தமாஷாக கேட்ட கேள்விகளுக்கு ஆர்வமுடன் பங்கெடுத்தும்,பின்னூட்டம் இட்ட அன்புள்ளங்கள்
ஜெய்லானி
அதிரா
எல்கே
spicy
கும்மி
அனைவருக்கும் நன்றி.
கேள்விகளைக்காண இங்கு கிளிக் செய்யுங்கள்.
பதில்கள் இதோ:
பதில் நம்பர் ஒன்று:சூட்கேஸை அதற்குறிய சாவியால திறந்து உள்ளே பூசணிக்காயை வைக்கவேண்டும்.
பதில் நம்பர் இரண்டு: பூசணிக்காயை வைத்தது போல் சூட்கேஸைத்திறந்து வைக்கக்கூடாது.சூட்கேஸைத்திறந்து உள்ளே இருக்கும் பூசணிக்காயை எடுத்துவிட்டு அதற்க்கப்புறமாக பறங்கிக்காயை வைக்க வேண்டும்.
பதில் நம்பர் மூன்று:வேறு யாரு?கண்காட்சிக்குப்போகாத காய் பறங்கிக்காய்தான்.அதுதான் பத்திரமாக சூட்கேஸுக்குள் இருக்கின்றதே.எப்படிப்போக முடியும்.?
பதில் நம்பர் நான்கு:தக்காளிகள் எல்லாம் கண்காட்சிக்கு போய் விட்டனவே?செடியில் எப்படி இருக்கும்.ஸோ..அந்தம்மா சுலபமாக மோதிரத்தை எடுத்து வந்துவிட்டார்.சரியான பதில்களி கீழ்கண்டவர்கள் கொடுத்துள்ளார்கள.
vanathy has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
ஸாதிகா அக்கா, சூட்கேஸை திறந்து பூசனிக்காயை வைக்கோணும்.
பூசனிக்காயை எடுத்து விட்டு பரங்கி காயை வைக்கோணும்
பரங்கி காய் போக வில்லை. அது தான் சூட்கேஸில் இருக்கே.
கேள்வி நம்பர் 4 க்கு பதில் தெரியாது.
அனு has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
ஹிஹி.. நானும் ட்ரை பண்றேன்..
1. முழு பூசனிக்காயையும் கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்..
2. பூசனிக்காயை வெளியில எடுத்து வச்சிட்டு பரங்கிக்காய கட் பண்ணி சூட்கேஸுக்குள்ள வச்சிடலாம்.. (பத்மினிக்கு பூசனிக்காய் தானே வேணும் [அ] பத்மினி தான் போயாச்சே [அ] இந்த கேள்வியில பத்மினி வரவேயில்லயே)
3. பரங்கிக்காய் மட்டும் போயிருக்காது.. அதைத் தான் சூட்கேஸுக்குள்ள அரெஸ்ட் பண்ணி வச்சிருக்கோமே...ஹிஹி
4. அந்த அம்மாவுக்கு பிரச்சனையே இல்ல.. தக்காளிகளை எல்லாம் தான் கண்காட்சிக்கு அனுப்பி வச்சாச்சே.... ஸோ, செடிகளுக்கு நடுவே போய் ஈசியா எடுத்திருவாங்க..
என்னங்க.. என் விடைகள் கரெக்ட்டா?? ஒரே டென்ஷனா இருக்கு.. அந்த வைர நெக்லஸ் வேற என் கண்ணை விட்டு போக மாட்டேன்னுது..
கும்மி has left a new comment on your post "நீங்கள் கில்லாடியா?செம கில்லாடியா?":
1. சூட்கேசைத் 'திறந்து' பூசணிக்காயை வைக்கவேண்டும். வைத்தபின்பு சூட்கேசைத் திருப்பி வைத்து பூசணியை மறைத்து விட வேண்டும்
2. பூசணிக்காயை 'வெளியே எடுத்துவிட்டு' பரங்கிக்காயை வைக்க வேண்டும்.
3. பரங்கிக்காய் போகவில்லை. அதுதான் சூட்கேசுக்குள் இருக்கிறதே
கடைசி கேள்விக்கும் அறிவு பூர்வமான பதில் கெடையாது என்று தெரிகின்றது.
கலாநேசன்
1) சூட்கேஸ் சின்ன சைஸ் தான். ஆனா பூசணிக்காயை விட பெரியது.
2 ) பூசணிக்காயை வெளியே எடுத்துட்டு பறங்கிக்காயை உள்ளே வைக்கலாம்.
