March 31, 2010

துபாய்..துபாய்..





இருப்பை எல்லாம் விட்டு விட்டு

விருப்பை மட்டும் மூட்டைக்கட்டி

மறுப்பை சொல்ல வழி இல்லாமல்

பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்
.

அன்னை மண்ணில்

வேரறு பட்டதும்

விமானம் ஏற தீர்மானம் செய்ததால்

அன்று அரும்பாய் இருக்கையிலே

ஆகாயப்பார்வையிலே

அலைபாய்ந்த ஆசையிலே

அழகாக தோன்றிய

ஆகாய ஊர்தியும்

அரங்கேறிப்போகையிலே

ஆனந்தம் இல்லாத

அனுபவமாகிப்போனது
.

அதில் அலங்காரம் செய்துதான்

ஆகாரம் வந்தது
.
ஆசைப்பட்டு தீர்த்திடாமல்

அசைபோட்டு தீர்த்துவிட்டேன்.

இறங்கும் நேரம் வந்துவிட‌

இருக்கை இருந்து பார்த்தபொழுது‍‍‍‍

இங்கு இயற்கை என்று ஒன்றும் இல்லை
.
மணல் நகரின் அனல் காட்சி


இங்கு மக்கள்

அல்ல மன்னராட்சி

அன்று நிவாரணம் தேடி வந்த நகரம்

இன்று நிரந்தரம் ஆகிப்போன நகரம்

நாள் விடிந்தாலும்,முடிந்தாலும்

ஒரே போல் இருக்குமா?

அட,அறைக்குள்ளே சிறை வைத்தால்

வேறென்ன இருக்கும்?


உறவோட உறவாட‌

கை பேசி எனக்கு

அதில் போன காசுக்கு

இங்கேது கணக்கு



இங்கே மனைவியோடு உறவாடி

பிள்ளை பெற முடியாமல்

பில்லை பெற்றோர் ஆயிரம்


இளமையும் வேலைக்கு

இரையாகிப்போச்சு

காலமும் காசுக்கு

கரியாகிப்போச்சு

காசாவது மீந்தததா

செலவாகிப்போச்சு

வருமானம் வரு முன்னர்

செலவு வந்து சேர்ந்துவிடும்

வெறுமாக ஊர் சென்றால்

உறவு வந்து ஒட்டுமா?


காசுகணக்குகள்

கவலையைத்தான் தருகிறது

கடந்த காலம் தான்

கண்ணில் தெரிகிறது


கஷ்டப்பட்டாலும்

நஷ்டப்பட்டாலும்

எந்நாடு சென்றாலும்

சொர்க்கமே தந்தாலும்


என் மனதினில்

தாய் நாடு சாகாது.


தங்கை ஜலி துபைப்பற்றி ஒரு கவுஜை பாடினார்.அந்த கவுஜைக்கு பின் கவுஜை இது.ஜலியின் கவுஜையைப்படிப்பதற்கு இங்கு கிளிக் செய்யவும்.

டிஸ்கி:இது நம்ம சொந்த சரக்கல்ல.


34 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அர்த்தம் பொதிந்த வரிகள் ஸாதிகா

///இருப்பை எல்லம் விட்டுவிட்டு
விருப்பை மட்டும் மூட்டை கட்டி
மறுப்பை சொல்ல வழியில்லாமல்
பொறுப்பை ஏற்று புறப்பட்டேன் நான்…
அன்னை மண்ணில்
வேரறுபட்டதும்,
அன்னிய மண்ணில்‍///

நல்ல கவித்துவம்.. எங்களைபோன்ற அயல்நாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்மண்ணை எப்போ மிதிக்கிறாங்களோ அப்போ அவங்க அடைகிற சந்தோசம் அளவே இல்லை.

Starjan (ஸ்டார்ஜன்) said...

ஆமா ஃபான்ட் எல்லாம் பெருசா இருக்கே.

மின்மினி RS said...

கவிதை வரிகள் ரொம்பவே பீலிங் பண்ண வைத்துவிட்டது ஸாதிகா அக்கா.

ஜலீலாக்காவுக்கு எதிர் கவுஜையா நடக்கட்டும் நடக்கட்டும்..

ப்ரியமுடன் வசந்த் said...

எழுத்தெல்லாம் ரொம்ப பெர்சா இருக்குக்கா..வாசிக்க கஷ்டமா இருக்கு...

:(

Thenammai Lakshmanan said...

கவுஜையும் எதிர்கவுஜையும் அருமை போங்க ஸாதிகா ...எப்படி இப்படி எல்லாம்

சீமான்கனி said...

ಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆ ಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆ


....ம்ம்ம்ம்ம்ம்...
எப்படி இருக்கு....எங்களுக்கும் இப்படி தானே இருக்கும்... என் அக்கா ஒரு அழகான கவுஜை படிக்க முடியாத மாதிரி இருக்கு பான்ட் சின்னதா ஆக்குங்க அக்கா...

athira said...

ஸாதிகா அக்கா.... சொந்தச் சரக்கை மட்டும்தான் சொந்த புளொக்கில போடோணுமாம். பாருங்கோ அதிராவை... எப்பவும் சொந்தச் சரக்குத்தான் போடுவேன்...ஹிக் ஹிக் ஹிக்.... இல்லாவிட்டால் சங்கிலி வருமாக்கும்... எழுத்தின் உருவத்தை மாத்துங்கோ ஸாதிகா அக்கா... இக் கவிதைக்கு எசப்பாட்டுக் கவிதை டுபாய் பற்றி என்னிடமும் இருக்கு போட நினைத்து வைத்திருக்கிறேன் போடட்டே??? ஹீ..ஹீ..ஹீ... அதுவும் சொ....ந்...த... சரக்..................கல்ல.. மீ எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.

Chitra said...

:-(

pity!

ஜெய்லானி said...
This comment has been removed by a blog administrator.
மங்குனி அமைச்சர் said...

//டிஸ்கி:இது நம்ம சொந்த சரக்கல்ல.//

எனக்கு உங்க கவிதைலே ரொம்ப புடிச்ச வரி இது தான் மேடம் ,

அப்புறம் பான்ட் சின்னதா ஆக்குங்க

அன்புடன் மலிக்கா said...

கவுஜைக்கு கவுஜையா. சூப்பர் சூப்பர்..

ஸாதிகா said...

உண்மைதான் சகோதரர் ஸ்டார்ஜன்.இங்கு வந்து பார்த்து சம்பவங்கள் கேட்டு பழைய கவிதையை தூசிதட்டி எடுத்துப்போட்டு இருக்கிறேன்.ஃபாண்ட் சரி செய்து விட்டேன்.நன்றி.

ஸாதிகா said...

மின்மினி.ஜலி கவுஜைக்கு எதிர் கவுஜை அல்ல.பின் கவுஜை.ஐ மீன் பின் பாட்டு.எதிர் பாட்டை கனம் பூஸார் அவர்கள் வாசிப்பார்கள்.நன்றி.மின்மினி..யாருப்பா இந்த பெயரை செலக்ட் பண்ணி கொடுத்தது.ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக புனைப்பெயரில் வந்து விட்டீர்கள்.நாங்கள் உண்மையை விளம்பி அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். :‍‍(

ஸாதிகா said...

வசந்த் தம்பி சரி செய்துவிட்டேன்.நன்றி.

ஸாதிகா said...

சகோதரி தேனம்மை.நீங்க கவிதாயினி.இந்த கடன் வாங்கிய கவிதையை இப்படிப்பாராட்டுகின்றீர்களே.நன்றி.

ஸாதிகா said...

சீமான்கனி தம்பியோவ் போன ஜென்மத்தில் கறாரான வாத்தியாராக இருந்தீர்களோ?இப்படி பனிஷ்மெண்ட் தர்ரீங்க..யப்பா..மாத்திட்டேன்.கருத்துக்கு நன்றி.

ஸாதிகா said...

மியூஸிக் போடுறதில் ஏ ஆர் ஆர் இளையராஜா வையெல்லாம் பின்னுக்கு தள்ளிவிடுவீர்கள் போல??ஒரு ரகசியம் சொல்லவா?பிளாக் ஆரம்பித்து ஏழுமாதம் முடியப்போகிறது.இன்னும் ஐம்பதைத்தொட வில்லை.சீக்கிரம் 50வது இடுகையையை தொடத்தான் இப்படி...புரிஞ்சுதோ?சரி சீக்கிரமாக எதிர் கவுஜையை போடுமாறு உத்தரவு இடுகிறேன்.

ஸாதிகா said...

//:-(

pity!//
ஒரே வரி.ரொம்ப பிசியா சித்ரா?இருந்தாலும் பெரிய தாங்க்ஸ்

ஸாதிகா said...

ஐயா மங்குனி,இப்படி காலை வாரி விடுவீர்கள் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கலீங்கையா.அந்த கவிதை வரிகளில் என்னத்தையா குறைகண்டீர்கள்?வருகைக்கு ரொம்ப நன்றிங்கையா.

ஸாதிகா said...

கவிதைச்சாரல் இக்கவிதையை சூப்பர் என்றதுக்கு மிக்க நன்றி மலிக்கா

ஹுஸைனம்மா said...

