...

//சீக்கிரம் அடுத்த பதிவைப் போடுங்க, தலை வெடிக்கிற மாதிரி இருக்கு.//ஐயா ,சகோரரே,முதன் முதலில் என் கூட்டிற்கு வந்து இருக்கின்றீர்கள்.முதற்கண் என் மகிழ்ச்சியும்,நன்றியும்.உங்களுக்காக வெகு சீக்கிரமே அடுத்த பதிவைப்போட்டு விடுகின்றேன்.தொடர்ந்து வாருங்கள்.நன்றி.

ஸாதிகா said...

//பூசணிக்காய் அண்ட் பரங்கிக்காய் வெட்டி கீது போட்டு சூட்கேஸ்ல வச்சிருங்க..
//எல் கே ஐடியா மன்னனாக இருக்கின்றீர்களே.ஆனால் முழு பூசணியையும்,பறங்கியையும் முழுதாகவே சூட்கேஸினுள் வைக்கவேண்டும்.அதற்கு பதில் சொல்லுங்கள்.

ஸாதிகா said...

//முழு பூசணிக்காயும்,பரங்கிகாயும் அழகா போட்டோ பிடிச்ச்சு பிரேம் பண்ணி உள்ளே வச்சுடுவேன்...//ஹை..நினைச்சேன்.உங்கள் வாயில் இருந்து இப்படி ஒரு பதில் வருன்னு.சீமான் கனியா?கொக்கா?

ஸாதிகா said...

இல்லே ஆசியா தோழி.எல் கே வுக்கு கொடுத்த பதிலை பாருங்கள்.இன்னும் கொஞ்சம் யோசித்து கண்டுபிடியுங்கோ பார்க்கலாம்.

நாஸியா said...

எனக்கு வைர நெக்லஸ் வாணாம்! :(

Jaleela Kamal said...

இந்த மாதிரி எல்லாம் கேள்வி கேட்டா எப்படி பதில் சொல்வது , அதை எப்படி சமைக்கனுமுன்னு கேளுஙக் டக்குன்னு சொல்றேன்

ஜெய்லானி said...

@@@LK--//மத்த கேள்விக்கு எங்க தல ஜெய் பதில் சொல்லுவர் //

வாத்தியாரே இப்பிடியா மாட்டிவிடுவது... :-))

(1) ஸாதிகாக்கா ரொம்ப சிப்பிள் பூசனிகாயை மறைப்பதுதான் கன்செப்ட் ஓக்கே !! பூசணிகாய்க்கு பக்கத்தில சூட்கேஸை நிமிர்த்தி வச்சா அது வரவங்க கண்ணுக்கு தெரியாது. உள்ளே வைக்க சொன்னது நீங்க எங்களை குழப்ப சரியா

(2) அதே பதில் இங்கே வராது. ஏன்னு கேட்டா இது மறைப்பது இல்லை. உள்ளே வைப்பது . ஆனா அதே சூட்கேஸ்ன்னு நீங்க சொல்லலை (இந்த ) சோ.. இது கொஞ்சம் பெரிய சூட்கேஸ் ஈசியா உள்ளே போகும்.
முதல் கேள்விக்கு மக்கள் பயந்ததால் யாரும் இதை கேட்கமாட்டாங்கன்னு டிவிஸ்ட் கேள்வி இது சரியா ??


(3)காலி ஃபிளவர் அது காய் கறி லிஸ்டில் வராது பூ லிஸ்டில் வரும் . அதனால் அது போகலை சரியா ?

(4)//தள வென்ற தக்காளிகள் பழுத்து சந்தைக்கு போக தயாராக இருந்தன//

போகும்வழியில் உள்ள தக்காளியை அவர் பறித்து வைத்து விட்டு அழகாக மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஒரு தக்காளியும் சேதமாக வில்லை. தோட்டகாரருக்கும் பறிக்கும் கூலி மிச்சம் தாய்க்கும் சந்தோஷம் சரியா ?நாங்க சிங்கமுல்ல எப்படி?!! (நேத்து அர்ஜண்ட் ஆணி அதான் பதில் போடல )

நீங்களும் அல்வா தரேன்ன்னு ஏமாத்தக்கூடாது...

ஜெய்லானி said...

@@@ஸாதிகா--///அதிஸ் என்னதிது..?நீங்களும் உங்கள் சகாவும் கேள்விகளைப்பார்த்ததும் இப்படி புறமுதுகு காட்டி ஓடுகின்றீர்கள்???? //

ஹை..சீக்கிரம் நெக்லஸ் எடுங்க நேரம் ஆகுது...கொசுவை ஃபிரண்டு பிடிக்க தெரிஞ்ச் எனக்கு இதெல்லாம்...ஹி...ஹி..

