June 11, 2010

அஞ்சறைப்பெட்டி - 2

சென்னையின் கிளைமேட்டே குளு குளு என ஆகிப்போய் விட்டது.கொளுத்தும் கத்திரிவெயிலால் அவதிப்பட்டுவந்த சென்னை வாழ் மக்களுக்கு இந்த பூமழைத்தூவும் தென் மேற்கு பருவமழையின் வரவு ஆனந்தமாக உள்ளது.ரம்யமான சூழ்நிலை மனதிற்கு உற்சாகமாக உள்ளது.அழகான மழை சீஸன் ஆரம்பமாகி விட்டாலும் மழையைக்கண்டதும் மனித மனம் மகிழ்வது போல் இந்த கொசுக்களும் மகிழ்வுடன் படை எடுக்க ஆரம்பித்து விடுமே என்பதை நினைத்தால் மனம் கிலி கொள்கின்றது.சென்ற வருடம் தென் மேற்கு பருவ மழை பொய்த்து விட்டதால் சென்னை நகரில் ஆங்காங்கு தண்ணீர் லாரிகளின் தலை காணப்பட்டது.இந்த வருடன் அவ்விதம் இருக்காது என்று நம்புவோம்.


சென்ற வாரம் அமிஞ்சிகரைக்கு ஒரு கடைக்கு சென்று இருந்தேன். கைபேசியில் ஒருவர் பேசும் பேச்சு செவியில் விழும் பொழுது ஏதோ மேடை பேச்சைக்கேட்பது போல் இருந்தது.இத்தனை நாவன்மைக்குறியவர் யாராக இருக்கும் என நிமிர்ந்து பார்த்தால் அன்னாள் பெரியார்தாசனும்,இன்னாள் அப்துல்லாவும் தன் மனைவியாருடன் நின்றிருந்தார்.மீடியாக்களிலும்,வலையுலகிலும் பரபரப்பாக பேசபட்டவர்.நீண்ட நேரம் எங்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருந்தார்."அப்போதய பெரியார் தாசனுக்கும்,இப்போதைய அப்துல்லாவிற்கு என்ன வித்தியாசத்தை உணர்கின்றீர்கள் குடும்ப ரீதியாக" என்று அவரது மனைவியிடம் கேட்ட பொழுது "செயின் ஸ்மோக்கரான இவர் நான் ஸ்மோக்கர் ஆகி விட்டார்" என்று சிரித்தார்.பெரியார் தாசனிடம் இதே கேள்வியைக்கேட்ட பொழுது அவர் தன் மனைவி வாசுகி அம்மையாரை சுட்டிக்காட்டி"இவர் என்னை ஏற்றுக்கொண்டார்"என்று பெரும் சிரிப்புடன் சொன்னார்.சுவாரஸ்யமாக பல நிமிடங்கள் அந்த ஆதர்ஷ தம்பதிகளுடன் செலவிட்டது மனதிற்கு மகிழ்வாக இருந்தது.
சைதை துரைசாமியின் மனிதநேயம் அறக்கட்டளை சார்பில் கடந்த 2006-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். மற்றும் ஐ.பி.எஸ். இலவச பயிற்சி மையம் சென்னையில் அவரது இல்லத்தின் அருகிலேயே தொடங்கப்பட்டது. முதல் ஆண்டிலேயே இந்த மையத்தில் பயிற்சி பெற்ற மாணவர்களில் 12 பேர் ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்றனர். கடந்த ஆண்டு 25 பேர் வெற்றி பெற்றனர். இதைத்தொடர்ந்து சென்னை அண்ணாநகரிலும் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது.கரங்களில் பைலுடன் கலெக்டர் கனவுகளுடன் மாணவமாணவிகள் அணிவகுத்து செல்வதைப்பார்க்கும் பொழுது மனம் மகிழ்வாக உள்ளது.அரிய சேவையை செய்து வரும் சைதை துரைசாமி அவர்கள் நிச்சயம் பாராட்டுக்குறியவர்.வளர்க அவர் நற்தொண்டு.