3 )பறங்கிக்காய். (அத தான் சூட்கேஸ் உள்ள வச்சிட்டிங்களே )
4 )அந்த அம்மாவும் நெருக்கமாக பயிரிடப்பட்ட தக்காளி செடிக்கிடையே சென்று ஒரு தக்காளிக்கு கூட பழுதில்லாமல் தனது மோதிரத்தை எடுத்து வந்து விட்டார். ஏன்னா வெறும் செடி மட்டும் தான் இருந்தது. எல்லா பழங்களும் கண்காட்சிக்கு போயிடுச்சு.
நான் அதி புத்திசாலின்னு சொன்ன நீங்களும் தான்.
இல்லேன்னு சொன்னா..............
அமைதிச்சாரல்
முதலில் சூட்கேஸை திறந்து அதுல இருக்கிறதையெல்லாம் வெளிய எடுத்து வெச்சுட்டு பூசணிக்காயை வைக்கணும்.
ரெண்டாவது பூசணிக்காயை வெளிய எடுத்துட்டு பறங்கிக்காயை வைக்கணும்.
கண்காட்சிக்கு போகாத காய் பறங்கிக்காய்.. ஏன்னா, அது சூட்கேசுக்குள்ள இல்ல இருக்கு.
தக்காளிக்கு சேதம் வராது. ஏன்னா.. அதெல்லாம் கண்காட்சிக்கு போயிடுச்சு.
எப்பூடீ... பரிசை சட்னு அனுப்பி வையுங்க.
Adimai-Pandian
Hi,
1. Suitcase thiradu poosanikai vaikkanum.
2. Suitcase la irundu Poosanikai veliaya eduthutu parangikai ulla vaikkanum....
3. Parangikai dan pogala... becoz adan suitcase ulla matikiche!!!
4. adana pala peru sollitangale... pinna namba edukku repeat pannitu..... Thanks!!!!
அக்பர்
நண்பர் டாக்டர் சேக்தாவூதுவிற்கு கூகிள் சரியாக வேலை செய்யவில்லையாம். விடையை போனில் சொன்னார். அது இங்கு.
1. பூசணிக்காய் பத்தைகளை சூட்கேசுக்குள் அடுக்கிவைக்க வேண்டும்.
2. பூசணிக்காயை எடுத்து விட்டு பரங்கிக்காய் பத்தைகளை வைக்க வேண்டும்.
3. பரங்கிக்காய் மட்டும் போக முடியாது. ஏன்னா அதுதான் சூட்கேசுக்குள்ளே இருக்கே.
4. தக்காளிதான் சந்தைக்கு போக தயாரா இருக்கே. தக்காளி செடியினூடே சென்றால் பறித்து வைக்கப்பட்ட தக்காளிகளுக்கு எந்த பாதிப்பும் வராது.
இவர்களில் யார் கில்லாடி?யாரெல்லாம் செமகில்லாடி என்று நீங்களே பதிலின் எண்ணிக்கைப்பார்த்து முடிவு செய்துகொள்ளுங்கள்.அனைவருக்கும் நன்றி.
கேள்விகளைக்காண இங்கு கிளிக் செய்யவும்
Tweet |
72 comments:
இதநான் எதிர்பார்க்கலை. அப்போ வட போச்சா.. நான் ஒவ்வொரு கேள்வியும் தனித்தனி கேள்விகள்னு நினைச்சேன். ஆனால் இது தொடர்ச்சியான கேள்விகள்ன்னு தெரியாம போச்சே..
ஆத்தா!! நான் பாசாயிட்டேன்...
for follow up
ஆஹா ஏ......ன் கா இப்படி...
ஆஹா...கலந்து கொள்ள முடியாமல் போச்சு...எல்லாம் weekend வந்தால் இப்படி தான்...ப்ளாக் பக்கமே வரமுடியாமல் போச்சு...சரி...சரி...அடுத்த தடவை கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்...நன்றி...
அடடா.. தெரிஞ்ச பதில் தானே என்று ஆட்டத்துக்கு வராமலே போயிட்டேன்... ஒரு பேப்பரில் எழுதி வைத்தால் ஒன்றென்னு 10 வைக்கலாம்...
இந்த நேரத்தில் ஒரு நிகழ்வு பத்தி சொல்லிடனும்.. இதேபோல ஒருமுறை மெமரி கேம் ( 20 பொருள்களை காமிச்சு 20 செகண்ட்ஸ்) 1 நிமிஷதில் பதில் எழுதணும்.. வெற்றி பெற்றவரின் பதில்... எல்லாமே மேட் இன் சைனா ....