ஜெய்லானி said...

@@@நாஸியா--//எனக்கு வைர நெக்லஸ் வாணாம்! :( //

நா வைர விருதே குடுக்கிற ஆள் . எனக்கு கிடச்சா அதை உங்களுக்கு தரேன் :( இதை இப்பிடி போடுங்க :-)))))) ஹி..ஹி..

ஜெய்லானி said...

//அப்படீன்னு சொல்ல மாட்டேனே!//

அச்சோ....நா இதை கவனிக்கலையே...
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

ஆஹா ஸாதிகா அக்கா பின்றீங்களே ( எதை கூடையாயா என்று கேட்கக்கூடாது.. அசத்துறீங்க ஓகேவா ). அக்கா 3வதுக்கு விடை ஊறுகாய். இது எப்படி இருக்கு?..

4வதுக்கு எதாவது ஒரு பெரிய குச்சியை வைத்து எடுக்கலாமா.. மோதிரத்தை போட்ட இடம் தெரிந்திருக்கும் அதனால் அந்தம்மா ஒரு பெரிய குச்சியை வைத்து எடுத்திருக்கலாம்.

முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்க முடியாது அப்படின்னு ஒரு பழமொழி உண்டு. பூசணிக்காயை சோத்துலேய்யே மறைக்கமுடியாது. அப்புறம் எப்படி சூட்கேஸில் மறைக்கமுடியும்?.. அதேமாதிரிதான் பரங்கிக்காயும்.. விடை சரியா அக்கா.

எதோ எனக்கு தெரிந்ததை சொல்லிருக்கேன். பார்த்துப்போட்டுக் கொடுங்க.

ஸாதிகா said...

//எனக்கு வைர நெக்லஸ் வாணாம்! :(//நாஸியா..பச்சப்புள்ளை என்ன இப்படி ஜகா வாங்கிடுச்சி????

ஸாதிகா said...

// அதை எப்படி சமைக்கனுமுன்னு கேளுஙக் டக்குன்னு சொல்றேன்// ஆ..ஜலி அப்படிப்போடுங்க...சமைக்க மட்டும் தான் எனக்கு தெரியும்,சமைக்க மட்டும்தான் எனக்கு தெரியும் என்று சைலண்டா கூப்பாடு போட்டு விட்டு டெக்னிகல் பதிவெல்லாம் போட்டு சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறிட்டு இருக்கீங்க.கொஞ்சூசூசூண்ண்ண்டு யோசிங்கப்பா.விடை கிடைத்து விடும்.

ஸாதிகா said...

ஜெய்லானி..எல்கே சார் மாட்டி விட்டதாலே அருமையாக ஆராய்ச்சி செய்து கிட்னியை...சாரி...முளையை நன்கு பயன்படுத்தி விடைகளை கொடுத்து இருக்கீங்க.நீங்க சொன்ன விடை சரியா?தவறா?நீங்க கில்லாடியா?செம கில்லாடியாங்கறது அடுத்த பதிவில் தெரிந்து விடும்.அதுவரை கொஞ்சூண்டு பொறுமை ப்ளீஸ்.//
நாங்க சிங்கமுல்ல எப்படி?!! // நீங்க சிங்கமேதான்.கொசுவை பிரண்டுபிடித்த சிங்கம்.//நீங்களும் அல்வா தரேன்ன்னு ஏமாத்தக்கூடாது..// கடைசியா போட்டு இருந்ததை பார்க்காமல் கேட்டுவிட்டீர்கள்.வேறொன்றும் இல்லை.சொன்னதை செய்யும் பரம்பரை நாங்க.வாட்சும்,நெக்லேசும் தருகிறேன்னுட்டு தரலேன்னா எப்படி? மேலும் மங்குனி சார்கள் மாதிரி பலர் கேஸ் போட்டுவிட்டார்கள் என்றால்.அதுதான் முஜாக்கிரதையா அப்படி ஒரு லைன்.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..சப்தம் வரப்படாது.வடையுடன்,சட்னி,சாம்பார் உண்டு ஜெய்லானிக்கு.

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அன்புள்ள ஸாதிகா அக்காவுக்கு, விடுகதையெல்லாம் ரொம்ப சூப்பரா இருக்கு..

