June 6, 2010

அமீரகம் அன்றும் இன்றும் (பாகம்-1)

அபுதாபி கலீஃபா பார்க்கில் ஒரு அழகிய அருங்காட்சியகம் உள்ளது.அமீரகம் தோன்றியது முதல் இன்றுள்ள அமீரகம் வரை அழகிய சிற்பங்களாக நமக்கு வரலாற்றை எடுத்தியம்புகின்றது.மிகவும் நுணுக்கமாகவும்,அழகாகவும் செதுக்கப்பட்டுள்ள இவை கண்களையும்,கருத்தையும் கவர்கின்றது.நம்மவர்கள் தொட்டுப்பார்த்தும்,தட்டிப்பார்த்தும் சேதம் விளைவித்து விடுவார்கள் என்பதற்காகாவோ என்னவோ கேபிள் காரில் பார்வையாளர்களை அழைத்துச்செல்கின்றனர்.அதிலிருந்தபடி நான் மிகவும் ரசித்து கிளிக்கிய படங்கள்.கிளிக் செய்த எல்லாபடங்களையும் பார்வைக்கு வைக்க வேண்டும் என்ற ஆவலில் இரண்டு அல்லது மூன்று பாகங்களாக தரப்போகின்றேன்.ஆரம்பத்தில் அமீரக அரபிகளுக்கு மீன் பிடித்தொழில் தான் பிரதானமாக இருந்து வந்தது.பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனைக்காக வைத்திருப்பதை என்ன அழகாக வடிவமைத்து இருக்கின்றார்கள் என்று பாருங்கள்.
பிடிக்கப்பட்ட மீன்களை விற்பனை செய்யும் கற்கால அரபி.
மீனவர் குடில்

ஒரு மான் குட்டி சிதறிய பானகத்தை தன் தாகம் தீர்க்க சாப்பிடும் காட்சி
மீன் பிடிக்கும் உபகரணங்களுடன் ஒரு அரபி தன் குடிசைக்கு வெளியே இருக்கும் காட்சி
தூண்டிலில் மாட்டிய மீன்கள்.
வழிப்போக்கரான அரபி ஓய்வெடுக்கும் காட்சி.
ஹரிக்கோன் விளக்கு வெளிச்சத்தில் சாப்பாடு தயார் ஆகின்றது.
பயணித்து வந்த ஒட்டகங்கள்.

பொதி சுமந்து பயணித்த ஒட்டகங்கள் ,எஜமானர்களையும்,பொதிகளையும் இறக்கிவைத்து விட்டு ஓய்வெடுக்கின்றதோ?
பாலை மணலில் பாலைவனக் கப்பல்கள் பவனி வருகின்றன.

பாகம் இரண்டினைக்கான இங்கு கிளிக் செய்யுங்கள்

58 comments:

ஹுஸைனம்மா said...

”பாகம்-1” !! அட, இது வேறயா?

உண்மையிலேயே அந்தக் கேபிள் கார் பயணம் சுவாரசியமா இருக்கும், தரையிலேதான் போகிறதென்றாலும்!! இல்லியாக்கா?

ஸாதிகா said...

ஹுசைனம்மா..அந்த அரைகுறை இருட்டில் கேபிள் தரையில் போகின்றதா?தலைக்கு மேலே போகின்றதா என்று இன்று வரை புரியவில்லை.எனக்கு கேபிள் கார் பயணம் சுவாரஸ்யமாக இருந்ததைவிட அந்த சிற்பங்கள் தான் சுவாரஸ்யமாக இருந்தது.ஹ்ம்ம்ம்ம்ம்..முற்றத்து மல்லிகை மணக்காது என்பார்கள்

ஹுஸைனம்மா said...

//முற்றத்து மல்லிகை மணக்காது என்பார்கள் //

“ஹெரிடேஜ் வில்லேஜ்” என்ற பெயரில், அபுதாபி, துபாய், அல்-அய்ன், இன்னும் சில இடங்களில் இதே போல அமீரக வரலாறைப் பலமுறைப் பார்த்ததினால் அப்படி என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் (தமிழ்) எழுத்தில் பார்ப்பது இது முதல்முறை என்பதால் இதுவும் சுவாரசியமாத்தான் இருக்கு!! தொடருங்க, நான் தவற விட்டது எதுவும் இருந்தால் தெரிந்து கொள்கிறேன்.

