October 17, 2009

நான் ரசித்தகேரக்டர்கள்

அன்புள்ள அல்லி:
ராணி வார பத்திரிகையில் சிறிய உருவமும்,பெரிய தலையும்.கையில் எழுத்தாணியுடன் அந்த நாள் அன்புள்ள அல்லி.செவ்வாய்க்கிழமை வந்தாலே என் எட்டாவது வயதிலேயே ராணி இதழ் வாங்க கடைக்கு ஓடும் அளவிற்கு என்னை கவர்ந்த அல்லி.

ஆண்டிப்பண்டாரம்:
மொட்டைத்தலையுடன்,ஒவ்வொருநாளும் அழகாக வரையப்பட்டு, சினிமா பாடல்களைப்பாடும் பண்டாரம்.தினதந்தியை பிரித்த உடனேயே இன்னிக்கு ஆண்டிப்பண்டாரம் என்ன பாடுகின்றார் என்று ஆர்வத்தைத்தூண்டும்.இன்றும் ஆண்டியார் ஆக பாடிக்கொண்டுதான் இருக்கின்றார்.

அந்துமணி:
தினமலர் ஞாயிறு மலரில் ஒல்லியான நிஜ உருவத்தில்,தலையை மட்டும் கார்ட்டூனாக்கி அவர் எழுதும் கட்டுரைகள் நிறையவே சிந்திக்க வைக்கும்.

பராசக்தி:கஷ்ட்டமான கேள்விகளுக்கும் பளிச்பளிச் என்று பதில் கொடுக்கும் குங்குமம் பராசக்தி

ரீட்டா:
அவள் விகடனில் டூவீலரில் சென்னையையே சுற்றி சுற்றி சின்னத்திரை செய்திகளை அள்ளித்தரும் ரீட்டா எப்படி இருப்பார்?

ஐடியா அலமேலு:
தோற்றமோ படு முதுமை.அந்த முதிர்ச்சியுடன் அவர் அள்ளிதெளிக்கும் கருத்துக்கள் அபாரம்.தந்தி ஞாயிறுமலரில் வரும் பாட்டி வாழ்க!

அரசு:குமுதத்தில் பல ஆண்டுகளாக சிந்திக்க வைக்கும் பதிலகள் தன் முகம் காட்டாமல் அளித்துவரும் அரசுவின் விஷய ஞானத்திற்கு ஒரு ஜே.

சிந்துபாத்:
தினத்தந்தி கன்னித்தீவில் என் எட்டு வயதில் பார்த்த அதே சிந்துபாத்.ஐயோ..இந்த மனுஷருக்கு அலுப்பு சலிப்பே இருக்காதா?

ஜாலி வாலி:
விகடன் விளம்பரத்திற்கு வரும் குட்டிகுரங்கார்.டீவியில் வந்து வள வள வென்று பேசி விட்டு படிக்கலேன்னா கடிச்சுடுவேன் என்று நம்மை மிரட்டி சிரிக்கவைக்கும் குட்டி ஜாலி வாலி

6 comments:

சோனகன் said...

தமிழ் நாள், மாத, வார இதழ்களின் நினைவில் நீங்கா கேரக்டர்கள் பற்றிய மீள் பதிவிற்கு நன்றி....இது போல் 80து களின் நாவல் மற்றும் காமிக்ஸ் கதாபாத்திரம் பற்றிய பதிவுகளையும் தங்களிடம் எதிர்பார்க்கிறோம்!

ஸாதிகா said...

என் வலைப்பூவிற்கு வருகை தந்தமைக்கு நன்றி.உங்கள் எதிர்பார்ப்பை விரைவில் பூர்த்தி செய்கின்றேன்.

Jaleela Kamal said...

ஸாதிகா அக்கா இன்னும் பயனுள்ள தகவல்கள். உங்கள் வீட்டு குறிப்புகள். அனுபவங்கள் அனைத்தையும் பிலாக் மூலம் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

ஸாதிகா said...

கண்டிப்பாக ஜலி,சமையல் தவிர மார்க்க விஷயங்கள் உட்பட சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதே என் அவா.

ஸாதிகா said...

கண்டிப்பாக ஜலி,சமையல் தவிர மார்க்க விஷயங்கள் உட்பட சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம் என்பதே என் அவா.

ஸாதிகா said...
This comment has been removed by the author.