மூளையை கசக்கிய மத்த 10 பேரும் ஙே ஙே ஙே....
போங்கக்கா அழுகாச்சியா வருது....நான் தனித்தனி கேள்வின்னு இல்ல நினைச்சுட்டேன்....100 க்கு வாழ்த்துக்கள்!!
ஆஹா, நல்லா இருக்கு மொக்கை :-)
ஆஹா, மொக்கை பிரமாதம் :-)
avvvvvvvvvvvvv
இருந்தாலும் வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுக்கள்....!!!
யக்காவ் , இது அழுகுனி ஆட்டம்...
//ஒரு சின்ன சைஸ் சூட்கேஸ் (நல்லா நோட் பண்ணிக்குங்க சின்ன சைஸ்)உள்ளது //
//கூடவே ஒரு பெரிய பூசணிக்காய் . பூசணிக்காயில் ஒரு பத்தையை பக்கத்து வீட்டு பத்மினி கேட்கும் முன்னர் அந்த சூட்கேஸுக்குள் முழு பூசணிக்காயையும் எப்படி மறைத்து வைப்பது?//
கேள்வி என் மூனும், நாலும் மாத்தி குடுத்து இருக்கும் போது ... பதில் தொடர்ச்சி வராதே!!?
( கேள்வி ,பதிலை திரும்ப படிக்கவும் )
ஜெய்லானி.
எடக்கு மடக்கா கேள்வி கேட்போர் சங்கம் ,
ஷார்ஜா மண்டலம்
ஸாதிகா அக்க்கா என்க்கும் அழுகாச்சி, நானும் தனித்தனி கேள்வி என்று நினைத்து கொண்டேன்.
டாக்டர் கந்தசாமி சொல்லிட்டாங்க இது மொக்கை பதிவாம்,
(முன்பு மொக்கை இன்னா என்னா கேட்டா ஞாபகம் வருது)
வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்.
( அனு ஹி ஹி ஆத்தா நான் பாசாகிட்டேன்) ஹா ஹா
உங்களுக்கு அந்த பூசணிக்காய் வச்சு சுத்தி போடணும். என்ன நல்லா மொக்கை போடுறீங்க..... ஹா,ஹா,ஹா,ஹா,ஹா....
இப்பவெல்லாம் சூட்கேஸ்ல பணத்தை போடுறாங்க, நீங்க தான் வித்யாசமா செஞ்சுருக்கீங்க..:)
//இது தொடர்ச்சியான கேள்விகள்ன்னு தெரியாம போச்சே..// அடுத்தமுறை தொடர்ச்சி இல்லாத கேள்விகளாக கேட்கட்டுமா ஸ்டார்ஜன்?மிக்க நன்றி!
//ஆத்தா!! நான் பாசாயிட்டேன்.//ஆமாம் அனு நீங்க பாஸாகிட்டீங்க.
//ஆஹா ஏ......ன் கா இப்படி.//சீமான்கனி,எப்பூடீஈஈஈ?
நன்றி கீதா ஆச்சல்.உங்களுக்கா வீக் டேஸில் இன்னொரு மொக்கை போட்டி வைத்து விடுவோம்.
//அடடா.. தெரிஞ்ச பதில் தானே என்று ஆட்டத்துக்கு வராமலே போயிட்டேன்//இலா உங்களைத்தான் ஆளையே பார்க்க முடியறதில்லையே?
//நான் தனித்தனி கேள்வின்னு இல்ல நினைச்சுட்டேன்....100 க்கு வாழ்த்துக்கள்!// மேனகா எல்லோரும் இப்படித்தான் நினைத்தார்கள்.வாழ்த்துக்களுக்கு நன்றி.
//ஆஹா, நல்லா இருக்கு மொக்கை :-)// கந்தசாமி சார் என்ன செய்யுறது.இப்படி மொக்கைப்போட்டால்தான் நிறைய ஓட்டும்,பின்னூட்டமும் கிடைக்கின்றது.அதுதான் அப்பப்ப இப்படி.. வருகைக்கு நன்றி.
எல் கே எதற்கு இந்த அவ்வ்வ்வ்வ்வ்...?வடை கிடைக்கலேன்னா?இல்லே சரியான பதில் சொல்லலேன்னா?இல்லே பதில் இப்படி மொக்கையாகிப்போச்சேன்னா?