;-)))))))))

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.... நீண்ட நாளின்பின்பு ஒரு அருமையான பதிவு.

கடவுள் சத்தியமாக.... கீழே எழுதியுள்ளதை உங்கள் முந்தைய தலைப்புக்கு அனுப்ப வந்து திறந்தேன் புதுத்தலைப்பு போட்டுவிட்டீங்கள்... அதையும் இணைத்துவிடுகிறேனே..

ஸாதிகா அக்காஆஆஆஆஆஆ புரட்சித்தலைவியே? ஏன் நீண்ட நாட்களாகப் பதிவேதும் இல்லை? புரட்சியைக் கைவிட்டுவிட்டீங்களோ? ஹோல் சென்ரரைக் கலைத்துவிட்டீங்களோ அல்லது நீங்கள் வாபஸ் வாங்கிக்கொண்டீங்களோ? புதுத்தலைப்பை ஆவலோடு எதிர்பார்த்திருக்கிறேன்... இதைத்தான் அனுப்ப வந்தேன்...

நட்புடன் ஜமால் said...

சிற்பங்கள் நிகழ்வாய் தெரிகிறது

அந்த அரபியர்களும் பார்க்கனும் இதனை, எப்படி இருந்த நாம எப்படி இருக்கோம்ன்னு - எங்க புத்தி வரப்போகுது ஹும்...

நல்ல பதிவு சகோதரி, அடுத்தடுத்த பாகங்களில் நிறைய தெரிந்து கொள்கிறோம்

Ahamed irshad said...

சுவராஸ்யமான தகவல்கள்.. பகிர்வுக்கு நன்றிங்க..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//பாலை மணலில் பாலை விலங்குகள் பவனி வருகின்றன//

அழகிய சிற்பங்களை, அழகான
ஓவியங்களாகப் பிடித்துத் தந்து
விட்டீர்கள். இரசிக்கும்படியான
விளக்கங்கள்.
'பாலவன விலங்குகள்'
என்பதை, 'பாலவனக் கப்பல்கள்'
என்று குறிப்பிட்டிருக்கலாமே?

Asiya Omar said...

ஸாதிகா இதெல்லாம் நாங்கள் பார்த்து மறந்ததை அழகாக படம் பிடித்து போட்டு அசத்திட்டீங்க.பாராட்டுக்கள்.

ஜெய்லானி said...

//முற்றத்து மல்லிகை மணக்காது என்பார்கள்//

ஹி..ஹி...

ப்ரியமுடன் வசந்த் said...

சகோ இப்போ துபாய் போயாச்சா?

அந்த மனிதர்கள் எல்லாம் பொம்மைகள்தானே?

அன்புடன் மலிக்கா said...

ஆகா ஹத்தா டூர் அசத்தல் அங்குள்ள அனைத்தும் அப்படியே நிஜம்போல் செய்திருப்பது ஆச்சர்யதை உண்டுபன்னும்.. சூபர் கிளீக். நானும் நிறைய வச்சிருக்கேன் ஆனா பதிவு போட நேரமில்லைக்கா.

SUFFIX said...

எப்புடி இருந்த அவங்க இப்புடி மாறிட்டாங்க, எல்லாம் இந்த 50 வருடங்களுக்குள். படங்கள் நல்லா இருக்குக்கா.

Menaga Sathia said...

ஆஹா படங்கள் சூப்பர்ர்..எல்லாம் நிஜம் போல இருக்குக்கா...

சிநேகிதன் அக்பர் said...

படங்கள் அருமை சகோதரி. நல்லதொரு கவரேஜ். பகிர்வுக்கு நன்றி.

Starjan (ஸ்டார்ஜன்) said...

அருமையான வரலாற்றுச் சிறப்புமிக்க படங்கள். அதை தொகுத்து தந்திருக்கும் ஸாதிகா அக்காவின் திறமையோதிறமை. அசத்துறீங்க அக்கா. தொடருங்கள்.