சிங்காரச்சென்னை சிங்காரச்சென்னை என்று மூச்சுக்கு முன்னூறு முறை முழங்கும் வல்லவர்கள் மாநகரப்பேருந்தை பார்த்து இருக்கமாட்டார்கள்.பேருந்தின் வெளிப்புறத்தில் ஒரு இஞ்சுக்கு தூசி.போதாதற்கு அஷ்டகோணல் உருவத்துடன் சர்ரென எதிரே வருபவர்களுக்கு எமனாக சீறிப்பாய்கின்றது.ஒரு இஞ்ச் படிந்திருக்கும் தூசி ஒன்றரை இஞ்ச் ஆகி சிங்காரச்சென்னையை மேலும் மேலும் அசிங்கார சென்னையாக மாற்றி வருவதற்குள் தகுந்த நடவடிக்கை எடுப்பார்களா?
சென்னை டிராஃபிக்கை நினைத்தால் வெளியில் கிளம்பவே எரிச்சலாக உள்ளது.அதிலும் சிக்னல் விளக்கு இல்லாத இடங்களில் கேட்கவே வேண்டாம்.டிராஃபிக்கை கட்டுப்படுத்தும் போலீஸ் வீட்டுக்கவலையோ என்னவோ ஒரு புறத்தை மறந்தே விடுகின்றார்.கையில் கட்டி இருக்கும் கைக்கடிகாரத்தையும் பார்ப்பதே இல்லை.அந்த புறகணிக்கபட்ட பக்கத்து வாகன ஓட்டிகள் ஹாரன்களை அலற விட்டு நின்று கொண்டிருக்கும் டிராஃபிக் போலீஸுக்கு ஞாபகப்படுத்த வேண்டி உள்ளது.இப்படி மாதிரி ஒரு டிராஃபிக்கில் மாட்டிக்கொண்டு அவஸ்த்தைப்பட்டுக்கொண்டு எரிச்சல் முகத்தோடு இருந்த பொழுது அருகில் அமர்ந்திருந்த என் மகன் பேப்பரில் ராக்கெட் செய்ய ஆரம்பித்தார்.நான் வரும் எரிச்சலை கட்டுப்படுத்திக்கொண்டு "ஏன் இப்ப பேப்பர் ராக்கெட்" என்று கேட்ட பொழுது "ரோட்டிலேயே நின்று கொண்டே தூங்கிக்கொண்டிருக்கும் அந்த போலீஸ் காரரை தட்டி எழுப்பத்தான்" என்கின்றார்.

34 comments:

ஜெய்லானி said...

//மழையைக்கண்டதும் மனித மனம் மகிழ்வது போல் இந்த கொசுக்களும் மகிழ்வுடன் படை எடுக்க ஆரம்பித்து விடுமே என்பதை நினைத்தால் மனம் கிலி கொள்கின்றது//

ஐயோ பாவம் நீங்க!! இதுக்குதான் நா ஒரு பதிவே போட்டேன் . கொசு வளர்பது எப்படின்னு சரியா படிக்கலையா ?..

ஜெய்லானி said...

அஞ்சறைப்பெட்டி - கலக்கல்

asiya omar said...

அஞ்சறைப்பெட்டி ரொம்ப நாளைக்கு அப்புறம் திறந்தாலும் அருமையான செய்திகள்.பெரியார் தாசன் சந்திப்பு மகிழ்ச்சி.நிறைய ஏற்பாடு செய்து அவரை சந்திக்க காத்திருக்கும் மக்கள் மத்தியில்,தீனின் சிந்தனையில் உள்ள உங்களோடு அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு ஆச்சரியமானது..

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

அருமையான அலசல் ஸாதிகா அக்கா. பெரியார் தாசன் இஸ்லாத்துக்கு மாறியதும் எவ்வளவு விமர்சனங்கள். நல்ல பகிர்வுக்கா.

Chitra said...

பல விஷயங்களின் நல்ல தொகுப்பு.

seemangani said...

சென்னையின் நிலைமை கண்டிப்பாய் எரிச்சளுட்டதான் செய்கிறது...ரெம்ப நாளைக்கு அப்பறம் பல்சுவை அஞ்சறைப்பெட்டி அருமை அக்கா..

மகி said...

எனக்கு சென்னைன்னாலே அலர்ஜி ஸாதிகாக்கா! (சென்னைக்காரங்க படித்தா கோவப் படுவாங்க!:) )
என்னன்னு தெரில,அந்த கிளைமேட் எனக்கு ஒத்துவரதே இல்லை.விசா ஸ்டாம்பிங்-கு ஒரு நாள் மட்டும் கரெக்ட்டா வந்துட்டு கம்பி நீட்டிட்டு இருக்கேன்.
செம்மொழி மாநாட்டால எங்க ஊரும் கிட்டத்தட்டா சென்னை ஆகிட்டு வரதா கேள்விப்படறேன்.
தகவல் தொகுப்பு நன்றாக இருக்கிறது!