ஜெய்லானி அண்ணாச்சி,இப்படி லாஜிக் எல்லாம் பார்க்க கூடாது. ஒரு மொக்கைப்பதிவைப்போட்டமா?பின்னூட்டம் வந்துச்சா?படித்துட்டு பதில் போட்டமா என்று இருந்த மனுஷியை இப்படியெல்லாம் கேள்வி கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆக்கிட்டீங்களே?//எடக்கு மடக்கா கேள்வி கேட்போர் சங்கம் ,
ஷார்ஜா மண்டலம்//முதல்லே சங்கத்தின் கொள்கையையே மாற்றி லாஜிக் பார்க்காத சங்கம் என்று ஒன்று ஆரம்பியுங்கோ..இல்லேன்னா அண்ணாச்சிங்கறது தாத்தா,பெரிய தாத்தா என்று ஆகிவிடப்போகின்றது.
//(முன்பு மொக்கை இன்னா என்னா கேட்டா ஞாபகம் வருது)
// ஹி ஹி ஜலி சரியான நேரத்திலே சரியா வந்து மாட்டி விடுறீங்களே?
கொஞ்சம் யோசிக்க நேரம் ஒதுக்கியிருந்தாலும் போதும் போலையே
எல்லோருக்கும் வாழ்த்துகள்!
ஸாதிகா,அட மண்டை குழம்பியது தான் மிச்சமா?ஆறுதல் பரிசு கிடையாதா?
ஆஹா மிஸ் பண்ணிட்டேனே .. அடுத்த போட்டி எப்போங்க........
ஐ எங்க தலைவி அனு கரீக்கிட்டாதான் சொல்லிருக்காங்க. வாழ்த்துக்கள் VKS தலைவி அனு...
ஏய் நான்தான் 101 னாவது follower. ஹய்யோ ஹய்யோ
///ஜெய்லானி.
எடக்கு மடக்கா கேள்வி கேட்போர் சங்கம் ,
ஷார்ஜா மண்டலம் ///
அப்படிப் போடுங்க.. ஜெய்
appaada naan oru question'ku correct'a answer panniten. so romba sandhosam.. irundhalum naangalum oru killadidhan. naanum othukaren...
ok
coool
neenga kodutha answer'a naan edhirparkala... its tooo much ya...
ஐய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய் ஸாதிகா அக்கா, ....,(கமா போட்டிருக்கிறேன்:)) பெரியவா எப்போதும் பெரியவாதான்.... அடுத்தாக்களுக்குப் புரியாமல் எனக்கு மட்டும் புரியிறமாதிரி:) ஒரு வசனம் நேக்கு போட்டிட்டேள்...
“நான் அதி புத்திசாலின்னு சொன்ன நீங்களும் தான்.” இப்பூடிச் சொல்லி.... அதியாகிய அதிராவும் புத்திசாலி என்றிட்டீங்கள்... என்ன குயப்பிட்டேனா?
அதுசரி எப்பூடி வாணி கரெக்ட்டாச் சொல்லிட்டா பதிலெல்லாம்?.... எங்கேயோ தப்பு நடந்துபோச்சு... மீ எஸ்ஸ்ஸ்....
ஏன் ஜெய்..லானிக்கு னி..யை விட்டுவிட்டீங்க? அந்தப் பெயரில அழகே அந்த னி மட்டும்தான்:)...
இலா, ஜலீலாக்கா கூல் கூல்...... இதுக்கெல்லாம் அதிராமாதிரி அதி புத்திசாலியாக இருக்கோணும்:).... ம்ஹூம் பூனையோ கொக்கோ.... ஆங் மீ.. எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... பிடிச்சுப்பாருங்கோ பார்ப்பம்.....
@@@ஸாதிகா--// ஒரு மொக்கைப் பதிவைப்போட்டமா?பின்னூட்டம் வந்துச்சா?படித்துட்டு பதில் போட்டமா என்று இருந்த மனுஷியை இப்படியெல்லாம் கேள்வி கேட்டு நொந்து நூடுல்ஸ் ஆக்கிட்டீங்களே? //
மொக்கைப் பதிவா ..அப்ப சரி...இந்த எல் கே அண்ணாச்சி உசுப்பேத்தி வச்சதால கொஞ்சம் லாஜிக் ...ஓக்கே.. ஓக்கே ..அப்ப நோ.கேள்வி...!!
கேள்விகளும் கலகல...
பதில்களும் கலகல...
