March 3, 2010

மொஸாம்பிக் பார்க்கறீங்களா..

மொஸாம்பிக்கை இறைச்சியோட அறிமுகப்படுத்துகிறேன்.இங்கே ஒரு கிலோ இறைச்சி விற்கும் விலையில் முழு ஆட்டினையே வாங்கலாம்.100 ரூபாய்க்கும் மீன் வாங்கி நாம் வெட்டக்கொடுக்கும் கூலி அங்கே கொடுத்தால் முழு ஆட்டையே நிமிடத்தில் துண்டு போட்டு தந்துவிடுவார்கள்.அதே போல் பக்கத்து நாடுகளான் ஜிம்பாப்வே,மளாவி,பெய்ரோ போன்ற நாடுகளுக்கு நண்பர்களைப்பார்க்கப்போனால் ஸ்வீட்,மற்றப்பொருட்கள் எடுத்துப்போவதை விட ஆட்டை எடுத்துப்போவதையே விரும்புவார்கள்.இது சூப்பர்மார்க்க்ட்டின் புரோஷன் புட் பகுதி.
வகைவகையான இறைச்சிவகைகள்.அதிசயத்தக்கவகையில் கண்களைப்பறித்து அசைவப்பிரியர்களை நாவூறச்செய்துவிடும்
பதப்படுத்தப்பட்ட உணவுவகைகள்.மொஸாம்பிக் தலைநகரான மபுடோவில் சூப்பர் மார்க்கட்டில் ஷாப்பிங் செய்வது அலாதியானது.
ஃபிரஷ் காய்கறிகள் சூடாக விறபனை ஆகும் மார்க்கெட் பகுதி.டெட் போன்ற ஊர்களில் மார்க்கெட்டைபார்த்தால் 25 வருடங்களுக்கு முந்தைய இந்தியகாய்கறி மார்க்கெட்டை நினைவுக்கு கொண்டுவந்துவிடும்
கருப்புத்தங்கம் புதையுண்டு கிடக்கும் கந்தக பூமி.இடங்களையும்,உபகரணங்களையும் ஆராயும் இந்தியரும்,கருப்பினசகோதரரும்
இயற்கை வளம் கொளிக்கும் அழகிய சாலை.டிராஃபிக் இல்லாத அமைதியான சாலை
இங்கு முந்திரி விளைச்சல் அதிகம்.மிகவும் குறைந்த விலையில் முந்திரியை கொள்முதல் செய்யலாம்.இந்த மொட்டை மரங்கள் மறுமுறைப்பார்க்கும்பொழுது பசேல் ஆகிவிடும் .
பழங்குடியினரின் வசிப்பிடம்.அழகாக,அமைதியாக.
இயற்கைகாட்சி என்னே அழகு!!
நம்மூர் சாலையை நினவு படுத்தும் சாலை
தலை நகர் மபுடோவின் அழகை பாருங்கள்.சீதோஷ்ன நிலை நம்ம ஊர் ஊட்டி ,கொடைக்கானலை மிஞ்சிவிடும்.
மபுடோவின் வீதியின் இன்னொரு தோற்றம்
விமானத்தில் பறந்தபடி எடுத்த மபுட்டோவின் தோற்றம்

25 comments:

Jaleela said...

ஆஹா அருமையான படங்கள்.

அந்த மொசம்பி பெண்கள் நல்ல பலசாலிகள், இங்கு கூட சில பேர் பிஸினஸுக்கு வருவார்கள்

ஜெய்லானி said...

மொஸாம்பி ன்னு சொன்னதும் உருது பாஷைல வரும் தீனீதான் ஞாபகம் வந்தது. ஆனால் படிக்கும் போதும் , படங்களும் இடத்தை கண்முன் கொண்டு வந்துட்டீங்க . அழகு தான்.

தமிழ் குடும்பம் said...