கதையெல்லாம் அழகா எழுதுற உங்களுக்கு கவிதைதானா வராது? நினைச்சா முடியும் உங்களால!!

மின்மினி - பெயர் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குது!!

Menaga Sathia said...

கவிதையிலும் அசத்துறீங்க அக்கா...நீங்க சொல்லிருக்கிற ஒவ்வொரு வார்த்தையியும் உண்மை...

ஸாதிகா said...

உட்கார்ந்து யோசித்து பொறுமையா பதிவு போட டைம் இல்லை ஹுசைனம்மா.ஊர் சுற்றுவதிலேயே பொழுது போகிறது.அப்பப்ப வந்து சின்ன சின்ன பின்னூட்டம்.மற்றபடி அதிராவுக்கு போட்ட பதில் ரிபீட்டு.நன்றி

ஸாதிகா said...

மேனகா,நான் போட்ட டிஸ்கியை கவனிக்கவில்லையா?பாராட்டிவிட்டிர்கள்.(இல்லாத காலரை தூக்கிவிட்டுக்கொண்டு)வாங்கிக்கறேன் உங்கள் பாராட்டுகளை.நன்றி

ஸாதிகா said...

ஹுசைனம்மா சுத்த சொந்த சரக்கு இந்த கவிதை.என் ஆருயிர் வாப்பாவை நினைத்து,உருகி எழுதியது.படித்துப்பாருங்கள்.
http://shadiqah.blogspot.com/2009/10/blog-post_30.html

அண்ணாமலையான் said...

ஓஹோ

மின்மினி RS said...

/// ஸாதிகா said...

மின்மினி.ஜலி கவுஜைக்கு எதிர் கவுஜை அல்ல.பின் கவுஜை.ஐ மீன் பின் பாட்டு.எதிர் பாட்டை கனம் பூஸார் அவர்கள் வாசிப்பார்கள்.நன்றி.மின்மினி..யாருப்பா இந்த பெயரை செலக்ட் பண்ணி கொடுத்தது.ஆரம்பத்திலேயே புத்திசாலித்தனமாக புனைப்பெயரில் வந்து விட்டீர்கள்.நாங்கள் உண்மையை விளம்பி அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறோம். :‍‍( ///

உங்க அன்புக்குமிக்க நன்றி ஸாதிகாஅக்கா. மின்மினி என்பது என்கணவர் செலக்ட் பண்ணுன பேர்., நல்லாருக்கா.. அவர்தான் எனக்கு இந்தபெயர்சூட்டி இந்த வலையுலகில் எழுதுவதற்கு எனக்கு ஆக்கமும் தன்னம்பிக்கையும் கொடுத்தவர். இந்த பாராட்டெல்லாம் அவருக்குத்தான் போய்சேரும்.

மின்மினி RS said...

///ஹுஸைனம்மா said...

மின்மினி - பெயர் எனக்கும் ரொம்பப் பிடிச்சிருக்குது!!///

உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஹூசைனம்மா அக்கா..

உங்கள் அனைவரின் அன்புக்கும்மிக்க நன்றி.. தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.

Jaleela Kamal said...

பேச்சுலர் வாழ்க்கை அடுத்த தொடர் பதிவுக்கு இத சுட்டு போடலாம் என்று இருந்தேன்.

Jaleela Kamal said...

மின்மினி ஆமாம் உங்கள் கணவர் வைத்த பெயர் சூப்பர்.

Jaleela Kamal said...

துபாயில் தவிப்பவர்களுக்கு ஒரு கவிதை போதாது,

அடுத்த கவித யாராவது சுடத்துக்குள்ள் சீக்கிரமா ஒரு பதிவ போட்டுடனும்

Jaleela Kamal said...

ಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆ ಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆಹಖ್ಕ ಲಕ್;ಲಂ ಹ್ಗ್ಯ್ಡಿ ಉಗ್ವ್ದ್ವಯ್ದ್ದ್ ಉಅಗ್ಸಜ್ಹ್ಸ್ ಉವ್ದ್ಗ್ವ್ದ್ಗ್ವ್ ಉವುಗ್ಗ್ವುವ್ವೆ

சீமான் கனி இதென்னா தெலுஙகா? hi hi

Vijiskitchencreations said...

Good job. Keep it up.

செவத்தப்பா said...

இன்னும் எம்புட்டு நாளைக்கு இப்புடி கவிதை பாடிக்கொண்டே இருக்கப் போகிறோமுன்னு தெரியலியே... முழுசா பத்தொன்பது வருஷங்கள், நிமிஷங்களாக கரைந்தோடிவிட்டது... கரைசேரும் வழியைத்தான் காணோம் இங்கே!

நன்றி!