/ஐயோ பாவம் நீங்க!! இதுக்குதான் நா ஒரு பதிவே போட்டேன் . கொசு வளர்பது எப்படின்னு சரியா படிக்கலையா ?../ எ.கொ.ஜெ.அ.இ? இன்னும் என்னென்ன வளர்க்கறது பத்தி போட்டிருக்கீங்க? இதோ,இப்பவே வரேன் உங்க ப்ளாக்-க்கு! :)

Mrs.Menagasathia said...

நிறைய தகவல்களுடன் அஞ்சறைப்பெடி கலக்கல் அக்கா....

athira said...

ஆ............. மீண்டும் இன்னொரு புரட்சியோடு ஸாதிகா அக்கா. சென்னை ரபிக் பார்க்க என்னவோ செய்யுது.. இப்படி ரபிக்கெனில் குறிப்பிட்ட நேரத்துக்கு நினைத்தபடி போய்விடலாமோ?

ஏன் கன இடங்களில் பேப்பிள் கலராகவே தெரியுது? சென்னை ரபிக் படத்தில்?

உங்களுக்காக நானும் வீதிகள், வீடுகள் எனப் படமெடுத்துள்ளேன் பார்ப்போம் முடிந்தால் போடுகிறேன்.

பின்குறிப்பு:
ஸாதிகா அக்கா!!! உந்தக்கொசுவைப்பற்றி இனியும் கதைத்தால் கோடாரிப்பூசார் புறப்பட்டுவிடுவார்:) கோடாரியோடு, என ஜெய்..லானிக்குச் சொல்லுங்கோ

Riyas said...

அருமையாக சொன்னீர்கள்..

முன்னாள் பெரியார்தாசன் இன்னாள் அப்துல்லா கலக்கல் பகிர்வு..

சென்னையில் மழையா..? நம்பவே முடியல்ல.

ஸாதிகா said...

முதல் வருகைக்கு நன்றி ஜெய்லானி.நீங்கள் போட்ட் கொசு பதிவு என் கண்ணில் மாட்டாமலே போய் விட்டது.ரொம்ப சின்ன குட்டியூண்டு ஐட்டம் அதானாஇருக்கும்.இப்ப பார்த்துட்டேன்.சென்னையின் இக்கால அக்கால முக்கால பிரச்சினையை இப்படி சுலபமான முறையில் தீர்த்து வைத்த பிரமுகர் ஜெய்லானிக்கு நம் சுகாதாரத்துறை அமைச்சர் வீடு தேடி வந்து பொன்னாடை போர்த்துவர்,வீட்டை திறந்து வைத்துக்கொண்டு ரெடியாக இருங்கள் ஜெய்லானி.

ஸாதிகா said...

தோழி ஆசியா உங்கள் அன்பு பின்னூட்டம் மகிழ்வை தந்தது.மிக்க நன்றி.

ஸாதிகா said...

ஸ்டார்ஜன் தொடர் வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சித்ரா,வருகைக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//சென்னையின் நிலைமை கண்டிப்பாய் எரிச்சளுட்டதான் செய்கிறது.// அதுதான் தப்பித்து சவுதி சென்று விட்டீர்களோ?:-)கருத்துக்கு மிக்கநன்றீ சீமான்கனி

ஸாதிகா said...

//எனக்கு சென்னைன்னாலே அலர்ஜி ஸாதிகாக்கா! //:-( மகி என்னப்பா இப்படி சொல்லிட்டீங்க.எப்படி இருந்தாலும் சென்னையை எனக்கு ரொம்ப பிடிக்கும்.இப்படி ஒரு நாள் அரைநாள் எல்லாம் தலையைக்காட்டிவிட்டு அபிப்ராயத்தை சொல்லக்கூடாது.ஒரு வாரம் பொறுமையா இருங்கோ.அப்புறம் சென்னையை பிரிய மனதே வராது.கருத்துக்கு மிக்க நன்றி மகி

ஸாதிகா said...

//நிறைய தகவல்களுடன் அஞ்சறைப்பெடி கலக்கல் அக்கா..//கருத்துக்கு மிக்க நன்றி மேனகா.

ஸாதிகா said...

//ஆ............. மீண்டும் இன்னொரு புரட்சியோடு ஸாதிகா அக்கா//இடப்புறம்,வலப்புறம் ,முன்னே பின்னே இப்படி திரும்பி,திரும்பி பார்த்து கழுத்து சுளுக்கிக்கொண்டதுதான் மிச்சம்.புரட்சியைக்காணோம்.அதீஸின் பதிவில் மிரட்சிதான் ஏற்பட்டு விட்டது.