Jerry Eshananda said...

ஸாதிகா மேம்...அப்பிடியே நேரில் பார்ப்பது போல இருக்கு.

ஸாதிகா said...

// தொடருங்க, நான் தவற விட்டது எதுவும் இருந்தால் தெரிந்து கொள்கிறேன்.
// சொல்லிவீட்டிர்கள் அல்லவா!தொடருவோம்.நன்றி ஹுசைனம்மா

ஸாதிகா said...

நன்றி அதீஸ்.உங்கள் அன்புக்கும்,கரிசனத்திற்கும்.அவ்வப்பொழுது பதிவுகளின் இடைவெளி நீண்டுவிடுகின்றது.இருந்தாலும் தவறாது பிர பிளாக் படிக்கத்தவறமாட்டேன்.

ஸாதிகா said...

//அந்த அரபியர்களும் பார்க்கனும் இதனை, எப்படி இருந்த நாம எப்படி இருக்கோம்ன்னு - எங்க புத்தி வரப்போகுது ஹும்...//:-)இருந்தாலும் ஒன்று சொல்லிக்கொள்கின்ரேன் தம்பி ஜமால்.கத்தாரிலும் சரி,அமீரகத்திலும்சரி நாம் ரோடை கடந்து செல்ல ஓரமாக நின்றிருக்கையில் காரில் வரும் அரபிகள் காரை நிறுத்தி நாம் கடப்பதற்காக காத்து இருப்பார்கள்.இதுவே மற்ற நாட்டினர் காரை ஓட்டிவந்தால் இந்த கதை நடக்காது.இங்கு சென்னையில் காத்திருந்து,நிமிடங்கள் நிறைய கடந்து கடக்க வேண்டி இருப்பதை நினைக்கும் பொழுது அந்த அரேபியர்களின் பண்பு நினைவுக்கு வருகின்றது.துர் விஷயங்கள் இருக்கும் இடத்தில் பல நல்ல விஷயங்களும் இருக்கும்தான்.

ஸாதிகா said...

அஹ்மது இர்ஷாத கருத்துக்கு நன்றி.கத்தார் பற்றிய பதிவுக்ளை படங்களுடன் போடுங்கள் என்பது என் அன்பு வேண்டுகோள்.

ஸாதிகா said...

நன்றி சகோதரர் நிஜாமுதீன்.உங்கள் வேண்டுகொள் நிறைவேற்றப்பட்டது.

ஸாதிகா said...

ஆசியா தோழி,சாதாரண இடுகையைக்கூட பெரிதாக பாராட்டி உற்சாகப்படுத்துதான் உங்கள் ஸ்பெஷாலிடி.நன்றி

ஸாதிகா said...

///முற்றத்து மல்லிகை மணக்காது என்பார்கள்//

ஹி..ஹி.//ம்ம்..கஷ்டப்பட்டு(?) படம் எடுத்து பதிவு போட்டு இருக்கின்றேன்.நீங்களும் இப்படி நக்கல் பண்ணுகின்றீர்களே ஜெய்லானி.இருந்தாலும் நன்றி.

ஸாதிகா said...

சகோ வசந்த்.துபையில் இருந்து இப்பொழுது "என்னகம்"வந்தாயிற்று.//அந்த மனிதர்கள் எல்லாம் பொம்மைகள்தானே//இது நக்கலாக கேட்க்கபட்ட கேள்வி இல்லையே??பொம்மைகள் தான்.

ஸாதிகா said...

//எப்புடி இருந்த அவங்க இப்புடி மாறிட்டாங்க, எல்லாம் இந்த 50 வருடங்களுக்குள். படங்கள் நல்லா இருக்குக்கா.//மிக்க நன்ரி ஷஃபி தம்பி.மிகவும் அசுர வேக முன்னேற்றம்தான்.பிரம்மிக்க வைக்கின்றது.கருத்துக்கு நன்றி.

சௌந்தர் said...

படங்கள் எல்லாம் சூப்பர்ர்.. நிஜம் போல இருக்கு

ஸாதிகா said...