4வதுக்கு ஒரு சதுரமுன்னு சொல்லிருக்கீங்க அதனால் அதனுடைய நீள்த்துக்கு பாதிதூரத்துக்கு ஒரு பெரிய குச்சியை நீட்டி எந்தபக்கம் எந்த இடத்தில் இருந்தும் எடுத்திடலாம். சரியா

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் தம்பி,//ஆஹா ஸாதிகா அக்கா பின்றீங்களே ( எதை கூடையாயா என்று கேட்கக்கூடாது.. அசத்துறீங்க ஓகேவா )..// அடடா..நீங்களும் கடிக்க ஆரம்பித்தாயிற்றா?எல்லாம் இந்த பதிவுலகம் படுத்தும் பாடு.//4வதுக்கு எதாவது ஒரு பெரிய குச்சியை வைத்து எடுக்கலாமா.. மோதிரத்தை போட்ட இடம் தெரிந்திருக்கும் அதனால் அந்தம்மா ஒரு பெரிய குச்சியை வைத்து எடுத்திருக்கலாம்.
// ஆஹா..எப்படி எல்லாம் யோசிக்கறீங்க ஸ்டார்ஜன் தம்பி.இந்த யோசிப்புக்கே அப்படியே வைர நெக்லேஸை தூக்கிக்கொடுத்துடலாம்.ஹ்ம்ம்..என்னசெய்ய நிஜ வைரநெக்லஸ் இல்லை.படம்தான் உள்ளது.//எதோ எனக்கு தெரிந்ததை சொல்லிருக்கேன். பார்த்துப்போட்டுக் கொடுங்க// இந்த வரிகளை பார்த்துட்டு ரொம்ப சிரித்துவிட்டேன்.நாங்கதான்(அதான் பெண்கள்) இப்படி விஷயத்தில் சூராதி சூரர்கள் என்று இறுமாந்து போய் இருந்தேன்.இந்த விஷயத்தில்..அதாங்க..ஏதாவது போட்டுக்கொடுங்க ன்னு கேட்கிற விஷயத்தில் எங்களை அடிச்சிக்க ஆளே இல்லேன்னு நினைச்சிட்டு இருந்ததை கவுத்திப்போட்டுட்டீங்களே.:-((
June 13, 2010 12:12 PM

அனு said...

ஹிஹி.. நானும் ட்ரை பண்றேன்..

1. முழு பூசனிக்காயையும் கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்..

2. பூசனிக்காயை வெளியில எடுத்து வச்சிட்டு பரங்கிக்காய கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்.. (பத்மினிக்கு பூசனிக்காய் தானே வேணும் [அ] பத்மினி தான் போயாச்சே [அ] இந்த கேள்வியில பத்மினி வரவேயில்லயே)

3. பரங்கிக்காய் மட்டும் போயிருக்காது.. அதைத் தான் சூட்கேஸுக்குள்ள அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோமே...ஹிஹி

4. அந்த அம்மாவுக்கு பிரச்சனையே இல்ல.. தக்காளிகளை எல்லாம் தான் கண்காட்சிக்கு அனுப்பி வச்சாச்சே.... ஸோ, செடிகளுக்கு நடுவே போய் ஈசியா எடுத்திருவாங்க..

என்னங்க.. என் விடைகள் கரெக்ட்டா?? ஒரே டென்ஷனா இருக்கு.. அந்த வைர நெக்லஸ் வேற என் கண்ணை விட்டு போக மாட்டேன்னுது..

நட்புடன் ஜமால் said...

கில்லாடிகெல்லாம் கில்லாடி நாங்க

போகட்டும் அடுத்த மக்களுக்கு வழிவிட்டு நிற்போம்

-------------------

எஸ்கேப் ஆவது எப்படிங்கிறதுல நாங்க கிங் கில்லாடி

ஸாதிகா said...

//போகட்டும் அடுத்த மக்களுக்கு வழிவிட்டு நிற்போம்//

அடாடடா..ஜமால் தம்பிக்கு என்ன ஒரு நல்ல மனசு என்று மெச்சியவாறு அடுத்த லைனை படித்தால் ...அவ்வ்வ்வ்...

//கில்லாடிகெல்லாம் கில்லாடி நாங்க// நான் ஒத்துக்கொள்கிறேன்.ஆமோதிக்கின்றேன்,சரிங்கறேன்.கரெக்ட்ங்கறேன்.சரியாங்களா தம்பி?

Dhosai--> said...

hi sadhika......
just simple.... i answered ur question.... ok...
the answer is
full poosanikaayayum waste pannama samachi poriyal vaithaal, porial size chinnadhagi vidum. so adhai suitcase'il vaithu vittu, adhae madhiri parangikkai then other fruits ellathayum samachi porial or kolambu vachi romba chinnadhagi vidum, so adhayum suite case'la vachi moodidalam...
( or )
oru photo pidichi ulla vachidalam...
2 nd answer is poosanikkai kankatchiku varala...
3rd answer is theriala..
then modhirathai edukuradhuku munnadi modhirathai eduka pora valiyil irukum ella thakkaliyayum vaerodu pirithu then last'a modhirathai eduthu vitu then palayabadi mannnukulla thakkaliyai vachitu vandhutanga...
is correnct? or not.?
tell me the answer correct'a thappa....
i'm waiting....