போட்டோக்களும் கருத்துக்களும் சூப்ப்பர்

Starjan ( ஸ்டார்ஜன் ) said...

மொசாம்பிக்கை அருமையாக சுற்றி காண்பித்து இருக்கும் ஸாதிகாவுக்கு மிக்க நன்றி.

Chitra said...

புகைப்படங்களும் பகிர்வும் அருமை.

Vijis Kitchen said...

ஊர் சுற்றிவிட்டு இப்ப தான் வந்தேன். நல்ல காட்சிகள்.நல்ல படங்கள். அங்குள்ள மக்கள்+பென்களை போடல்லையே.நன்றாக இருக்கு, நிங்க எப்ப அந்த பக்கம் போனிங்க?

seemangani said...

நல்ல பகிர்வு...
படங்களும் அருமை....வாழ்த்துகள் அக்கா...

thenammailakshmanan said...

ஸாதிகா படங்களைப் பார்த்ததும் இறைச்சி சாப்பிட ஆசை வந்துருச்சு

ஹைஷ்126 said...

அருமையான படங்கள். நேரில் பார்த்தது போல் இருக்கு. பகிர்வுக்கு மிகவும் நன்றி.

வாழ்க வளமுடன்

அன்புடன் மலிக்கா said...

போட்டோகள் மிக அருமை. விளக்கங்களும் சூப்பர்.
ரசனை அழகு..

வந்து பாருங்க
http://fmalikka.blogspot.com/2010/03/blog-post.html

syed said...

விசா இல்லாமால் டிக்கட் இல்லாமல் மொசாம்பிக்கை சுற்றிக்காட்டிய அம்மிணிக்கு தேங்சு.கருப்பர் சரி.இந்தியர்?? அதாரு?

ஹுஸைனம்மா said...

அக்கா, விலைவாசி உயர்வு உங்களை எந்தளவுக்குப் பாதிச்சிருக்குன்னு நீங்க கறிவிலையச் சொல்லி, இறைச்சி படங்களை முதலில் போட்டதிலிருந்தே தெரிகிறது!! ;-))

இன்னொரு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவிலிருந்து உறவினர் (ஊருக்குப் போகும் வழியில் வந்திருந்தார்) ஒருவர் காய்கறி, பழங்கள் கொண்டுவந்தார். இதைப் போய் அங்கிருந்து சுமந்து கொண்டு வந்திருக்கிறீர்களே, இங்கே கிடைக்காதா என்று கிண்டல் செய்தேன். அதற்கவர், அங்கேயெல்லாம் எவ்வகை உரங்களும் போடப்படாமல் இயற்கையாக வளர்ந்தது என்றார். அவ்வளவையும் நானே வாங்கிவந்துவிட்டேன்!! என்ன மணம், ருசி!!

Jaleela said...

முந்திரி என் பையனுக்கு, ஹஸுக்கு வறுத்து உப்பு மிளகாப்பொடி போட்டா ரொமப் பிடிக்கும் உஙக்ள் ஹஸு கிட்ட சொல்லி ஒரு மூட்டை இங்க அனுப்ப சொல்லுங்கள்.

மபூடோ சாலை ரொம்ப அருமை இங்குள்ள புஜெரா போல் இருக்கு.


இறச்சி புரோஜன் இங்கும் அப்படி தான்.

நாஞ்சில் பிரதாப் said...

ஸாதிகாக்கா, அந்த இடங்கள் பற்றி கொஞ்சம் விரிவாக சொல்லியிருக்கலாமோ?
இருண்ட கண்டம் இன்னும் இருட்டாகவேதான் இருக்கிறது.

asiya omar said...

மொஸாம்பிக் சுற்றி பார்த்தாச்சு,அடுத்து எந்த நாடு,நீங்கள் சென்ற போது எடுத்ததா?ரொம்ப அருமையாக இருக்கு.வீட்டிற்கு விசிட்டர்ஸ் வரும் பொழுது ஆடு வாங்கி வந்தால் நல்ல தான் இருக்கும்.நமக்கு குர்பானி கொடுக்க வாங்கி வரும் ஆட்டிற்கு கஞ்சி தண்ணி வச்சு பழக்கம் கொஞ்சம் பழக்கம் இருக்கு.