உண்மைதான் மேனகா.நிஜம் போலவே இருந்தன.உள்ளே என்ன இருக்கின்றது?எப்படிப்பட்டவைகளை காட்சிக்கு வைத்து இருக்கின்றனர்? என்பது தெரியாமலே அருங்காட்சியகத்தினுள் நுழைந்ததுமே நின்ற அரபிகளை பார்த்து விட்டு என்ன இவர்கள் அசையாமல் நிற்கின்றனர் என்று ஒருகணம் திடுக்கிட்டேன்.அத்தனை தத்ரூபமாக இருந்தது.

ஸாதிகா said...

நீங்கள் எடுத்த கோணத்தையும் உடனே பதிவு செய்து விடுங்கள் மலிக்கா.பார்க்க ஆவலாக உள்ளது.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

சகோ அக்பர்,கருத்துக்கும்,உற்சாக பின்னூட்டத்திற்கும் நன்றி.

ஸாதிகா said...

என்னை உற்சாகமாக மேலும் பதிவிடத்தூண்டும் தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி சகோ ஸ்டார்ஜன்.

ஸாதிகா said...

//அப்பிடியே நேரில் பார்ப்பது போல இருக்கு// வாய்ப்பு கிடைத்தால் அவசியம் போய் பாருங்கள் ஜெரிசார்.கருத்துக்கு நன்றி சார்.

ஸாதிகா said...

கருத்துக்கு மிக்க நன்றி சகோ சவுந்தர்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா கத்தார் முடிந்தது,
அடுத்து இப்ப துபாய், பாகம் ஒன்று படு சூப்பர் தான் போங்க

ஸாதிகா said...

//ஸாதிகா அக்கா கத்தார் முடிந்தது,// இன்னும் முடியலே ஜலி.பிளாக்கில் போடுவதற்காகவே எடுக்கப்பட படங்கள் நிரைய கைவசம் உள்ளது அடுத்தடுத்து வரும்.கருத்துக்கு நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

ஸாதிகா அக்கா.... இதென்ன மியூசியத்தில் எடுத்த படங்களோ?

சீமான்கனி said...

அப்டியே தத்ரூபமா இருக்கு ஸாதிகா கா அருமை பகிர்வு நன்றி அக்கா...

செ.சரவணக்குமார் said...

படங்கள் அனைத்தும் அருமை. பகிர்வுக்கு நன்றி ஸாதிகா அக்கா.

அடுத்த பாகத்தை எதிர்பார்க்கிறேன்.

ஜெய்லானி said...

//ம்ம்..கஷ்டப்பட்டு(?) படம் எடுத்து பதிவு போட்டு இருக்கின்றேன்.நீங்களும் இப்படி நக்கல் பண்ணுகின்றீர்களே ஜெய்லானி.இருந்தாலும் நன்றி.//

அப்படியில்லை ஸாதிகாக்காவ்!! உங்க டைமிங் பதிலை படித்ததும் சிரிப்பு வந்து விட்டது அதுதான். மற்றபடி உங்க திறமை எனக்கு தெரியும்..
:-))

மனோ சாமிநாதன் said...

எல்லா புகைப்படங்களும் அழகு, ஸாதிகா!

நாங்கள் இத்தனை வருடங்களாக வசிக்கும் நாட்டை உங்களின் பார்வையில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்!!

மின்மினி RS said...

அருமையான படங்கள்; போட்டோவில் பார்க்கும் எனக்கே ரொம்ப வியப்பா இருக்கு.. நேரில் பார்த்த உங்க அனுபவம் எப்படி இருந்திருக்கும்.. தொடருங்கள் அன்பு அக்கா.

Chitra said...

அருமையான பதிவு. படங்களும் அருமை. எல்லோருக்கும் heritage பற்றிய விளக்கம் தரும் நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!

ஸாதிகா said...

//இதென்ன மியூசியத்தில் எடுத்த படங்களோ//உங்களுக்க்கு மியூஸியம் என்றால் பிடிக்காது இல்லையா அதிரா?

ஸாதிகா said...

சீமான்கனி பின்னூட்டத்திற்கு நன்றி

ஸாதிகா said...