Dhosai--> said...

hi sadhika......
just simple.... i answered ur question.... ok...
the answer is
full poosanikaayayum waste pannama samachi poriyal vaithaal, porial size chinnadhagi vidum. so adhai suitcase'il vaithu vittu, adhae madhiri parangikkai then other fruits ellathayum samachi porial or kolambu vachi romba chinnadhagi vidum, so adhayum suite case'la vachi moodidalam...
( or )
oru photo pidichi ulla vachidalam...
2 nd answer is poosanikkai kankatchiku varala...
3rd answer is theriala..
then modhirathai edukuradhuku munnadi modhirathai eduka pora valiyil irukum ella thakkaliyayum vaerodu pirithu then last'a modhirathai eduthu vitu then palayabadi mannnukulla thakkaliyai vachitu vandhutanga...
is correnct? or not.?
tell me the answer correct'a thappa....
i'm waiting....

Dhosai--> said...

hi sadhika......
just simple.... i answered ur question.... ok...
the answer is
full poosanikaayayum waste pannama samachi poriyal vaithaal, porial size chinnadhagi vidum. so adhai suitcase'il vaithu vittu, adhae madhiri parangikkai then other fruits ellathayum samachi porial or kolambu vachi romba chinnadhagi vidum, so adhayum suite case'la vachi moodidalam...
( or )
oru photo pidichi ulla vachidalam...
2 nd answer is poosanikkai kankatchiku varala...
3rd answer is theriala..
then modhirathai edukuradhuku munnadi modhirathai eduka pora valiyil irukum ella thakkaliyayum vaerodu pirithu then last'a modhirathai eduthu vitu then palayabadi mannnukulla thakkaliyai vachitu vandhutanga...
is correnct? or not.?
tell me the answer correct'a thappa....
i'm waiting....

அனு said...

நான் போட்ட கமெண்ட்-ட காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?? :-(

கமெண்ட்-டுக்கு backup எடுத்து வைக்கிற பழக்கம் வேற எனக்கு இல்ல

athira said...

ஆ.... நானும் ஏதோ கஸ்டமான கேள்விகளாக்கும் எனப் பயந்திட்டேன், ரொம்ப ஈசி yeah!!!

நம்பர் வண்: வெட்டப்பூடாது எனச் சொல்லவில்லையே, குட்டிகுட்டியா வெட்டி வைத்திடலாம்.(இப்பூடி ரைப் பண்ணிட்டு வந்து பார்த்தால், அது அப்படி இல்லை எனச் சொல்லிட்டீங்களே...

நம்பர் ரூ: பறங்கிக்காய் என்றால் என்ன காய்???

நம்பர் த்ரீ: ஆ... சந்தைக்குப் போகாத காய்... தேங்காய்.... ஸாதிகா அக்கா வைறாஆஆஆஆஆ நெக்லசை சீக்கிரம் குடுங்கோ..... நான் பிளேனில வாறேன் பத்திரமாக எடுத்துவர.

எதுக்கு ஜெய்..லானி நெக்லஸ் கேட்கிறார்... அது மகோஸ் தான் போடுறது. சகோஸ் நெக்லஸ் கட்டப்பூடாதெனச் சொல்லி வையுங்கோ ஸாதிகா அக்கா.

கிட்னி இன்று சண்டே:) என்பதால் கொஞ்சம் ரெஸ்ட் பண்ணுது இன்னும் ஐடியா வந்தால் வருவேன்.

கும்மி said...

1. சூட்கேசைத் 'திறந்து' பூசணிக்காயை வைக்கவேண்டும். வைத்தபின்பு சூட்கேசைத் திருப்பி வைத்து பூசணியை மறைத்து விட வேண்டும்
2. பூசணிக்காயை 'வெளியே எடுத்துவிட்டு' பரங்கிக்காயை வைக்க வேண்டும்.
3. பரங்கிக்காய் போகவில்லை. அதுதான் சூட்கேசுக்குள் இருக்கிறதே

கடைசி கேள்விக்கும் அறிவு பூர்வமான பதில் கெடையாது என்று தெரிகின்றது.

அக்பர் said...