//இப்படி ரபிக்கெனில் குறிப்பிட்ட நேரத்துக்கு நினைத்தபடி போய்விடலாமோ?// போய்விடலாம் தான்.நடந்து போனால்.ஆனால் இந்த ஊர் இருசக்கர,மூன்று சக்கர வாகன ஓட்டிகள் செம கில்லாடிகள்.எப்படியாவது பறந்து,நீந்தி,தவழ்ந்து குறிப்பிட்ட நேரம் போய் விடுவார்கள்.

//ஏன் கன இடங்களில் பேப்பிள் கலராகவே தெரியுது? சென்னை ரபிக் படத்தில்?// இந்த கலர் இந்த ஊர்காரவுகளுக்கு ரொம்ப பிடிக்குமாக்கும்.வேணுமானால் காரணத்தை கேட்டு சொல்லுகின்றேன்.சரீங்களா?

//உங்களுக்காக நானும் வீதிகள், வீடுகள் எனப் படமெடுத்துள்ளேன் பார்ப்போம் முடிந்தால் போடுகிறேன்.
// அதை முதலில் செய்யுங்க.உங்கள் புண்ணியத்தில் ஸ்காட்லாண்டை இலவசமாக பார்க்கிறோம். நன்றி அதிரா.

ஸாதிகா said...

//சென்னையில் மழையா..? நம்பவே முடியல்ல// என்ன ரியாஸ் இப்படி கேட்டுவிட்டீர்கள்.அப்பப்ப மழை பெய்து பூமியை குளிர்வித்து விடும்.கருத்துக்கு நன்றி.

Mano Saminathan said...

பல்சுவை செய்திகள் எல்லாமே நன்றாக இருக்கின்றன ஸாதிகா! அஞ்சறைப்பெட்டியை அடிக்கடி திறந்து வையுங்கள்!!

அஹமது இர்ஷாத் said...

super Post...

அமைதிச்சாரல் said...

அஞ்சறைப்பெட்டியில் தகவல்கள் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளன.

ஹைஷ்126 said...

அன்பு சகோதரி ஸாதிகா: நாணயத்தின் மறுபக்கத்தையும் தயவு செய்து பார்க்கவும்.

நமது தமிழ்நாட்டின் பரப்பளவு 1,30,058 sq. km
மக்கள் தொகை 6,24,05,679
மொத்த போலீஸ்காரர்கள் 87,973

2001 இல் அதாவது 10 வருடங்களுக்கு முன் இருந்த மக்கள் தொகைக்கு 609 க்கு ஒரு போலிஸ்காரர்தான். அவரும் 24 மணி நேரமும் நல்லநாள், கெட்ட நாள் இல்லாமல் வேலை செய்தாலும் இந்த பிரச்சனைகள் தீராது...

உ.ம்: ட்ரெயில் அடிப்பட்டு செத்து போன ஒரு பிணத்திற்கு ஆள் நடமாட்டம் இல்லாத, குடிக்க தண்ணீர் இல்லாமல், ஒதுங்க நிழல் கூட இல்லாமல் வெய்யிலில் காவல் காக்கவேண்டும். காவலுக்கு நாள் கிழமையோ, நேரமோ காலமோ கிடையாது. அங்கு தூங்கியவரின் முன் தினம் எப்படி பட்டது என்பதை நாம் அறிய முடியாதல்லவா???

http://www.tnpolice.gov.in/strength.html

http://www.tn.gov.in/deptst/Tnataglance.htm#DEMOGRAPHIC INFORMATION

ராம்ஜி_யாஹூ said...

thanks for sharing , nice

இலா said...

ஷாதிகா ஆன்டி! அருமையான பதிவு... எனக்கு பிடித்த விஷயம் இந்த பதிவில்

1. "செயின் டு நான்"
2. "என்னை ஏற்றுக்கொண்டவர்"
3. மனித நேயம் ‍ "இவங்களுக்கு ஒரு ஐடியா.. இந்த இன்டெர்நெட் உலகில் மத்த ஊர்களில் இருப்பவர்களுக்கும் பயன் படும்படி சாட்டிலைட் வகுப்பு நடத்தலாம் .. ஜஸ்ட் மை ஐடியா" - Online live content delivery
4. மாநகர பேருந்து தூசியை விட என் கவலை எமிஷன் கன்ட்ரோல் :((
5.தம்பியின் ராக்கெட் ஐடியா... இப்பவே இவ்வளவு ஐடியா அய்யாசாமியா இருக்காரே...