நன்றி சரவணக்குமார்.

ஸாதிகா said...

//மற்றபடி உங்க திறமை எனக்கு தெரியும்..
:-))//??????????????????(ஜெய்லானி அப்படியே புல்லரித்துப்போய்விட்டது!)

ஸாதிகா said...

//நாங்கள் இத்தனை வருடங்களாக வசிக்கும் நாட்டை உங்களின் பார்வையில் பார்ப்பது வித்தியாசமாக இருக்கிறது. தொடருங்கள்!//கருத்துக்கு மிக்க நன்றியக்கா!

ஸாதிகா said...

மின்மினி உங்கள் கருத்துக்கு மிக்க நன்ரி.என்ன பதிவிட்டு நீண்டநாட்களாகி விட்டனவே?

ஸாதிகா said...

பின்னூட்டத்திற்கும்,வாழ்த்துக்கும் மிக்க நன்றி சித்ரா என்ற இவ்வார "வலைச்சர" ஆசிரியர் அவர்களே

Riyas said...

Nice pictures. thanks

வசந்தவாசல் அ.சலீம்பாஷா said...

படங்களும் விளக்கங்களும் அருமை!
இத்தனை நாள் நான் துபாயிலிருந்தும் கண்ணில் படாத காட்சிகளையெல்லாம் கிளிக் செய்து பதிவிட்டமைக்கு.. நன்றி அக்கா!

GEETHA ACHAL said...

ஆஹா..கலக்கலாக இருக்கின்றது...

Unknown said...

அக்கா படங்கள் சூப்பர் அப்படி ஓமன்,பஹ்ரைன், சவுதி பக்கம் போயி ஊர் சுற்ற பகுதிய நிரபாலமா? எப்போ அந்த பக்கம் போறீங்க ?

ஸாதிகா said...

ரியாஸ் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

சகோதரர் சலீம் பாஷா தங்கள் முதல் வருகைக்கும்,கருத்துக்கும் மிக்க நன்றி.//இத்தனை நாள் நான் துபாயிலிருந்தும் கண்ணில் படாத காட்சிகளையெல்லாம்//உண்மை வரிகள்.இங்கும் அப்படித்தான்.

ஸாதிகா said...

கீதா ஆச்சல் கருத்துக்கு மிக்க நன்றி.

ஸாதிகா said...

//அக்கா படங்கள் சூப்பர் அப்படி ஓமன்,பஹ்ரைன், சவுதி பக்கம் போயி ஊர் சுற்ற பகுதிய நிரபாலமா? எப்போ அந்த பக்கம் போறீங்க ?//தம்பி MAT அடுத்த வருடம் மீண்டும் கத்தார் சென்று இந்த நாடுகளை எல்லாம் சுற்றிப்பார்க்கும் திட்டம் உள்ளது.அப்படி வந்தேனானால் உங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்.வருகைக்கு நன்றி.

himanasyed said...

தங்கைக்கு துஆ ஸலாம்.
என்னடா, இந்தத் தங்கை எவ்வளவோ எழுத்து திறமையை வைத்துக் கொண்டு பேனாவை முடக்கி வத்திருக்கிறாரே என்று நான் ஆதங்கப் பட்டதுண்டு.
நான் தான் கிணற்றுத் தவளையாக இவ்வளவு காலமாக இருந்திருக்கிறேன் என்பது தங்கையின் வலைப் பதிவுகளில் நுழைந்த போதுதான் புரிந்தது-
பிரமிப்பேற்படுத்தியது....

மிக்க மகிழ்ச்சி... வாழ்த்துக்கள்!
இதயங்கனிந்த ஈத்முபாரக்!

அண்ணன் ஹிமானா சையத்
சிங்கப்பூர்

ஸாதிகா said...

வ அலைக்கும்வஸ்ஸலாம்.அண்ணன்,தங்கள் துஆவும், பாராட்டுக்களும்,வாழ்த்துக்களும் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்.மிக்க மகிழ்ச்சி.நன்றி.தங்களுக்கும்,அக்கா,பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இதயம் நிறைந்த ஈத் வாழ்த்துக்கள்!