//கில்லாடிகெல்லாம் கில்லாடி நாங்க

போகட்டும் அடுத்த மக்களுக்கு வழிவிட்டு நிற்போம்//

அண்ணன் ஜமாலை வழிமொழிகிறேன்.(இங்கென்ன மீட்டிங்க நடக்குன்னு கேட்கப்படாது)

//எஸ்கேப் ஆவது எப்படிங்கிறதுல நாங்க கிங் கில்லாடி//

அதானே.

அனேகமாக ஜெயிலானி சொல்வது சரி என்று நினைக்கிறேன்.

மூனாவதுக்கு ஸ்டார்ஜன்னின் விடை சரிதானே.

kavisiva said...

என் ராசிக்கு வைரம் போட்டுக்கக் கூடாதாம். கையால கூட தொடக்கூடாதாம் அதனால நான் பதில் சொல்லப்போய் நீங்க எனக்கு வைர நெக்லசை தூக்கிக் கொடுத்துட்டீங்கன்னா... அப்புறம் என்னாவறது :(

(சே பதில் தெரியலங்கரத எப்படீல்லாம் மழுப்ப வேண்டியிருக்கு கவி உனக்கு நேரமே சரியில்ல 'எஸ்' ஆயிடு ...விடு ஜூட்)

ஜெய்லானி said...

@@@ athira--//எதுக்கு ஜெய்..லானி நெக்லஸ் கேட்கிறார்... அது மகோஸ் தான் போடுறது. சகோஸ் நெக்லஸ் கட்டப்பூடாதெனச் சொல்லி வையுங்கோ ஸாதிகா அக்கா.//

அடப்பாவமே !! அப்ப புடவை கேட்டா நா போட்டுகிறத்துக்கா ? !! மேல ஒரு பதில் போட்டிருக்கேன் அதெல்லாம் படிக்கிறதில்லையா ? இருங்க நா அங்க வந்து பதில தரேன்..

Dhosai--> said...

idhellam romba too much ya...... i dnt like.. k neeye vachiko... ok bye

ஸாதிகா said...

Dhosai-->பதில் அளித்து விட்டு கரெக்டா தப்பா என்று கேட்டு இருக்கின்றீர்கள்.இதோ..நாளைக்கே சொல்லி விடுகிறேன்.அதுவரை கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்.

ஸாதிகா said...

அனு //நான் போட்ட கமெண்ட்-ட காக்கா தூக்கிட்டு போயிடுச்சா?? :-(// கமெண்ட்டை காக்கா கூட தூக்கிட்டு போகுமா?காக்காவுக்கெல்லாம் காவு கொடுத்துட்டு இருக்க மாட்டேன் அனு.என் கிட்டே உங்கள் கமெண்ட் பத்திரமாக உள்ளது.கொஞ்சம் பொறுங்கோ.

Dhosai--> said...

so correct'a.... ok ok.. thanks bye

ஸாதிகா said...

//கிட்னி இன்று சண்டே:) என்பதால் கொஞ்சம் ரெஸ்ட் பண்ணுது இன்னும் ஐடியா வந்தால் வருவேன்// அதீஸ் ரெஸ்ட் எடுத்துக்கொண்டே யோசித்ததால்தான் இப்படி பதில் வந்து விட்டது.ஒகே..உங்கள் பதில் சரியா தவறா என்று பொறுத்து இருந்து பாருங்க.

ஸாதிகா said...

ஹலோ அக்பர்..நீங்கள் எல்லாம் கிங் கில்லாடிக்கு தம்பி.நான் ஆமோதிக்கின்றேன்.எஸ்கேப் ஆவது எப்படி என்று கிளாஸ் எடுத்தால் சொல்லுங்கப்பூ.நான் முதல் ஸ்டூடண்டா சேர்ந்துக்கறேன்.

ஸாதிகா said...

//என் ராசிக்கு வைரம் போட்டுக்கக் கூடாதாம். கையால கூட தொடக்கூடாதாம் அதனால நான் பதில் சொல்லப்போய் நீங்க எனக்கு வைர நெக்லசை தூக்கிக் கொடுத்துட்டீங்கன்னா... அப்புறம் என்னாவறது :(// அடடா...கவி ரொம்ப தேறிட்டீங்க...:-)

ஸாதிகா said...

Dhosai-->//idhellam romba too much ya...... i dnt like.. k neeye vachiko... ok bye// ஒகே சொல்லிவிட்டீர்கள் அல்லவா?நானே வைத்துக்கொள்கிறேன் ஒகேவா?

அனு said...

ஹிஹி.. நானும் கொஞ்சம் கரெக்ட்-டான் பதிலை சொல்லிட்டேன் போல இருக்கு.. முழு பூசனிக்காயையும் உள்ள வைக்கனும்னு சொன்னத கவனிக்கல.. ஸோ, first ரெண்டு questions-க்கு மாற்றி அமைத்த பதில்கள்..