ஸாதிகா said...

மனோ அக்கா கருத்துக்கு நன்றி.//அஞ்சறைப்பெட்டியை அடிக்கடி திறந்து வையுங்கள்!// உங்கள் அன்பான வேண்டுகோளை அவசியம் நிறைவேற்றுகின்றேன்.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத் கருத்துக்கு நன்றி!

ஸாதிகா said...

அமைத்திச்சாரல் தங்களின் முதல் வருகைக்கும் கருத்துக்கு நன்றியும் மகிழ்ச்சியும்.

ஸாதிகா said...

மிக நீண்ட இடைவெளிக்கு அப்புறம் தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.புள்ளி விபரங்களை அருமையாக தெரியப்படுத்தி இருக்கின்றீர்கள்.மிக்க நன்றி சகோதரர் ஹைஷ்.//அங்கு தூங்கியவரின் முன் தினம் எப்படி பட்டது என்பதை நாம் அறிய முடியாதல்லவா???//
உண்மைதான் சகோதரரே.ஆனால் உங்கள் அளவிற்கு பொறுமை இல்லையே!:-(

ஸாதிகா said...

ராம்ஜி யாஹு முதல் வருகைக்கும்,கருத்துக்கும் நன்றி.

ஸாதிகா said...

நெடு நாள் இடைவேளைக்கு பிறகு வந்திருக்கும் இலாவே வருக வருக.// மனித நேயம் ‍ "இவங்களுக்கு ஒரு ஐடியா.. இந்த இன்டெர்நெட் உலகில் மத்த ஊர்களில் இருப்பவர்களுக்கும் பயன் படும்படி சாட்டிலைட் வகுப்பு நடத்தலாம் .. ஜஸ்ட் மை ஐடியா" // நல்ல ஐடியாதான்.மல்லிகா துரைசாமி அவர்களின் காதுக்கு எத்தி வைக்கின்றேன்.//தம்பியின் ராக்கெட் ஐடியா... இப்பவே இவ்வளவு ஐடியா அய்யாசாமியா இருக்காரே.// நீங்க வேற?விட்டால் உண்மையில் ராக்கெட் வீசி விடுவார்.இருக்கும் கோபத்தை எல்லாம் ஒன்று திரட்டி தலையில் ஓங்கி ஒரு குட்டு..பேப்பர் ராக்கட் கந்தல் ஆகி விட்டது

ஜெய்லானி said...

//athira said...ஸாதிகா அக்கா!!! உந்தக்கொசுவைப்பற்றி இனியும் கதைத்தால் கோடாரிப்பூசார் புறப்பட்டுவிடுவார்:) கோடாரியோடு, என ஜெய்..லானிக்குச் சொல்லுங்கோ //

ஹா..ஹா....மீ த எஸ்ஸ்ஸ்கேப்

Jaleela Kamal said...

ரொம்ப நாள் கழித்து அஞ்சற பெட்டி திற்ந்து இருக்கு.

என்ன இருந்தாலும் சென்னை சென்னை தான்

இப்ப மழையா?அப்ப ஊருக்கு வரும் போது குடை கொண்டு வரனும்

டிராபிக்க் பார்த்தா இங்கிருட்ந்து ஷார்ஜாவிற்கு போகும் போது ஏற்படும் டிராபிக்க விட கம்மி தான்

பெரியார் தாசன் சந்திப்பு ஆச்சரியம்.

எல்லா பகிர்வுகளும் நல்ல பகிர்ந்து கொண்டீர்கள்

ஹுஸைனம்மா said...

யக்கோவ், கொஞ்ச நாள் முன்னாடி நானும் இதேதான் சொன்னேன் சென்னைப்பட்டணத்தைப் பத்தி!! அப்ப, ‘ஏம்மா இப்படி?’ன்னு கேட்டீங்க; இப்ப நீங்களே... ;-)))

இப்ப எல்லா ஊருமே சென்னைக்குப் போட்டியாதான் வருது ‘அ’சிங்காரத்துல!!

சைதை துரைசாமியின் ஐ.ஏ.எஸ். பயிற்சிக்கூடம் எல்லாராலும் பாராட்டப்படுகிறது!!

அப்புறம், அந்த ட்ராஃபிக் போலீஸ்காரர்: அவர் சொல்லியெல்லாம் மெட்ராஸ்காரங்க கேட்டுக்குவாங்களா என்ன?!!
:-)))))