செந்தமிழ் செல்வி said...

பழமையும், புதுமையும் கலந்தது போல் இருக்கு. அருமையான படங்கள், அருமையான விளக்கம். போகணும்ங்கிற ஆசையைத் தூண்டுது.

Ammu Madhu said...

super

ஜெரி ஈசானந்தா. said...

ஸாதிகா மேம்,நலமா? நாங்கெல்லாம் மனிச கறியே தின்னுற பயலுக தான்,"என்ன செய்ய,சுத்தி சொந்த காரங்களா இருக்காயங்கனு விட்டு வச்சுருக்கோம்"

ஸாதிகா said...

ஜலீலா நன்றி.

ஜெயிலானி நன்றி.

தமிழ்குடும்பம் நன்றி.

ஸ்டார்ஜன் நன்றி.

சித்ரா நன்றி.

விஜிகிச்சன் நன்றி.

சீமான் கனி நன்றி.

தேனம்மை லக்ஷ்மணன் நன்றி.

ஹைஷ் நன்றி.

மலிக்கா நன்றி.

செய்யத் நன்றி.

ஹுசைனம்மா நன்றி.

ஜலீலா நன்றி.

பிரதாப் நன்றி.

ஆசியா உமர் நன்றி.

செல்வி நன்றி.

அம்மு நன்றி.

ஜெரி ஈஷானந்தா நன்றி.

kavisiva said...

ஃப்ரீயா சுத்திக் காமிச்சுட்டீங்க! படங்கள் நல்லா இருக்கு

athira said...

ஸாதிகா அக்கா இன்றுதான் பார்க்க முடிந்தது. அழகான படங்கள். நீங்கள்தான் எடுத்ததோ?

எனக்கு அந்த ரோட்டோர மரக்கறி மார்க்கட் தான் ரொம்ப பிடிச்சிருக்கு... travel channel இல் இப்படி மார்க்கட்டைப் பார்த்து வாய் ஊறியபடி இருப்பதுதான் என் வேலை.

ஓ இப்பத்தான் புரியுது...ஸாதிகா அக்கா ஏன் நீண்ட நாளாக புளொக்கில் ஏதும் எழுதவில்லை எனப் பார்த்துக்கொண்டிருந்தேன்... மொசாம்பிக் போயிருக்கிறீங்க.... கண்டு பிடிச்சிட்டேன்...... ஜே....

இயற்கைக் காட்சி என்னே அழகு/// ஆமாம் ஆமாம் இயற்கையெண்டாலே அழகுதான் அதிராவைப்போல.... அடிக்காதீங்கோ... அதிரா எஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

athira said...

ஸாதிகா அக்கா..ஸாதிகா அக்கா... எனக்கு ஒரு வரியில நன்றி சொல்லப்படாது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. எனக்கு ஒருவரிப் பதில்கள் பிடிப்பதில்லை..கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

SUFFIX said...

அமைதியான சூழல் அழகாக இருக்கிறது, இயற்கை வளம் நிறைந்த பல ஆப்பிரிக்க நாடுகள், சிலரது சூழ்ச்சியால சின்னாபின்னமாக சிதைந்து கிடப்பது வருத்தமே.

ஸாதிகா said...

அதிரா நன்றி.தங்கை அதிரா நன்றி.அன்புத்தங்கை அதிரா நன்றி.உஷ்..அப்பாடா ஒரு வரிக்கு மேலே வந்துவிட்டதா?

சகோ ஷஃபி,கருத்துக்கு மிக்கநன்றி!

அக்பர் said...

மொஸாம்பிக் அழகு. வர்ணனை அதை விட அழகு.