1. சூட்கேஸ திறக்கனும்.. பூசனிக்காய உள்ள வைக்கனும்.. சூட்கேஸ மூடனும்..

2.சூட்கேஸ திறக்கனும்.. பூசனிக்காய வெளிய எடுக்கனும்.. பரங்கிக்காய உள்ள வைக்கனும்.. சூட்கேஸ மூடனும்..

கரெக்ட்-டா? சின்ன வயசுல, யானை + ஒட்டகத்த fridge-குள்ள அடைக்கனும்னு ஒரு புதிர் கேள்விப்பட்டிருக்கேன்.. அதோட answerஅ அப்படியே edit பண்ணி மேலே போட்டுட்டேன்.. ஹிஹி..

கலாநேசன் said...

1) சூட்கேஸ் சின்ன சைஸ் தான். ஆனா பூசணிக்காயை விட பெரியது.

2 ) பூசணிக்காயை வெளியே எடுத்துட்டு பறங்கிக்காயை உள்ளே வைக்கலாம்.

3 )பறங்கிக்காய். (அத தான் சூட்கேஸ் உள்ள வச்சிட்டிங்களே )

4 )அந்த அம்மாவும் நெருக்கமாக பயிரிடப்பட்ட தக்காளி செடிக்கிடையே சென்று ஒரு தக்காளிக்கு கூட பழுதில்லாமல் தனது மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஏன்னா வெறும் செடி மட்டும் தான் இருந்தது. எல்லா பழங்களும் கண்காட்சிக்கு போயிடுச்சு.

நான் அதி புத்திசாலின்னு சொன்ன நீங்களும் தான்.

இல்லேன்னு சொன்னா..............

SUFFIX said...

1) முதல்ல சூட்கேச திறந்து தான் வைக்கணும்.
2) மறுபடியும் திறந்து வைக்கணும்.
3) பூசணிக்காய் தானே, அப்போ பரங்கிக் காய் என்னாச்சு?

4) சந்தைக்குப்போக தயாரான தக்காளிகள் அதனால அந்த அம்மாவே, தக்காளியை பறித்து கூடையில் போட்டுட்டு மோதிரத்தை எடுத்து வந்திருப்பாங்க

ஸ்ஸ்ஸ்..ப்பா

Software Engineer said...

சார் - நான் ஒரு புது பதிவர்.தயவு செய்து என்னுடைய வலைபக்கத்துக்கு ஒரு முறை வருகை தந்து ஒரு கமெண்ட் போடுங்க.
http://kaniporikanavugal.blogspot.com/ நன்றி!

Riyas said...

என்னது கேள்வியா...? நான் பரிட்சையில கூட இவ்வளவு கேள்விக்கு பதில் எழுதல்ல.. 3 வது கேள்விக்கு விடை- ஸாதிகாய். சரியா..?

vanathy said...

அக்கா, என் கமன்ட் யையும் காணவில்லை. அனுவின் கமென்டை ஐ தூக்கிய காக்கா என்னுடையதையும் தூக்கிட்டுதோ?????

Mrs.Menagasathia said...

அக்கா என் ராச்சிக்கும் வைரம் ஆகாது...சோ நான் ஒதுங்கி கொள்கிறேன்...

அமைதிச்சாரல் said...

முதலில் சூட்கேஸை திறந்து அதுல இருக்கிறதையெல்லாம் வெளிய எடுத்து வெச்சுட்டு பூசணிக்காயை வைக்கணும்.

ரெண்டாவது பூசணிக்காயை வெளிய எடுத்துட்டு பறங்கிக்காயை வைக்கணும்.

கண்காட்சிக்கு போகாத காய் பறங்கிக்காய்.. ஏன்னா, அது சூட்கேசுக்குள்ள இல்ல இருக்கு.

தக்காளிக்கு சேதம் வராது. ஏன்னா.. அதெல்லாம் கண்காட்சிக்கு போயிடுச்சு.

எப்பூடீ... பரிசை சட்னு அனுப்பி வையுங்க.

Adimai-Pandian said...

Hi,

1. Suitcase thiradu poosanikai vaikkanum.

2. Suitcase la irundu Poosanikai veliaya eduthutu parangikai ulla vaikkanum....

3. Parangikai dan pogala... becoz adan suitcase ulla matikiche!!!

4. adana pala peru sollitangale... pinna namba edukku repeat pannitu..... Thanks!!!!

Adimai-Pandian said...