ச்சே, என்னமா கேள்வி பதில் போட்டி வைக்குறீங்க. சூப்பர்.
அட சூப்பரா இருக்கே ஸாதிகா.. நான் ரொம்ப நாள் ஆஃப்செண்ட் ஆகிட்டனா..:(((
அடடா..நான் கொஞ்சம் லேட்டா வந்திருக்கேன் ஸாதிகாக்கா! கேள்விகளும்,பதில்களும் கல-கல!!
//உங்களுக்கு அந்த பூசணிக்காய் வச்சு சுத்தி போடணும்.//சித்ரா ,பூசணிக்காயை பத்தை,பத்தையா நறுக்கி சுற்றிப்போடுறீங்களா?சமையலுக்கும் பிற்பாடு உபயோகித்துக்கொள்ளலாம்.(நாங்கதான்சிக்கனதிலகமாச்சே)
//இப்பவெல்லாம் சூட்கேஸ்ல பணத்தை போடுறாங்க, நீங்க தான் வித்யாசமா செஞ்சுருக்கீங்க..:)// என்ன ஷஃபி தபி செய்யுறது.நாம்தான் பிழைக்கத்தெரியாதா ஆளாச்சே:-(
நன்றி சகோதரர் ஜமால்.
//ஆறுதல் பரிசு கிடையாதா?// என்ன ஆசியா தோழி இப்படி கேட்டுவிட்டீர்கள்?
//ஆஹா மிஸ் பண்ணிட்டேனே .. அடுத்த போட்டி எப்போங்க./;/ இர்ஷாத் சீக்கிரம் வச்சிடுவோம்
Dhosai--> ரொம்ப நன்றிங்க.
லொள்ளு அதிரா இப்ப உங்களைப்பார்த்தே நானும் நிறைய லொள்ளு பண்ண ஆரம்பித்துவிட்டேன்.நீங்க புத்திசாலியேதான்.ஒத்துக்கறேன்.வேண்டுமானால் 20 ரூபாய் ஸ்டாம்ப் பேப்பரில் எழுதிதரட்டுமா?
//ஓக்கே.. ஓக்கே ..அப்ப நோ.கேள்வி...!//ஸ்ஸ்...ஹப்பாடா..இனி ஜெய்லானி பயமின்றி பதிவு போடலாம்.
NIZAMUDEEN said...
கேள்விகளும் கலகல...
பதில்களும் கலகல.நிஜாமுதீன் நீங்க எந்த கேள்விபதிலை சொல்லுகின்றீர்கள்.பதிவில் வந்த கேள்வி பதிலையா?பின்னூட்டத்தில் வந்த கேள்வி பதிலையா?எதற்கா இருந்தாலும் நன்றியை சொல்லிக்கறேன்
NIZAMUDEEN said...
கேள்விகளும் கலகல...
பதில்களும் கலகல.நிஜாமுதீன் நீங்க எந்த கேள்விபதிலை சொல்லுகின்றீர்கள்.பதிவில் வந்த கேள்வி பதிலையா?பின்னூட்டத்தில் வந்த கேள்வி பதிலையா?எதற்கா இருந்தாலும் நன்றியை சொல்லிக்கறேன்
ரமேஸ் ஹை நீங்க நூற்று ஒன்றாவதுதான்.அதென்ங்க பெயரை வித்தியாசமா செலக்ட் செது இருக்கீங்க.நீங்க சத்தியம் பண்ணாவிட்டாலும் நீங்க நல்லவர்ன்னு நாங்க ஒத்துக்கறோம்.சரீங்களா?
ஸ்டார்ஜன் ஜெய்லானிக்கு வக்காலத்து வாங்கறீங்களே..?:-(
//ச்சே, என்னமா கேள்வி பதில் போட்டி வைக்குறீங்க//விக்னேஷ்வரி ஏன்ப்பா அலுத்துக்கறீங்க.இருந்தாலும் தேங்ஸ்ப்ப்பா
நான் ரொம்ப நாள் ஆஃப்செண்ட் ஆகிட்டனா..:(((
இல்லை சகோதரி தேனம்மை ,என் வலைப்பூவுக்கு மட்டும் தான் ஆப்செண்ட்:-(
June 16, 2010 1:15
//கேள்விகளும்,பதில்களும் கல-கல!// நல்ல வேளை.லக்..லக இல்லையே மகி?.
கிள்ளடிகளுக்கு என் வாழ்த்துக்கள்.