Hi,

1. Suitcase thiradu poosanikai vaikkanum.

2. Suitcase la irundu Poosanikai veliaya eduthutu parangikai ulla vaikkanum....

3. Parangikai dan pogala... becoz adan suitcase ulla matikiche!!!

4. adana pala peru sollitangale... pinna namba edukku repeat pannitu..... Thanks!!!!

ப்ரியமுடன்...வசந்த் said...

கலக்கல் பின்னூட்டங்கள்...

spicy said...

1. கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வைக்க‌ணும்
2. இதுவும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுத்தான் வைக்க‌ணும், ஆனால் பூசணிக்காயை எடுத்துட்டு அந்த‌ செவசெவன்னு இருக்கிற‌ குண்டு பறங்கிக்காயை வைக்க‌ணும்.
3. காலிப்ள‌வ‌ர்னு நினைக்கிறேன், ச‌ரியா???
4. திரு. ஜெய்லானி சொன்ன‌துதான் நானும், தக்காளியை அவர் பறித்து வைத்து விட்டு அவ‌ருடைய‌ மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஒரு தக்காளியும் சேதமாக வில்லை. தோட்டகாரருக்கும் பறிக்கும் கூலி மிச்சம்!

அதெல்லாம் என‌க்கு நெக்ல‌ஸ்லாம் வேணாம் ஒரு ஓல்ட் ம‌ன்க் குவார்ட்ட‌ர் ம‌ட்டும் போதும், அதுவும் நீங்க‌ விருப்ப‌ப்ப‌ட்டா சைடு டிஷ்ஷோட‌?

spicy said...

1. கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வைக்க‌ணும்
2. இதுவும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுத்தான் வைக்க‌ணும், ஆனால் பூசணிக்காயை எடுத்துட்டு அந்த‌ செவசெவன்னு இருக்கிற‌ குண்டு பறங்கிக்காயை வைக்க‌ணும்.
3. காலிப்ள‌வ‌ர்னு நினைக்கிறேன், ச‌ரியா???
4. திரு. ஜெய்லானி சொன்ன‌துதான் நானும், தக்காளியை அவர் பறித்து வைத்து விட்டு அவ‌ருடைய‌ மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஒரு தக்காளியும் சேதமாக வில்லை. தோட்டகாரருக்கும் பறிக்கும் கூலி மிச்சம்!

அதெல்லாம் என‌க்கு நெக்ல‌ஸ்லாம் வேணாம் ஒரு ஓல்ட் ம‌ன்க் குவார்ட்ட‌ர் ம‌ட்டும் போதும், அதுவும் நீங்க‌ விருப்ப‌ப்ப‌ட்டா சைடு டிஷ்ஷோட‌?

spicy said...

1. கொஞ்ச‌ம் க‌ஷ்ட‌ப்ப‌ட்டு வைக்க‌ணும்
2. இதுவும் க‌ஷ்ட‌ப்ப‌ட்டுத்தான் வைக்க‌ணும், ஆனால் பூசணிக்காயை எடுத்துட்டு அந்த‌ செவசெவன்னு இருக்கிற‌ குண்டு பறங்கிக்காயை வைக்க‌ணும்.
3. காலிப்ள‌வ‌ர்னு நினைக்கிறேன், ச‌ரியா???
4. திரு. ஜெய்லானி சொன்ன‌துதான் நானும், தக்காளியை அவர் பறித்து வைத்து விட்டு அவ‌ருடைய‌ மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஒரு தக்காளியும் சேதமாக வில்லை. தோட்டகாரருக்கும் பறிக்கும் கூலி மிச்சம்!

அதெல்லாம் என‌க்கு நெக்ல‌ஸ்லாம் வேணாம் ஒரு ஓல்ட் ம‌ன்க் குவார்ட்ட‌ர் ம‌ட்டும் போதும், அதுவும் நீங்க‌ விருப்ப‌ப்ப‌ட்டா சைடு டிஷ்ஷோட‌?

Chitra said...

Super..... I liked the comments too... :-)

அக்பர் said...

நண்பர் டாக்டர் சேக்தாவூதுவிற்கு கூகிள் சரியாக வேலை செய்யவில்லையாம். விடையை போனில் சொன்னார். அது இங்கு.

1. பூசணிக்காய் பத்தைகளை சூட்கேசுக்குள் அடுக்கிவைக்க வேண்டும்.

2. பூசணிக்காயை எடுத்து விட்டு பரங்கிக்காய் பத்தைகளை வைக்க வேண்டும்.

3. பரங்கிக்காய் மட்டும் போக முடியாது. ஏன்னா அதுதான் சூட்கேசுக்குள்ளே இருக்கே.