யாருக்கு வைரநெக்லஸ்னு சொல்லவே இல்லையே ஏன்..ஏன் ஏன்?
நெக்லஸ்சுக்கு உரிய பதில்கள் தான்.. அடுத்த தடவ கேள்வி கேட்கும் போது டைமுக்கு ஆஜராக வேண்டும்.. அப்போ தான் ஒரு பத்து ரூபாயாவது பரிசு கிடைக்கும்..
நன்றி..
நன்றி இளம்தூயவன்.
//யாருக்கு வைரநெக்லஸ்னு சொல்லவே இல்லையே ஏன்..ஏன் ஏன்//கீஈஈஈஈஈழே பார்க்கலியா கவி?
//நெக்லஸ்சுக்கு உரிய பதில்கள் தான்.. அடுத்த தடவ கேள்வி கேட்கும் போது டைமுக்கு ஆஜராக வேண்டும்//பிரகாஷ் என்ற சாமகோடங்கி ஆமாமாம்..அடுத்த முறை டைமுக்கு ஆஜர் ஆகிவிடுங்க.நன்றி.
ஹலோ நாலு நாலு வரலைன்னா எங்க பேர விடுருவிகளா ???
Geetha Achal said...
ஆஹா...கலந்து கொள்ள முடியாமல் போச்சு...எல்லாம் weekend வந்தால் இப்படி தான்...ப்ளாக் பக்கமே வரமுடியாமல் போச்சு...சரி...சரி...அடுத்த தடவை கண்டிப்பாக கலந்து கொள்கிறேன்...நன்றி...///
அட விடுக மேடம் , இவுங்க கல்லாட்டம் ஆடுவாங்க
அனு said...
ஆத்தா!! நான் பாசாயிட்டேன்...///
நானும்தான்
ஸாதிகா said...
நன்றி கீதா ஆச்சல்.உங்களுக்கா வீக் டேஸில் இன்னொரு மொக்கை போட்டி வைத்து விடுவோம்.///
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்.................................
ஸாதிகா said...
//உங்களுக்கு அந்த பூசணிக்காய் வச்சு சுத்தி போடணும்.//சித்ரா ,பூசணிக்காயை பத்தை,பத்தையா நறுக்கி சுற்றிப்போடுறீங்களா?சமையலுக்கும் பிற்பாடு உபயோகித்துக்கொள்ளலாம்.(நாங்கதான்சிக்கனதிலகமாச்சே)///
என்னா தற்பெரும ???? ம் ம்ம்ம்ம்ம்ம்............... நடக்கட்டும் நடக்கட்டும் ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
//டை கிடைக்கலேன்னா?இல்லே சரியான பதில் சொல்லலேன்னா?இல்லே பதில் இப்படி மொக்கையாகிப்போச்சேன்னா?
June 15, 2010 3:21 PM/
unga answersa paarthu. nan unga pathivula vadaiku varamatten. lateathan varuven
நான் பாஸாயிடுவேன்னு முதல்லயே தெரியும்.யக்கா... வைர நெக்லஸ் இன்னும் வந்து சேரலை :-))))
அடுத்த பதிவு ப்ளீஸ்
//ஆத்தா!! நான் பாசாயிட்டேன்...///
நானும்தான்// பரிட்சை எழுதாமலே பாசாயிட்டேன் என்கின்றீர்களே..இது என்ன கள்ளாட்டமா?நல்லாட்டமா மங்குனி அமைச்சரே?//என்னா தற்பெரும ???? ம் ம்ம்ம்ம்ம்ம்............... நடக்கட்டும் நடக்கட்டும் ,,,,,,,,,,,,,,,// ஹி..ஹி..ஹி..
எல்.கே //unga answersa paarthu.// ஓ அப்படியா?
யம்மா அமைதிச்சாரல்,இப்படி அருமையான பொருமையான அழகான பெய்ரை வைத்துக்கொண்டு கொஞ்சம் பொறுமை கொண்டு ஸ்க்ரால் பண்ணிப்பார்ப்பதை விட்டுட்டு இப்படி அடிக்கடி நெக்லஸ் எங்கே என்று கேட்டு பயம் காட்டுறீங்களே?
மங்குனி அமைச்சர் என்ர ஷாஜஹான் அவர்களே,//மங்குனி அமைச்சர் said...
அடுத்த பதிவு ப்ளீஸ்
June 21, 2010 10:21 AM//கொஞ்சம் http://allaaahuakbar.blogspot.com/ இங்கேயும் வந்து பாருங்களேன்.
Post a Comment