4. தக்காளிதான் சந்தைக்கு போக தயாரா இருக்கே. தக்காளி செடியினூடே சென்றால் பறித்து வைக்கப்பட்ட தக்காளிகளுக்கு எந்த பாதிப்பும் வராது.

asiya omar said...

ஸாதிகா திரும்பவும் முதல் பதில் அது சின்ன சூட்கேஸாக இருந்தாலும் எக்ஸ்பேண்டபுல்,அதனால் அதனை விரித்து முழுப்பூசணிக்கயை வைத்து விடலாம்.

2.அப்படியே பரங்கிக்காயையும் வைத்து விடலாம்.

3.செடிக்கு இடையே பாத்தி இருந்ததால் அதில் சென்று மோதிரத்தை எடுத்து வந்து விட்டார்.

4.அந்த காயை அனுப்ப மறந்துட்டாங்க.அதனால் அது மாநாடு போகலை.

இளம் தூயவன் said...

காய்கறி எல்லாம் நல்லா இருக்கே , என்னது போட்டியா? தலைவா.... (ஜெய்லானி) மங்குனியிடம் சொல்லி அவையை கூட்டுங்கள்.

seemangani said...

யக்கோவ்வ்வ்...மண்டை காயுது சிக்கிரம் பதில போடுங்க...

seemangani said...

யக்கோவ்வ்வ்...மண்டை காயுது சிக்கிரம் பதில போடுங்க...

ஸாதிகா said...

அனு பாஸாயிட்டீங்க.

ஸாதிகா said...

கலா நேசன் நீங்களுமா?

ஸாதிகா said...

தம்பி ஷஃபி..கொஞ்சம் கிட்ட வந்துட்டீங்க..

ஸாதிகா said...

//. 3 வது கேள்விக்கு விடை- ஸாதிகாய். சரியா..?// என்னங்க ரியாஸ் என்னை காயோடு காயா செர்த்து விட்டீர்களே?இது நியாமா?:-)

ஸாதிகா said...

வானதி,உங்கள் கமண்ட் பத்திரமாக உள்ளது.

ஸாதிகா said...

மேனகா,உங்கள் ராசிக்கும் வைரம் ஒத்துக்காதா?ஒகே அடுத்த போட்டியில் பிளாட்டின நெக்லேஸ் பரிசாக அறிவித்து விடுவோம்.

ஸாதிகா said...

அமைதிசாரல்.//எப்பூடீ... பரிசை சட்னு அனுப்பி வையுங்க.// நீங்கள் பதிவின் கீழ் ஸ்க்ரால் பண்ணிப்பார்க்கவில்லையா?வாழ்த்துக்கள்

ஸாதிகா said...

அடிமைப்பாண்டியன்,நீங்களும் பாஸ்

ஸாதிகா said...

//கலக்கல் பின்னூட்டங்கள்...// பதிவைப்படிக்காமல் பின்னூட்டம் மட்டுமே படித்தீர்களா வசந்த்?

ஸாதிகா said...

ஸ்பைஸி..முதல் இரண்டும் சரி.

ஸாதிகா said...

சித்ரா,ரொம்ப நன்ரி சித்ரா.

ஸாதிகா said...

அக்பர்.உங்கள் நண்பர் ஷேக் தாவூத் சரியாகத்தான் யூகித்து இருக்கின்றார்.வாழ்த்துக்களை சொல்லிவிடுங்கள்.

ஸாதிகா said...

ஆசியா தோழி நீங்களும் கிட்ட கிட்ட வந்துட்டீங்க.நன்றி.

ஸாதிகா said...

//காய்கறி எல்லாம் நல்லா இருக்கே , என்னது போட்டியா? தலைவா.... (ஜெய்லானி) மங்குனியிடம் சொல்லி அவையை கூட்டுங்கள்// இளம் தூயவன் மங்குனியாரைத்தான் ஆளையே காணோம்.செம்மொழி மாநாட்டிற்கு முன்பதாவே சென்று விட்டாரோ என்னவோ.

ஸாதிகா said...

//யக்கோவ்வ்வ்...மண்டை காயுது சிக்கிரம் பதில போடுங்க...//சீமான் கனி இப்ப மண்டை எப்படி இருக்கு?

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...

நான் இன்னும் விடைகளைப் பார்க்கலா..(அட சத்தியமா.. ).. இனிமே தான் பாக்கப் போறேன்... ஆனா எனக்கு என்னமோ suffix சொன்னது சரியாப் படுது..

ஸாதிகா said...

பிரகாஷ் (எ) சாமக்கோடங்கி ,இப்ப விடைகளைப்பார்த்துட்டீங்களா?